அணைத்த அமானுஷ்ய மனிதன், அதிர்ந்த பிரித்தானிய இளம்பெண் : சில்லிட வைக்கும் ஒரு சம்பவம்!!

பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண், படுக்கையிலிருக்கும்போது தன்னை யாரோ அணைக்க, ஒரு வேளை தனது கணவனாக இருக்குமோ என எண்ணிப் பார்க்க, அங்கு யாரையும் காணாமல் திகிலில் உறைந்தார்.

NC என்ற பெயரில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்த இளம்பெண், ஒரு நாள் அதிகாலையில் தனது கணவர் படுக்கையில் இருந்து எழுந்ததால் விழித்துக் கொண்டார்.

படுக்கையில் இருக்கும்போதே அவரது கணவர் கதவை மூடும் சத்தம் கேட்க, அவர் அலுவலகம் கிளம்பி விட்டதை உறுதி செய்து கொண்டவராக மீண்டும் தூங்க முயலும்போது, திடீரென கட்டிலில் யாரோ அமர்வதை உணர்ந்திருக்கிறார்.

அப்போது யாரோ அவருக்குப் பின்னால் படுத்துக் கொண்டு, தன் கைகளால் அவரை அணைக்க, அவரது தோள் பட்டை எலும்புகள் சூடாகியிருக்கின்றன.

ஒருவேளை தனது கணவராக இருக்குமோ என்ற எண்ணம் வந்தாலும், அவருக்கு அப்படி சர்ப்ரைஸாக கட்டியணைக்கும் பழக்கமோ, முத்தமிடும் பழக்கமோ இல்லை என்கிறார் அவர்.

பின்புறம் இருந்து யாரோ அணைத்ததால் கூச்சமாகவும் அதே நேரத்தில் குண்டூசிகளால் குத்துவது போல் இருந்தாலும் அதுவும் நன்றாகவே இருந்ததாகவும் தெரிவிக்கிறார் அவர்.

அந்த அணைப்பு இதமாகவும் சுகமாகவும் இருந்ததாக தெரிவிக்கும் அவர், முதலில் அமைதியாக இருந்ததாகவும் ஆனால், பிறகு பயந்து நடுங்கி அழத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.

அவரது பயத்துக்கும் அழுகைக்கும் காரணம் அவரது அப்பா. அவரது அப்பா 9 ஆண்டுகளுக்கும் முன் இதே வீட்டில் திடீரென இறந்து போய்விட்டிருக்கிறார்.

அப்போதெல்லாம் அவரது தாயார் அடிக்கடி, தனது கட்டிலில் தன் அருகே யாரோ வந்து அமர்வது போல் உணர்ந்துள்ளதாகவும், அப்படி யாரோ உட்காரும்போது மெத்தை அழுந்துவதையும் கண்டிருப்பதாகவும் கூறுவதுண்டு.

அப்போதெல்லாம் தனது தாயிடம், அவர் துக்கமாக இருப்பதால், அவர் அப்படி உணர்வதாக கூறுவதுண்டு NC.

தற்போது தனது அனுபவத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு உதவி கோரிய NCக்கு, பலரும், தாங்களும் அதேபோன்ற அனுபவங்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வேறு சிலரோ NC தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் அப்படி உணர்ந்ததாகக் கூற, அவரோ, தனது கணவர் பல் விளக்கும் ஒலியையும், காபி கெட்டிலை அடுப்பில் வைக்கும் ஒலியையும் கேட்டதையும், அவர் வெளியே செல்லும்போது கதவை மூடும் சத்தத்தையும் தான் தெளிவாக கேட்டதால் தான் தூக்க மயக்கத்தில் இருக்கவில்லை என்கிறார்.

இன்னொரு பெண்மணியோ, தானும் இத்தகைய அனுபவத்தைப் பெற்றுள்ளதாகவும், தனது பூனை ஒன்று இறந்து போனதாகவும், பின்னர், தான் அடிக்கடி அந்த பூனையை பார்ப்பதாகவும், வெள்ளிக்கிழமைகளில் கனமான ஒரு சூழல் நிலவும்போது கார் விபத்தில் இறந்துபோன தனது பூனையை தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

அது NCயின் அப்பாவாகத்தான் இருக்கும் என்று கூறும் அந்த பெண், உனது பயம் நீங்கும்போது, உன்னை நேசிக்கும் ஒருவர் உன்னை சந்தித்ததற்காக நீ நிச்சயம் மகிழ்ச்சி அடைவாய் என்றும் கூறியுள்ளார்.

வெளிநாட்டில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த அவலம் : மகனுக்காக கதறும் தாய் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆடிசம் குறைபாட்டினால் இருக்கும் தன் மகனின் சிகிச்சைக்காக தொடர்ந்து போராடி வரும் சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்தவர் ரஜினி ஜெயதிலகா. திருமணம் முடிந்த நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு இவர் கணவருடன் துபாயில் குடியேறியுள்ளார். அதன் பின் சில மாதங்களிலே கணவருக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜெயதிலகாவின் கணவர் இவரை தனியாக விட்டு போலாந்துக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது இவர் ஆடிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் நான்கு வயது மகனான Javindu Jayathilaka-வின் சிகிச்சைக்காக போராடி வருகிறார்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு இவர் அளித்துள்ள பேட்டியில், எங்களின் திருமண உறவு நன்றாக இல்லை, நான் 6 மாத கர்ப்பிணியாக இருந்த போதே உறவு முடிவுக்கு வந்துவிட்டது.

அதன் பின் குழந்தை பெற்றுக் கொண்டேன். குழந்தை பிறக்கும் போதே என்னுடைய குழந்தை சாதரணமாக இல்லை. இதனால் 2016-ஆம் ஆண்டு குழந்தையின் உடல்நிலை பற்றி அறிவதற்காக சோதனை மேற்கொண்டேன்.

அப்போது அவன் ஆடிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். என் கணவர் தன் மகனுக்கு Dh300,000 கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் தற்போது வரை அதை கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் ஜெயதிலகா அட்மினிஷ்டிரேடிவ் எக்சிகியூடிவ்வாக இருப்பதால், தன்னுடைய மகனுக்கு இயன்ற அளவு சிகிச்சை எடுக்க முடியவில்லை.

அதுமட்டுமின்றி இந்த குறைபாட்டின் காரணமாக சில நேரங்களில் அவருடைய மகன் ஜவிந்து அதிகம் கோபப்படுவாராம். இதன் காரணமாகவே அவர் தன் மகனின் நிலைமைக்காக பல நாட்கள் விடுமுறை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இப்படி பல போராட்டங்களுக்கு பின் இறுதியாக Dubai Autism Centre-ல் மகனிற்கு சிகிச்சை அளிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இன்சுரன்ஸ் பணம் அந்தளவிற்கு இல்லை.

பல மருத்துவர்களிடம் அவர் தன் மகனை அழைத்துச் சென்று காண்பித்துள்ளார். ஆனால் மகனிடம் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

இதனால் இதற்கு என்ன தீர்வு என்பதை ஆராய்ந்துள்ளார். அப்போது தான் அவர் stem cell therapy மூலம் குழந்தைகளின் ஆட்டிசம் நோயை குணப்படுத்த முடியும் என்பதை கண்டறிந்துள்ளார்.

இதற்கான சிகிச்சை அமெரிக்காவில் கொடுக்கப்படுகிறது. ஆனால் அங்கு 18 வயதிற்கும் குறைவானவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சட்டவிரோதம் என்று கூறப்படுகிறது.

ஆனால் இதே சிகிச்சை மெக்சிகோவில் செய்து கொள்ளலாம் என்பதை அறிந்துள்ளார்.

இதையடுத்து அவர் வரும் ஜனவரி மாதம் 2-ஆம் திகதி மெக்சிகோவிற்கு மகனின் சிகிச்சைக்காக பறக்கவுள்ளார். அதற்கான செலவு 25,000 டொலர் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.

ஜெயதிலா என்னுடைய மகனின் இந்த நிலையை மாற்ற வேண்டும், அவனும் சாதரண குழந்தைகள் போன்று பள்ளிக்கு செல்ல வேண்டும். எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு இது தான் என்று கூறியுள்ளார்.

ஜெயதிலா இதற்காக எந்த ஒரு நிதியும் கேட்டது போன்று தெரியவில்லை என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆடிசம் என்பது மூளை, தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல், மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம் எனப்படும்.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு!!

 

மன்னார் மனித புதைகுழி

மன்னார் மனித புதை குழி அகழ்வுகளின் போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இது வரை 21 சிறுவர்களுடைய எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். மன்னார் மனித புதை குழியின் அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (11) 115 ஆவது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை (11) மாலை 3.30 மணியளவில் அகழ்வு பணிகள் இடம் பெறும் இடத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த புதை குழியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (11) மாலை வரை 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மாதிரிகள் ‘காபன்’ பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் அளவில் காபன் பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்பப்படும்.கடந்த வாரம் அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது சுமார் 2 மீற்றர் அளவில் சந்தேகத்திற்கு இடமான மனித எலும்பு மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மனித எலும்பு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை இவ்வாறான 3 மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளது.

இது வரை அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 21 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.

அப்பா என்னை ஏமாற்றிவிட்டார்: 7 வயது மகள் பொலிஸ் நிலையத்தில் புகார்!!

 

7 வயது மகள் புகார்

தமிழகத்தில் தந்தை தன்னை ஏமாற்றிவிட்டதாக அவரின் 7 வயது மகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தின் ஆம்பூரை சேர்ந்த அனுல்லா – மெக்கரீனா தம்பதியின் மகள் ஹனிபா ஜாரா (7).

இவர்கள் வீட்டில் கழிவறை கிடையாது. இதனால் சிரமத்துக்கு ஆளான ஹனிபா தனது தந்தையிடம் கழிவறை கட்டிதருமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதனை கேட்டு கொண்ட தந்தை அனுல்லா, பள்ளி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றால் வீட்டில் கழிவறை கட்டி தருகிறேன் என கூறினார்.

இந்நிலையில் ஒரு ஆண்டாக சிறுமி ஹனிபா பொறுத்திருந்தும் தந்தை அனுல்லா கழிவறை கட்டிதரவில்லை. இதையடுத்து நேற்று நேராக காவல் நிலையத்துக்கு சென்றார் சிறுமி ஹனிபா. அங்கு, அவர் கொடுத்த புகாரில், தந்தை சொன்னதை போல நான் தொடர்ந்து தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்று வருகிறேன். ஆனால் அவர் சொன்னதை போல கழிவறை கட்டி தராமல் என்னை ஏமாற்றி விட்டார் என தெரிவித்தார்.

இதை கேட்டு பொலிசார் மிரட்சியடைந்த நிலையில், ஹனிபாவின் தந்தை அனுல்லாவை வரவழைத்து வீட்டில் கழிவறை கட்ட அறிவுறுத்தினர். இது பற்றி ஆம்பூர் சுகாதார ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஹனிபாவின் வீட்டில் கழிவறை கட்டுவதற்கான பணியை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து ஹனிபாவின் தந்தை அனுல்லா கூறுகையில், எனக்கு கடன் பிரச்சனை இருந்ததால் ஹனிபாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. என்னிடம் சொன்ன மாதிரி அவர் தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுத்தார், இன்னும் ஒரு மாதத்தில் வீட்டில் கழிவறையை கட்டி தருவேன் என கூறியுள்ளார்.

ஹோட்டலில் உள்ளாடையோடு உட்கார வைத்து கொடுமை : நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் கண்ணீர்!!

 

பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்

பிரபல திரைப்பட நடிகரான பவர்ஸ்டார் என்னை ஹோட்டல் அறையில் உள்ளாடையோடு உட்கார வைத்து டார்ச்சர் செய்ததாக வேதனையுடன் கூறியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த ஆலம் மற்றும் அவரின் கூட்டாளிகள், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை சென்னையிலிருந்து ஊட்டிக்குக் கடத்தி சென்றனர்.

அங்கு பவர் ஸ்டாரின் மனைவி ஜூலியின் பெயரில் உள்ள வீட்டை எழுதித்தரும்படி ஆலம் தரப்பினர் பவர் ஸ்டார் சீனிவாசனையும், மனைவி ஜூலியையும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து 6 நாட்கள் சிறை வைத்திருந்த நிலையில், அவர்களிடமிருந்து தப்பிய ஸ்ரீனிவாசன் சென்னை கோயம்பேடு காவால்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பின் பொலிசார் குறித்த பகுதிக்கு சென்று, ஸ்ரீனிவாசனின் மனைவியை மீட்டு. அங்கிருந்த 7 பேரை கைது செய்தனர். பொலிசார் இது குறித்து அந்த 7 பேரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் இது குறித்து பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், 6 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவைச் சேர்ந்த ஆலம் என்பவரிடம் 1.25 கோடி ரூபாய் கடன் வாங்கினேன். அதில் 35 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டேன். மீதமிருக்கும் 90 லட்சம் ரூபாய் திருப்பி கொடுப்பதாக கூறினேன், அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த சமயத்தில் தான் பிரித்தி என்ற சினிமா பி.ஆர்.ஓ கடந்த 5-ஆம் திகதி என்னிடம் பேசினார். அவர் பட வாய்ப்பு இருப்பதாக கூறி கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு வரும் படி கூறினார். அங்கு நான் சென்ற போது, செல்வின் என்பவரின் தலையில் சிலர் இருந்தனர். அவர்கள் ஆலம் என்பவரிடம் வாங்கிய பணத்தை உடனடியாகக் கொடுக்கும்படி மிரட்டினர்.

என்னுடைய பேன்ட், சட்டை மற்றும் இரண்டு செல்போன்களைப் பறித்து உள்ளாடையுடன் உட்கார வைத்தனர். அப்போது அங்கிருந்த ஒருவர் என் மீது இரக்கப்பட்டு என்னுடைய உடைகளை எனக்குக் கொடுத்தார். சாப்பாடு கூட சரியாக தரவில்லை, 5ஆம் திகதி என்னை கடத்திய அவர்கள் 6ஆம் திகதி ஊட்டிக்கு அழைத்துச் சென்று ஆலமிடம் ஒப்படைத்தனர்.

6ஆம் திகதி காலை தான் இட்லி மாலையில் இரண்டு சப்பாத்தி வாங்கிக் கொடுத்தனர். என்னை அடித்தனர் தப்பி சென்றால் சுட்டுவிடுவோம் என்று மிரட்டினர். அதன் பின் என் மனைவியையும் இங்கு வரவழைத்தனர். அவளையும் டார்ச்சர் செய்தனர். எங்களிடம் சில கையெழுத்து வாங்கினர்.8-ஆம் திகதி என் குழந்தைகள் மூலம் கடத்திய விவகாரம் மீடியாக்களுக்கு தெரிந்துவிட்டதால், அவர்களிடம் கெஞ்சிய பின்னரே என்னை விட்டனர். அப்போது கூட பொலிசுக்கு போனால் உன் குடும்பமே இருக்காது என்று மிரட்டினர். 10ஆம் திகதி வந்தவுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன் என்று கூறியுள்ளார்.

மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!!

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலையூர் பேராசிரியர்கள் காலனியில் வசிப்பவர் ஜெயராஜ். இவர் மகள் மஹிமா (18). தாம்பரத்தில் உள்ள பிரபல கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் முதலாமாண்டு படித்து வந்தார்.

மஹிமா நேற்று மாலை 5.30 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக சக மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு மஹாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாகக் கூறினார்கள்.

அவர் விளையாடும்போதே மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவிகள் அனைவரையும் விளையாட்டில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்துவதாகவும், சுகவீனமாக இருந்த மஹிமா கட்டாயமாக விளையாடியதே அவர் உயிரிழப்புக்குக் காரணம் என்றும் மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டனர்.

பின்னர் பொலிசார் தலையிட்டு அவர்களை கலைந்துபோகச் செய்தார்கள்.

பரபரப்பான கட்டத்தில் கொழும்பு : மும்முனைகளில் இரகசிய சந்திப்புகள்!!

நாளைய தினம் மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அரசியல் மட்டத்தில் முக்கிய சந்திப்புகள் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி, மஹிந்த தரப்பு, ரணில் குழுவினர் தனித்தனியா சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவுக்கு இடையில் இன்று இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கும் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் இன்று இடம்பெறும் கலந்துரையாடலில் நாளைய தினம் இடம்பெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுமந்திர முன்னணி கலந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி குழுவினர் இன்று இரவு அலரி மாளிகைளயில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

நாளைய தினம் இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இங்கு கலந்துரையாமல் மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கை பிரேரணை ஒன்று நாளைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம்!!

வவுனியாவில் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி ஜனநாயகத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (11.12) முன்னெடுத்திருந்தனர்.

பாதிப்பிற்கு மீள் கட்டுமானமா? பாதிக்கப்பட்டவர்களுக்கு மீள் கட்டுமானமா? என்ற பதாதையை தாங்கியவாறு வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள புதிய பேரூந்து நிலையத்திலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் பிரதம கணக்காளர் எஸ்.பாலகுமாரனிடம், மாவட்ட செயலாளரிடம் கையளிக்குமாறு மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

வீட்டுத்திட்டம், காணிப்பிரச்சனை, வாழ்வாதாரம் மற்றும் நிவாரணம் வழங்கப்படாமை போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி பாரதிபுரம் விக்ஸ் கிராமம், ஈஸ்வரிபுரம் மற்றும் கந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நல்லாட்சி ஏற்பட்டு மூன்றரை வருடங்களாகியும் எமக்கு தீர்வு கிடைக்கவில்லை, காணிகளுக்கு உரிமை மறுப்பது மனித உரிமை மீறல், வழங்கு வழங்கு காணிகளை வழங்கு, நல்லாட்சியை ஏற்படுத்திய தமிழ் மக்களின் வாழ்வில் நிம்மதி எப்போது போன்ற பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியாவில் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது!!

வவுனியா செக்கட்டிப்பிலவு பகுதியில் வீட்டில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் சட்டவிரோத 25 கசிப்பு போத்தல்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா செக்கட்டிப்பிலவு, பம்பைமடு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை இடம்பெற்றுவருவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மேற்கொண்ட திடீர் சற்றிவளைப்பு நடவடிக்கையின்போது அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த 750மில்லி லீற்றர் 25 சட்டவிரோத கசிப்புப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன் 33 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாகவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மகனை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய தந்தை : நள்ளிரவில் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

 

மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

சென்னையில் தனது 1½ வயது குழந்தையை கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட விவகாரததில் உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. சுரோஷ், ஜெயா தம்பதியினருக்கு கிஷோர் என்ற மகள் உள்ளான். சுரேஷ் தனியார் பண்ணை ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று வீட்டின் அறையில் சுரேஷ் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அருகில் குழந்தை கிஷோரும் பிணமாக கிடந்தான். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த தாய், ஜெயா இருவரின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும், அவரது வீட்டில் பொலிசார் சோதனை செய்தபோது, சுரேஷ் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.

அதில், என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள். நான் யாருக்கும் பயன் இல்லாமல் உள்ளேன். ஜெயா என்னை மன்னித்துவிடு. உன்னிடம் கூறாமல் இந்த முடிவை எடுத்து விட்டேன்.

எனது அக்கா கணவர் நகை, பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்கிறார். என்னால் நகை, பணம் கொடுக்க முடியவில்லை. எனவே எனது அக்கா கணவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா, அப்பாவிடம் சண்டை போட வேண்டாம். மகன் கிஷோரை விட்டு செல்ல மனம் இல்லை. எனவே அவனையும் என்னுடன் அழைத்து செல்கிறேன்’ என எழுதப்பட்டு இருந்தது.

சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளும் முன் பால் பாட்டிலில் வி‌ஷம் கலந்து குழந்தைக்கு கொடுத்து உள்ளார். அந்த பாலை குடித்த குழந்தை கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கானத்தூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம் : அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி!!

இளம் மனைவிக்கு நேர்ந்த கதி

இந்தியாவில் கணவரின் தவறான பழக்கத்தால் அவரை பிரிந்து வாழ்ந்த மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் ஹர்கேஷ் குமார். இவர் மனைவி கவிதா குமாரி (28). தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஹர்கேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில் கடந்த 2016-ல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஹர்கேஷ் போதை பழக்கத்துக்கு அடிமையானார். இது தொடர்பாக கணவன் மனைவி இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதன்பின்னர் தன்னை கொடுமை படுத்துவதாக கவிதா பொலிஸ் புகார் அளித்தார். அதே ஆண்டில் கணவரை பிரிந்த கவிதா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது இரண்டு குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு தனது வீட்டருகில் கவிதா வந்து கொண்டிருந்தார்.

அப்போது தனது இரண்டு நண்பர்களுடன் அங்கு வந்த ஹர்கேஷ் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கவிதாவை சுட்டு விட்டு அங்கிருந்து ஹர்கேஷ் உட்பட மூவரும் தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து தோள்பட்டையில் குண்டடி பட்ட கவிதாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் ஹர்கேஷை தேடி வருகிறார்கள்.

வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது!!

2010ஆம் ஆண்டு கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் மற்றும் அவரது மகன் ஆகியோரை மிக மோசமாக தாக்கியதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்ய ஆயத்தமான போது அவர் நோய்வாய்ப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வைத்தியசாலையில் வைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது

கைது செய்யப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறித்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் கிரிபத்கொட பிரதேசத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பேருந்தில் ஒருவர் அதிரடியாக கைது!!

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் பொலிசாரின் வழமையான சோதனை நடவடிக்கையின்போது 700கிராம் கேரள கஞ்சாவுடன் 33 வயதுடைய வாரியபொல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் தமது வழமையான சோதனை நடவடிக்கையின்போது நேற்று இரவு 11 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்தில் பயணித்த வாரியபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவர் தனது உடமையில் மறைத்து வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட 700 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் மகளின் O/L பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு!!

 

கணேசலிங்கம் வேகாவனம்



யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கை பிறப்பிடமாகவும் வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் வேகாவனம் கடந்த 09.12.2018 அன்று உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் காலமானார்.

இவரது கடைசி மகள் இவ்வருடம் நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி வருவதனால் தந்தையின் இறுதிச் சடங்குகள் பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது குறித்து தெரியவருவதாவது..

கடந்த வாரம் க.வேகாவனம் என்பவர் இரவு உணவு உட்கொண்ட நிலையில் திடீர் என்று இயலாமை காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பயனளிக்க முடியாத நிலையில் வீடு செல்லும்படி வைத்தியர்களால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பின்பு மேலதிக சிகிச்சைக்கான முயற்சியில் குடும்பத்தினர் கடந்த 7ம் திகதி கொழும்பில் தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கான முயற்சிகளை மேற்கொண்ட போதும், சிகிச்சை பயனின்றி கடந்த 09 ஆம் திகதி காலமானார்.

அவரின் மகள் வவுனியாவில் பிரபல மகளீர் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிவருகின்றார். எனவே இவரின் பரீட்சைக்கு இடையூறு ஏட்படக் கூடாது என்ற வகையிலும் தந்தையின் ஆத்மா சாந்திக்கான திருப்தியைக் கொடுக்கும் வகையிலும் இவர் பரீட்சை எழுதி முடியும்வரை தந்தையின் இறுதிக் கிரிகைகளை ஒத்திவைத்துள்ளதாக தெரிய வருகின்றது.

இந்நிலையில் மகளின் பரீட்சை நாளை (12.12.2018) நிறைவுற்றதும் மதியம் 2 மணிக்கு தந்தையின் இறுதிச் சடங்குகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் விபத்து பாலத்திற்குள் தூக்கிவீசப்பட்ட மோட்டார் சைக்கிள் : மூவர் படுகாயம்!!

 

விபத்து

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (11.12.2018) முற்பகல் 10 மணியளவில் வவுனியாவிலிருந்து மன்னார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிலும் மன்னார் வீதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிலும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்திற்குள் பாய்ந்துள்ளது. இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிலும் மன்னார் வீதியிலிருந்து வவுனியா நகர் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிலும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற இரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பாலத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்துள்ளது. மற்றைய மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் வேகத்தினைக்கட்டுப்படுத்த முடியாமல் கீழே வீழ்ந்து காயமடைந்துள்ளார்.

இதையடுத்து காயமடைந்த மூவரும் நோயாளர் காவுவண்டியில் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் குழப்பத்துக்கு மைத்திரியே காரணம் : நழுவுகின்றார் மஹிந்த!!

நாட்டில் தற்போது எழுந்துள்ள அரசியல் குழப்பத்துக்கு நான் காரணமல்ல. இந்தக் குழப்பங்கள் அனைத்துக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணம்.

பிரதமர் பதவிக்கு என்னை நியமிக்குமாறு மைத்திரியை நான் கோரவில்லை. அவரே என்னை அழைத்து, நான்தான் இந்தப் பதவிக்குப் பொருத்தம் என்று கூறினார் என முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுச் செய்திச் சேவையின் கொழும்பு ஊடகவியலாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

2014ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. எதிரணியில் இருந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஜனாதிபதி வேட்பாளராக என்னை எதிர்த்துக் களமிறங்கினார். அவர் வெற்றி பெற்று ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆட்சி நடத்தினார்.

ரணிலின் உண்மை முகத்தை அவர் சில மாதங்களுக்கு முன்னர்தான் கண்டுகொண்டார். அதனடிப்படையில்தான் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார். அவர் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக எங்களுக்கு இரகசியத் தகவலையும் அனுப்பியிருந்தார்.

நாடாளுமன்றத்தில் எங்களுக்குப் பெரும்பான்மையை நிரூபித்துத் தருவதாகவும் அவர் கூறியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கினார். அதனை நம்பியே நான் பிரதமர் பதவியை ஏற்றேன்.

இந்தப் பதவியை நான் கேட்டுப் பெற்றுக் கொள்ளவில்லை. அவரே, நான்தான் இந்தப் பதவிக்குப் பொருத்தம் என்று என்னை நியமித்தார்.

துரதிஷ்டவசமாக நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய சூழல் ஜனாதிபதிக்கு ஏற்பட்டது. ஆனால், அதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்தை நாடியது. அவர்கள் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளப் பயந்தே நீதிமன்றம் சென்றார்கள்.

நான் பிரதமராகச் செயற்படுவதற்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்தார்கள். நீதிமன்றங்கள் இடைக்காலக் கட்டளையை வழங்கியுள்ளன. நான் அதனை மதிக்கின்றேன். நீதிமன்றங்களின் எத்தகையதொரு தீர்ப்பையும் நான் ஏற்றுக் கொள்வதற்குத் தயாராகவுள்ளேன்.

நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கும்போது நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடிக்கு நாடாளுமன்றத் தேர்தலே தீர்வு என்று நாட்டிலுள்ள சாதாரண குடிமகனுக்கும் தெரியும்.

இது எனது தனிப்பட்ட கருத்து. நான் நீதிமன்றங்களுக்கு அறிவுரை கூறவில்லை. நீதிமன்றங்கள் எத்தகைய தீர்ப்பை வழங்கினாலும் அதனை ஏற்றுச் செயற்பட நான் தயாராக இருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-