மும்பையில் சடலமாக மீட்கப்பட்ட வைர வியாபாரி வழக்கில் பிரபல டிவி நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானி (57), கடந்த 28ம் தேதி முதல் வீடு திரும்பவில்லை என அவருடைய வீட்டார் பொலிஸில் புகார் கொடுத்திருந்தனர்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் கார் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பண்ட் நகர் மார்க்கெட் அருகே இறக்கி விடும்படி உதானி கூறியதால், அங்கே இறக்கிவிட்டதாகவும், அவர் வேறு ஒரு காரில் ஏறி சென்றதாகவும் ஓட்டுநர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் கடந்த 4ம் தேதியன்று பன்வெல் அருகே அணைக்கட்டு பகுதியில் சிதைக்கப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. மறுநாள் வரை சடலம் குறித்த எந்த தகவலும் தெரியாத நிலையில், ஆடைகளை வைத்து அது என்னுடைய தந்தை தான் என உதானியின் மகன் கூறியுள்ளான்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உதானியின் செல்போன் அழைப்புகளை வைத்து பொலிஸார் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், மகாராஷ்ட்ரா அமைச்சர் பிரகாஷ் மேத்தாவின் முன்னாள் உதவியாளர் சஞ்சய் பவார் மூலம், கவர்ச்சி மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளிட்ட பல பெண்களுடன் உதானி தொடர்பு வைத்திருந்தது தெரியவந்து.
இதனையடுத்து செல்போனில் சம்மந்தப்பட்ட சில பெண்களுடன், சச்சின் பவார், டிவி நடிகையும் மாடலுமான டிவோலீனா பட்டாச்சார்ஜி உள்பட 3 பேரை கைது செய்து, தனித்தனியாக மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பின்னர் அவர்களை கைது செய்துள்ளனர். ஆனால் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை.
டிவி நடிகை டிவோலீனா பட்டாச்சார்ஜி, ’சாத் நிபானா சாதியா’ உள்ளிட்ட பல தொடர்களின் மூலம் பிரபலமாகி விருதுகளை பெற்றுள்ளார். இந்திய தொலைக்காட்சி நடிகைகளில் அதிக ஊதியம் பெரும் நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பித்தக்கது.
பெங்களூரில் மனைவியை விமான நிலையத்திலே தவிக்கவிட்டு வெளிநாட்டிற்கு பறந்த கணவன், வட்ஸப்பில் “தலாக்” அனுப்பி விவாகரத்து செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஜாவித். இவர் கடந்த 2003ம் ஆண்டு அஜீஸ் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு, குழந்தைகளுடன் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாகவே தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.
இதனை சரிசெய்வதற்காக இருவரும் நவம்பர் 30ம் திகதியன்று இந்தியா வந்திருக்கின்றனர். இந்த நிலையில் விமான நிலையத்தில் மனைவியை தவிக்கவிட்டு, ஜாவித் மட்டும் அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். அங்கிருந்து மனைவியின் வட்ஸ் அப் எண்ணிற்கு தலாக் எனக்கூறி ஒரு குறுஞ்செய்து அனுப்பி விவாகரத்து செய்துள்ளார்.
இந்த சம்பவமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட அஜீஸ் தனக்கு நீதி வழங்குமாறு மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
சமீபகாலமாக பரபரப்பை கிளப்பி வந்த மூக்குப்பொடி சித்தர் தூக்கத்திலேயே இன்று காலமானார். தமிழகத்தில் மிகப்பிரபலம் வாய்ந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இவர்கள் தவிர அரசியல் பிரபலங்கள், திரைத்துறையை சேர்ந்தவர்களும் வருவது வழக்கம். இந்நிலையில் சமீபகாலமாகவே மக்களின் கவனத்தை ஈர்த்தவர் மூக்குப்பொடி சித்தர், உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் ரமணாஷ்வர்மம் அருகே சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கி இருந்தார்.
இரவு நேரத்தில் அவர் உறங்குவதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்திருந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் தூக்கத்திலேயே உயிரிழந்தார்.
உடனடியாக இத்தகவல் அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து இன்று மாலை தனியார் திரையரங்கு உரிமையாளருக்கு சொந்த இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
வவுனியா, கேவில்குளம் சிவன் கோவில் மற்றும் விடுதி ஆகியவற்றில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று(09.12) காலை ஆலயத்திற்கு சென்ற போது இரவு திருட்டுக்கள் இடம்பெற்றமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஆலய நிர்வாகத்தால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கோவில் குளம் சிவன் கோவில் வெளிவீதியில் உள்ள பிள்ளையார் விக்கிரகத்தின் முன்னாள் இருந்த உண்டியல் திருடப்பட்டுள்ளது. அத்துடன், ஆலயத்திற்குள் நுழைந்த திருடர்கள் ஆலய உள்வீதியில் காணப்பட்ட உண்டியல் ஒன்றினையும் திருடிச் சென்றுள்ளனர்.
திருடப்பட்ட இரண்டு உண்டியல்களும் ஆலய கேணிக்கருக்கில் உடைக்கப்பட்ட நிலையில் வெறுமையாக மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள விடுதிக்குள்ளும் கூரை வழியாக நுழைந்த திருடர்கள் விடுதியில் இருந்த புதிய ஆடைகள் உள்ளிட்ட சில பெறுமதியான பொருட்களையும் திருடிச்சென்றுள்ளனர்.
குறித்த இரு உண்டியல்களும் கடந்த 6 மாதமாக திறந்து பணம் எடுக்கப்படாமல் இருந்தமையால் அவற்றில் இலட்சக் கணக்கில் பணம் இருந்திருக்கலாம் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆலய கேணிக்கு அருகில் உடைக்கப்பட்ட உண்டியல்கள், உண்டியல் உடைக்கப் பயன்படுத்தப்பட்ட கம்பிகள், திருடப்பட்ட ஆடைகள் சில பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவில் பொலிசார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்து வவுனியா பொதுமக்களால் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பழைய பேருந்து நிலையத்தில் ஒன்றிணைந்த மக்கள் மட்டக்களப்பு வவுணதீவில் பொலிசார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் வன்முறைவேண்டாம், நாம் ஒற்றுமையுடன் வாழ விரும்புகின்றோம், 30 வருட யுத்தத்தின் துயரங்கள் போதும், மீண்டும் ஒரு யுத்தம் எனும் சொல்கூட எமது நாட்டிற்கு வேண்டாம். நாம் பட்ட துயரங்கள் எமது சந்ததியினர் அனுமதிக்க இடமளிக்க மாட்டோம் போன்ற பல்வேறுபட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமான போராட்டம் பஜார் வீதி வழியாக இலுப்பையடி சென்று வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் முடிவடைந்துள்ளது.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி தமது மகள் இஷாவின் திருமணத்தை அடுத்து ஏழைகளுக்கு 4 நாட்கள் அன்ன தானம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அன்ன தான நிகழ்ச்சியில் நால் ஒன்றுக்கு சுமார் 5,100 பேருக்கு மூவேளையும் உணவு வழங்கப்படுகிறது. மேலும், உணவு வழங்கும் நிகழ்வில் மணமகன் மற்றும் மணப்பெண் வீட்டார் கலந்து கொள்கின்றனர். திருமண விழாவினை முன்னிட்டு ஆடல் பாடல்கள் கொண்ட ஒரு வாரம் தொடர் விழாவுக்கும் முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்துள்ளார்.
டிசம்பர் 12 ஆம் திகதி ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள உதயபூர் அரண்மனையில் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் ஆகியோரின் திருமண விழா நடைபெற உள்ளது. மேலும், திருமணத்தில் கலந்துகொள்ளும் முக்கியஸ்தர்கள் பயன்படுத்தும் வகையில் 100 விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. திருமண நாள் இரவு உலக அளவில் பிரபலமான பாடகர்கள் குழு ஒன்று இசை நிகழ்ச்சியும் மேற்கொள்ள உள்ளது.
இந்நிலையில், இஷா அம்பானியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக பிரபலங்கள் பலர் முன்னதாகவே உதய்பூரின் விமான நிலையத்திற்கு வந்திறங்கியுள்ளனர்.
குறிப்பாக, அமெரிக்காவின் முன்னாள் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் வந்துள்ளார். அவரை வரவேற்ற முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதியினர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சென்னை மாதவரம் வீட்டிற்குள் நுழைந்த வனிதா விஜயகுமார் மீண்டும் கைது செய்யப்பட்டு தனது சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெளியே வந்த இவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் என்னை போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.
எனது தந்தையே என் மீது புகார் கொடுத்து என்னை ஊடகத்தின் மத்தியில் மானபங்கப்படுத்தி உள்ளார். என்னுடைய குழந்தைகள் கூட என்கூட இருக்கிறார்கள் அவர்களை பேத்தி என்று கூட பார்க்காமல் இப்படி ஒரு சித்திரவதை செய்கிறார்கள்.
எவ்வளவு முறை வீட்டிற்கு சென்றாலும் நாயை அடிப்பது போல் அடித்துத் துரத்துகிறார்கள்.தந்தை விஜயகுமார் சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாகவும். அதேபோல் தனக்கும் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் காதலி, கெளசல்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கெளசல்யா என்பவரைக் காதலித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்.
கடந்த 2016 மார்ச் 13ம் திகதியன்றூ, பட்டப்பகலில் உடுமலையில் வைத்து சங்கர் மற்றும் கெளசல்யா இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது. அதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தமிழகத்தில் இருக்கும் மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. சங்கரின் கொலைக்குப் பின்னர் சாதி ஒழிப்புப் போராளியாக கெளசல்யா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சாதிக்கு எதிராக அழுத்தமாகக் குரல்கொடுத்து வருகிறார். தனது உறவினர்களுக்கே தண்டனை பெற்றுக்கொடுத்தவர். சங்கரின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி, அதனைக் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று கோவை பெரியார் படிப்பகத்தில் அவருக்கு இரண்டாவது திருமணம், நெருங்கிய நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது. கெளசல்யா நிமிர்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தியை திருமணம் செய்துகொண்டார்.
இவரிடம் தான் கெளசல்யா பறை இசைக் கலையை கற்றார். இந்த திருமணத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிறுவனர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டினன், வன்னி அரசு மற்றும் எவிடன்ஸ் கதிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை சரியான முறையில் எடுக்காவிடில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரதூரமான விளைவுகளை எதிர் நோக்கவேண்டி வரும் என அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி மற்றும் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அரசாங்கத்தை அமைத்து நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்கு அனுமதிக்கவேண்டும்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணலாம்.
அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக நாடு முன்னோக்கி நகரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்பொழுது ஏற்பட்டுள்ள பாரிய இழப்பினை மக்களே செலுத்தவேண்டியிருக்கும்.
இலங்கையின் அரசமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஐக்கியதேசிய கட்சி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும். இலங்கையின் சுயாதீன நீதித்துறை நீதியான தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
2015 இல் நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டவுடன் நீதித்துறையின் சுதந்திரம் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களும் ஏற்படுத்தப்பட்டன.
கடந்த மூன்று வருடங்களில் ஐக்கியதேசிய கட்சியோ அல்லது அதன் தலைவரோ நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடவில்லை என்றார்.
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவிற்கு கொண்டுவராவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவைதை் தொடர்ந்து மஹிந்த பிரதமர் செயலகத்தை விட்டு சென்றுள்ளார்.
எனினும் மஹிந்த ராஜபக்சவுக்கு முன்னர் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க தற்போதும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் தங்கியிருக்கின்றார்.
ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சியினால் தொடர்ந்து பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பாரதூரமான நிலை எல்லை மீறிச் செல்வதாக புத்திஜீவிகள் எச்சரித்துள்ளனர்.
ஜனாதிபதி பொறுப்பட்ட வகையில் எரிமலை மீது நடத்து செல்வதாகவும், விரைவில் மலை வெடித்து முழு நாடும் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடவுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமகாலத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மஹிந்தவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த தடை உத்தரவு காரணமாக அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து நிறைவேற்றுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் கூட்டு நிதியில் இருந்து அரச செலவினங்களும் பணம் பயன்படுத்தப்பட வேண்டும்.
அரசியலமைப்பின் 152ஆம் சரத்திற்கமைய அரசாங்க செலவுகளை செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பித்து நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும்.
அமைச்சரவை இல்லை என்றாலும் நாட்டின் செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறுவதாக ஜனாதிபதி கூறி வருகின்றார். எனினும் அவர் எரிமலை மீது நடந்து கொண்டிருக்கின்றார் என்பதை அவருக்கு நெருக்கமான ஆலோசர்கள் அறிவுறுத்தவில்லை என்பதை தற்போதைய நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன.
ஜனவரி மாதம் இந்த எரிமலை வெடிக்கும் எனவும், அவ்வாறு வெடித்தால் அது ஜனாதிபதிக்கு மாத்திரமின்றி முழு இலங்கைக்குமே பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.
சிலர், கூட்டு நிதியை ஜனாதிபதியினால் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்ற போதிலும் அரசியலமைப்பிற்கமைய அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு தான் நினைத்தது போது கூட்டு நிதியில் இருந்து பணம் செலவிடும் அதிகாரம் இல்லை. அவருக்கு சில செலவுகளை ஏற்பதற்கு 2 சந்தர்ப்பங்களில் மாத்திரமே முடியும்.
அது நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும், இதற்கு மேலதிகமான 151ஆம் சரத்திற்கமைய அவசர நிலைமைகளில் மாத்திரமே பயன்படுத்த முடியும். எனினும் அந்த நடவடிக்கை நிதி அமைச்சரினால் மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும் அவசர நிலைமை ஒன்று நாட்டில் இல்லை.
இதுவரை அமைச்சரவையின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய டிசம்பர் மாதம் இறுதிக்கு முன்னர் ஜனாதிபதியினால் அமைச்சரவை ஒன்று நியமிக்க வேண்டியது கட்டாயமாகும்.
அப்படி செய்யவில்லை என்றால் அரச ஊழியர்களின் சம்பளத்திற்கும் அரசாங்கத்தின் அனைத்து செலவுகளுக்கும் நிதி ஒதுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் ஜனாதிபதியின் உணவிற்கேனும் செலவிடுவதற்கு அரசாங்கத்தில் பணம் பெற முடியாமல போய்விடும்.
இந்த நடவடிக்கை நீடித்தால் இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முழு நாட்டை பாரிய ஆபத்தில் கொண்டு போய்விடும் என புத்திஜீவிகளை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கனடாவில் இரு தமிழர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரொரன்ரோவில் ஆண் மற்றும் பெண் இருவர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும் அவர்கள் மறுவாழ்வு பெற்றுக் கொள்வதற்கு மிகவும் பொருத்தமானவர்கள் என நீதிபதி கூறியுள்ளார்.
மிதுஷா பூபாலசிங்கம் மற்றும் ஜீவன் நாகேந்திரன் ஆகிய இருவரும் கடந்த வருடம் ஜுன் மாதம் Halifax என்ற பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
குறித்த இருவரும் பிள்ளைகளின் உணவு பைகள், மற்றும் துணிகளில் வைத்து போதைப்பொருள் கடத்த முயற்சித்தமை தொடர்பில் மொன்றியல் பகுதி பொலிஸ்அதிகாரிகளினால் குற்றம் சுமத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நேரத்தில் 22 வயதாக இருந்த மிதுஷா, ஓபியம் என்ற போதைப்பொருளை இறக்குமதி செய்வதில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.
ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி Nova Scotia மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி Elizabeth Buckle தீர்ப்பை வெளியிட்டிருந்தார்.
நீதிபதியின் தீர்ப்பிற்கமைய, மிதுஷாவின் வயது, அப்பாவித்தனம் மற்றும் இதற்கு முன்னர் குற்றவியல் பதிவுகள் இல்லாததால், அவரது தண்டனையை குறைப்பதற்கு நீதிபதி தீர்மானித்தார்.
இதேவேளை, இந்த கடத்தல் நடவடிக்கையில் ஜீவனின் ஈடுபாடு மிகவும் குறைவாகவே காணப்பட்டதாகவும், அந்த செயற்பாட்டினால் அவரது குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மகாவலி கங்கையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை மகாவலி கங்கையில் ஆழமான பகுதியில் இளைஞர்களும் சிறுமியும் நீராடியுள்ளனர். இதன் போது குறித்த மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதை கண்ட பொதுமக்கள் சிறுமியையும் இளைஞனையும் உயிருடன் மீட்டெடுத்துள்ளனர்.
எனினும் நாவலபிட்டி பல்லேகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ரஞ்சித்குமார் என்ற குறித்த இளைஞனைச் சடலமாக மீட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் பலியான இளைஞனின் சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மரண விசாரணைகளுக்காக கம்பளை நீதிமன்ற நீதவான் தலைமையில் மரண விசாரணைகள் நிறைவடைந்தவுடன் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட உள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கும் இரத்மலானை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை வேளையில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த 8 பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று, மற்றுமொரு மோட்டார் வாகனம், மோட்டார் சைக்கிள் இரண்டின் மீதும் மோதியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் வாகன சாரதி குடிபோதையில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கு அருகில் குறித்த சாரதி மேலும் இரண்டு நபர்கள் மீது மோதியுள்ளார். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தின் பின்னர் குறித்த சாரதி குறித்த மோட்டார் வாகனத்திலேயே தப்பி சென்றுள்ளார். குறித்த சாரிதி ஓட்டிய மோட்டார் வாகனம் இரத்மலானை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்னுமொரு மோட்டார் வாகனத்தின் மீதும் 2 மோட்டார் சைக்கிள் மீதும் மோதியுள்ளார்.
இந்த விபத்தை ஏற்படுத்தி மோட்டார் வாகனத்தின் சாரதியும் படுகாயம் அடைந்த நிலையில், பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் வாகன சாரதி குடிபோதையில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து மகனுக்கு கொடுக்க முற்பட்ட தந்தையை நேற்று (08.12) மதியம் 1.30 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகளின் கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சிறையில் உள்ள மகனை பார்வையிட்டு பொருட்கள் கொடுப்பதற்காக நேற்று மதியம் தந்தை சிறைச்சாலை வளாகத்தினுள் சென்றுள்ளார்.
கொண்டு சென்ற பொருட்களில் சவற்காரத்தினை வெட்டி அதனுள் ஹெரோயின் போதைப்பொருளை வைத்து மகனுக்கு கொடுக்க முற்பட்ட சமயத்திலே தந்தையை கைது செய்துள்ளதாகவும் நெளுக்குளம் பகுதியினைச் சேர்ந்த 71 வயதுடையவரிடமிருந்து 45 மில்லிகிராம் ஹெரோயினை மீட்டுள்ளதாகவும் மகனும் ஹெரோயின் வைத்திருந்ததன் குற்றச்சாட்டிலே சிறைச்சாலைக்கு சென்றிருந்தார் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேஷம் : வீர உணர்வு அதிகம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொருளாதார நிலையில் சில நெருக்கடிகள் வந்தாலும் பின்பு வரும் காலங்களில் வருமானத்திற்கு எந்த ஒரு குறையும் இருக்காது. நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு குணமாவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் கடின முயற்சிகளை மேற்கொண்டாவது வெற்றிபெறுவீர்கள்.
அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் பதவி உயர்வுகளை பெரும் யோகம் உண்டு. கோவில் சம்பந்தமான புனித காரியங்களில் ஈடுபட்டு கௌரவத்தையும் ஆண்டவனின் அருளையும் பெறுவீர்கள்.
அடிக்கடி பயணங்களின் போது புதிய உணவுகளை உண்பதாலும் சிலருக்கு வயிறு சம்பந்தம்மான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அடிக்கடி உடல் சோர்வு ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களும் சில உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டு மீள்வார்கள்.
வீட்டில் திருமண வயதை எட்டியவர்களுக்கு திருமணம் இந்தாண்டு நடக்க அதிக வாய்ப்புண்டு. புதிதாக தொடங்கப்படும் தொழில் வியாபார முயற்சிகளில் சிறிது கடிமான காலகட்டங்களை கடந்த பிறகே சிறந்த பலன்களை பெற முடியும். உங்களுக்கு கீழ் பணிபுரியும் தொழிலார்கள் மற்றும் வேலையாட்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.
பணியிலிருப்பவர்கள் அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்க நேரிடும். புதிதாக வேலை தேடும் நபர்களுக்கும் பல தடங்கல்களுக்கு பிறகு நல்ல வேலை வாய்ப்பு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளின் பணிகளுக்கான முயற்சிகள் வெற்றியடையும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சற்று தர்ம சங்கடமான நிலை ஏற்படும்.
விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு பயிர்கடன்கள் சற்று தாமதத்திற்கு பின்பு கிடைக்கும். கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு இந்தாண்டு நல்ல வாய்ப்புகள் அமையும். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பெற்ற பிள்ளைகள் வழியில் ஒரு சில சங்கடங்கள் ஏற்படலாம். மாணவ – மாணவியர் கல்வியில் மிகுந்த அக்கறை செலுத்தினால் கல்வியில் சிறக்கலாம்.
ரிஷபம் : தன்னை எப்போதும் அழகாக காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
தடைபட்டு கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். புத்திர பேறில்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.
உங்களுடைய உடல்நிலை பெரும்பாலும் நன்றாக இருக்கும். ஆனாலும் குடும்பத்தில் உள்ள சிலருக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரும். கடந்தகாலங்களில் வாங்கிய கடன்களை அடைத்து விடுவீர்கள்.தொழில், வியாபாரங்களில் போட்டிகள் இருந்தாலும் உங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றியை பெறுவீர்கள். உங்கள் தொழில், வியாபாரங்களை விரிவு படுத்தும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலங்கள் ஏற்படும்.
வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும். பணிபுரிபவர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். ஒரு சிலருக்கு புதிய இடங்களுக்கு இடமாறுதல்கள் ஏற்படும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிலும் ஏற்ற, இறக்கமான பலன்களே ஏற்படும். விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு அமோக விளைச்சல் உண்டாகும்.
கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு வெளியூர், வெளிநாடு கலை பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்த வேண்டும். கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். விரும்பிய மேற்படிப்புகளை படிக்க கூடிய வாய்ப்புகள் அமையும்.
மிதுனம் : சிறந்த ஞாபகசக்தி கொண்ட மிதுன ராசிகர்களுக்கு பிறக்கின்ற 2019 ஆம் ஆண்டு சாதக, பாதகங்கள் சம அளவு கலந்ததாகவே இருக்கும். அவ்வப்போது நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை உண்டாகும். பண விவகாரங்களில் நம்பியவர்களே உங்களை மோசம் செய்யக்கூடும்.
உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக இருப்பது உங்களுக்கு நன்மையை தரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை வருடத்தின் முதல் மூன்று மாதம் வரை ஒத்தி வைப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்புடைய தொழில் வியாபாரங்களில் அனுகூலங்கள் ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.
மனைவி மற்றும் பிள்ளைகள் வழியே மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். இந்தாண்டு நீங்கள் அதிக பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்குமிடையே சில பிரச்சனைகள் ஏற்படலாம். பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரங்களில் சக போட்டியாளர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமான சதிகளை செய்வார்கள். இருந்தாலும் அவற்றை முறியடித்து நல்ல லாபங்களை ஈட்டுவீர்கள்.
பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் எல்லாம் நலமாக முடியும். அரசியல் துறையில் இருப்பவர்கள் எதிரிக்கட்சியினருக்கு பணிந்து செல்ல கூடிய நிலை ஏற்படும். எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு ஓரளவு லாபம் ஏற்படும். கலைத்துறையினர் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். . திருமணம் வயது கொண்ட பெண்களுக்கு நல்ல வரன் அமையும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் முதலில் சில காலம் சற்று மந்த நிலையை அடைந்தாலும், பிறகு கல்வியில் சிறப்பார்கள்.
கடகம் : பிறரின் மனநிலையை சரியாக கணிக்கும் கடக ராசிகாரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு நற்பலன்களை அதிகம் தரக்கூடியதாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள், நோய்கள் நீங்கும். திருமணம் நடக்காமல் ஏங்கியவர்களுக்கு மனதிற்கேற்ற வாழ்க்கை துணி அமைய பெறுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை நீங்கள் விரும்பிய படியே கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கும், மதிப்பும் ஏற்படும். புதிய வீடு, மனை, வாகனங்களை வாங்குவீர்கள். நீதிமன்றங்களில் உங்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த சொத்து சம்பந்தமான வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும்.
தொழில், வியாபாரங்களில் உங்களின் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். பணியிடங்களில் உங்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும், விசுவாசமும் கிடைக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்கும். விவசாய தொழிலிருப்பவர்களுக்கு விளைபொருட்களுக்கு கேட்ட விலை கிடைக்கும். கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிப்பீர்கள். பெண்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள், மனஸ்தாபங்கள் நீங்கும்.
சிம்மம் : தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு சம அளவிலான பலன்கள் ஏற்படும். சுக வாழ்க்கையில் பாதிப்புகளை உண்டாகும். சுப காரிய முயற்சிகள் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றியடையும். ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களுக்கு பெரிய அளவில் கடன்கள் கொடுக்க கூடாது. தொழில் வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.
ஒரு சிலருக்கு ஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்படும். குடும்பத்தில் வயதானவர்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். குடும்ப பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். குடும்ப பாரம்பரிய சொத்துகள் சிறிது இழுபறிக்கு பின்பு உங்களுக்கான பாகம் வந்து சேரும். அரசு டெண்டர், காண்ட்ராக்ட் தொழில்களில் இருப்பவர்களுக்கு சற்று தாமதங்களுக்கு பிறகு ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
புதிய தொழில் வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கும், அவற்றை விரிவு படுத்த நினைப்பவர்களுக்கும் சிறிது தடங்கல்களுக்கு பின்பு வெற்றி உண்டாகும். தொழிலாளர்கள் மற்றும் பணியாட்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாடு சென்று பணிபுரியும் யோகமும் சிலருக்கு உண்டாகும்.
பணியாளர்கள், ஊழியர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். எதிர்பாரா பணியிடமாற்றங்களும் சிலருக்கு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கின்ற வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் ஆதரவை பெற கடுமையாக உழைக்க வேண்டும்.
கன்னி : அனைவரிடமும் இதமாக பழகும் தன்மை கொண்ட கன்னி ராசியினருக்கு 2019 ஆம் ஆண்டில் சில காலம் வரை எல்லாவற்றிலும் மிக கடின முயற்சிகள் மேற்கொண்ட பிறகே வெற்றிபெறக்கூடிய நிலையிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். திருமணம், புது வீடு போன்ற சுப காரியங்கள் சம்பந்தமான முயற்சிகளில் இழுபறி நிலை இருக்கும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய திறன் உண்டாகும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதாரம் ஏற்ற இறக்கமான நிலையிலேயே இருக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் ஆனால் உறவினர்களிடையே சுமூக உறவு இருக்காது. தொழில், வியாபாரங்களில் உங்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் வேறு வியாபாரிகளுக்கு செல்ல கூடிய நிலை ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனையை கேட்பது சிறந்தது. அரசாங்க வழியில் ஏதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.
உங்களுக்கான பதவி உயர்வுகளை பிறர் தட்டி பறிக்க முயல்வார்கள் என்ற போதிலும், உங்களுக்கான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் தங்களின் பதவிகளை காப்பாற்றி கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். விவசாய தொழில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபம் தான் கிடைக்கும். அவசரப்பட்டு கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். கலைத்தொழிலில் இருப்பவர்கள் தங்களின் சக தொழிலாளர்களுடன் அனுசரித்து செல்வதால் நன்மைகள் ஏற்பட்டும்.
துலாம் : கள்ளமில்லா உள்ளம் கொண்ட துலாம் ராசியினருக்கு பிறக்கின்ற 2019 ஆண்டு சிறப்பாகா இருக்கும். இது நாள் வரை இருந்து வந்த அத்தனை பிரச்சனைகளும் தீரும். நின்று போன, தடைபட்ட சுப காரியங்கள் அனைத்தும் நடக்கும். உடல் நிலை நன்றாக இருக்கும். பண வரவுகள் தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும்.
பிரிந்து சென்ற உறவினர்களும் உங்களிடம் வலிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். பல புனித தலங்களுக்கு யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும். குழந்தைகள் இல்லாமல் ஏங்கியவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.
பொன், பொருள், ஆபரணங்கள், புதிய ஆடைகள், புதிய வீடு, புதிய வாகனம் என அனைத்து வகையான செல்வ சேர்க்கையும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். அவர்களின் அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்வீர்கள். வாங்கிய கடன்களை எல்லாம் வட்டியுடன் கட்டி தீர்ப்பீர்கள். பணியிடங்களில் உங்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கு சூழ்நிலை உருவாகும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் பாராட்டுகளை பெறுவார்கள். விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை அடைத்து விடக்கூடிய அளவில் பொருளாதார நிலை உயரும். வெளிநாடுகளுக்கு சென்று பெயரும், புகழும் பெரும் யோகம் கலைஞர்களுக்கு உண்டாகும். பெண்களின் உடல் நிலை நன்றாக இருக்கும். அதோடு ஆபரணம், ஆடை போன்றவற்றின் சேர்க்கை ஏற்படும்.
விருச்சிகம் : மனதில் பட்டதை நேரடியாக பேசும் விருச்சிக ராசிக்காரர்ளை பொறுத்தவரை 2019 ஆண்டில் அவ்வப்போது உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எல்லாவற்றிலும் கடினமாக செயல்பட்டே விரும்பிய பயன்களை பெற முடியும். தொழில், வியாபாரங்களில் நல்ல வாய்ப்புகள் சற்று தாமதமாகவே கிடைக்கும். எவ்வளவு கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்களை விரைவில் பெற முடியாது. ஆடம்பர மற்றும் தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.
வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவிற்கு இருக்கும். புதிய வீடு, நிலம் வாங்குவதில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். பிறருக்கு கொடுத்த கடன்கள் சற்று இழுபறிக்கு பின்பே வசூலாகும். தொழில், வியாபாரங்களை பொறுத்தவரை ஆண்டின் தொடக்க மாதங்களில் ஏற்ற இறக்கமான பலன்களையே பெறுவீர்கள். சக போட்டியாளர்களின் சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வியாபார ரீதியன பயணங்கள் வெற்றியை தரும்.
உத்தியோகங்களில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தாமதமாகி பின்பு கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தாங்கள் பேசும் போது கவமுடன் பேசுவதால் சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை தவிர்க்கலாம். விவசாயிகளுக்கு தொடக்கத்தில் சிறிது பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் பின்வரும் காலங்களில் நல்ல லாபங்கள் பெறுவார்கள். மாணவர்கள் மனதை அலைபாயவிடாமல் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் கல்வியில் சிறக்க முடியும்.
தனுசு : பிறருக்கு உதவி புரியும் நல்ல மனதை கொண்ட தனுசு ராசிக்கார்களை பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் சில தேவையற்ற அலைச்சல்களால் உடல் நலம் பாதிக்கப்படும். எல்லாவற்றிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது உங்களுக்கு மிகுந்த நன்மையை ஏற்படுத்தும். உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். தொலை தூர பயணங்களால் ஓரளவிற்கு அனுகூலங்கள் இருக்கும். பதவி உயர்வுகள் சிறிது தடை தாமதங்களுக்கு பிறகு கிடைக்கும்.
உடல் நலக் குறைவுகள் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உறுதுனையாக இருப்பார்கள். உறவினர்களின் வருகையால் உங்களுக்கு சற்று நிம்மதி ஏற்படும். காண்ட்ராக்ட் தொழிலில் இருப்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் பொருள்வரவு குறைந்தாலும் பின் வரும் காலங்களில் நல்ல தனவரவு உண்டாகும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.
உத்தியோகிஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியும் திருப்தியான நிலையும் ஏற்படும். உயரதிகாரிகளின் நன்மதிப்பிற்கு ஆளாவீர்கள். அரசியல்வாதிகள் பொது மக்களின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். விவசாயிகளுக்கு அரசு வழியில் எதிர்பார்த்த பயிர் மானியங்கள் கிடைக்கும். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு வேலை பளு சற்று அதிகரிக்கும். மாணவர்கள் தீய சிந்தனைகள் மற்றும் செயல்களை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
மகரம் : பிறருடன் அன்புடன் பழகும் மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை 2019 ஆண்டில் பொருளாதார நெருக்கடி நிலை நீங்கும். இவ்வளவு நாட்கள் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களின் பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து சொந்தம் கொண்டாடுவார்கள். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், தன்னிறைவு ஏற்படும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வந்து நிற்பார்கள். உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வாங்கிய கடன்கள் அனைத்தையும் வட்டியுடன் அடைத்துவிடக்கூடிய சூழல் உண்டாகும். வேலைவாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும்.
பணியில் இருப்பவர்களுக்கு புதிய இடங்களுக்கு பணிமாறுதல்கள் கிடைப்பதால் உங்களுக்கு பல அனுகூலங்கள் ஏற்படும். உயரதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்கள் பாராட்டை பெறக்கூடிய காரியங்களை செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக அமையும். புதிய நிலங்கள் வாங்கி அதிலும் விவசாயம் செய்து லாபத்தை அடைவீர்கள். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குழந்தை இல்லாமல் ஏங்கிய பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கும். மாணவ மாணவியரின் கல்வி நிலை உயரும்.
கும்பம் : திடமான மன உறுதி கொண்ட கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை 2019 ஆண்டின் தொடக்க மாதங்களில் சிறிது சங்கடங்கள் இருந்தாலும் பின்வரும் காலங்களில் அனைத்தும் நன்மையாக முடியும். குடும்பத்தின் தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்ய முடியும். பிறரை நம்பி பெரிய அளவிலான தொகைகளை கடனாக தருவதை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.
குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை மேலோங்கும் உணவு விடயங்களில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. கடுமையாக உழைத்து உங்களுக்கான செல்வத்தை ஈட்டுவீர்கள். தொழில் வியாபாரங்களில் போட்டியாளர்களாலும், அரசாங்கத்தாலும் பல நெருக்கடிகளை சந்தித்தாலும் அனைத்தையும் சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள். தொலைதூர பயணங்களால் லாபங்கள் உண்டாகும்.
உத்தியோகிஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதற்கான பலனை உடனே பெற முடியாது. அரசியலில் இருப்பவர்களுக்கு 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலம் சோதனையான காலகட்டமாகவே இருக்கும். விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கான லாபம் ஓரளவுக்கே கிடைக்கும். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டாள் பொருளாதார சிக்கலின்றி வாழலாம். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
மீனம் : அனைத்திலும் சிறந்த ஞானம் கொண்ட மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு சிறப்பாகவே இருக்கும். இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். உங்களை விட்டு விலகி சென்றவர்களும் உங்களிடம் வலிய வந்து நட்பு பாராட்டும் நிலையை உண்டாகும். உத்தியோகிஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாறுதல்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வுகளும் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். பிள்ளையில்லாதவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும். அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். குடும்பத்தினர் விரும்பிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி தருவீர்கள். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி நிலவினாலும் உங்களுக்குண்டான லாபத்தில் எந்த ஒரு பங்கமும் ஏற்படாது.
பணியிடங்களில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பதவி உயர்வையும் ஊதிய உயர்வையும் பெறுவீர்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய பணியே கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு அவர்களின் சிறந்த செயல்பாடுகளால் கட்சிகளில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். அதோடு அரசு வழியில் கடன் உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். மாணவ மாணவியர் கல்வியில் ஆர்வமுடன் படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.