14 வயது சிறுவனால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதி நிமிடங்கள் : வெளியான வீடியோ!!

 

கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்

பிரித்தானியாவில் 14 வயது சிறுவனால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டு பின்னர் அவளது இறந்த உடலையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அந்த இளம்பெண் கொல்லப்படுவதற்குமுன், கடைசியாக அவள் கொல்லப்பட்ட பூங்காவிற்கு செல்லும் CCTVகாட்சிகள் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளன.

தன்னைக் கொலை செய்வதற்காக அழைக்கிறான் என்று கூட தெரியாமல் அந்த சிறுவனை நம்பி பூங்காவிற்குச் சென்ற Viktorija என்ற அந்த பெண் மீண்டும் உயிருடன் வீடு திரும்பவேயில்லை. அவளது உயிரற்ற அரை நிர்வாணமான உடல் மட்டுமே பின்னர் வழிப்போக்கர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அவளது உள்ளாடையில் இரண்டு பேரின் உயிரணுக்கள் கிடைத்தது வேறு, வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் இன்னும் வழக்கு ஒரு முடிவுக்கு வரவில்லை. கைது செய்யப்பட்ட அந்த 14 வயது சிறுவன், தான் Viktorijaவுடன் பாலுறவு கொண்டது உண்மைதான் என்றும், அவளது சம்மதத்தின் பேரிலேயே இருவரும் உறவு வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தாலும், தான் அவலைக் கொல்லவில்லை என்றே கூறி வருகிறான். இந்நிலையில் வழக்கில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூங்காவில் அரை நிர்வாணமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்த Viktorija, சுத்தியல் அல்லது சுத்தியல் போன்ற ஒரு ஆயுதத்தால் குறைந்தது 21 முறை தக்கப்பட்டிருக்கிறாள். அந்த காயத்திலிருந்து இரத்தம் வெளியேறியதால் அவளது உயிர் பிரிந்திருக்கிறது. அவளை பாலியல் வன்புணர்வு செய்த அவன், அவள் இறந்த பிறகும் அவளது பிணத்துடன் உறவு கொண்டிருக்கிறான், எனவே இந்த கொலை முற்றிலும் பாலியல் நோக்கம் கொண்டது.

முகநூலில் சந்தித்துக்கொண்ட Viktorijaவும் அந்த சிறுவனும் நண்பர்களானதும், படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். பின்னர் இருவருக்குள்ளும் சற்று பிரிவு ஏற்பட்டிருக்கிறது, இதைப் பொறுக்க இயலாத அந்த சிறுவன், அவளை ஏமாற்றி, தான் லண்டன் சென்று விட இருப்பதாகவும் அதற்கும் முன் சந்திக்கலாம் என்றும் அழைத்திருக்கிறான்.

Viktorija, வீட்டில் பெற்றோர் இருப்பதாகக் கூற, அவர்களுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு திருட்டுத்தனமாக ஓடி வந்து விடும்படி கூறியிருக்கிறான் அவன். ஆகவே அவனது நோக்கம் அவளை எப்படியாவது அனுபவித்து விட வேண்டும் என்பதாகவே இருந்திருக்கிறது.

அதன்படியே அவன் அவளை துஷ்பிரயோகம் செய்ததோடு கொலையும் செய்திருக்கிறான் என்று தெரியவந்துள்ளது. என்றாலும் அவன் இன்னும் தான் கொலை செய்ததை ஒப்புக் கொள்ளாததால் இன்றும் விசாரணை தொடர இருக்கிறது.

முதலையிடம் சிக்கி போராடிய சித்தப்பாவை காப்பாற்றிய 15 வயது சிறுவன் : கிடைக்கப்போகும் கெளரவம்!!

 

15 வயது சிறுவன்

இந்தியாவில் முதலையின் பிடியிலிருந்து சித்தப்பாவை காப்பாற்றிய சிறுவன் வீரதீர விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான். ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தின் கந்திரா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சிதுமாலிக்(15).

அங்கிருக்கும் அரசுப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் இவன், கடந்த பிப்ரவரி மாதம் 20-ஆம் திகதி தனது சித்தப்பா வினோத் மாலிக் என்பவருடன் ஹன்சினா ஆற்றங்கரை பகுதியில் உள்ள வயலுக்கு சென்றான்.

அப்போது அருகில் குளத்தில் இருந்த முதலை ஒன்று வினோத் மாலிக்கை கவ்வியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் முதலையிடமிருந்து தப்பிப்பதற்கு போராடிய போது, சிது உடனடியாக அருகில் இருந்த மூங்கில் குச்சியை எடுத்து முதலையின் தலையில் பலமாக் அடித்தான்.

இதனால் முதலை வலி தாங்கமுடியாமல், மாலிக்கை விடுவித்து, மீண்டும் குளத்தின் உள்ளே சென்றது. அதன் பின் உயிர் தப்பிய அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நல்ல நிலையில் உள்ளார்.

இந்நிலையில் நாட்டில் வீர சாகசம் செய்த சிறுவர்களை தேசிய வீரதீர விருதுக்கு குழந்தைகள் நலனுக்கான இந்திய கவுன்சில் தேர்வு செய்து வருகிறது. இந்தாண்டு வீரதீர விருதுக்கு சிது மாலிக் தெரிவு செய்யப்பட்டுள்ளான். இவனுக்கு அடுத்த மாதம் 23-ஆம் திகதி பிரதமர் மோடி இந்த விருதை வழங்குகிறார்.

இத்தகவல் சிது மாலிக் படிக்கும் வசுதேப்பூர் உயர்நிலை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், கந்திரா கிராம மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இராட்சத விமானம்!!

உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானம் ஒன்று அவசரமாக மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய என்டநொவ் 124 ரக சரக்கு விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் இருந்து உகண்டா வரை பயணித்த இந்த விமானம் நேற்று அதிகாலை 5.26 மணியளவில் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

கோளாறுகள் சரியப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் உகண்டா நோக்கி விமானம் சென்றதாக மத்தல விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த – மைத்திரி அணிக்குள் மோதல் ஆரம்பம் : சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்!!

மைத்திரி தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மஹிந்த தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

”எமது கட்சியின் அரசியல் பயணம் குறித்து, ஏனைய கட்சியின் உறுப்பினர்கள் கருத்துக் கூற முடியாது” என்ற சுதந்திரக் கட்சியின் அறிவிப்பின் ஊடாக இது உறுதியாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பிக்களுக்கும் இடையே நேற்று மாலை முக்கியத்துவமிக்க சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,

“பதவி பறிபோனால் கூட ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்” என்று குறிப்பிட்டார். அத்துடன், சுதந்திரக் கட்சி தொடர்பிலும் சில கருத்துகளை முன்வைத்திருந்தார்.

இந்நிலையிலேயே, இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான மஹிந்த சமரசிங்க இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில், ”ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் எமது கட்சி அல்லாத உறுப்பினர்கள் சிலரால் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. கட்சிக்கு எவ்வித அறிவித்தலையும் விடுக்காது தெரிவிக்கப்பட்ட மேற்படி கருத்துகளை ஏற்கமுடியாது.

கட்சியின் எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் மத்திய குழு மற்றும் தலைமைப்பீடத்தால் எடுக்கப்படும் முடிவுகள் உரிய வகையில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர கட்சியின் உறுப்பினராக இருந்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்க ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர் எனக் கூறப்படும் நிலையில் இவ்வாறானதொரு அறிக்கை வெளியாகியுள்ளமை அரசியல் களத்தை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

-தமிழ்வின்-

பரிகார பூஜையால் நடந்த விபரீதம் : தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த இளம்பெண்!!

தூக்கில் தொங்கிய இளம்பெண்

ஈரோடு மாவட்டத்தில் ராணுவ வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார். ராணுவ வீரராக பணியாற்றி வரும் சுரேஷ், கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக கோபி பகுதியை சேர்ந்த சாவித்ரி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சாவித்ரியின் பெற்றோர் வீட்டில் பரிகார பூஜை நடத்தப்பட்டுள்ளது. அந்த பூஜையின்போது சாவித்திரியும் உடன் இருந்துள்ளார். அன்றிலிருந்தே அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு அல்லாமல் ஒரு வித அச்சத்துடன் இருந்து வந்துள்ளார்.

இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாவித்ரி, நேற்று முன்தினம் இரவு தூக்கு போட்டு கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய கணவரின் பெற்றோர், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மருமகளின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சாவித்ரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதியில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி : காப்பாளர் தலைமறைவு!!

தூக்கில் தொங்கிய மாணவி

சென்னை மாதவரம் பால்பண்ணையில் உள்ள கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரின் மகள் செண்பகவள்ளி (17). இவர் சென்னை மாதவரம் அருகே பால்பண்ணை பகுதியில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வரும் செண்பகவள்ளி, நேற்று கல்லூரிக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கியுள்ளார். மதிய உணவு இடைவேளையின் போது அறைக்கு திரும்பிய அவரது தோழி, செண்பகவள்ளி தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த சம்பவம் கல்லூரி வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விடுதி காப்பாளர் திடீரென மாயமானதால், பொலிஸாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதற்கிடையில் மாணவி தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தற்காலிகமாக இடை நிறுத்தம்!!

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் கடந்த புதன்கிழமை 116ஆவது நாளாக இடம்பெற்றிருந்து. இந்த நிலையில் அதன் பின்னர் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரியவருகிறது.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி கடமையின் நிமித்தம் கொழும்பு சென்றுள்ளமையினாலேயே இவ்வாறு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை அகழ்வு பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த புதைகுழியில் இதுவரை 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 276 முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளை ‘காபன்’ பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மஹிந்த, நாமலுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் விதிமுறைகளை மீறி கட்சி மாறியமைக்கு எதிராக கேள்வி விராந்து மனு ஒன்று நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 50 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து அங்கத்துவம் பெற்றுக்கொண்டனர்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராகவும் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் உறுப்புரிமை நீக்கும் வகையிலான மனு ஒன்று நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மஹிந்த உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்பது எம்.பிக்கள் ஐ.தே.கவிற்கு ஆதரவு!!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நம்பகரமான அரசியல்வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

சு.கவின் தேசிய அமைப்பாளரான துமிந்த திஸாநாயக்க தலைமையில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க முடிவெடுத்துள்ள மேற்படி எம்.பிக்கள், ஐ.தே.க தலைமையில் அமையவுள்ள புதிய ஆட்சியில் பங்காளிகளாக சங்கமிக்கவுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து தமது நிலைப்பாட்டை குறித்த உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, “ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைக்கமாட்டேன். தனியாட்சி அமைப்பதற்குரிய பெரும்பான்மையை ஐக்கிய தேசிய முன்னணி நிரூபித்துள்ளது.

எனவே, தனிப்பட்ட ரீதியில் நீங்கள் எடுக்கும் அரசியல் முடிவுக்கு தடையாக இருக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

துமிந்த திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, விஜித் விஜயமுனி சொய்சா, லசந்த அழகியவண்ண, பைசர் முஸ்தப்பா, காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், லக்ஷ்மன் செனவிரத்ன, வீரகுமார திஸாநாயக்க உட்பட மேலும் சிலரே ஜனாதிபதியை நேற்றிரவு தனிப்பட்ட ரீதியில் சந்தித்துள்ளதாக அறியமுடிகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ – அவரது அமைச்சர்கள், பிரதமர் மற்றும் அமைச்சர்களாக செயற்படமேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு எதிராக உயர்நீதிமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான பின் தெற்குஅரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழவுள்ளதாக தெரியவருகிறது.

இதன் ஓர் அங்கமாக சு.க உறுப்பினர்கள் ஐ.தே.கவை ஆதரிக்கும் முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, அரசமைப்பின் 19ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவை எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தனியாட்சி அமையும் பட்சத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுகளின் எண்ணிக்கை 40ஐ விஞ்சுதலாகாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய அரசொன்று அமையும் பட்சத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கையை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் 45 ஆக அதிகரித்து கொள்ள முடியும்.

எனவே, தேசிய அரசு அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

-தமிழ்வின்-

யாழில் மர்ம காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!!

யாழில் மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சுழிபுரம், விக்ரோரியா கல்லூரியில் தரம் 09இல் கல்வி கற்கும் சுழிபுரம் மேற்கை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் விதுர்சன் (வயது 14) எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

எனினும் கடந்த 11ஆம் திகதி இரவு காய்ச்சல் அதிகரித்ததை தொடர்ந்து மறுநாள் சங்கானை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்ட போது, மாணவன் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்துள்ளார். மாணவனுக்கு ஏற்பட்ட காய்ச்சல் என்னவென கண்டறியப்படவில்லை.

அதனால் மாணவனின் குருதி மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த பின்னரே மேலதிக விபரம் தெரியும் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்யும் மஹிந்த!!

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தான் உட்பட அமைச்சரவை உறுப்பினர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன் முறையீட்டு மனு இன்று விசாரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் எந்தவொரு தீர்ப்பு கிடைத்தாலும், பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொதுஜன பெரமுன கட்சியின் பிரதானி,

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகிக் கொண்ட போதும், ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான போராட்டம் தொடரும். அதற்கிணைவாக இன்று முதல் எதிர்க்கட்சி பதவியை மஹிந்த பெற்றுக் கொள்வார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் உறுப்பினர்கள் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டமை, அமைச்சரவை அமைச்சர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேன் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில், மஹிந்தவின் கருத்து வெளியாகி உள்ளது.

-தமிழ்வின்-

நள்ளிரவில் ரகசியமாக சந்தித்துக் கொண்ட மைத்திரி – ரணில்!!

அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவசர சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றிரவு இந்த சந்திப்பு மிகவும் இரகசியமான முறையில் நடைபெற்றதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும், சமகால அரசியல் நிலை குறித்து பேசப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதன்போது மிகவும் முக்கியமான கதாப்பாத்திரமான சபாநாயகர் கரு ஜெயசூரியவும் பங்கேற்றிருந்தார்.

இந்த சந்திப்பு மூடிய அறைக்குள் நடைபெற்ற போதும், அங்கு பேசப்பட்ட விடயங்கள் இரகசியமாக பேணப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம் கலைத்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியமையை அடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அடுத்து வரும் சில தினங்களில் பிரதமராக மீண்டும் ரணில் பதவியேற்கவுள்ள நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக மைத்திரி – ரணிலுக்கு இடையில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடு காணரமாக பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின் –

தந்தை இறந்த சோகத்தில் இருந்த மகன்… ஆறுதல் கூறி தலையை வருடிய குரங்கு : நெகிழ்ச்சி சம்பவம்!!

கர்நாடகா மாநிலத்தில் துக்க வீட்டிற்கு சென்ற குரங்கு, தந்தையை இழந்த மகனுக்கு ஆறுதல் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகாவின் நரகுந்தா தாலுகாவைச் சேர்ந்தவர் நாகனகவுடா பாட்டீல் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதனால், இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவரும் அவரது வீட்டில் குவிந்தனர்.

அனைவரும் அமர்ந்திருக்கையில் திடீரென அழையா விருந்தாளியாக வந்த குரங்கு, இறந்துபோனவரின் உடலுக்கு அருகில் சிறிது நேரம் அமர்ந்திருந்து அஞ்சலி செலுத்தியது.

பின்னர், பாட்டீலின் மகனுக்கு அருகில் சென்று அவரது தோள் மீது ஏறி ஆறுதல் கூறி, அவரது தலையை வருடிவிட்டு யாருக்கும் தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து சென்றுவிட்டது.

குரங்கின் இந்த நெகிழ்ச்சி செயலால், சிலநேரம் அங்கு துக்கத்தை மறந்து அதனை வேடிக்கை பார்த்துள்ளனர்.

எங்களுடன் பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன் : நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை!!

பொதுஜன பெரமுன கட்சி தம்முடன் உடன்பட்ட விடயங்கள் குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் சார்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக கூட்டமைப்பு எடுத்த முடிவை நகைச்சுவையாக்கி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றd.

எந்தவொரு உடன்படிக்கைக்கும் அமைய ரணில் விக்ரமசிங்க பிரதமராகுவதற்கு தமிழ் தேசியக் கூட்மைப்பு ஆதரவு வழங்கவில்லை. எனினும், கூட்டமைப்பு மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இந்நிலை நீடித்தால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல்வாதிகள் கூட்டமைப்புடன் கலந்துரையாட முன்வந்த விடயங்கள் குறித்து அம்பல்படுத்த நேரிடும் என்றும் சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

-தமிழ்வின்-

2019 இல் இதுதான் நடக்கும் : துல்லியமாக சொல்லப்பட்டதால் உலக நாடுகள் அதிர்ச்சி!!

 

2019 இல் இதுதான் நடக்கும்

உலக நிகழ்வுகளை முன்பே கணிக்ககூடிய பாபா வங்கா அடுத்து வரும் 2019-ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை கணித்து கூறியிருப்பதில், சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவர் பிறந்ததும் 12 வயது வரை ஆரோக்கியமாக வளர்ந்து வந்துள்ளார். ஆனால், அதன் பிறகு அவருடைய கண் பார்வை திறன் குறைந்து பின்னர் முற்றிலுமாக பார்வையை இழந்துள்ளார்.

இருப்பினும், பாபா வாங்கா கணித்து கூறும் ஒவ்வொரு நிகழ்வும் சரியாக நடந்துள்ளது. இவர் 1996ஆம் ஆண்டு தன்னுடைய 85 வயதில் உயிரிழந்தார். ஆனால் அதற்கு முன்னதாக பல விடயங்களை முன்கூட்டியே கணித்து கூறியுள்ளார்.

குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். அதே போன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது. அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் கணித்தார். அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார்.

பின்னர், 2016ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் வலுமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா விலகும் எனவும் கணித்தார். இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார். அதுவும் நடந்தது.

இதுவும் தற்போது உண்மையாகவே நிகழ்ந்துள்ளது. இப்படி இவர் கூறும் விடயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் தற்போது 2018-ஆம் ஆண்டு முடிந்து 2019-ஆம் ஆண்டு வரவுள்ளது. இதனால் அடுத்த 12 மாதங்கள் என்ன நடக்கும் என்பதில் பாபா வங்கா என்ன கணித்துள்ளார் என்பதை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில் அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். அதுமட்டுமின்றி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது படுகொலை முயற்சி ஏற்படும் குறிப்பிட்டுள்ளார். இவர் குறிப்பிடுவதைப் போன்ற சமீபத்தில் புடின் தனக்கென்று ஒரு தனியாக பாதுகாப்பான அணியை வைத்துள்ளார் என்று செய்தி வெளியானது.

ஆனால் அது குறித்து எந்த உறுதியான தகவல் இல்லை. தற்போது பாபா வங்காவின் கணிப்பில் படுகொலை செய்யப்படலாம் என்று கூறப்படுவதால் அதற்காக இந்த பாதுகாப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் ஆசியாவில் மிகப்பெரிய சூனாமி ஏற்படுமாம். 2004-ஆம் ஆண்டு எப்படி ஒரு சுனாமி பாதிப்பு இருந்ததோ அதே போன்ற பாதிப்புக் இருக்குமாம். இதைத் தொடர்ந்து ரஷ்யாவில் விண்கல் வந்து விழும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புடினோடு விடவில்லை, அவர் டிரம்பை பற்றி சொன்ன கணிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் ஒரு மர்மநோயால் பாதிக்கப்படுவார் என்று கணித்துள்ளார், அது செவிடாக இருக்கலாம் அல்லது மூளைக் காய்ச்சல் நோயாகவும் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பாபா வங்கா கணித்துள்ள கணிப்புகளில் 68 சதவீதம் உண்மையாக நடந்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு மிக அருகில் தாழமுக்கம் : சூறாவளி எச்சரிக்கை விடுப்பு!!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் 2018 டிசம்பர் 13ஆம் திகதி காலை 05.30 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 850 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 6.5N, கிழக்கு நெடுங்கோடு 88.7E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.

இத் தொகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைய கூடும்.

தொடர்ந்து வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது என வளிமண்டவிலயல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாகவும் வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுவதுடன் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.