வெளியானது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு : பேரதிர்ச்சியில் பலர்!!

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு சற்றுமுன்னர் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியானால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்குகரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும் அவ்வாறு கலைக்க வேண்டுமானால் பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன அப்போது பிரதமாராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.

அதிலிருந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்றத்தை கலைத்திருந்தார்.

இதனையடுத்து பாராளுமன்றத்தை கலைக்கும் விதமாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலானது அரசியலமைப்புக்கு முரணானது என சவாலுக்குட்படுத்தி, ஆர்.ஏ.எஸ்.டி.பெரேரா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஆர்.சம்பந்தன், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கபீர் ஹாசிம், மாற்றுக் கொள்கைக்கான நிலையம் சார்பில் பாக்கியசோதி சரவணமுத்து, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அனுரகுமார திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோகணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ரிசாட் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம்,

சிவில் நபர்களான லால் விஜயநாயக்க, ஜீ.சி.டி.பெரேரா, சட்டத்தரணி அனுர லக்சிறி, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல், சுமனபால, சட்டத்தரணி இந்திக, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் திகதி 13 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களில் பொறுப்புக் கூறத்தக்கவர்களாக ஜனாதிபதி, அப்போது ஜனாதிபதியனால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதனையடுத்து பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோரடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழுவால் அம் மனுக்கள் மீதான விசாரணை ஆராயப்பட்டது.

இதனையடுத்து பாராளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இடை நிறுத்த, கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பித்தது.

இந் நிலையில் பிர­தம நீதி­ய­ரசர் நலின் பெரே­ராவின் கீழ் பிரி­யந்த ஜய­வர்­தன, பிர­சன்ன ஜய­வர்­தன, புவ­னேக அலு­வி­ஹார, விஜித் மலல்­கொட, சிசிர டி ஆப்று, முர்து பெர்­ணான்டோ ஆகிய எழுவர் கொண்ட நீதி­யர்­சர்கள் குழாம் இம்­ம­னுக்கள் விசா­ரிக்­கப்பட்டு வந்தது.

அத்துடன் கடந்த 07 ஆம் திகதி கூடிய உயர் நீதிமன்றம், வர்த்தமானி தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் எனவும் உத்தரவிட்டது.

இந் நிலையிலேயே இன்று மாலை இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலய மாணவன் உயிரிழப்புக்கு பாடசாலை சமூகமே காரணம் : பெற்றோர் முறைப்பாடு!!

 

மாணவன் உயிரிழப்பு

செம்மலை மகாவித்தியாலய மாணவன் தற்கொலைக்கு பாடசாலை சமூகமே காரணம் என மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் மாணவனின் பெற்றோர் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். இது தொடர்பில் மாணவனின் தந்தை தனது முறைப்பாட்டில் தெரிவித்ததாவது,

செம்மலை மகாவித்தியாலயத்தில் தரம் 09 இல் கல்விகற்கும் மாணவனான எனது மகன் தற்கொலை செய்துகொண்டமையானது மாணவனை உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியிலும் பாடசாலை கல்வி சமூகம் பாதிக்க செய்தமையே காரணம்.

மாணவன் தற்கொலைக்கு சென்ற காரணம் இதுவரை சரியாக விசாரிக்கப்படவில்லை. மாணவன் தற்கொலை தொடர்பில் பாடசாலை சமூகம் இதுவரை சரியான பதிலை பெற்றோர்கள் உறவினர்களுக்கு வழங்கவில்லை.

சம்பவம் நடைபெற்ற கடந்த 29ஆம் திகதி அன்று மாலை 5.00 மணி ஆகியும் மகன் வீடு திரும்பவில்லை. மகனின் இறுதி நிகழ்வின் பின்னரே பாடசாலையில் என்ன நடந்தது என்று பாதிக்கப்பட்ட ஏனைய மாணவர்கள் ஊடாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. மாணவன் உயிரிழப்பிற்கு பாடசாலை சமூகமே பொறுப்பு கூறவேண்டும்.

நாங்கள் மாணவனை நல்ல ஒழுக்கத்துடன் வளர்த்து வருகின்றோம். நான் ஒரு ஆசிரியர் எனது பிள்ளை எவ்வாறு இருப்பான் என்பது எனக்கு தெரியும். அதனைவிட அவனை பற்றி பாடசாலையில் உள்ள வகுப்பறை ஆசிரியருக்கு நன்றாக தெரியும்.

சம்பவ நாள் அன்று தரம் 09 இல் கல்விகற்கும் 3 மாணவர்கள் விளையாட்டு திடலில் மாங்காய் ஆய்ந்து சாப்பிட்டுவிட்டு விளையாட்டு அரங்கிற்கு அருகில் சென்றுள்ளார்கள்.

விளையாட்டு மைதானத்தில் கடந்த நாட்களில் படையினர் வந்து விளையாட்டுப்போட்டிகளை வைத்துள்ளார்கள் அவர்கள் அங்கு பாவித்த சிகரட் மிச்சங்கள் அங்கு காணப்பட்டுள்ளன அதிலும் பேப்பரினால் சுற்றப்பட்ட துண்டை எடுத்த மாணவர்கள் அருகில் இருந்த தீப்பெட்டியினையும் எடுத்து பற்றவைத்துள்ளார்கள்.

அதன்பின்னர் அங்கிருந்து சென்ற மாணவர்களை தரம் 10இல் கல்விகற்ற மாணவர்கள் விசாரித்து என்ன செய்தார்கள் என்று படையினர் பாவித்த சிகரட் துண்டங்களை எடுத்து ஆசிரியரிடம் காட்டியுள்ளார்கள்.

குறித்த மாணவர்களை அழைத்த அதிபர் அந்த சிகரட் துண்டுகளை மேசையில் வைத்துவிட்டு அனைத்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் காட்டியுள்ளார் அது மட்டுமல்ல இந்த சம்பவம் காலை 11.00 மணிக்கு நடைபெற்றுள்ளது.

அதன் பின்னர் குறித்த மாணவர்களை அறை ஒன்றிற்குள் பூட்டிவைத்து அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ளார். மாணவன் இவ்வாறு செய்தது தொடர்பில் பெற்றோருக்கு பாடசாலை சமூகத்தினால் தெரியப்படுத்தவில்லை. மாலை 5.00 மணி ஆகியும் வீடு வரவில்லை. மாலை 5.00 மணிவரை மதிய உணவோ தண்ணீரோ இல்லாமல் மாணவர்களை அடைத்து வைத்துள்ளார்கள்.

பாடசாலை நேரம் முடிந்தும் மாணவர்களை பாடசாலைக்குள் பெற்றோருக்கு தெரியப்படுத்தாமல் வைத்திருந்தது பாடசாலை சமூகத்தின் தவறு.

மாணவன் விட்ட பிள்ளைக்கு அதிபர், ஆசிரியர் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டமை, சக மாணவர்கள் மத்தியில் குறித்த மாணவனை உளவியல்ரீதியில் தாக்கப்படுத்தியமை, பாடசாலை சமூகத்தின் தவறு அதிபர் ஆசிரியர் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடயம்.

எனது மகன் பாடசாலை ஆசிரியர் அதிபரின் உடல்தாக்கத்திற்கும் உளதாக்கத்திற்கும் உள்ளாகியே உயிரிழந்துள்ளார் இதற்கு பாடசாலை சமூகம் பொறுப்பு கூறவேண்டும் இச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடக்கவேண்டும்.

ஒரு பாடசாலை சென்ற மாணவன் வீடு திரும்பாமல் பாடசாலை சீருடையுடன் சென்று தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவனது மனதை பாதிக்கும் வகையில் பாடசாலை சமூகம் செயற்பட்டுள்ளது.

இதனை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களோ சிறுவர்கள் மீது அக்கறைகொண்டவர்களோ சரியாக விசாரணை செய்துகொள்ளவில்லை. எனது மகன் இறந்த பின்னும் அவனுக்கு கெட்டபெயரினையே பாடசாலை சமூகம் கொடுத்துள்ளது.

இதற்கான நீதி வேண்டும் இதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளோம் என மாணவனின் பெற்றோர்கள் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மஹிந்தவின் கோட்டைக்குள் பதற்றம்! வன்முறையில் ஈடுபட்ட மக்கள் : அதிரடிப் படையினர் குவிப்பு!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டையான ஹம்பாந்தோட்டையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தங்காலை பொலிஸ் பிரிவின் கட்டுவன பொலிஸாருக்கு எதிராக கிராம மக்கள் நேற்றிரவு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையினால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை கட்டுவன பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யும் இடத்தை சுற்றிவளைக்க சென்ற பொலிஸாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 50 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராம மக்கள் பொலிஸாரை சுற்றிவளைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

கடும் கோபமடைந்த கிராம மக்களினால் பொலிஸார் மீது கற் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பிரதேசத்தில் டயர் எரித்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் 4 பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பாதுகாபபு நடவடிக்கையில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறுதியில் கண்ணீர் புகை மேற்கொண்டு பொது மக்களை அவ்விடத்தில் இருந்து கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா சாம்பல்தோட்டம் மலைமகள் விளையாட்டுக் கழகத்தின் நீண்டநாள் கனவு நனவானது!!

வவுனியா சாம்பல்தோட்டம், மலைமகள் விளையாட்டுக் கழகத்திற்கு நிரந்தர மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (12.12.2018) மதியம் 2.30 மணியளவில் தமிழரசுக் கட்சியில் இளைஞர் அணித்தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில் நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியில் இளைஞரணித் தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் மற்றும் நெளுக்குளம் வட்டார தமிழரசுக் கட்சியின் இளைஞரணி தலைவர் இரா.அபிசனினதும் வேண்டுகோளுக்கிணங்கவும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் சிபார்சின் ஊடாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (தமிழ் தேசிய கூட்டமைப்பின்) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இருதயநாதன் சாள்ஸ் நிர்மலநாதனின் 1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலிருந்து வவுனியா, சாம்பல்தோட்டம், மலைமகள் விளையாட்டுக் கழகத்திற்கு நிரந்தர மண்டபம் அமைக்கப்படவுள்ளது.

இம் மண்டபத்திற்காக அடிக்கல் நாட்டும் வைபவத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் சந்திரபத்மன், பாராளுமன்ற உறுப்பினரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சிவசுப்பிரமணியம், இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், கிராம இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் இலவச சிகிச்சை முகாம்!!

விண்மீன்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் பிரான்ஸ் நாட்டு விசேட வைத்திய குழுவினரின் இலவச சிகிச்சை முகாம் ஒன்று இன்று (12.12) வைரவப்புளியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ் விருட்சம் அமைப்பினரின் அனுசரணையுடன் நடைபெற்ற இச் சிகிச்சை முகாமானது எலும்பு, நரம்பு மற்றும் தசைநார்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியை சூழவுள்ள மக்கள் இச் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்றனர்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வந்த இந்த இலவச சிகிச்சையின் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.

இச் சிகிச்சை முகாம் தொடர்பாக கருத்து தெரிவித்த விண்மீன்கள் அமைப்பின் தலைவர் எஸ்.புவிகரன், அதிகளவான மக்கள் இச் சிகிச்சை முகாம் மூலம் பயனடைந்துள்ளதால் எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான சிகிச்சை முகாம்கள் மக்களுக்கு இலவசமாக ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

மீண்டும் ரணில் பிரதமராகின்றார்? வெள்ளிக்கிழமை பதவியேற்பு!!

உயர் நீதிமன்றின் தீர்ப்பு வெளியானவுடன் முக்கிய அரசியல் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் குறிப்பாக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டார்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தையும் கலைத்து பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.இதனால் கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய முன்னணி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தது.இந்த மனு ஏழு பேர் அடங்கிய நீதியர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, மனு மீதான தீர்ப்பு வெளியாகவுள்ளது.

இந்நிலையிலேயே, உயர்நீதிமன்றின் தீர்ப்பு வெளியானதும் முக்கிய சில அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும், ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமாராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

-தமிழ்வின்-

இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெண் பயணியின் உள்ளாடையில் இருந்த பொருள் : அதிர்ந்துபோன அதிகாரிகள்!!

 

அதிர்ந்துபோன அதிகாரிகள்

இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த இளம்பெண் ஒருவர் தனது உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து எடுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது குறித்து அதிகாரிகள் கண்காணித்த போது சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து மஸ்கட் வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில் வந்த அகமது பாஷா ஷேக் (48) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.

அவர், கதவு கைப்பிடி மற்றும் 12 தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். அதேபோல இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பாத்திமா ஆஸ்மியா (30) என்பவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 4 தங்க கட்டிகளை கண்டுபிடித்தனர். ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில், முகமது பாசித் (19) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது ரூ.2 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் தங்க கட்டியும், ரூ.74 ஆயிரம் மதிப்புள்ள 35 பெட்டி வெளிநாட்டு சிகரெட்டுகளும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 200 கிராம் ஈரான் நாட்டு குங்குமப்பூவும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

கர்ப்பிணி மனைவியுடன் தூக்கில் தொங்கிய கணவன் : திருமணமான 10 மாதத்திற்குள் விபரீத முடிவு!!

 

மனைவியுடன் தூக்கில் தொங்கிய கணவன்

சென்னையில் திருமணமான 10 மாதத்தில் 4 மாத கர்ப்பிணி மனைவியுடன் செல்போன நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாரதி(32) என்பவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் ஏரியா மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன் பிரசாந்தி (21) என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

பிரசாந்தி 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சாரதியின் தாயார் காலமானார். தாயார் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த சாரதி இதனால் மிகுந்த சோகத்தில் இருந்தார். அருகில் உறவினர்கள் இருந்து ஆறுதல் கூற இயலாத நிலையில் மன உளைச்சலில் இருந்தார்.

தாயின் இறப்பை தாங்கிகொள்ள முடியாத சாரதி, தனது இளம் கர்ப்பிணி மனைவியுடன் இணைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பொதுமக்கள் தகவல் அளிக்க சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்துக்கொண்ட சாரதி பிரசாந்தி இருவரும் தற்கொலைக்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளனர். அதில் தங்கள் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. தாயார் இறந்த மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

3 வயதில் மாமாவால் எனக்கு நேர்ந்த கொடுமை : 13 ஆண்டுகள் கழித்து புகார் அளித்த பெண்!!

 

மாமாவால்  நேர்ந்த கொடுமை

சென்னையில் பட்டதாரி பெண் ஒருவர் 3 வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் புகார் அளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீ டு இயக்கம் மூலம் சமீப காலமாக வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஜனனி என்ற பெண், சிறுவயதில் தன்னை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய மாமா மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மனரீதியாக பாதிக்கப்பட்ட ஜனனி, கணவரோடு சேர்ந்து வாழ முடியாமல் விவகாரத்து பெற்றுள்ளார். தன்னை 3 முறை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய திருப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வரும் மாமா கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பெண் 13 ஆண்டுகளுக்கு பின்பு பொலிசில் புகார் அளித்துள்ளார்.

காதலி இறந்ததை ஏற்க மறுத்த காதலனின் விபரீத முடிவு : எலிகளுக்கு இரையான காதலனின் உடல்!!

 

காதலனின் விபரீத முடிவு

கடலூர் மாவட்டத்தில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதான வைத்தீஸ்வரன் என்பவர் கணணி அறிவியல் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். வைத்தீஸ்வரனுக்கு, தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்த பாண்டியன் மகள் ரத்தினபிரியா என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

ஆரம்பத்தில் போனில் பேசிவந்த இவர்கள், நாளடைவில் வெளியில் ஒன்றாக சேர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் வெளிநாட்டில் இருந்து காதலன் வந்துள்ளான். கடந்த 9-ந்தேதி ரத்தினபிரியா செல்போனில் நீண்ட நேரமாக வைத்தீஸ்வரனுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதை பார்த்த ரத்தினபிரியாவின் தாய் இந்திரா, ஏன் நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறாய் என கண்டித்தார். இதில் மனமுடைந்த ரத்தினபிரியா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த வைத்தீஸ்வரன் ரத்தினபிரியாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து காதலி இறந்த வேதனையில் வைத்தீஸ்வரன் இரவு வீட்டுக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். வைத்தீஸ்வரனை பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள் வைத்தீஸ்வரன் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் வைத்தீஸ்வரனை மீட்டு மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வைத்தீஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வைத்தீஸ்வரனின் உடலை பார்க்க சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு வந்தனர். அப்போது அவரது உடலின் பல இடங்களில் எலிகள் கடித்து குதறி இருந்தது. இதை பார்த்து ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர், பொலிசாரிர் சொன்னதையடுதது உறவினர்கள் கலைந்து சென்றனர்.

வவுனியாவில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி இடமாற்றம்!!

பொலிஸ் அதிகாரி இடமாற்றம்

போதைப்பொருள் பயன்படுத்தியதாக பொலிஸ் அதிகாரி ஒருவரை சீருடையுடன் நேற்றையதினம் பொதுமக்கள் பிடித்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தமையினையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா வைரவபுளியங்குளம் நெல் களஞ்சியசாலையில் யாருமற்ற நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சீருடையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதையடுத்து அவ்விடத்திற்கு சென்ற ஒருவர் குறித்த பொலிஸ் அதிகாரி போதைப் பொருள் பயன்படுத்தி கொண்டிருந்ததை அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், குறித்த பொலிஸ் அதிகாரியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை வவுனியா , மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் தலமையிலான குழுவினர் மேற்கொண்டுவருவதுடன் விசாரணைகள் முடிவுரும் வரை குறித்த பொலிஸ் அதிகாரி தற்காலிகமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா கூமாங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

 

தூக்கில் தொங்கிய இளைஞனின் சடலம்

வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் தாயார் வெளியில் சென்று வீடு திரும்பிய பொழுது தனது மகன் தூக்கில் சடலமாக இருப்பதை கண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 26 வயதுடைய காளியப்பன் கஜமுகன் என்ற இளைஞனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையை அடிப்பணிய வைத்துள்ள சீனா : அமெரிக்கா எச்சரிக்கை!!

இலங்கை அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுக விடயத்தில் தமது இறைமையை அடகுவைக்க பலவந்தப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடன்பொறி மூலமே சீனா இதனை பெற்றுக்கொண்டுள்ளது. எனவே சீனா, தமது கடன்பொறித்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அமரிக்கா கோரியுள்ளது.

அமரிக்காவின் பிரபல காங்கிரஸ் சட்டவாக்குனரும் ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கான வெளியுறவு உபக்குழுவின் தலைவருமான, டனா ரொஹ்ராபெச்சர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

சீனாவைப் பொறுத்தவரையில் அது, சிறிய நாடுகளின் அடித்தள கட்டமைப்புக்கு அதிக வட்டியில் நிதியளிப்பதன் காரணமாக வறுமையான நாடுகள், அவற்றை மீளச்செலுத்துவதில் பிரச்சினையை எதிர்கொள்கின்றன.

இந்த நிலையில் வறுமையான நாடுகள், தாம் பெற்றக்கடன்களை மீளசெலுத்த முடியாதபோது சீனா, அந்த நாடுகளின் சொத்துக்களை நேரடியாக கையகப்படுத்துகிறது.

இதன் முக்கிய கட்டமே ஹம்பாந்தோட்டை துறைமுக கையக்கப்படுத்தல் நடவடிக்கையாகும் என்று அமரிக்காவின் பிரபல காங்கிரஸ் சட்டவாக்குனரும் ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கான வெளியுறவு உபக்குழுவின் தலைவருமான, டனா ரொஹ்ராபெச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை சீனா நிறுத்திக்கொள்ளவேண்டும். இலங்கையை பொறுத்தவைரையில் தற்போது அரசியலமைப்பு பிரச்சினையை எதிர்கொள்கிறது.

இதுவும் சீனாவின் கடன் பளு தொடர்பான பிரதிபலிப்பே என்று டனா ரொஹ்ராபெச்சர் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

இன்று வெற்றிபெற்றார் ரணில் விக்ரமசிங்க!!

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடிய நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச இந்த பிரேரணையை கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வாக்களித்திருந்தன.

எனினும், மக்கள் விடுதலை முன்னணி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், வாக்களித்த அனைவருக்கும் ரணில் விக்ரமசிங்க சபையில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் ஒரு மணி வரையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது ஏன் தெரியுமா?

 

வடக்கு திசை

வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒருவர் தவறான திசையில் தலை வைத்து தூங்கும் போது அதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும். அதோடு சரியான நிலையில் தூங்குவதன் மூலம் உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

ஒருவர் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் கால்களை நீட்டித் தூங்கினால் அதன் விளைவாக உடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கப்பட்டு உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

ஏன் வடக்கு கூடாது? : பூமியின் வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் உள்ளது. அதேப் போல் மனித உடலின் தலையில் நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டது.

எப்போதும் எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்கும். ஒரே துருவங்களில் படுக்கும் போது மின்னோட்டங்களுக்கு இடையே இடையூறு ஏற்பட்டு உடலின் ஆற்றல் பாதிக்கப்பட்டு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

எந்த திசையில் தூங்கலாம்? : கிழக்கு திசையில் தூங்கினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, எப்போதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். குழந்தைகள் இந்த திசையில் தலை வைத்து தூங்கும் போது நினைவாற்றல் அதிகரிப்பதோடு, படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த முடியும்.

ஒருவர் தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால்களை நீட்டி தூங்கினால் புகழ், செல்வம், வெற்றி போன்றவை தேடி வருவதோடு, மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
மேற்கு திசையில் தலை வைத்து தூங்குபவர்கள் பணக்காரர்களாகவும், பெயர் புகழுடன் வாழ்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். மேலும் ஒருவர் தூங்கும் போது கால்களை கதவுகள் அல்லது ஜன்னல்களை நோக்கி நீட்டிப் படுக்கக்கூடாது.

அதேப் போல் குளியலறை, கழிவறை, சமையலறை, பூஜையறை போன்றவற்றை நோக்கியும் நீட்டிப் படுக்கக்கூடாது. முக்கியமாக வீட்டின் வாசலை நோக்கி கால்களை நீட்டிப் படுக்கக்கூடாது. இந்த நிலையில் இறந்த பிணத்தை தான் வைப்பார்கள்.

கனவுகள் ஏன் வருகின்றது? இந்த கனவுகள் கண்டால் ஆபத்தாம்!!

 

கனவுகள் ஏன் வருகின்றது?

ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவுகள் வருவது இயல்பு. இத்தகைய கனவுகள் ஏன் வருகிறது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். மேலும் கனவுகள் பற்றி சில உண்மைகளைப் பற்றி பார்ப்போம்.

கனவுகளுக்கான காரணங்கள் : உடலில் உள்ள பித்தம், வாதம், கபம் போன்ற தாதுக்கள் பாதிக்கப்படுதல் போன்ற காரணங்கள் கூட கனவு வருவதற்கு காரணமாக இருக்கலாம்.
எந்தப் பொருளையாவது பற்றி அதிகமாக நினைத்துக்கொண்டு அல்லது கவலைப்பட்டுக்கொண்டு இருத்தல் மற்றும் எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினைகள் போன்ற காரணங்களாலும் ஏற்படலாம். உடலில் உள்ள ரகசியமான உள்நோய்கள் மற்றும் பிறருடன் முன்பு கொண்டுள்ள பழக்கம் இது போன்ற பலவகை காரணமாக கனவு ஏற்படலாம்.

பலிக்காத கனவுகள் எது? பகல் நேரத்தில் காணும் கனவுகள், காலை விழித்ததும் மறந்துபோகும் கனவுகள், நீண்ட நேரம் தொடர்ச்சியாக காணும் கனவுகள், நள்ளிரவுக்கு முன்னே காணும் கனவுகள் ஆகியவை பலிக்காதாம்.

தீய கனவுகள் என்ன? ஒருவருடைய கனவில் நாய், நரி, ஆண் எருமை, கருமையான பெண், கருமை நிறமுள்ள விலங்குகள் ஆகியவற்றை கண்டால், துக்கம் மற்றும் பயம் ஏற்படும் என்று அர்த்தமாம். ஓடுவது போல கனவு வந்தால், அதற்கு இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும், அங்கேயே தொடர்வது தீமை நேரிடும் என்று அர்த்தம்.

சிவந்த உடை, கருமை நிற உடை, சிவந்த சந்தனம் பூசிய பெண், எள், பன்றி, பூனை ஆகியவற்றை கனவில் கண்டால், அது மரணத்தைக் குறிக்கும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவை விழுவது போன்ற காட்சிகளைக் கனவில் கண்டால். அது துக்கம், மரணபயம் ஏற்படும் என்று அர்த்தம்.

கடல், தாமரைப் பொய்கை, மணல் திட்டு ஆகியவற்றைக் கனவில் கண்டால் அதற்கு செல்வம் நாசம் ஏற்படும் என்று அர்த்தம். எண்ணெய் தேய்த்து குளித்தல், பல் விழுவது போன்று கனவில் கண்டால், அதற்கு நோய் வாய்ப்பட நேரிடும். கஷ்டம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

கனவில் பெரிய மணி ஓசை வந்தால், அது ஒரு துன்பத்திலிருந்து விலக இருக்கிறோம். அந்தத் துன்பத்தை ஏற்படுத்திய செயலை மீண்டும் செய்யக் கூடாது என்று அர்த்தம்.

ஒருவரின் கனவில் காவல் நிலையம் என்றால் செய்கின்ற முயற்சியில் கவனம் தேவை. பிச்சை எடுத்தல் என்றால் சரிவு ஏற்பட உள்ளது. கடிகாரம் என்றால் தடுமாற்றம் ஏற்படும். மழைத் தூறல் என்றால் உறவினர்கள் மூலம் பிரச்சனை ஏற்படும் என்று அர்த்தமாகும். இது போன்ற கெட்ட கனவுகளைக் காண நேரிட்டால், உடனே எழுந்து கை, கால்கள் சுத்தம் செய்து, திருநீறு அணிந்து, தெய்வ நாமத்தை 12 முறை உச்சரித்து வணங்க வேண்டும்.