புது மனைவியோடு நீ சந்தோசமா இருடா : தாய் சொன்ன வார்த்தையால் மகன் எடுத்த முடிவு : பரிதாபமாக இறந்த காதலி!!

 

பரிதாபமாக இறந்த காதலி

தமிழகத்தில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தற்கொலை செய்து கொண்ட கணவனின் மறைவை தாங்க முடியாமல் காதல் மனைவி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அடுத்திருக்கும் வெண்ண முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகன் பார்த்திபன். 24 வயதான இவர், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கிரேன் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார்.

இவரும், அதேபகுதியைச் சேர்ந்த சங்கிலிமுத்து என்பவரின் மகள் அனுப்பிரியாவை கடந்த 2 வருடங்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் இரண்டு பேரின் வீட்டிற்கும் தெரியவந்ததால், இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அனுப்பிரியவை தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே உள்ள வேம்படியில் இருக்கும் அவரின் அக்கா வீட்டில் தங்க வைத்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 18-ஆம் திகதி பார்த்திபன் வழக்கம்போல் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வேம்படியில் தங்கியிருந்த அனுப்பிரியாவை சந்திக்கச் சென்றதாகவும், அப்போது அனுப்பிரியாவையும்- பார்த்திபனையும் கையும் களவுமாகப் பிடித்துவிட்ட அனுப்பிரியாவின் குடும்பத்தினர் இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்து அப்பகுதியில் உள்ள கோவிலில் நடத்தி வைத்தனர்.

மகனுக்கு திருமணம் என்ற தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த பார்த்திபனின் தாயார் கவிதா, தன் உறவினர்களுடன் அங்கு சென்ற போது, பார்த்திபனும், அனுப்பிரியாவும் திருமண கோலத்தில் இருந்துள்ளனர். இருவருக்கும் திருமணம் நடைபெற்றாலும் இருவரையும் ஏற்க மறுத்த அவரது உறவினர்கள், அங்கிருந்து வெளியேறினர்.

இந்த நிலையில், பார்த்திபனின் தாயார் அழைத்தபோது அனுப்பிரியாவின் பெற்றோர் அனுப்பி வைக்க மறுத்ததோடு, நாளை அனுப்பி வைக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் மறுநாள் காலை பார்த்திபனுக்கு போன் செய்த அவரின் தாயார் கவிதா, தான் விஷம் குடித்துவிட்டதாகவும், புது மனைவியோடு சந்தோஷமாக இரு என்று கூறி போனை கட் செய்துள்ளார்.

இதை கேட்டு மனமுடைந்த பார்த்திபன், தன்னால் தாய் விஷம் குடித்துவிட்டதை நினைத்து மனமுடைந்துள்ளார் அதன் பின் திருமணம் நடைபெற்ற கோவில் அருகே பார்த்திபன் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியுள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பூச்சிகொல்லி மருந்தை குடித்திருப்பதாக கூறியுள்ளார். அதன் பின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பார்த்திபன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், தனது திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் மன உளைச்சல் ஏற்பட்டு பார்த்திபன், தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் விஷம் குடித்துவிட்டதாக கூறிய பார்த்திபனின் தாயார் கவிதா, மகன் பார்த்திபன் சாவில் மர்மம் உள்ளதாகவும் தன் மகனைக் கடத்தி கட்டாயத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திக் கொன்றுவிட்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில் காதல் கணவர் பார்த்திபனுடன் திருமணம் நடந்தாலும், ஒருநாள்கூட வாழாத நிலையில் பார்த்திபன் தற்கொலை செய்துகொண்டதை எண்ணி, மனவேதனையில் இருந்த அவரின் மனைவி அனுப்பிரியா தனது சொந்த ஊரான வெண்ண முத்துப்பட்டிக்கு அழைத்து வரப்பட்டார்.

நேற்று மதியம் வீட்டில் இருந்த அனுப்பிரியா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஓட்டு வீட்டின் உத்தரத்தில் சேலையால் தூக்கு மாட்டித் தொங்கிய நிலையில், கையில் கணவர் பார்த்திபனின் புகைப்படத்தை பிடித்தபடி காணப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபத்தான நிலையில் மஹிந்தவின் மகன் வைத்தியசாலையில் அனுமதி!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் ரகர் விளையாட்டின் போது படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டின் போது இடம்பெற்ற விபத்தில் யோஷிதவின் முகம் மற்றும் தலைப்பகுயில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய அவரது முகம் இரும்பு தகடுகள் பயன்படுத்தி மீளவும் சரி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மீளவும் யோஷித ராஜபக்ச ரகர் விளையாட முடியாதென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கிய பின்னரே சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

மர்ம உறுப்பில் மிளகாய் தூள் தூவி சித்திரவதை : சிறுமிகள் காப்பகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் அங்குள்ள ஊழியர்களாலையே பலர் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பகீர் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் டெல்லி பெண்கள் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

கடந்த வியாழனன்று டெல்லியில் அமைந்துள்ள குறிப்பிட்ட சிறுமிகள் காப்பகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் பெண்கள் ஆணையம் உறுப்பினர்கள்.

இதில் அங்குள்ள 6 முதல் 15 வயது வரையான சிறுமிகளுடன் மேற்கொண்ட விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த காப்பகத்தின் கட்டுப்பாடுகளை மீறும் சிறார்களுக்கு கடுமையான தண்டனைகளை காப்பக ஊழியர்கள் வழங்குவதாக தெரியவந்துள்ளது. இந்த தண்டனைகளுக்கு பயந்து பெரும்பாலான சிறுமிகள் அடிமை வாழ்க்கை வாழ்வதாகவும் தெரியவந்துள்ளது.

இளம்பெண்களை துணி துவைப்பதற்கும், அறைகளை சுத்தம் செய்வதற்கும், கழிவறை சுத்தம் செய்வதற்கும் கட்டாயப்படுத்தியுள்ளனர். போதிய ஊழியர்கள் அந்த காப்பகத்தில் இல்லாததே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

22 சிறுமிகளுக்கும் மற்றும் ஊழியர்களுக்குமாக ஒரே ஒரு சமையல்காரரே பணியில் இருந்துள்ளார். சின்னக் குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படுவதாக சிறுமிகள் தெரிவித்துள்ளனர். கோடை மற்றும் குளிர் கால விடுமுறைகளுக்கும் அவர்களை உறவினர்களிடம் அனுப்ப அந்த காப்பக நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வந்துள்ளது.

கொடுமையின் உச்சமாக, பல சிறுமிகளும் தண்டனையாக மர்ம உறுப்பில் மிளகாய் தூள் பயன்படுத்தப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் வுரிவான விசாரணைக்கு டெல்லி பெண்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அவளுக்காக எத்தனை வருடமாக இருந்தாலும் காத்திருப்பேன் : தாயை கொன்ற பெண்ணின் காதலன் வாக்குமூலம்!!

 

தாயை கொன்ற பெண்ணின் காதலன் வாக்குமூலம்

திருவள்ளூர் மாவட்டத்தில் காதலனுக்காக தாயை கொலை செய்த மகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவளுக்காக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காத்திருப்பேன் என காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருமுருகநாதன் – பானுமதி தம்பதியனிருக்கு சாமுண்டீஸ்வரி, தேவிப்பிரியா என இரு மகள்கள். இரண்டாவது மகளான தேவிப்பிரியா, இந்துக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கல்லூரி விழாவுக்குச் சென்றபோது அங்கு சித்தூர் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைச் சந்தித்திருக்கிறார். அப்போது, சுரேஷின் செல்போன் எண்ணைப் பெற்றுக்கொண்ட தேவிப்பிரியா, பலமுறை அவரிடம் பேசி வந்தார்.

நாளடைவில் இது காதல் மலர்ந்தது. ஒரு கட்டத்தில், தேவிப்பிரியா, நான் ஆந்திராவை சேர்ந்த சுரேஷ் என்ற இன்ஜினியரிங் மாணவரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அம்மாவிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

தனது மகளின் விருப்பத்தை ஒத்துக் கொண்டுள்ளார் பானுமதி. சில நாள்கள் கழித்து சுரேஷ் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அப்பா அம்மா என்ன வேலை செய்கிறார்கள் எந்த சமூகம் என்று கேட்டிருக்கிறார். அப்போது, சுரேஷ் என்ன சமூகம் என்பதை தெரிந்து கொண்ட பானுமதி, திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த தேவிப்பிரியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி காதலனுடன் வசித்தார்.

நம்முடைய காதலுக்கு எனது அம்மா எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று தேவிப்பிரியா சொல்ல, உனது அம்மாவை கொலை செய்துவிடு என்று சுரேஷ் ஐடியா கொடுத்துள்ளார். இதையடுத்து, தனது நண்பர் விவேக் மற்றும் விக்னேஷ், அஜித்குமார் ஆகியோருடன் சேர்ந்த தனது அம்மாவை கொலைசெய்துள்ளார் தேவிப்பிரியா.

தற்போது, தேவிப்பிரியா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தேவிப்பிரியாவின் காதலன் சுரேஷயை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், “எத்தனை வருடமாக இருந்தாலும் தேவிப்பிரியாவுக்காக காத்திருப்பேன். நான் அவளை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்” என்று கூறியிருந்தார். பானுமதி கொலை வழக்கில் சுரேஷ் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் விவசாயியின் மகன் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை!!

 

மாணவர்களின் விருப்பத்தின்படி படிக்கவிட்டால் சாதிக்க முடியும் : வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் து.யுவதீஸ்வரன்..

மாணவர்களின் விருப்பத்தின்படி அவர்கள் விரும்பும் பாடத்தை படிக்க விட்டால் நிச்சயமாக சாதிக்க முடியும் என வவுனியா மாவட்டத்தில் வணிக்கப் பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் துரைராஜ் யுவதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் 3A சித்திகளைப் பெற்று வணிகத் துறையில் மாவட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 143 ஆவது இடத்தையும் பெற்றமை குறித்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கிராமம் ஓரு பின்தங்கிய கிராமம். எமது குடும்பமும் ஓர் விவசாய குடும்பம். இந்த நிலையில் எனக்கு தரம் 10 இல் இருந்தே வர்த்தகப் பாடம் பிடிக்கும். எனது சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேற்றைப் பார்த்த பலரும் கணிதம் அல்லது விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்குமாறு வற்புறுத்தினர். ஆனாலும் நான் எனது விருப்பப்படி வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று இன்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளேன்.

எம்மைப் போன்ற பின்தங்கிய கிராமத்தில் இருந்து சாதிக்க முடியும் என்கின்ற போது வசதி வாய்ப்புக்கள் உள்ள இடங்களில் இருப்பவர்கள் இன்னும் சாதிக்க முடியும். எல்லோரும் கணிதப்பிரிவு, விஞ்ஞானப் பிரிவு என்று செல்லாது வர்த்தகப்பிரிவிலும் கல்வி கற்று இன்னும் சிறந்த சாதனைகளை பெறவேண்டும்.

நான் இந்த நிலையை அடைய வழிகாட்டிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் எனத் தெரிவித்தார். இவர் மென்மேலும் சாதனைகள் படைக்க வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெ.பூஜிதா கணிதப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம் பெற்று சாதனை!!

 

ஜெ.பூஜிதா

நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கணிதப் பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெககுமாரன் பூஜிதா 3A சித்திகளைப்பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 14வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சிறப்பான சித்திகளைப்பெற்று சாதனை படைக்க தனக்கு உதவியாக இருந்த குடும்பத்தினருக்கும் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக இம்மாணவி வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வவுனியா மண்ணுக்கும்பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.

மேலும் பரீட்சை முடிவுகள் தொடர்பான முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் செய்திகளுடன் இணைந்திருங்கள்.

வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவி ச.டிலாஜினி கலைப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம் பெற்று சாதனை!!

 

சண்முகேஸ்வரராஜா டிலாஜினி

நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கலைப் பிரிவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவி சண்முகேஸ்வரராஜா டிலாஜினி 3A சித்திகளைப்பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 35வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

3A சித்திகளையும் மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பெறவேண்டும் என்ற இலக்குடன் கல்வி கற்றதாகவும் அதேபோன்று சாதித்துக் காட்டியுள்ளதாகவும், தனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் எதிர்காலத்தில் சட்டம் படித்து சட்டத்தரணியாக வருவதே தனது இலட்சியம் என்றும் இம்மாணவி மகிழ்ச்சியுடன் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.

மேலும் பரீட்சை முடிவுகள் தொடர்பான முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் செய்திகளுடன் இணைந்திருங்கள்.

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவி படைத்த சாதனை : குவியும் பாராட்டுக்கள்!!

 

விதுட்ஷா வேலும்மயிலும்

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு முள்ளியவளையில் வித்தியானந்தா கல்லூரியின் மாணவி விதுட்ஷா வேலும்மயிலும் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் உயிரியல் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 1ம் இடத்தை பெற்றுள்ளார். இதேவேளை அகில இலங்கை ரீதியில் 72ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

மேலும் வித்தியானந்தா கல்லூரி மாணவன் தர்மகுலசிங்கம் அபிசாந் உயிரியல் பிரிவில் 2AB பெறுபேற்றினைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் மென்மேலும் சாதனை படைக்க வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

ஹாட்லிக் கல்லூரி மாணவன் படைத்த சாதனை : குவியும் வாழ்த்துக்கள்!!

 

ஹாட்லிக் கல்லூரி மாணவன்

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகியுள்ளன. இந்நிலையில், யாழ். வடமராட்சியில் உள்ள ஹாட்லிக் கல்லூரியின் மாணவன் மிதுர்சன் முதல்நிலை புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

உயிரியல் பிரிவில் 3A சித்தி பெற்று ஹாட்லிக் கல்லூரியில் 1ஆம் இடத்தையும், யாழ். மாவட்டத்தில் 2ஆம் இடத்தையும் பெற்றுள்ளார். இதேவேளை, அகில இலங்கையில் 77ஆம் இடத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கும் மிதுர்சனிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும், http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் மூலம் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக 3A சித்திகளை பெற்ற மாணவன் : வறுமையிலும் சாதனை!!

 

பரராஜசிங்கம் கீர்த்தீசன் 3A

 

நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் மாணவன் பரராஜசிங்கம் கீர்த்தீசன் என்ற மாணவன் கலைப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 1ம் இடத்தைப்பெற்று ஓமந்தை மத்திய கல்லூரி வரலாற்றில் முதல் தடவை 3A சித்திகளைப் பெற்ற மாணவன் என்ற பெருமையையும் சாதனையும் படைத்துள்ளார்.

குறித்த மாணவனின் தந்தை ஓர் விவசாயி என்பதுடன் அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றில் மாணவனின் தந்தை உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாயின் உழைப்பில் கல்வியை தொடர்ந்த குறித்த மாணவன் வறுமையிலும் தனது பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமைசேர்த்த இம் மாணவனுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.

மேலும் பரீட்சை முடிவுகள் தொடர்பான முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் செய்திகளுடன் இணைந்திருங்கள்.

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் க.வாகீசன் பௌதீக விஞ்ஞான பிரிவில் 3A சித்தி பெற்று சாதனை!!

 

கருணாநிதி வாகிசன்

நேற்று நள்ளிரவு வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின்படி பௌதீக விஞ்ஞான (Physical Science) பிரிவில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் கருணாநிதி வாகிசன் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 4வது இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் 215வது இடத்தினையும் பெற்று வவுனியா மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமைசேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.

மேலும் பரீட்சை முடிவுகள் தொடர்பான முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் செய்திகளுடன் இணைந்திருங்கள்.

கபொத உயர்தர பரீட்சையில் தேசிய ரீதியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர் விபரம்!!

2018ம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. அற்கமைய தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

பாட விதானங்களுக்கு அமைய நாடு முழுவதும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

வர்த்தகப் பிரிவில்

1. குருணாகல் மலியதேவி வித்தியாலத்தை சேர்ந்த மாணவன் லன்ஸகார ஹேரத் முதியன்சலாகே முதலாம் இடித்தை பிடித்துள்ளார்.
2. கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவி ரணவீர ஆராச்சிலாகே உச்சித ஆயத்மா ரணவீர இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
3. கொழும்பு மியுசியஸ் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் வீரகோன் முதியன்செலாகே மலிதி ஜயரத்ன மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

கலைப் பிரிவில்

1. பாணந்துறை லைஸியம் சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவன் சேனாதி தம்யா டி அல்விஸ் முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.
2. குருணாகல் மகளிர் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி எதிரிசிங்க முதியன்சலாகே சித்மி நிமாஷி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
3. கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவி பிட்டிகல ஆராச்சிகே இஷானி உமேஷா குமாரி பிட்டிகல மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில்

1. கம்பஹா ரத்னவெலி மகளிர் பாடசாலை மாணவி அப்புஹாமிகே கலனி சன்உத ராஜபக்ச முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.
2. கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க பாடசாலை மாணவன் ரவிந்து ஷஷிகத இலங்கமகே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
3. மாத்தளை சாஹிரா கல்லூரியின் மாணவன் முகமது ரிஸ்மி முகமது ஹக்கீம் கரீன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

பௌதிக விஞ்ஞான பிரிவில்

1. கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயத்தின் மாணவி சத்துனி ஹன்சனி வசந்த விஜேகுனவர்தன முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.
2. காலி ரிச்சட் கல்லூரியின் மாணவன் சமிந்து சுரான் லியனகே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
3. கொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவன் ஹெட்டிகன்கனகே தெவிந்து ஜனித் விஜேசேகர மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

பொறியியல் தொழில்நுட்பவியல் பிரிவில்

1. கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மாணவன் மஹா பத்திரனலாகே பமுதித்த யசாஸ் பத்திரன முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.
2. கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மாணவன் சமரநாயக்க தரிந்து ஹெஷான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
3. நிக்கவரெட்டிய மஹாசேன் தேசிய பாடசாலையின் மாணவன் முதியன்சலாகே சேஷான் ரங்கன விஜேகோன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

தொழில்நுட்பவியல் பிரிவில்

1. கம்புருப்பிட்டிய நாரன்தெனிய மத்திய மகா வித்தியாலயத்தின் சந்துனி பியுமாஷா கொடிப்பிலி என்பவர் முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.
2. சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மொஹிதீன் பாவா ரிஸா மொஹமட் என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
3. ஹோமாகம மஹிந்த ராஜபக்ச வித்தியாலயத்தின் அலங்காரகே விசிந்து டிலென்க லக்மால் என்பவர் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் து.யுகதீஸ்வரன் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை!!

 

துரைராஜா யுகதீஸ்வரன்

நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி வர்த்தகப் பிரிவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் துரைராஜா யுகதீஸ்வரன் 3A சித்திகளைப்பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 143வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

                                           துரைராஜா யுகதீஸ்வரன்

மேலும் வர்த்தகப் பிரிவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் சுப்பிரமணியம் கிஷோர் 3A சித்திகளைப்பெற்று மாவட்ட ரீதியில் 4ம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

                                            சுப்பிரமணியம் கிஷோர்

மாவட்ட ரீதியில் 2ம் இடத்தை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியும் 3ம் இடத்தை வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவனும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்றுக்கொண்ட மூன்றுமுறிப்பைச் சேந்த யுகதீஸ்வரனின் தந்தை ஒரு விவசாயி என்பதுடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இம் மாணவன் முதலிடத்தைப் பிடித்து வறுமை என்பது சாதனைக்கு ஓர் தடையல்லை என்பதை நிரூபித்துள்ளதுடன் பல மாணவர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கின்றார். சென்ற வருடமும் மூன்றுமுறிப்பைச் சேர்ந்த மாணவனே வர்த்தகப் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமைசேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.

மேலும் பரீட்சை முடிவுகள் தொடர்பான முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் செய்திகளுடன் இணைந்திருங்கள்.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின : கிளிநொச்சியில் சாதித்த மாணவி!!

 

கிளிநொச்சியில் சாதித்த மாணவி

உயர் தரப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகப் பிரிவில் மாணவி கந்தையா ஜனனி முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தாண்டு நடந்த கல்விப் பொது தராதர உயர் தரப்பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் இணையத்தில் வெளியாகியுள்ளது. வெளியாகியுள்ள பெறுபேற்றின்படி கிளிநொச்சி மாவட்டம் கிளி. முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி வணிகப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல்நிலையினைப் பெற்றுள்ளார்.

இதேவேளை http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் மூலம் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும். கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 03 இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டது!!

 

உயர் தர பரீட்சை பெறுபேறுகள்

இவ்வருடத்திற்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன. http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் மூலம் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 03 இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வருடத்திற்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன. http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் மூலம் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

வவுனியாவில் மழை காரணமாக மூவாயிரத்து 588 ஏக்கர் நெற்செய்கை அழிவு!!

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழை காரணமாக மூவாயிரத்து 588.75 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளது என கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 48 ஆயிரத்து 902 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்த நிலையில் தற்போது 48 ஆயிரத்து 914 ஏக்கர் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய நீர்ப்பாசனத்திற்கு உட்பட்ட குளங்களில் ஆறாயிரத்து 529 ஏக்கர் நிலப்பரப்பிலும், மாகாண நீர்பாசன திணைக்களத்தின் கீழான நடுத்தர குளங்களின் கீழ் ஐயாயிரத்து 585 ஏக்கரும்,

எமது திணைக்களத்திற்கு உட்பட்ட 661 குளங்களில் 29 ஆயிரத்து 800 ஏக்கரும், மானாவாரி அடிப்படையில் 7 ஆயிரம் ஏக்கரும் என மொத்தமாக 47 ஆயிரத்து 914 ஏக்கர் நெற்பயிற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரைக்கும் 29 ஆயிரத்து 895 ஏக்கருக்கு விவசாயிகள் உரமானியத்தைப் பெற்றுள்ளார்கள்.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 3588.75 ஏக்கர் அழிவடைந்துள்ளது. இதில் 90 வீதமான காணிகள் வவுனியா வடக்கு பிரதேசத்தில் அழிவடைந்துள்ளது. அதேபோன்று யானையினால் 17 ஏக்கர் அழிவுக்கு உட்பட்டுள்ளது. உழுந்து பயிர்செய்கையில் 150 ஏக்கர் வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளது. இது தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.