யாழில் கரையொதுக்கிய மர்மபொருளினால் குழப்பம் : கடற்கரையில் குவிந்த மக்கள்!!

 

யாழ். குடாநாட்டின் கடற்கரையில் மர்மபொருள் ஒன்று கரையொதுக்கியதால் மீனவர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

வடமாராட்சி கிழக்கு ஆளியவளை கடற்கரையில் இன்று அதிகாலை மர்ம பொருள் கரை ஒதுங்கியதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர் மர்மபொருளினை மீட்டதுடன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கப்பல் ஒன்றின் உடைந்த பாகமாக இது இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் கரையொதுங்கிய மர்மபொருளினை பார்வையிட பெருந்தொகை மக்கள் கடற்கரையில் சூழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபிய கிரிக்கெட் அணியில் முதல் முறையாக இடம்பிடித்த தமிழன் : குவியும் பாராட்டுக்கள்!!

 

 

சவுதி அரேபிய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த தமிழன்

தமிழகத்தைச் சேர்ந்த முஹமது நயீம் என்ற இளைஞர் சவுதி அரேபியா கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து சாதித்துள்ளார். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகில் உள்ள கோபாலபட்டினம் என்ற கிராமத்தை பூர்வீகமாகக்கொண்டவர் முஹமது நயீம்.

இவரது பெற்றோர் தற்போது சவுதிஅரேபியாவில் வசித்து வருகின்றனர். பள்ளிப்படிப்பு முழுவதும் சவூதிஅரேபியாவில் பயின்ற முஹமது தற்போது திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொழில் இளங்கலை படித்துவருகிறார்.

இந்நிலையில் இவர் சவூதி அரேபியாவின் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியில் தேர்வு பெற்றுள்ளார். இவர் தாய்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை முதல் தகுதிச்சுற்றில் விளையாடுகிறார்.

சவூதிஅரேபியா – தாய்லாந்திற்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து முஹமது நயீம் அரேபியா கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் சவூதி அரேபியா கிரிக்கெட் அணியில் தமிழகத்திலிருந்து பங்குபெறும் முதல் தமிழர் என்ற பெருமையை முஹமது நயீம் பெறுகிறார்.

இது குறித்து முஹமது நயீமின் தந்தை கூறுகையில், கிரிக்கெட் போட்டிகளை சவூதி அரேபியாவில் அறிமுகப்படுத்தி அதன் மேம்பாட்டிற்காக உழைக்கும் அமைப்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்போட்டிகளில் விளையாடும் வீரர்கள் வெற்றி பெற்று சவூதி அரேபியாவிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த தமிழக வீரர் ஒருவர் முதல் முறையாக சவுதி அரேபியா அணியில் இடம் பிடித்துள்ளதால், அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!!

சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று எம்பிலிப்பிடிய -சந்திரிக்கா கங்கை அருகாமை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள அடையளம் காணப்படுவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசத்தினை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் கூரிய ஆயுதம் ஒன்றினாலும் தாக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று எம்பிலிப்பிடிய -சந்திரிக்கா கங்கை அருகாமை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இரவு முழுவதும் உயிருக்கு போராடிய 3 குழந்தைகள் : தாய் செய்த செயலால் நடந்த விபரீதம்!!

 

நடந்த விபரீதம்

தமிழகத்தில் 3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் வீர பாண்டி. இவர் மனைவி கார்த்திகா (28). தம்பதிக்கு தனிஷ்கா (8), தனுஷ்கா (6), துர்கா (3) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று அதிகாலை கார்த்திகா மற்றும் அவரது 3 மகள்கள் வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் மயக்கமடைந்து கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு நால்வருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், கார்த்திகா 3 குழந்தைகளுக்கும் வி‌ஷம் கொடுத்து அவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. கார்த்திகாவின் கணவர் வீரபாண்டிக்கு மது பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்றிரவும் வீரபாண்டி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் சத்தம் போட்டதையடுத்து வீரபாண்டி அங்கிருந்து சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கார்த்திகா, தனது 3 மகள்களுக்கும் நேற்றிரவு சாப்பாட்டுடன் அரளி விதையை அரைத்து கலந்து கொடுத்து விட்டார். அதனை 3 மகள்களும் சாப்பிட்ட பின்னர் அவரும் வி‌ஷம் கலந்த உணவை சாப்பிட்டார்.

இதையடுத்து கார்த்திகாவும் அவர் மகள்களும் இரவு முதல் அதிகாலை வரை உயிருக்கு போராடியுள்ளனர். காலையில் பொதுமக்கள் பார்க்கவே 4 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

3 கைகளுடன் பிறந்து கிராமத்திற்கே கடவுளாக மாறிய குழந்தை : வினோத சம்பவம்!!

 

வினோத சம்பவம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் மூன்று கைகளுடன் பிறந்திருக்கும் குழந்தையை கடவுள் என நினைத்து கிராமமக்கள் வழிபடும் வினோத சம்பவம் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிளாஸ்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராதிகா சாகு என்ற பெண்ணுக்கு கடந்த நவம்பர் 2ம் தேதியன்று ஆண்குழந்தை ஒன்று பிறந்தது.

பிறக்கும்போது 3 கைகள் இருந்துள்ளன. வலது கையில் மார்போடு சரிவர வளராத அந்த கையால் பிற்காலத்தில் ஏதேனும் குறைபாடு ஏற்படலாம் எனவும், விரைவில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் எனவும் சத்தீஸ்கர் மருத்துவ அறிவியல் நிறுவன தலைவர் டாக்டர் B.P. சிங், கூறியுள்ளார்.

ஆனால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், ராதிகாவின் குழந்தை கடவுளின் மறுபிறப்பு எனக்கூறி வணங்கி வருகின்றனர். இந்தியாவில் கூடுதல் மூட்டுகளுடன் பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் இந்து தெய்வங்களின் மறுபிறப்புகளாக வணங்கப்படுகின்றன.

இந்து கடவுள்களின் சித்தரிப்புகள் பெரும்பாலும் பல கைகளை கொண்ட வண்ணம் இருந்துள்ளன. அவை சூப்பர்ஹுமன் சக்தி மற்றும் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய திறனை வலியுறுத்துகிறது.

அவ்வப்போது ஒரு சில தெய்வம் ஒன்றுக்கும் மேற்பட்ட தலைகளுடன் சித்தரிக்கப்படுகிறது, இது கடவுளின் பலதரப்பட்ட தன்மையையும் அவற்றின் பல குணங்களையும் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கிளிநொச்சியை உலுக்கிய பெரும் சோக சம்பவம்!!

 

கிளிநொச்சியை உலுக்கிய சோக சம்பவம்

கிளிநொச்சியில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. கிளிநாச்சி ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த குறித்த சிறுவன் அவரது அம்மம்வாவின் வீட்டுக்கு சென்று அங்கு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இதன் போது அப்பகுதிய்ல வெள்ளத்தினால் நிறைந்திருந்த வாய்க்கால் ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனின் சடலம் கிளிநொச்சி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் ஆனந்தபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த செல்வ வினோதரன் அன்புரதன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். குறித்த சிறுவனின் இல்லம் சோகத்தில் உள்ளது.

பாரிய விபத்தில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்!!

கல்கிஸ்ஸயில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 19வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் படுகாயமடைந்துள்ளார்.

அக்ஷு பெர்ணான்டோ என்ற வீரர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு தூய தோமியர் கல்லூரியில 19 வயதிற்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளார்.

இலங்கை A அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் திறமையான வீரர்களில் ஒருவராக தெரிவாகி அவர், ராமக கிரிக்கெட் கழகத்தில் விளையாடி வருகின்றார்.

கல்கிஸ்ஸ கடல் கரைக்கு அருகில் இடம்பெற்ற பயிற்சிகள் நிறைவடைந்து வீடு நோக்கி செல்லும் போது அவர் விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இந்த விபத்தில் அவரது உடம்பில் பலத்த காயமேற்கொள்ளப்பட்ட போதிலும் மூளைக்கு பெரிய பாதிப்புகள் இல்லை என வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

எதிர்கால இலங்கை அணிக்கான நம்பிக்கை நட்சத்திரமாக அவர் கருதப்படுவதாக சக வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாளை வெளிவரவுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை நாளை வெளியிட எதிர்ப்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றிருந்ததுடன் அதில் 321,469 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை நாளை வெளியிட எதிர்ப்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு!!

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் கால அதிர்வுகள் நூல் வெளியீடு நிகழ்வு இன்று (29.12.2018) சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வவுனியா வாடி வீடு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

வவுனியா கல்வியியல் கல்லூரியின் ஓய்வு நிலை முதல்வர் கே.சிதம்பரநாதன் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவம் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

அதிதிகளினால் நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டதுடன் நூலின் முதற் பிரதியை வவுனியா கவிதா ஸ்ரோர் உரிமையாளரும் பிரபல வர்த்தகருமாகிய அ.தணிகாசலம் பெற்றுக்கொண்டதுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறைத் தலைவர் கே.ரீ.கணேசலிங்கம் மதிப்பீட்டுரை வழங்கினார்.

அத்துடன் வீரகேசரி நாளிதழின் ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து நூலாசிரியர் பொன்னையா மாணிக்கவாசகம் ஏற்புரையாற்றினார்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அதிபர், ஆசிரியர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள்,

சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

2018ல் மறக்க முடியாத தமிழ், நடிகர் நடிகைகளின் மரணங்கள்!!

 

2018 ஆம் ஆண்டில் மறக்கமுடியாத தமிழ் நடிகர் நடிகைகளின் மரணங்கள்

ஸ்ரீதேவி : தமிழ், இந்தி, தெலுங்கு என 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவி பிப்ரவரி மாதம் துபாயில் வைத்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். 80 களில் தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த இவர், பின்னர் பாலிவுட் உலகிற்கு சென்று அங்கு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.

சீனு மோகன் : தமிழ் சினிமாவில் 1980-களில் வந்த வருஷம் 16, அஞ்சலி, தளபதி முதல் சமீபத்தில் வந்த செக்கச் சிவந்த வானம் வரை பல படங்களில் நடித்த, நடிகர் சீனு மோகன் டிசம்பர் 27 ஆம் திகதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

விஜயராஜ் : திருமுருகன் இயக்கிய ‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’, ’நாதஸ்வரம்’ தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். இதன் மூலம் பிரபலமானார். திருமுருகன் இயக்கிய ‘எம்மகன்’ சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ உட்பட சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நவம்பர் 4 ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

ராக்கெட் ராமநாதன் : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், பல குரலில் பேசி அனைவரையும் கவர்ந்த ராக்கெட் ராமநாதன் உடல்நலக்குறைவால் சென்னையில் செப்டம்பர் 5 ஆம் திகதி காலாமானார். சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த இவருக்கு பானுமதி என்ற மனைவியும், சாய்பாலா என்ற மகளும், சாய்குரு பாலாஜி என்ற மகனும் உள்ளனர்.

பிரியங்கா : வம்சம்’ உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் பிரியங்கா. இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் யூலை 18 ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

வெள்ளை சுப்பையா : பல ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களில் துணை நகைச்சுவை நடிகராக இருந்து வந்த வெள்ளை சுப்பையா செப்டம்பர் 6 ஆம் திகதி உடல நலக்குறைவால் காலமானார். நாகேஷ் தொடங்கி கவுண்டமணி, செந்தி, வடிவேலு ஆகியோருடன் இவர் நடித்த காமெடி காட்சிகள் என்றும் மறக்கா முடியாதவை. மேடை நாடகங்களிலும் நடித்து வந்த வெள்ளை சுப்பையா, ”மேகங் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதடி” இவர் சொந்தமாக பாடி நடித்துள்ளார்.

72 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த காதல் தம்பதி… முதல் மனைவியை பார்த்ததும் என்ன நடந்தது தெரியுமா?

 

காதல் தம்பதி

1946 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியினர் 8 மாதங்களில் பிரிந்துவிட்ட நிலையில் சுமார் 72 ஆண்டுகள் கழித்து சந்தித்துள்ளனர். 96 வயதான நாராயண நம்பியார் இறுதியில் தனது 86 வயதான மனைவி சாரதாவை சந்தித்துள்ளார்.

திருமணமாகி ஒரு வருடம் கூட சந்தோஷமாக வாழாத இவர்கள் விதியின் வசத்தால் பிரிந்துசென்று தங்களுக்கென்று தனித்தனி வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர். விதியால் பிரிக்கப்பட்ட இவர்களை இவர்களது குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

1946 இல் நடந்தது என்ன? : 1946 ஆம் ஆண்டு நம்பியாரும், சாரதாவும் காதல் திருமணம் செய்துகொண்டனர். அப்போது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்று வந்த காலத்தில், நாராயணன் நம்பியார் மற்றும் அவரது தந்தை தாலியன் ராமன் நம்பியார் கும்பாம்பை விவசாயிகள் கலகத்தில் பங்கெடுத்துக் கொள்ள முடிவு செய்தனர்.

விவசாயிகள் எழுச்சியை தங்கள் சொந்த நிலத்தில் கட்டுப்படுத்தி, நிலப்பிரபுத்துவ தலைவர்களிடமிருந்து அதை கைப்பற்ற முடிவு செய்தனர். கும்பாயில், திட்டமிட்ட எழுச்சியானது நிலப்பிரபுத்துவ கொள்கைக்கு எதிராக இருந்தது, அவர்கள் கேரளாவின் கண்ணூர் பல பகுதிகளை கட்டுப்படுத்தினார்.

டிசம்பர் 30, 1946 அன்று மாலை நாராயணன் நம்பியார், தாலியன் ராமன் நம்பியார் மற்றும் 500 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வெள்ளிக்கிழமை காலை காரைத்தீடம் நாயனார் வீட்டுக்கு அருகே அணிவகுத்துச் சென்றனர்.

ஆனால், கேரளாவின் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களால் பணிக்கப்பட்ட மலபார் சிறப்புப் பொலிஸ் (எம்.எஸ்.பி) உறுப்பினர்கள், அவர்களின் திட்டத்தை அகற்றினர்.

அதே நேரத்தில் இரவு முழுவதும் துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கிச் சண்டையில் ஐந்து எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் ஈ.கே நாராயணன் நம்பியார் மற்றும் அவரது தந்தை தப்பித்து சென்றனர்.

அவர்கள் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர், அதன் பின் அவர்கள் கண்ணூர் மற்றும் சேலம் சிறைச்சாலையில் சிறையில் அடைக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் நாராயணன் நம்பியார் 16 துப்பாக்கிச் குண்டுகளை அனுபவித்த போதிலும், அவர் உயிர்வாழ முடிந்தது.

ஆனால் அவரது தந்தை தலிஜன் ராமன் நம்பியார் வன்முறை எதிர்ப்புக்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும், டிசம்பர் 31 ஆம் திகதி சாரதாவின் வீட்டுக்கு சென்று அடித்து உதைத்து வன்முறைகள் நடத்தப்பட்டதால், சாரதா தனது தாய் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

8 வருடங்களுக்கு பிறகு 1954 ஆம் ஆண்டு சிறையில் இருந்து நம்பியார் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தனது மனைவி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்பதை அறிந்துகொண்டார்.

இதனால், மனைவியை தொந்தரவு செய்ய விரும்பாமல் அவர் தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.

மீண்டும் சந்திப்பு
Santha Kavumbayi என்ற எழுத்தாளர் நாராயண நம்பியாரின் வாழ்க்கையை ஒரு நாவலாக எழுதி வெளியிட்டார். இதன் மூலம் சாரதாவின் மகன் பார்கவன் எழுத்தாளர் மூலம் நாராயணனை சந்தித்து இரண்டு குடும்பங்கள் குறித்து பேசியுள்ளார்.

பிரிந்து சென்ற இவர்கள் மீண்டும் ஒருமுறை சந்தித்துக்கொள்ள வேண்டும் என பார்கவ் விரும்பியுள்ளார். அதன்பொருட்டு கேரளாவில் உள்ள தனது வீட்டில் சந்திப்பிற்கான ஏற்பாட்டினை செய்தார்.

வீட்டுக்கு வந்த நம்பியாருக்கு பல்வேறு வகையான கேரள உணவுகளை சமைத்து சாரதா குடும்பத்தார் பரிமாறியுள்ளனர். தனது மனைவியை பார்த்தவுடன் அவரது தலையில் கை வைத்துள்ளார் நம்பியார். தனது கணவரை சில நொடிகள் பார்த்துவிட்டு உடனே தலைகுனிந்துவிட்டார் சாரதா.

இரு குடும்ப உறுப்பினர்களும் சிறிது நேரம் உரையாடினர். பின்னர் நம்பியார் புறப்பட்டு செல்கையில், தனது மனைவியிடம் நான் செல்கிறேன் என கூறியுள்ளார், அதற்கு பதில் எதுவும் தெரிவிக்காத சாரதா தனது தலையை குனிந்தபடி அமர்ந்திருந்துள்ளார்.

தனது கணவரை முதலில் பார்த்தபோது 13 வயது பெண்போல சாரதா சிறிதுநேரம் வெட்கப்பட்டுள்ளார், அதே நேரம் நம்பியாரும் 18 வயதுக்கு திரும்பியதை போல உணர்ந்துள்ளார்.

இறந்துபோன இந்தியர் : நாடு கடந்து வந்து சம்பள நிலுவையை கொடுத்து வியக்க வைத்த சவுதி தொழிலதிபர்!!

சவுதி அரேபியாவில் தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளியின் சம்பள பாக்கியை வீடு தேடி கொடுத்து உதவியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள ஹெயில் என்ற சிறிய நகரத்தில் மிஸ்பர் அல் சமாரியின் தந்தை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். வயது முதிர்வு காரணமாக மகனிடம் நிறுவனத்தை நடத்தும் பொறுப்பைக் கொடுத்தார்.

தந்தை நிறுவனத்தை நடத்திவந்தபோது, இந்திய இளைஞர் ஒருவர் அவரிடம் பணியாற்றியுள்ளார்.

இந்திய இளைஞர் அவசரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டி நிலை ஏற்பட்டது. அப்போது, மிஸ்பர் அல் சமாரியின் தந்தை 6,000 ரியால் (ரூ.1,12,000) இந்திய இளைஞருக்குச் சம்பள பாக்கி வைத்திருந்தார்.

நிறுவனத்தின் நிதிநிலை காரணமாக அந்த இளைஞர் இந்தியா திரும்பியபோது மிஸ்பர் அல் சமாரியின் தந்தையால் சம்பள பாக்கியை உடனடியாக வழங்க முடியவில்லை.

உன்னுடைய பணம் எந்த நேரத்திலும் உன்னை வந்து சேரும், நீ கவலைப்படாமல் செல் சென்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளார்.

இந்தியா திரும்பிய இளைஞர் துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்தத் தகவல் சவுதி தொழிலதிபருக்குத் தெரியவந்ததும் மனமுடைந்து போனார். உடனடியாக, தன் மகனை அழைத்து இளைஞருக்கு தான் வழங்க வேண்டிய சம்பளப் பாக்கியை எப்படியாவது கொடுத்து விடுமாறு கூறினார்.

தொடர்ந்து, மகன் மிஸ்பர் அல் சமாரி சவுதி தூதரகம் வழியாக இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு இறந்துபோன இளைஞரின் விலாசத்தைக் கண்டுபிடித்தார். பின்னர், 6000 ரியாலுக்கான செக்குடன் இந்தியா வந்த அல் சமாரி இளைஞரின் குடும்பத்தினரிடம் செக்கை வழங்கினார்.

மகன் தன் கடைசி ஆசையை நிறைவேற்றியதைக் காண மிஸ்பர் அல் சமாரியின் தந்தை உயிருடன் இல்லை. மிஸ்பர் அல் சமாரி சவுதி திரும்புவதற்கு முன் வயது முதிர்வு காரணமாக அவரின் தந்தையும் இறந்தும் போனார்.

நாயாக மாறிய அமலாபால்!!

 

அமலாபால்

அமலாபால் தனது நாயுடன் செய்யும் சேட்டைகளை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த அமலாபால் தமிழில் மைனா, தெய்வத்திருமகள். வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014ல் இயக்குநர் விஜய்யைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், திருமண பந்தம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. 2017ல் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்ற இருவரும், தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

அதன்பிறகு தற்பொழுது நிறைய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் அமலா பால். அவ்வப்போது இணையத்தில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்புவார். சமீபத்தில் கூட சிகிரெட் பிடிப்பதுபோல புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

இந்நிலையில் அமலா பால் தனது டிவிட்டர் பக்கத்தில், தான் வளர்க்கும் நாயுடன் விளையாடுவதை போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார். அதில் நாய் தனது நாக்கை வெளியே நீட்டி இருப்பது போல அமலாபாலும் அதேவாறு செய்துள்ளார். எனது பொழுதை நாயுடன் சந்தோஷமாக செலவிட்டு வருகிறேன் என அவர் பதுவிட்டுள்ளார். அமலாபால் வளர்ப்புப் பிராணிகள் பிரியை என்பது குறிப்பிடத்தக்கது.

கார் விபத்தில் சிக்கிய தாய் : கொலை செய்யப்பட்ட இரட்டை குழந்தைகள் : அதிர்ச்சியடைந்த பொலிஸார்!!

 

பிரித்தானியாவில் வேண்டுமென்றே கார் விபத்தில் சிக்கி காயமடைந்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் Whitstable பகுதியில் நேற்று லொறியின் பின்பக்கம் கார் ஒன்று வேகமாக மோதி விபத்தில் சிக்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, சமந்தா ஃபோர்ட் என்ற 37 வயதான வேண்டுமென்றே ஏற்படுத்தியிருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பொலிஸார், சமந்தா கொடுத்த வீட்டு முகவரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு இரண்டு குழந்தைகள் சுயநினைவிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அவர்களுடைய தாய் சமந்தாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய சமந்தாவின் பாட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் என்னுடைய பேத்தி கணவரை விட்டு பிரிந்தாள். இருவருக்குள்ளும் நடந்தவை குறித்து எனக்கு தெரியாது. ஆனால் அந்த குழந்தைகள் இன்னும் 2 வயதை கூட கடக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை : தலையில் கல்லைப் போட்டு கொன்ற கொடூரம்!!

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை கொலை செய்த மகனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை கீழ் ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரராமன் என்பவரது மகன் விக்னேஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண்ணின் தந்தைக்கு விக்னேஷின் காதல் விவகாரம் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து விக்னேஷின் தந்தை சுந்தரராமனிடம் இதுகுறித்து கூறி மகனை கண்டித்து வைக்கும்படி பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சுந்தரராமன் மகனை விக்னேஷை கண்டித்ததுடன் குறித்த பெண்ணை சந்திக்கவோ, பேசவோ கூடாது என்று எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் தந்தையின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். சுந்தரராமனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், சுந்தரராமனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு இரவு நேர விடுதியில் நடந்தது என்ன? உயிரிழந்தவர் யார்?

கொழும்பு, கொம்பனித்தெருவில் கட்டடம் ஒன்றில் மின்சார லிப்ட் உடைந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த கட்டடத்தின் 9ஆவது மாடியில் உள்ள இரவு நேர விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 1.50 மணியளவில், 9 மாடியில் இருந்து இந்த லிப்ட் கீழ் நோக்கி வேகமாக விழுந்துள்ளது. இதில் பயணித்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞர் CR&FC அணியில் விளையாடும் கோகில சம்மன்தபெரும என்ற ரகர் வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் பத்தரமுல்லை, தலங்கம வடக்கு பிரதேசத்தை சேர்ந்தவராவார். உயிரிழந்தவர் பிரபலமான ரகர் விளையாட்டு வீரர் என கூறப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.