நாடாளுமன்றத்தின் செயற்பாடு சட்டவிரோதமானது : வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா!!

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவமானது சட்டவிரோதமானதாகும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்றுலா விடுதியில் இன்று (24.11.2018) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விடயம் சட்டவிரோதமானதாகும். நான் ஆளும் கட்சியில் இருக்கின்றேனா அல்லது எதிர்க்கட்சியில் இருக்கின்றேனா என்பது கட்சி சார்ந்த விடயம். அதனை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது என்பதை எனது உரையில் தெரிவித்திருந்தேன்.

நேற்று நடைபெற்றது அரசாங்கத் தரப்பினருக்கு பெரும்பான்மை இருக்கின்றதா இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பு அல்ல. அது நாடாளுமன்றத்தில் உள்ள தெரிவுக்குழுவை தெரிவு செய்வதற்கான ஒரு கூட்டம். அது சட்டவிரோதமாக நடந்துள்ளது.

நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு இடைக்கால தடையே விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நீதிமன்ற தீர்ப்பு ஒன்று வரவுள்ளது. ஆகவே நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னரே நாங்கள் எதையும் சொல்லலாம்.

நீதிமன்றம் ஜனாதிபதி எடுத்த முடிவு தவறானது, தொடர்ந்து நாடாளுமன்றம் தொடர வேண்டும் என்றால், அப்போது தற்போதைய ஆளும் கட்சியினர் பெரும்பான்மையை நிரூபிப்பார்கள் அல்லது தேர்தல் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளுடன் வந்திருந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் பல்வேறுபட்ட குறைகளை கேட்டறிந்ததுடன் விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார்.

13 ஆம் ஆண்டு மாணவனை கொலை செய்த மூன்று மாணவர்கள்!!

 

கொலை செய்த மூன்று மாணவர்கள்

மாத்தறை எலவெல்ல வீதியில் மூன்று மாணவர்கள் இணைந்து கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி மற்றுமொரு மாணவனை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது.

பகுதி நேர வகுப்பு முடிந்து சென்று கொண்டிருந்த மாணவனை மோட்டார் சைக்கிளில் வந்த மேலும் சில மாணவர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

திஹாகொட பிரதேசத்தில் வசித்து வந்த மாத்தறையில் உள்ள பிரதான பாடசாலையில் 13 ஆம் ஆண்டில் பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மற்றைய மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எந்த காரணத்திற்காக இந்த கொலை சம்பவம் நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை. தாக்குதல் நடத்திய மாணவர்கள் தப்பியோடியுள்ளனர். இவர்களை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யுத்தம் விட்டுச் சென்ற அவலம் சிறுவனின் கண்ணீர் கதை!!

 

சிறுவனின் கண்ணீர் கதை

மட்டக்களப்பு – சவுக்கடி கடற்கரையில் மாவீரர் ஒருவரின் பிள்ளை கச்சான் விற்பதை அவதானித்தோம். உலகெலாம் மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க தயாராகிவரும் நிலையில் கடற்கரையில் கச்சான் விற்கும் அந்த சிறுவனின் பேச்சு எம்மை சோகத்தில் ஆழ்த்தியது.

தனது தந்தை இயக்கத்திற்கு போய் இறந்து விட்டதாக கூறிய அந்த சிறுவன் அப்பா இறந்த பின் தனது தாய் வேறு திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் தனது தாத்தாவுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறினான். தனது தாத்தாவான தவராசா சவுக்கடி கடற்கரையில் கூலிக்கு மீன்பிடித்து வருவதாகவும் அவர்களுக்கு மிகு‌ந்த கஷ்டம் எனவும் தெரிவித்தான்.

தாத்தாவின் வறுமை நிலை காரணமாக பாடசாலை விட்டு வந்து சவுக்கடி கடற்கரையில் தினமும் சவுக்கடி கடற்கரையில் கச்சான் விற்பதாக கூறிய அந்த சிறுவன் தனக்கு படிப்பதற்கு சரியான விருப்பம் எனவும் தெரிவித்தான்.

தான் பஸ்ஸில் பயணம் செய்தே பாடசாலைக்கு செல்வதாகவும் தன்னிடம் இருந்த சைக்கிள் உடைந்து விட்டதாகவும் மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்தான். அந்த சிறுவன் எங்களிடம் கூறிய வார்த்தைகள் சில எங்களின் மனசாட்சிகளை ஏன் உண்மையான உணர்வுள்ள தமிழர்களின் மனசாட்சிகளை நெருடிக்கொண்டே இருக்கும்.

‘அப்பா இயக்கத்திற்கு போய் இறந்து விட்டார் அம்மா வேற கல்யாணம் கட்டிட்டு போயிட்டாங்க நான் மட்டும் தனியாத்தான் இருக்கிறன் தாத்தா தான் என்னை பார்க்கிறார்.’ ‘அம்மா நான் இருக்கிறதை சொல்லாம கலியாணம் கட்டினதால என்னை அம்மா சேர்க்கிறதில்லை சேர்க்க மாட்டன் என்று தாத்தாட்டை சொல்லிட்டாங்க. நான் தனிய தாத்தாவுடன் இருக்கன் எங்கட அப்பா தயா என்று சொல்லுவாங்க. அவர் இயக்கத்திற்கு போய் காட்டிக் கொடுக்காம செத்து போயிட்டாரு.

ஊருல எல்லாரும் சொல்லுராங்க அப்பா நல்லவர் என்று. ஆனா நான் அவரை பார்க்கள. நான் இப்ப அப்பாவு இல்லாம அம்மாவும் இல்லாம தாத்தாவுடன் இருக்கன் பள்ளிக்கூடம் போறதற்கு தான் கச்சான் விற்கிறன்’ என்றான்.

-தமிழ்வின்-

முகமாலையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதி நபர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி – முகமாலையில், இன்று முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரின் சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மாவீரர் நாள் நிகழ்வுக்கு அனுமதியில்லை : அரசாங்கம் அறிவிப்பு!!

மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெலவின் கையொப்பத்துடன் இன்று மதியம் வெளியிடப்பட்ட ஊடக அறிவிப்பில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள படை முகாமிற்கு முன்னால் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள், கொடிகள் பயன்படுத்தி அந் நினைவு தினத்தை அனுஸ்டிக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் தடை விதித்து நேற்று கட்டளை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், அரசாங்க தகவல் திணைக்களம் இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு : ஐ.தே.கவை சேர்ந்தவர் பிரதமராகலாம்!!

அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

பொதுத் தேர்தலுக்கு இணங்கினால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க தயார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் அது பொது தேர்தலுக்கு தயாரில்லை. இந்த நிலையில் அந்த கட்சியை கூட்டாட்சி ஒன்றை அமைக்க வருமாறு அழைப்பு விடுக்கிறோம்.

ஏனைய கட்சிகளும் இந்த காபந்து அரசாங்கத்தில் பங்கேற்க முடியும். இந்த காபந்து அரசாங்கத்தின் கீழ் பொது தேர்தல் ஒன்றுக்கு செல்ல முடியும். குறித்த காபந்து அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஏனைய கட்சிகளோ பிரதமர் ஒருவரை நியமிக்க முடியும்.

எனினும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க ஜனாதிபதி விருப்பம் கொண்டிருக்காமையால் வேறு ஒருவரை ஐ.தே.க பரிந்துரை செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அரசியல் நெருக்கடி தொடர்பாக விளக்கமளிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம்!!

 

ஜனநாயகத்தை பாதுகாக்க சூழ்ச்சிகளை முறியடிப்போம்

வவுனியாவில் ‘ஜனநாயகத்தை பாதுகாக்க சூழ்ச்சிகளை முறியடிப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக் கட்சியினரின் கூட்டம் ஒன்று இன்று (24.11) நடைபெற்றது.

வவுனியா நெடுங்குளத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பி.ஏ. கருணாதாச தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் தொடர்பாக மக்களுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் விளக்கமளிக்கும் கருத்தரங்கு நிகழ்வாக இக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் அரசியலில் ஏற்பட்ட சட்ட மீறல்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் வடமத்திய மாவட்ட முகாமையாளரும் சட்டத்தரணியுமான சஜீவ குணரத்தின விளக்கமளித்திருந்தார்.

நிகழ்வின் இறுதியில் கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட அமைப்பாளர் பி.ஏ. கருணாதாச, வன்னி மாவட்டத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம், சிங்கள மக்கள் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துமாறு வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

எமது ஊடகத்துக்கு கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட தமிழ் பிரிவின் அமைப்பாளர் கே.கே.சந்திரகுமார், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் வாக்களித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியதாக தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எம்.எம்.சிவலிங்கம், ஐக்கிய தேசியக்கட்சியானது தங்கள் ஆதரவுக் கட்சிகளுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தல் ஒன்றை சந்தித்து வெற்றிபெறும் என தெரிவித்தார்.

மரண அறிவித்தல் : கிங்ஸ்லி அருளையா ஜெயராஜா!!

கிங்ஸ்லி அருளையா ஜெயராஜா
இளைப்பாறிய தபால்கந்தோர் உத்தியோகத்தர் (அநுராதபுரம்)

பிறப்பு : 22.07.1950
இறப்பு : 21.11.2018

அநுராதபுரம் திஸவேவவை பிறப்பிடமாகவும், இல 161, அம்மன் கோவில் வீதி, செல்வாநகர் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும், காந்தி வீதி, தோணிக்கல், வவுனியாவில் வசித்து வந்தவருமான அமரர் கிங்ஸ்லி அருளையா ஜெயராஜா அவர்கள் கடந்த 21.11.2018 புதன்கிழமை அன்று காலை காலமானார்.

அன்னார் அமரர் அருளையா சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அமரர் அருணாசலம், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும், அமரர் ஜெயராஜா சரோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும், பிரின்ஸ் சிங்கராஜா அருளையா (கனடா), பிரிஸில்லா கிருஷ்ணதேவி ராசநாயகம் (கனடா), லெஸ்லி தேவராஜ் அருளையா (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

ராஜமோகன் (நீர்கொழும்பு), ஜெயந்தினி (வவுனியா), ஜெயக்குமார் (சன் டெக்ஸ்டைல், சேவியர்கடை சந்தி, கிளிநொச்சி), வசந்தினி (லண்டன்), சனோஜ் (வவுனியா) ஆகியோரின் அன்புமிகு தந்தையாரும்,

கலாமேரி, மயில்வாகனம், மஞ்சு, சற்குணம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், தனுச சஞ்சீவன், டர்மிகா, ரம்ஷிகா, கர்ஷிகா, ரக்ஷா, யுக்ஷா, டனிசா, தேஜஸ் ஆகியோரது பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரது ஈமக்கிரியைகள் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இல 161, அம்மன் கோவில் வீதி, செல்வா நகரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் மதியம் 01 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆனந்த நகர் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை உற்றார், உறவினர், அயலவர், நண்பர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளும்படி அறியத் தருகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சனோஜ் – 0768313027
ஜெயக்குமார் – 0777456605

சபாநாயகரின் மேசையை தீவிரமாக சோதனையிட்ட நாய்!!

 

தீவிரமாக சோதனையிட்ட நாய்

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனங்கள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் நாய்களினால் சபாநாயகரின் மேசை மற்றும் கதிரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் மேசைக்குள் புகுந்து நாய்கள் சோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகரின் மேசை மீது மற்றும் மேசைக்கு கீழ் கடுமையான சோதனைகளை மேற்கொள்வதற்கு விசேட அதிரடிப்படையினரின் நாய் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அனைத்து உறுப்பினர்களினதும் மேசை, கதிரை மற்றும் ஆவணங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் நுழையும் பகுதியில், உத்தியோகபூர்வ இலக்க தகடுகள் கொண்ட பொலிஸ் அதிகாரிகள் உறுப்பினர்களை முழுமையாக சோதனையிட்டுள்ளனர். அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் ஏனைய நாட்களை விடவும் அதிக பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மிளகாய் தூள் பற்றாக்குறை : நாடாளுமன்றில் அதனை வாங்க முடியுமா?

மிளகாய் தூள்

சபாநாயகருக்கு எதிராக சபையில் அரங்கேறிய செயற்பாடுகளுக்கு கட்சிபேதம் பார்க்காது விசாரணைகளை முன்னெடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், சபாநாயகரின் பாதுகாப்பு இனிவரும் காலங்களில் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 15ஆம் திகதி சபை கூடியபோது இடம்பெற்ற சம்பவங்களும், சபாநாயகருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தமையும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் மீது தாக்குதல்களை நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாடாளுமன்ற குடும்பத்துக்குத் தலைவரான சபாநாயகருக்குப் பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டிருந்தமை குறித்து நாம் கவலைப்பட வேண்டும்.

சிலர் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தனர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு மாவட்டத்தின் சார்பில் தான் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்றார். அவரின் நடவடிக்கை சரியில்லை என்றால் மாவட்ட மக்களின் நடவடிக்கையும் சரியில்லை என்பதே பொருள்படும். இந்தச் செயல்கள் எம்மை தலை குனிய வைத்துள்ளன. அதேபோல் கடந்த 16ஆம் திகதி சபாநாயகரின் கதிரைகள், சட்ட புத்தகங்கள் வீசியெறிப்பட்டமை மிக மோசமான செயல்.

மிளகாய்த் தூள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, நாடாளுமன்றில் அதனை வாங்க முடியுமா? என்று வெளியில் கேட்கின்றனர். அந்த நிலைக்கு நாடாளுமன்றம் தள்ளப்பட்டுள்ளமை குறித்து கவலையடைகின்றோம். சபாநாயகருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே, வன்முறையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஒரு கட்சித் தலைவர் அவர்களின் பிரிநிதிகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. ஆனால், அவர்கள் பார்வையாளர்களாக இருந்து வன்முறைகளுக்கு ஆதரவளித்தனர்.
இந்த சம்பவங்கள் இனியும் இடம்பெறக்கூடாது. சட்டங்களை இயற்றுகின்ற உயர் சபை இது. சபாநாயகரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

சபாநாயகருக்கும், செயலாளர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் சாதாரண மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு இருக்கும்? எந்த கட்சியாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்கும் நடைமுறையைக் கொண்டுவர வேண்டும். வேறு எந்த நாட்டிலும் ஏற்படாத அபகீர்த்திகள் இந்த நாட்டில் இன்று ஏற்பட்டுள்ளன.

நடந்த சம்பவங்களை விசாரணை செய்து சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுடன், நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் பெயரை துஷ்பிரயோகம் செய்த மகள் : நாடாளுமன்றத்தில் புதிய சர்ச்சை!!

ஜனாதிபதி தந்தை 41 இடங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றய தினம் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அருகில் அமர்ந்திருந்த துஷார இந்துநில் ஆபாச புத்தகம் ஒன்றினை வாசித்துக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதன்போது எழுந்து பதில் கூறிய துஷார இந்துநில், நான் ஆபாச புத்தகம் வாசிக்கவில்லை, சத்துரிகா சிறிசேன எழுதிய “ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகத்தையே வாசித்துக்கொண்டுள்ளேன்.

எனினும் இதில் சத்துரிகா சிறிசேன ஜனாதிபதியின் பெயரை 41 இடங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதனைத்தான் நான் வாசித்துக்கொண்டிருந்தேன். இதனையே முஜிபுர் எம்.பி ஆபாசப் புத்தகம் படிப்பதாக கூறுகின்றார் எனக் குறிப்பிட்டார்.

மைத்திரி தொடர்பில் பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

சமகாலத்தில் மஹிந்த ராஜபக்ஷவை விட மிகவும் ஆபத்தானவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதாக பிரபல நடிகையான சமனலி பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் சிங்கள ஊடமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் கலைஞர்களாக ஒன்றையும் எதிர்பார்க்காமல் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக வேலை செய்தோம். இந்த அனைத்தையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்திருப்பது வருத்தமாக உள்ளதாகவும், நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுத்தமான அரசியல் ஒன்றை மேற்கொள்வார் என்ற எண்ணத்தில் நாங்கள் மைத்திரியை அதிகாரத்திற்கு கொண்டு வரவில்லை. எனினும் சில மாற்றங்களை பொது மக்களின் அழுத்தங்களுக்கமைய செய்வார் என எதிர்பார்த்தோம்.

மஹிந்த ராஜபக்சவின் கலாச்சாரத்தை இல்லாமல் செய்ய முடியும் என்ற உணர்வு எங்களுக்கு இருந்தது. எனினும் இந்த நேரத்தில் மைத்திரிபால சிறிசேன என்பவர் மஹிந்த ராஜபக்சவை விட ஆபத்தானவராகியுள்ளார். அண்மையில் பாதுகாப்பு பிரிவு பிரதானி ஒருவருக்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த சம்பவம் மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

அனைத்திலும் உள்ள ஆபத்து மக்களுக்கு புரிகின்றதா என தெரியவில்லை. இந்த அரசியலில் ஆபத்து வேறு தளத்தில் உள்ளது. எப்படியிருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியினரும் கடந்த காலங்களில் தங்களுக்கு கிடைத்த மக்கள் பலத்தை வீணடித்து விட்டார்கள் என்பதனை கூற வேண்டும்.

ஜனாதிபதியை தனிமைப்படுத்தவும் அவர்கள் செயற்பட்டிருப்பார். ஜனாதிபதியின் காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்த நான் இதனை கூறவில்லை. அடுத்த தரப்பும் சுத்தம் இல்லை என்பதனை நினைவுப்படுத்துகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஆவா குழு? முச்சக்கரவண்டியில் ஆயுதங்களுடன் தப்பித்து சென்ற நபர் மடக்கிப் பிடிப்பு!!

வவுனியா குருமன்காட்டுப் பகுதியில் முச்சக்கரவண்டியில் பல ஆயதங்களுடன் சென்ற நபரை நேற்றிரவு (23.11.2018) 8.30 மணியளவில் வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் விரட்டிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

வவுனியா குருமன்காட்டுப் பகுதியில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் ஒர் முச்சக்கரவண்டி அதிவேகமாக பயணித்துள்ளது. போக்குவரத்துப் பொலிஸார் முச்சக்கரவண்டியினை நிறுத்திய போதும் நிற்காமல் சென்றுள்ளது.

முச்சக்கரவண்டியினை பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற பொலிஸார் வவுனியா நகரப் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியினை மடக்கிப் பிடித்து முச்சக்கரவண்டியினை சோதனைக்குட்படுத்தினார்கள்.

இதன் போது பாரிய கத்தி, கோடாரி, பைப் போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியதுடன் வாகனத்தினை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன் முச்சக்கரவண்டியின் சாரதியினையும் பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் எதற்காக இவ்வாறான பொருட்கள் மற்றும் குறித்த நபருக்கும் ஆவா குழுவிற்கும் எவ்வித தொடர்புகள் உள்ளதா? இரவு நேரத்தில் இவ்வாறான பொருட்களுடன் பொலிஸார் நிறுத்துமாறு தெரிவித்த போதிலும் எதற்காக அதிவேகமாக பயணித்தார் என்ற பல்வேறு கேள்விகளுடன் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் வவுனியா தேக்கவத்தை பகுதியினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா நகரசபையின் எழுநீ விருதுகள் தொடர்பாக தமிழ் மாமன்றத்தின் நிலைப்பாடு தொடர்பான தெளிவுபடுத்தல்!!

 

வவுனியா நகரசபையின் “எழுநீ விருதுகள் 2018” தொடர்பான கருத்துக்களும், விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இது தொடர்பில், ஒரு பதிவு செய்யப்பட்ட கலை இலக்கிய மன்றமாகத் தமிழ் மாமன்றத்தின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கடப்பாடு இருக்கின்றது.

1. விருது கொடுப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட நபர்கள் தொடர்பாகவும், அந்நபர்களைத் தெரிவு செய்தமை தொடர்பிலும் எந்தவொரு விமர்சனங்களையோ அல்லது கருத்துக்களையோ நாம் முன்வைக்க விரும்பவில்லை. அது முற்றுமுழுதாக தெரிவுக்குழு மற்றும் நகரசபை நிர்வாகம் சார்ந்தது என்பதனை உணர்கின்றோம்.

2. ஆயினும் விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்த முறையில், விருதுக்குரியவர்களையோ அல்லது தேர்வுக்குழு மீதோ விமர்சனங்கள் வைக்கப்படுவது பொருத்தமற்றது என்பதாகவும், அவ்வாறு விமர்சனங்கள் ஏதுமிருப்பின், அவை தேர்வுக்குழுவைத் தெரிவு செய்த நகரசபை நிர்வாகத்தின் மீதே முன்வைக்கப்பட வேண்டும் என்பதாகவும் நாம் கருதுகின்றோம்.

3. ஆனாலும், குறித்த நிகழ்வு அதன் தன்மைக்கு மாறாக அரசியல் மயப்படுத்தப்படுவதனை அவதானித்து கவலையடைகின்றோம்.

4. நகரசபையின் “எழுநீ பண்பாட்டுக் குழு” வவுனியாவில் உள்ள கலை இலக்கிய மன்றங்களை இணைத்துப் பொதுக் கூட்டமொன்றிலிருந்தே அக்குழுவின் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர், என்கின்ற கருத்துத் தொடர்பில் எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடுடையவர்கள் ஆகின்றோம்.

5. நகரசபைத் தலைவர் தனித்தனியே ஒவ்வொரு மன்றங்களையும் சந்திக்க விரும்பிய போது எமது மன்றத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் நகரசபைத் தலைவரோடு சந்தித்திருந்த போதிலும், எமது மன்றத்தின் செயற்பாடுகளின் தொடர்ச்சியான முன்னெடுப்பிற்களுக்கான ஒரு சில காரணங்களினால் நகரசபையின் எழுநீ பண்பாட்டுக் குழுவின் தெரிவிற்கான அல்லது உருவாக்கத்திற்கான பொதுக்கூட்டத்தில் ஒரு மன்றமாக தமிழ் மாமன்றம் கலந்துகொள்ளவில்லை.

6. ஒரு சில பொது நிகழ்வுகளில் தமிழ் மாமன்றம் அமைப்புச் சார்ந்து கலந்து கொள்ள முற்பட்ட வேளைகளில், எமது படைப்புக்கள் சார்ந்த எல்லைப்படுத்தல்கள் மற்றும் தேவையற்ற தலையீடுகள் காரணமாக மன்ற நிகழ்வுகள் தவிர்ந்த பொது நிகழ்வுகளிலும், வேறு மன்ற நிகழ்வுகளிலும் தமிழ் மாமன்றம் அமைப்புச் சார்ந்து கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பொது நிகழ்வுகளைத் தவிர்த்து வருகின்றோம்.

7. ஆனாலும், எமது உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில், தமிழ் மாமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத வகையில் பொது நிகழ்வுகளில் அல்லது வேறு மன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதை நாம் மதிக்கின்ற அதேவேளை, அதை அவர்களுடைய உரிமையாகக் கருதுகின்றோம்.

8. எனவே, எழுநீ பண்பாட்டு விழாவிலிருந்து தமிழ் மாமன்றம் அமைப்புச் சார்ந்து நடுநிலையோடு ஒதுங்கியிருக்கின்றது என்பதையும், எமது மன்ற உறுப்பினர்கள் யாராவது பங்கேற்பின் அது அவர்களது தனிப்பட்ட விருப்பின் அடிப்படையில் சுய பங்கேற்பாகவே அமையும் என்பதையும், அவ் உறுப்பினர்களின் பங்கேற்பு தமிழ் மாமன்றத்தின் மன்றம் சார்ந்த பங்களிப்பாக அமையாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றோம்.

நன்றி
தமிழ் மாமன்றம்

வவுனியா நகரசபையின் எழு நீ விழாவிற்கு தற்காலிக தடையுத்தரவு கோரி உயர்பீடங்களுக்கு மனு!!

எழு நீ விழா

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள எழு நீ விருது வழங்கல் நிகழ்வில் முறைகேடுகள் நடைபெறுவதாக சந்தேகம் காணப்படுவதால் இவ் விழாவினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்து 20க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையேழுத்து பெற்று அக் கடிதத்தினை நேற்றையதினம் (23.11.2018) வவுனியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவகத்தில் நேரடியாக கையளித்ததுடன் அதன் பிரதிகள் வடமாகாண ஆளுனர், ச.மோகநாதன் (முதலமைச்சின் அமைச்சு) ஆகியவர்களுக்கு தபால் மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக் கடித்தத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வவுனியா நகரசபையின் கலாச்சார குழுவினால் மேற்படி எழுநீ விருது வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இவ்விருது வழங்கும் நிகழ்வின் ஏற்பாடுகளில் பல முறைக்கேடுகள் நடைபெறுவதாக பொதுமக்களாகிய எங்களுக்கு சந்தேகங்கள் காணப்படுகின்றன.

1. எதிர்கலாச்சார குழுவானது எந்த அடிப்படையில் எப்போது நியமிக்கப்பட்டது. கலாச்சார குழுவில் உள்ள அங்கத்தவர்கள் யார் யார்? இவர்கள் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்கள்.

2. நகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற பொது அமைப்புக்களுடன் (விளையாட்டுக் கழகங்கள், கலை இலக்கிய மன்றங்கள்) ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து அதன் பின்னர் பொதுக்கூட்டம் நடாத்தப்பட்ட விழா ஏற்பாட்டு குழு தெரிவு செய்யப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் அவ்வறிவித்தல் எல்லா பொது அமைப்புகளுக்கும் விடுக்கப்படாமல் தமக்கு வேண்டப்பட்ட சில அமைப்புகளை மட்டுமே அழைத்து கலந்தாலோசித்தாக சொல்லப்படுகின்றது.

பொது அமைப்புகளுடனான கூட்டம் எப்போது நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் எந்தெந்த பொது அமைப்புகள் கலந்து கொண்டன? இக்கலந்துரையாடலுக்கு எவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டது?

3.பல்துறை சேவையாளர்களை கௌரவிப்பதாக இவ்விருது வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும் மூத்த கலைஞர்கள் புறக்கணிப்பட்டுள்ளார்கள். மேலும் விருதுக்கான தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. இதை கேட்டபோது விமசர்சனங்கள் வரும் என்ற காரணத்திற்காக வெளியிடவில்லை எனவும் கேட்டவர்களை விசர்கள் என்றும் அரை வேக்காடுகள் எனவும் பேசுகின்றனர்.

பல்துறை சேவையாளர்களை கௌரவிப்பதற்கான இவ்விருதுக்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்?, கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளில் விருதுக்கானவர்களை இறுதிப்படுத்தியது யார்?, தெரிவுக்குழுவில் உள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் அவர்களின் தகைமைகள் யாவை?, எந்த அடிப்படையில் விருதுக்கானவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்?, அவர்களை பரிந்துரை செய்தவர்கள் யாவர்?, தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை இன்னும் இரகசியமாக வைத்திருப்பதன் காரணம் என்ன?, பல மூத்த கலைஞர்களை திட்டமிட்டே புறக்கணிப்பதன் காரணம் என்ன?

4. இவ்விருது விழாவிற்காக பொது மக்களிடமும், வெளிநாட்டில் உள்ளவர்களிடமும் நிதி சேகரிக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது.

இவ்விழாவிற்காக தயாரிக்கப்பட்ட பாதீடு(Budget) என்ன? இவ் விருது வழங்கும் விழாவிற்காக சேகரிக்கபடும் நிதி எந்த கணக்கில் வைப்பிடப்படுகின்றது? யாரால் கையாளப்படுகின்றது? யாரால் சேகரிக்கப்படுகின்றது?, செலவீனங்கள் தொடர்பான கணக்குகள் சரியான முறையில் பேணப்படுகின்றனவா?

இவ்வாறு பல கேள்விகள் வவுனியா வாழ் பொது மக்களாகிய எங்களுக்கு உண்டு. இவற்றை நகரசபையினரிடமோ விழா ஏற்பாட்டு குழுவினரிடமோ கேட்டால் சரியான பதில் இல்லை. அது மட்டுமல்லாமல் நாகரீகமற்ற முறையில் பேசுகிறார்கள். வவுனியா என்பது பல தரப்பட்ட மக்கள் கலந்து வாழுகின்ற பிரதேசம் இவர்கள் பேசுகின்ற பிரதேச வாதம் இனவாதம் போன்றவை எம்மை மிகவும் காணப்படுத்துகின்றன.

எனவே நாங்கள் இது தொடர்பில் நேர்மையானதும் நியாயமானதுமான விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு இது தொடர்பில் காணப்படுகின்ற சந்தேகங்களை தெளிவுபடுத்தி இவ்விருது வழங்கும் விழாவினை நடாத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அதுவரை இவ்விழாவினை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் படியும் விசாரணைகளை மேற்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பிரதிகள் :
வடமாகாணம் ஆளுநர் அவர்கள்
திருமதி . ச.மோகநாதன், முதலமைச்சரின் அமைச்சு

என்னை துஷ்பிரயோகம் செய்யும்போது அவர்கள் சிரித்தார்கள் : இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்!!

இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்

கனடாவில் இளம்பெண் ஒருவர் கோரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டபோது அவளை துஷ்பிரயோகம் செய்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்ததாகவும் ஒருவரையொருவர் அவளை வன்புணர்வு செய்ய உற்சாகப்படுத்தியதாகவும் ஒரு இளம்பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கனடாவைச் சேர்ந்த சாரா என்னும் இளம்பெண், தன்னை Fanning (19) என்னும் இளைஞன் தனியாக சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததையடுத்து அவனை சந்திப்பதற்காக சென்றாள். அவன் மீது தனக்கு ஆசை இருந்ததாகத் தெரிவிக்கும் சாரா, Fanning, El-Sakaan மற்றும் பெயர் வெளியிடப்படாத இன்னொரு இளைஞன் ஆகியோருடன் அவர்களில் ஒருவரது வீட்டுக்கு சென்றிருக்கிறாள்.

அந்த வீட்டின் பேஸ்மெண்டில் அவர்கள் இருக்கும்போது மதுபானம் அருந்திய அந்த இளைஞர்கள் அவள் வாயிலும் கட்டாயப்படுத்தி மதுபாட்டிலை திணித்து அவளை மதுவருந்த வைத்துள்ளார்கள். பின்னர் Fanning அவளுடன் பாலுறவு கொள்ள முயல, அவள் மறுத்திருக்கிறாள்.அவர்கள் மூவர் இருந்ததால் அவளை எளிதாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மூவரும் மாறி மாறி அவளை வன்புணர்வு செய்திருக்கிறார்கள். அத்துடன் விடாமல் அவளது பெண்ணுறுப்புக்குள் மின்சாரத்தால் இயங்கும் பிரஷ் ஒன்றை நுழைக்க, வலி தாங்காமல் கதறியிருக்கிறாள் அவள்.

அவளை அடித்து உதைத்ததோடு, மோசமான வார்த்தைகளாலும் அழைத்து, தொடர்ந்து மூவரும் அவளை துஷ்பிரயோகம் செய்தபின் தன்னை வீட்டில் கொண்டு விட்டு விடுமாறு சாரா கெஞ்ச, அவளை அவளது வீட்டின் முன் விட்டுச் சென்றிருக்கிறார்கள் மூவரும். வீடு சென்ற சாரா, பெற்றோரிடம் கதற, அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்திருக்கிறார்கள்.

பொலிசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில், அவர்கள் முன்னிலையில் சாரா சாட்சியமளித்ததோடு, அவளை துஷ்பிரயோகம் செய்யும்போது அவர்கள் எடுத்த வீடியோக்களும் நீதிபதிக்கு காட்டப்பட்டன. மேலும் அவர்கள் மீதான விசாரணை மீண்டும் இன்று தொடர்கிறது.