ஆளுமையுள்ள ஒழுக்கமிகு சமூகத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் : நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன்!!

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தடகள மற்றும் பெரு விளையாட்டுகளுக்கான மூன்று நாள் வதிவிட பயிற்சி முகாமின் ஆரம்ப நிகழ்வு இன்று (08.12.2018) பூந்தோட்டம் விவசாய பயிற்சிநிலைய கேட்போர்கூட மண்டபத்தில் இளைஞர் சேவை அதிகாரி தே.அமுதராஜ் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வின் பிரதம அதியாக கலந்து சிறப்பித்த வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன முன்னாள் தலைவரும் வவுனியா நகரசபையின் உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன் ஆளுமையுள்ள ஒழுக்கமிகு சமூகத்தை உருவாக்க இளைஞர்கள் சமூகத்தில் முன்வரவேண்டும் என்று தெரிவித்ததுடன் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று வதிவிட பயிற்சிக்கு வருகைதந்துள்ளவர்களில் தேசியமட்டத்தில் சாதனைபுரிந்த வீர வீராங்கனைகள் இங்கு இருப்பதையிட்டு நான் பெருமிதம் கொள்கின்றேன். எமது மாவட்டத்தின் பெயரினை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பதிக்கும் வலுவுள்ள இளைஞர் யுவதிகளை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய பாடசாலை காலம் தொட்டு இன்று வரையான முயற்சியாகவும், அதில் வெற்றிப்படிகளை சாதித்தவர்களாவும் சமூகத்தில் வலம் வருவதையிட்டு நான் பெருமிதம் கொள்கின்றேன்.

இப் பயிற்சி முகாமில் உங்களுக்குரிய துறைகளில் நீங்கள் திறனை வெளிப்படுத்தி போட்டிகளில் வெளிக்காட்ட வேண்டும். இங்கு தங்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு சிறந்த வளவாளர்களை ஒழுங்குபடுத்தியிருப்பதையிட்டு மனமகிழ்வாக உள்ளதுடன் அவர்களின் மூலம் நுட்பங்களை கையாளும் திறனை விருத்திசெய்ய வேண்டும் எனும் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக உங்களிடம் உங்களில் ஒருவனாக எனது அவா ஆளுமையுள்ள ஒழுக்கமிகு சமூகத்தை நாம் விளையாட்டின் மூலம் ஏற்படுத்த வேண்டும். இன்றைய இளைஞர்கள் நாளைய ஒழுக்கமிகு சமூக பொறுப்புள்ளவர்களாக உருவாக நாம் சமூகத்தில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந் நிகழ்வின் சிறப்பு அதிதியாக வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியின் ஓய்வுநிலை உப பீடாதிபதியும் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் உப தலைவருமான தெய்வேந்திரம், மாவட்ட விளையாட்டு அதிகாரி பர்சூட் கலந்து சிறப்பித்ததுடன்,

கௌரவ அதிதிகளாக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் உடற்கல்வி விரிவுரையாளர் நவநீதன், குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் நிக்சன், தடகள பயிற்றுவிப்பாளர் நவநீதன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி சுஹானி, இளைஞர் சேவை அதிகாரிகள் கலந்து ஆரம்ப நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கிராமசக்தி திட்டம் தொடர்பில் செயலமர்வு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிராம சக்தி தொடர்பான செயலமர்வு வவுனியா உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வறுமையை ஒழித்தல் பாரிய இலக்கை அடையும் முகமாக கிராமசக்தி வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி மக்களின் பொருளாதார விருத்திக்கான பல்வேறு உதவித்திட்டங்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தல் செயலமர்வு கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராமமட்ட தலைவர்கள் ஆகியோருக்கு இடம்பெற்றது.

இதில் மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

வெளிநாட்டில் இருந்த இலங்கை வந்த பெண் கொடூரமாக கொலை!!

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை – மாவித்தர பிரதேசத்தில் வைத்து, கூர்மையான ஆயுதம் ஒன்றில் தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத நபர்கள் இவ்வாறு பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

54 வயதான பெண் ஒருவரே சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் வீட்டில் தனியாக இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண்ணின் மகன் வெளிநாட்டில் வசிக்கின்ற நிலையில் இவரும் கடந்த ஒரு மாத காலமாக வெளிநாட்டில் தங்கியிருந்துள்ளார்.

குறித்த பெண் நேற்று முன்தினம் இலங்கை வந்த நிலையில் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பாவற்குளத்தில் 27இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இரு வேலைத்திட்டங்கள்!!

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாவற்குளம் கிராமத்தில் மக்களின் அத்தியவசிய தேவைகளில் ஒன்றாக காணப்பட்ட தாய்சேய் நிலையம் மற்றும் பாடசாலையின் சுற்றுமதில் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு இன்று அதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

முன்னாள் மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானால் தாய்சேய் நிலையத்துக்கு 20 இலட்சம் ரூபாய் நிதியும் பாடசாலை சுற்றுமதில் அமைப்பதற்காக 7 இலட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டு அதன் கட்டுமான பணிகளையும் இன்று ஆரம்பித்துவைத்தார்.

குறித்த நிகழ்வில் கிராம பொது அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மயான மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

வவுனியா சாந்தசோலை இந்து மயான அஞ்சலி செலுத்தும் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பிற்பகல் 12 மணியளவில் சாந்தசோலை சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான கே.காதர் மஸ்தானின் குறித்து ஒதுக்கப்பட்ட வருடாந்த நிதியிலிருந்து 7.5 மில்லியன் ரூபாவின் அமைக்கப்படவுள்ள அஞ்சலி செலுத்தும் மயானக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களான கே.எம்.ஆப்தீன், ஜே.எம்.பசீர் தலைமையில் நாட்டிவைக்கப்பட்டது.

சனசமூக நிலையத்தின் தலைவர், செயலாளர், நிர்வாக உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் உறுப்பினர்கள், கிராம மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் தடைசெய்யப்பட்ட களைநாசினியுடன் இருவர் கைது!!

தடைசெய்யப்பட்ட களைநாசினியை கடத்திச் செல்லமுற்பட்ட இருவரை செட்டிகுளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் மேற்பார்வையில் பொலிஸ்அத்தியட்சகர் தென்னகோனின் நெறிப்படுத்தலில் செட்டிகுளம் பொலிஸ்நிலய குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீரவின் தலைமையில் குறித்த கைதுநடவடிக்கை இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று காலை மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு வாகனத்தை செட்டிகுளம் நகர்ப்பகுதியில் வழிமறித்த பொலிசார் அதில் சோதனைகளை மேற்கொண்டபோது தடைசெய்யபட்ட களைநாசினியை யூரியா பையில் கடத்திசெல்வது தெரியவந்தது.

குறித்த சொகுசுவானில் இருந்து 600 கிராம் அளவில் சிறுபைகளாக பொதிசெய்யபட்ட 6 ஆயிரம் கிலோ நிறையுடைய தடைசெய்யபட்ட கிளைபோசெட் மருந்துகளை பொலிசார் கைப்பற்றினர்.

அதன் மதிப்பு சுமார் 39 இலட்சம் என போலிசார் தெரிவித்தனர். வானில் பயணித்தவர்களை கைதுசெய்த பொலிசார் பயணித்த வாகனத்தையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துசென்றனர்.

கைதுசெய்யபட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்திரிக்கா மீது கடும் அச்சத்தில் மைத்திரி!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மீது சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட பிரதிநிதிகள் மாநாட்டிற்கு சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய சந்திரிக்கா அழைக்கப்படவில்லை என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகாரம் சந்திரிக்காவிடம் உள்ளமையினால் கடும் அச்சத்தில் இருந்த ஜனாதிபதி அதற்கமைய இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் சந்திரிக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மனிடம் கடிதம் ஒன்றை அனுப்பி தகவல் வினவியுள்ளார்.

இந்த மாநாடு தொடர்பில் பெரியதாக தகவல் வெளியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட செயலாளர் லசந்த அலகியவண்ண ஆலோசனை வழங்கியதாக ரோஹன வக்ஷ்மன் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

தமிழ் தேசிய கூட்டமைப்பின் திடீர் குழப்பநிலை : கலக்கத்தில் ரணில்!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த யோசனைக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் இறுதி சந்தர்ப்பத்திலேயே தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்கமைய 11ஆம் திகதி இரவு அல்லது 12ஆம் திகதி காலை தீர்மானிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு வட,கிழக்கு மக்கள் அச்சப்படுகின்றனர். இதனாலேயே சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பு வெளியிடுகின்றோம். வேறு காரணங்கள் ஒன்றும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான சூழ்நிலையில் மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு!!

அரசியலை விட்டு ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களின் பலம் தனக்கு இருக்கும் வரையில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பன்னிப்பிட்டியவில் நடைபெற்ற மத நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர்களுக்கு மஹிந்த கருத்து வெளியிட்டார்.

தற்போதைய அரசியல் மிகவும் குழப்பமான நிலையில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதே மக்களின் எண்ணமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலில் பதவிகள் இருக்கும், இல்லாமல் போகும். பதவிக்காக அரசியல் செய்யவில்லை. பதவி இல்லை என்றாலும் அரசியல் செய்வோம்.

பொது மக்கள் என்னுடன் இருக்கும் வரை நான் அரசியலில் தொடர்ந்து இருப்பேன் என மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவை அடிப்படையாக வைத்து அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மஹிந்தவின் கருத்து தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

சர்ச்சைக்குரிய பிரதமராக செயற்பட்ட மஹிந்தவின் அதிகாரங்களை மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவின் மூலம் நிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நோய்களில் இருந்து விடுபட மக்களுக்கு விழிப்புணர்வு ஒன்றே தேவை : வைத்தியர் தே.அரவிந்தன்!!

 

வைத்தியர் தே.அரவிந்தன்

சுகாதார சேவை பாரியளவில் பரந்து விரிந்து உங்கள் வீட்டுக்கு அண்மித்துள்ளது. எனவே நல்ல சுகாதாரம் என்பது எவருக்கும் எட்டாக் கனியல்ல விழிப்புணர்வு ஒன்றே தேவையானது.

சிறுநீரக நோய்கள் அதிகமாக காணப்படும் மாவட்டங்களாக அநுராதபுரம், பொலன்னறுவை, தெகியத்த கண்டி போன்ற பகுதிகள் அடையாளம் கண்டறியபட்ட போதிலும் இன்று கணிசமான அளவு சிறுநீரக நோயாளர்கள் வட மாகாணத்திலும் உள்ளமை கவலை அடைய செய்கின்றது.

கடந்த 5 வருடங்களில் செட்டிகுளம், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் பல புதிய சிறுநீரக நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் பல உறவுகளையும் இந்த நோய்க்கு காவு கொடுக்க நேரிட்டுள்ளது.

இன்று இயந்திரமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த மனித வாழ்க்கையில் நாமும் சேர்ந்து வேகமாக பயணிக்க வேண்டிய நிர்பந்தம் வந்துள்ளது. இதனால் ஒவ்வொருவருக்கும் அவர்களது உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை.

இதனால் பல குணபடுத்த கூடிய நோய்கள் கூட இம்மனித வர்க்கத்தை சத்தமில்லாமல் அழித்து கொண்டிருப்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. மூன்று தசாப்தங்களாக யுத்த சூழ்நிலையால் இழப்புக்களை சந்தித்த மக்களை மேலும், தடுக்க கூடிய சிறுநீரக நோய்கள் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சிறுநீரக நோய்கள் இரண்டு பெரும் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. காரணம் கண்டறிந்த சிறுநீரக நோய்கள் என்றும், காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோய்கள் (CKD- U ) என்றும் வகைப்படுத்திக் கொள்ளலாம்.

அண்ணளவாக 15% மக்கள் வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோய்களுடன் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளதுடன் இதற்கான சரியான காரணங்களோ அல்லது தடுப்பு முறைகளோ இன்னும் விஞ்ஞான ரீதியில் கண்டறியப்படவில்லை என்பதும் ஒரு கவலைக்கிடமான விடயமாகும்.

வட மாகணத்தை பொறுத்தவரை இந்த நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சரியான நோயாளர்களின் எண்ணிக்கையையும், இந்த சிறுநீரக நோய்தாக்க விளைவுகளையும் கண்டறிய சுகாதார அமைச்சு பல வேலை திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.

யுத்த சூழ்நிலையின் முடிவும் பரந்து வரும் சுகாதார வசதிகளும் இப்படி வடக்கில் மறைந்து வாழும் சிறுநீரக நோயாளர்களை காட்டிக் கொடுப்பதும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக அமையலாம்.

இன்றும் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் இந்த காரணம் தெரியாத சிறுநீரக (CKD U ) நோய்களுக்கு அதிகளவு முக்கியத்தும் கொடுத்து பெருமளவில் தடுப்பு முறைகள் விழிப்புணர்வுகளையும் மக்களிடையே ஏற்படுத்தி வருகின்ற போதும் காரணம் தெரிந்த குணபடுத்த கூடிய சிறுநீரக நோய்க்களுக்கு முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது.

இப்படியான தீர்க்கக்கூடிய அல்லது தடுக்கக்கூடிய சிறுநீரக நோய்களினால் எமது உறவுகளின் உயிர்கள் காவு கொள்ளப்படுவது என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

கடந்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் சிறுநீரக நோய்கள் என்றால் என்ன என்று நாம் பொதுவாக வினவினால் 10 பேரில் 6 பேர் அது குடிநீரில் இருக்கும் மாசுகளால் தான் வருகின்றது என்றும் சிறுநீரக நோய்கள் அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டத்தில் தான் அதிகளவு காணப்படுகின்றன என்றும் பதிலளிப்பார்கள்.

ஆனால் இந்த கூற்றை நாம் முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் சிறுநீரக நோய்களுக்கும் குடிநீருக்கும் ஆன தொடர்புகள் இன்னும் சரியான முறையில் விஞ்ஞான பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

காரணம் கண்டறியப்பட்ட சிறுநீரக நோய்களுக்கான முக்கிய காரணங்களாக நீரிழிவு நோயும், குருதி அமுக்கநோயும் இனம் காணப்படுள்ளது. இந்த நோய் உடையவர்களின் சிறுநீரக தொழிற்பாடுகள் நீண்ட காலத்தில் குறைவடைவதற்கு வாய்புக்கள் இருக்கின்றது .

ஆனால் இந்த நோய்கள் ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை ஒழுங்காக கடைப்பிடிப்பதன் மூலம் இந்த ஆபத்தில் இருந்து நோயாளர்கள் தமது சிறுநீரகத்தை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது இன்றும் பல நோயாளர்களுக்கு தெரியாமல் உள்ளது.

இதை விட நமக்கு தெரிந்த அல்லது நாம் அலட்சியப்படுத்தும் சில நோய் அறிகுறிகள் உங்கள் சிறுநீரகத்தை நிரந்தரமாக செயலிழக்கச் செய்துவிடும்.

சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் எரிச்சல், சிறு நீர் மெதுவாக வெளியேறுதல், அடைப்பு சிறுநீரக கழித்தல், சிறுநீர் கட்டுப்பாடு இன்றி வெளியேறுதல் என்பவை எமது அன்றாட வாழ்க்கை முறைகளை பாதித்து விட்டாலும் இவை சிறுநீரக நோயாளர்களுக்கான ஆரம்ப அறிகுறிகளாகவே அமையலாம்.

எமது அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளை இதனோடு ஒப்பிடும் போது இந்த நோய் அறிகுறிகளை நாம் பெரிதுபடுத்துவது இல்லை, ஆனால் இந்த ஆரம்ப அறிகுறிகள் வளர்ந்து முற்றி தீர்க்க முடியாது என்ற ஒரு நிலையிலேயே நோயாளர்கள் வைத்தியர்களை அணுகுகின்றனர்.

இந் நிலையில் எமக்கு இந்த குணபடுத்த கூடிய சிறுநீரக நோய்களை நிரந்தமாக மாற்றுவதோ அல்லது சிறுநீரக தொழிற்பாட்டை காப்பற்றுவது என்பதோ ஒரு கடினமான வேலையாகவே உள்ளது. இந்த இலகுவான தெளிவான அறிகுறிகள் ஒரு மருத்துவ பிரச்சினை என்றே தெரியாமல் பல பேர் வாழ்ந்து வருவதே இந்த வகையான சிறுநீரக நோய்களின் வெற்றிக்கு காரணமாகும். சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது சிறுநீரக நோய்களுக்கான ஒரு முக்கிய அறிகுறியாகும்.

ஆனால் எங்களில் எத்தனை பேர் சாதாரண சிறுநீரின் நிறம் பற்றிய அறிவையோ அல்லது சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை அவதானிப்பவர்களாகவோ உள்ளனர் என்று கேட்டால்அது விரல் விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கும்.

சிறுநீர் இரத்தமாக வெளியேறுவது என்பது சாதாரண சிறுநீரக கிருமி தொற்றில் இருந்து சிறுநீரக புற்று நோய் வரைக்குமான ஒரு எச்சரிக்கையாக இருக்கலா, அதை விட சிறுநீரகத்தில் சிறுநீரக கற்கல் தோன்றுவதத்கும் இது ஒரு அறிகுறியாக அமையலாம்.

சிறுசிறுநீரக கற்கள் என்பது இலங்கையை பொறுத்தவரையில் ஒரு பொதுவான பிரச்சினையாக காணப்படுகின்ற போதும் மக்களிடையே இதற்கான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

இன்று அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தாங்க முடியாத இடுப்பு வலியுடன் வரும் நோயாளர்களில் 40 வீதமானவர்களுக்கு சிறுநீரக கற்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இதில் பெரும்பான்மையானவர்கள் சிறுநீரக கற்களால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இதற்கு விதிவிலக்கு ஆகிவிட முடியாது .

சிறுநீரக கற்கள் சிறுநீரக குழாய்களை முற்றாக அடைக்கு பட்சத்தில் அதன் தொழிபாடுகள் முற்றாக முடக்கப்பட்டு சிறுநீரகம் முற்றாக செயல் இழக்கும் நிலையை அடையாளம், இன்றைய தொழில் நுட்ப உலகில் சிறுநீரக கற்களுக்கான கண்டு பிடிப்பு பரீட்சைகளும் சிகிச்சை முறைகளும் மிகவும் எளிதாகி உள்ளன.

வயிறு வெட்டி சிறுநீரக கற்களை அகற்றிய பழைய காலம் மலை ஏறி, இன்று லேசர் மூலம் அநேகமான சிறுநீரக கற்கள் அகற்றும் முறை பிரபல்யம் அடைந்து வருகின்றது.

சிறுநீரக சத்திர சகிச்சை என்றால் வாரக்கணக்கில் வைத்தியசாலையில் தங்க வேண்டும் என்ற நிலமையை மாற்றி பெரும்பாலான சிறுநீரக கற்களை ஒரு பகல் வேளை சத்திர சிகிச்சையாக மாற்றி உள்ள இன்றைய தொழில் நுட்பத்திற்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

எனவே யுத்தம் நிறைவடைந்து நாம் அபிவிருத்திப் பாதையில் செல்லும் போது இப்படிப்பட்ட காரணம் தெரிந்த சிறுநீராக நோய்க்கு இலக்காகமல் இருப்பது முக்கியமாகும்.

இன்று சுகாதார சேவை பாரியளவில் பரந்து விரிந்து உங்கள் வீட்டுக்கு அண்மித்துள்ளது. எனவே நல்ல சுகாதாரம் என்பது எவருக்கும் எட்டாக் கனியல்ல விழிப்புணர்வு ஒன்றே தேவையானது.

தே .அரவிந்தன்
சிறுநீரக – சனனி சத்திர சிகிச்சை நிபுணர்
அனுராதபுரம்

மீன் விற்பனைக்கு களமிறங்கிய பிரபல மொடல் : இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!

 

பிரபல மொடல்

தைவான் நாட்டில் அழகான இளம்பெண் ஒருவர் மீன் விற்பனை செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

தைவானின் மிக அழகான மீன் விற்பனையாளர் என இணையவாசிகளால் புகழப்படும் 26 வயது Liu Pengpeng, தனது தாயாருக்கு உதவும் நோக்கிலேயே தாம் மீன் விற்பனை செய்ய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மீன் சுத்தம் செய்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் போன்று லியு செயற்படுவது பலரையும் ஈர்த்துள்ளது. இவரது புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வரவேற்பை ஒருபோதும் தாம் எதிர்பார்த்தது இல்லை எனவும் தமது மகிழ்ச்சியை லியு வெளிப்படுத்தியுள்ளார். வியாழனன்று மட்டும் சுமார் 30 பேர் இவரிடம் இருந்து மீன் வாங்கிச் சென்றுள்ளனர். மட்டுமின்றி உள்ளூர் தொலைக்காட்சி குழுவினரும் படம் பிடித்து சென்றுள்ளனர்.

தைவானில் பிரபல நிறுவனங்களுக்கு மொடலாக செயல்பட்டுவரும் லியு, வாரத்தில் மூன்று நாட்கள் தனது தாயாருக்கு உதவ மீன் சந்தைக்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி தமது 13 வயதில் இருந்தே தாயாருக்கு உதவி வருவதாகவும், அதனாலையே மீன் விற்பனையில் தமக்கு ஆர்வம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான்கு தலைமுறையாக தமது குடும்பம் மீன் விற்பனை செய்து வருவதாக கூறும் லியு, இதுவரை இலாபகரமாகவே தொழில் நடந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். இதனால் விளம்பரத்திற்காக மட்டும் தாம் மீன் விற்பனைக்கு செல்லவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன் : வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்!!

 

தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்

சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட பதிவாளர் ஒருவர் 4000-க்கும் மேற்பட்ட தம்பதிகளை திருமணம் மூலம் சேர்த்து வைத்த பணியை செய்த நிலையில் தற்போது ஓய்வு பெற்று அது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

பிரித்தானியாவின் Gosberton பகுதியை சேர்ந்தவர் பவுல் டுட்கின். இவர் கடந்த 2006-ல் தனது சொந்த தங்கையான ஹேலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பதிவாளராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த பவுல் சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ளார். பணியில் இருந்த காலக்கட்டத்தில் 4000 தம்பதிகளை திருமணம் மூலம் இணைத்துள்ளார். இதோடு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பணிகளையும் மக்களுக்கு அதிகளவு செய்துள்ளார்.

தன்னுடயை பணியை மிகவும் விரும்பி செய்தாலும் பவுல் அதிகளவு பொதுவெளியில் யாருடன் பேசமாட்டார். இது குறித்து பவுல் கூறுகையில், நான் சொந்தமாக ஒரு கால்பந்து அணியை நடத்தி வருகிறேன். ஓவ்வொரு போட்டியும் முடிந்த பின்னர் பரிசளிக்கும் நேரத்தில் நான் அனைவர் முன்னிலையிலும் உரையாற்றுவேன்.

என் பணியை நான் எப்போதும் மன நிறைவுடனே செய்து வருகிறேன். என் சொந்த திருமணம் குறித்து கேட்கிறீர்கள். ஆம், நான் எனது சகோதரியை தான் திருமணம் செய்து கொண்டுள்ளேன்.

இதை கேட்டால் உங்களுக்கு விசித்தரமாகவும், சிரிப்பாகவும் தோன்றலாம், ஆனால் அது தான் உண்மை, எனக்கு 60 வயதாகிறது, இந்த ஓய்வு என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சராசரி திருப்பமாகவே கருதுகிறேன் என கூறியுள்ளார்.

ஆண் காதலனுக்காக மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

 

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

தன் பாலின காதலருடன் சேர்ந்து வாழ, மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி கணவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

பிரித்தானியாவின் Middlesbrough பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவர் தனது பல்கலைக்கழக தோழியான ஜெசிகா படேலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில் மருந்து கடை ஒன்றை 3 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த மே மாதம் 14ஆம் திகதி ஜெசிகா தனது வீட்டில் பிணமாக கிடந்தார்.

அதனைத் தொடர்ந்து, அவரது உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விசாரணையை தொடங்கினர். அப்போது மிடேஷ் படேல் தான் தனது மனைவியை கொன்றுள்ளார் என்பது தெரிய வந்தது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கும் இந்தக் கொலைக்கு சம்பந்தம் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வந்தார். ஆனால், வீட்டில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி கமெரா உதவியுடன் அவர் ஜெசிகாவை கொலை செய்தது உறுதியானது.

கொலைக்கான காரணம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. தன் ஆண் காதலருடன் சேர்ந்து வாழ்வதற்காகவே இந்த கொலை சம்பவத்தை மிடேஷ் அரங்கேற்றியுள்ளார். மேலும், ஜெசிகா இறந்து விட்டால் கிடைக்கும் காப்பீட்டு பணத்தைப் பெற்றுக்கொண்டு, தனது ஆண் காதலருடன் அவுஸ்திரேலியா செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, சம்பவத்தன்று ஜெசிகாவுக்கு அதிகப்படியான இன்சுலினை ஊசி மூலம் செலுத்திய மிடேஷ், பின்னர் அவரது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மிடேஷ் படேலுக்கு எதிரான ஆதரங்களை திரட்டிய பொலிசார், அதனை நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணையில் மிடேஷ் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனை குறித்த விவரங்களை தள்ளி வைத்தது. இந்நிலையில், தற்போது மிடேஷ் படேலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குழந்தைகள் இல்லா தம்பதிக்கு இலவசமாக குழந்தைகள் பெற்றுத் தரும் பெண் : சுவாரஸ்ய காரணம்!!

கனடாவில் குழந்தை இல்லா தம்பதிக்கு குழந்தை பெண் ஒருவர் இலவசமாக குழந்தை பெற்றுத் தரும் சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

கனடாவைச் சேர்ந்தவர் மரிசா. இவர் குழந்தை இல்லா தம்பதிக்கு உதவும் நோக்கமாக இலவசமாக குழந்தைகளை பெற்றுத் தருகிறார். அதற்காக 10 மாதம் குழந்தைகளை சுமந்து 16 மணி நேரம் பிரசவ வலியை அனுபவிக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஸ்பெயினை சேர்ந்த ஜீசஸ், ஜூலியோ என்ற தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லாமையால் தவித்தனர்.

அப்போது அவர்களுக்கு பெண் குழந்தை பெற்றுக் கொடுத்தேன். அதற்கு மலேனா என்று பெயர் வைத்தனர். அந்த குழந்தை 4.17 கிலோ எடையுடன் நலமாக உள்ளது.

மரிசா “மலேனா” என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்து தந்துள்ளார். அந்த குழந்தை 4.17 கிலோ எடையுடன் நலமாக உள்ளது.

நான் இவர்களுக்கு ஒரு குழந்தையை மட்டும் உருவாக்கவில்லை, நன் ஒரு பாரம்பரியத்தையே உருவாக்குகிறேன்.

குழந்தையை பிறருக்கு கொடுக்கிறாயா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இது ஒன்றும் என் குழந்தை இல்லை கருமுட்டையும், விந்தணுவும் சேர்ந்த தருணம் முதலே இது அவர்களின் குழந்தை . நான் ஒரு குழந்தைக்கு காவல் இருப்பது போலவே உணர்கிறேன்.

கனடாவில் பணம் வாங்கும் வாடகைத் தாய் முறை சட்டவிரோதமானது. அமெரிக்காவில் வாடகை தாய் கருவை சுமக்க 60,000 – 1,20 ,000 டொலர் பணம் பெறுவார்கள்.

கனடாவில் நாங்கள் அப்படி செய்யவில்லை . நான் ஒன்றும் குழந்தை பெரும் இயந்திரம் இல்லை என்று கூறியுள்ளார்.

பரந்த மனம் உள்ள ஒரு வலிமையான பெண்ணால் குழந்தை மலேனா இந்த உலகத்திற்கு வந்திருக்கிறாள். அந்த குழந்தை தற்போது 4.17 கிலோ எடையுடன் நலமாக உள்ளது. மலேனா தன் தாய் தந்தையுடன் தற்போது ஸ்பெயின் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

கோர விபத்தில் பரிதாபமாக இறந்த சிறுமி!!

 

கோர விபத்தில்

தமிழகத்தில் பள்ளிக்கு சென்ற சிறுமி விபத்தில் இறந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் லாரியோட பின் சக்கரம் அப்படியே அந்த சிறுமியின் தலையில் ஏறி இறங்கிவிட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர் லிஜோ. இவரது மனைவி ஜினினா மற்றும் மகள் ஜெமீமா அச்சு மேத்யூ சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மண்டபம் சாலையில் வசித்து வருகின்றனர். ஜினினாவின் கணவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஜெமீமா அச்சு மேத்யூ (13) சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் தனது மாமாவுடன் ஜெமீமா இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றார். அப்போது ஜீனுவின் மகள் கிஷியாவும் உடன் சென்றார். அப்போது கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை தாமோதரன் தெரு சந்திப்பில் செல்லும் போது திடீரென எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில், மாணவி ஜெமீமா கீழே விழுந்தார். அப்போது லாரியின் டயர் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர், அந்த சம்பவம் எங்க கண்முன்னாடி தான் நடந்தது. வலது புறம் பேருந்து, இடது புறம் தண்ணீர் லாரி, அதற்கு நடுவில் ஸ்கூல் பிள்ளைகளுடன் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.

அவசர, அவசரமாக வந்த அவர் பேருந்துக்கும், லாரிக்கும் நடுவில் செல்ல பார்த்தார். ஆனால் அவரால் வாகனத்தை கன்ட்ரோல் பண்ண முடியவில்லை. பைக்கில் இருந்த அந்த ஸ்கூல் பொண்ணு சாலையில் விழுந்தது தான், அடுத்த நிமிடமே தண்ணீர் லாரியோட பின் சக்கரம் அப்படியே ஏறிவிட்டது. நாங்க எல்லாம் அப்படியே ஓடுறதுக்குள்ள அந்த பொண்ணு இறந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற திருநங்கைக்கு நேர்ந்த பரிதாபம்!!

 

திருநங்கை காவலர் நஸ்ரியா

தற்கொலை முயற்சிக்குப் பின் மீண்டும் பணியில் சேர்ந்துள்ள ராமநாதபுரம் மாவட்ட முதல் திருநங்கை காவலர் நஸ்ரியா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் ராமநாதபுரம் மாவட்டத்தின் முதல் திருநங்கை காவலர் நஸ்ரியா. இவர் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார். அவர் சுமார் 21 நாட்கள் திடீரென பணிக்கு வராமல் இருந்தார்.

அதனால் அவருக்கு துறையினரால் நோட்டிஸ் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் கடந்த திங்கட்கிழமை பணிக்கு வந்தார். ஆனால் அன்று இரவு நஸ்ரியா விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது அவர் தன்னுடைய சக காவலர்கள் மூவர் தனக்கு மன உளைச்சல் அளித்ததால் தற்கொலை செய்துக் கொள்ள முயன்றதாக புகார் அளித்தார். இது மக்களிடையே பரபரபை உண்டாக்கியது. இது குறித்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்ட் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நஸ்ரியா சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில் நேற்று மீண்டும் பணியில் சேர்ந்தார். இன்று அவரை மாவட்ட சூப்பிரண்ட் அதிகாரி ஓம்பிரகாஷ் மீனா ஆயுதக் காவல் பிரிவில் இருந்து பாஸ்போர்ட் சரிபார்க்கும் துறைக்கு மாற்றி உள்ளார்.

நஸ்ரியாவுக்கு தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீது பணியிட மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.