இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள பேராபத்து : எச்சரிக்கை!!

 

எச்சரிக்கை

இலங்கையில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை நோய் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இதுவரை பதிவாகாத Trypanasoma என்ற நாய் தொடர்பான நோய் பலாங்கொடை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நோய் மனிதர்களுக்கும் தொற்றும் அபாயம் உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை பேராசிரியர் அஷோக் தங்கொல்ல தெரிவித்துள்ளார். இவ்வாறான புதியவகை நோய் இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய் மனிதர்களுக்கு தொற்றும் எனவும், ஆபிரிக்க நாட்டு மக்களுக்கு தொற்றியுள்ளமைக்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறான நோய் தொற்றிய நாய் ஒன்று முதல் முறையாக பலாங்கொடை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நாய் பேராதனை கால்நடை வைத்தியசாலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, நோயின் தாக்கமும் அதன் ஆபத்தும் குறித்து கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் முல்லைத்தீவு பிரதேசத்தில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நாய் ஒன்றிற்கும் Trypanasoma என்ற நோய் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோய் பரவ Testse Fly என்ற இளையான் வகை முக்கிய காரணியாகும். இதுவரையில் இலங்கையில் இந்த இளையான் பதிவாகவில்லை. எனினும் (Culex) என்ற நுளம்பு மற்றும் இரவில் மாத்திரம் வெளியே வரும் Kissing Bug என்ற நுளம்பினால் இந்த நோய் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறிள்ளார்.

உடற்பயிற்சி செய்ய முடியாமல் இருத்தல், கண் பார்வையில் குறைப்பாடு, கண்கள் வெள்ளையாகுதல் போன்ற அறிகுறிகள் நாய்க்கு காணப்பட்டால் அது இந்த நோயின் அறிகுறியாகும்.

இந்த நோய் பரவிய ஆபிரிக்க நாட்டவர்களுக்கு தோல் நோய் ஒன்றும் ஏற்பட்டுள்ளது. இது நாயிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றும் நோய்களில் ஒன்றாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கை மக்கள் ஒருவருக்கும் இந்த நோய் பரவியுள்ளதாக பதிவாகவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நோயினால் ஏற்படவுள்ள ஆபத்தினை கருத்திற் கொண்டு மிகுந்த அவதானமாக செயற்பாடுமாறு நாட்டு மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த இரு இளைஞர்கள் யாழில் செய்த மோசமான வேலை!!

 

இரு இளைஞர்கள்

போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இரு இளைஞர்கள் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர்கள் யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 20ஐ வேறு நபர் ஒருவருக்கு கைமாற்ற முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறை உத்தியோகத்தருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம், இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞர்கள் வசமாக சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸார், இளைஞர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் மதுபான நிலையம் சகல அனுமதியுடனுமே அமைக்கப்பட்டுள்ளது!!

 

மதுபான நிலையம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மதுபான விற்பனை நிலையமானது மீள புதுப்பிக்கப்பட்டு கிராம சேவையாளர் உட்பட அனைவரின் அனுமதியுடனும் நகரசபை பொது சுகாதார பரிசோதகரின் பரிசோதனையின் பின்னரே திறந்து வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வவுனியா உதவி மதுவரி பொறுப்பதிகாரி எஸ்.அசோக திலகரட்ன தெரிவித்துள்ளார்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையம் தொடர்பாக அவரிடம் இன்று வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் கண்டி வீதியில் முதலாம் மாடியில் கடந்த 15 தொடக்கம் 20 வருடமாக இயங்கி வந்த மதுபான நிலையம் நிலையம் தற்போது மீள புதுப்பிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முதலாவது மாடிக்கு மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மதுபான விற்பனை நிலையத்தினை அப்பகுதியில் அமைப்பதற்குரிய அனைத்து சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வியாபார நிலையத்தின் உரிமையாளரின் சம்மத கடிதம், வியாபார நிலையத்தின் வரைபடம் வியாபார நிலையத்தின் ஒப்பந்த கடிதம், பொலிஸ் நிலையத்தின் கடிதம், நகரசபையின் அனுமதி, பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் அனைத்துக் கடிதங்களும் எமக்கு கிடைத்த பின்னரே நாங்கள் ஒரு குழுவினரை அப்பகுதிக்கு அனுப்பி எமது விசாரணைகளின் பின்னரே எமது அனுமதியை வழங்கி வருகின்றோம்.

எனவே இந்த மதுபான விற்பனை நிலையம் சட்ட விரோதமானதோ அல்லது சட்டத்திற்கு எதிராகவோ அனுமதியளிக்கப்படவில்லை. தற்போது சிலரிடமிருந்து எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எனவே இதனையும் எமது குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு மதுபான நிலையம் அமைப்பதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்திற்கு அமைவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்விடயத்தில் எவ்வித சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளும் இடம்பெற்றிருக்கவில்லை. இப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதற்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியிலிருந்து மது அருந்தினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

வெளிநாடுகளில் இருந்து வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கான வருமான வரி நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, கடந்த 2018 நவம்பர் மாதம் 15ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் வணிக வங்கிகளினூடாக இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட பணத்திற்கான வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கான வருமான வரி நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, கடந்த 2018 நவம்பர் மாதம் 15ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் வணிக வங்கிகளினூடாக இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட பணத்திற்கான வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கொழும்பில் திடீரென பற்றி எரிந்த முச்சக்கர வண்டியால் பரபரப்பு!!

கொழும்பில் திடீரென முச்சக்கர வண்டி ஒன்று தீ பற்றி எரிந்தமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று மாலை குறித்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

எனினும் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி முழுமையாக தீப்பற்றிய பின்னரே தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு : சந்தேகநபர் வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்!!

 

பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

வவுனியா, புளியங்குளம் பகுதியில் அண்மையில் ஆயுதங்களை வீசிச் சென்ற சம்பவத்துடன், 12 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய ஒன்பது பேர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள புதூரில், கைத்துப்பாக்கி, கைக்குண்டுகளைக் கொண்ட பொதியை வீசி விட்டுத் நபர் ஒருவர் தப்பிச் சென்றிருந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் ரி 56 ரகத் துப்பாக்கி ஒன்றும், மூன்று மோட்டார் குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

எனினும், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீசி விட்டுச் சென்ற பை ஒன்றை தான் எடுத்து வைத்திருந்ததாகவும், அதற்குள் என்ன இருந்தன என்பது தனக்குத் தெரியாது என்றும் அந்தப் பெண் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவத்துடன், 12 பேருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், ஒன்பது பேர் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஆயுதப் பொதியை வீசி விட்டுச் சென்றவர் மற்றும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 9 பேர் இன்னமும் தேடப்பட்டு வருகின்ற நிலையில், பிரதான சந்தேகநபர் இந்தியாவுக்கு தப்பியோடி விட்டார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

-தமிழ்வின்-

முதன் முறையாக மலையக தமிழர் ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமனம்!!

 

முதன் முறையாக மலையகத் தமிழர் ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முற்பகல் நீதியரசர்கள் மூவரும் பதவியேற்றனர்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா, உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றார். இதன் மூலம் மலையக தமிழர் ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் புதிதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஈ.ஏ.ஜீ.ஆர்.அமரசேகர ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக புதிதாக பதவியேற்றனர்.

இதேவேளை, மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கே.பி.பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா வடக்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் நிறுத்தப்பட்டது!!

வவுனியா தெற்கு வலயத்தின் செட்டிகுளம் கோட்டத்தில் இருந்து வவுனியா வடக்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட 22 ஆசிரியர்களில் 7 ஆசிரியர்களின் இடமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு யூலைமாதம் செட்டிகுளம் கோட்டத்திற்கு நியமனம் பெற்றிருந்த 22 ஆசிரியர்களிற்கு இம்மாதம் 1 ம் திகதியிலிருந்து வவுனியா வடக்கு வலயத்திற்கு இடமாற்றம் வழங்கபட்டுள்ளது. இதனால் பின்தங்கிய பகுதியான செட்டிகுளம் பகுதியில் ஆசிரியர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பத்துவருடங்கள் பணியாற்ற வேண்டும் என்று நியமனம் வழங்கபட்டபோதும் தற்போது மிகவிரைவாக இடமாற்றம் வழங்கபட்டுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இடமாற்றங்கள் தொடர்பாக மாகாணகல்வி பணிப்பாளரால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே இடமாற்றம் செயற்பாடுகள் வகுக்கப்பட்டது. அந்தவகையில் செட்டிகுளம் பகுதியில் இடமாற்றம் வழங்குவதாக தீர்மானித்த 22 ஆசிரியர்களில் 9 ஆசிரியர்களின் இடமாற்றம் இடைநிறுத்தபடவுள்ளது.

செட்டிக்குளம் கோட்டத்திற்கு உட்பட்ட சில பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் காரணமாக அந்த 9 ஆசிரியர்களின் இடமாற்றம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

ஏனையவர்கள் இம்மாதம் முதலாம் திகதி முதல் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர். அவர்களது இடத்திற்கு வவுனியா நகரகோட்டத்தில் 7 வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.

மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி அறிமுகம்!!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வரையில் மோட்டார் வாகனங்கள் மீது காபன் வரி அறவிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார்.

புதிதாக அனுமதி பத்திரங்கள் பெறும் போது வரி தொடர்பிலான உள்ளடக்கங்கள் குறிப்பிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்

எவ்வாறாயினும் இவ்வருடம் வாகன வருமான உத்தரவு பத்திரம் பெற்றவர்களுக்கு இது நடைமுறைபடுத்தப்படவில்லை எனவும், அடுத்த வருடம் முதல் இவ்வரி உத்தியோகபூர்வமாக அறிவிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

காதலனும் காதலியும் இணைந்த செய்த மோசமான செயல்!!

மோசமான செயல்

எல்பிட்டியவில் நான்கு மாத சிசுவின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக காதல் ஜோடியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிட்டிகல வத்தஹேன- அமரகம தபால் காரியாலயத்திற்கு அருகில் கடந்த டிசம்பர் மாதம் வீதி ஓரத்தில் வீசப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

இது தெடார்பான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய காதல் ஜோடியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக எல்பிட்டிய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு மற்றும் பிட்டிகல பொலிஸார் கொடுத்த அறிவித்தலுக்கமைய கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது எல்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் இதுபோன்ற நோயாளி பெண்ணொருவர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அப்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் அப்பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். மாபலகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது யுவதியும் நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான இளைஞனும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரது காதலனால் வாங்கி கொடுக்கப்பட்ட கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்ட பிறகு, குறித்த பெண்ணின் வயிற்றில் இருந்த கரு கலைந்துள்ளது. காதலனுடன் சென்று கருவை வீசியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் மூலம் வெளிவந்துள்ளது.

ஆபாச விடுதிக்குள் சிக்கிய பிரபல நடிகை!!

சீதுவ பிரதேசத்தில் நடத்தி செல்லப்பட்ட பிரபல மசாஜ் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற விசேட சுற்றி வளைப்பில் பிரபல தொலைகாட்சி நடிகை உட்பட 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெஹெலியகொட விசேட விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் சுற்றிவளைப்பை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் மசாஜ் நிலையத்தின் முகாமையாளர் அங்கிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மசாஜ் நிலையத்திடம் 20 கிளைகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கைது செய்யப்பட்ட நடிகை இந்த நாட்களில் பிரபல தொலைகாட்சி தொடர் ஒன்றில் நடித்து வருவதோடு பிரபலமான 5 படங்களில் நடித்துள்ளார் என கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவனின் உயிரைப் பறித்த வீதி விபத்து!!

 

வீதி விபத்து

மாத்தறை – திக்வெல்ல புதிய வீதி பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹக்மன – தெனகம – பல்லேவெல பிரதேசத்தினை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இன்றைய விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த மாணவர், விடுமுறையின் போது வீடு திரும்புள்ளார். இதன் போது அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிஸார், மாணவர் தனது இரு நண்பர்ளுடன் வஸ்கல பிரதேசத்தில் விருந்துபசார நிகழ்வு ஒன்றுக்கு சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போது இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தை அடுத்து வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் தலைக்கவசம் அணியாது சென்ற பாடசாலை மாணவர்கள் : பொலிசார் நடவடிக்கை!!

 

பாடசாலை மாணவர்கள்

வவுனியாவில் இன்று (09.01) நகரின் மத்தியினூடாக 12.30 மணியளவில் பாடசாலை சீருடையுடன் தலைக்கவசம் அணியாது பிரபல பாடாசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சென்றமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறாக தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் செல்லும், சென்ற மாணவர்களுக்கு எதிராக மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை வைத்துக்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலைக்கு மோட்டார் சைக்கிலில் தலைக்கவசம் அணிந்து செல்லாத மாணவர்களுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளுக்கு மாணவ, மாணவிகள் மோட்டார் சைக்கிளில் வருவது தொடர்பாக பெற்றோர் பலர் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில் பாடசாலை நிர்வாகம் அது தொடர்பில் கவனம் செலுத்தாமல் மாணவர்கள் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் வருவதற்கு அனுமதி அளித்து வருகின்றனர்.

இந் நிலையில் வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்வது அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பாக அதிபர்கள் கவனம் செலுத்தாமல் உள்ளமையானது வறிய மாணவர்களின் மனதளவான தாக்கத்திற்குளாக்குவதாக பெற்றோர் பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

வவுனியாவைச் சேர்ந்த தாயால் கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம் தோண்டி எடுப்பு!!

 

சிறுமியின் சடலம் தோண்டி எடுப்பு

பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியான டிலானியின் உடலம் பதுளை மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

பதுளை மாவட்ட நீதிமன்ற நீதவான் சமிந்த கருணாதாஸ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் ஹாலிஎல பொலிஸார் மற்றும் பொது மக்கள் உதவி கொண்டு மாலை 4.30 மணியளவில் சிறுமி டிலானியின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர்.

இரசாயன பகுப்பாய்வுக்காக சிறுமியின் சடலம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னாள் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் 06.01.2019 அன்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களான மகேந்திரன் (வயது 30), ஜானகி (வயது 26) என தெரிவிக்கபட்டுள்ளது. வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த குறித்த சிறுமியின் தாய் அவரது கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் ஹாலிஎல பகுதியில் வசிந்து வந்துள்ளார்.

எனினும் கள்ளக்காதலனும் குறித்த பெண்ணும் சட்ட ரீதியாக திருமணம் முடிக்காதவர்கள் எனவும், அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சிறுமி காணாமல் போயிருப்பது குறித்து அறிந்து கொண்ட அச் சிறுமியின் தாயின் சகோதரி பதுளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டை தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 13ம் திகதி குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணைகளில் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியாவில் கவனிப்பாரற்று கிடக்கும் பாற்பண்ணை : மக்கள் விசனம்!!

 

பாற்பண்ணை

வவுனியா மருக்காரம்பளையில் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கபட்ட நவீன பால்பண்ணை தொழிற்சாலை கவனிப்பாரற்ற நிலையில் பற்றை மண்டி கிடப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குளவிகளும், குரங்குகளும் குடிகொள்ளும் குகையாக மாறிவருவதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள் இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் இதுவரை ஏன் இதனை இயங்கவைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஆதங்கபடுகின்றனர்.

நீண்டகாலம் பயன்படாமல் இருக்கின்றமையால், இத் தொழிற்சாலையில் உள்ள பெறுமதிமிக்க இயந்திரங்கள் பழுதடையும் நிலையில் உள்ளது. குறித்த தொழிற்சாலை ஒரு நாளைக்கு 1500 லீற்றர் பால் பதனிடும் வகையில் உருவாக்கபட்டுள்ளது. இதனால் வவுனியா கால்நடை வளர்பாளர்கள், மற்றும் பொதுமக்கள் மிகவும் பயனடையகூடிய நிலை இருக்கிறது.


எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கரிசனை கொண்டு, மக்களின் நலனுக்காக நல்லதோர் தீர்வினைப்பெற்று அழிந்துபோகின்ற வளத்தினை மீளக்கட்டிஎழுப்ப நடவடிக்கை மேற்கோள்ளவேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

குறித்த பால்பண்ணை சர்வதேச நிறுவனங்களான ஒக்ஸபாம், யூஎஸ் எய்ட், யு.என்.டி.பி ஆகியவற்றின் நிதியில் அண்ணளவாக 4 நிதியில் நவீனமுறையில் அமைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட கால்நடை வளர்பாளர் கூட்டுறவு சங்களின் சமாசத் தலைவர் எஸ்.கந்தசாமியிடம் கேட்டபோது, குறித்த பாற்பண்ணயை இயங்கவைப்பதில் நிதியே பாரிய பிரச்சினையாக இருந்துவருகின்றது.

குறிப்பாக உற்பத்தி அலுவலர் ஒருவரை பணிக்கு அமர்த்தவேண்டும். அதனை விட 5 ஊழியர்களும் நியமிக்கபடவேண்டும். அவர்களிற்கு சம்பளம் வழங்க வேண்டிய தேவையிருக்கிறது. இயந்திரங்களில் காணப்படும் சிறிய பழுதுகள் திருத்தபடவேண்டியிருக்கிறது.

குறித்த பாற்பண்ணை இயங்கினால் வவுனியா மாவட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவே அமையும். அதனை நாம் நன்கு அறிவோம். அதனை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஒரு சில மாதங்கள் அதனை இயக்குவதற்கான நிதி வசதிகள் கிடைத்தாலே போதும். பின்னர் சுழற்சிமுறையில் அதனை தொடர்ந்து நடாத்தமுடியும். அதன் பெறுமதி எமக்கு விளங்கும். எனவே விமர்சனங்களை முன்வைப்பவர்கள் உண்மை நிலையினை உணர்ந்துகொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக வவுனியா மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் இந்திரா சுபசிங்கவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த பாற்பண்ணையை இயக்குவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நீண்ட காலம் பாவனையற்று இருந்தமையால் அதன் இயந்திரங்களில் சிறு பழுதுகள் ஏற்பட்டிருக்கலாம். அவற்றின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்ந்து சீரமைக்கவேண்டும். கடந்தவருடம் அரசாங்கத்தினால் 50 தொழிற்சாலைகள் உருவாக்குவதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கபட இருந்தது. அந்த திட்டத்தின் கீழ் குறித்த பால்பண்ணையை நாம் உள்ளடக்கியிருந்தோம்.

அதற்கான நிதி வசதிகள் எமக்கு கிடைக்கவிருந்த நிலையில் அரசியல் குழப்பநிலை ஏற்பட்டிருந்தமையால் அந்த நிதி எமக்கு கிடைக்கவில்லை. எனவே நடப்பாண்டில் குறித்த பாற்பண்ணையை இயங்கசெய்வதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

பிரபல தமிழ்ப்பட நடிகர் வீட்டு வாசலில் தீக்குளித்த ரசிகர் பரிதாபகமாக உயிரிழப்பு!!

 

தீக்குளித்த ரசிகர்

நடிகர் யஷின் தீவிர ரசிகர் ஒருவர் அவர் வீட்டு வாசலில் தீக்குளித்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். யஷ் நடிப்பில் தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியான கே.ஜி.எஃப். படம் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது.

திரையுலகமே வியக்கும் வகையில் வெற்றிப் படம் கொடுத்த யஷ் நேற்று தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் நடிகர் அம்பரீஷ் அண்மையில் காலமானார். அவரை யஷ் தன் வீட்டின் மூத்த உறுப்பினராக நினைத்து வந்தார்.

அத்தகையவர் இறந்த நிலையில் அவர் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. இதை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். யஷ் தனது பிறந்தாளை கொண்டாடவில்லை என்பதை அறிந்து ரசிகர்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து ரவி என்கிற ரசிகர் யஷ் வீட்டு வாசலில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர். 70 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மருத்துவமனையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தபோது யஷ் வருவாரா, அவரை பார்க்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளார் ரவி. இறுதியில் யஷ் வந்தபோது அவரை பார்த்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய பின்னர் ரவி இறந்துவிட்டார். ரவியின் மறைவால் யஷ் மிகுந்த மனவேதனையில் உள்ளார்.

இது குறித்து யஷ் கூறுகையில், ரசிகர்கள் அன்பு வைக்க வேண்டியது தான். அதற்காக தற்கொலை செய்வது, தங்களை காயப்படுத்திக் கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. இனி யாராவது தற்கொலைக்கு முயற்சி செய்தால் நான் வர மாட்டேன் என் மீதான அன்பையும், மரியாதையையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.