உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் வருகின்றது!!

 

மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் குஜராத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காண முடியும். 63 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் இந்த மைதானத்தின் கட்டு மான பணி மதிப்பீடாக ரூ.700 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகின்மிகப்பெரிய மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட பெரியதாக அமையும். இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் கார்களும் ,10 ஆயிரம் இருசக்கரவாகனங்களும் நிறுத்த முடியும்.மேலும் ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளமும் அமைக்கப்பட உள்ளது.

இந்த மைதானம் பயன்பாட்டிற்கு வரும் போது இந்தியாவை பெருமைப்படுத்தும் வகையிலும், நாட்டின் பெருமைக்குரிய சின்னமாகவும் மாறும் என குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒரு வருடமாக தலைக்கு குளிக்காமல் இருந்த இளம்பெண் : முடிவில் என்ன ஆனது தெரியுமா?

 

குளிக்காமல் இருந்த இளம்பெண்

ஷாம்புகள், ஹேர் டைகள் போன்ற பொருட்கள் இன்று தலை முடிக்கு அத்தியாவசியமாகிவிட்ட நிலையில் இது எதுவுமே உபயோகிக்காமல் ஒரு ஆண்டு இளம்பெண் இருந்த நிலையில் அவரின் தலைமுடிகள் பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் விர்ஜினியா டாப்ஸ்கோட் (28). இவர் கடந்த ஒரு வருடமாக ஷாம்புகள், ஹேர் டைகள், செயற்கை பொருட்கள் ஆகியவற்றை தலைக்கு பயன்படுத்தாமல் வெறும் தண்ணீரில் மட்டும் குளித்து வந்தார். விர்ஜினியாவுடன் அவரின் இரு குழந்தைகளும் இந்த முறையை பின்பற்றி வந்தனர்.

இதோடு மூவரும் கடந்த ஒரு வருடமாக தலைமுடியை வெட்டி கொள்ளாமல் இருந்தனர். இப்படி இருந்ததால் தங்கள் தலைமுடிகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விர்ஜினியா கூறியுள்ளார். அவர் கூறுகையில், என் தலைமுடியில் தற்போது நல்ல வித்தியாசம் உள்ளது, அதாவது தலைமுடியாது அதிகம் உலராமலும், உடையாமலும் தற்போது உள்ளது.

தற்போது என் முடியில் அடிக்கும் வாசம் தான் இயற்கையான தலைமுடியின் வாசமாகும். நடுநடுவில் சில இயற்கை பொருட்களை மட்டும் தலைக்கு பயன்படுத்தினேன்.

ரசாயனம் கலந்துள்ள ஷாம்புகள், ஹேர் டைகள் போன்றவற்றால் ஏற்படும் தீங்குகள் குறித்து நான் நன்றாக அறிவேன். அதனால் தான் என் குழந்தைகளுடன் சேர்ந்து இவ்வாறு செய்தேன். முன்பை விட தற்போது என் தலைமுடி பார்ப்பதற்கு பளபளப்பாக இருப்பதாக பலரும் கூறுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கோர விபத்து : மூவர் பரிதாபமாக பலி!!

 

கோர விபத்து

கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் இராணுவ ரக் வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூன்று பேரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்றுபேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் பளைப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் கரந்தையைச் சேர்ந்த குகன் என்பவரும் அப்பகுதியில் இயங்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றும் சாந்தன் என்ற மூவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மூவரின் சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை பளைப் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

குருநாகல் பேருந்து நிலையத்தில் 3வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை!!

 

பெண் ஒருவர் தற்கொலை

குருநாகல் பேருந்து நிலையத்தில் இன்று காலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து நிலையத்தில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல், தோரயாய பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குருநாகல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் இருவர் படுகாயம்!!

 

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92 ஆம் கட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், துவிச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த கந்தளாய் பகுதியைச் சேர்ந்த எச்.வி.தனஞ்ஞய வயது (22), மற்றும் ஆரே.வை.ஹேரத் சத்துருவன் வயது (25) ஆகிய இருவருமே பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதான வீதியை கடக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவருக்கு எந்த வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பலரை சோகத்திற்குள் உறைய வைத்த சிறுமியின் மரணம்!!

 

சிறுமியின் மரணம்

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

தனது வீட்டில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளச் சென்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் 10 வயதான கிளிநொச்சி பாரதி வித்தியாலய மாணவியான புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வெள்ளம் ஏற்பட்ட வேளை கூட உயிரிழப்பு நேர்ந்திடாத சந்தர்ப்பத்தில் தற்போது இடம்பெற்றுள்ள இச்சிறுமியின் மரணம் குறித்த பிரதேச மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினிகாந்தை கிண்டல் செய்த இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன்!!

 

முரளிதரன்

ரஜினிகாந்த் உலகம் முழுவதும் தெரிந்த ஒரு உச்ச நடிகர். இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு பேட்ட படம் திரைக்கு வருகின்றது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நீண்ட வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டே தான் இருக்கின்றார். கட்சி தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் ஒருவருடம் ஆகின்றது. ஆனால், அவர் தற்போது வரை வரவில்லை.

தற்போது இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனிடம் அரசியல் வருவது குறித்து கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் ‘இந்தியாவில் ரஜினிகாந்த் சொல்வது போல் வருவேன், வருவேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பழக்கம் எனக்கு இல்லை.

நான் அரசியலுக்கு வரமாட்டேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார், இது ரஜினி ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

16 வயதில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமி : 15 ஆண்டுகள் கழித்து அவரது நிலை!!

 

பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமி

அமெரிக்காவில் 16 வயதில் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமி, ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நிலையில் தற்போது தனது 30-ஆவது வயதில் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிண்டோயா பிரவுன் (30) என்ற பெண் கடந்த 2004-ல் தனது 16வயது வயதில் தன்னை தத்தெடுத்த குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பிரவுனின் தாய் குடிக்கு அடிமையானவராக இருந்த நிலையில் அந்த குடும்பத்தில் இருந்து தப்பித்த பிரவுன், நபர் ஒருவருடன் ஹொட்டலில் தங்கியிருந்தார்.

அந்த நபர் பிரவுனை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார். இந்நிலையில் ஆலென் (41) என்ற நபர் $150 பணத்தை கொடுத்து பிரவுனை உறவுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நடந்த பிரச்சனையில் பிரவுன், ஆலனை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.

பின்னர் ஆலெனிடம் இருந்த இரண்டு துப்பாக்கிகள் மற்றும் பணத்தை தூக்கி கொண்டு பிரவுன் ஓடினார். ஆனால் இதன் பின்னர் பொலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றம் பிரவுனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதாவது 51 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்து பரோலில் கூட வெளிவரமுடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பிரபலங்கள் உட்பட பலர் பிரவுனுக்கு ஆதரவாக பேசியதோடு, அவரை விடுவிக்க கோரினார்.

இந்நிலையில் கவர்னர் ஹசலாமின் ஒப்புதலோடு சிறுமியாக சிறைக்கு சென்ற பிரவுன் தற்போது 30-ஆவது வயதில் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்படுகிறார். கருணை அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது, வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி பிரவுன் சிறையில் இருந்து வெளியில் வருகிறார். இதிலிருந்து பத்து ஆண்டுகள் அவர் எந்த தவறான சம்பவங்களில் ஈடுபடுகிறாரா என கண்காணிக்கபடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

மலைப்பாம்பு விற்பனைக்கு : கழுத்தில் மாட்டி கொண்டு விளம்பரம் கொடுத்த நபர் : இறுதியில் நடந்த விபரீதம்!!

 

மலைப்பாம்பு விற்பனைக்கு

இந்தியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்து 2 பாம்புகளை விற்க முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சவ்தர்குடா பகுதியைச் சேர்ந்தவர் ஷரோன் மோசஸ்.

மோசஸ், மலைப்பாம்பின் குட்டியை தனது நண்பன் கழுத்தில் போட்ட புகைப்படத்தை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், தங்களிடம் மலைபாம்பு மற்றும் கொம்பேரி மூக்கன் ஆகிய 2 பாம்புகள் விற்பனைக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார். பாம்பின் விலை ரூ.24000 என அவர் கூறினார்.

குறித்த பதிவு வைரலான நிலையில் இது வனத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், பொலிஸ் உதவியுடன் சென்று ஷரோன் மோசஸ் மற்றும் அவனது நண்பன் பிரவீன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 2 பாம்புகளையும் வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

வவுனியா மைந்தனின் அசாத்திய திறமை : நுண் செதுக்கல் கலையில் சாதிக்கும் மாணவன்!!

 

அசாத்திய திறமை

சிற்பமென்பது ஒரு முப்பரிமாணக் கலை. தேவையற்றவற்றை நீக்கி உள்ளே மறைந்திருக்கும் வடிவத்தை வெளிக்கொணர்வது. சாதாரணமாக நாம் பார்க்கின்ற கற்பாறையையோ அல்லது மரத்துண்டையோ ஒரு சிற்பக்கலைஞன் கலைக் கண்களோடு நோக்குகிறான்.

அதற்குள் மறைந்திருக்கும் கலைப்பொருள் அவன் கண்களுக்கு மட்டுமே தட்டுப்படுகின்றது.அதை வெளிக்கொண்டு வருவதற்காக மிகுந்த பொறுமை நிதானம் போன்ற பண்புகளை தன்னகத்தே உள்வாங்கிக் கொள்கிறான்.

அண்மைக்காலமாக மிகவும் பிரபலமடைந்துவரும் Miniature என்று அழைக்கப்படும் சிற்றுரு செதுக்கல் அல்லது நுண் செதுக்கல் கலையில் ஒரு சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இக்கலையில் கைதேர்ந்த கலைஞர்கள் பலர் மேற்குலக நாடுகளில் முத்திரை பதித்து வருகின்றனர்.பென்சில் கூர் மற்றும் வெண்கட்டி போன்றவற்றில் கண்களை கொள்ளைகொள்ளும் கலைப்பொருட்களை உருவாக்கி வருகின்றனர்.

நம்நாட்டிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில கலைஞர்கள் இனங்காணப்படுகின்றனர். இவ்வரிசையில் வவுனியா பூந்தோட்டத்தை சேர்ந்த அன்ரனி குரூஸ் விபுலன் (வயது 20) எனும் மாணவன் ஒருவனும் வெண்கட்டி மற்றும் பென்சில் கூரில் நுண் சிற்பங்களை செதுக்கி சாதனை படைக்கத் தொடங்கியுள்ளார்.

அண்மையில் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற கைப்பணித்துறை போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

செதுக்குவதற்கு நவீன கருவிகளோ,வசதிகளோ அற்ற நிலையில் சாதாரண ஊசி மற்றும் சிறிய கத்தியைப் பயன்படுத்தி கலை வடிக்கும் இம் மாணவனின் முயற்சி பாராட்டுதற்குரியது.

தனக்குள் இருக்கும் கலையை தானாகவே இனங்கண்டு யாருடைய தூண்டுதலுமின்றி சுயமாக இயங்கி இன்னும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஊக்கமும் கொண்டிருக்கும் மாணவனை நாமும் வாழ்த்தி ஊக்குவிப்போம்.

சிறுமியின் வயிற்றில் இறந்த நிலையில் 8 மாத குழந்தை : விசாரணையில் சிக்கிய இளைஞர்கள்!!

 

சிறுமியின் வயிற்றில் குழந்தை

தெலுங்கானா மாநிலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து காதலியை பல மாதங்களாக துஸ்பிரயோகம் செய்து வந்த இளைஞர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் பாம்பாளி கிராமத்தை சேர்ந்த 24 வயதான கோட்டே ரஞ்சித் என்பவர், அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

அதில் மயங்கிய அந்த சிறுமியி ரஞ்சித்திடம் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ரஞ்சித், சிறுமியை தன்னுடைய நண்பர்கள் மெதுகு சதீஷ் (23), வ்யூகுந்தம் (24) ஆகியோருடன் சேர்ந்து 10 மாதங்களாக துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

இதில் கர்ப்பமடைந்த சிறுமியை, அவருடைய பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, வயிற்றுனுள் இறந்த நிலையில் 8 மாத குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் பாலியல் பலாத்காரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை இன்னும் கைது நடவடிக்கையில் ஈடுபடவில்லை

5 ஓட்டத்துக்குள் 5 விக்கெட்களை இழந்த இலங்கை அணி : விடாது துரத்தும் அவலம்!!

 

விடாது துரத்தும் அவலம்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகளில் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி 45 ஓட்டத்தினாலும், இராண்டாவது போட்டியில் 21 ஓட்டத்தினாலும் வெற்றி பெற்றிருந்தது.

இந் நிலையில் இவ் விரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது இறுதியமான போட்டி இன்று எடன் பார்க்கில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 364 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பாக ரோஷ் டெய்லர் 134 ஓட்டங்களையும், அணித் தலைவர் வில்லியம்சன் 55 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, ஹென்றி நிக்கலஸ் ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களை குவித்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் மலிங்க மூன்று விக்கெட்டுக்களையும், சந்தகான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

365 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணிக்கு தனஞ்சய டிசில்வா மற்றும் திக்வெல்ல ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்து முதலாவது விக்கெட்டுக்காக 66 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதன் பின்னர் 8.1 ஆவது ஓவரில் 36 ஓட்டத்துடன் தனஞ்சய டிசில்வா டிம் சவுதியுடைய பந்தில் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து களமிறங்கிய குசல் பெரேராவுடன் ஜோடி சேர்ந்தாடிய திக்வெல்ல 46 ஓட்டங்களை குவித்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்தடுத்து களமிறங்கிய குசல் மெண்டீஸும் எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையிலும், தசூன் சானக்க 2 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

இதனால் இலங்கை அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து ஆடுகளம் நுழைந்த திஸர பெரேரா குசல் பெரேராவுடன் இணைந்து அதிரடி காட்ட ஆரம்பிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. எனினும் 22 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் குசல் பெரேரா 43 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க 38.3 ஆவது ஓவரில் திஸர பெரேராவும் 80 ஓட்டத்தை அதிரடியாக குவித்து ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி 38.3 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. எனினும் இவர்களின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களம் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். குறிப்பாக இலங்கை அணி 5 ஓட்டங்களை எடுப்பதற்கு ஐந்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பாக லொக்கி பெர்க்கன் 4 விக்கெட்டுக்களையும், ஈஷ் சோதி 3 விக்கெட்டுக்களையும், டிம் சவுதி, ஜேம் நிஷன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். ஆகையால் இப் போட்டியில் நியூஸிலாந்து அணி 115 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

வவுனியாவில் வைத்தியர்களின் கார் கண்ணாடிகளை உடைத்த விஷமிகள்!!

 

கார் கண்ணாடிகளை உடைத்த விஷமிகள்

வவுனியாவில் வைத்தியர் விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களினுடைய கண்ணாடி இன்று காலை உடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பணிபுரியும் வைத்தியர்களுக்கான கண்டி வீதியில் அமைந்துள்ள விடுதியில் வசித்து வரும் வைத்தியர்களின் மூன்று கார்களே இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இன்று காலை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் பாதுகாப்பு கெமராக்களை ஆய்வு செய்ததுடன் இச் சம்பவம் பழிவாங்கும் நோக்கத்திற்காக செய்யப்பட்டதா? அல்லது காரிலுள்ள பொருட்களை திருடுவதற்காக செய்யப்பட்டதா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று அதிகாலையிலே ஒருவர் வந்து கார்களினுடைய கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச்சென்றது அருகிலுள்ள சீ.சீ.ரீ.வி கேமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தாயின் பாசப் போராட்டம் வென்றது : 100 நாட்களின் பின்னர் சிறுமி ஹரிணி மீட்பு!!

 

சிறுமி ஹரிணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணாமல் போன சிறுமி ஹரிணி 100 நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளார். வெங்கடேசன்- காளியம்மாள் என்ற நாடோடி இனத் தம்பதியினர் காஞ்சிபுரம் மானாமதியில் தங்களது குழந்தையை தொலைத்துள்ளனர்.

குழந்தை கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம் என்றபடி அங்கேயே இருந்தனர். இதற்கிடையில் இரண்டாவது குழந்தையை சுமந்திருந்த தாய் காளியம்மாள், தனது மகள் காணாமல்போன நாள் முதல் சரியாக சாப்பிடாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

சிறுமியை தேடும் பணியை தொடர்ந்து பொலிசார் செய்துவந்தனர். நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, வெங்கடேசனை அழைத்துப் பேசி தைரியப்படுத்தியிருக்கிறார். தான் நடத்திவரும் குழந்தைகள் அமைப்புமூலம் இரண்டு மாதங்களாக ஹரிணியைத் தேடிவருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் , திருப்போரூரில் சிறுமி ஹரிணி இன்று மீட்கப்பட்டுள்ளார், ஹரிணியை பொலிசார் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். ஹரிணியைக் கண்டதும் வெங்கடேசனும் காளியம்மாளும் அழத்தொடங்கிவிட்டார்கள். பேசுவதற்கு அவர்களிடம் வார்த்தைகள் இல்லை. காவல்துறைக்குக் கண்ணீரால் நன்றி தெரிவித்த காளியம்மாள், குழந்தை ஹரிணியைத் தழுவி முத்தமிட்டுக் கொஞ்சினர்.

புத்தாண்டில் சிங்கப்பூரில் நடிகையுடன் ஜோடியாக சுற்றிய கமல்!!

 

நடிகர் கமல்

நியூ இயர் என்றாலே கமல் நடித்த சகலகலா வல்லவன் படத்தில் வரும் ஹேப்பி நியூ இயர் பாடல் தான் நியாபகம் வரும்.

புத்தாண்டை தமிழகமே கொண்டாடிய நிலையில், நடிகர் கமல் சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாடி மகிழ்ந்தார்.

அவருடன் விஸ்வரூபம் நாயகி பூஜா குமாரும் உடன் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் புத்தாண்டு கொண்டாட சிங்கப்பூர் வீதிகளில் வலம் வந்தனர்.

அப்போது கமலின் ரசிகர் ஒருவர், கமலுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி விட்டார்.

வீதியில் திரிந்த மனநலம் குன்றிய நபர் : மாநகரசபை உறுப்பினரின் மனிதாபிமான செயல்!!

 

மனிதாபிமான செயல்

கல்முனை பகுதியில் மனநலம் குன்றிய நிலையில் அலைந்து திரிந்த நபரொருவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் அப்பகுதி மக்களின் உதவியுடன் அவரை வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.

குறித்த நபர் பெரியகல்லாறு பகுதியை சேர்ந்த கோபி என்பவர் என தெரியவருகிறது. குறித்த நபருக்கு முடி வெட்டி, நீராட்டி, உணவு கொடுத்து பின்னர் வைத்தியசாலையில் சேர்த்துள்ளார். இந்த மனிதாபிமான பணியை செய்த உறுப்பினருப்பினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.