வீட்டுத் தோட்டத்தில் அதிசயமான தென்னை மரம்!!

சாலியவெவ யாய ஹதே பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் தென்னை மரம் ஒன்று மூன்று கிளைகளுடன் வளர்ந்துள்ளது.

மூன்று கிளைகளிலும் காய்கள் காய்பதாக அதன் உரிமையாளரான ஈ.எஸ். சோமாவதி தெரிவித்துள்ளார்.

20 வயதான இந்த தென்னை மரம் தனி மரமாக வளர்ந்துள்ளதுடன், பல வருடங்களுக்கு முன்னர் அதில் கிளைகள் முளைத்துள்ளதாகவும் அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிளைகள் மூலம் சிறந்த தேங்காய் அறுவடை கிடைப்பதாகவும், தற்போது, மரத்தின் கிளை ஒன்றிலும் கிளை வளர்ந்து வருவதாகவும் ஈ.எஸ். சோமாவதி கூறியுள்ளார்.

நடுவானில் திடீரென தோன்றிய உருவம் : அதிர்ச்சியில் மயங்கிய இளைஞன் : என்ன உருவம் தெரியுமா?

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பிரதேசத்தில் கிருஷ்ணர் வானத்தில் தோன்றி அருளாட்சி புரிந்திக்கிறார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது என்னவென்றால், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கிறிஸ்தவ வாலிபன் நாச்சிக்குடா கடற்கரையில் இரவு மீன் பிடிக்க செல்வதற்காக வலைகளை உலர வைக்க சென்றிருக்கிறான்.

அப்போது அந்த வாலிபன் வானத்திலே கிருஷ்ணர் அவதாரம் தோன்றியிருந்ததை அவதானித்திருக்கிறான் உடனே தனது கைத்தொலைபேசியை எடுத்து அதை புகைப்படம் எடுத்திருக்கிறான்.

அதை அவர்களின் ஊர் கிறிஸ்தவ பங்குத்தந்தையிடம் காட்டியிருக்கிறான் அப்போது தான் அவனுக்கு தெரிந்திருக்கிறது அவன் படபிடித்தது கிருஷ்ணரின் உருவத்தை என்று.

இதே போல் இதே கிருஷ்ணர் உருவத்தை கடல் பகுதியில் நின்றிருந்த பிறிதொரு நபரும் அவதானித்திருக்கிறார்.

அவர் கிருஷ்ணணின் உருவத்தை வானில் கண்ட அதிர்ச்சியில் மயக்கமடைந்தி வீழ்ந்திருக்கிறார் பின் அந்த இடத்தால் வந்த கடற்படையினர் அவரை மீட்டு நினைவு தெளிய வைத்த பின் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார். இந்த விடயம் தற்போது பூநகரி பிரதேத்தில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏன் இப்படி திடீரென கிருஷ்ணபகவான் அருளாட்சி புரிந்தார் என பலதப்பட்ட கேள்விகளை உருவாக்கி மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இரு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை!!

அநுராதபுரம் – விஜயபுர பிரதேசத்தில் குடும்பஸ்தரான வர்த்தகரொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதங்களுடன் வந்த குழுவினர் இந்த நபரை வெட்டிக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விஜயபுர ராகுல மாவத்தையில் வசித்து வந்த 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் வாகனங்களை விநியோகித்து வருவதுடன், வாகனங்களை பழுதுபார்க்கும் தொழில் நிலையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.

நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தனது வாகனத்தை பழுது பார்க்க வருமாறு கூறி அநுராதபுரம் தீபானி கல்லூரிக்கு எதிரில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு கூரிய ஆயுதங்களுடன் இருந்த நபர்கள், வர்த்தகரை வெட்டியுள்ளனர்.

வெட்டு காயங்களுக்கு உள்ளாகி படுகாயமடைந்த வர்த்தகர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய வித்தியாசமான திருமணம்!!

இலங்கையில் நடந்த திருமணம் வைபவம் ஒன்று நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.

தற்போது உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக உலகமெங்கும் உலகக் கிண்ண காற்பந்தாட்ட காய்ச்சல் ரசிகர்களை தொற்றியுள்ளது.

இலங்கையில் உள்ளவர்களும் காற்பந்து போட்டிகளுக்கு தீவிர ரசிகர்களாக மாறியுள்ளனர்.

இந்நிலையில் காற்பந்து மீதான தீவிரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜோடி ஒன்று தமது திருமணத்தை செய்துள்ளது.

கலாச்சார ஆடைகளை அணியாது, காற்பந்து போட்டியாளர்களாக மைதானம் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

எனினும் திருமணம் செய்து கொண்டவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகாத நிலையில் அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஹனிபா கடமைகளைப் பொறுப்பேற்றார்!!

 

வவுனியா மாவட்டத்தின் 37வது அரசாங்க அதிபராக இன்று காலை(06.07) 11.30 மணியளவில் ஜ.எம்.ஹனிபா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வு இன்று காலை வவுனியா மாவட்டச் செயலகத்தில் முன்னாள் அரசாங்க அதிபர் சோமரத்தின விதாரன பத்திரன தலைமையில் இடம்பெற்றது.

காலை 11 மணியளவில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வு சர்வமத பிரார்த்தனையின் பின்னர் புதிய மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக மாவட்ட செலயகத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தனது குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தந்த புதிய அரசாங்க அதிபரை மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாண அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் வரவேற்றுள்ளதுடன் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் சட்டவிரோதமாக மாட்டு இறைச்சி அறுத்த ஒருவர் கைது!!

வவுனியாவில் இன்று காலை 7 மணியளவில் சட்டவிரோதமான முறையில் வீடு ஒன்றில் மாடு அறுத்து இறைச்சியாக்கிய அதனை விற்பனை செய்வதற்கு முயன்றபோது சம்பவ இடத்தில் வைத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று (06.07) காலை 7மணியளவில் பட்டக்காடு பகுத்தியில் உள்ள வீதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் அறுத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருக்குக்கிடைத்த இரகசியத் தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் அப்பகுதியைச் சுற்றிவளைத்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது சட்டவிரோதமான முறையில் மாடு அறுத்த சந்தேக நபர் ஒருவருடன் பெருமளவு இறைச்சியையும் பொலிசார் மீட்டுள்ளதாகவும் இப்பகுதியில் தொடர்ச்சியாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மாடு அறுத்து விற்பனை செய்யப்பட்டு வருவதும் தற்போது பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கைப்பற்றப்பட்ட இறைச்சிகளையும் சந்தேக நபரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் வியப்பை ஏற்படுத்திய பேரீச்சம்பழ மரம்!!

மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று யாழ்ப்பாணத்திலும் பேரீச்சம்பழ மரம் ஒன்று அதிக பழங்களை காய்ந்துள்ளது.

காரைநகர் திக்கரை முருகமூர்த்திகோவில் வீதியில் உள்ள வீடொன்றில் உள்ள பேரீச்சம் பழ மரத்திலேயே இந்த அபூர்வ நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக பேரீச்சை மரம் வளர்ந்து வருகின்ற போதிலும், அவை எதுவும் காய்ந்து குலுக்கவில்லை.

எனினும் காரைநகர் பகுதியில் பேரீச்சை மரம் காய்ந்து குலுக்குவது அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் போன்ற வெப்பவலய நாடுகளின் பெரும் பொருளாதாரப் பயிர்ச்செய்கையாக பேரீச்சம்பழம் விளங்குகிறது.

இலங்கை போன்ற பருவக்காற்று மழைக் காலநிலை நிலவுகின்ற நாடுகளில் பேரீச்சை காய்த்துப் பழுப்பது அபூர்வமான நிகழ்வு என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற நபர் திடீர் மரணம்!!

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற யாத்திரிகர் ஒருவர் குமுக்கனில் நேற்று திடீரென மரணமடைந்துள்ளார்.

இவர் காரைதீவைச் சேர்ந்த சின்னவன் மேசிலார் என அழைக்கப்படும், 70 வயதுடைய எஸ்.விஜயசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காட்டுப்பாதை திறந்த முதல் நாள் தனது மகளுடன் கதிர்காமத்திற்கு பயணித்துள்ளார். அன்றிரவு வாகூரவட்டையில் தங்கிய அவர்கள் மறுநாள் குமுக்கனைச் சென்றடைந்த போது இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

இவருடைய சடலம் பாணமை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் பிரேதபரிசோதனை மற்றும் விசாரணைக்காக பொத்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும், பிரேதபரிசோதனை மற்றும் மரணவிசாரணை இடம்பெற்ற பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு காரைதீவு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

கனடாவில் இலங்கை தமிழர்கள் உட்பட 8 பேர் கொலை : மேலும் மனித எச்சங்கள் மீட்பு!!

கனடாவில் இலங்கை தமிழர்கள் இருவர் உட்பட்ட 8 பேரின் தொடர் கொலைகள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் காணிகளில் இருந்து மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கனேடிய டொரன்டோ பொலிஸார் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான தேடுதல் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2010ஆம் ஆண்டு முதல் கனேடியரான புரூஸ் மெக்ஆத்தர் என்பவர் 8 கனடாவுக்கு குடியேறிகளாக சென்ற இரண்டு இலங்கையர்கள் உட்பட்ட 8 பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 23ஆம் திகதி நடைபெறும்போது மெக்ஆத்தர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதற்கு மத்தியிலேயே அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான டொரன்டோ நகரின் இடம் ஒன்றில் தோண்டுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது நேற்று பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டு அவை இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

கணவனை வீட்டுக்குள் சிறை வைத்த மனைவி : இலங்கையிலும் இப்படி நடக்குமா?

அம்பலன்கொடயில் கணவனை நான்கு மணி நேரம் வீட்டுக்குள் சிறை வைத்த மனைவி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

சனி மாற்றம் என தொலைகாட்சியில் அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து வீட்டுக்குள் கணவனை, மனைவி சிறை வைத்துள்ளார்.

கணவர் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வரும் ஒருவராகும். அவர் தனது தொழிலுக்காக அம்பலன்கொட துறைமுகத்திற்கு காலை நேரத்தில் சென்றுள்ளனர்.

கணவர் சென்று சற்று நேரத்தில் தொலைகாட்சியில், அன்றைய தினம் பிற்பகல் 12.30 மணியளவில் சனி மாற்றம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டதனை அவதானித்த மனைவி, உடனடியாக கணவனை தொலைபேசியில் அழைத்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வருமாறு கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

தகவல் ஒன்றும் அறியாமல் கணவர் அவசரமாக வீட்டிற்கு சென்றுள்ளார். கணவன் வீட்டிற்கு வந்தவுடன் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகள் அனைத்தையும் அவர் பூட்டியுள்ளார். ஒன்றும் புரியாமல் நின்ற கணவர் என்ன பிரச்சினை என மனைவியிடம் கேட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 12.30க்கு சனி மாற்றம் ஏற்படுவுள்ளது. உங்களுக்கும் சனி உள்ளது. அதனால் 2.30 வரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என மனைவி கூறியுள்ளார்.

செய்து கொண்டிருந்த வேலையை பாதியிலே விட்டு வந்தமையினால் கணவர் வெளியே செல்ல வேண்டும் என கூறிய போதிலும், கணவனை வீட்டிற்கு பூட்டிவிட்டு மனைவி சாவிகளை மறைத்துள்ளார்.

பின்னர் இந்த சனி மாற்றம் தொடர்பில் தொலைகாட்சியில் என்ன கூறுகின்றார்கள் என பார்த்த கணவர் கடும் கோபமடைந்துள்ளார். பிற்பகல் 12.30 மணிக்கு சனி மாற்றம் என்ற பெயரில் ஒரு படம் ஒளிபரப்பப்படும் என விளம்பம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் கோமடைந்த கணவர், மனைவியை கடுமையாக திட்டிவிட்டு மீண்டும் தொழிலுக்கு சென்றுள்ளார்.

இலங்கை போன்ற நாடுகளிலும் மூடநம்பிக்கை மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளமை கவலைக்குரிய விடயம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் வாகனங்கள் வைத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையில் வாகனங்களை வைத்திருப்போரிடம் வரி அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருமான திணைக்களம் தெரிவிததுள்ளது.

வருமான வரி கொள்ளைகயை விரிவுபடுத்தும் நடவடிக்கை ஒன்று அரச கொள்ளையாக அமுல்படுத்தவுள்ளதாக உள்நாட்டு வருமான ஆணையாளர் அய்வன் திசாநாயக்க தெரிவித்தள்ளார்.

இந்த நடவடிக்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக வாகனங்கள் வைத்திருக்கும் அனைவரும் வருமானம் உள்ள நபராக கணக்கிடப்பட்டுள்ளனர்.

வாகனம் வைத்திருப்பவர்கள் வரி செலுத்த கூடிய அளவு வருமானம் கொண்டவர்களாக கருதி அவர்களிடம் வரி அறவிடும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உள்நாட்டு வருமான ஆணையாளர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இதேவேளை வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா பயணம் மேற்கொள்பவர்களிடமும் வரி அறவிடப்படவுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள்!!

இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பெண்களிடம், தவறான முறையில் நடந்து கொண்ட இளைஞர் ஒருவர் தப்பிச் செல்ல முயற்சித்து போது விபத்துக்குள்ளாகியுள்ளார்.

தப்பிச் செல்லும் போது பேருந்தில் இருந்து விழுந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட போது, பெண்கள் கத்தி கூச்சலிட ஆரம்பித்துள்ள நிலையில், பேருந்தின் பின்பக்க கதவினால் கீழே இறங்கி தப்பி ஓட முயற்சித்த போதே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

புறக்கோட்டையில் இருந்து மத்துகம வரை பயணித்த பேருந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் காயமடைந்த இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு பயணிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இளைஞனை கைது செய்த பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பேருந்தில் உள்ள பயணிகள் தன்னை பிடித்து தாக்குவார்கள் என்ற அச்சத்தில் தான் பேருந்தில் இருந்து குதித்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளைஞன் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வவுனியாவில்  மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி!!

வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் ஏற்பாட்டில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்ஸிம் மகா வித்தியாலய மாணவர்களினால் இன்று (06.07.2018) காலை 7.30 மணியளவில் விழிப்புணர்வுப் பேரணி இடம்பெற்றது.

வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாக விழிப்புணர்வுப் பேரணியானது மன்னார் வீதியூடாக பட்டானிச்சூர் 5ம் ஒழுங்கையடிக்கு சென்று மீண்டும் மன்னார் வீதியூடாக குருமன்காடு சந்தியடிக்கு சென்று மீண்டும் மன்னார் வீதியூடாக பாடசாலையை சென்றடைந்தது.

இப் பேரணியில் வவுனியா போக்குவரத்து பொலிஸார், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் , 500க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வவுனியா நகரசபையினரால் வீதிகளுக்கான மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பம்!!

வவுனியா நகரசபையின் எல்லைக்குள் இருக்கும் 10 வட்டாரங்களிற்கும் 40 மின்விளக்குகள் வீதம் 400 மின்விளக்குகளை பொருத்தும் பணிகள் நகரபிதாவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக வட்டாரம் ஒன்றுக்கான(தாண்டிகுளம்) வீதி விளக்குகள் பொருத்தும் பணிகளை நகரபிதா கெளதமன் ஆரம்பித்து வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைத்தியசாலையில் கரடியின் தாக்குதலுக்குள்ளாகிய இருவர் அனுமதி!!

மன்னார் இரணை இலுப்பைக்குளம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் (04.07.2018) கரடியின் தாக்குதலுக்குள்ளாகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் இரணை இலுப்பைக்குளம் காட்டுப் பகுதியில் கடந்த 04.07.2018 அன்று மதியம் 3 மணியளவில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு இருவர் சென்றுள்ளனர்.

இதன் போது மாலை 6 மணியளவில் கரடியின் தாக்குதலுக்குள்ளாகி 40, 46 வயதுடைய இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி!!

வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம், நெடுங்கேணி பிரதேச செயலகத்தற்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ, அங்கவீனமான 04 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக ஆடுவளர்ப்பிற்காக ஆடுகள் வழங்கிவைக்கப்பட்டன.

வடமாகாண சபை உறுப்பினரின் வேண்டுகோளிற்கமைவாக கனடா மாதகல் நலன்புரி ஒன்றியத்தின் நிதியுதவியில் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

செட்டிகுளம் பிரதேசத்தில் 02 குடும்பங்களிற்கும், நெடுங்கேணியில் 02 குடும்பங்களுக்குமாக நான்கு குடும்பங்களுக்கான உதவிகள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் சார்பில் அவரது இணைப்பாளர் பா.சிந்துஜனால் நேற்று (05.07.2018) பயனாளிகளிடம் கையளிக்கபபட்டன.