தாயை ஆபாசமாக திட்டியதால் இவ்வாறு செய்தேன் : கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

தன்னுடைய தாயை ஆபாசமாக திட்டியதால், வாலிபரை கொலை செய்தேன் என கொலையாளி பொலிசாரிடம் கூறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா சிக்கபாகிலு கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ் (35). அதேப்பகுதியை சேர்ந்தவர் பசுபதி(28).

இவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கிரீஷிசுக்கும், பசுபதியின் தாய்க்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கிரீஷ் பசுபதியின் தாயை அவதூறாக பேசியதோடு மட்டுமின்றி, ஆபாசமாகவும் திட்டியுள்ளார். இதனால் பசுபதி இது குறித்து அவரிடம் கேட்ட போது, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை சிக்கபாகிலு பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் கிரீஷ் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற பசுபதி, கிரீசிடம் தனது தாயை ஆபாசமாக திட்டியது பற்றி கேட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறியதாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த பசுபதி அருகில் கிடந்த கோடரியால் கிரீசை வெட்டி உள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் கிரீஷ் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்து உள்ளார்.

ஆனாலும் ஆத்திரம் தீராத பசுபதி, கிரீசின் தலையை கோடரியால் வெட்டி அதன் பின் துண்டித்த தலையை கையில் எடுத்து கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்த காவல்நிலையத்திற்கு பசுபதி சென்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிசார் அவரை உடனடியாக கைது செய்தனர்.

அதன் பின் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, எனது தாயை ஆபாசமாக திட்டிய கிரீசை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால், நான் வாழ்வதற்கே தகுதியில்லை. அதனால் தான் அவரை கோடரியால் வெட்டி கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

இளைஞரை கொடூரமாக கொலை செய்த காதலியின் குடும்பத்தார்!!

இந்தியாவின் பஞ்சாப்பில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தார், இளைஞரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உமேஷ்குமார் (26) என்ற இளைஞரும் மது (22) என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு மதுவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு ஓடிய உமேஷும், மதுவும் தனி வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இந்நிலையில் குடும்பத்தினர் மிரட்டல் காரணமாக மீண்டும் கடந்த 22-ஆம் திகதி இருவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள்.

இதையடுத்து நேற்று மதுவின் சகோதரர் அஜித்குமார், தந்தை ரமேஷ் மற்றும் தாய் கலாவதி ஆகியோர் உமேஷுக்கு போன் செய்து அவரை சந்திக்க வேண்டும் என கூறி தங்கள் வீட்டுக்கு அழைத்துள்ளனர்.

உமேஷ் அங்கு சென்ற நிலையில் மூவரும் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்தனர்.

இது குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் மூவரையும் கைது செய்துள்ள பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

வவுனியாவில் பேரூந்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி கேரள கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று (29.09) இரவு 9.30மணியளவில் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் – கதிர்காமம் பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அப் பேருந்தில் பயணித்த மொனராகலையை சேர்ந்த விஜித பண்டார என்ற 34 வயதுடைய நபர் 2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் மின்சாரம் தாக்கியதில் இராணுவ வீரர் பலி!!

வவுனியாவில் இராணுவ முகாம் ஒன்றில் நேற்று (29.09) இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஈரட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வூவய என்னும் இடத்திலுள்ள இராணுவ முகாமில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. அதனை சீர் செய்வதற்காக இராணுவ வீரர் சென்ற போது மின்சார கசிவு ஏற்ப்பட்டு மின்சாரம் தாக்கியதில் மயக்க நிலையில் இருந்துள்ளார்.

பின்னர் அம்புலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் முன்னரே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் கண்டி வத்தேகம பகுதியை சேர்ந்த சந்தறூவன் (வயது 22) என்ற இராணுவ வீரரே மரணமடைந்தவராவார். சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஈரட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் கணவர் : அழகிய பெண்ணின் புகைப்படத்திற்கு ஒரு லைக் போட்ட நபருக்கு நேர்ந்த கதி!!

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான நபர் ஒருவர் அழகான பெண் என நம்பி பேஸ்புக்கில் லைக் போட்டதற்காக 80 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தனசேகரன் என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் பேஸ்புக் தளத்தை அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். சில மாதங்களுக்கு முன்பு அவரது பேஸ்புக்குக்கு காயத்ரி என்ற பெயரில் நட்புக்கான அழைப்பு வந்ததும், அதனை பார்த்துள்ளார்.

அதில் அழகான ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தையடுத்து, அந்த புகைப்படத்திற்கு லைக் போட்டு, அந்த நட்புக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து இருவரும் சமூகவலைதளத்தில் சாட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அப்போது ஒரு முறை தனக்கு வாய் பேச முடியாது, தனக்கு திருமணம் ஆகி கணவர் வெளிநாட்டில் உள்ளார். இங்கு தான் மடடும் வீட்டில் தனியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், செல்போன் எண்களை பரிமாறிக்கொண்ட இவர்கள் போனில் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஒரு முறை வாட்ஸ்அப்பில் தனது சிசிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. பணத்துக்காக அலைந்து கொண்டிருக்கிறேன் என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.

உடனே தனசேகரன், தான் உதவி செய்வதாக கூறியுள்ளார், உடன அப்பெண்ணும் நாகர்கோவில் வந்துவிடுங்கள் என பதில் சொல்லியுள்ளார்.

அதன்படி, பேருந்து நிலையத்தில் நின்ற தனசேகரனை நெருங்கிய ஒருவர், காயத்ரியின் தம்பி என்று கூறி தனசேகரனை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சென்றார்.

அங்கு மேலும் ஒரு வாலிபர் இருந்தார். 2 வாலிபர்களும் சேர்ந்து தனசேகரனை தாக்கி செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்தனர். ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.80 ஆயிரம் எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

வடசேரி பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தனசேகரன் , தான் பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகியது முதல் பணம் பறிபோனது வரை நடந்ததை சொல்லி புகார் அளித்தார். அதன்பேரில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பொன்னுலிங்கம் (30), செருப்பங்கோடை சேர்ந்த சிவலிங்கம் (34) ஆகிய இரண்டு பேர் சேர்ந்து பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு ஆண்களை ஏமாற்றுவது தெரியவந்ததையடுத்து பொலிசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமணமான 6 நாளிலேயே தொடங்கிய கொடுமை : தூக்கில் தொங்கிய இளம்பெண்!!

இந்தியாவின் கொல்கத்தாவில் திருமணமான சில மாதத்தில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நந்தினி (23) என்ற பெண்ணுக்கும் சஞ்சீப் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நந்தினி வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

நந்தினி தற்கொலை செய்து கொண்டதாக தாங்கள் நம்புவதாகவும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே அதை உறுதிப்படுத்தமுடியும் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

அதே சமயம் நந்தினியை அவர் கணவரும், குடும்பத்தாரும் சேர்ந்து கொன்றுவிட்டதாக அவரின் குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், தற்போது நந்தினியின் கணவர் சஞ்சீப் மற்றும் மாமனார், மாமியார் தலைமறைவாக உள்ளனர்.

நந்தினி குடும்பத்தார் கூற்றுப்படி, திருமணமான எட்டாவது நாளே பத்து லட்சம் பணம் மற்றும் கார் கேட்டு அவரை, கணவர் கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார்.

இதையடுத்து 3 லட்சம் பணம் அவருக்கு கொடுக்கப்பட்டது, ஆனாலும் கொடுமை தொடர்ந்துள்ளது. இதனிடையில் சஞ்சீப்புக்கு அவர் மைத்துனியுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் நந்தினி குடும்பத்தார் கூறியுள்ளனர்.

மேலும், விவாகரத்து கேட்டு நந்தினியை சஞ்சீப் மிரட்டியுள்ளார். இதனால் மனவேதனையில் நந்தினி இருந்துள்ளார். சஞ்சீப் மற்றும் அவர் குடும்பத்தார் சிக்கிய பின்னரே முழு உண்மை வெளிவரும் என கூறியுள்ளனர்.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

தொழில்நுட்பக் கல்லூரி வவுனியா
மீள் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம்
NCT Civil, QS and EE

தொழில்நுட்பக் கல்விப் பயிற்சித் திணைக்களத்தினால் 2015 ம் ஆண்டு இறுதியாக நடாத்தப்பட்ட குடிசார்/ மின் மற்றும் இலத்திரனியல்/கணிய அளவையியல்/பொறியியல் பாடநெறிகள் மற்றும் தேசிய கைத்தொழில் தொழில்நுட்பவியலாளர் சான்றிதழ் தொடர்பான NCIT தேசிய சான்றிதழ் குடிசார் /மின் மற்றும் இலத்திரனியல் / கணிய அளவையியல் / பொறியியல் பாடநெறிகளில் 2015 ம் ஆண்டிற்கு முன் தோற்றி சித்தியடையாத மற்றும் தோற்றாத மாணவர்கள் மேலும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு சகல உரித்துடைய எல்லா சந்தர்ப்பத்தையும் பெற்றுக் கொண்ட மாணவர்களும் இப் பரீட்சைக்குத் தோற்ற விண்ணப்பிக்க முடியும்.

02. மேற்படி விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட பின்னர் இரு சந்தர்ப்பங்களின் கீழ் 2017/2018 ம் ஆண்டுகளில் இம்மாணவர்களுக்கு இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்க்ப்பட்டுள்ளது.

03.ஆகவே மேற்கூறப்பட்ட பரீட்சை தொடர்பான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகையினால் பொருத்தமுடைய அனைத்து மாணவர்களும் இதனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மற்றைய மாணவர்களுக்கும் இத்தகவலை வழங்குவதுடன் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தமது விண்ணப்பபடிவங்களை 03.10.2018 ம் திகதிக்கு முன்பதாக காரியாலயத்தில் முறைப்படி கையளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

ஆண்டிறுதிப் பரீட்சை 2018(கார்த்திகை, மார்கழி)
2018 கார்த்திகை மறறும் மார்கழி மாதத்தில் நடைபெறவுள்ள ஆண்டிறுதிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் (முழு நேர மற்றும் பகுதி நேரம்) பூரணப்படுத்தப்பட்ட தமது விண்ணப்ப்படிவங்களை 10.10.2018 ற்கு முன்னதாக கல்லூரிக் காரியாலயத்தில் கையளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

மீள் பரீட்சைக்கான கட்டண விபரம்
1) 1) MSR. Pluming, HHE – ( 01 பாடம்- 30.00 அல்லது மேற்பட்ட பாடம் ரூபா 70.00)

2) க.பொ.த சாதாரண் தரம் கல்வித் தகைமையுடன் தொடரும் கற்கை நெறிகளுக்கு
ஒரு பாடம் ரூபா 40.00
இரண்டு பாடம் ரூபா 80.00
மூன்று பாடமும் அதற்கு மேற்பட்ட பாடங்கள் ரூபா 130.00

03) NCT கற்கைநெறிகள் மற்றும் 5/6 மற்றும் NCED மீள் பரீட்சைக் கட்டணம்
ஒரு பாடம் ரூபா 80.00
இரண்டு பாடம் ரூபா 160.00
மூன்று பாடமும் அதற்கு மேற்பட்ட பாடங்கள் ரூபா 250.00

பரீட்சைக் கட்டணத்தை அதிபர், தொழில்நுட்பக் கல்லூரி, வவுனியா மற்றும் கணக்கிலக்கம் 040-1-001-1-9026245 எனும் மக்கள் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட்டுப் பெற்ற பற்றுச் சீட்டினை அலுவலகத்தில் கையளிக்கவும்.

அதிபர்
தொழில்நுட்பக் கல்லூரி
வவுனியா

இறந்து 3 நாள் ஆன சடலத்திற்கு ரமணா திரைப்பட பாணியில் சிகிச்சையளித்த மருத்துவர்கள்!!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு முன்னர் இறந்தவருக்கு ரமணா திரைப்பட பாணியில் தனியார் மருத்துவமனை சிகிச்சையளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் திருக்குவளையை சேர்ந்த சேகர் என்பவருக்கு வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த சேகரை மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள வேறு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்க ரூ.5½ லட்சம் வரை செலவானது.

மேலும் மருத்துவமனை நிர்வாகம் ரூ.2½ லட்சம் பாக்கி உள்ளது என்றும், அந்த தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என்றும் வற்புறுத்தியது.

இதையடுத்து தங்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் ரூபாயை அவரது உறவினர்கள் கட்டியுள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்க பணம் இல்லாதால் நேற்று மதியம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேகர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சேகர் இறந்து 3 நாட்களாகி விட்டது என்று தெரிவித்தனர்.

இதை கேட்டு அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இறந்தவரை உயிருடன் இருப்பதாக கூறி பணம் வசூலித்து அந்த தனியார் மருத்துவமனை தங்களை ஏமாற்றி விட்டதே என வேதனை அடைந்தனர்.

இதுகுறித்து அந்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேகரின் மகன் சுபாஷ், பொலிசில் புகார் அளித்துள்ளார்.

வவுனியா நகரசபை தவிசாளருக்கும் முச்சரக்கரவண்டி உரிமையாளர்களுக்கும் இடையில் முறுகல்!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்னால் நகரசபைக்கும், முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று இன்று ஏற்பட்டது.

புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட காலத்தில் இருந்து தொடர்ச்சியாக தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கிடையில் முரண்பாடான நிலைமை காணப்படுகின்றது.

இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்த முடியாதென வவுனியா நகரசபையினால் சமிக்ஞை பலகை அமைக்கப்பட்ட போது, முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கும் நகரபிதாவிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையத்திற்குள் வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பேருந்துகள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாகாணங்களுக்கிடையிலான சேவையில் ஈடுபடும் பேருந்துகள் வீதியோரத்தில் தரித்து நின்றே சென்று வருகின்றது.

ஆகையால் அப்பகுதியிலுள்ள மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்ற நிலையில், தமது வீடுகளுக்கு முன்பாக பேருந்துகள் நிறுத்துவதை தடை செய்யுமாறு கோரி அப்பகுதி மக்கள் வவுனியா நகரசபையில் தமது முரண்பாட்டை தெரிவித்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, வவுனியா நகரபிதா இ.கௌதமன் அவர்களின் ஏற்பாட்டில் பேருந்துகளை சில மீற்றர் தூரம் சென்று மக்கள் வசிக்காத பகுதியில் நிறுத்துவதற்கு ஏதுவாக, வாகனம் நிறுத்துவதற்கு தடை செய்யும் சமிக்ஞை பதாதைகளை அமைக்கும் பணியை நகரசபை ஊழியர்கள் முன்னெடுத்தனர்.

இதன்போது பயணிகளை நம்பி வாழ்வாதாரத்தை மேற்கொண்டுள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் இதற்கு எதிர்ப்புப் தெரிவித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் புதிய பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தம்மால் கட்டணங்களை பெறமுடியாது என்பதால் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவே மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளை நிறுத்தி செல்ல வேண்டும் அல்லது பேருந்து நிலையத்திற்குள்ளே பேருந்துகள் செல்ல அனுமதிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

பின்னர் வாகன தரிப்புக்கு தடை விதிக்கும் சமிக்ஞைகளை அமைக்க விட மாட்டோமென வவுனியா நகரபிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறும் இடம்பெறும் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுப்பதாக தெரிவித்த நிலையில், நகரசபையினர் தமது பணியை இடை நிறுத்தியிருந்தனர்.

என் வளர்ப்பு அப்படி : லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி!!

டுவிட்டரில் நபர் ஒருவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை ஒருமையில் பேசியதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். சமூகத்தில் நடக்கும் பல விடயங்கள் குறித்து தைரியமாக கருத்துக்கள் சொல்வதை லட்சுமி ராமகிருஷ்ணன் வழக்கமாக கொண்டுள்ளார்.

இது சம்மந்தமாக தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்தும் வருகிறார். இந்நிலையில் உச்சநீதிமன்றம் திருமணத்துக்கு பிறகான தகாத உறவு குற்றமில்லை என தீர்ப்பு வழங்கியது.

இது குறித்து நபர் ஒருவர் டுவிட்டரில், லட்சுமி ராமகிருஷ்ணாவிடம், எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லும் நீங்கள் இதை ஏன் எதிர்க்கவில்லை என ஒருமையில் டுவிட் செய்தார்.

அதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், முதலில் என் டுவீட்ஸ் படிங்க, நான் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை, மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பேன். அதனால் தான் இப்படி உங்களிடம் பேசுகிறேன், என் வளர்ப்பு என பதிவிட்டுள்ளார்.

என் கதி யாருக்கும் ஏற்படக்கூடாது : திருநங்கை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் கணவரின் கல்லறை முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநங்கை ஜீவா-வின் கணவர் ஸ்டீபன் ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் அளித்த புகார் மீது பொலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதில் மனவேதனை அடைந்த ஜீவா, நேற்று கணவரின் கல்லறை முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காட்சி சமூக வளைதளங்களில் பரவியது. அதில், என்னுடன் இருந்ததால் கணவரை கொன்றுவிட்டார்கள், என் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என ஜீவா கூறியுள்ளார்.

இதனிடையே மயங்கிய நிலையில் சமாதி அருகே கிடந்த ஜீவாவை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சகோதரிகள் மூன்று பேர் விஷம் அருந்தி தற்கொலை : அதிரவைக்கும் பின்னணி தகவல்!!

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் தனியார் நிதிநிறுவனம் ஒன்று பணத்தை ஏமாற்றியதால் வேதனையடைந்த மூன்று சகோதரிகள் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தற்கொலை முயற்சியில் சகோதரிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சேலத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் அங்குள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணம் முதலீடு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த தனியார் நிதி நிறுவனம் பணத்தை தராமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.

சகோதரிகள் மூவரும் திருமணத்திற்காக பணத்தை சேமித்த வைத்திருந்த நிலையில் நிதி நிறுவனம் ஏமாற்றியதால் பணம் கிடைக்காது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரிகள் மூன்று பேரும் விஷம் குடித்து தற்கொலை முயன்றனர். இதையடுத்து மூன்று பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் மேனகா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆபத்தான நிலையில் உள்ள ரேவதி மற்றும் கலை ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடலில் காயங்களுடன் தூக்கில் தொங்கிய சிறுமி : கதறி அழும் பெற்றோர்!!

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் தற்கொலை செய்துகொண்ட 12 வயது சிறுமியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சேர்ந்தவர்கள் ராஜா – ஜெயா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவருடைய இரண்டாவது மகள் ராகவி, அப்பகுதில் அருகே உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக வீட்டில் பெற்றோர் யாரும் இல்லாத போது, ராகவி சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார். இதனை கேள்விப்பட்டு பதறியடித்து ஓடிவந்த ஜெயா மகளை கட்டியணைத்தவாறே அழுது கொண்டு பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ராகவியின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்தும் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்த்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இறந்த ராகவியின் காலப்பகுதியில் காயங்கள் இருந்ததாகவும், வீட்டை அடிக்கடி ஒரு நபர் சுற்றி திருந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் தற்கொலை என பதியப்பட்டுள்ள வழக்கினை, கொலை என மாற்றுமாறு கோரிக்கை விடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டாவது நாளாகவும் போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில் தேனி ஏ.டி.எஸ்.பி., சுருளிராஜ், பழனிகுமார் தலைமையில் பொலிஸார் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்தில் தற்போது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக் பயனாளிகளுக்கு அதிர்ச்சி : 50 மில்லியன் பேரின் கணக்குகள் திருட்டு : உங்கள் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதா?

சுமார் 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 மில்லியன் பேரின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது, பேஸ்புக் பயனாளிகளின் கணக்குகள் செயல்படும் முறையில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே 50 மில்லியன் பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மைத் துறை துணை தலைவர் கய் ரோசன் என்பவர் கூறுகையில்,

இக்குறைபாட்டை பொறியியல் நிபுணர்கள் குழு கடந்த 25ம் திகதி மாலை கண்டறிந்தனர். இதனை சரிசெய்யும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர், பேஸ்புக்கில் உள்ள View As என்ற வசதியே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. எனவே தற்காலிகமாக இது செயல்படாது என தெரிவித்துள்ளார்.

ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறியும் வழி
நமது செல்போனிலோ, கணனியிலோ முதன்முறையாக லாக் இன் செய்யும் போது Save Password என்ற ஆப்ஷனை கிளிக் செய்வோம், இதனால் அடுத்த முறை லாக் இன் செய்யும் போது பாஸ்வேர்ட் கேட்காது.

ஆனால் ஒருவேளை உங்களது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தால், ஒருவர் லாக்-இன் செய்யும் போது வழக்கம் போல பாஸ்வேர்ட் இல்லாமல் பேஸ்புக் பக்கம் திறக்காது.

லாக்-அவுட் நிலைக்கு வந்து நம்மிடம் மீண்டும் பாஸ்வேர்ட் கேட்கும், அவ்வாறு நமது அக்கவுண்ட் அதுவாகவே லாக்-அவுட் ஆனால் நமது அக்கவுண்டும் பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.

எப்போதும் போல பாஸ்வேர்ட் இல்லாமல் உங்கள் பேஸ்புக் பக்கம் திறந்தால் அந்த 9 கோடி பேரில் நீங்களும் ஒருவர் இல்லை என தெரிந்து கொள்ளலாம்.

அம்மா குடிச்சதுக்கு இவங்க தான் காரணம் : மஞ்சுளாவை கொடுமைப்படுத்திய விஜயகுமார் : கண்ணீருடன் வனிதா!!

பிரல திரைப்பட நடிகையான வனிதா விஜயகுமாருக்கும், அவரின் தந்தையும் நடிகருமான விஜயகுமாருக்கும் மோதல் நிலவி வருகிறது. இதனால் வனிதா விஜயகுமார் தன்னுடைய குடும்ப பிரச்சனைகள் குறித்து பல ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என் அப்பாவைப் பற்றி பலருக்கு தெரியாது. எங்க குடும்ப பிரச்சனை மிகவும் பெரிது என்று சில தகவல்களை கூறியுள்ளார். அதில், எங்க அப்பாவுக்கு இரண்டு மனைவிகள்.

முதல் மனைவி முத்துக்கண்ணு. இவருக்கும் மொத்தம் மூன்று குழந்தைகள். அருண் விஜய் அதில் மூன்றாவது பையன். எங்க அப்பாவோட இரண்டாவது மனைவிதான், எங்க அம்மா மஞ்சுளா. அப்பாவும், அம்மாவும் காதலிச்சு திருமணம் செய்துகொண்டார்கள்.

இந்த திருமணம் முத்துக்கண்ணு தலைமையில் தான் நடந்தது. இதற்கு காரணம் முத்துக்கண்ணுக்கு எங்க அம்மாவோட நகை, பணம், புகழ் எல்லாம் தேவைப்பட்டது.

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் கழித்து நான் பிறந்தேன். என் மேல எல்லோரும் அவ்வளவு பாசமா இருந்தாங்க, அப்பாவுக்கு திடீரென்று பட வாய்ப்புகள் குறைந்ததால், பணப் பிரச்சனை வந்தது.

இதனால் அம்மா அமெரிக்கா சென்று தொழில் செய்யலாம் என்று முடிவெடுத்தாங்க, முதலில் அம்மா போனாங்க, பின்னர் நான், முத்துகண்ணு எல்லோரும் அமெரிக்கா சென்றோம்.

பணப் பிரச்சனையும் தீர்ந்தது. அந்த நேரத்தில் முத்துக்கண்ணுவின் முதல் பொண்ணுக்கு, நடிகை விஜயகுமாரியின் பையன் ரவிக்குமாரைக் கல்யாணம் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

விஜயகுமாரியும் அவங்க பையனுடன் வந்து எங்க வீட்டில் தங்கினார். அந்த சமயத்துல எங்க அம்மாவுக்கும், முத்துக்கண்ணுக்கும் இடையில் சண்டை மூட்டிவிட்டு பிரிச்சு விட்டுட்டாங்க.

அப்பா உடனே முத்துகு்க்கண்ண கூப்பிட்டு சென்னை வந்துவிட்டார். அப்பாகிட்ட எங்க அம்மா எவ்வளவோ பேச முயற்சித்தும் முடியல், அவங்க குடும்பத்துகாரங்க விடவில்லை,

எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அப்பா ஒரு வருடம் கழித்து அமெரிக்கா வந்து எங்களை பார்த்தார். நாங்க எல்லோரும் அப்பாகூட இந்தியாவுக்கு வந்துட்டோம்.

அதன் பின் அப்பாவுக்கு பட வாய்ப்பு வந்தது, வீடு கட்டினார், சொத்து சேர்த்தார். அப்பாவுக்கு எப்போவுமே முதல் மனைவி முத்துக்கண்ணு குடும்பம்தான் பெருசா தெரிந்தது. ஏதாவது சொத்துகள் வாங்குனா, முதலில் அம்மா பெயரில் வாங்குவார்.

பிறகு, வரி பிரச்னைனு சொல்லி அவருடைய பெயருக்கு சொத்துகளை மாற்றி, அதை அப்படியே முதல் மனைவி முத்துக்கண்ணு குடும்பத்துக்கு எழுதிக் கொடுத்திடுவார்.

அருண் விஜய் பெயரில் நிறைய சொத்துகளை இப்படி எழுதிக் கொடுத்திருக்கார். அவனுடைய படங்கள் ஒடாமப் போக, கடைசியில் சொத்துகளையெல்லாம் அடகு வைக்கிற அல்லது விற்கிற நிலைமைக்குக் கொண்டு வந்திடுவான். முதல்ல மாமானர் சொத்தை விற்றான். இப்போ எங்க அப்பா சொத்தை விற்கிறான்.

எங்க அம்மா இன்னும் 20 வருடம் உயிரோடு இருந்திருப்பாங்க, அப்பா செஞ்சா கொடுமையால் தான் அவங்க உடல்நிலை சரியில்லாமல் போய் இறந்துட்டாங்க, அம்மாவுக்கு குடிப்பழக்கம் கத்து கொடுத்ததே அப்பா தான், நான் எங்க அம்மா வாழ்ந்த வீட்டில், என் பொண்ணுகூட நான் வசிக்கிறேன். இது எங்க அம்மா சொத்து. இந்த வீட்டை விட்டு நான் வெளியே போகமாட்டேன் என்று கூறியுள்ளார்.

இலங்கையில் இரு கைகளும் இல்லாத போதும் கால்களை கொண்டு சாதித்த யுவதி!!

உடற்குறைபாடுகள் குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு பிறந்தபின் இடையில் ஏற்படுகின்றன.

பிறப்பிலேயே குறைகொண்ட குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்சனைகள் பிறந்த பின் இடையில் ஊனம் ஏற்பட்ட குழந்தைகளை விட குறைவாக இருக்கும்.

ஊனமுற்ற குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களுக்கு சாதாரண குழந்தைகளை போல் எல்லா விவரங்களையும் தெரிவித்து சமூகத்தில் தன்னம்பிக்கை உள்ள குழந்தைகளாகவும் வளர்க்க வேண்டும்.

இவ்வாறு பிறப்பிலே இரண்டு கைகளுமின்றி பிறந்து வாழ்க்கையை வென்று முன்னுதாரணமாக திகழ்பவர் தான் துலாஞ்சலி ஆரியதிலக.

என்னை இந்த நாடு முழுவதும் அடையாளம் கண்டது சோமரத்ன திசாநாயக்க மாமாவின் பட்டாம்பூச்சி இறக்கைகள் என்ற திரைப்படத்தின் மூலம்.

உண்மையைச் சென்னால் அந்த திரைப்படம் தான் என்னை முழுமையாக மாற்றியது. 13 ஆண்டுகளுக்கு முன்பு தான் அந்த திரைப்படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு 9 வயது.

அதுவரை நான் பாடசாலை செல்லவில்லை. நான் மட்டுமல்ல எமது இல்லத்தில் இருந்த மற்ற சகோதர, சகோதரிகளும் பாடசாலைக்குச் செல்லவில்லை.

பட்டாம்பூச்சி இறக்கைகள் என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு பாடசாலை செல்ல வாய்ப்புக் கிடைத்து. ஏனென்றால் அதற்கு முன்னர் பாடசாலைக்கு செல்ல எங்களுக்கு பயம் இருந்தது. ஆனால் படத்தில் நடித்தவுடன் பயம் இல்லை.

என்னுடைய கை இரண்டும் இல்லாத காரணத்தினால் குழந்தை பருவத்தில் இருந்து கால்களாலே வேலை செய்கிறேன்.

இசைக்கருவி வாசித்தல், எழுதுதல் மற்றும் ஏனைய வேலைகள் எல்லாமே கால்களினாலே செய்தேன். அவ்வாறு எழுதி தான் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 6 ஏ சித்தியும், பி சித்தி ஒன்றும், சி இரண்டும் பெற்றேன்.

அதன்பின் உயர்தரம் படித்தேன். அதில் இரண்டு ஏ மற்றும் பீ கிடைத்தது. நான் ஏ 3 கிடைக்குமென்று எதிர்பார்தேன்.

ஆனால் இரண்டு பாடங்களுக்கு ஒரே நாளில் ஆறு மணி நேரம் எழுத வேண்டி இருந்தது. அது மிகவும் கடினமாக இருந்தது. கடைசி கேள்வியை எழுதாமல் விட்டேன். அதனால்தான் அந்த பாடத்திற்கு ‘பி’ கடன் கிடைத்தது. அதனால் நான் கவலைப்படவில்லை.

இவை என்னுடைய புத்தகங்கள். எங்கள் வீட்டிற்கு வருகின்ற அனைவரிடமும் புத்தகங்களை கேட்கிறேன்.

ஒரு நாளில் ஒரு புத்தகத்தை வசித்து முடிக்கிறேன். இந்த நாட்களில் பரீட்சை முடிந்துவிட்டதால் புத்தகங்களை வாசிக்கிறேன்.

நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை இப்படி வருவேன் என்று என துலாஞ்சலி ஆரியதிலக தெரிவித்துள்ளார்.