ஜெர்மனியின் முன்னணி கால்பந்து வீரராக விளங்குபவர் மிரோஸ்லாவ் க்லோஸ்.
இவர் வரும் 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடக்க இருக்கும் உலககோப்பை கால்பந்து போட்டிக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தேசியப் போட்டிகளில் பங்கேற்பதற்கும் இதே முடிவு எடுக்கப்படலாம் என்றும் அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். லாசியோ அணியின் நட்சத்திர வீரரான க்லோஸ் (வயது 35), ஜெர்மனிக்காக 128 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இதுவரை அவர் அடித்துள்ள கோல்களின் மொத்த எண்ணிக்கை 67 ஆகும். இன்னும் ஒரு கோல் அடித்தால் அவர் சக நாட்டவரான மியுல்லரின் சாதனையை சமன் செய்ய முடியும்.
மேலும், இந்த 67 கோல்களில் 14 உலகக் கோப்பை (3) போட்டிகளில் அடித்ததாகும். வரும் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் இன்னும் ஒரு கோல் அடித்தால், பிரேசில் வீரர் ரொனால்டோவின் சாதனையான 15 என்ற எண்ணிக்கையை சமன் செய்வார்.
இந்த இரண்டு சாதனைகளை சமன் செய்வதுடன் மிரோஸ்லாவ் ஒய்வு பெறக்கூடும் என்றபோதிலும், ஜெர்மனிக்காக கோப்பையை வெல்வதே தனது லட்சியம் என்று அவர் தெரிவித்தார்.
லாசியோ அணியுடனான ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவதால், பண்டஸ்லிகா அணியுடனான தனது ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் எண்ணத்திலும் மிரோஸ்லாவ் உள்ளார்.
மூளையின் செயல்திறனை மட்டுப்படுத்தி, அறிவாற்றலை இழக்கச் செய்யும் ஆல்சைமர் நோயினால் 2006-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகளாவிய அளவில் சுமார் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.
2050ம் ஆண்டிற்குள் சுமார் 12 கோடி பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
ஆரம்பத்தில் சிறிய நினைவாற்றல் இழப்பு என்ற நிலையில் தொடங்கும் ஆல்சைமர் நோய், நாளடைவில் மனக்குழப்பம், மனச்சிதைவு, நீண்டகால நினைவாற்றல் இழப்பாக உருமாறி இறுதிகட்டத்தில் புலன் உணர்வுகளை குறைத்து இறப்பை ஏற்படுத்திவிடும்.
இந்நோய்க்கு முழு நிவாரணம் அளிக்கக்கூடிய மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்நோய் தொடர்பான நிறைய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்நோய் தொடர்பாக நடத்திய ஆய்வில், குடிநீர் மற்றும் உணவு வகைகளில் அதிக அளவில் காணப்படும் தாமிரம் (செம்பு) மூளை மண்டலத்தில் காரைப் படலத்தை ஏற்படுத்தி ஆல்சைமர் நோயை தீவிரப்படுத்துகிறது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஈரல், சாக்லேட், பருப்பு, எள், சிப்பி மற்றும் கனவா மீனில் தாமிர சத்து அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நரம்பு மண்டல செயல்பாடு, எலும்பு வளர்ச்சி, இயங்கு தசைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பி ஆகியவற்றில் தாமிரத்தின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவு மற்றும் குடிநீர் நமது அறிவாற்றலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ரஷீத் டியென் குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்களின் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டங்களை தடுப்பது தொடர்பான கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற செயற்பாடுகளை வலுப்படுத்துவம் வகையிலான ஜகார்த்தா கோட்பாட்டை இலங்கை உள்ளிட்ட 13 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இடம்பெறும் இது தொடர்பான மாநாட்டில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் இலங்கை சார்பில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துக் கொண்டிருந்தார்.
இதன் போது சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுகின்றவர்களை உடனடியாக கைது செய்யவும், அவர்களை நீதிமன்றத்தின் முன்லைப்படுத்தும் முன்னர் தடுத்து வைக்கவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலு செய்யும் வகையிலான உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
இதில் இலங்கை, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட 14 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.
இதேபோன்று இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகள் ஆட்கடத்தல் செயற்பாடுகளுக்கு உள்ளாக்கப்படாமை தொடர்பான பிராந்திய உடன்படிக்கை ஒன்றும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத மாகப் பயணித்த மற்றுமொரு படகு நேற்றுக் கடலில் மூழ்கியுள்ளது. இப் படகிலிருந்து 106 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து 120 கிலோ மீற்றர் கடல் மைல் தொலைவிலேயே இப்படகு மூழ்கியிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகொன்று மூழ்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சுங்கப் பிரிவினரின் விமானங்களும், அவுஸ்திரேலிய கடற்படையினரின் கப்பலொன்றும் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
படகில் பயணித்தவர்களில் இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன், படகிலிருந்தவர்களை மீட்பதற்கு 8 ஹெலிகொப்டர்களும், கடற்படையினரின் இரண்டு படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்பு அதிகாரசபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவிலிருந்து பயணித்த படகொன்றே இவ்வாறு மூழ்கியிலிருக்கலாமென ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு இவ்வருடத்தில் மாத்திரம் 13,000ற்கும் அதிகமானவர்கள் சட்டவிரோதமாகப் படகுகளில் வந்திருப்பதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு நிகழ்வினை வவுனியாவில் கொண்டாடுவதற்கான முன்னோடி நிகழ்வாக வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 20.8.2013 இடம்பெற்ற போது கலாநிதி அகளங்கன் உரை நிகழ்த்துவதையும் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் படத்தில் காணலாம்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அசத்த வேண்டுமென தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், இதுவரையிலும் 16 டெஸ்ட்டில் 92 விக்கெட், 58 ஒருநாள் போட்டிகளில் 80 விக்கெட் எடுத்துள்ளார்.
இந்நிலையில் இவர் கடைசியாக பங்கேற்ற மேற்கிந்திய தீவுகளுடனான முத்தரப்பு தொடரில் 5 போட்டிகளில் 6 விக்கெட் தான் கைப்பற்றினார்.
இதுகுறித்து அஷ்வின் கூறுகையில் தற்போது இந்திய போட்டிகளில் பங்கு பெறாததால் ஓய்வு கிடைத்துள்ளது.
இதனை பயன்படுத்து எனது பந்துவீச்சு திறமையை வளர்க்க முயற்சித்து வருகிறேன். தற்போது பந்தை பிட்ச் செய்யும் நீளத்தை குறைத்து வேகமாக செல்லும் வகையில் பயிற்சி எடுத்து எடுகிறேன். அத்துடன் வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு கேரம் முறையில் பந்துவீச முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இருவேறு பிரதேசங்களில் மூவாயிரம் கிராம் கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த இருவரைப் பொலிஸார் கடந்த வாரம் கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர் என யாழ். பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்
வவுனியா வேப்பங்குளம் பிரதேசத்தில் ஆயிரம் கிராம் கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்த நெளுக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேபோல் கடந்த 14ம் திகதி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் இரண்டாயிரம் கிராம் போதைப் பொருளை வைத்திருந்த வவுனியா புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த நபரொருவரைக் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் பொலிஸார் வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர் என்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் ஆபாச நடனம் பார்த்து சிக்கியுள்ளனர். பாகிஸ்தான் அணி நேற்றிரவு சிம்பாவே புறப்பட்டது.
இந்நிலையில் அணி வீரர்களான ஜுனைத் கான், அன்வர் அலி மற்றும் அலி ஆசாத் லாகூரில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஆபாச நடனம் பார்த்தது ஜியோ நியூஸ் சனல் கமராவில் பதிவாகியுள்ளது.
தியேட்டர்களில் நடக்கும் இந்த ஷோக்களில் நடிகைகள் மேடையில் கவர்ச்சியாக ஆடுவார்கள். நேற்று இரவு சிம்பாவே புறப்படும் முன்பு தான் அவர்கள் இந்த ஆபாச நடனத்தை பார்த்து சிக்கியுள்ளனர்.
நடனம் ஆடிய ஒரு பெண் கூறுகையில் ஜுனைத் நடனத்தை பார்க்க வந்தது மிகவும் மகிழ்ச்சி. அவர் தான் எங்களில் பெரும்பாலானோருக்கு பிடித்த வீரர் என்று தெரிவித்துள்ளார்.
இணையத்தில் தனது பெயரில் மோசடிகள் நடப்பதாக நடிகர் கார்த்தி கூறினார். பிரியாணி பாடல்களை திருடி நெட்டில் யாரோ வெளியிட்டு விட்டதாக சமீபத்தில் தான் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு போய் புகார் அளித்து விட்டு வந்தார். தற்போது சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டரிலும் தனது பெயரில் போலி கணக்குகள் துவங்கப்பட்டு உள்ளதாக வருத்தப்பட்டார்.
நான் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் எதிலும் இல்லை. ஆனாலும் என் பெயரில் நிறைய போலி கணக்குகள் உள்ளன. இந்த போலிகளை நம்பி ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என் பெயரை பயன்படுத்தி பணம் வசூலிப்பதாகவும் ரசிகர் ஒருவர் மூலம் தெரிய வந்தது. இதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அகரம் போன்ற அமைப்புகளுக்கு நான் நிதி திரட்டும் பணிகள் எதையும் செய்யவில்லை. யாரோ என் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி செய்வது தெரிகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கார்த்தி கூறினார்.
பிரியாணி படத்தின் பாடல்களை வருகிற 31ம் திகதி விழா நடத்தி வெளியிட கார்த்தியும் இயக்குனர் வெங்கட்பிரபுவும் திட்டமிட்டனர். ஆனால் பாடல்கள் இணையத்தில் வெளியாகி விட்டதால் இன்றே பாடல் சி.டி.க்கள் கடைகளில் விற்பனைக்கு வந்தன.
ஜோன்ஆபிரகாம் நடித்த மெட்ராஸ் கபே படம் இந்தி, தமிழ் மொழியில் வருகிற 23ம் திகதி ரிலீசாகிறது. விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக இப்படத்தில் சித்தரித்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இதில் ஜோன் ஆபிரகாம் இந்திய “ரோ” அதிகாரியாக வருகிறார். கதாநாயகி நர்கிஸ் பக்ரி இங்கிலாந்து பத்திரிகை நிருபராக வருகிறார். அஜய் ரத்னம் பிரபாகரன் கரக்டரில் நடித்துள்ளார். பியூஷ் பாண்டே இந்திய அமைச்சரவை செயலாளராக வருகிறார். லீனா மரியா, டினு ஆகியோர் தமிழ் அகதிகளாக வருகின்றனர்.
இலங்கையில் அஜய் ரத்னம் விடுதலைப் புலிகளுக்கு யுத்த வியூகம் அமைத்து கொடுப்பது போன்றும் அவரை பிடிக்க ஜோன் ஆபிரகாம் துப்பறிவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட பிரபாகரன் வேடத்தில் அஜய்ரத்னம் நடித்ததற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
அக்கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் பிரபாகரன் விடுதலை போராட்ட வீரன். தமிழர்களின் அடையாளம். அப்பாவி சிங்களர்களை பிரபாகரன் கொன்றது இல்லை. பிரபாகரனை தீவிரவாதியாக்கி மெட்ராஸ் கபே படத்தை எடுத்துள்ளனர். இந்த படத்தில் பிரபாகரன் வேடத்தில் அஜய்ரத்னம் நடிக்க ஒப்புக்கொண்டது கண்டிக்கத்தக்கது.
இதில் நடிக்க மாட்டேன் என்ற அவர் மறுத்து இருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. அஜய்ரத்னம் படங்களை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். இயக்குனர்கள் புதுப்படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டு உள்ளார்.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பேர்கின் பக்கத்தை ஹேக் செய்தவருக்கு சக ஹேக்கர்கள் பரிசளிக்கவிருக்கின்றனர். பேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு பிரச்சனை அதாவது பக் குறித்து அந்நிறுவனத்திடம் பாலஸ்தீனியரான கலீல் ஷ்ரியதே புகார் கொடுத்தார்.
ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்ளாததால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பேர்கின் பக்கத்தை ஹேக் செய்து அவர் புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த பக் சரி செய்யப்பட்டது.
வழக்கமாக இது போன்ற பக் குறித்து தெரிவித்தால் தெரிவிப்போருக்கு பரிசு வழங்கப்படும். ஆனால் கலீலுக்கு பரிசு வழங்கவில்லை. மாறாக அவரது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது.
இதையடுத்து உலக ஹேக்கர்கள் அவருக்கு பரிசளிக்க முன் வந்துள்ளனர். இந்நிலையில் பியான்ட் ட்ரஸ்ட்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மார்க் மெய்பிரட் ஹேக்கர்களிடம் இருந்து 642,957 ரூபா நிதி திரட்ட வழிவகை செய்துள்ளார்.
கலீலுக்கு பேஸ்புக் பரிசு அளிக்காதது நியாயமில்லை என்று மெய்பிரட் மற்றும் பல ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். கலீல் பாலஸ்தீனத்தில் உட்கார்ந்து 5 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு லேப்டாப்பில் ஆய்வு செய்கிறார். அநத் லேப்டாப்பை பார்த்தால் அது ஏற்கனவே பாதி உடைந்தது போல் இருக்கிறது என்று மெய்பிரட் தெரிவித்தார்.
ரஜினி சினிமாவுக்கு வந்து 38 வருடங்கள் ஆகிறது. இன்று நாடே சுப்பர் ஸ்டார் என கொண்டாடும் அவரது ஆரம்ப கால வாழ்க்கை கரடுமுரடானது.
சிவாஜிராவ் கெய்க்வாட் ஆக பெங்களூரில் வசித்த காலங்கள் கஷ்டமாகவே நகர்ந்தன. இதுகுறித்து சென்னை தின விழாவில் நடிகர் மோகன்ராமன் பேசிய விவரம் வருமாறு:–
ரஜினி பார்த்த முதல் வேலை ஆபீஸ் பியூன். தொடர்ந்து நிறைய சிறுசிறு வேலைகளில் இருந்தார். அதன் பிறகு கண்டக்டர் ஆனார்.
ரஜினி பணியாற்றிய பஸ்சில் ராஜ்பகதூர் டிரைவராக இருந்தார். அவருக்கு சினிமா பார்க்க பிடிக்கும். இருவரும் ஒரே நாளில் லீவு போட்டுக் கொண்டு சிவாஜி கணேசன் படம் பார்க்க போய் விடுவார்கள்.
ரஜினி நாடகங்களில் நடித்தார். அவரது நடிப்பு ஆர்வத்தை ராஜ்பகதூர் ஊக்குவித்தார். ரஜினி நடிப்பு கல்லூரியில் சேர்ந்து நடிப்பதற்கும் அவரே பண உதவி செய்தார். கட்ட பொம்மன் படத்தில் உள்ள வசனங்களை பேசி பயிற்சி எடுத்தார்.
டைரக்டர் கே.பாலச்சந்தர் ஒருநாள் ரஜினி படித்த கல்லூரிக்கு சென்றார். அங்கு ரஜினி வேகமாக பேசி நடித்த ஸ்டைல் அவருக்கு பிடித்தது. அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
அதன் பிறகு சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற பெயரை ரஜினிகாந்த் என மாற்றினார் பாலச்சந்தர். மேஜர் சந்திரகாந்த் என்ற பெயரில் படம் எடுத்து இருந்தார். அந்த தலைப்பை மனதில் வைத்தே ரஜினிகாந்த் என்ற பெயரை தேர்வு செய்தார்.
தியாகராயநகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் டிக்கெட் வாங்கிதான் முதலாவதாக நடித்த படத்தை பார்க்க போனார். யாராவது தன்னை அடையாளம் கண்டு கொள்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தார்.
10 வயது சிறுமி மட்டும் அவரை அடையாளம் கண்டார். அந்த சிறுமிதான் ரஜினியின் முதல் ரசிகை. 1975 மார்ச் 27ம் திகதி ஹோலி பண்டிகை அன்றுதான் ரஜினிகாந்த் பெயரை பாலச்சந்தர் சூட்டினார். அந்த நாளைதான் சூப்பர் ஸ்டார் பிறந்த நாளாக கொண்டாட வேண்டும்.
ரஜினி படப்பிடிப்பில் அடிக்கடி சிகரெட்டை மேலே சுண்டி விட்டு வாயில் பிடித்து புகை பிடிப்பது உண்டு. இந்த ஸ்டைல் பாலச்சந்தரை கவர்ந்தது. தனது படங்களில் அதை பயன்படுத்தினார்.
ரஜினிக்கு பிடித்த பாடல் ரா…ரா.ரா. ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா.இவ்வாறு அவர் பேசினார்.
கதாநாயகனர்கள் எல்லோரும் ஆரம்பத்தில் மென்மையான கரக்டர்களில் நடித்தே உயர்ந்தார்கள். ஆனால் ரஜினி வில்லனாக இருந்து கதாநாயகனாக சினிமாவுக்கு வருவதற்கு முன் மேடை நாடகததில் துரியோதனனாக நடித்தார்.
மூன்று முடிச்சு படத்தில் வில்லன் வேடம். பிறகு புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை படங்களில் மென்மையான கரக்டரில் வந்தார். பில்லா படத்துக்கு பிறகுதான் அக்சன் ஹீரோ ஆனார்.
பெர்னடைன் டிசோசா என்ற பெண் தனது சிறுவயது முதலே அமிதாப்பின் பரம ரசிகையாக இருந்து வருகிறார். தற்போது வரும் 18ம் திகதி 100 வயதை எட்டும் இவர், முதுமை காரணமாக வரும் அல்சைமர் என்னும் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
குடும்ப உறுப்பினர்களை எல்லாம் மறந்துவிட்ட நிலையிலும் அவருக்கு அமிதாப்பின் பெயர் மட்டும் நினைவில் இருக்கின்றது. அவருக்கு சாப்பாடு கொடுக்கக்கூட அமிதாப் அவரை வந்து பார்க்கப் போகின்றார் என்று சொல்லியே உணவு ஊட்டுவதாக அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவரை சந்தோஷப்படுத்த விரும்பிய அவரது குடும்பத்தினர், டிசோசா பற்றி அமிதாப்பிற்கு ஒரு தகவல் அனுப்பியிருந்தனர். அவருக்கு 100 வயதாவதை ஒட்டி அமிதாப் தனது ரசிகைக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இத்தனை தள்ளாத வயதிலும் முதுமை மறதி நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தன்னுடைய பெயரை மட்டும் அவர் ஞாபகம் வைத்திருப்பதை அறிந்த அமிதாப் மிகவும் மனம் நெகிழ்ந்து போனார். உடனடியாக தன்னுடைய ரசிகைக்கு வீடியோ மூலம் வாழ்த்துச் செய்தியையும் அனுப்பியுள்ளார்.
மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட காரைக்கால் அமில வீச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவதற்காக பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த பொறியியல் பட்டதாரி வினோதினி மீது சுரேஷ் ஆசிட் வீசினார்.
படுகாயமடைந்த வினோதினி பின்னர் பிப்ரவரி 12 ஆம் நாளன்று சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார்.
அவர்கள் காதலித்ததாகவும், பல உதவிகள் தான் செய்ததாகவும், ஆனால் பொறியாளரான பிறகு தன்னை உதாசீனப்படுத்தினார் வினோதினி, திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தார், எனவே ஆத்திரப்பட்டு ஆசிட் வீசியதாக சுரேஷ் கூறினார்.
சம்பவம் அகில இந்திய அளவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. சம்பவத்திற்கு மறுநாளே சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் 12 ஆம் நாள் நிறைவடைந்து, இன்று கூடுதல் அமர்வு நீதிபதி வைத்தியநாதன் வினோதினி கொலைக்காக சுரேஷுக்கு ஆயுள் தண்டனையும், வினோதினி, மற்றும் உடனிருந்த இருவரைக் காயப்படுத்தியதற்காக 4 ஆண்டு கால சிறை தண்டனையையும் விதித்தார்.
சுரேஷுக்கு மரண தண்டனை கோரியிருந்த அரசு தரப்பு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்தார்.
ஆங்கில எழுத்துக்களை எழுதும் போதோ அல்லது அவற்றினை பயன்படுத்தி சொற்களை உருவாக்கும் போதோ ஏற்படும் தவறுகளை அதிர்ச்சியின் மூலம் சுட்டிக் காட்டும் பேனா சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமாகி இருந்தது.
இந்நிலையில் மேலும் சில தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக மற்றுமொரு பேனா உருவாக்கப்பட்டுள்ளது. இது பொருத்தமான அதிர்ச்சிகளின் மூலம் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Lernstift எனப்படும் இப்பேனாவானது கற்றலில் ஈடுபடும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் போன்றவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.