ஹைதராபாத் விமான நிலையத்தில் நடிகை ஒருவர் தன்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்த ஆசிரியரை அடித்து உதைத்துள்ளார்
விஜய் பிரகாஷ் என்ற பயணி, தன்னுடைய பயணம் செய்த சின்னத்திரை துணை நடிகை ஒருவரை ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார். இதனை கண்காணித்த நடிகை, அவரது செல்போனிலிருந்து அவற்றை நீக்குமாறு விஜய் பிரகாஷிடம் கூறியுள்ளார்.
ஆனால், தான் புகைப்படம் எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நடிகை, அவரை சரமாரியாக நடிகை தாக்கினார். பின்னர் நடிகையுடன் சேர்ந்து வந்த துணை நடிகர் சையத் அன்வர் விமான நிலைய பொலிசாரிடம் இதுதொடர்பாக புகார் செய்தார்.
அவரது புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிசார் அந்த ஆசிரியரின் தொலைபேசியை பார்த்த போது பல கோணத்தில் அவர் அந்த நடிகையை ஆபாசமாக புகைப்படம் எடுத்திருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து கல்லூரி ஆசிரியரை எச்சரித்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுராதபுரம் வன்னியன்குளம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபருக்கு எதிராக பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை உட்பட 5 வழக்குகள் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அனுராதபுரம் தீபானி கல்லூரிக்கு அருகில் ஆயுதம் தாங்கிய குழுவினரால் கொலை செய்யப்பட்ட சுஜீவ பிரசன்ன என்பவரின் கொலை தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் நீண்டகாலமாக தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் திகதி நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றின் போது, சந்தேக நபருக்கும் கொலை செய்யப்பட்ட நபரின் தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட நபரின் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இது சம்பந்தமாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் புல்லையார் சமிந்த என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபருக்கு எதிராக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் ஒரு வழக்கு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பானது.
இந்த சம்பவத்தில் ஒரு தரப்பை நிராபராதிகள் என்று கூற முடியாது. இரண்டு தரப்பினருக்கும் எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கொலை செய்யப்பட்டவருக்கு எதிராக ஏனைய நான்கு வழக்குகளில் ஒரு வழக்கு புள்ளையார் சமிந்த என்பவரை வெட்டி காயப்படுத்தியமை தொடர்பானது.
எது எப்படி இருந்த போதிலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு எவ்விதமாக அரசியல் குறுக்கீடுகளும் இல்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இரு வாரங்களில் யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவை முழுமையாக இல்லாமல் செய்வதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
யாழ். குடாநாட்டு மக்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடு மற்றும், மக்கள் வாழ்கைக்கு ஏற்படும் அழுத்தம் அதிகரிப்பு காரணமாக இந்த குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய 100 பொலிஸாரை கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று கடந்த 5ஆம் திகதியில் இருந்து யாழில் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும், விடுமுறை இரத்து செய்யப்பட்ள்ளது. விசேடமாக ஆவா குழுவினர் சுற்றித் திரியும் 4 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கமைய அந்த பிரிவுகளான, யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசேட பொலிஸ் குழுக்கள் பிரதேசத்தின் பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆவா குழுவென சந்தேகிக்கின்றவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் – வன்னியகுளம் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருடன், மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை கைது செய்ய 8 பொலிஸ் குழுக்கள் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் – விஜயபுர பிரதேசத்தில் வசித்து வந்த 45 வயதான வர்த்தகர் கடந்த 5ஆம் திகதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இரண்டு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்து வந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு தரப்பிற்கும் இடையில் நீண்டகாலமாக பகை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கொலை செய்யப்பட்டவரின் மகளை சந்தேகநபர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முயற்சித்த போது தந்தையான வர்த்தகர் சந்தேகநபரை தாக்கியுள்ளார்.
இதற்கு பழிவாங்கும் நோக்கில் 45 வயதான சுஜீவ குமார என்ற வர்த்தகரை கொன்றதாக கூறப்படுகிறது. மேலும் சந்தேகநபரின் மூன்று பிள்ளைகளையும் கொலை செய்ய போவதாக சந்தேகநபர்கள் குடும்பத்தினரை அச்சுறுத்தி வந்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் அரசியல்வாதி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக உறவினர்கள் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளனர்.
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் க.பொ.த. உயர்தர மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் விழா கல்லூரியின் மாணவன் ப.பிரவீன் தலைமையில் நேற்று (06.07) மாலை 6.30 மணிக்க ஆரம்பமாகி நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணத்திற்கான இந்திய உயர்ஸ்தானிகர் எஸ்.பாலச்சந்திரன் கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்திராக வவுனியா வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் கலந்துகொண்டிருந்தார்.
அதிதிகள் மாலை அணிவித்து பாண்ட் வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்புடன் நிறுவப்பட்ட கணணி மயப்படுத்தப்பட்ட (கரும்பலகை) விசேட வகுப்பறை ஒன்று இந்திய உயர்ஸ்தானிகர் எஸ்.பாலச்சந்திரன் மற்றும் வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வரும் விழாவின் தலைவருமான க.தனபாலசிங்கம் அவர்களினால் இந்திய உயர்ஸ்தானிகருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசில் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
ஓமந்தை மத்திய கல்லூரியின் மாணவ, மாணவியரின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது. அதனைத்தொடர்ந்து வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் இலண்டன் வாழ் பிரபல தொழிலதிபருமான அரசர் வேலுப்பிள்ளை குணரட்ணம் மற்றும் அவரது பாரியார் கு.சாந்தினி ஆகியோருக்கு கல்லூரியின் அதிபரால் நினைவு பரிசில் வழங்கி கொளரவிக்கபட்டனர்.
நிகழ்வில் ஓமந்தை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சுரேஸ்த சில்வா, பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், வலயக்கல்வி பனிமனையின் உத்தியோகத்தர்கள், கல்லூரியின் ஆசிரியர்கள் மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (06.07) பதிவு செய்யப்பட்ட வவுனியா குளங்களில் மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்ற மீனவர்களுக்கு தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வுச் செயலமர்வு ஒன்று மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான மாவட்ட நீர் உயிரினச் செய்கை உத்தியோகத்தர் யோ.நிசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
அண்மையில் வவுனியா குளங்களில் சட்டவிரோதமான தங்கூசி வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றவர்களை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருந்தனர். எனவே சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கும் நடவடிக்கையாகவே இச் செயலமர்வு இடம்பெற்றுள்ளது.
தேசிய உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வவுனியா குளங்களில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளின் பாவனையைத் தடுப்பது தொடர்பான செயலமர்வில் வவுனியாக்குளம், பாவற்குளம், கல்மடு, மடுக்கந்த, போகெஸ்வெவ, ஈரப்பெரியகுளம் போன்ற பகுதியிலுள்ள மீனவர்கள் கலந்துகொண்டனர்.
இச்செயலமர்வில் வளவாளர்களாக சமுத்திர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ரத்தினதிலக கலந்துகொண்டு தடை செய்யப்பட்ட வலைகள் தொடர்பாகவும் புதிய மீன்பிடி முறைமைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
நேற்றைய நிறைவு தினத்தில் இச் செயலமர்வில் கலந்துகொண்ட அனைத்து மீனவர்களுக்கும் தலா இரண்டு நூல் வலைகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் தங்களிடமுள்ள தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை தமது அலுவலகத்தில் ஒப்படைத்து அதற்கு மாற்றீடாக வலைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட நீர் உயிரினச் செய்கை உத்தியோகத்தர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் துப்பாக்கியால் சுடப்பட்டதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹலே ஸ்மித் (23) என்ற பெண் தனது குடும்பத்தார் இருவருடன் காரில் சென்ற போது மர்ம நபர்கள் சிலர் காரை வழிமறித்துள்ளனர்.
பின்னர் காரில் இருந்த ஸ்மித்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ஸ்மித் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்மித் தற்போது கர்ப்பமாக இருப்பதும், அவர் வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளர்வதும் தெரியவந்துள்ளது.
இதனிடையில் இவ்வழக்கில் தொடர்புடைய லகீவன் என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளதோடு, மேலும் இருவரை விசாரித்து வருகிறார்கள்.
பில்லி சூனியம் வைத்து தனது சொந்த வீட்டை அபரிக்க முயற்சிப்பதாக நடிகை ஜெயசித்ரா பொலிசில் புகார் அளித்துள்ளார்
ரங்கராஜபுரத்தில் உள்ள எனது சொந்த வீட்டில் வாடகைக்கு இருக்கும் இளமுருகன் மற்றும் அவரது மனைவி மீனா ஆகியோர் வாடகை தராமல் ஏமாற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி போலி ஆவணங்கள் மற்றும் பில்லி சூனியம் வைத்து எனது வீட்டை அபகரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இளமுருகன் – மீனா தம்பதியினர் நடிகர் விக்னேஷிடம் ரூ.6 லட்சம் பெற்றுக் கொண்டு பணத்தை திருப்பித்தராமல் இருந்ததாக கூறியுள்ளார்.
மேலும் படத்தயாரிப்பாளர் அசோக் லோடா என்பவரிடம் கார் வாங்கித் தருவதாக கூறி ரூ.7.5 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு பின்பு பணத்தை தராமல் ஏமாற்றியதாகவும் அவர் புகார் அளித்துள்ளார்.
கேரளாவில் திருமணமான சில நாட்களில் புதுமண தம்பதி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயனாட் மாவட்டத்தில் உள்ள மக்கியாட் கிராமத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
உமர் (28) என்ற இளைஞருக்கும் பாத்திமா (20) என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று வீட்டில் படுகாயங்களுடன் இருவரும் சடலமாக கிடந்தார்கள்.
உமரின் சகோதரர் முனீர் வீட்டில் இரவு தங்கியிருந்த அவர் தாய் ஆயிஷா காலையில் வீட்டுக்கு வந்த போது இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் கொலை நடந்த வீட்டின் அருகில் உள்ள 19 பேரை இதுவரை விசாரித்துள்ளனர்.
இது திருட்டுக்காக நடந்த கொலையா அல்லது பழிவாங்க நடந்த கொலையா என இன்னும் தெரியவில்லை.
பாத்திமாவின் சில நகைகள் உடலில் இருந்தாலும், அவரின் வளையல்கள் மற்றும் நெக்லஸ் காணாமல் போயுள்ளது.
இது பொலிசுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னையில் திருமணமாகி 9 மாதங்களாகியும் வாழக்கை நடத்துவதற்கு நோர்வே நாட்டுக்கு கணவர் அழைத்து செல்லாத காரணத்தால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையை சேர்ந்த சுவாதிகா ஸ்ரீ என்பவருக்கும், நோர்வேயில் வேலை பார்த்து வந்த கீர்த்திவாசனுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப்பிறகு சுவாதிகாஸ்ரீயை நோர்வேக்கு அழைத்துச் செல்வதாக கீர்த்திவாசன் கூறியிருந்தார். ஆனால், அழைத்துச் செல்லவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கணவர் தன்னை நோர்வேக்கு அழைத்து செல்லாத காரணத்தால் மனமுடைந்த சுவாதிகாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி தனது கணவருடன் ஸ்கைப்பில் பேசியபடி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருமணமாகி 9 மாதங்களில் சுவாதிகா ஸ்ரீ தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்தது. அந்த விசாரணைக்கும் கீர்த்திவாசன் மற்றும் அவரின் குடும்பத்தினர் வரவில்லை.
சுவாதிகா ஸ்ரீயின் பெற்றோர் பொலிசாரிடம் கொடுத்துள்ள புகாரில், `என்னுடைய மகள் தற்கொலைக்கு கீர்த்திவாசனும் அவரின் குடும்பத்தினர்தான் காரணம் என கூறியுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற அன்று, கீர்த்திவாசனுடன் சுவாதிகா ஸ்ரீ ஸ்கைப் மூலம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில், சுவாதிகா ஸ்ரீயிடம், தரக்குறைவாக கீர்த்திவாசன் பேசியதாக தெரியவந்துள்ளது.
மேலும், உன்னை என்னுடன் நோர்வேக்கு அழைத்துச் செல்லவோ உன்னுடன் வாழ எனக்கு எந்த விருப்பமும் இல்லை என்று கூறியுள்ளார். நீ உயிரோடு இருந்தால் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது என கீர்த்திவாசன் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்து சுவாதிகா ஸ்ரீ தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் சுவாதிகா ஸ்ரீயின் தற்கொலைக்கு கீர்த்திவாசன் மற்றும் அவரின் குடும்பத்தினர் காரணம் என்று தெரியவந்தது.
இதனால், இந்த வழக்கை தற்கொலைக்குத் தூண்டியதாக பொலிசார் மாற்றியுள்ளனர். மேலும் இதுகுறித்து கீர்த்திவாசன் வீட்டினரிடம் விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மதவாதத்தை அப்புறப்படுத்துவோம் என்று போராடிய தமிழ் இளைஞன் அபிமன்யூவின் மரணம் கேரளாவை உலுக்கியுள்ளது.
இடுக்கியில், ஏழ்மையான தமிழ் குடும்பத்தை சேர்ந்த அபிமன்யூ எர்ணாகுளம் மகராஜா கல்லூரியில் இரண்டாமாண்டு வேதியியல் படித்து வருகிறார்.
கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த அபிமன்யூவிடம் வார இறுதி நாள்களில் சொந்த ஊருக்குப் பேருந்தில் செல்லக்கூட காசு இருக்காது. பல நேரங்களில் காய்கறி லாரிகளில்தான் அபிமன்யூவின் சொந்த ஊர் பயணம் அமையும்.
இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றிய அபிமன்யூவுக்கு எதிரிகள் அதிகரித்தனர்.
‘மதவாதத்தை வோறோடு அறுப்போம்’ என்று கோஷமிடும் அபிமன்யூ, மதவாதிகளுக்கு எதிரிகளானார். இந்திய மாணவர் சங்கமும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கிளை அமைப்பான கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் கல்லூரி சுவர்களில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று எழுதியுள்ளனர்.
அப்போது, கேம்பஸ் ஃப்ரன்ட் அமைப்பினர் எழுதிய சுவர்களில் அபிமன்யூ, மதவாத கேம்பஸ் ஃப்ரன்ட் என்று மாற்றி எழுதியிருக்கிறார்.
இதனால் ஏற்பட்ட தகராறில், அபிமன்யூவின் கரங்களைப் பின்புறமாக பிடித்து கட்டி வைத்து கத்தியால் அவனின் மார்பை பிளந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர் மதவாதிகள்.
கொலை தொடர்பாக கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
அபிமன்யூவின் இந்தக் கொடுர மரணம் கேரளத்தை உலுக்கி எடுத்திருக்கிறது.
கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், “மதவாதிகளுக்கும் மதத்தை காரணம் காட்டி கத்தியை எடுப்பவர்களும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டும். இவர்களை அப்புறப்படுத்த அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் ” என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இளைஞரை அவரின் நான்கு நண்பர்கள் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காவரி ஆற்றாங்கரை காட்டு பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிசார் ஆண் சடலம் ஒன்றை கண்டெடுத்தனர்.
இது தொடர்பாக விமல் என்பவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், தீயில் கருகி இறந்துகிடந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சதிஷ் என்பதும் அவரை அவரது நண்பர்களே பெட்ரோல் ஊற்றிக் கொன்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.
சம்பவத்தன்று விமல் கொசவம்பட்டியை சேர்ந்த வசந்த், ராஜேஷ்குமார், சிவசங்கரன் மற்றும் கொலைசெய்யப்பட்ட சதிஷ் ஆகியோரோடு மது அருந்தியிருக்கிறார்.
பிறகு மது போதையில் அருகிலுள்ள ஆற்றங்கரையில் இருட்டிய நேரம் என்பதால் உடையின்றி குளிக்கத்தொடங்கினர்.
அப்போது சதீஷ் தனது மொபைலில் சக நண்பர்கள் ஆடையின்றி குளிப்பதை புகைப்படம் எடுத்து வாட்ஸாப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனைக்கண்ட சக நண்பர்கள் சதீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுதோடு அவரை தாக்கியுள்ளனர்.
பின்னர் ஆத்திரத்தில் சதீஷை கத்தியால் குத்தி கொலை செய்து சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து நால்வரையும் கைது செய்த பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.