பூட்டிய அறையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி : தூக்கில் தொங்கிய காதலன் : காரணம் என்ன?

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தூக்கில் தொங்கியபடி காதலன் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹோட்டல் அறையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. உடனே விரைந்து சென்ற ஊழியர் கதவை தட்டும்போது, மோகித் என்ற 22 வயது இளைஞர் உள்ளிருந்தபடியே, எதுவும் நடக்கவில்லை என கூறியுள்ளார். ஆனால் இதனை நம்பாத ஹோட்டல் ஊழியர் அறையின் பின்புறமாக சென்று ஜன்னல் வெளியே பார்த்துள்ளார்.

அப்போது நேகா என்ற மாணவி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்த ஊழியர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துவிட்டு, அறையை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு மோகித் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து நேகாவை மீட்ட பொலிஸார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோகித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், மோகித்தின் தந்தை பொலிஸாராக பணியாற்றி வருகிறார். நேகாவும், மோகித்தும் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்

பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட இளைஞர் : தற்கொலை செய்த காதலி : வழக்கில் அதிரடி திருப்பம்!!

வழக்கில் அதிரடி திருப்பம்

நெல்லை மாவட்டத்தில் பட்டப்பகலில் இசக்கி என்ற இளைஞர் கொடூரமாக விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கடந்த 20 தேதி அன்று கூட்டுறவு சங்க உதவி அலுவலர் இசக்கி சங்கர் (31) என்பவர் தாமிரபரணி நதிக்கரையில் குளிக்க சென்ற போது மர்ம நாபார்கள் சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், இசக்கி வேறு சமூகத்தை சேர்ந்த சத்யபாமா என்ற 21 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தது தெரியவந்தது.

இதனால் ஆணவக்கொலையாக இருக்குமோ என சந்தேகமடைந்த பொலிஸார், சத்யபாமாவின் குடும்பத்தை சேர்ந்த நபர்களை விசாரணை செய்ததால் உண்மை வெளிவரும் என நினைத்து விசாரணை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அதற்குள் சத்யபாமா மறுநாளே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அடுத்தடுத்து இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், சத்யபாமாவின் சகோதரன் ஐயப்பன், தன் சகோதரி வேறு சாதியை சேர்ந்த இசக்கி சங்கரை காதலித்ததால், தன் சக நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து இசக்கி சங்கரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி மாணவர்களை கைது செய்துள்ள பொலிஸார், ஏற்கனவே சாதி வெறியில் இருந்துள்ள ஐயப்பனுக்கு, அவனுடைய சக பள்ளி மாணவர்கள் மேற்கொண்டு ஏத்திவிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்து தான் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளான்.

தற்போது சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த படுகொலை சம்பவத்தில் வேறு விடயங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார்.

வவுனியாவில் திருடர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு!!

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் திருட்டில் ஈடுபட்ட மூன்று திருடர்களை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று(23.11) மாலை 6 மணிக்கு இடம்பெற்றது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது..

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வீடு ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட திருடர்கள் அங்கிருந்த முச்சக்கரவண்டி ஒன்றில் வீட்டில் திருடிய பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

ஒருவர் மாத்திரம் குறித்த வீட்டில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டிருந்த நிலையில் வீட்டிற்கு வந்த வீட்டு உரிமையாளர் திருடனைப் பார்த்து கூக்குரலிட்டு அயலவர்களின் உதவியுடன் திருடனைப்பிடித்து நையப்புடைத்ததுடன் திருடனின் கைபேசியின் மூலம் அழைப்பை ஏற்படுத்தி பொருட்களை எடுத்துச் சென்றிருந்த இரண்டு நபர்களையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்து அவர்களையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருடப்பட்ட முச்சக்கர வண்டியும் வீட்டுப்பொருட்களும் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா பாடசாலைகளில் கருத்தோவிய நிகழ்வால் பரீட்சைகள் பாதிப்பு : பெற்றோர்கள் விசனம்!!

குழு எழு நீ பண்பாட்டு முற்றம்

வவுனியா பாடசாலைகளில் கடந்த சில தினங்களாக நகரசபையினரின் கலாச்சாரக் “குழு எழு நீ பண்பாட்டு முற்றம்” வழங்குகின்ற எழு நீ விருது 2018 தொடர்பான பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு கருத்தோவிய நிகழ்வுகளை பாடசாலைகளுக்குச் சென்று நடாத்தி வருகின்றனர்.

நேற்றைய தினம் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் பாடசாலையிலும் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்திலும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்விற்கு வவுனியா நகர பிதா இ. கௌதமன் தலைமையேற்று வருகின்றார்.

தற்போது மூன்றாம் தவணை பரீட்சைகள் பாடசாலைகளில் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறான நிகழ்வுகளை பாடசாலைகளில் நடாத்தி மாணவர்களின் பரீட்சைக்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றதாக பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் நகரசபையின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பினையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

கல்விச் சமூகத்தினர் இவ்வாறான பரீட்சை நேரங்களில் பாடசாலைக்கு அனுமதிப்பதை நிறுத்தி மாணவர்களின் பரீட்சை நடவடிக்கையில் கவனம் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றனர். இவ்வியடம் குறித்து பெற்றோர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது பாடசாலைகளில் வருட இறுதி மூன்றாம் தவணைப்பரீட்சைகள் இடம்பெற்று வருகின்ற இந்நிலையில் நகரசபையினரின் கலாச்சாரக் குழுவினரின் பாடசாலை தோறும் கருத்தோவிய நிகழ்வுகளை நடாத்தி மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்திவருவதுடன் மாணவர்களின் கவனம் சிதைவடையும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே இவ்வாறான நடவடிக்கையினை பாடசாலைகளில் மேற்கொள்வதால் மாணவர்கள் பரீட்சையில் கவனமின்றி மனநிலையில் பாதிப்பு ஏற்படுத்தப்படுவதுடன் பரீட்சைகளை மேற்கொள்வதில் மாணவர்கள் சிக்கல் நிலையினையும் எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே இவ்வாறான நிலைமைகளை பாடசாலைகளில் மேற்கொள்வதை உடனடியாக தடை செய்வதுடன் பாடசாலை அதிபர்கள் கவனம் எடுத்து மாணவர்களை பரீட்சைக்குத் தோற்ற நல்ல மனநிலையினை ஏற்படுத்தப்படவேண்டும் அத்துடன் வவுனியா தெற்கு கல்வி வலயத்தினர் இந்நடவடிக்கையினை நிறுத்தி மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்தித்தரவேண்டும் என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான ஒரு உயரிய சபையான நகரசபையில் உறுப்பினர்களிடம் அனுமதி பெறப்படாது இவ்வாறான நிகழ்வுகளை பாடசாலைகளில் அதுவும் பரீட்சை நேரம் மேற்கொள்வது உறுப்பினர்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர்களாக 45 பேர் நியமனம்!!

மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவினால் வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர்களாக 45 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு நீதி அமைச்சின் வவுனியா மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.விமலராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

எல்.எல்.ஆர்.சீ அறிக்கையின் பரிந்துரைக்கு அமைவாக வவுனியா மாவட்ட காணி பிணக்குகளை தீர்க்கும் முகமாக நீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவினால் விசேட காணி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத்தேர்வு இடம்பெற்று மத்தியஸ்தர்களாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் தெரிவுசெய்யப்பட்ட 45 விசேட காணி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கும் இதன்போது நியமனம் வழங்கப்பட்டது. இதன் தவிசாளராக இ.நவரட்ணம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிகழ்வில் மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவின் தலைவர் இளைப்பாறிய நீதியரசர் கெக்ரர் எஸ் யாப்பா, மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் திசநாயக்க, மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவின் ஆணையாளர் எம்.சோமசுந்தரம், மத்திய சபை ஆணைக்குழுவின் செயலாளர் ரஜனீ அத்தபத்து, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவின் ஆலோசகரும், சட்டத்தரணியுமான எம்.திருநாவுக்கரசு, ஆசியான் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எம்.ஜயந்த, மத்தியஸ்தர் சபை நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் மத்தியஸ்தர் சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றம் கலைப்பு : வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுகின்றார் மைத்திரி?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக தன்னால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என சிரேஸ்ட அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான எம்.எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் மீண்டும் ஒரு புதிய வர்த்தமானி மூலம் வாபஸ் பெறும் அறிவிப்பு வரலாம் எனவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்தான அடுத்தக்கட்ட விசாரணைகள் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் சார்பில் வாபஸ்பெறும் முடிவை உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கக்கூடும் என தெரியவருகின்றது.

அதனால் மீண்டும் ஒரு புதிய களம் அமையும். அந்த புதிய களம் அமைந்தால் நாடாளுமன்றம் மீண்டும் கலையாது 2020ஆம் ஆண்டில் தான் பொது தேர்தல் நடக்கும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என தெரிவித்து வரும் பலரும் மீண்டும் மகிந்தவுக்கு ஆதரவு வழங்கும் நிலை ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

-தமிழ்வின்-

கிணற்றின்முன் சிரித்துக் கொண்டே செல்பி : அடுத்து கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்த தோழிகள்!!

சிரித்துக் கொண்டே செல்பி

கிணறு ஒன்றின்முன் சிரித்துக் கொண்டே செல்பி எடுத்துக் கொண்ட இரு உயிர்த்தோழிகள் பின்னர் அதே கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த 17 வயதான இரு தோழிகள், தங்களுக்கு தெரிந்த ஒரு சிறுவனை அழைத்து தாங்கள் கிணற்றில் குதிக்கப்போவதாகக் கூறி விட்டு சென்றிருக்கிறார்கள். அந்த சிறுவன் சென்று அந்த இளம்பெண்களில் ஒருவரின் அண்ணனிடம் அதைக் கூற, அவன் ஓடிச் சென்று பார்ப்பதற்குள் காரியம் கைமீறிப் போய்விட்டது. பொலிசாரும் தீயணைப்பு வீரர்களும் வந்து அந்த இளம்பெண்கள் இருவரின் உயிரற்ற உடல்களைத்தான் மீட்க முடிந்தது.

அந்த இளம்பெண்கள் இருவரும் தங்கள் செல்போன், தங்கள் கொலுசுகள் மற்றும் தங்கள் ஷூக்களை கழற்றி கிணற்றின் கரையில் வைத்து விட்டு கிணற்றுக்குள் குதித்துள்ளனர். கிணற்றில் குதிக்கும்முன் அவர்கள் யாரிடம் சட் செய்தார்கள் என்பதை தேடினால் சட் முழுவதும் டெலீட் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதன் காரணம் யாருக்கும் தெரியாத நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பெண்களில் ஒருத்தி தனது ஆண் நண்பரிடம், தான் இன்னொருவரை விரும்புவதாகக் கூறி அவரது உறவை முறித்துக் கொண்டதாக தெரிய வந்துள்ளதையடுத்து, அதற்கும் இந்த தற்கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்னும் கோணத்தில் பொலிசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

6 வயது மகளை 3000 டொலருக்கு விற்ற தாய் : விரைவில் திருமணம் : அதிர வைக்கும் காரணம்!!

மகளை 3000 டொலருக்கு விற்ற தாய்

ஆப்கானிஸ்தானில் 6 வயது மகளை வறுமையின் காரணமாக தாய் விற்ற நிலையில் பலரும் இதுபோல செய்வது தெரியவந்துள்ளது. நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவுவதால் மக்கள் பலர் பசியும் பட்டினியுமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் ஹெரத் நகரில் உள்ள முகாமில் மமரீன் என்ற பெண் தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இதையடுத்து தனது மகள் அகிலா (6)-வை நஜ்முதின் என்ற முதியவரிடம் விற்றுள்ளார். இது குறித்து மமரீன் கூறுகையில், எங்கள் ஊரில் கடும் வறட்சி ஏற்பட்டதால் இங்கு வந்துவிட்டோம்.

ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்ததால் என் மகள் அகிலாவை $3,000 பணத்துக்கு விற்றுள்ளேன். ஆனால் எனக்கு தற்போது வரை $70 பணம் மட்டுமே கிடைத்துள்ளது.

என் கணவர் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டார் என கூறியுள்ளார். சிறுமி அகிலாவை விலைக்கு வாங்கிய நஜ்முதின் கூறுகையில், சிறுமியின் குடும்பத்தாரிடம் கடுகளவு கூட பணமில்லை. அகிலாவை எனது 10 வயது மகன் ஷெர் ஆகாவுக்கு திருமணம் செய்து வைப்பேன் என கூறியுள்ளார்.

அந்நாட்டில் சிறுமிகளை வயதானவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அதிகளவு நடக்கிறது. வறட்சி காரணமாக 275,000க்கும் அதிகமான மக்கள் தற்காலிக முகாமில் தங்கும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

சொந்த வீடு கூட இல்லாமல் மிக மோசமான வறுமையில் உயிரை விட்ட பிரபல நடிகரின் மகன்!!

பிரபல நடிகரின் மகன்

சினிமா துறையில் முன்னணிக்கு வந்துவிட்டால் எப்போதும் சொகுசான வாழ்க்கை தான் என பலரும் நினைக்கலாம். ஆனால் தயாரிப்பாளர்களுக்கு அப்படி இல்லை. சினிமாவில் போட்ட பணம் திரும்ப வருமா என்பதே கேள்விக்குறிதான்.

மன்னாதி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், மீனவ நண்பன் போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் பிஎஸ் வீரப்பா. அவர் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார்.

அவருக்கு பிறகு அவரின் மகன் பிஎஸ்வி ஹரிஹரன் தயாரிப்பை தொடர்ந்தார். அவர் 30கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். ஆனால் கடும் நஷ்டம் காரணமாக மொத்த சொத்தையும் இழந்துள்ளார். அவர் கடும் வறுமையில் சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரின் வறுமை பற்றி அறிந்து பிரபல தயாரிப்பாளர் தாணு 1 லட்ச ருபாய் உதவி செய்திருந்தார்.

இந்நிலையில் சில மாதங்கள் முன்பு வீட்டில் தடுமாறி கீழே விழுந்து அவருக்கு தலையில் பலத்த அடிபட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த ஹரிஹரன் நேற்று மூச்சு திணறலால் உயிரிழந்துள்ளார். அவரின் இறுதி சடங்குகள் இன்று நடைபெறவுள்ளது.

உயிருக்கு போராடிய மனைவி.. காப்பாற்ற சென்ற கணவன் பரிதாப பலி : நடந்தது என்ன?

கணவன் பரிதாப பலி

தமிழகத்தில் மின்சாரம் தாக்கிய மனைவியை கணவன் காப்பாற்றச் சென்ற போது, கணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்து இருக்கும் தலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (34). இவர் அதே பகுதியைச் சேர்ந்த (29) என்ற பெண்ணை 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இரண்டு பேரின் வீட்டிலும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை துணி துவைத்த புனிதா அதை உலரவைப்பதற்காக வீட்டின் பின்றம் இருக்கும் இரும்பு கம்பியில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் போட்டுள்ளார். ஆனால் அந்த கம்பியில் மின்சாரம் இருந்ததால், அதை அறியாமல் புனிதா ஈரமான துணியை போட்டுள்ளார்.

இதனால் கம்பியில் இருந்த மின்சாரம் அவர் மீது பாய அலறியுள்ளார். மனைவியின் சத்தத்தைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த கணவர் சேகர் உடனடியாக ஓடி வந்து அவரைப் பிடித்து இழுத்து தள்ளியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்த கம்பியை அவர் மிதித்துள்ளார்.

இதில் பலமாக மின்சாரம் பாய்ந்த நிலையில் தூக்கிவீசப்பட்ட சேகர் கீழே விழுந்து மயக்கமானார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மின்சாரத்தை நிறுத்தி இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சேகர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த புனிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவியைக் காப்பாற்றிய கணவன் அதே மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலகியவர்களிற்கு மைத்திரி விதித்துள்ள காலக்கெடு!!

மைத்திரி விதித்துள்ள காலக்கெடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஏனைய கட்சிகளில் இணைந்து கொண்டவர்களை உடனடியாக மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்ள காலகெடுவுடன் அறிவிப்பு ஒன்றை விடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடத்த உத்தேசிக்கவில்லை என அறிவிக்குமாறும் காலகெடுவுக்குள் கட்சியில் மீண்டும் இணையாதவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் கட்சியில் இருந்து தாமாகவே விலகிக்கொண்டார்கள் என கருதப்படும் என அறிவுறுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என கிடைத்து வரும் முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, துமிந்த திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க, ஜோன் செனவிரத்ன, தயாசிறி ஜயசேகர உட்பட பல சிரேஷ்ட உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக கட்சியினருக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் தொந்தரவுகள் சம்பந்தமான ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனிடையே அரச நிறுவனங்களில் ராஜபக்ச ஆதரவாளர்கள் நியமிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஜனாதிபதி சிறிசேன சுற்று நிரூபம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதற்கு அமைய ராஜபக்ச ஆதரவாளர்களான லக்ஷ்மன் ஹூலுகல்ல, நாலக கொடஹேவா, கபில சந்திசேன உட்பட சிலர் நியமனங்களை ஜனாதிபதி இரத்துச் செய்துள்ளார்.

-தமிழ்வின்-

வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பிய மனைவி : ஆசையாக காணச் சென்ற கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

துபாயில் இருந்து இந்தியா திரும்பிய பெண் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாயமாகியுள்ளதாக அவரின் கணவர் புகார் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் குர்மீத் சிங் (28). இவர் மனைவி ரமன்கீத் கவுர் (25). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரமன்கீத் கடந்த ஆகஸ்ட் மாதம் துபாய்க்கு வேலைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஊருக்கு திரும்ப முடிவெடுத்தார்.

அதன்படி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு தனது விமானம் வரும் என்றும் அங்கு வந்து தன்னை அழைத்து செல்லுமாறும் கணவர் குர்மீத்துக்கு தகவல் கொடுத்தார். மேலும் தனது விசாவில் பிரச்சனை இருப்பதாகவும் கூறினார். அதன்படி விமானநிலையத்துக்கு குர்மீத் சென்ற நிலையில் விமானத்தில் அவர் மனைவி வரவேயில்லை.

இதனால் பதறிபோய் அவர் துடித்து பொலிசில் புகார் அளித்தார். இது குறித்து பொலிசார் கூறுகையில், நாங்கள் சிசிடிவியில் பதிவான காட்சிகளை குர்மீத்துக்கு காட்டினோம். அதில், அவர் மனைவி ரமன்கீத் விமானநிலையத்துக்கு வந்து வேறு ஆணுடன் கொல்கத்தா செல்லும் விமானத்தில் சென்றுவிட்டது தெரிந்தது.

இது குறித்து மேலும் தகவல் அறிய கொல்கத்தா பொலிசாரை தொடர்பு கொள்ள கூறினோம் என தெரிவித்துள்ளனர். ஆனால் இதை மறுத்துள்ள குர்மீத், பொலிசார் என்னிடம் சிசிடிவி காட்சிகளை காட்டவேயில்லை. என் மனைவியை நான் அங்கு பார்க்கவேயில்லை.

ஒருவேளை என் மனைவியுடன் இருந்ததாக அவர்கள் கூறும் நபர், ரமன்கீத்தை மிரட்டி உடன் அழைத்து சென்றிருக்கலாம். ரமன்கீத்துக்கு வேறு நபருடன் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை, நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம்.

என்னை விட்டு ரமன்கீத் ஓட நினைத்திருந்தால் துபாய்க்கு அவர் செல்ல வேண்டிய அவசியமே இல்லை என கூறியுள்ளார். இதனிடையில் மத்திய அமைச்சர் மேனகா காந்தியை சந்தித்துள்ள குர்தீப் தனது நிலையை கூறியுள்ளார். அது குறித்து உரிய விசாரணை விரைவில் நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

இரவு நேரத்தில் லிப்டில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!!

மாணவிக்கு நேர்ந்த கொடுமை

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைகழக மாணவிக்கு விடுதி லிப்ட்டில் பாலியல் தொல்லை கொடுத்த லிப்ட் ஊழியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனது சக மாணவியைச் சந்திக்க லிப்ட் மூலம் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது லிப்ட் இயக்குனராக பணிபுரிந்து வரும் அர்ஜூன் என்பவர் மாணவியை லிப்டிலேயே பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து மாணவியின் அலறல் சத்தத்தை கேட்ட சக மாணவர்கள் லிப்டை தரையிறக்கி மாணவியை காப்பாற்றியுள்ளனர்.

இதைதொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பல்கலைகழக நிர்வாகத்திடமும் காவல் நிலையத்திலும் சக மாணவர்கள் புகார் அளித்தனர். மேலும், மாணவர்கள் சாலை மறியல் மற்றும் பல்கலைகழகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து லிப்ட் ஆப்ரேட்டர் அர்ஜுனை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

சிங்களமே தெரியாது : தமிழில் பேசும் சிங்களவர்கள்!!

தமிழில் பேசும் சிங்களவர்கள்

புத்தளம், கல்பிட்டியில் உள்ள 14 சிறிய தீவுகளில் ஒன்று தான் உச்சமுனை கிராமம் என குறித்த கிராமத்தில் வாழ்ந்து வரும் செபஸ்டியன் ரொபர்ட் என்பவர் கூறியுள்ளார்.

இந்த கிராமம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இந்த தீவிற்கு புத்தளம் களப்பினூடாக 1 மணித்தியாலம் படகில் செல்ல வேண்டும். உச்சமுனை ஒரு தீபகற்பமாகும். இந்த தீவில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்கிறார்கள்.

இவர்களது பிரதான தொழில் மீன்பிடித்தல்.அங்கிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள ‘கீரி முண்டல’ பகுதியில் இருந்து தான் மூதாதையர் உச்சமுனைக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் 6 அல்லது 7 குடும்பங்களே வந்தனர். அப்போது எனக்கு வயது 12.இங்கு இப்போது 300 குடும்பங்கள் உள்ளன.

நாம் அனைவரும் தமிழில்தான் பேசுகிறோம், என்றாலும் நாங்கள் சிங்களவர்களே. எங்களில் சிலருக்கு பிறப்பு அத்தாட்சி பத்திரம் மட்டுமல்ல, அடையாள அட்டையுமில்லை. அதனால் வாக்குரிமையுமில்லை.

என்றாலும் எங்களுக்குள் முரண்பாடு இல்லாது சந்தோசமாக வாழ்கிறோம். 25 கிலோமீற்றர் பரப்பை கொண்ட இங்கு இங்குள்ள சிறுவர்களின் கல்விக்காக உச்சிமுனை ரோமன் கத்தோலிக்க பாடசாலை ஒன்று மட்டுமே உள்ளது.

இதில் ஐந்தாம் வகுப்பு வரையிலே கற்பிக்கப்படுகிறது. இதில் வசதி படைத்தவர்களது பி்ள்ளைகள் மட்டுமே கற்பிட்டிக்கு போகிறார்கள். ஏனையோர் தமது குலத் தொழிலான மீன்பிடித்தலை மேற்கொள்ள செல்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் தொடரும் குழப்பம் : 180 ரூபாவை தாண்டிய டொலரின் பெறுமதி!!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மிக மோசமான பெறுமதியை இலங்கை ரூபாய் எட்டியுள்ளது. மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்திற்கு அமைய டொலர் ஒன்றின் விலை 180 ரூபாவை கடந்துள்ளது.

அறிக்கைக்கமைய இன்று 180.66 ரூபாயை எட்டியுள்ளது. அதற்கமைய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 176.72 ரூபாயை எட்டியுள்ளது.

இலங்கையில் அரசியல் நெருக்கடி தீவிரம் அடைந்துள்ள நிலையில், ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவுகளை சந்திக்கும் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பாவனைக்கு உதவாத பாக்கு வகைகளை ஏறுமதி செய்ததாக சனத் ஜயசூரிய மீது மோசடி குற்றச்சாட்டு!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட சில கிரிக்கட் வீரர்கள் மோசடியில் ஈடுபட்டதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாவனைக்கு உதவாத பாக்கு வகைகளை இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சனத் ஜயசூரிய உள்ளிட்ட சில கிரிக்கெட் வீரர்கள் ஏற்றுமதி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ம் திகதி மும்பையில் இந்திய வருமான புலனாய்வுப் பிரிவின் எதிரில் முன்னிலையாகுமாறு சனத் ஜயசூரிய உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோடிக் கணக்கான இந்திய ரூபா பெறுமதியான பாக்கு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவை பாவனைக்கு உதாவது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

போலியான நிறுவனமொன்றை நிறுவி இவ்வாறு பாக்கு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த பாக்கு வகைகளை ஏற்றுமதி செய்வதற்காக விதிக்கப்படும் வரியையும் குறித்த நிறுவனம் செலுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுவாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பாக்கு வகைகளுக்கு அதன் மொத்த பெறுமதியில் 108 வீதம் அறவீடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையும் சனத் ஜயசூரிய மீது குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்படத்தக்கது. எனினும் குறித்த குற்றச்சாட்டை சனத் ஜயசூரிய நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.