காலி நகரில் யுவதி ஒருவரை கடத்திச் செல்ல முயற்சித்த போது, யுவதியை காப்பாற்ற முன்வந்த இளைஞர் கத்திக் குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பகல் நடைபெற்றுள்ளது.
கத்திக் குத்துக்கு இலக்கான இளைஞனின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
யுவதி காலி நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தொழில் புரிந்து வருகிறார். இன்று முற்பகல் வர்த்தக நிலையத்திற்கு வந்த நேரத்தில் முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் யுவதியை கடத்திச் செல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது வர்த்தக நிலையத்தில் தொழில் புரியும் இளைஞன், யுவதியை காப்பற்ற முயற்சித்த போது, முச்சக்கர வண்டியில் வந்த நபர், இளைஞனை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
காதல் விவகாரம் காரணமாக இந்த கடத்தல் முயற்சி நடந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை தாம் கைதுசெய்துள்ளதாகவும் காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த சந்தன ராஜபக்ச, தனது காதலியான Tatyanaவை எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்காலை, ரன்ன ஹோட்டலில் திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது.
வீரக்கெட்டிய கால்டன் இல்லத்திற்கு வரும் விருந்தினர்களை ஹோட்டலுக்கு அழைத்து செல்ல விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருமண அழைப்பிதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித்த மற்றும் Tatyana ஆகியோர் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரோஹித்தவின் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததுடன், Christmas wedding என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கையில் சுனாமி பேரலை அனர்த்தத்தின் இன மத பேதமின்றி மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்ட 14 ஆம் ஆண்டு நினைவு தினம் இலங்கை ரீதியில் நேற்று முன்தினம் (26.12) அன்று அனுஷ்டிக்கப்பட்ட வேளையில் அன்றையதினம் மாலை 6 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான ஊழியர்கள் ஒன்றுகூடல் நிகழ்வில் வானவேடிக்கை மற்றும் பட்டாசு வெடித்து கொண்டாடிய சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வவுனியா மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் சுனாமி பேரலை நினைவு தினமானது ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்ற கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளனர்.
கடந்த வாரத்தில் வடக்கில் கடும் மழையுடன் கூடிய வெள்ளத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து நலன்புரி நிலையங்களில் அகதிகளாக அவலப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வவுனியா மாவட்ட செயலகமானது இவ்வாறான ஒரு தினத்தில் வானவேடிக்கையுடன் ஊழியர்களின் ஒன்றுகூடல் நிகழ்வை நடத்தியிருந்தமை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகமானது எதிர்வரும் காலங்களிலாவது அனர்த்த நினைவு தினங்களில் கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யாமல் வேறு தினங்களில் நிகழ்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். அத்துடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் அன்றையதினம் (26.12) காலை 9.15 மணிக்கு சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1946ம் ஆண்டு முதல் Gallup அமெரிக்கர்களின் மனம் கவர்ந்தோர் குறித்த சர்வே ஒன்றை நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
1,025 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் சர்வதேச அளவில் தங்கள் மனம் கவர்ந்தோர் குறித்த கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் கடந்த 17 ஆண்டுகளாக அமெரிக்கர்களின் மனம் கவர்ந்த பெண்கள் பட்டியலில் முதலிடத்திலேயே நீடித்து வந்தவர் ஹிலாரி கிளிண்டன்.
ஆனால், இந்தாண்டு ஹிலாரியைப் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை மிச்சேல் ஒபாமா கைப்பற்றியுள்ளார்.
இரண்டாம் இடத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே உள்ளார். மூன்றாம் இடத்தில் ஹிலாரி உள்ளார்.
இதேபோல், அமெரிக்கர்களின் மனம் கவர்ந்த ஆண்கள் பட்டியலில் தொடர்ந்து 11 ஆண்டுகளாக முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நீடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளார். மூன்றாம் இடத்தில் ஜார்ஜ் W புஷ் உள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை அறிவித்தமைக்காக சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான குழப்பம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை கடந்த 18ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன சபையில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கியமை சட்டத்துக்கு முரணானது என்றும், பெரும்பான்மைவாதச் சிந்தனையின் வெளிப்பாடு என்றும் கடுமையாகச் சாடியிருந்தார்.
இந்தநிலையில், கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை, சபாநாயகர் கரு ஜயசூரியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு விருப்பம் வெளியிட்டிருந்தார். அதற்கு அமைவாக, சபாநாயகரின் அறையில் சந்திப்பு நடைபெற்றது.
“மகிந்த ராஜபக்சவை அவசரப்பட்டு எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தமை தவறு. அதற்காக மன்னிப்புக் கோருகின்றேன். உங்களுடன் (கூட்டமைப்புடன்) கலந்துரையாடாமல் அறிவித்தமைக்காக மன்னிப்புக் கோருகின்றேன்.
நான் இந்தப் பதவியிலிருந்து விலகவேண்டுமானால் அதற்கும் தயாராக இருக்கின்றேன்” என்று சபாநாயகர் இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள், நாடாளுமன்றச் சம்பிரதாயங்களுக்கு அமைவாகச் செயற்படுமாறு சபாநாயகரிடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததுள்ளதுடன், இன்றுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு இந்த தகவலினை வெளியிட்டுள்ளது.
கனேடிய பெண்ணொருவரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் 18 இலட்சத்திற்கும் அதிக பணத்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் இணைய ஊடகமொன்றின் பிரபல அறிவிப்பாளரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கனேடிய பெண்ணுடனான உறவை துண்டித்த பின்னர் பணத்தை திரும்பித் தர நிராகரித்தமையினால் அவர் நேற்று இங்கிரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காதலியின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படமாக தயாரித்து இணையத்தில் பதிவேற்றவுள்ளதாக குறித்த அறிவிப்பாளர், அச்சுறுத்தியதாக தனது முறைப்பாட்டில் பெண் குறிப்பிட்டுள்ளார்.
கனேடிய கணக்காளருக்கும் அறிவிப்பாளருக்கும் இடையில் முகப்புத்தகம் ஊடாக கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
30 வயதான கணக்காளர் முதலாவது திருமணத்தில் விவாகரத்து பெற்ற ஒரு பிள்ளையின் தாயார் எனவும், அறிவிப்பாளர் 35 வயதான திருமணமானவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஒரு வயதும் பத்து மாதங்களுமான குழந்தைக்கு இரண்டு மாதங்களாக சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட சம்பவமொன்று மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ- முத்துகண்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயின் சட்டவிரோத கணவனால் இந்த துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் குடித்துக்கொண்டிருக்கும்போது குழந்தையை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தியுள்ளார்.
குழந்தையின் பின்புறம், கால்கள் மற்றும் இரகசியப் பகுதிகள், முகம் போன்ற இடங்களில் சிகரெட்டால் சுட்ட காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் உடலில் 100 க்கும் மேற்பட்ட சூட்டுக் காயங்கள் காணப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் அந்த இடத்தை விட்டு தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், குழந்தையின் தாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சியம்பலாண்டுவ ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் மனிதாபிமான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
மைதானம் ஒன்றில் நீண்டகாலமாக பணி செய்யும் வயோதிப பெண்ணொருவருக்கு சிகிச்சை ஒன்றுக்காக உதவி செய்ய சங்கக்கார முன்வந்துள்ளார்.
கொழும்பு NCC மைதானத்தின் புற் தரையை பராமரிக்கும் 70 வயதான மாக்ரட் என்ற பெண்ணின் கண்ணில் ஏற்பட்டுள்ள கோளாறினை சரி செய்ய சங்கக்கார உதவி முன்வந்துள்ளார்.
தான் கண்ணில் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என குமார் சங்கக்காரவிடம் கூறியதாகவும், அதற்கு தேவையான உதவிகளை தான் செய்வதாகவும் குமார் சங்கக்கார குறிப்பிட்டதாக மாக்ரட் குறிப்பிட்டுள்ளார்.
சங்கக்காரவை எனக்கு நன்கு தெரியும். நான் NCCயில் இருந்து விலகியதில் இருந்து பல வருடங்களின் பின்னர் அவரை சந்தேத்தேன். அவர் எனக்கு உதவுவதாக கூறினார். நான் அவருக்காக விகாரைகளில் பூஜைகள் நடத்தியுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நாலந்த, கண்டி தூய திருத்துவ கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நாலந்தா மைதானத்தில் இன்று ஆரம்பமானது.
இதன்போது சங்கக்கார மைதானத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணுடன் சங்கக்கார கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
NCC மைதானத்தில் 13 ஆண்டுகளாக மாக்ரட் பணியாற்றியுள்ளார். பல வருடங்களின் பின்னர் சந்தித்த போதிலும் சங்கக்காரவின் அன்பான பேச்சு மற்றும் அவரது உதவி செய்யும் குணத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டியுள்ளன.
ஒன்றரை வயது குழந்தையை இரண்டு மாதங்களாக சிகரட்டால் சூடு வைத்து தீகாயங்களை ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சி சம்பவம் சியம்பலாண்டுவ – முதுகண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் தாயின் கள்ளக்காதலன் மதுபோதையில் இவ்வாறு குழந்தையின் மீது சிகரட்டால் சூடு வைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குழந்தையின் முதுகு பகுதி, கால்கள் மற்றும் மர்ம பகுதியுடன் முகத்திலும் தீ காயங்கள் காணப்படுகின்றன.
இவ்வாறு குழந்தையின் உடல் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தீ காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குழந்தை சிகிச்சைகளுக்காக சியம்பலாண்டுவ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானியாவில் வினோத நோயால் மூன்று குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் நான்காம் குழந்தையையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அடிலீ – கிரைக் தம்பதிகள் மிகவும் சோகமான மற்றும் மன உளைச்சலான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கு காரணம் உள்ளது, இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். நால்வருக்குமே Leigh’s syndrome என்னும் மூளையை தாக்கும் மரபணு நோய் இருந்துள்ளது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் வயதை விட மூளையின் செயல்பாடு மிக குறைவானதாகவே இருக்கும். இந்த நோய்க்கு இன்னும் மருந்துகள் ஏதும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
இப்படி தான் அடீலி – கிரைக் தம்பதியின் முதல் குழந்தை ஏஞ்சல் கடந்த 2011-ல் இறந்தது. இதன்பின்னர் இரண்டாவது மகன் ஏஜே கடந்த 2014ல் உயிரிழந்தான். மூன்று மாதம் கழித்து மூன்றாவது மகள் ஜாஸ்மின் தனது 9வயது வயதில் உயிரிழந்தாள். தங்களது மூன்று குழந்தைகளையும் அடீலியும் – கிரைக்கும் கனத்த மனதோடு புதைத்தனர்.
இந்நிலையில் தம்பதியின் நான்காவது மகள் ஜேட் லேக் (8)க்கும் இதே நோய் வந்துள்ளது. அவரையும் காப்பாற்ற முடியாது என்பதால் இது தான் ஜேட் கொண்டாடும் கடைசி கிறிஸ்துமஸ் என்ற சோகமான மனநிலையில் அவர் பெற்றோர் உள்ளனர். இது குறித்து கிரைக் கூறுகையில், நாளை என்ன நடக்கும் என்பதை நம்மால் கூறமுடியாது. வாழ்க்கை மிகவும் சிறியது. என் மகள் ஜேட்டின் உடல் நிலை மிகவும் பலவீனமாகி வருகிறது.
பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை வருவதால் கருக்கலைப்பு செய்யலாமே என என் மனைவியுடம் சிலர் கூறுகிறார்கள். ஆனால் அதில் எங்களுக்கு உடன்பாடில்லை, நடப்பது நடக்கட்டும் என சோகத்துடன் கூறியுள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது சேதமாக்கப்பட்ட பொதுமக்களின் அசையும் சொத்துக்கள் தொடர்பான புகைப்படங்கள் சில இன்று வெளியாகியுள்ளது.
தனிநபர் ஒருவரின் புகைப்படக்கருவி ஒன்று மறுசீரமைக்கப்பட்ட போதே குறித்த புகைப்படங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009 இறுதி யுத்தத்தின்போது இலங்கை முப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குமிடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உக்கிரச்சமர் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்காண பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டது. அத்துடன் பொதுமக்களின் அசையும் சொத்து , அசையா சொத்துக்கள் என அனைத்தும் அழித்து நாசமாக்கப்பட்டதுடன் பொதுமக்கள் நிர்க்கதியான நிலையில் அகதியாக்கப்பட்டனர்.
இவ்வாறு யுத்தத்தினால் அழிவடைந்த பொதுமக்களின் பெறுமதியான அசையும் சொத்துக்கள் தொடர்பான புகைப்படங்கள் காலம் கடந்த நிலையிலும் இன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடத்திற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியிடப்படமாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதியை விரைவில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் குறித்த பெறுபேறுகள் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும் பெரும்பாலும் இந்த மாத இறுதிக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவை பிரதமராக்குவது தொடர்பில் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பனவற்றுக்கு மகிந்த மீண்டும் பிரதமராகலாம் என்ற அச்சம் காணப்படுகிறது.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் பிரேரணையினை எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நிலைமை காணப்படுகிறது.
இது தொடர்பில் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றோம். எனவே சரியான நேரத்தில் நாம் மகிந்தவை பிரதமராக்கும் பிரேரணையை முன்வைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞனின் மர்ம உறுப்பை இளம் பெண் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் Dombivali பகுதிக்கு அருகேவே இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், பெயர் தெரிவிக்கப்படாத பெண்ணை வாலிபர் ஒருவர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் அந்த பெண் அவரை கண்டித்துள்ளார். இருப்பினும் அந்த நபர் இவரை கிண்டல் செய்வது, தொந்தரவு செய்வது போன்று இருந்துள்ளார். இனி இப்படியே விட்டால், இது சரிபட்டவராது என்று அந்த பெண் தன் இரண்டு நண்பர்களின் உதவியை நாடியுள்ளார்.
அதன் பின் அந்த நபரை Dombivali பகுதி அருகே இருக்கும் இரயில்வே பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இரண்டு நண்பர்கள் மற்றும் இவர், அந்த நபரை மரத்திக் கட்டி வைத்து அடித்து அதன் பின் அவருடைய மர்ம உறுப்பை வெட்டியுள்ளனர்.
இதனால் அந்த நபர் துடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவர விரைந்து வந்த பொலிசார், அவரை மருத்துவமனையில் அனுமதித்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
இது குறித்து முதல் கட்ட விசாரணையில் கேட்ட போது, நடந்தவற்றை கூறி, இனி இது போன்ற செய்யக் கூடாது, பாடம் கற்பிப்பதற்காகவே இப்படி செய்தேன் என்று அந்த பெண் கூறியுள்ளார். பாதிப்புக்குள்ளான நபருக்கு அதிக அளவில் இரத்தம் வெளியேறியுள்ளதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.