செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 10 ஈழத் தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!!

chengalpet_special_camp

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் உள்ள தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வலியுறுத்தி ஈழத் தமிழர்கள் 10 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்படுள்ளனர். இங்குள்ளோர் பலர் மீது வழக்குகள் கூட இல்லை. இருப்பினும் இங்குள்ள தமிழர்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்றாமல் தொடர்ந்தும் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே தங்களை திறந்த வெளிமுகாமுக்கு மாற்றக் கோரி பலர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர். இப்படி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதற்காகவே 3 ஈழத் தமிழரை நாடு கடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் காந்தி மோகன், காண்டீபன், பரமேஸ்வரன், ஜோன்சன், சுமன், ரமேஷ், சசிதரன், ஈஸ்வரன், பாலகுமார் , காளிதாஸ் ஆகியோர் இன்று காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்பது போராட்டக்காரர்களின் கருத்து.

மெட்ராஸ் கஃபே படத்திற்கு தடை..!

madrasஈழதமிழர் போராட்டங்களை இழிவாக சித்தரிக்கும் மெட்ராஸ் கஃபே என்ற படம் இம்மாதம் இறுதியில் வெளியாக இருந்தது. அப்படத்தை ஹிந்தியில் பார்த்த சில தமிழர்கள் மூலம் தகவல் அறிந்த தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் அப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து தமிழ் தன்னார்வ மைப்பின் சார்ப்பில் மதுரை நீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கிற்கு இன்று தீர்ப்பளித்த நீதிபதி, மக்களின் உணர்வுகளுடன் விளையாடி உணர்ச்சிகளை தூண்டி கலவரத்துக்கு வழி வகுக்கும் படியான படங்கள் வெளியாகாமல் இருப்பதே நல்லது என அப்படத்திற்கு தடை விதித்தார்.

தொடர்கிறது தலைவா சர்ச்சை – மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..!

thalaivaநடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் ஒரு வாரத்துக்கு முன்பு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் திரைப்படம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மிரட்டல் கடிதம் வந்ததாலும், வெடிகுண்டு வைக்கப்படும் என தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாலும் திரைப்பட உரிமையாளர்கள் படத்தை திரையிட மறுத்தனர்.

இந்நிலையில் பல்வேறு முயற்சியின் காரணமாக, “தலைவா´ திரைப்படம் செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது.

இதற்கிடையே சென்னை கீழ்ப்பாக்கத்தில் அந்த திரைப்படம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்குக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் “தலைவா´ திரைப்படத்தை திரையிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

இது குறித்து அந்த திரையரங்கு மேலாளர் ஜெயக்குமார், கீழ்ப்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினேகாவின் அதிரடி கவர்ச்சி: பிரசன்னா கடும் எதிர்ப்பு..!

snehaகவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தயார் என்று சொல்லி வருகிறாராம் புன்னகை இளவரசி சினேகா.

குடும்பப்பாங்கான வேடத்திலேயே பெரும்பாலும் நடித்து பெயர் பெற்றவர் நடிகை சினேகா.

திருமணத்திற்கு பின்பும் அதை மெயிண்டன் செய்ய விரும்பினார்.

ஆனால் ஹரிதாஸ் பட தோல்வியால் துவண்டு போன சினேகா கவர்ச்சிக்கு தயார் என்று மறைமுகமாக கவர்ச்சி புகைப்படங்களை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வருகிறாராம்,

சினேகாவின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த இயக்குனர்கள் புகைப்படத்தில் இருப்பது போல படப்பிடிப்பிற்கும் ஒத்துழைத்தால் சான்ஸ் தருவதற்கு தயாராக இருக்கின்றனராம்.

ஆனால் சினேகாவின் கவர்ச்சி அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம் பிரசன்னா.

பிரசன்னாவின் எதிர்ப்பால் தயாரிப்பாளர்களும் வாய்ப்பு தருவதற்கு தயங்கி வருகின்றனரவாம்.

பிகினி உடையில் ரசிகர்களை கவர்ந்த நயன்தாரா..!

nayanரசிகர்களின் அதிக வாக்குகளை பெற்று பிகினி உடையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார் நடிகை நயன்தாரா.

பிகினி உடை எந்த நடிகைக்கு சூப்பராக இருக்கும் என்று இணையதளம் ஒன்று சமீபத்தில் கருத்துக்கணிப்பு நடத்தியது.

அதில் தீபிகா படுகோனே, அனுஷ்கா ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு நயன்தாரா நம்பர் 1 என்று ரசிகர்களிடம் ஓட்டுவாங்கியுள்ளார்.

அனுஷ்கா, இலியானா, நீதுசந்திரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட 17 நட்சத்திரங்களை களத்தில் இறக்கிவிடப்பட்டார்கள்.

இதில் பில்லா படத்தில் அஜித் உடன் படு கவர்ச்சியாக நடித்திருந்த நயன்தாரா 23 % வாக்குகளை பெற்று நம்பர் 1 இடம் பிடித்தார்.

யோகா நாயகி அனுஷ்காவிற்கு இந்த போட்டியில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். அவருக்கு 21% பேர் வாக்களித்துள்ளனர்.

பாலிவுட் நாயகி தீபிகா படுகோனேவிற்கு 3 வது இடம்தான் கிடைத்துள்ளது. இந்தியில் சூப்பர் ஹிட் நாயகியான இவரால் நயன்தாரா உடன் போட்டி போட முடியவில்லை.

முத்தழகு நாயகியான ப்ரியாமணிக்கு பிகினி உடை போட்டியில் 4வது இடம் கிடைத்துள்ளது. அதேபோல ஸ்ருதி ஹாசனுக்கு 5 இடம் அளித்துள்ளனர் ரசிகர்கள்.

மேலும் பில்லாவில் நயன்தாராவிற்கு போட்டியாக கவர்ச்சி காட்டி நடத்திருப்பார் நமீதா. அவருக்கு பிகினி உடையில் 6 வது இடம் கிடைத்துள்ளது.

மொத்தத்தில் களம் இறங்கிய 17 நடிகைகளில் அனைவரையும் பின்னுக்கு தள்ளி ரசிகர்களின் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் நயன்தாரா.

கமலுடன் மோதும் அஜித்..!

kamalதீபாவளிக்கு அஜித்தின் ஆரம்பமும், கமலின் விஸ்வரூபமும் மோதுவதற்கு தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்து வந்த படத்திற்கு எப்படா தலைப்பு வைப்பார்கள் என்று ரசிகர்கள் பல மாதம் காத்திருந்த படம் ஆரம்பம்.

அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள படம் ஆரம்பம்.

இப்படத்தில் அஜித் ஹேக்கராக வருகிறார் என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால் ஆர்யா தான் ஹேக்கராம். ஆரம்பம் படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்நிலையில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தையும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

எனவே தீபாவளிக்கு அஜித், கமல் படங்கள் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தையுடன் செல்லவே விருப்பம் – சேரனின் பாசப்போராட்டம் வென்றது..!

seranதிரைப்பட இயக்குனர் சேரன் தனது மகளுடன் நடந்த பாசப்போராட்டத்தில் வென்றுள்ளார். இயக்குனர் சேரன் மகள் தாமினி, சந்துரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து சேரன் பொலிசில் அளித்த புகாரில், சந்துருவின் நடவடிக்கை சரியில்லை என்றும், அவரது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே சந்துருவின் தாய் உயர்நீமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் 2 வாரங்களுக்கு தாமினி, தான் படித்த பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில் தங்கி இருக்க உத்தரவிட்டனர்.

இதன்படி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவர் தங்கியிருந்தார். தலைமை ஆசிரியரின் வீட்டில் தாமினி தங்கி இருந்த போது அவருக்கு தினமும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தாமினி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில் சேரன் மகள் தாமினி தனக்கு காதலன் வேண்டாம் என்றும் தான் தந்தையுடன் செல்லவே விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தனது மகளுடன் நடந்த பாசப்போராட்டத்தில் வென்றுவிட்டு விட்ட மகிழ்ச்சியில் உள்ளார் இயக்குனர் சேரன்.

இந்தியத் தலைவர்களுடன் ரணில் சந்திப்பு..!

ranilஇந்தியா சென்றுள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜிக்கும் இடையில் நேற்று புதுடில்லியில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த இச்சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வலய தொடர்பு மற்றும் வலய பொருளாதாரம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அகில இந்திய காங்கிரஸ் குழுவின் செயலாளர் திக் விஜயசிங்கையும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

அத்துடன், பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் யஸ்வந்த் சிங்ஹாவையும் ரணில் சந்தித்து பேசியுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று சந்திக்கவுள்ளார்.

தற்கொலையில் முடிந்த அறியாப்பருவக் காதல்..!

loveருவன்வெல்ல – வெத்தாகல பிரதேசத்தில் இரு சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

16 வயதுடைய சிறுவனும் 14 வயதுடைய சிறுமியும் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காதல் பிரச்சினையால் ஏற்பட்ட மனக்கவலையில் குறித்த சிறுவன் சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்.

அதனைக் கண்டு மனமுடைந்த சிறுமி வீட்டு அறைக்குள் தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.

சம்பவம் குறித்து ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து வேலை செய்ததால் மரணித்த மனிதர்..!

stressஇங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள அமெரிக்க வங்கியில் பணியாற்றி வந்தவர் மோரிட்ச் எர்ஹார்ட். 21 வயதான இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். கிழக்கு லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தனது நண்பர்களுடன் பிளாட்டில் வாடகைக்கு தங்கி வங்கியில் பணியாற்றினார்.

நேற்று இவர் குளியலறையில் இறந்து கிடப்பதை கண்ட நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், மோரிட்ச் எர்ஹார்ட் உள்பட சுமார் 300 பேர் இதே போல் அப்பகுதியில் உள்ள பல்வேறு வங்கிகளில் பணிபுரிந்தனர். படிப்பை முடித்து விட்டு புதிதாக பணியில் சேர்ந்திருந்தனர். மோரிட்ச் எர்ஹார்ட் நள்ளிரவு 3 மணி வரை விடாமல் வேலை செய்வார் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

இறந்து கிடப்பதற்கு 3தினங்களுக்கு முன்புதான் கடைசியாக அவரது அறை நண்பர்கள் அவரை பார்த்துள்ளனர். அதன்பின் அவரை இறந்து கிடந்த நிலையில் தான் கண்டனர். வங்கியில் நடத்திய விசாரணையில் விடாமல் இரவு பகலாக 72 மணிநேரம் மோரிட்ச் எர்ஹார்ட் பணிபுரிந்து விட்டு நள்ளிரவு அறைக்கு திரும்பியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், சாவுக்கான சரியான காரணம் தெரியவில்லை.

ஆனால் தொடர்ந்து வேலை செய்ததால் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும்,மோரிட்ச் எர்ஹார்ட்டின் வங்கிக்கு அனுப்பிய இமெயிலில், எனது குடும்பத்தினர் என்னிடம் மிகவும் எதிர்பார்க்கின்றனர். எனவே விடாமல் கடுமையாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் நச்சுப்பொருள் தாக்குதலால் 213 பேர் துடிதுடித்துப்பலி..!

syriyaசிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

போராட்டக்காரர்களில் சிலர் அண்டை நாடுகளில் இருந்து போராயுதங்களை வாங்கி ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அதை அதிபர் ஆசாத் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார்.

ராணுவம் நடத்தி வரும் வான் வழி, ஏவுகணை மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். உயிர் பிழைத்த பலர் உடல் உறுப்புகள் சிதைந்து ஊனமுற்றவர்களாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான துருக்கி, லெபனானில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபை கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

29-வது மாதத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள அய்ன் டர்மா, சமால்கா, ஜோபர் ஆகிய பகுதிகளில் அதிபரின் படைகள் ரசாயன குண்டுகளை வீசி பயங்கர தாக்குதலில் ஈடுபட்டன.

சுவாசத்தின் மூலம் நுரையீரலுக்குள் ஊடுருவி நரம்பு மண்டலத்தை முற்றிலுமாக செயலிழக்க வைக்கும் தடை செய்யப்பட்ட நச்சுப்பொருள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது.

இதன் விளைவாக, குழந்தைகள், பெண்கள் உள்பட 213 பேர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களின் உடல் உறுப்புகள் மிகவும் சிதைந்து போய் இருப்பதாகவும் பலரது கருவிழிகள் உருகி வழிந்த நிலையிலும் பலரது வாயிலிருந்து நுரை தள்ளியபடி உள்ளதாகவும் ஆஸ்பத்திரி பணியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் நடைபெற்ற போது அனைவரும் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். உள்ளூர் நேரப்படி, இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக அப்பகுதியில் வசிக்கும் சிலர் கூறினர்.

மக்களை கொல்ல அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் படைகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வந்த போதிலும், இதனை ராணுவம் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பூனைக்கு இரத்தம் கொடுத்து உயிரைக் காப்பாற்றிய நாய்..!

dogவிஷம் சாப்பிட்டதால் உயிருக்கு போராடிய பூனையை காப்பாற்ற நாயின் ரத்தத்தை ஏற்றி நியூசிலாந்து வைத்தியர்கள் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

நியூசிலாந்தில் உள்ள தவுரங்கா பகுதியை சேர்ந்த கிம் எட்வர்ட்ஸ் என்பவர் வீட்டில் எலி தொல்லையை சகித்துக் கொள்ள முடியாமல் கடந்த வெள்ளிக்கிழமை, வீட்டை சுற்றிலும் எலி விஷத்தை போட்டு வைத்திருந்தார்.

மீனுக்கு விரித்த வலையில் யானை விழுந்த கதையாக எலிக்கு வைத்த விஷத்தை அவர் மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்த ரோரி என்ற பூனை தின்று விட்டது.

சற்று நேரத்தில் விஷத்தின் வீரியம் ரோரியின் ரத்தத்தில் கலந்ததால் பயங்கரமான அவலக்குரல் எழுப்பியபடி அது துள்ளித் துடித்தது. பூனையில் செய்கையை கண்டு பதறிப்போன கிம் எட்வர்ட்ஸ், ரோரியை காரில் தூக்கிப்போட்டுக் கொண்டு கால்நடை மருத்துவரிடம் விரைந்தார்.

ரோரியின் ரத்தத்தில் விஷத்தன்மை அதிகரித்து விட்டதாக கூறிய டாக்டர், அதை காப்பாற்ற வேறு வழியே இல்லை என கைவிரித்து விட்டார்.

´எப்படியாவது ரோரியை காப்பாற்றுங்கள்´ என்று கதறிய எட்வர்ட்சின் கெஞ்சலை புறக்கணிக்க முடியாத வைத்தியர் கேட் ஹெல்லெர், உடனடியாக தனது தோழி மிச்சேல் விட்மோருக்கு போன் செய்தார்.

ரோரியை கட்டிலில் படுக்க வைத்து உடலில் இருந்த விஷத்தன்மை கலந்த ரத்தத்தை ´டிரான்ஸ்ஃபியூஷன்´ முறையில் வெளியேற்றி, அதே வேளையில் தோழி மிச்சேல் விட்மோரின் செல்ல நாயான மேக்கி எனும் ´லாப்ரடார்´ இன நாயின் ரத்தத்தை ரோரியின் உடலில் பாய்ச்சினார்.

உயிரியல் கோட்பாடுகளின்படி, நாயும் பூனையும் வெவ்வேறு விலங்கின குடும்ப வகையை சேர்ந்தவை. நாய் வகைகளில் கூட மனிதர்களுக்கு உள்ளது போல் ரத்த பிரிவுகள் (குரூப்கள்) உள்ளன.

எனினும், ஆபத்துக்கு பாவமில்லை என்று தீர்மானித்து அரியதொரு புதிய முயற்சியாக நாயின் ரத்தத்தை பூனைக்கு ஏற்றி அதை வாழ்விக்க வைத்தியர் கேட் ஹெல்லர் முயற்சித்தார்.

அதிர்ஷ்டவசமாக, உயிர் பிழைத்துக் கொண்ட ரோரி, தற்போது நல்ல நிலையில் ஓடியாடி உற்சாகமாக உள்ளதாக எட்வர்ட்ஸ் கூறுகிறார்.

´நாயை போல் அது குரைப்பதில்லை… படித்துக் கொண்டிருக்கும் பேப்பரை அது பறிப்பதுமில்லை´ என வேடிக்கையுடன் அவர் குறிப்பிடுகிறார்.

இந்தோனேசியாவில் மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை..!

indoஇந்தோனேசியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வி அதிகாரிகளின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தோனேசியாவின் உள்ள சுமத்ரா தீவில் அமைந்துள்ள பிரபுமுலிக் மாவட்டத்தில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து கல்வி அதிகாரி முகமது ரஷீத் கூறுகையில், திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபசாரத்தால் மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் இது போன்ற திட்டம் ஒன்றை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.

ஆனால் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என கடும் சர்ச்சை எழுந்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதனால் இந்த உத்தரவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. குழந்தைகள் மீது வன்முறையை திணிப்பதும், அவர்களை அச்சுறுத்துவதுமான இது போன்ற அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாகாண கல்வி அதிகாரி விடோடோ கூறுகையில், மாணவிகளுக்கு தேவையான எவ்வளவோ நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கும் போது, இது போன்ற பரிசோதனைகள் தேவையற்றது. மேலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையர் ஏரிஸ் மெர்டகா, ஜகார்தாவில் அளித்த பேட்டியில், மாணவிகளுக்கு கன்னித்தன்மை இழப்பு என்பது செக்ஸ் நடவடிக்கைகளால் மட்டுமல்ல, விளையாட்டு, உடல் நலக் குறைவு போன்றவற்றால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகளின் இந்த திட்டம் கடுமையான கண்டனத்திற்குரியதாகும் என்று தெரிவித்துள்ளார்.

தனது வளர்ப்புத் தந்தை மீது சாய்சிரிஷா பாலியல் புகார்..!

saiசாய்சிரிஷா தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ளார். ‘லவ் அட் டாக்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் பல புது படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இவரது தந்தை பிரசாத் ராவ் கார் சாரதியாக உள்ளார்.

இரு மாதங்களுக்கு சாய்சிரிஷா திடீரென்று வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து பிரசாத்ராவ் பஞ்சாரா ஹில்ஸ் பொலிசில் புகார் செய்தார். எனது மகள் படப்பிடிப்புக்காக வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடிய வில்லை. கையடக்கத் தொலைபேசியும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

பொலிசார் வழக்குப்பதிவு செய்து சாய் சிரிஷாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சாய்சிரிஷா தெலுங்கு தொலைக்காட்சி அலைவரிவை ஒன்றுக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது….

பிரசாத்ராவ் எனக்கு வளர்ப்பு தந்தை. என் தாய் வீட்டில் இல்லாதபோது அவர் தவறாக நடக்க முயற்சி செய்தார். ஆசைக்கு இணைங்குமாறு வற்புறுத்தினார்.

செக்சுக்கு இணங்காவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டவும் செய்தார். என் தாய் பொருளாதார ரீதியாக அவரை சார்ந்து வாழ வேண்டி இருந்தால் என்னால் பொலிசில் புகார் செய்ய முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து வளர்ப்பு தந்தை மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

தனுஷ் பற்றி போனி கபூர் சொல்லும் யாருக்கும் தெரியாத புது தகவல்..!

danushமுன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் பற்றி பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே, தனுஷின் காதல் கொண்டேன் படத்தைப் பார்த்து அவரை இந்தியில் அறிமுகப்படுத்த விரும்பியதாகத் தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர்.

சமீபத்தில் தனுஷ் நடித்து வெளியான ராஞ்சனா இந்திப்படம் வசூலைக் குவித்தது.

அப்படம் பற்றி திரைத்துறையினைச் சேர்ந்த பலரும் தனுஷை வாழ்த்திக் கொண்டிருக்க போனி கபூரோ வேறு விதமாக தனுஷைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் மிஸ்டர். இந்தியா, புஹார், வாட்டட் போன்ற வசூல் சாதனை படைத்த படங்களைத் தயாரித்தவர் போனிகபூர்.

இவர் நம்மூர் ஸ்ரீதேவியின் கணவரும் ஆவார்.

இவர் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷ் பற்றி பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

அதில், தனுஷின் இரண்டாவது படமான காதல் கொண்டேன் படத்தை தான் மிகவும் ரசித்துப் பார்த்ததாகவும், அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்பட விஷயமாக தான் தனுஷை சந்தித்து டோக்கன் அட்வான்ஸாக ஒரு லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பின்பு, இருவருமே தங்களது படங்களில் பிசியாகிப் போனதால் பட வேலைகளைத் தொடர முடியாமல் போனதாகவும், இல்லையேல் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரே தனுஷ் இந்தியில் அறிமுகமாகியிருப்பார் என கூறியுள்ளார் போனி.

பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த ராகுல் டிராவிட் ஆதரவு..!

cricketT20 கிரிக்கெட் போட்டியால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இழந்து வருகிறது. டெஸ்ட் போட்டிக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அதிகரிக்க செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பகல்-இரவாக (மின்னொளியில்) டெஸ்ட் போட்டியை நடத்த ஐ.சி.சி. கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால் சில நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி, எந்த அணியும் பகல்-இரவாக டெஸ்ட் போட்டியை நடத்த முன்வரவில்லை.

இந்த நிலையில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று இந்திய முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் வலியுறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும் போது தெரிவித்ததாவது,

டெஸ்ட் கிரிக்கெட்டை பகல்-இரவு போட்டியாக நடத்த திறந்த மனதுடன் முயற்சிக்க வேண்டும். மின்னொளியின் கீழ் டெஸ்ட் போட்டி நடப்பதால், அதன் பாரம்பரிய தன்மைக்கு எந்த அச்சுறுதலும் வராது.

இந்த போட்டிகளில் ‘பிங்க்’ நிற பந்துகளை பயன்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ‘பிங்க்’ நிற பந்துகளில் விளையாடுகையில் பிரச்சினை இருப்பதாக ஒரு தரப்பினர் கூறுவதை அறிவேன்.‘பிங்க்’ நிற பந்தில் விளையாடிய அனுபவம் எனக்கு கொஞ்சம் உண்டு. எம்.சி.சி. அணிக்காக பிங்க் நிற பந்துகளில் ஆடிய போது, அதை எதிர்கொண்டு ஆடுவதில் எந்த பிரச்சினையும் இருப்பது போல் தெரியவில்லை.

இதே போல் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் விளையாடும் போது பனியின் தாக்கம் இருக்கலாம். சரியான காலத்தில், சரியான இடத்தில் போட்டி அட்டவணையை அமைத்தால் இரவில் பனிப்பொழிவு பிரச்சினையை தவிர்த்து விடலாம். ரசிகர்களின் கூட்டத்தை ஈர்க்க பகல்-இரவு டெஸ்ட் போட்டி அவசியமாகும்.

காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்றங்கள் என்பது 20 ஓவர் கிரிக்கெட்டை மட்டும் பிரபலப்படுத்த வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் மாற்றம் தேவை. இங்கிலாந்தில் நீண்ட காலம் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கூட சில மாற்றங்கள் வந்திருக்கிறது.

முன்பு போல் இல்லாமல் ஆட்டம் பாதிக்கப்படுவதை தவிர்க்க விம்பிள்டனில் மேற்கூரை கொண்ட ஸ்டேடியம் பயன்படுத்தப்படுவதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

எனவே பகல்-இரவு டெஸ்ட் போட்டியை சீக்கிரம் நடத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என டிராவிட் கூறினார்.

சுற்றுப்பயணங்களின் போது, 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்காக, டெஸ்ட் எண்ணிக்கையை குறைத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடராக நடத்தப்படுவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.