வவுனியாவில் நன்னீர் மீன்பிடியாளர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு!!

வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (06.07) பதிவு செய்யப்பட்ட வவுனியா குளங்களில் மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்ற மீனவர்களுக்கு தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வுச் செயலமர்வு ஒன்று மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான மாவட்ட நீர் உயிரினச் செய்கை உத்தியோகத்தர் யோ.நிசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

அண்மையில் வவுனியா குளங்களில் சட்டவிரோதமான தங்கூசி வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றவர்களை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருந்தனர். எனவே சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கும் நடவடிக்கையாகவே இச் செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

தேசிய உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வவுனியா குளங்களில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளின் பாவனையைத் தடுப்பது தொடர்பான செயலமர்வில் வவுனியாக்குளம், பாவற்குளம், கல்மடு, மடுக்கந்த, போகெஸ்வெவ, ஈரப்பெரியகுளம் போன்ற பகுதியிலுள்ள மீனவர்கள் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வில் வளவாளர்களாக சமுத்திர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ரத்தினதிலக கலந்துகொண்டு தடை செய்யப்பட்ட வலைகள் தொடர்பாகவும் புதிய மீன்பிடி முறைமைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

நேற்றைய நிறைவு தினத்தில் இச் செயலமர்வில் கலந்துகொண்ட அனைத்து மீனவர்களுக்கும் தலா இரண்டு நூல் வலைகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் தங்களிடமுள்ள தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை தமது அலுவலகத்தில் ஒப்படைத்து அதற்கு மாற்றீடாக வலைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட நீர் உயிரினச் செய்கை உத்தியோகத்தர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குழந்தைகளை வயிற்றில் சுமந்த கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்!!

அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் துப்பாக்கியால் சுடப்பட்டதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹலே ஸ்மித் (23) என்ற பெண் தனது குடும்பத்தார் இருவருடன் காரில் சென்ற போது மர்ம நபர்கள் சிலர் காரை வழிமறித்துள்ளனர்.
பின்னர் காரில் இருந்த ஸ்மித்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ஸ்மித் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்மித் தற்போது கர்ப்பமாக இருப்பதும், அவர் வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளர்வதும் தெரியவந்துள்ளது.

இதனிடையில் இவ்வழக்கில் தொடர்புடைய லகீவன் என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளதோடு, மேலும் இருவரை விசாரித்து வருகிறார்கள்.

பில்லி சூனியம் வைத்து எனது வீட்டை அபகரிக்க முயற்சி : பிரபல நடிகை பரபரப்புப் புகார்!!

பில்லி சூனியம் வைத்து தனது சொந்த வீட்டை அபரிக்க முயற்சிப்பதாக நடிகை ஜெயசித்ரா பொலிசில் புகார் அளித்துள்ளார்

ரங்கராஜபுரத்தில் உள்ள எனது சொந்த வீட்டில் வாடகைக்கு இருக்கும் இளமுருகன் மற்றும் அவரது மனைவி மீனா ஆகியோர் வாடகை தராமல் ஏமாற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி போலி ஆவணங்கள் மற்றும் பில்லி சூனியம் வைத்து எனது வீட்டை அபகரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இளமுருகன் – மீனா தம்பதியினர் நடிகர் விக்னேஷிடம் ரூ.6 லட்சம் பெற்றுக் கொண்டு பணத்தை திருப்பித்தராமல் இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும் படத்தயாரிப்பாளர் அசோக் லோடா என்பவரிடம் கார் வாங்கித் தருவதாக கூறி ரூ.7.5 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு பின்பு பணத்தை தராமல் ஏமாற்றியதாகவும் அவர் புகார் அளித்துள்ளார்.

திருமணமான பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : நண்பர்களுடன் சேர்ந்து சிறுவன் வெறிச்செயல்!!

இந்தியாவில் திருமணமான பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பக்ரோல் கிராமத்தை சேர்ந்த திருமணமான 23 வயது பெண் இரு தினங்களுக்கு முன்னர் அங்குள்ள வயல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் அப்பெண்ணை வழிமறித்து இறுக்க பிடித்து கொண்டான்.

இதையடுத்து சிறுவனின் நண்பர்களான தீபக் பர்மர், பய்லு, உமேஷ் ஆகியோர் அங்கு வந்த நிலையில் நால்வரும் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனை பய்லும், உமேஷும் செல்போனில் புகைப்படம் எடுத்ததோடு, இதை யாரிடமும் சொல்லக்கூடாது என பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதன்பின்னர் பாதிக்கப்பட்ட நேராக காவல் நிலையம் சென்று இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து நால்வரையும் கைது செய்த பொலிசார் மூன்று இளைஞர்களை சிறையில் அடைத்த நிலையில், சிறுவனை மட்டும் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

திருமணமான சில நாட்களில் புதுமண தம்பதி படுகொலை!!

கேரளாவில் திருமணமான சில நாட்களில் புதுமண தம்பதி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயனாட் மாவட்டத்தில் உள்ள மக்கியாட் கிராமத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

உமர் (28) என்ற இளைஞருக்கும் பாத்திமா (20) என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று வீட்டில் படுகாயங்களுடன் இருவரும் சடலமாக கிடந்தார்கள்.

உமரின் சகோதரர் முனீர் வீட்டில் இரவு தங்கியிருந்த அவர் தாய் ஆயிஷா காலையில் வீட்டுக்கு வந்த போது இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் கொலை நடந்த வீட்டின் அருகில் உள்ள 19 பேரை இதுவரை விசாரித்துள்ளனர்.

இது திருட்டுக்காக நடந்த கொலையா அல்லது பழிவாங்க நடந்த கொலையா என இன்னும் தெரியவில்லை.

பாத்திமாவின் சில நகைகள் உடலில் இருந்தாலும், அவரின் வளையல்கள் மற்றும் நெக்லஸ் காணாமல் போயுள்ளது.

இது பொலிசுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருமணத்திற்கு பின்னர் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லாத கணவன் : ஸ்கைப்பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி!!

சென்னையில் திருமணமாகி 9 மாதங்களாகியும் வாழக்கை நடத்துவதற்கு நோர்வே நாட்டுக்கு கணவர் அழைத்து செல்லாத காரணத்தால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

சென்னையை சேர்ந்த சுவாதிகா ஸ்ரீ என்பவருக்கும், நோர்வேயில் வேலை பார்த்து வந்த கீர்த்திவாசனுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப்பிறகு சுவாதிகாஸ்ரீயை நோர்வேக்கு அழைத்துச் செல்வதாக கீர்த்திவாசன் கூறியிருந்தார். ஆனால், அழைத்துச் செல்லவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கணவர் தன்னை நோர்வேக்கு அழைத்து செல்லாத காரணத்தால் மனமுடைந்த சுவாதிகாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி தனது கணவருடன் ஸ்கைப்பில் பேசியபடி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருமணமாகி 9 மாதங்களில் சுவாதிகா ஸ்ரீ தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்தது. அந்த விசாரணைக்கும் கீர்த்திவாசன் மற்றும் அவரின் குடும்பத்தினர் வரவில்லை.

சுவாதிகா ஸ்ரீயின் பெற்றோர் பொலிசாரிடம் கொடுத்துள்ள புகாரில், `என்னுடைய மகள் தற்கொலைக்கு கீர்த்திவாசனும் அவரின் குடும்பத்தினர்தான் காரணம் என கூறியுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று, கீர்த்திவாசனுடன் சுவாதிகா ஸ்ரீ ஸ்கைப் மூலம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில், சுவாதிகா ஸ்ரீயிடம், தரக்குறைவாக கீர்த்திவாசன் பேசியதாக தெரியவந்துள்ளது.

மேலும், உன்னை என்னுடன் நோர்வேக்கு அழைத்துச் செல்லவோ உன்னுடன் வாழ எனக்கு எந்த விருப்பமும் இல்லை என்று கூறியுள்ளார். நீ உயிரோடு இருந்தால் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது என கீர்த்திவாசன் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்து சுவாதிகா ஸ்ரீ தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் சுவாதிகா ஸ்ரீயின் தற்கொலைக்கு கீர்த்திவாசன் மற்றும் அவரின் குடும்பத்தினர் காரணம் என்று தெரியவந்தது.

இதனால், இந்த வழக்கை தற்கொலைக்குத் தூண்டியதாக பொலிசார் மாற்றியுள்ளனர். மேலும் இதுகுறித்து கீர்த்திவாசன் வீட்டினரிடம் விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மதவாதத்தை அப்புறப்படுத்த போராடிய தமிழ் இளைஞனின் கொடூர கொலை!!

மதவாதத்தை அப்புறப்படுத்துவோம் என்று போராடிய தமிழ் இளைஞன் அபிமன்யூவின் மரணம் கேரளாவை உலுக்கியுள்ளது.

இடுக்கியில், ஏழ்மையான தமிழ் குடும்பத்தை சேர்ந்த அபிமன்யூ எர்ணாகுளம் மகராஜா கல்லூரியில் இரண்டாமாண்டு வேதியியல் படித்து வருகிறார்.

கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த அபிமன்யூவிடம் வார இறுதி நாள்களில் சொந்த ஊருக்குப் பேருந்தில் செல்லக்கூட காசு இருக்காது. பல நேரங்களில் காய்கறி லாரிகளில்தான் அபிமன்யூவின் சொந்த ஊர் பயணம் அமையும்.

இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றிய அபிமன்யூவுக்கு எதிரிகள் அதிகரித்தனர்.

‘மதவாதத்தை வோறோடு அறுப்போம்’ என்று கோஷமிடும் அபிமன்யூ, மதவாதிகளுக்கு எதிரிகளானார். இந்திய மாணவர் சங்கமும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கிளை அமைப்பான கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் கல்லூரி சுவர்களில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று எழுதியுள்ளனர்.

அப்போது, கேம்பஸ் ஃப்ரன்ட் அமைப்பினர் எழுதிய சுவர்களில் அபிமன்யூ, மதவாத கேம்பஸ் ஃப்ரன்ட் என்று மாற்றி எழுதியிருக்கிறார்.

இதனால் ஏற்பட்ட தகராறில், அபிமன்யூவின் கரங்களைப் பின்புறமாக பிடித்து கட்டி வைத்து கத்தியால் அவனின் மார்பை பிளந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர் மதவாதிகள்.

கொலை தொடர்பாக கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

அபிமன்யூவின் இந்தக் கொடுர மரணம் கேரளத்தை உலுக்கி எடுத்திருக்கிறது.

கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், “மதவாதிகளுக்கும் மதத்தை காரணம் காட்டி கத்தியை எடுப்பவர்களும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டும். இவர்களை அப்புறப்படுத்த அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் ” என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குளிப்பதை படம் எடுத்ததால் விபரீதம் : இளைஞரை எரித்து கொன்ற நண்பர்கள்!!

தமிழ்நாட்டில் இளைஞரை அவரின் நான்கு நண்பர்கள் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள காவரி ஆற்றாங்கரை காட்டு பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிசார் ஆண் சடலம் ஒன்றை கண்டெடுத்தனர்.

இது தொடர்பாக விமல் என்பவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், தீயில் கருகி இறந்துகிடந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சதிஷ் என்பதும் அவரை அவரது நண்பர்களே பெட்ரோல் ஊற்றிக் கொன்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

சம்பவத்தன்று விமல் கொசவம்பட்டியை சேர்ந்த வசந்த், ராஜேஷ்குமார், சிவசங்கரன் மற்றும் கொலைசெய்யப்பட்ட சதிஷ் ஆகியோரோடு மது அருந்தியிருக்கிறார்.

பிறகு மது போதையில் அருகிலுள்ள ஆற்றங்கரையில் இருட்டிய நேரம் என்பதால் உடையின்றி குளிக்கத்தொடங்கினர்.

அப்போது சதீஷ் தனது மொபைலில் சக நண்பர்கள் ஆடையின்றி குளிப்பதை புகைப்படம் எடுத்து வாட்ஸாப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனைக்கண்ட சக நண்பர்கள் சதீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுதோடு அவரை தாக்கியுள்ளனர்.

பின்னர் ஆத்திரத்தில் சதீஷை கத்தியால் குத்தி கொலை செய்து சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து நால்வரையும் கைது செய்த பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட பிரபல நடிகரின் திருமணம் : சாமர்த்தியமாக செயல்பட்ட நடிகை!!

பிரபல நடிகர் மஹா அகபஷயின் திருமணம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் பிரபல நடிகரான மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மஹா அகபஷய் இந்தி மற்றும் போஜ்புரி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

மும்பையை சேர்ந்த போஜ்பூரி நடிகை ஒருவர் மஹா அகபஷய் தன்னை திருமணம் செய்வதாக கூறி 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தார் என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் உதகையில் நட்சத்திர ஹொட்டலில் அகபஷய்க்கு வேறு ஒரு பெண்ணுடன் இன்று திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன.

இதனையறிந்த அந்த நடிகை டெல்லி பொலிசிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அகபஷயின் திருமணம் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் புதையல் தோண்ட முயற்சி!!

வவுனியா பட்டக்காடு, மரக்காரம்பளை வீதியில் நேற்று மாலை புதையல் தோண்டுவதற்கு மேற்கொண்ட முயற்சி பொலிசாரின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை வவுனியா பட்டக்காடு மரக்காரம்பளை வீதியிலுள்ள பகுதி ஒன்றில் ஏற்கனவே புதையல் தோண்டப்பட்டுள்ளது. எனினும் எவ்விதமான பொருட்களும் கிடைக்கவில்லை.

இதையடுத்து நேற்று மாலை அப்பகுதியில் புதையில் தோண்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் அப்பகுதியில் எவரும் இவ்வாறான முயற்சியில் ஈடுபடவில்லை என்பதைக்கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து சற்று நேரம் பாதுகாப்புக்கடமைகளை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து பொலிசார் விலகிச் சென்றுள்ளனர்.

இப்பகுதியில் புதையல் இருப்பதாகத் தெரிவித்து அண்மையில் ஒரு குழுவினரால் புதையல் தோண்டப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் மர்மப் பொருள் மீட்பு!!

வவுனியாவில் நேற்று(07.07) இரவு மரக்காரம்பளை பகுதியிலிருந்து இரும்புப் பெட்டகம் ஒன்றினை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு பொலிசாரின் அவரச தொலைபேசி அழைப்புக்குக்கிடைத்த தகவல் அடிப்படையில் சென்ற பொலிசார் மரக்காரம்பளை பகுதியிலிருந்து கைவிடப்பட்ட இரும்பு பாதுகாப்புப் பெட்டகம் ஒன்றினை மீட்டுள்ளனர்.

முற்றிலும் மூடப்பட்ட நிலையிலிருந்து மீட்கப்பபட்ட இரும்புப் பெட்டகத்தினுள் பொருட்கள் எவையும் மறைத்து வைக்கப்பட்டிருகலாம் என்றும் புதையல் தோண்டும் நபர்களினால் இது மீட்கப்பட்டிருக்கலாம் அதனை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா இளைஞன் ஆசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாட தெரிவு!!

ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் ஆசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாடுவதற்காக பங்களாதேஸ் தலைநகர் டாக்கா செல்லும் இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியில் வவுனியா இளைஞனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியின் 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த கந்தவநேசன் கவிலவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்களில் மாகாண மட்டத்தில் பலபதக்கங்களைப் பெற்று தேசிய ரீதியிலும் கபிலவன் விளையாடியிருந்தார்.

வவுனியா மாவட்டத்தில் ஒழுங்கான கூடைப்பந்து திடலோ, பயிற்சியாளரோ இல்லாத நிலையில் தனது விடாமுயற்சி காரணமாக குறித்த இளைஞன் கூடைப்பந்தாட்டத்தில் தேசிய அணியில் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 9 ஆம் திகதி 5 நாடுகள் பங்கு கொள்ளும் ஆசியன் சம்பியன் சிப்போட்டியில் விளையாடுவதற்காக பங்களாதேஸ் தலைநகர் டாக்கா செல்லவுள்ள இலங்கையின் கூடைப்பந்தாட்ட தேசிய அணியில் கபிலவன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்த நிலையில் இலங்கைதேசிய அணியில் தெரிவாகியுள்ளமை வவுனியாவிற்கு மட்டுமன்றி வடமாகாணத்திற்கே பெருமையாகும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும்!!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டடுள்ளது.

குறித்த தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கயைில்,

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்த பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளன.

இந்தப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் வருடம் ஆண்டு இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சுவர்க்கத்தீவின் அழகிய சில புகைப்படங்கள்!!

ஆசியா கண்டத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நாடு இலங்கை, இந்த தனி பொக்கிஷ நாட்டில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகளின் கனவத்தை ஈர்ப்பது இயற்கை என்றால் அது மிகையாகாது.

இலங்கை ஒரு குட்டித்தீவாக இருந்தாலும் இங்கு கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்களும் ஆச்சரியங்களும் உள்நாட்டவர்களையும், சுற்றுலாப்பயணிகளையும் எப்போதும் தன் பக்கம் வசப்படுத்தும் வள்ளமை கொண்டது.

நான்கு பக்கமும் சாகரம் சூழ, மத்தியில் மலைகளும், அடர்ந்த காடுகளும் அதன் நடுவே விசாலமான நீர் வீழ்ச்சிக்களும் என ஒரு குட்டி சுவர்க்கத்தையே எம் கண் முன் காட்டிவிடுவதாய் அமைந்ததுதான் எமது தீவு.

இவ்வாறு பல அற்புத பொக்கிஷங்களை உள்ளடக்கிய எமது நாட்டில் உள்ள சில இயற்கைசார் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வான்பரப்பில் இருந்து நோக்கும்போது இந்த இடங்களின் காட்சியமைப்பு தனி அழகு கொண்டவை, அவ்வாறான புகைப்படங்களுள் சில….

மகளின் மானத்தை காக்க போராடிய தந்தை : கொடூரமாக வெட்டி கொலை செய்த கும்பல்!!

அனுராதபுரத்தில் மகளின் மானத்தை காப்பாற்ற போராடிய தந்தை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம், தீபான வித்தியாலயத்திற்கு வைத்து ஆயுத குழுவொன்றினால் குறித்த நபர் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபரை கொலை செய்யப்பட்ட தந்தை தாக்கியுள்ளார். அதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த நபரின் உறவினர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம், வன்னியன்குளம் பிரதேசததை சேர்ந்த 45 வயதான சுஜீவ பிரசந்த குமார ஹெட்டிஆராச்சி என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திருமண வைபவத்தில் வைத்து சுஜீவவின் மகன்கள் மற்றும் அந்த பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை தடுக்க சுஜீவவின் மகள் தலையிட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் மோதலில் ஈடுபட்ட நபர், சுஜீவவின் மகளை நிர்வாணமாக்கி, துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். இதன் போது சுஜீவ அந்த நபரை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் சுஜீவவின் வாகனத்தை பழுது பார்ப்பதற்காக பழுது பார்க்கும் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அந்த மோட்டார் வாகனம் செயலிழந்துள்ளதாக கூறி நபர் ஒருவர் வாகனத்தை தீபானி பாடசாலைக்கு அருகில் கொண்டு சென்றுள்ளார்.

அந்த இடத்தை வாகனம் சென்றடைந்தவுடன் ஆயுதத்துடன் மோட்டார் வாகனத்தில் வந்த 4 பேர் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தவரே தந்தையை கொலை செய்திருக்கலாம் என உயிரிழந்தவரின் மகள் குற்றம் சுமத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் கிராமத்தில் உள்ள ஆறுமுகநாவலர் சிலை உடைப்பு!!

வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுக நாவலரின் திருவுருவ சிலையினை காடையர்கள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (06.07.2018) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்கள் ஒன்றினைந்து மது வருந்துவதாகவும், அவர்களுக்குள் இடம்பெற்ற தகாராறு காரணமாக உடைத்து இருக்கலாம் என சந்தேகப்படுவதாக அப்பகுதி வாழ் மக்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.