இந்தோனேசியாவில் காதலனுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்த பெண்ணுக்கு, பொதுமக்கள் மத்தியில் வைத்து பிரம்படி கொடுக்கப்பட்டது.
இஸ்லாமிய ஷரியா சட்டப்படி, மது அருந்துதல், ஓரினசேர்க்கை மற்றும் தகாத உறவு போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
225 மில்லியன் முஸ்லீம் மக்களை கொண்ட இந்தோனேசியாவில் மட்டும் தான் ஷரியா சட்டம் முழுமையாக நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் காதலனுடன் நெருக்கமாக இருந்த 21 வயது பெண்ணுக்கு பொதுமக்கள் மத்தியில் வைத்து பிரம்படி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இளம்பெண்ணின் காதலனுக்கும் மக்கள் மத்தியிலே பிரம்படி கொடுக்கப்பட்டது.
பொதுவாக இதுபோன்ற குற்றங்களுக்கு 10 முதல் 25 பிரம்படி கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
இது தொடர்பான கடிதம் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் கூடிய விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டி, அரசியலமைப்பிற்கமைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு நாடாளுமன்ற பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும்பான்மையான உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதால், நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரத்தை சபாநாயகர் பெற்றிருக்கிறார்.
இதனையடுத்து அடுத்து வரும் நாட்களில் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16ம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை விதித்திருந்தார்.
பிரதமராக பதவியேற்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் உறுப்பினர்களை திரட்டுவதற்காக இந்த காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் ஜனாதிபதியின் உத்தரவையும் மீறி, உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளது.
இதன்போது பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கான பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை சபாநாயகர் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட கடிதம் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்து நாட்டின் சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் மக்களின் அரசு உரிமையை பாதுகாக்குமாறு நாட்டின் பிரதமராக தான் அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல கன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி, அவரது இரண்டாவது மனைவியை அடித்து துன்புறுத்திய நிலையில் பொலிசிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளார்.
நடிகர் துனியா விஜய் நாகரத்னா என்ற பெண்ணை முதல் திருமணம் செய்த நிலையில் கீர்த்தி என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்தார்.
இந்நிலையில் கீர்த்தியை, நாகரத்னா அடித்து துன்புறுத்தியதாக பொலிசிடம் புகார் தரப்பட்டது. இது குறித்து விசாரித்த பொலிசார் விஜய் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது நாகரத்னா, கீர்த்தியை மோசமாக திட்டியதும் செருப்பால் அடித்ததும் உறுதியானது. இதையடுத்து நாகரத்னாவை கைது செய்ய அவர் வசிக்கும் வேறு வீட்டுக்கு பொலிசார் சென்றனர்.
அப்போது அங்கிருந்த அவரின் மகள் மோனிகா தனது அம்மா வீட்டில் இல்லை என கூறியதோடு, பொலிசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தார்.
இதையடுத்து பொலிசார் மோனிகாவை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதோடு தலைமறைவாக உள்ள நாகரத்னத்தை தேடி வருகிறார்கள்.
மகள் கைது செய்யப்பட்டது குறித்து அறிந்த விஜய் உடனடியாக காவல் நிலையத்துக்கு சென்று அவரை பார்த்தார். அவர் கூறுகையில், நாகரத்னம் பொலிசிடம் சரணடைய வேண்டும், அவரால் மோனிகாவின் எதிர்காலம் தான் பாதிக்கப்படும்.
என் மகள் சிறையில் இருப்பதை என்னால் பார்க்கமுடியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.
முன்னாள் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
தெமட்டகொடையில் உள்ள பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைமைகத்துக்கு சென்ற நிலையில் அர்ஜீன ரணதுங்கவின் பாதுகாவலர்களுக்கும் மற்றுமொரு குழுவினருக்கும் மோதலொன்று இடம்பெற்றது.
குறித்த குழுவினர் மீது, அமைச்சர் அர்ஜீன ரணதுங்கவின் பாதுகாவலர்களர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின்போது மூவர் காயமடைந்தனர். அதில் இருவர் உயிரிழந்ததுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாகவே அர்ஜீன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்த போராட்டமும் கைவிடப்பட்டுள்ளது.
சென்னையில் காதலியை சீண்டியவனை கொலை செய்த காதலன் சில மாதங்கள் கழித்து பழிக்குப்பழி தீர்க்கப்பட்டுள்ளார். கோயம்பேட்டை சேர்ந்த வயது வாலிபர் விக்னேஷ் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர் காதலித்து வந்த பெண்ணுக்கு கணேஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கணேஷை அழைத்து மது அருந்தலாம் என கூறிவிட்டு விக்னேஷ் அழைத்துச்சென்று இருவரும் மது அருந்திவிட்டு பைக்கில் சென்றுள்ளனர்.
கோயம்பேடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் பின்பக்கம் அமர்ந்திருந்த விக்னேஷ் கணேஷின் விலா எலும்பில் கத்தியால் குத்திவிட்டு வண்டியிலிருந்து எகிறிக்குதித்து இறங்கியுள்ளான். இதனால் பைக்கை தாருமாறாக செலுத்திய கணேஷ் சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி உயிரிழந்தான்.
இது விபத்தல்ல கொலை என கருதி கொலை வழக்காக பதிவு செய்தனர். மேலும் அந்த கொலைவழக்கின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் விக்னேஷ் கைது செய்யப்பட்டான்.
கைது செய்யப்பட்ட விக்னேஷ் 5 மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் கடந்த வியாழனன்று வெளிவந்துள்ளார். தனது அண்ணனை கொலை செய்தவனை பழிக்குப்பழி வாங்க கணேஷின், தம்பி பிரகாஷ் திட்டமிட்டு தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு மைதானத்திற்கு வந்துள்ளான்.
மைதானத்துக்கு வந்த பிரகாஷ் மற்றும் அவன் நண்பர்கள் விக்னேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கில் விக்னேஷை கொலை செய்த பிரகாஷ் மற்றும் நண்பர்கள் உட்பட 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் நேற்று நடந்த வாகன விபத்தில் கணவரின் கண்முன்னே, மனைவி துடிதுடித்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த பிரவீன் (28), விசாகபட்டினத்தை சேர்ந்த ரம்யா (28) என்ற பெண்ணை கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒரே நிறுவனத்தில் தான் பணிபுரிந்து வருகின்றனர்.
சனிக்கிழமையன்று தம்பதியினர் சில்குர் பகுதியிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வளைவு ஒன்றில் வேகமாக லொறியை முந்தி செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி சக்கரங்களுக்கு இடையில் தம்பதியினர் சிக்கி கொண்டனர்.
இந்த விபத்தில் ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பிரவீன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பகா வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட வீர, வீராங்கனைகள் நான்கு வெண்கலப் பதக்கங்களை தனதாக்கி கொண்டுள்ளனர்.
கொழும்பு சுகதாச விழையாட்டு உள்ளரங்கில் 04.10.2018 நடைபெற்ற தேசிய வூசூ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த என்.பிரவீந், க.டிலக்சினி, த.தர்சிகா வினோதினி மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த எஸ்.சுதர்ஜனா ஆகியோர் கண் போய்ஸ் விழையாட்டுக் கழகத்தின் சார்பாக கலந்து கொண்டு வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்திருந்தனர்.
இக் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்வதற்கான நிதி உதவியினை முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், சிறி அம்பாள் மோட்டர்ஸ் உரிமையாளர் எஸ்.சதீஸ் மற்றும் வவுனியா வர்த்தக நலன்புரிச் சங்கம் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
தேசிய ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை வென்ற வீராங்கனைகளுக்கு வவுனியா வர்த்தக நலன்புரிச்சங்கத்தால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் வீராங்கனைகள் பாடசாலை மாணவிகள் என்ற வகையில் வவுனியா நகரசபை உறுப்பினர் இ.ராஜலிங்கம் மற்றும் வர்த்தக நலன்புரிச்சங்கத்தின் தலைவர் த.சிறிஸ்கந்தராஜா ஆகியோரால் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்திற்கு எதிராக செயற்பட கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்தால் இலங்கைக்கு எதிராக சர்வதேச தடை விதிக்கப்படும் என சர்வதேச நாடுகள் எச்சரித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐரோப்பா ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி, புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக விசேட வெளிநாட்டு பயணத்தடையை முதற்கட்டமாக விதிக்கப்படவுள்ளதாக சர்வதேச பிரஜைகளுக்கு அறிவிக்கப்படும் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல்வேறு நாடுகளை சேர்ந்த ராஜதந்திரிகள் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துப் பேசியிருந்தனர். இதன்போது அரசியலமைப்பு எதிராக செயற்படுகின்றமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தனர்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர், சீனாவை தவிர எந்தவொரு பெரிய நாட்டுத் அரச தலைவர்களும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்ததனை விடவும் மிகவும் வலுவான நிலையில் இருக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் சட்டவிரோதமாக அமைச்சர்களை நியமிக்கட்டும், பதவி வகிக்கட்டும், பதவிப் பிரமாணம் செய்து கொள்ளட்டும்.
எனினும் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துகொண்டவர்கள் வெகு சீக்கிரத்தில் இந்த அனைத்தையும் விட்டு வீடு செல்ல நேரிடும் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்புத் தரப்பினர் சட்டத்தை அமுல்படுத்துவோர் அனைவருக்கும் நாம் ஒன்றை தெளிவாக கூற விரும்புகின்றோம்.
சட்டத்தை எவரும் கையில் எடுத்துச் செயற்பட வேண்டாம்.
நாம் வெகு விரைவில் மிகவும் வலுவான ஓர் அரசாங்கத்தை உருவாக்வோம். எவரினாலும் காலில் பிடித்து இழுக்க முடியாத வகையிலான வலுவான அரசாங்கம் உருவாக்கப்படும்.
வலுவான அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பயணத்தை எவரேனும் தடுக்க முயற்சித்தால் அதற்கு நட்டஈடு செலுத்த ஆயத்தமாக இருங்கள் என அவர்களை நாம் எச்சரிக்கின்றோம்.
எதிர்வரும் நாட்களில் சுதந்திரக் கட்சி மட்டுமன்றி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களும் எமக்கு ஆதரவளிக்க உள்ளனர்.
எந்த ஊடகம் எவ்வாறான பொய்களைச் சொன்னாலும் விரைவில் இந்த நிலை மாறும் என்பதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த சொற்ப நாட்களிலேயே ஊடகங்கள் மீது கடுமையான அழுத்தங்களை இந்தத் தரப்பினர் பிரயோகித்து வருகின்றனர்.
ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (29.10.2018) காலை 10 மணியளவில் மனித சங்கிலிப் போராட்டம் இடம்பெற்றது.
இலங்கை நாட்டின் மிக முக்கிய பொருளாதாரமாகவும் முதுகெலும்பாகவும் இருந்து வருவது பெருந்தோட்டத்தின் தேயிலை ஏற்றுமதி பொருளாதாரம் ஆகும். இப் பெருளாதாரம் நாட்டிற்கு பெரியளவிலான அந்நியச் செலவாணியை பெற்றுத்தருகின்றது.
ஆனால் தேயிலைக் கொழுந்துகளை பறிக்கின்ற இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டத் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை தொடர்ந்தும் தோட்டக் கம்பனிகளாலும் மலையக பிற்போக்கு அரசியல் தலமைகளினாலும் ஏமாற்றப்பட்டு காட்டிக்கொடுக்கப்பட்டுள்ள.
இன்றைய சூழலில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி தொடர்ந்து வீதிப் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். ஆனால் அப்போராட்த்தை தோட்டக் கம்பனிகள் சற்றுக்கூட கவனத்தில் எடுக்காத நிலைமையே தொடர்ந்து வருகின்றது. ஆனால் அத் தோட்டத்தொழிலாளர்கள் தமது அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாயினை வலியுருத்தி போராடி வருகின்றனர்.
இன்றைய காலத்தில் வாழ்க்கைச்செலவு அதிகரித்து காணப்படுகின்றது. அவர்களின் கோரிக்கை நியாயமானது அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இம் மனிதச் சங்கிலி போராட்டம் இடம்பெற்றது.
இப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான நாகராஜனுக்கு ஆவா குழுவினர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட தலைமை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளருமான நாகராஜன் என்பவருடைய கையடக்க தொலைபேசியிற்கு நேற்றைய தினம் இரவு (28.10.2018) 07.30 மணியளவில் இரண்டு தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் தடைசெய்யப்பட்ட கழகங்களை இணைத்து செயற்படாவிட்டால் உன் மீது வாள்வீச்சு நடாத்தப்படும் என எச்சரித்ததுடன்,
அண்மையில் வவுனியாவில் ஆவா குழுவின் துண்டுபிரசுரங்களை வெளியிட்டிருந்ததும் தாமே என குறிப்பிட்டுள்ளனர் மேலும் நீ நாம் சொல்வதை கேட்காவிட்டால் வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுதே உன் மீதும் உன் குடும்பத்தினர் மீதும் எமது வாள்கள் பாயும் எனவும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்ததாகவும் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தாம் அவசர பொலிஸாரின் இலக்கமான 119 ற்கு தொடர்புகொண்டு முறைப்பாடு செய்ததாகவும் பொலிஸார் வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாகராஜனின் மனைவி வவுனியா நகரசபை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 800 பேராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது 10 அதிகாரி வரை குறைவடைந்துள்ளது.
அவரது பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய, முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
அதனை அத்தியாவசிய சேவையாக கருதி உடன் அமுலுக்கு வரும் வகையில் ரணிலின் பாதுகாப்பை நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபரின் கையொப்பத்துடன் கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் பிரதமரின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
எனினும் அரசியலமைப்புக்கு அமைய தானே தற்போதும் பிரதமர் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அலரி மாளிகையை விட்டு வெளியேற மறுத்து வருகிறார்.