வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும், பிரகாசம் சஞ்சிகை வெளியீடும் இன்று (30.10) நகரசபை கலாச்சார மண்டபத்தில் கல்லூரின் அதிபர் திருமதி பா.கமலேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இதன் போது கல்வி, கலை, விளையாட்டுக்களில் சிறந்த பெறுபேற்றுக்களை பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன், பிரகாசம் சஞ்சிகையும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், வவுனியா தெற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கல்விக் கண்காட்சி இன்று(30.10) காலை 9.30 மணியளவில் பாடசாலையில் ஆரம்பப்பிரிவு அதிபர் திருமதி நா.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஆரம்பப்பிரிவு மாணவர்களினால் உருவாக்கப்பட்ட பல ஆக்கங்கள் கண்காட்சிக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
பிரதம விருந்தினராக சு.அமிர்தலிங்கம் (பிரதிக் கல்விப்பணிப்பாளர் கல்வி அபிவிருத்தி வவுனியா தெற்கு கல்வி வலயம்), சிறப்பு விருந்தினராக இ.ராஜ்மோகன் (உதவிக்கல்விப்பணிப்பாளர், வவுனியா தெற்கு கல்வி வலயம்), வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் பாடசலையில் பிரதி அதிபர் எம்.முல்லைக்குமரன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கு அமைவாக சிறுவர்களை பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளில் வவுனியா அல் – இக்பால் மகாவித்தியாலயத்தில் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கு அமைவாக வவுனியா, வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்தால் இச் செயலமர்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சிறுவர்களின் பாதுகாப்பு, சிறுவர் உரிமை, சட்டம், போதைப் பொருள் தடுப்பு, பால்நிலை சமத்துவம் ஆகிய விடயங்கள் தொடர்பாக கருத்துரைகள் வழங்கப்பட்டது.
பாடசாலை அதிபர் அப்துல் நஸார் தலைமையில்
செட்டிகுளம் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் இ.இளஞ்சிங்கம், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் இ.கோகுலதாஸ், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீ.ஜனார்த்தனன், குடும்ப நல உத்தியோகத்தர் பர்ஜானா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் தொழிற்சந்தை நிகழ்வு இன்று (30.10.2018) காலை 8 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். ஹனீபா அவர்கள் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
இம் மாபெரும் தொழிற்சந்தையில் பல்வேறு தொழில் வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டிருந்ததுடன் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பங்கு பற்றி தங்களுக்கு பொருத்தமான துறையில் நேர்முகத்தேர்வினையும் மேற்கொண்டனர்.
குஜராத்தில் விரதம் இருந்த காதல் மனைவியை 8 வது மாடியிலிருந்து கணவன் தள்ளிவிட்டு கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்த தீபிகா (32), தனியார் வாங்கி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2013ம் ஆண்டு விக்ரம் சௌஹானை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியினருக்கு தற்போது 4 வயதில் ஒரு மகனும், 6 மாத கைகுழந்தையும் உள்ளனர்.
வடஇந்தியாவில் ஒருநாள் விழாவாக கொண்டாடப்படும் “கர்வா சௌத்” அன்று தீபிகா தன்னுடைய கணவனுக்காக விரதம் இருந்துள்ளார். அன்றைய தினம் இரவு, கணவருக்கு அதேபகுதியில் திருமணமான வேறு பெண்ணுடன் இருக்கும் தொடர்பு பற்றி தீபிகா கேட்டறிந்துள்ளார்.
இதனால இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்ரம் 8 வது மாடியின் பால்கனியில் இருந்து தீபிகாவை தள்ளிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த தீபிகாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலே தீபிகா சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தீபிகாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விக்ரமை கைது செய்துள்ளனர்.
பெலாரஸ் நாட்டில் மதுபோதையில் ஆண் நண்பருடன் சேர்ந்து, பெற்ற குழந்தையை தாயே கொலை செய்துள்ள கொடூரம் சம்பவம் நடந்துள்ளது.
பெலாரஸ் நாட்டை சேர்ந்த லியோனிட் (28) – நடாலியா (25) தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லியோனிட் தன்னுடைய இரண்டு மகன்களை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த லியோனிட், தன்னுடைய மகள் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், நடாலியாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், நடாலியா மதுபோதையில் தன்னுடைய குடும்ப நண்பர் ஒருவருடன் சேர்ந்து குழந்தையின் தலையில் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தரப்பு தெரிவிக்கையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடாலியாவிற்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும். அதேசமயம் அவருடைய 47 வயதான நண்பர் விக்டர்க்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனதெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததை தாங்கி கொள்ளாமல் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்தவர் முங்கர கொண்டல ராவ் (50). இவருக்கு சுஜாதா என்ற மனைவியும், விஷ்னுவர்தினி (13) மற்றும் சோனிகா என்ற மகள்களும் உள்ளனர். தொழிலதிபரான ராவ் அடிக்கடி வெளியூருக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஹைதராபாத்துக்கு வேலை விடயமாக சென்ற ராவ் அங்குள்ள ஹொட்டலில் தங்கினார். அப்போது திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் ராவ். இது குறித்து ராவின் குடும்பத்தாருக்கு தகவல் தரப்பட்டது.
இதை கேட்டு சுஜாதா, விஷ்ணுவர்தினி மற்றும் சோனிகா அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மூவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்து விஷ்ணுவர்தினி தூக்கில் தொங்கினார்.
சுஜாதாவும், சோனிகாவும் விஷம் குடித்தனர். அப்போது விஷ்ணுவர்தினி வலியால் கத்துவதை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். மூவரும் உயிருக்கு போராடுவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மூவருக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
வவுனியா சேமமடு கிராமத்திற்கு அயல் கிராமமான பரசங்குளம் கிராமத்தில் இன்று(30.10) அதிகாலை காட்டு யானைகள் கிராமத்தினுள் புகுந்து 3 வீடுகளை சேதப்படுத்தியதுடன் நெற்செய்கை வயல்களையும், வாழை, தென்னை போன்ற பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது.
அயல்கிராமமான இளமருதங்குளம் கிராமத்திற்கு மின்சாரவேலி போடப்பட்டிருப்பதால் யானைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கபடுகிறதாகவும் அதேபோல் தங்கள் கிராமத்திற்கும் யானை வேலி அமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த மாதம் 20ம் திகதி அயல் கிராமத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகரப்பகுதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்து வருவதால் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களும் பயணிகளும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக, மாவட்ட செயலகத்திற்கு அருகே, மன்னார் வீதி, புகையிரத நிலைய வீதி, வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே, ஹொரவப்பொத்தானை வீதி போன்ற பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கட்டாக்காலி மாடுகள் நிற்பதனால் தினசரி இரண்டுக்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெறுகின்றன.
வீதியில் காணப்படும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு நகரசபையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளபோதிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கும் மக்கள் குறித்த கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அவை பயனளிக்கவில்லை.
வவுனியா பொது வைத்தியசாலையின் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திற்குள் கழிவு நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நிர்வாக கட்டிடத்திற்கு மேலே சத்திரசிகிச்சை கூடம் அமைந்துள்ள நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நிர்வாக கட்டிடத்திற்குள் கசிந்துள்ளதால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அச்சம் காரணமாக வேளியேறியுள்ளனர்.
குறித்த நிர்வாக கட்டிடத்திற்கு மேல் வெடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அது சம்பந்தமாக வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எழுத்துமூலமாக சுட்டிக்காட்டியுள்ள போதும் நிர்வாகம் நடவடிக்கை எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொது வைத்தியாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்..
வவுனியா பொது வைத்தியசாலையின் நிர்வாக கட்டிடத்திற்கு மேலுள்ள கட்டிடத்தில் சத்திரசிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள் அமைந்துள்ளது. அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரில் நோய்களை பரப்பக்கூடிய அபாயகரமான கிருமிகள் இருக்கும் என்பதால் நிர்வாக கட்டிடத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த மாதம் முடிவடையும் நிலையில் வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளப் பணம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளுக்கான கணக்குகள் பார்க்கப்பட்டு அவை வழங்கப்பட வேண்டிய நிலையில் நிர்வாக கட்டிடத்திலிருந்து ஊழியர்கள் வெளியேறியமை சம்பளம் வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
மைத்திரி – மஹிந்தவுக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பின் பல இடங்களிலும் நடத்தப்படும் குறித்த போராட்டம் லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அலரி மாளிகையில் இருந்தும் ஒரு குழு பேரணியாக செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த போராட்டம் தற்போது அலரி மாளிகைக்கு அருகில் மாபெரும் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த போராட்டத்தில் சஜித் பிரேமதாச, அகிலவிராஜ் காரியவசம், ராஜித சேனாரட்ன, ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை இந்த போராட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் பேர் வரையில் கலந்து கொண்டுள்ளதாகவும், சில வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தின் இருக்கன்குடியை சேர்ந்த திவாகரன் அதே பகுதியை சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இதில் சுபாஷினி கர்ப்பமடைந்த நிலையில் அவரை திவாகரன் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுபாஷினி அளித்த புகாரின் பேரில் திவாகரனை பொலிசார் கைது செய்திருந்தனர். ஒரு வருட சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்த திவாகரன், சுபாஷினியை திருமணம் செய்துள்ளார்.
ஆனால் சுபாஷினிக்கு பிறந்த குழந்தை தன்னுடையது இல்லை என கூறி அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று பிரச்சினை அதிகரிக்கவே குழந்தை விஜயராஜை கழுத்தை நெறித்து கொன்றதோடு கண் மற்றும் மூக்கில் மிளகாய் பொடியை கொட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் திவாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அறிந்த உடல்நலமில்லாத ஒருவர் பெரும் விபத்தை தவிர்க்க 3 கி.மீட்டர் ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் கொரங்கிபாடியை சேர்ந்தவர் கிருஷ்ணா புஜாரி (53). இவருக்கு கடந்த 3 மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவர்களை அவரை தினமும் வாக்கிங் போக சொன்னார்கள்.
இதையடுத்து அங்குள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் புஜாரி வாக்கிங் சென்றார். கடந்த சனிக்கிழமை அவர் வாக்கிங் சென்றபோது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அந்த பகுதியில் ரயில்கள் வரும் நேரமாச்சே என கருதிய புஜாரி இதனால் விபத்து ஏற்படலாம் என நினைத்தார். இதையடுத்து தனது உடல்நலத்தையும் பொருட்ப்படுத்தாமல் அருகில் உள்ள உடுப்பில் ரயில்வே நிலையத்துக்கு ஓடினார்.
சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அந்த ஸ்டேசனுக்கு ஓடி சென்று தகவலை சொன்னார். இதையடுத்து உடனடியாக செயல்பட்ட அதிகாரிகள் அடுத்து வர இருந்த ரயில்களை முந்தைய ஸ்டேஷன்களிலேயே நிறுத்த சொன்னார்கள்
புஜாரியின் செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறிய நிலையில் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
சீனாவில் விவசாயி ஒருவர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவறாததால், அவர் தானாகவே சொந்தமாக விமானம் ஒன்றை தயாரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஜுயூ என்பவர் பல ஆண்டுகளாக வெங்காயம், பூண்டு போன்ற விளைச்சல் செய்யும் விவசாயியாக இருந்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலிருந்தே, தனக்கென்று விமானம் ஒன்று வாங்கி அதில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
ஆனால் அதன் ஆசை நிறைவேறாத காரணத்தினால், பின் நாட்களில் அது ஒரு ஏக்கமாக இருந்துள்ளது. பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்துள்ள ஜூ, பல வருடங்களாக விமானம் வாங்க வாய்ப்பு வருமா என்று காத்திருந்தார். ஆனால் சந்தர்பங்கள் கைக்கொடுக்காத காரணத்தால், ஒரு முடிவு எடுத்தார்.
ஜு விவசாயம் செய்துக் கொண்டிருந்த போதே சீனாவின் கையூன் என்ற பகுதியில் இருக்கும் தொழிற்சாலை ஒன்றில் வெல்டிங் வேலையும் செய்து வந்திருந்தார்.
இதனால் வெல்டிங் வேலையெல்லாம் ஈஸியாக இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு வயது கூடிக் கொண்டே சென்றதால், இவரின் விமானம் ஆசையும் அதிகரித்தது. காத்திருந்தால் கனவு நிறைவேறாது என நினைத்த இவர் களத்தில் இறங்க வேண்டியது தான் என்று முடிவெடுத்தார்.
வெல்டிங் வேலைக்கு தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் முதலில் வாங்கி வந்தார். பின்னர் பல விமானங்களின் புகைப்படங்களை சேகரித்து விமானத்தின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்கும் என்று ஆராய்ச்சி நடத்தினார். அதன் பின்பு, சொந்தமாக விமானத்தை உருவாக்க வேண்டும் என்ற முடிவு செய்தார்.
இதற்காக தன்னுடைய கோதுமை விவசாய நிலத்தை விமான உருவாக்க சீர் செய்தார். இதுவரை சேகரித்து வைத்திருந்த 3,74,000 அமெரிக்க டாலர்களை கொண்டு சுமார் 60 டன் இரும்பு, மற்றும் உதிரி பாகங்கள் அனைத்தும் வாங்கினார். படிப்படியாக விமானத்தை உருவாக்கத் தொடங்கினார்.
ஜூவின் மன உறுதியைக் கண்ட அவரின் நண்பர்கள் 5 பேர் உதவ முன்வந்தனர். நேரம் காலம் பார்க்காமல் உழைத்த ஜூ யூ அவரது சொந்த விமானத்தை பிரம்மாண்டமாக கட்டி முடித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், நடுத்தரக் குடும்பத்தில் பிறந்ததால் என்னால் விமானத்தில் பயணிக்க முடியாது என நான் உணர்ந்தேன். விமானத்தில் பறக்க முடியாவிட்டாலும் என்னால் சொந்தமாக ஒரு விமானத்தை உருவாக்க முடியும் என்று நம்பிக்கையால் இதை செய்துள்ளேன்.
என் விமானம் அரைகுறையாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உடனடியாகப் பறக்காது. இதை நான் உணவகமாக மாற்ற உள்ளேன். என் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பேன்.
இங்கு வரும் அனைவரும் தங்களை ஒரு எஜமானர்கள் போல் உணர வேண்டும். என் விமானம் பசியால் தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் இடமாக விரைவில் மாறும் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இந்தோனேஷியா விமான விபத்தில் சிக்க வேண்டிய நபர் அதிர்ஷ்டவசமாக போக்குவரத்து நெரிசல் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார்.
இந்தோனேஷியாவின் தலைநகர் Jakarta-விலிருந்து Pangkal Pinang விமானநிலையத்திற்கு Lion Air’s JT-610 என்ற விமானம் 189 பேருடன் புறப்பட்டுச் சென்றது.
ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலிலே விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. இதன் காரணமாக விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விமானத்தில் Bandung பகுதியைச் சேர்ந்த Sony Setiawan என்ற நபரும் பயணிப்பதாக இருந்தது. ஆனால் அவர் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை எனவும், தற்போது பத்திரமாக இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Jakarta-வில் இருந்த மோசமான போக்குவரத்து நெரிசல் காரணமாக Sony Setiawan-வானால் உரிய நேரத்தில் விமானநிலையத்தை வந்தடைய முடியவில்லை.
இதனால் அவர் விமானத்தில் பயணம் செய்யவில்லை, பத்திரமாக அடுத்த விமானத்தில் Pangkal Pinang பகுதிக்கு வந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
Sony Setiawan கூறுகையில், நான் எப்போதும் வழக்கமாக விமானநிலையத்திற்கு 3 மணிக்கு எல்லாம் வந்துவிடுவேன், ஆனால் அன்றைய தினம் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்த காரணத்தினால் என்னால் விமானநிலையத்திற்கு காலை உள்ளூர் நேரப்படி06.20 மணிக்கு தான் வர முடிந்தது.
விமானத்தை தவறவிட்டுவிட்டேன். என் குடும்பத்தினர் அனைவரும் தான் பயணிக்க வேண்டிய விமானம் விபத்தில் சிக்கிவிட்டதால், தனக்கும் ஏதோ ஆகிவிட்டது என்று அதிர்ச்சியடைந்தனர்.
என் அம்மா அழத் தொடங்கியுள்ளார். அதன் பின் நான் பத்திரமாக உள்ளேன் என்று தகவல் தெரிவித்த பின்னரே அவர்கள் நிம்மதி பெரு மூச்சுவிட்டனர் என்று கூறியுள்ளார்.
விமானத்தில் பயணித்திருந்தால் அவரும் இறந்திருக்க கூடும், ஆனால் போக்குவரத்து நெரிசல் போன்ற காரணத்தில் தற்போது அவர் உயிர்பிழைத்துள்ளதால், அவரை அனைவரும் அதிர்ஷ்டசாலி, கடவுள் தான் அவரை காப்பாற்றியுள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.