புதிய கூட்டணி ஆட்சிக்கோ அல்லது சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளவோ அனுமதிக்காதிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்த ஜனாதிபதியின் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என உச்சநீதிமன்றம் நேற்று மாலை அறிவித்திருந்தது.
இந்நிலையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலும் இன்றய தினம் புதிய அரசாங்கம் அமைக்கப்பட கூடிய சாத்தியம் காணப்படுவதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றின் தீர்ப்பு வெளியானதும் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே, புதிய கூட்டணி ஆட்சிக்கோ அல்லது சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளவோ அனுமதிக்காதிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமன இடைநிறுத்தத்துக்கு எதிராக மகிந்த தரப்பு செய்துள்ள மேன்முறையீடு இன்று உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டால் புதிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்ச நீதிமன்றத் தீரப்பின் பிரகாரம் நாடாளுமன்றம் தொடர்ந்தும் சட்ட ரீதியாக இயங்கும் நிலைக்கு வந்திருக்கிறது.
தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நாடாளுமன்றம் சட்ட ரீதியற்றது என்று மகிந்த ராஜபக்ச அணியினர் குற்றம்சாட்டி வந்தனர். எனினும், இன்றைய தினம் உச்ச நீதிமன்றமானது தீர்க்கமான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமையானது சட்ட ரீதியானது அல்ல என்றும், அது அரசியல் அமைப்புக்கு முரணானது என்றும் குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் தன்னுடைய பெரும்பான்மையை ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். ஆக, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவினை தற்போது ரணில் விக்ரமசிங்க கொண்டிருக்கிறார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவுடன், ரணில் விக்ரமசிங்க 117 என்ற பெரும்பான்மைய நாடாளுமன்றத்தில் காட்டியிருக்கிறார். இந்நிலையில் இன்றைய தினம் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
யார் பெரும்பான்மையை கொண்டிருக்கிறாரோ அவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக மைத்திரிபால சிறிசேன நியமிக்க வேண்டும். அவ்வாறு மீண்டும் பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டால் ஐந்தாவது தடவையும் பிரதமர் என்னும் பதவியை ரணில் பெறுகிறார்.
குறிப்பாக, 1993–1994 ஆம் ஆண்டு காலத்திலும், 2001–2004 ஆண்டு சந்திரிகா அம்மையார் காலத்திலும் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க, 2015ம் ஆண்டு நிகழ்ந்த பொதுத் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதையடுத்து நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ரணிலை பிரதமராக்கினார்.
பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் கூட்டாட்சி அமைந்த போதும் ரணில் பிரதமராக பதவியை தக்க வைத்துக் கொண்டார் நான்காவது முறையாக.
இப்போது நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பின்படியும், நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கிய ஆதரவின்படியும், ரணிலுக்கு பிரதமராகும் வாய்ப்பு அதிகமாகியிருக்கிறது. அதாவது ஐந்தாவது தடவையாகவும் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், ரணிலை பிரதமர் பதவியில் அமர்த்தமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசாங்கத்தை நியமிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அந்த தீர்ப்புக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி வரும்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக தேர்தல் நடத்தப்படாது. மற்றுமொரு தீர்ப்பு நாளை நீதிமன்றம் வழங்க உள்ளது. இதன் பின்னர் தேவையான தீர்மானங்கள் எடுக்கப்படலாம் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா இன்று(13.12) புளியங்குளம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் ஐ. எம் .ஹனீபா பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.
புளியங்குளம் கிருஸ்ணன் கோவிலில் இருந்து பண்பாட்டு பேரணி ஆரம்பித்து விழா மண்டபம் வரை வந்திருந்தது. பண்பாட்டு பேரணியில் மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியும் தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் சமையல் உபகரணங்களும் மற்றுமோர் ஊர்தியில் கொண்டு வரப்பட்டதுடன் நாதஸ்வரக் குழுவினர், பொய்க்கால் குதிரையாட்டம், காவடி, கோலாட்டம் உட்பட பண்பாட்டு நிகழ்வுகளும் தமிழ் பெரியார்களை போன்று வேடமணிந்த சிறுவர்களும் பவணியை அலங்கரித்திருந்தது.
மாவீரன் பண்டாரவன்னியன் அரங்கில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மருதமுகில் நூலும் வெளியிடப்பட்டது.
வவுனியா வடக்கு பிரதேசத்தின் சமூக கலை கலாசார துறையில் பங்களிப்பு செய்தவர்களுக்கு சமூக நலனோம்பி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று(13.12) சர்வதேச மனித உரிமைகள் தினம் 70ஆவது ஆண்டு நிறைவு விழா வவுனியா பிராந்திய மனித உரிமைகள் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
சர்வதேச மனித உரிமைகள் 70ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வவுனியா பம்பைமடு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களிடையே மனித உரிமைகள் என்பது பிறப்பிலிருந்து உருவாக்கப்படுகின்றனவா? அல்லது சலுகையிலிருந்து உருவாக்கப்படுகின்றனவா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற்றது.
பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் மற்றும் பீடாதிபதி பிரயோக விஞ்ஞானப்பீடம் சி.குகனேசன், வன்னிப்பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரியதர்சன, வவுனியா பிராந்திய காரியாலய சட்டத்தரணி ஆர்.எல்.வசந்தராஜா, பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பல்கலைக்கழக வளாக மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் கடந்த காலத்தை விடவும் இன்று சற்று அதிக மனிமூட்டம் காணப்பட்டது. காலை 9 மணிவரையும் காணப்பட்ட கடும் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பல நாட்களாக அதிக பனிமூட்டம் காணப்படுவதுடன் கடும் குளிரான காலநிலையும் நீடித்துச் செல்கின்றது. இன்றைய தினம் காலை 9 மணியாகியும் பிராதான வீதிகளில் அதிக பணிமூட்டம் காணப்பட்டது.
இதனால் அதிகாலையில் தமது கடமைகளுக்குச் செல்லும் வாகனச் சாரதிகள், அரச ஊழியர்கள், தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள், விவசாயிகள், தனியார் துறையினர் போன்ற பல்வேறு தரப்பினர் இன்றைய தினம் போக்குவரத்து பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தை கலைத்ததாக வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலானது செல்லுபடியற்றது என்றும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டத்துக்கு முரணானது என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பிற்குப் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியினர் கொண்டாட்டத்தி்ல் ஈடுபட்டுவருகின்றனர்.
வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி ஒருவர் எடுத்த முடிவானது தவறானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் மதிப்பளித்து ஜனாதிபதி செயற்பட வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார். இனியாவது மைத்திரிபால சிறிசேன சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், தவறானவர்களின் கருத்துக்களை அவர் கேட்க வேண்டாம் என்றும் சஜித் பிரேமதாஸ கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் விபரத்தினை சற்று நோக்கலாம், நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரமத நீதியரசர் நளின் பெரேரா உட்பட எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் ஏகமனதாக இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் இடம்பெற்றது.
இம்மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதன்போது ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்பு முரணானது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர்களினால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், ஜனாதிபதி அரசியலமைப்புக்கு முரணாகச் செயற்பட்டுள்ளார். நாட்டில் அரசியல் அமைப்புக்கு முரணாக ஜனாதிபதி செயற்பட்டால் அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு அவரை பதவியில் இருந்து நீக்க முடியும்.
இது தொடர்பான தகவல்கள் அண்மையில் வெளியாகியிருந்தன. இன்றைய நீதிமன்றத் தீரப்பும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது, ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் தன்னிச்சையாக கலைக்க முடியாது என்று.
ஆக. ஜனாதிபதி அரசியல் அமைப்பை அவமதித்து, அதனை மீறியிருக்கிறார். இதனால் அவருக்கு எதிராக எதிர் கட்சிகள் குற்றப்பிரேணை கொண்டுவர வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதுவாயினும், மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றால் தான் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவேன் என்று மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதிவிப்பிரமானம் செய்து கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்றத் தீர்ப்பை எதிர்ப்பார்த்து ஒட்டு மொத்த இலங்கையர்கள் மட்டுமல்ல, சர்வதேச நாடுகளும், உள்நாட்டு ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் காத்திருந்தன.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு இன்று வெளியிட்டு இருக்கிறது.
இன்று மாலை 4 மணிக்கு இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தாலும், நீதிமன்றத் தீர்ப்புக்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருந்தன.
நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், கட்சி ஆதரவாளர்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் என்று பலர் குவிந்திருந்த நிலையில் சிறிசேன, நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்கு கலைக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்துரைத்துள்ள அவர், இன்று இரவு மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப்பிரமானம் செய்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்றிரவு கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிவந்துள்ள நீதிமன்றத் தீர்ப்பினையடுத்து கொழும்பு லேக் ஹவுஸ் அலுவலகத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் கலைக்கபட்டமையானது அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது கொழும்பு அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மகிந்த தரப்பினரை கலக்கமடையச் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்றும் சிலாகித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு லேக் ஹவுஸ் அலுவலகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீர்ப்பிற்குப் பின்னர் குழு ஒன்று உள்நுழைய முற்பட்ட வேளையிலேயே இந்தப் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் அந்தப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்க கடப்பட்டுள்ளேன். ஆனால் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடந்த – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் சற்று முன்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன், அதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டை பாதுகாக்க நான் எடுத்த முடிவில் மாற்றம் செய்ய மாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் மகிந்த தரப்பின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதென்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று (13.12) மாலை பட்டாசு வெடித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக நான்கரை வருடங்கள் நிறைவு பெறாமல் பாராளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் ஐக்கிய தேசியக் கட்சியினர் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் கருணாதாச மற்றும் வவுனியா மாவட்ட ஐக்கியதேசியக் கட்சியின் முகாமையாளர் மற்றும் இளைஞரணி தலைவருமான எஸ்.சந்திரகுமார் ஆகியோர் தலைமையில் நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
200 பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் வைத்து கொண்டு அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த காஸ்டிங் மோகன் மீது இரண்டு பெண்கள் பொலிஸ் புகார் கொடுத்துள்ளனர்.
சென்னை அடையாரை சேர்ந்த மோகன் (37). சினிமா துறையில் காஸ்டிங் டைரக்டராக உள்ளார். மேலும் இவர் தனது வீட்டின் முதல் மாடியில் மொடலிங் ஏஜென்சி ஒன்று நடத்தி வருகிறார். அந்த ஏஜென்சியில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஏஜென்சியின் நடவடிக்கைகள் குறித்து தகவல் பரிமாறும் வகையில் மோகன் வாட்ஸ்அப் குழு ஒன்று தொடங்கி அதில் அனைத்து இளம் பெண்களையும் சேர்த்துள்ளார். சில பெண்களை தேர்வு செய்து தனியாக அழைத்து இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதுபோல் 50க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மொடலிங் வாய்ப்பு தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று மதுபானம் கொடுத்து தனது ஆசையை தீர்த்து வந்துள்ளார். மோகனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், மோகன் படுக்கை அறையில் அவருக்கு தெரியாமல் மைக்ரோ கேமராவை ரகசியமாக அமைத்து கடந்த 3 மாதங்களாக நடந்த சம்பவங்களை படம் பிடித்துள்ளார்.
இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மோகன் மொடலிங் பெண்களுடன் நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் மற்றும் 30க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகியது.
ஆனால் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் மோகன் மீது தைரியமாக புகார் கொடுக்க முன்வரவில்லை. ஏன் என்றால் மோகன் சினிமா மற்றும் பெரிய விளம்பர நிறுவனங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக அவரது மாடலிங் ஏஜென்சியில் உள்ள 200 பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் அவரிடம் உள்ளது. இதனாலேயே அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்காமல் தயங்கி வந்தனர்.
இந்நிலையில், மோகனால் பாதிக்கப்பட்ட சென்னை அடையாரை சேர்ந்த ஹாசினி (21), முகப்பேரை சேர்ந்த காயத்ரி (20) ஆகிய 2 இளம் பெண்களும் நேற்று பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் உரிய ஆதாரங்களுடன் தனித்தனியாக புகார் அளித்தனர்.
ஹாசினி புகாரில் கூறியிருப்பதாவது, நான் எம்.காம் படித்துவிட்டு கடந்த 2 வருடங்களாக அடையாரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன். சினிமா துறையில் உள்ள “காஸ்டிங் டைரக்டர்” மோகன் என்னை சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு சினிமா துறையில் வேலை வாங்கி தருவதாக அழைத்தார். அதன்படி நான் நேரில் சென்றபோது வாய்ப்பு வாங்கி தருவதாக பலமுறை அலைக்கழித்தார்.
பின்னர், அவர் என்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பினால்தான் நான் உனக்கு வேலை வாங்கி கொடுப்பேன் என்று கூறினார். நான் அதற்கு மறுத்தேன். பின்னர் வேறு வழியின்றி என் நிர்வாண புகைப்படங்களை அனுப்பும் சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது.
இந்த விஷயம் இத்துடன் நில்லாமல், அவர் என்னை பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அவர் என்னை தன்னுடன் நெருக்கமாக இருக்குமாறு கட்டாயப்படுத்தவும் செய்தார். இதற்கிடையே, மோகனின் அந்தரங்க வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை பார்த்து அதிர்ந்து போனேன்.
எங்கே எனது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவாரோ என்ற பயத்தினால் இந்த புகாரை அளிக்கிறேன். வேறு சில ஆதாரங்களின் மூலமாக, அவர் பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளிநாட்டில் தனது ஆட்களிடம் பணத்திற்கு விற்பதாக கேள்விப்பட்டேன். மோகனுக்கு கடுமையான தண்டனை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனி வீட்டில் வசித்து வந்த மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைந்தகரையை சேர்ந்த டேவிட் என்பவரும் ரேகா என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் டேவிட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி இருவருக்கும் வாய் தகராறு நடந்து வந்தது. பிரச்சனை அதிகமானதன் காரணமாக தனது குழந்தைகளுடன் தனி வீட்டில் லேகா வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் லேகா சாலையில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த அவரது கணவர் டேவிட் அவரை கத்தியால் குத்தினார். இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் லேகா. இதையடுத்து டேவிட்டை கைது செய்துள்ள பொலிசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் குண்டு பாய்ந்து இரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிய மாணவியை, அங்கு சுற்றியிருந்த மக்கள் ஏதேனும் உதவாமல், செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்தவர் ஜுலி. 9-ஆம் வகுப்பு படித்து வரும் இவரை, திபு என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர் பல முறை தன்னுடைய காதலை அந்த சிறுமியிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த சிறுமி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், ஜூலியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
சுமார் 4 குண்டு பாய்ந்து இரத்தம் வழிந்த நிலையில் ஜுலி உயிருக்கு போராடியுள்ளார். தன்னை காப்பாற்றுமாறு அங்கிருப்பவர்களிடம் கதறுகிறார். ஆனால் அங்கிருப்பவர்களோ அந்த பெண்ணுக்கு உதவாமல், செல்போனில் தொடர்ந்து வீடியோ எடுத்தாவாறே இருந்தனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், வீடியோவைக் கண்ட பலரும் உதவாமல் இப்படி வீடியோ எடுப்பது அதிர்ச்சியாக உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகை ஜரின் கான் காரின் மீது மோதி விபத்தில் சிக்கிய இளைஞர், பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையான ஜரின் கான் நேற்று கோவாவிற்கு சென்றுள்ளார். அஞ்சுனா பகுதியில் அவருடைய கார் சென்றுகொண்டிருந்த போது, பின்பக்கம் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துகொண்டிருந்த இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து நடிகையின் கார் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த இளைஞரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், விபத்தில் சிக்கிய இளைஞர் மப்யூசா பகுதியை சேர்ந்த 31 வயதான நிதேஷ் கோரல் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
முன்னதாக நடிகர் ஜரின் கான், தன்னுடைய மேனேஜர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதுடன் தன்னை மிரட்டியதாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.