சென்னையில் உள்ள விடுதியில் தொழிலதிபர் ஒருவர் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. கடிதத்தில், வாங்கிய கடனுக்காக சொந்தமான இடத்தை உறவினர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்து பறித்துக்கொண்ட தகவல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொள்ள தொழிலதிபர் கிருஷ்ணவேல், அவரின் மனைவி உமா ஆகியோர் முடிவுசெய்துள்ளனர். அப்போது குழந்தைகளைச் சாகடிக்க அவர்களுக்கு மனமில்லை. இதனால் தற்கொலை செய்வதற்கு முன் அவர்கள், குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளனர்.
குழந்தைகள் மயங்கியபிறகு, இருவரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்துள்ளனர் என்ற தகவல் பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்பாவும் அம்மாவும் இப்படி பண்ணிவிட்டார்களே என்று இரண்டு பிள்ளைகளும் மருத்துவமனையில் கதறி அழுதுள்ளனர். தங்களுடைய அப்பா, அம்மாவின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிசாரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.
மீடூவில் பாலியல் புகார் கூறியதில் இருந்தே தன்னை பாலியல் தொழிலாளி என்று குற்றம் சாட்டுகிறார்கள் என பாடகி சின்மயி கூறியிருக்கிறார். பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீடூ இயக்கத்தின் மூலம் பாலியல் புகார் எழுப்பியிருந்தார்.
இது கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் பரபரப்பான செய்தியானது. இதன் பின்னர் ராதாரவியுடன் மோதல் தொடங்கியது. ராதாரவிக்கு டத்தோ பட்டம் கொடுக்கப்பட்டது என்பதே பொய் என்று டுவிட்டரில் கடித ஆதாரத்துடன் கூறிய சின்மயி, மீண்டும் அது தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
இந்த நிலையில் பேஸ்புக் நேரடி வீடியோவில் பேசிய அவர், மீடூ பற்றி பல்வேறு விடயங்களை முன் வைத்தார். அதனைத் தொடர்ந்து தன்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்க ராதாரவி சதி செய்திருப்பதாகக் கூறினார்.
ராதாரவி டத்தோ பட்டத்தை பயன்படுத்திக் கொள்வதில் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால், அதை அவருடைய லெட்டர் பேட், டப்பிங் வளாகக் கட்டிடம் என எல்லா வற்றிலும் பயன்படுத்திய தாலேயே நான் அதைப் பற்றி ஆராய்ந்தேன். அப்போது தான் மெலாகா அரசு டத்தோ பட்டம் தரவே இல்லை என்பது தெரிய வந்தது.
பாலியல் வன்கொடுமைகளை மறைக்காதீர்கள். இதை மூடி மறைக்கக்கூடாது. வெட்கப்பட வேண்டியது பெண்களும் குழந்தைகளும் கிடையாது என்பதே மீடூவின் அடிநாதம். பெண்களுக்கு மட்டும் இது நிகழ்வதில்லை. ஆண் குழந்தைகளுக்கும் நிகழ்கிறது. என்னிடம் நிறைய ஆண்கள் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை சொல்லியிருக்கின்றனர். இது நம்மை நாமே கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய தருணம். மீடூவில் நான் புகார் சொன்ன பிறகு.
நிறைய பெண்கள் என்னை இந்த சமூக வலைதளங்கள் எப்படிப் பார்க்கிறது என்று உற்று நோக்கினார்கள். என்னை அவ்வளவு வசைபாடுகிறார்கள். தமிழில் இருக்கும் எல்லா கெட்ட வார்த்தைகளை சொல்லித்தந்த தமிழ் ஆண்மகன்களுக்கும் நன்றி. நீ யோக்கியமா? நீ ஒழுக்கமா? நீ உத்தமியா என்று கேட்பார்கள்.
அப்புறம் என்னை பாலியல் தொழிலாளி என்பார்கள். ஒரு விஷயம் சொல்கிறேன். நீங்கள் என்னை பாலியல் தொழிலாளி எனக் கூறுவதால் நான் வெட்கித் தலை குனிய மாட்டேன். இந்த உலகிலேயே ஆண்களுக்காக மட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில். ஆண்களின் பல்வேறு பாலியல் தேவைக்காகவே இந்தத் தொழில் இருக்கிறது.
ஒருவேளை அந்த தொழிலாளிகள் எல்லாம் திருந்திவந்தால் நீங்கள் சமூகத்தில் அவர்களுக்கு இடமா கொடுக்கப் போகிறீர்கள்? இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்கள் வீட்டு பெண்கள் பாலியல் புகார் சொன்னால், வேலைக்கு போகாதே படிக்கப் போகாதே என்று வீட்டுக்குள் பூட்டி வைக்காதீர்கள். தப்பு செய்தவர்களை திருத்துங்கள். பாதிக்கப்பட்டவரை கேவலப்படுத்தாதீர்கள், அசிங்கப்படுத்தாதீர்கள். பாலியல் வன்கொடுமைகள் ஏன் நடக்கிறது. எதற்கு நடக்கிறது என்று பேசுங்கள்.
குடும்பம், கல்வி நிறுவனம், பணியிடம் என எல்லா இடத்திலும் பேசுங்கள். ஆண்களும் நம்மை புரிந்து கொள்வார்கள். எதுவாக இருந்தாலும் பேசி முடிவு செய்யலாம். சமூகம் அதற்கான மாற்றம் கண்டு வருகிறது.
திருமணத்துக்குப் பின் கணவன் மனைவியின் விருப்பம் இல்லாமல் உறவு கொண்டால் அது மேரிட்டல் ரேப் என்று பேசும் அளவுக்கு இப்போதெல்லாம் சமூக மாற்றம் வந்திருக்கிறது. இன்னும் மாற்றம் வர வேண்டுமானால் அதற்கு விவாதமும் ஆலோசனையும் செய்யப்பட வேண்டும். எனவே வெளிப்படையாக பேசுங்கள். இதில் நீங்கள் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. இன்று சமூகம் சில விமர்சனங்களை முன்வைத்தாலும்கூட விரைவில் மாற்றம் வரும் என சின்மயி அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த மூன்று மாணவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் யாழ். கந்தர்மடம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்கள், அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இரண்டாம் வருட மாணவர்கள் தமக்கு மரியாதை தருவதில்லை என்ற காரணத்தை முன்வைத்தே, குறித்த மாணவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத் தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று மாணவர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டாம் வருட மாணவர்களுடன் தங்கியிருந்த சக மாணவன் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையின் சில பகுதிகளில் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தை சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தின் போது புகைப்படத்தினை இணையத்தினூடாக பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த முறையானது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, ராசேந்திரகுளம் பகுதியில் வீட்டிற்குள் முதலை ஒன்று புகுந்துள்ள நிலையில் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
ராசேந்திரகுளம் அருகிலுள்ள வீட்டு வளவு ஒன்றிற்குள் இன்று அதிகாலை 1 மணியளவில் ராசேந்திர குளப்பகுதியிலிருந்த முதலை ஒன்று உணவு தேடிச் சென்று ஒளிந்து கொண்டுள்ளது.
வீட்டு நாயின் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் வெளியே சென்று பார்வையிட்டபோது முதலை ஒளிந்து நின்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகாலை பொலிஸார் சென்று முதலையை மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதோடு, வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்தவை பிரதமராக நியமித்தமை மற்றும் அமைச்சரவை அமைசர்களுக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று மேன் முறையீட்டு நீதிமன்றில் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 16, 17, மற்றும் 18ஆம் திகதிகளுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை மஹிந்த ராஜபக்சவினால் கடந்த 3ஆம் திகதி நீதிமன்றத்தில் மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடைக்கு எதிர்ப்பு வெளியிட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட 122 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக செயற்படவும் அமைச்சரவை அமைச்சர்கள் 49 பேருக்கு எதிராகவும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 14ம் திகதி முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 7ம் திகதி வரை நீதிபதிகளுக்கான வருடாந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் அடுத்த வரும் இரு தினங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டமை மற்றும் 49 பேருக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்கப்பட்டமைப்பு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி உட்பட அமைச்சரவையை தடை செய்வதற்கு கடந்த 3ஆம் திகதி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
அதற்கமைய மனு விசாரிப்பதற்காக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீத்தி பத்மநாதன் சூரசேன மற்றும் அர்ஜுன் ஒபேசேகரவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனு தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல் வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 122 உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் அமைச்சரவையின் செயற்பாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை இந்த மனு விசாரணை நிறைவடையும் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரணிலை பிரதமராக நிமியக்க கோரி ஐக்கிய தேசிய முன்னணியால் கொண்டுவரப்படும் நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ரஜகருணா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த பிரேரணைக்கு ஆதரவாக மக்கள் விடுதலை முன்னணி வாக்களிக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“ரணிலை பிரதமராக நிமியக்க கோரி ஐக்கிய தேசிய முன்னணியால் நாளை நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைக்கும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எனினும், மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்காது என தெரிகின்றது.
நாடாளுமன்றில் இருக்கும் 225 உறுப்பினர்களின் எண்ணிக்கை முழு நாட்டையும் குறிக்கும்.
இந்நிலையில், 225 உறுப்பினர்கள் கோரினாலும் ரணிலை பிரதமராக்க மாட்டேன் என ஜனாதிபதி கூறுவது, இந்த முழு நாட்டு மக்களையும் மதிக்க மாட்டேன் என்று கூறுவதற்கு சமன்” என ஹர்சன ரஜகருணா மேலும் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்றில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நேற்று மாலை மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்திலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மூதூர் பெரிய பாலம் பகுதியைச் சேர்ந்த மஹ்ரூப் மஹ்சூம் 25 வயதுடைய இளைஞயொருவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த டிப்பர் சராதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அப்பிரதேச மக்கள் வீதியில் கட்டைகளை இட்டு போக்குவரத்துக்கு தடங்கல்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே குறித்த டிப்பர் வாகனம் வீதியில் சென்ற இளைஞன் மீது மோதியுள்ளதாகவும், விபத்தில் சிக்கிய நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த டிப்பர் வாகன சாரதியை கைது செய்ததுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு பகுதியில் மூன்று வயது சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். றஜீவன் றெபின்சன் என்னும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சிறுவனின் சடலம் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்காக நேற்று வைக்கப்பட்ட நிலையில் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பழைய பேரூந்து நிலையத்திற்கு நேர அட்டவணைக்கு ஏற்ப வந்து செல்லாமையால் சீரான சேவையை வழங்க முடியாதுள்ளதாக வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர் இ.ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து 3 நிமிடம் தரித்து செல்ல எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக கடந்த சனிக்கிழமை பழைய பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இருப்பினும் முன்னர் இடம்பெற்றதைப் போன்று வெளிமாவட்ட பேருந்துகள் பயணிகளை பழைய பேரூந்து நிலையத்தில் இறக்கி, ஏற்றுகிற போதும் உள்ளூர் சேவைகள் வரவில்லை. இது குறித்து கேட்ட போதே மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பழைய பேரூந்து நிலையத்திற்கு நேர அட்டவணைக்கு ஏற்ப இ.போ.சபை பேருந்துகள் வந்து செல்லவில்லை. அத்துடன் பழைய பேரூந்து நிலையத்தில் நேரக்கணிப்பாளர்களும் கடமையில் நிறுத்தப்படவில்லை. இதன்காரணமாகவே தனியார் பேருந்துகள் சீராக பழைய பேரூந்து நிலையத்திற்கு வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கான திறன்விருத்தி செயலமர்வு மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெயகெனடியின் ஏற்பாட்டில் இன்று(11.12) வவுனியா மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்றது.
இதன்போது வீதி போக்குவரத்து, முதலுதவி, சிறுவர் பாதுகாப்பு, தலைமைத்துவம், சிறுவர் உரிமை, மகிழ்ச்சிகரமான விளையாட்டு, விஞ்ஞானத்தின் மகிமை போன்ற தலைப்பின் கீழ் சிறுவர்களிற்கான திறன்களை விருத்தி செய்வதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.
உதவி அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இ.முஹமட் ஹனீபா, மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் கிராம மட்டங்களில் உள்ள சிறுவர் கழகங்கள் மற்றும் சிறுவர் இல்லங்களை சேர்ந்த சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் திட்டமிடப்படாத செயற்பாட்டால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தோணிக்கல் மற்றும் அதனையண்டிய கிராம மக்களும், மீன் வியாபாரிகளும் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையினால் தோணிக்கல் பகுதியில் ஓரு பொதுச்சந்தை அமைக்கப்பட்டது. இச் சந்தை மக்கள் நடமாட்டம் குறைந்த எல்லைப் பகுதியில் காணப்பட்டமையால் மக்கள் செல்லாமையால் திறந்து சில மாதங்களுக்குள்ளேயே பூட்டப்பட்டது.
தற்போது குறித்த பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) புதிய சந்தையை இயக்குவதற்காக குறித்த சந்தையில் இருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்த மீன் விற்பனை நிலையம் மற்றும் கோழி இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதுடன் இவ் வியாபார நிலையங்களின் அனுமதியையும் ரத்து செய்துள்ளார்.
இதன் காரணமாக குறித்த தொழிலை தமது வாழ்வாதாரமாக கொண்டிருந்த வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளதுடன், பண்டாரிகுளம், மேட்டுத்தெரு, லக்ஸ்சபானா வீதி, தோணிக்கல், ஆலடி வீதி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பாதிப்படைந்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நூறு ரூபாய்க்கு மீன் வாங்க இருநூறு ரூபாய் செலவழித்து சந்தை அமைந்துள்ள தூரத்திற்கு செல்லவேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
6 தொடக்கம் 16 வருடங்கள் வரை குறித்த கிராமங்களில் மீன் மற்றும் கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்ட வியாபாரிகள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் பொறுப்பற்ற செயற்பாட்டால் தொழிலை இழந்துள்ளதுடன் புதிய சந்தையிலும் தமக்கான இடம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் பிரதேச சபை தலைவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் பயனளிக்கவில்லை.
இதேவேளை குறித்த சந்தை குறித்த தவிசாளர் கடந்த முறை உபதவிசாளராக இருந்த போதே கட்டப்பட்டு பயன்பாடின்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிக் பாஷ் டி20 லீக் தொடரை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த தொடர் டிசம்பர் – ஜனவரி மாதம் நடைபெறும். 2018 -19 ஆண்டிற்கான தொடர் வருகிற 19 ஆம் திகதி தொடங்குகிறது.
கிரிக்கெட் போட்டியில் ஸ்டம்பிற்கு மேல் வைக்கப்படும் பெய்ல்ஸ் (Bails) மரக்கட்டையால் செய்யப்பட்டது. இதை வித்தியாசமாக காட்டுவதற்காக பிக் பாஷ் தொடரில், பெய்ல்ஸ் மீது பந்து மற்றும் எதாவது தாக்கினால் லைட் எரியும் வகையில் அறிமுகம் படுத்தப்பட்டது.
பின்காலத்தில் சர்வதேச போட்டியிலும் இந்த பெய்ல்ஸ் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது போட்டி தொடங்கும்போது நாணயம் சுண்டப்படும். நாணய சுழற்சியை வெல்லும் அணி துடுப்பாட்டததை அல்லது பந்து வீச்சை தேர்வு செய்யும். இந்நிலையில் பிக் பாஷ், நாணயத்தை சுண்டுவதற்குப் பதிலாக துடுப்பாட்ட மட்டையை சுண்டுவதற்கு முடிவு செய்துள்ளது.
வருகிற 19 ஆம் திகதி முதல் போட்டியில் இந்த முறை அறிமுகப்படுத்த இருக்கிறது.
நாணயம் சுண்டப்படும் போது டெய்ல் விழுந்ததா? ஹெட் விழுந்ததா? என்பது ரசிகர்களுக்கு தெளிவாக தெரியவில்லை. இதனால் துடுப்பாட்ட மட்டையை சுண்ட முடிவு செய்துள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கறுப்பின பள்ளி மாணவி மீது சக மாணவ, மாணவிகள் இனவெறி தாக்குதல் நடத்தியதால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். Alabama மாகாணத்தை சேர்ந்தவர் மெக்கன்சி ஆடம்ஸ் (9). இவர் ஜோன்ஸ் எலிமெண்டரி பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார்.
மெக்கன்சி கருப்பின சிறுமியாவார். இதையடுத்து அவர் மீது பள்ளியில் உள்ள சக மாணவ, மாணவிகள் நிறம் மற்றும் இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் வெள்ளை நிற சிறுவன் பள்ளியில் மெக்கன்சிக்கு நெருங்கிய தோழனாகியுள்ளான். இதை வைத்து மெக்கன்சியை பலரும் கிண்டல் செய்துள்ளனர்.
அதாவது, நீ வெள்ளை நிறத்திலான மாணவனுடன் நட்பு கொண்டால் நீயும் வெள்ளையாகி விடுவாயா? நீ அசிங்கமானவள், செத்துவிடு என்றெல்லாம் தொடர்ந்து மெக்கன்சியை சக மாணவ, மாணவிகள் கிண்டல் செய்துள்ளனர். இதனால் மன அழுத்தத்தில் இருந்த மெக்கன்சி சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பேசிய மெக்கன்சியின் உறவினர் எட்வினா, ஒரு ஆண்டு முழுவதும் சக மாணவ, மாணவிகளால் அவள் கிண்டல் செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மெக்கன்சிக்கு பரிசளிக்க யோசித்து கொண்டிருந்தோம், தற்போது அவள் இறுதிச்சடங்கு குறித்து யோசித்து கொண்டிருக்கிறோம் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மெக்கன்சியின் பள்ளி நிர்வாகம் சார்பில் பேசிய நபர், பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள், நாங்கள் அதற்கு முழு ஒத்தழைப்பு கொடுத்து வருக்கிறோம், இதற்கு மேல் தற்போது எதுவும் பேச முடியாது என கூறியுள்ளார்.
மலேசியாவில் மலைப்பாம்பிடம் தனது உயிரை பறிகொடுத்து தனது எஜமானரின் குடும்பத்தினரை காப்பாற்றிய நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Jalan Kejatau பகுதியில் உள்ள வீட்டில் வாழும் குடும்பத்தார் நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். இன்று காலை குடும்பத்தார் தங்களை நாய் எங்கே என தேடியபோது அது காணாமல் போயுள்ளது.
அப்போது வீட்டின் முற்றத்துக்கு வந்தபோது நாய் மூச்சற்ற நிலையில் படுத்திருந்த நிலையில் அருகில் பெரிய மலைப்பாம்பு படுத்திருந்ததை பார்த்து குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் பாம்பை அவர்கள் தாக்க தொடங்கிய நிலையில் பாம்பானது அங்கிருந்த பெரிய ஓட்டைக்குள் புகுந்தது.
பின்னர் நாயை பரிசோதனை செய்தபோது அது ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. தன்னுடைய எஜமானரின் வீட்டுக்குள் நுழைய முயன்ற மலைப்பாம்பை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் நாய் தனது உயிரை விட்டது.
இதையடுத்து குடும்பத்தார் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஊழியர்கள் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு பாம்பை மீட்டனர். பாம்பானது 20 அடி நீளத்தில் இருந்தது என அவர்கள் கூறினார்கள். தங்கள் நாயை பறிகொடுத்த குடுமபத்தார் கூறுகையில், எங்கள் நாயின் இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாயானது பாம்புடன் போராடாமல் இருந்திருந்தால் எங்கள் வீட்டிற்குள் அது வந்திருக்கலாம் என கூறியுள்ளனர்.