தமிழகத்தில் காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் இவரது மகன் திருமூர்த்தி (26). இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த பலபந்தகொட்டா பகுதியை சேர்ந்த ஆர்த்தி (21). என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பெற்றோர் இல்லாத ஆர்த்தி அவரது அண்ணன் அருண்குமார் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார் இதையடுத்து புதுமணதம்பதிகள் ஜோலார்பேட்டை மேட்டுசக்கரகுப்பத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர் இந்நிலையில் ஆர்த்தி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கில் பிணமாக தொங்கிக் கிடந்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர். அதன் பேரில் பொலிசார் மர்மமான முறையில் இறந்த ஆர்த்தியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆர்த்தி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
பிரபல ஒடியா மொழி நடிகை நிகிதா மாடியில் இருந்து விழுந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறப்பட்ட நிலையில், தற்போது தனது மகளை கொலை செய்துவிட்டார்கள் என அவரது தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார்.
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தும் அதிக ரசிகர்கள் கொண்டிருக்கும் நிகிதாவின் உயிரிழப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது கணவர் லிபன் சாபு, இவரும் ஒரு நடிகர் ஆவார். சம்பவம் நடைபெற்ற அன்று, பெற்றோர் வீட்டுக்கு சென்ற நிகிதா வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் அலறும் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
நிகிதா மாடியில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், எனது மகளை அவரது கணவர் லிபன் மாடியில் இருந்து தள்ளி கொலை செய்து விட்டார் என்று நிகிதாவின் தந்தை சனதன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
நிகிதாவை அவரது கணவரும் அவரது குடும்பத்தினரும் மனதளவில் கொடுமைப்படுத்தினர். சம்பவத்தன்று நிகிதாவுக்கும் அவரது கணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்சனையை பேசி தீர்க்க இருவரும் மாடிக்கு சென்றனர்.
சிறிது நேரத்தில் என் மகள் மாடியில் இருந்து விழுந்து இறந்து கிடந்தார். நிகிதாவை திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என தந்தை அளித்துள்ள புகாரை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இயக்குநர் வாசுவின் மகன் சக்தி குடித்துவிட்டு செம போதையில் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். நடிகர் சக்தி 11 படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இந்த நிலையில் சென்னை சூளைமேட்டில் பட்டபகலில் நண்பருடன் மூக்கு முட்ட குடித்து விட்டு அவரது போர்டு காரை அதிவேகமாக ஓட்டிச்சென்றுள்ளார் நடிகர் சக்தி.
இளங்கோவடிகள் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த மாருதி ஆல்டோ காரில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற அவரது காரை அங்குள்ள இளைஞர்கள் சிலர் விரட்டி பிடித்தனர்.
அணிந்திருந்த வேட்டி அவிழ்ந்த விழுவது கூட தெரியாமல், நிற்ககூட மதியில்லாத நிலையில் தள்ளாடி விழுந்த நடிகர் சக்தியை இளைஞர் ஒருவர் தாங்கிப்பிடித்தார்.
சக்தியுடன் வந்தவர், காரை எடுத்து செல்ல முற்படுகையில் அங்கிருந்த நபர் ஒருவர் பணக்காரன் என்ற திமிரா என கேள்வி கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து செல்லப்பட் சக்தி, அதன்பின்னர் விசாரணைக்கு பிறகு அனுப்பப்பட்டார்.
ஹட்டனில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற திருடனை பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று துரத்திப்பிடித்துள்ளனர்.
ஹட்டன் நீதிமன்ற வீதியில் நோர்வூட் பிரதேச சபையின் பிரதான குமாஸ்தாவின் கழுத்தை நெறித்து தங்கச் சங்கலியினை அபகரித்து சென்ற வேளையில் பிடிபட்டுள்ளார். குறித்த பெண் தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது பின்தொடர்ந்த நபர் அவரது தங்கச் சங்கிலியினை அபகரித்து சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஹட்டன் டிக்கோயா நகரசபையின் காவலாளி மற்றும் பிரதேசவாசிகள் ,பொலிஸார் ஆகியோர் இணைந்து திருடனை துரத்திப் பிடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தங்கச்சங்கிலி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தின் போது பெண்னின் கழுத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் பத்தனை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் எனவும், கொழும்பு பகுதியில் தரகர் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்கச்சியில் இராணுவ வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டிருந்தது. இதன் போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியாகி இருந்தனர்.
பளையைச் சேர்ந்த 36 வயதான பி.ஜெயக்குமார், பளை, மாசாரைச் சேர்ந்த 32 வயதான கே.குகதாஸ், சுழிபுரத்தைச் சேர்ந்த எஸ்.ரதீஸ்வரன் ஆகியோரே உயிரிழந்தனர். இவர்களில் குகதாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்த கோர விபத்து நேற்று மாலை நடந்துள்ளதுடன், இராணுவ வாகனத்தை செலுத்தி வந்தவர் பளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பளையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியை, கட்டைக்காடு இராணுவ முகாமில் இருந்து இயக்கச்சி 552 படைப்பிரிவு முகாமுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த இராணுவ ட்ரக் வண்டி முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியது என்று தெரியவருகின்றது.
விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி முற்றாக நசுங்கிச் சேதமடைந்தது. முச்சக்கரவண்டியைச் செலுத்தியவர் மிக மோசமான காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். ஏனையவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எனினும் இந்த கோர விபத்து தொடர்பான தடங்களை அழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
யாழ். சாவகச்சேரி நகரில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தின் மேற்கூரையை பிரித்து சி.சி.ரீ.வி கமரா இணைப்புக்களை துண்டித்து விட்டு உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் மற்றும் தொலைப்பேசி மீள்நிரப்பு அட்டைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இதன்போது சுமார் ஏழு இலட்சம் ரூபா பணம் மற்றும் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தொலைப்பேசி மீள்நிரப்பு அட்டைகள் என சுமார் 10 இலட்சம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கொள்ளை சம்பவம் இடம்பெற்ற போது கடையின் பின்புறம் வர்த்தக நிலையத்தின் பணியாளர்கள் உறக்கத்தில் இருந்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரோடு இணைந்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் தரித்து நிற்பதினால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான பாதையில் வாகனங்கள் தரித்து நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
எனினும், அதற்கு முன்பாகவே வாகனங்கள் தரித்து நிற்பதனை அவதானிக்க முடிகின்றது. இதன் காரணமாக நோயாளிகளை குறித்த பாதையினூடாக அன்புலன்ஸ் வண்டியில் எடுத்து செல்ல முடியாத நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது.
வவுனியாவில் வாகன தரிப்பிடம் இன்மையே இதற்கு முழுக்காரணம் என அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தினை கவனத்தில் கொண்டு இதற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா தாண்டிகுளத்தில் வசித்துவரும் கருணாநிதி ஹரிபிரசாத் இன்று (09.01) காலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முகம்மட் ரியால் முன்னிலையில் வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்புக்கும் சட்டத்திற்கும் இணங்க பற்றுறுதியோடு பணியாற்றுவேன் என்றும் இலங்கை குடியரசுக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பேன் என்றும் எனது திறமைக்கு இயன்றவரை இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றிக் காப்பேன் என்றும் உறுதி செய்கின்றேன் என கருணாநிதி ஹரிபிரசாத் திடீர் மரண விசாரணையாளராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
வவுனியாவில் இராசபுரம் கனகராயன்குளம் பகுதியில் நேற்று கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பொலிஸாரின் சோதனை நடவடிக்கையில் இரவு 11.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி கட்டுத் துப்பாக்கியை வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராசபுரம் கனகராயன்குளத்திலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிசார் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக கட்டுத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரில் தர்மதாசன் செல்வநாயகம் (வயது 48) என்பவரையே கட்டுதுப்பாக்கியுடன் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
வவுனியா நகரின் மத்தியில் நேற்றிரவு (08.01.2019) தோண்டப்பட்ட குழியினால் அவ்விடத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் மற்றும் நகரசபையினரால் குழி தோண்டும் நடவடிக்கை நிறுத்துவப்பட்டுள்ளது.
வவுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே நேற்றிரவு சிலரால் எம்.ஜி.ஆர் சிலை வைக்கும் நோக்கோடு அவ்விடத்தில் பாரிய குழியொன்று தோண்டப்பட்டது. இதனையடுத்து அவ்விடத்தில் ஒன்றுகூடிய இளைஞர்களினால் குழி தோண்டும் நடவடிக்கை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டது.
இதன் பின்னர் இன்று (09.01.2018) காலை குழி தோண்டும் நடவடிக்கையினை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த நகரசபையினர் மற்றும் பொலிஸார் குழியினை மூடுமாறு பணித்ததுடன் உரிய அனுமதியினை பெற்று சிலை வைக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பணித்தனர்.
இதனையடுத்து தற்போது தோண்டப்பட்ட குழியினை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
நகரசபையின் அனுமதியின்றியே அவ்விடத்தில் சிலை வைக்கும் முயற்சி இடம்பெற்றுள்ளது. எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் அந்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.
திருகோணமலை – சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து உரிய அனுமதி இன்றி நாட்டை விட்டு வெளியேறிய விமானம் குறித்து உடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவில் சமூக அமைப்புகள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளன. சீனா, சிங்கப்பூர், ஹொங்கொங் நாடுகளைச் சேர்ந்த ஐந்து முதலீட்டாளர்களை அழைத்து வந்த குறித்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டிலிருந்து வெளியேறியது.
எனினும், குறித்த விமானம் உரிய அனுமதி இன்றி அங்கீகரிக்கப்படாத விமான நிலையம் ஒன்றில் இருந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3ஆம் திகதி இலங்கைக்கு வந்த குறித்த விமானம் பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியுடன், திருகோணமலை – சீனக்குடா விமானப்படைத் தளத்திற்கு சென்றிருந்தது.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தி விட்டு ஞாயிற்றுக்கிழமை சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்தே, சிங்கப்பூருக்கு அந்த ஜெட் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
அங்கீகரிக்கப்படாத விமான நிலையத்தில் இருந்து, சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் குடிவரவுச் சட்டங்களை மீறி, குறித்த விமானம் புறப்பட்டுச் செல்வதற்கு யார் அனுமதி வழங்கியது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில், சிவில் சமூக செயற்பட்டாளர்கள், உரிய அனுமதியின்றி ஜெட் விமானம் சீனக்குடாவில் இருந்து புறப்பட்டுச் சென்றமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, சீனக்குடா விமானப்படைத் தளத்தில் தரையிறங்குவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சே அனுமதி அளித்திருந்தது. எனினும், சிவில் விமானப் போக்குவரத்து துறையின் அனுமதி ஏதும் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிவில் விமானப் போக்குவரத்து துறை இதுகுறித்து விசாரணைகளை நடத்தும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றினால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட சுமார் 800க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களின் அவுஸ்திரேலிய விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் இவ்வாறு 800 விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த குற்றவாளிகளில் ஐந்நூறு பேர் பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
100 பேர் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் – 53 பேர் குடும்ப வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் – 34 பேர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் – 13 பேர் கொலைக்குற்றவாளிகள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர்களுடன் தாக்குதல் நடத்தியவர்கள் 125 பேர் மற்றும் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் 56 பேர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின்படி, குறைந்தது 12 மாத சிறைத்தண்டனை பெற்ற பாரதூரமான குற்றவாளிகளின் விசாக்களை பறித்து, அவர்களை சொந்தநாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான அனுமதியை உள்துறை அமைச்சு பெற்றிருந்தது.
இதன்பிரகாரம், எதிர்காலத்தில் குற்றவாளிகளுக்கு அவுஸ்திரேலியாவில் இடமில்லை என அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது தனது உயிரை பணயம் வைத்து, நான்கு பேரின் உயிரை காப்பாற்றியவரை ஒட்டுமொத்த இலங்கையர்களைளும் பாராட்டி வருகின்றனர்.
யட்டிநுவர வீதியில் அமைந்து 5 மாடி கட்டடத்தில் நேற்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
இதன்போது உயிரை பணயம் வைத்து முழு குடும்பத்தையும் காப்பாற்றிய வீர தந்தையான ராமராஜ் குறித்து அனைத்து ஊடகங்களும் கவனம் செலுத்தியுள்ளன.
சுமார் 75 அடி உயரத்தில் அமைந்துள்ள வீட்டினுள் தீபற்றியுள்ளது. பற்றிய தீ வேகமாக பரவியமையினால் வீட்டினுள் இருந்தவர்கள் வெளியே வர முடியாத நிலையில் சிக்கிகொண்டுள்ளனர்.
திகில் நிறைந்த தருணத்தில் தனது செயற்பாடு குறித்து கருத்து வெளியிட்ட ராமராஜ், ஜன்னல் ஊடாக வெளியே இருப்பவர்களிடம் “நாங்கள் உள்ளே சிக்கியுள்ளோம். எங்கள் குடும்பத்தை காப்பாற்ற உதவுமாறு” கூல்லிட்டேன்
உடனடியாக மக்கள் அவ்விடத்தில் கூடியுள்ளனர். பிள்ளைகளை வீசுங்கள் நாங்கள் பிடிக்கிறோம் என மக்கள் கூறியுள்ளனர்.
வீட்டினுள் இருந்த இரண்டு போர்வைகள் மற்றும் மெத்தை ஒன்றை ஜன்னல் ஊடாக ராஜ்குமார் மக்களை நோக்கி முதலில் வீசினேன்.
பின்னர் மக்கள் போர்வையை பிடித்து கொண்டு தயார் நிலையில் இருந்தனர். “நான் முதலாவதாக 8 வயது மகனான இஷாரத் என்பவரையும் இரண்டாவது மகனான சத்தியஜித் என்பவரையும் முதலில் கீழே தூக்கிய வீசினேன். நேற்று தான் பலர் பாடசாலையை ஆரம்பித்த மூன்றாவது மகனை இறுதியாக வீசினேன்.
பிள்ளைகளுக்கு எந்த காயமும் ஏற்பட கூடாதென்பதே எனது பிரதான நோக்கமாக இருந்தது. பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்பட்டிருந்தால் இன்று நான் இருந்து பயனில்லை.
எனது அதிஷ்டம் பிள்ளைகள் காயங்களின்றி தப்பி விட்டார்கள். அடுத்ததாக எனது மனைவியை தூக்கி வீசினேன். அதற்காக நான் சிறிது தூரம் கீழே இறங்கிவிட்டு மனைவியை குதிக்குமாறு கூறினேன் மனைவி குதிக்கும் போது என்னால் சரியாக பிடித்து கொள்ள முடியாமல் கையைவிட்டு விட்டேன். எனினும் மக்கள் அவரையும் காயமின்றி பிடித்து விட்டார்கள்.
மனைவியை காப்பாற்ற முயற்சித்த போது எனது கையில் காயம் ஏற்பட்டது. காயத்துடன் என்னால் இறங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் என்னை பிடிக்குமாறு கூறிவிட்டு நானும் குதித்து விட்டேன். என்னையும் காயமின்றி மக்கள் காப்பாற்றி விட்டார்கள்.
கண்டி மக்கள் மிகவும் நல்லவர்கள் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. எனது சொந்த ஊர் பண்டாரவளை. நானும் எனது மனைவி ராதிகாவும் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கண்டி நகரத்திற்கு வந்தோம். நான் நகை செய்யும் ஆசாரி தொழில் ஈடுபடுகின்றேன். இந்த பகுதி மக்களிடம் இன பேதம், மத பேதம் என ஒன்றும் இல்லை. பிரச்சினை ஒன்று ஏற்பட்டால் சரியான நேரத்திற்கு ஒன்று கூடிவிடுவார்கள். எங்கள் அதிஷ்டத்திற்கு எங்களை சுற்றியிருப்பவர்கள் அனைவரும் நல்லவர்கள்.
கண்டி நகர தீயணைப்பு பிரிவு, பொாலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீ மேலும் பரவாமல் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்” என ராஜ்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட திருடனை அடையாளம் காண்பதற்காக ‘பூட்சிற்றி’ மற்றும் ‘சதொச’ விற்பனை நிலையங்களிலுள்ள கண்காணிப்பு கமராக்களை ஆய்வு செய்த பொலிசார் பல மாதங்களாக குறித்த நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் இயங்காத நிலையில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் கடனட்டை திருடப்பட்ட நிலையில் தனது கடனட்டை காணாமல் போனதை அறிந்தவுடன் வங்கிக்கு அறிவித்தல் வழங்கி கடனட்டையின் பணப்பரிமாற்றத்தை நிறுத்தியதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.
திருட்டுப் போன கடனட்டையை பயன்படுத்தி வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள ‘பூட்சிற்றி’ மற்றும் நெளுக்குளம் சந்தியில் அமைந்துள்ள ‘சதொச’ விற்பனை நிலையங்களில் சுமார் எட்டாயிரம் ரூபாவிற்கு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என வங்கியினால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த விற்பனை நிலையங்களில் கண்காணிப்பு கமராக்களை பொலிசார் ஆய்வு செய்த போது வவுனியா ‘பூட்சிற்றியில்’ கமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் அவை இயங்கவில்லை என்றும்,
நெளுக்குளம் ‘சதொச’ விற்பனை நிலையத்தில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவே இல்லை என தெரிவித்த பொலிசார் இவ் விற்பனை நிலையங்களின் பொறுப்பற்ற தன்மை காரணமாக கடனட்டை திருடனை பிடிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞர் மிகவும் சிரமத்தின் மத்தியில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், ஒரு நாளைக்கு பல நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் விற்பனை நிலையத்தில் கண்காணிப்பு கமராக்கள் இயங்காமல் இருப்பதும்,
கமராக்கள் பொருத்தப்படமால் இருப்பதும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்து குறித்த நிறுவனங்கள் அசமந்தமாக இருப்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
அத்துடன் குறித்த திருடன் இங்கு கமராக்கள் இயங்காமல் இருப்பதை அறிந்தே எனது கடனட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்துள்ளான்.
இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது எனின் குறித்த விற்பனை நிலையங்கள் கண்காணிப்பு கமராக்களை சீராக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
திருகோணமலை, கோமரங்கடவெல பகுதியில் சாரயம் குடித்து விட்டு வீதியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நபரொருவருக்கு ஒரு மாதம் கட்டாய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் சாராயம் குடித்துவிட்டு வீதியில் நின்று கொண்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டிருந்ததோடு, வீதியில் செல்லுவோருக்கு தகாத வார்த்தைகளினால் தூற்றியதாக பொலிஸாருக்கு அவசர தொலைபேசி மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறைதண்டனை விதிக்கப்பட்ட நபர் ஸ்ரீ பக்மிகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்பிரிக்காவில் அதிக குழந்தைகள் பெற்ற 40 வயதான பெண்.. 18 ஆண்டுகள் பிரசவத்திலேயே கழித்திருக்கிறார் இந்த பெண்.
உகாண்டாவின் முகோனோ மாவட்டத்தில் வசிக்கிம் பெண். ஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிகக் குழந்தைகள் பெற்ற தாய் இவர்தான். தன்னுடைய வாழ்நாளில் 18 ஆண்டுகளை இவர் பிரசவத்திலேயே கழித்திருக்கிறார். 44 குழந்தைகளையும் ஈன்றெடுத்திருக்கிறார்.
இவற்றில் 6 முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. 4 முறை மூன்று குழந்தைகளும் 3 முறை நான்கு குழந்தைகளும் பிறந்திருக்கின்றன். இது இல்லாமல் 8 முறை தனியாகக் குழந்தைகளைப் பிரசவித்திருக்கிறார்.
குடிகார கணவர் : இந்த 44 குழந்தைகளில் தற்போது 38 குழந்தைகள் மட்டுமே உயிருடன் உள்ளனர். இத்தனைக்கும் தினமும் குடித்துவிட்டு மனைவியை சித்திரவதை செய்யும் கணவர் மூலம் இத்தனை குழந்தைகளையும் மரியம் பெற்றிருக்கிறார் என்பதுதான் வியப்பு. விருப்பத்தோடுத்தான் குழந்தைகளை ஈன்றெடுத்தீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்திருக்கிறார்.
பெண்ணின் பதில் :என்னை 12 வயதில் 28 வருடம் மூத்தவருக்குத் திருமணம் செய்துகொடுத்துவிட்டனர். குடிகாரர் அவர். அவருடன் வாழ விருப்பம் இல்லாவிட்டாலும், குடும்பம் நடத்திதான் ஆக வேண்டும். அவருக்கு இன்னும் பல மனைவிகள் உள்ளனர். அவருக்கு பல்வேறு ஊர்களில் மனைவிகள் இருந்ததால், ஆண்டுக்கு ஒருமுறைதான் வந்து குடும்பம் நடத்துவார். 1994-ம் ஆண்டில் 13 வயதாகும்போது எனக்கு முதன் முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இப்படியே பல குழந்தைகள் பிறந்துவிட்டன. என் வாழ்வில் 18 ஆண்டுகளை கர்ப்பத்தோடுதான் கழித்திருக்கிறேன். என் வாழ்க்கை சரியாக அமையாவிட்டாலும் குழந்தைகள் மூலமே மகிழ்ச்சி கிடைத்தது. அதற்காகவே அதிக குழந்தைகளையும் பெற்றுக்கொண்டேன்.
என் அப்பாவுக்குப் பல மனைவிகள் மூலம் 45 குழந்தைகள் பிறந்தன. ஆனால், நான் மட்டுமே 44 குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறேன்” என்கிறார் மரியம். பெண்கள் பிள்ளைப் பெறும் இயந்திரம் அல்ல என்று சொல்லக் கேட்டிருப்போம். இங்கே ஒரு பெண் அப்படித்தான் இருந்திருக்கிறார். ஆப்பிரிக்காவில் பெண்கள் எவ்வளவு மோசமாக வாழ்கிறார் என்பதற்கு மரியம் ஓர் உதாரணம்.