189 பேருடன் விபத்தில் சிக்கிய விமானம்.. கடைசியாக விமானி பேசியது என்ன? வெளியான தகவல்!!

189 பேருடன் சென்ற பயணிகள் விமானத்தின் விமானி, விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அதை பாதுகாப்பாக தரையிரக்க முயற்சி செய்வதாக விமானகட்டுப்பாட்டு அறையுடன் கடைசியாக பேசியுள்ளார்.

இந்தோனேஷியாவில் பயணிகள் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்திருக்க கூடும் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

பயணிகளின் உடல்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். அவர்களுக்கு உள்ளூர் மீன்வர்களும் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் டைரக்டர் Bambang Suryo விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை. தற்போது வரை 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அதன் தலைமை அதிகாரி Marshal Muhammad Syaugi, விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியினை 30 பேர் கொண்ட குழுவினர் தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்த ஆதாரங்களையும் தேடி வருகின்றனர்.

விமானம் கடலில் விழுந்த எந்த ஒரு குண்டு சத்தமும் கேட்கவில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். அதனால் விமான விபத்திற்கு அது காரணமாக இருக்காது.

விமானத்தை இயக்கிய இந்திய விமானி Bhavye Suneja பயணிகளை காப்பாற்ற முயன்றுள்ளார். அவர் கடைசியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு பேசுகையில், விமானத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது, இதனால் விமானத்தை பாதுகாப்பாக விமாநிலையத்தில் தரையிறக்க முயற்சிக்கிறேன் என்று கூறினார்.

அதற்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுமதியும் கொடுக்கப்பட்டது. ஆனால் அனுமதி கொடுக்கப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை.

அது தான் அவர் பேசிய கடைசி பேச்சாகும். இந்தவிபத்தில் அவரும் இறந்துவிட்டார் என்று விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வெளிநாட்டில் கணவர்….வீட்டில் தனியாக வசித்து வந்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!!

கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கோத்தகிரியில் தனது மகனுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

ராஜேஷ்குமார்(வயது 32) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.


இவருடைய மனைவி லோகேஸ்வரி(25). கணவர் வெளிநாட்டில் வசித்து வந்த காரணத்தால், லோகேஸ்வர் தனது 4 வயது மகன் கார்த்திகேயனுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் லோகேஸ்வரியின் தாயார் வசந்தா, மகளின் வீட்டிற்கு வந்தார். அப்போது முன்பக்க கதவு பூட்டி இருந்தது. உடனே வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது, அங்குள்ள கதவு உள்புறமாக பூட்டியிருந்தது.

இதை கண்டு சந்தேகம் அடைந்த வசந்தா கோத்தகிரி பொலிசிற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் பொலிசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு லோகேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

மேலும் அவரது மகன் கார்த்திகேயனின் கழுத்தும் அறுக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தான். உடனே பொலிசார் அவனை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை சம்பவம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது, இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்.லோகேஸ்வரியை கொலை செய்த மர்ம ஆசாமிகளை பிடிக்க எனது தலைமையிலான 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பணம் மற்றும் நகைக்காக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா விமான விபத்தில் இறந்த தாய் : வேதனையில் கதறி அழுத 14 வயது மகள்!!

இந்தோனேசியா விமான விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணின் மகளிடம் அது குறித்து கூறப்பட்ட நிலையில் பள்ளிக்கூடத்திலேயே கதறி அழுதுள்ளார்.

நாட்டின் ஜகர்டா நகரிலிருந்து பிங்கல் பினாங்குக்கு 189 பேருடன் விமானம் கிளம்பிய நிலையில் 13வது நிமிடத்தில் மாயமானது. இதையடுத்து விமானம் கடலில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தையும், உள்ளிருந்தவர்களின் சடலங்களையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விமானத்தில் பிபி ஜஜண்டோ என்ற பெண் பயணம் செய்துள்ளார். இதையடுத்து அவர் கடலில் மூழ்கிய விபரம் பள்ளிக்கூடத்தில் இருந்த அவரது மகள் கேஷியா (14) விடம் கூறப்பட்டது இதை கேட்டு கேஷியா கதறி அழுதார். பின்னர் ஒருவழியாக தன்னை தேற்றி கொண்டுள்ளார்.

சிறுமி கேஷியா கூறுகையில், என் அம்மா கடலில் மூழ்கிய செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்தது. என்னை போல விமான விபத்தில் தங்களது சொந்தங்களை பறிகொடுத்தவர்கள் பலரும் அழுது கொண்டிருக்கிறார்கள்.

இந்த பாதிப்பு எனக்கு மட்டுமில்லை என்பதை புரிந்துகொண்டேன், இதனால் நான் தைரியமாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளேன். என் அம்மா என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். இந்த விபத்து ஏன் நடந்தது என தெரியவில்லை என கூறியுள்ளார்.

காணாமல்போன தமிழ் இளம் மாணவி சடலமாக மீட்பு : மட்டக்களப்பை உலுக்கியுள்ள உயிரிழப்பு!!

மட்டக்களப்பில் தமிழ் இளம் மாணவியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி நேற்று காலை பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

இதன்பின்னர் நேற்று மாலை சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்திலேயே கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து க.பொ.த உயர்தரத்தில் பயிலும் வசந்தராஜா தேவயாணி (18 வயது) என்ற குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாணவியின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக தெரியவருகின்றது.

அரசியலில் இருந்து விடைபெறுகின்றார் மனோ கணேசன்? திடீர் முடிவால் பலர் அதிர்ச்சி!!

தற்போது இலங்கை அரசியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற விடயம் புரியாத புதிராகவே உள்ளது. யார் யாருடைய பக்கம் சேரப் போகின்றார்கள்? என்ன பேசப் போகின்றார்கள் என்பதும் பலத்த எதிர்பார்ப்பாகவே உள்ளது.

அந்த வகையில் நேற்று காலை ரணிலை சந்தித்தவர்கள் மாலை நேரத்தில் மஹிந்தவுடன் இணைந்த சம்பவங்களும் உண்டு. அவர்களுக்கு அமைச்சுப்பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், நல்லாட்சி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அமைச்சரவை முழுவதும் கலைக்கப்பட்டு நேற்று புதிய அமைச்சர்கள் சிலர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.

அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த அனைவரது பதவிகளும் பறிக்கப்பட்ட நிலையில், தமது எதிர்கால அரசியல் பயணம் எப்படி இருக்கப் போகின்றது என்பது பற்றி அனைவரும் சிந்தித்தவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தனது முகநூலில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை கண்டு பலர் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், பதில் பதிவையும் இட்டுள்ளனர்.

இதில் “என் வரலாற்றையும், என்னையும் மறந்தோருக்கும் நான் யாரென இப்போ தெரிந்திருக்கும்….

…ஆனால் அரசியல் எனக்கு சலிக்கிறது. விடைபெற அழைக்கிறது!!!” என்ற பதிவை மனோ கணேசன் இட்டுள்ளார்.

எனினும் இந்த பதிவிற்கு பலர் “நீங்கள் அரசியலை விட்டு செல்லாதீர்கள்” என்று பதில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பதவியிலிருந்து விலகத் தயார் : மஹிந்த அதிரடி அறிவிப்பு!!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பிரதமர் இந்த தகவலை வெளியிட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமர் பதவியை உறுதி செய்து கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

120 என்ற பெரும்பான்மை தன்னிடம் உள்ளதாகவும், சிக்கல் இல்லாத அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியும் எனவும் வாக்குறுதியை ஜனாதிபதி வழங்கியிருந்தார். அதன் காரணமாகவே தான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களினது ஆதரவை கூட ஜனாதிபதியால் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியவில்லை என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் பசில் ராஜபக்ச தரப்பு நேற்றைய தினம் அமைச்சு பதவி பெற்றுக் கெள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளது.

துமிந்த திஸாநாயக்க உட்பட சிலர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமையை, எந்தவொரு நாடும் இன்னமும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

ஜனாதிபதியின் ஜனநாயகமற்ற செயல் குறித்து சர்வதேச நாடுகளில் விமர்சனம் வெளியிட்டுள்ளது. அத்துடன் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என சர்வதேச நாடுகள் பல தங்கள் பிரஜைகளுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

189 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம் : விமானத்தில் பயணித்த இளைஞனின் புகைப்படம் வெளியானது!!

இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் ஜகர்தாவில் இருந்து, சுமத்ரா தீவு அருகில் இருக்கும் பங்கல் பினாங் நகரத்திற்கு நேற்று காலை புறப்பட்டுச் சென்ற விமானம் நடுவானில் மாயமானது.

189 விமானிகளுடன் பயணித்த இந்த விமானம், 13 நிமிடங்கள் கழித்து விமான நிலையத்துடனான தொடர்பில் இருந்து விலகியது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானமாகும்.

6 விமான ஊழியர்கள், இரண்டு விமான ஓட்டிகள், 181 பயணிகள் என 189 நபர்கள் மாயம். அந்த 181 பயணிகளில் 1 குழந்தை மற்றும் 2 பச்சிளங்குழந்தைகளும் பயணித்திருந்தனர்.

இதனால் அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி தொடங்கப் பட்டது. விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்கிற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

இந்நிலையில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது உறுதியானது. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

உடைந்த விமான பாகங்கள் கடலில் மிதப்பதாகவும் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், பிரபல ஆங்கில ஊடகம் விமானத்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அதில் அந்த இளைஞரின் பெயர் Deryl Fida Febrianto எனவும் அவர் தன் தாய் மற்றும் தந்தையுடன் பட்டமளிப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி விமானத்தில் அவர் மாஸ்க் போட்ட நிலையில் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த இளைஞனின் தாய் தன் மகனுக்கு என்ன ஆனது என்பது உறுதியாக தெரியாமல் Pangkal Pinang-ல் இருக்கும் Depati Amir விமானநிலையத்தில் கண்ணீருடன் காத்திருக்கிறார்.
இவருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆகியுள்ளது.

Deryl Fida Febrianto குறித்து விமானநிலையத்தில் இருக்கும் அவரது மனைவி Lutfinani Eka Putri(23) கூறுகையில், விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானத்தில் இருந்த நிலையில் அவர் புகைப்படம் எடுத்து அனுப்பினார், எனக்கு தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பிய படி இருந்தார். அதன் பின் திடீரென்று உள்ளூர் நேரப்படி காலை 06.15மணிக்கு அவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.

நான் ஏதோ சிக்னல் பிரச்சனை என்று நினைத்தேன், அதன் பின் செய்தியை பார்த்த போது விமானம் விபத்தில் சிக்கியதை அறிந்தேன். உடனடியாக என் கணவர் விமானத்தின் நம்பரையும், அதையும் சோதித்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தேன், என் கணவருக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது என்று கதறி அழுதுள்ளார்.

இதே போன்று Depati Amir விமானநிலையத்தில் ஏராளமான உறவினர்கள் தங்கள் சொந்தபந்தங்களுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆனால் அங்கிருக்கும் மீட்பு படை அதிகாரி ஒருவர் யாரும் உயிர் பிழைத்திருந்த வாய்ப்பில்லை என்று கூறுகிறார். ஆனால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

இதற்கிடையில் கடலில் பயணிகளின் வாலட் மற்றும் அவர்கள் பயன்படுத்திய செல்போன் போன்றவைகளும், விமானநிலையத்தில் தங்கள் உறவினர்களை நினைத்து பலர் கதறி அழுவது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

நாடாளுமன்றதை உடன் கூட்டுங்கள் : இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும் : ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக நாடு ஆபத்திற்குள்ளாகிள்ளதாக ஐரோப்பா ஒன்றியம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் உடனடியாக நாடாளுமன்றதை கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட விசேட அறிக்கையின் மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா ஒன்றியத்தின் தூதுவர் உட்பட ஏனைய சர்வதேச பங்காளர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியலமைப்பிற்கு மதிப்பளித்து தீர்வு ஒன்றை உடனடியாக கண்டுபிடிப்பதற்கு அவசியமான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் ஐரோப்பா ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் நன்மை கருதி நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள். அதற்கு பூரண ஆதரவு வழங்கத் தயார் என ஐரோப்பா ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இன்று வன்முறை வெடிக்கக்கூடிய சாத்தியம் : எச்சரிக்கும் அமெரிக்கா!!

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் பிரதமரை பதவி நீக்கம் செய்து, நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளதன் விளைவாக, அரசியல் கொந்தளிப்பு, உள்நாட்டு அமைதியின்மை, எதிர்ப்புப் பேரணிகள் அதிகரித்துள்ளன.

பிரதமரின் வதிவிடமான அலரி மாளிகைக்கு அருகே இன்று, நண்பகல் 12 மணிக்கு பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

அமைதியான நோக்கில் தொடங்கும் ஆர்ப்பாட்டங்கள் கூட, மோதலாக மாறவோ, வன்முறைகள் அதிகரிக்கவோ கூடும் என்று அமெரிக்க குடிமக்களுக்கு தூதரகம் நினைவுபடுத்துகிறது.

அத்துடன், ஆர்ப்பாட்டங்கள், நடைபெறும், மற்றும், பெரியளவில் கூட்டங்கள் நடக்கும், இடங்களில் இருந்து விலகி, கவனமாக .இருத்தல் வேண்டும்.

இலங்கை முழுவதுக்குமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள அதேவேளை, இத்தகைய கூட்டங்கள், அலரி மாளிகை, நகர மண்டபம், லிப்டன் சதுக்கம், லிபேர்ட்டி சுற்றுவட்டம், நாடாளுமன்றம் ஆகிய இடங்களே அதிகளவில் இடம்பெறலாம்.

இத்தகைய கூட்டங்கள் கூடும் இடங்களை தவிர்த்து அவதானமாக இருக்க வேண்டும். உள்ளூர் ஊடகங்களை கவனித்து, உங்களைச் சுற்றி மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

-தமிழவின்-

சற்றுமுன் மஹிந்தவை நேரில் சென்று சந்தித்த சம்பந்தன் : பேசிய விடயங்கள் வெளிவந்தன!!

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சற்றுமுன்னர் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக பேசப்பட்டன.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்பின் 16 எம்.பிக்களின் ஆதரவு தனக்கு மிகவும் அவசியம் என்று சம்பந்தனிடம் மஹிந்த தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சம்பந்தன், “கூட்டமைப்பின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன் என்று நீங்கள் எழுத்துமூலம் உறுதிமொழி தந்தால் மட்டுமே உங்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பரிசீலித்து முடிவு எடுப்போம்” என்று “ பதிலளித்துவிட்டு வெளியேறி வந்துவிட்டார்.

இந்தச் சந்திப்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூம் கலந்துகொண்டார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

மீண்டும் ஒரு பயங்கரமான சம்பவம் : பெற்ற மகளை தீ வைத்து எரித்த தந்தை!!

ஆந்திர மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் பெற்ற மகளை தந்தையே எரித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டம், கொம்மரோலுவை அடுத்த நாகிரெட்டிபள்ளி கிராமத்தை சேர்ந்த சைதன்யா என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த ஆவுலையா என்பவற்றின் மகள் இந்திரஜா (20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ஒரே கல்லுரியில் படிக்கும் போதே காதல் மலர்ந்துள்ளது. இந்திரஜா தற்போது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சைதன்யா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இவர்களுடைய காதல், ஆவுலையாவிற்கு தெரியவரவே, வேற்று சமூகத்தை சேர்ந்த சைதன்யாவை மறந்துவிடுமாறும், தான் கைகாட்டும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.

ஆனால் காதலை தொடர்ந்து இந்திரஜா, தினமும் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆவுலையா நேற்று இரவு, தூக்கில் தொங்கவிட்டவாறு இந்தியரஜாவை கொலை செய்ததோடு, இன்று அதிகாலை யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் வைத்து எரித்துள்ளார்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்த பொதுமக்கள், வேற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் பெற்ற மகளையே ஆவுலையா கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுகுறித்து கூறியுள்ள ஆவுலையா உறவினர்கள், இந்திரஜா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகா தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே ஆந்திர மாநிலத்தில் அதிகமான ஆணவக்கொலைகள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது நடைபெற்றுள்ள கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழக இளைஞனுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை : மகனை காப்பாற்றுப்படி கதறும் தாய்!!

மலேசியாவில் வேலை பார்க்கும் என் மகனை அடித்து துன்புறுத்துவதால் அவனை எப்படியாவது மீட்டுத் தரும் படி தாய் கண்கலங்கிய நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்த சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

தமிழகத்தின் பட்டுக்கோட்டை ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். கடந்த ஆண்டு மலேசியா சென்ற இவர், அங்குள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் திடீரென்று அங்கிருந்த சிலர் வீரப்பனை மிரட்டி கொடுமைபடுத்தியுள்ளனர். இதனால் பயந்து போன வீரப்பன் ஊருக்கு திரும்புவதற்காக கடையின் முதலாளியிடம் கூறியுள்ளார்.

அவரோ சரி பார்க்கலாம் என்று அப்போதைக்கு சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்பு 3 நாட்கள் கழித்து கடையில் 2 லட்சம் ரூபாய் பணத்தைக் கையாடல் செய்துவிட்டதாகக் கூறி ஊருக்கு அனுப்பாமல் கடை உரிமையாளர் வீரப்பனை அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி வீரப்பனின் குடும்பத்தினருக்கு போன் செய்து 2 லட்சம் பணத்தைக் கொடுத்தால் தான் மகனை ஊருக்கு அனுப்புவேன் என மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் வீரப்பன் கடந்த சில நாள்களாக ரத்த காயத்துடன் இருப்பதுபோல் உள்ள புகைப்படத்தையும் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் பேசும் ஆடியோ ஒன்றையும் வாட்ஸ் அப் மூலம் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார்.

அதில், எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள் என அழுதபடி கூறியுள்ளார். மகனின் கதறி அழும் ஆடியோவைக் கேட்ட வீரப்பனின் தாய் இந்திரா தன் உறவினர்களுடன் இன்று தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுப்பதற்காக வந்தார்.

அப்போது, கடந்த 23-ஆம் திகதி என் மகன் போனில் கடைசியாகப் பேசினான். அதன் பிறகு அவனை தொடர்புகொள்ள முடியவில்லை. வெளிநாட்டில் அவன் வேலை செய்யும் இடத்தில் அவனைச் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்துகின்றனர்.

உடல் முழுக்க காயங்களோடு இருக்கும் படத்தையும் எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள் என அழுதபடி அவன் பேசும் குரலையும் கேட்ட பிறகு கண்கலங்குகிறது.

குடும்ப கஷ்டத்துக்காகக் கடன் வாங்கி அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அங்கே அவன் மிகவும் கஷ்டப்படுகிறான்.

ஏதும் அசம்பாவிதம் நிகழ்வதற்குள் என் மகனை மீட்டுத் தர வேண்டும் என்று கண்கலங்கிய நிலையில் கூறியுள்ளார்.

17 தங்கப்பதக்கம் வென்ற வீரா் சாலை ஓரம் ஐஸ் விற்கும் அவலம்!!

குத்துச்சண்டை போட்டிகளில் 17 தங்கப்பதக்கம் குவித்த தினேஷ் குமார் தனது கடனை அடைக்க சாலையோரம் ஐஸ் விற்பனை செய்து வருவது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.

இந்தியாவின் ஹரியானா மாநிலம் பிவானி பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் குமார். குத்துச்சண்டை வீரரான தினேஷ் குமார் நாட்டிற்காக பல போட்டிகளில் விளையாடி பதக்கம் வென்றுள்ளார்.

குறுகிய காலமே அவா் விளையாடி இருந்தாலும் 17 தங்கப்பதக்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என சாதனை படைத்துள்ளார். மேலும் கடந்த 2010ம் ஆண்டு இந்திய அரசின் சிறந்த வீரருக்கான அா்ஜூனா விருதையும் இவா் வென்றுள்ளார்.

சாலை விபத்து காரணமாக தினேஷ் குமார் மேற்கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

தினேஷின் மருத்துவ செலவு மற்றும் அவரை வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறச் செய்வதற்காக அவரது தந்தை பெற்ற கடன் காரணமாக தினேஷ் குமாரின் குடும்பம் மிகவும் கடனில் தத்தளித்து வருகிறது.

இந்நிலையில் குடும்ப கஷ்டத்தை சமாளிக்க தினேஷ் ஐஸ் விற்பனை செய்து வருகிறார். இது தொடா்பாக பேசுகையில், “கடன்களை அடைப்பதற்காக ஐஸ் விற்று வருகிறேன். திடீரென நடந்த விபத்தால் என்னால் தொடா்ந்து விளையாட முடியவில்லை.

எனக்கு நிலையான வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தி தரவேண்டும். என்னால், இளம் வீரா்களுக்கு பயிற்சி அளித்து அவா்களை சிறந்த வீரர்களாக மாற்ற முடியும்” என்று அவா் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

189 பேருடன் விபத்தில் சிக்கிய இந்தோனேசிய விமானம் : ஒட்டிச் சென்ற இந்திய விமானிக்கு நேர்ந்த சோகம்!!

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தை ஒட்டியது இந்தியாவை சேர்ந்த விமானி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவில் செயல்பட்டு வரும், போயிங் 737 மேக்ஸ் 8 வகையை சேர்ந்த லையன் ஏர் பயணிகள் விமானம், 189 பேருடன், தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கல் பினாங் தீவு நோக்கி புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட 13 நிமிடங்களில் திடீரென கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து மாயமானது.

ஒரு சிறுவன், 2 கைக்குழந்தைகள் உட்பட 181 பயணிகள் மற்றும் 8 விமான பணியாளர்களுடன் புறப்பட்ட விமானம் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட மீட்பு படையினர், விமானம் கடலில் மூழ்கியிருந்ததை கண்டறிந்தனர். இதில் பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் விமானத்தை ஓட்டிச்சென்ற இரு விமானிகளின் ஒருவர், டெல்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்த பாவ்யே சுனேஜா (31) என்பது தெரியவந்துள்ளது.

2011ம் ஆண்டு லயன் ஏர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சுனேஜா, விரைவில் இந்தியாவிற்கு திரும்ப இருந்ததாகவும், வேறு ஒரு விமான நிறுவனத்தில் பணிக்கு சேர இருந்ததாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

திடீரென சிரிக்கவும், பாடவும் செய்த சிறுமி : வினோத நோயால் பரிதாப பலி… எச்சரிக்கை விடுக்கும் தாய்!!

வழக்கமான சோதனையின் போது கொடுக்கப்பட்ட மயக்கமருந்தால் பிரித்தானியாவை சேர்ந்த சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் சாதாரண சிகிச்சைக்கு சென்ற, அலிஸ் ஸ்லோமன் என்ற 14 வயது சிறுமி திடீரென ஏற்பட்ட மாறுதல்களால் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கூறிய சிறுமியின் தாய் சாரா, எனக்கு அலிசை சேர்ந்து 19, 12 மற்றும் 6 வயதில் 4 குழந்தைகள் உள்ளனர். அலைசா பிறந்தது முதலே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆட்டிசம், பார்வை குறைபாடு மற்றும் ஹைபரோமொபிலிட்டி நோய்கள் இருந்தது. இதனால் சிறிய குழந்தை போலவே எப்பொழுதும் விளையாடி கொண்டிருந்தாள்.

14 வயதை கடந்தும் சிறுமியை போல இருந்தாள். அவளுடைய பிட்யூட்டரி சுரப்பி சரியாக ஹார்மோனை உற்பத்தி செய்யவில்லை. இதனால் அவளுக்கு தினமும் ஹார்மோன் ஊசி போட்டு வந்தது.

இந்த நிலையில் அவள், திடீரென சிரித்துக்கொண்டும், பாடல் பாடிக்கொண்டும் இருந்தாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போய் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து பார்க்குமாறு அவளுடைய ஆலோசகர் கூறியிருந்தார்.

அதன்பேரில் நாங்களும் மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு ஸ்கேன் செய்வதற்கு முன்பு அவளுக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அவளுடைய இதயம், சீரான அளவை தாண்டி அதிகமான முறை துடிக்க ஆர்மபித்தது.

உடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தது. உடனே குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அலைசாவை கொண்டு சென்றோம். அங்கு அனுமதிக்கப்பட்ட 72 மணிநேரத்தில் அவள் எங்களைவிட்டு பிரிந்துவிட்டாள்.

பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவளுடைய இதயம் 14 வயது குழந்தையின் இதயத்தை விட வலிமையிழந்து காணப்பட்டதாக கூறினார். அவளுடைய வலது ஆரிக்கிள் பாதிக்கப்பட்டிருந்ததாலே இந்த சோக சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சாரா, பெற்றோர்கள் யாரேனும் குழந்தைகளுக்கு மயக்கமருந்து கொடுத்தால், அதற்கு முன்னதாக அவர்களுடைய இதயம் சீராக உள்ளதா என்பதை பரிசோதனை செய்த பின்னர் கொடுங்கள் என கூறியுள்ளார்.

வவுனியாவில் வீட்டிலிருந்து முப்பது கஞ்சா செடிகள் மீட்பு : ஒருவர் கைது!!

வவுனியா குடாகச்சகொடிய பகுதியில் இ்ன்று (29.10.2018) மதியம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது முப்பது கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்து வந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மடுகந்தை பொலிஸ் காவலரண் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று மதியம் 12 மணியளவில் குடாகச்சக்கொடிய பகுதியில் உள்ள வீ டொன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது முப்பது கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்து வந்த 20 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்ததுடன் கஞ்சா செடிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.