இலங்கை கடற்பரப்பில் பல அடி உயரத்திற்கு எழுந்த அலைகள் : சுனாமி பாதிப்பு குறித்து தகவல்!!

இலங்கையின் கடற்பரப்பில் வழமையை விடவும் கடல் அலைகள் உயர்ந்து காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று இந்தோனேசிஷியாவில் ஏற்பட்ட சுனாமி பேரலைகள், இலங்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என வளிமண்டலியல் திணைக்கள வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்துள்ளார்.

எனினும் பாணந்துறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக காலி மற்றும் மாத்தறை கரையை அண்மித்த கடலலைகள் 2 தொடக்கம் 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெழும். எனினும் அலைகள் கரையை அண்மித்த பிரதேசங்களுக்குள் பிரவேசிக்காது என திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது மலையகப் பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட சுனாமி பேரலைகள் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று கோரத் தாண்டவமாடிய சுனாமி பேரலைகள் : இதுவரை 380 பேர் பலி – 350 பேர் காயம்!!

இந்தோனேஷியாலில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக இதுவரையில் 380 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக இந்தோனேஷிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

Sulawesi தீவில் Palu வழியாக 3 மீட்டர் (10 அடி) உயரத்துக்கு அலைகள் எழுந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வீடியோக்களில் மக்கள் கூச்சலிட்டு பதறி ஓடுவதனை அவதானிக்க முடிந்ததுடன், பல வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் சேதமடைந்துள்ளதனை காண முடிந்தது.

பயங்கரமான அதிர்வு காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளது.

மீட்பு முயற்சிகள் தீவிரமாக நடைபெறுகின்ற நிலையில், நிலச்சரிவு காரணமாக Paluவின் முக்கிய வீதிகள் தடைப்பட்டுள்ளன.

சுனாமி அனர்த்தம் காரணமாக 384 பேர் உயிரிழந்துள்ளதுடன் 350 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக இந்தோனேஷிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

People walk past dead bodies (blue cover) a day after a tsunami hit Palu, on Sulawesi island on September 29, 2018.
Rescuers scrambled to reach tsunami-hit central Indonesia and assess the damage after a strong quake brought down several buildings and sent locals fleeing their homes for higher ground. / AFP PHOTO / OLA GONDRONK

பெண் ஒருவரினால் ஸ்தம்பிதமான கட்டுநாயக்க விமான நிலையம் : நள்ளிரவில் ஏற்பட்ட குழப்பம்!!

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் சிலர் நள்ளிரவில் திடீர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது.

பெண் ஊழியர் ஒருவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவிற்கு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் பாரிய திருட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபரின் மனைவியிடம், இலங்கை சுங்க பிரிவின் தரவு செயலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சுங்க பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நடவடிக்கைக்காக எதிர்ப்பு வெளியிடுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை சுந்திர ஊழியர் சங்கத்தின் குழுவினர் தங்கள் பணியில் இருந்து விலகியிருந்துள்ளனர். அத்துடன் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் குறித்த பெண் ஊழியர் திருப்பி அனுப்பப்பட்டமையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவிருந்த பதற்ற நிலை அமைதியாகியுள்ளது.

குறித்த பெண் ஊழியரின் பாதுகாப்பு குறித்து கருதியே இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பெற்ற இளம் தாய் : கணவனின் கருணையான கோரிக்கை!!

ஹொரனை வைத்தியசாலை வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.

குருந்துவத்தை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான நாலிக்கா பிரியதர்ஷனி என்பவரே 3 பிள்ளைகளை பெற்றுள்ளார். குழந்தை மற்றும் தாய் தற்போது ஆரோக்கியமான நிலையில் உள்ளனர்.

பிறந்த குழந்தைகள் 2.150, 1.900, 1.685 கிலோ கிராம் எடை கொண்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த குழந்தைகளை வளர்ப்பதில் இளம் தம்பதியினர் பெரும் சிக்கல் நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர். குழந்தைகளின் தந்தைக்கு நிரந்தர தொழில் இன்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தம்பதியருக்கு 4 வயதில் ஒரு பெண் குந்தை உள்ள நிலையில், தற்போது 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

பெரிய வருமானம் இன்றி இந்த குழந்தைகளை வளர்ப்பது எப்படி என தெரியவில்லை. விரும்புவோர் தங்களுக்கு உதவுமாறு குழந்தைகளின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த விரிவுரையாளர் மர்மமான முறையில் மரணம் : கொலையாளி கணவனா? தாயார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

மர்மான நிலையில் உயிரிழந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மரணம் தற்கொலையா அல்லது திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டரா என்பது தொடர்பில் சிக்கல் நிலை நீடிக்கிறது.

இந்நிலையில் உயிரிழந்த தனது மகளை, அவரது கணவரான செந்தூரன் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்தி வந்ததாக தாயார் தெரிவித்துள்ளார்.

பேதநாயகி திருமணமான காலம் முதல் அவர்களுடைய குடும்பத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற்று வந்தன. அவருடைய கணவன் செந்தூரன் என்பவரால் பல கொடுமைகளுக்கு உட்பட்டிருந்தார்.

இவர் மரணம் தொடர்பாக கேள்வியுற்று அதிர்ச்சி அடையாமல் சதாரணமாக திருகோணமலைக்கு வந்தார். சடலத்தை தனது வீட்டில் வைக்க வேண்டும் என்று முரண்பட்டு இறுதி கிரியைக்கு கூட வரவில்லை எனத் தெரிவித்தார்.

போதநாயகியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை வேண்டும் என கோரி கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் மொழிகள் திணைக்களத்திலிருந்து பிரதான வாயில் வரை ஊர்வலமாக வந்த இப் போராட்டத்தில் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.

போதநாயகியின் மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். அல்லது கொலையாயின் கொலைக்கு காரணம் என்ன? யாரால் கொலை செய்யப்பட்டார் என கண்டுபிடிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

வவுனியாவில் ஆவணமின்றி 20 வருடமாக தங்கியுள்ளவர்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கவேண்டாம் : வீடமைப்பு அதிகாரசபை அறிவிப்பு!!

வவுனியா காத்தார் சின்னக்குளம் வீடமைப்பு திட்டம் பகுதியில் தங்கியுள்ளவர்களின் காணி தேசிய வீடமைப்பு அதிகார சபையினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீடுகள் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களுக்கான முழுப் பெறுமதியையும் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் செலுத்தியதும் அவர்களுக்கான காணி உறுதி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் வழங்கப்படும்.

மேலும் இவ்வீடமைப்புத்திட்டத்தில் பொதுத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகள் மற்றும் ஏனைய வெற்றுக்காணிகள் யாவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானதாகும்.

அக்காணியில் அத்துமீறிக் குடியிருப்போருக்கு அனுமதிப்பத்திரங்கள் எதனையும் வழங்கவோ அல்லது அவர்களுக்கு அரசாங்கத்தினால் உதவிகள் எதனையும் வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டாம் எனவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கு ஆவன செய்யுமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வவுனியா அலுவலகத்திலிருந்து கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

எனவே இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டிற்கு பிரதேச செயலகம் அல்லது கிராம அலுவலரையோ குற்றச்சாட்டு முன்வைக்க முடியாது. எனவே இதற்கு முழுப் பொறுப்பினையும் தேசிய வீடமைப்பு அதிகார அபிவிருத்தி சபையினரே பொறுப்பேற்பதுடன் கடந்த 20 வருடமாக குடியிருக்கும் குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்படுவதுடன் வீட்டுத்திட்டங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

அரசியல் கைதிகளின் நிலைமை மோசமடைகின்றது : சிவமோகன் எம்.பி தெரிவிப்பு!!

 

அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 15 நாட்களாக உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளும் அரசியல் கைதிகளுக்கு அரசாங்கத்தினால் அப்பட்டமான அநீதி இளைக்கப்பட்டுள்ளதாக தமிழத்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு நேரடியாகச் சென்று அங்கு கைதிகளின் நிலைமைகளை கேட்டறிந்ததுடன் அவர்களின் நிலைமைகளையும் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 15 நாட்களாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியில் கைதிகள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்தேன்.

மிகவும் கவலைக்கிடமான விடயம் என்னவென்றால் உணவு இன்றி தண்ணீர் மற்றும் ஜீவனியை மாத்திரமே உட்கொண்டு தமது போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு மேலும் நாட்கள் செல்லுமானால் நிலைமை மேலும் மோசடையும்.

சிறைகளிலுள்ளவர்களுக்கு இது ஆகக்கூடிய தண்டனை. 10 வருடங்களாக அரசாங்கமானது இழுத்தடிப்பு செய்து வருகின்றது. இங்கு நடைபெறுவது அப்பட்டமான அநீதி 80முதல் 100இற்கும் இடைப்பட்ட கைதிகள் குறுகிய காலத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரில் பொருத்தப்பட்ட மின்குமிழ்கள் ஒளிர்வதில்லையென குற்றச்சாட்டு!!

வவுனியா நகரில், வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்குமிழ்கள் இரவு வேளைகளில் ஒளிர்வதில்லை. இதனால் இரவு வேளைகளில் அச்சத்துடன் பயணம் மேற்கொள்ளவேண்டியதுடன் திருடர்களின் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக பழைய பேருந்து நிலையத்தினை அண்டிய பகுதிகளில் இரவு வேளைகளில் இருளில் மூழ்கியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. தற்போது மழையுடனான கால நிலை காரணமாக மாலை 6 மணியளவில் இருள் சூழ்ந்துகொள்கின்றது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கும்போது, வவுனியா நகரிலிருந்து இரவு வேளைகளில் வியாபார நிலையங்களிலிருந்து வேலை முடிந்து செல்லும் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள் எனப்பலருக்கு நகரில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் இரவு வேளைகளில் ஒளிர்வதில்லை இதனால் இரவில் செல்வதில் அச்சுறுத்தல் தமக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இவ்வருடம் முற்பகுதியில் வீதிகளில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது காலாவதியாகியுள்ளதுடன் அது ஒளிரவைக்க நடவடிக்கையும் நகரசபையினால் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இரவு வேளைகளில் செல்லும் பயணிகளும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் புகையிரதத்தில் தூர இடங்களிலிருந்து வந்திறங்கும் பயணிகள் சிலரும் வீதி விளக்கு இரவு வேளைகளில் ஒளிராமை தொடர்பாக தெரிவித்துள்ளனர்.

இவ்வியடம் குறித்து பலரும் நகரசபையினருக்கு முறைப்பாடு மேற்கொள்ளச் சென்றபோது அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் திருடப்பட்ட நகைகளுடன் பெண் கைது!!

வவுனியாவில் 15 பவுண்திருட்டு நகைகளுடன் பெண் ஒருவரை வவுனியா குற்றதடுப்புபொலிசார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் கடந்த 24 ம் திகதி வீட்டொன்றிலிருந்து 15 பவுண் நகைகள் திருடப்பட்டன. இது தொடர்பாக குறித்த வீட்டுரிமையாளர் வவுனியா குற்றதடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதன்பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா குற்றதடுப்பு உபபொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து உக்குளாங்குளம் பகுதியில் வைத்து பெண் ஒருவரை கைதுசெய்ததுடன் அவரிடமிருந்து 15 பவுண் நகைகளையும் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் இன்றையதினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு (02.10) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுமிகளை வைத்து கவர்ச்சி விளம்பரம் : புகைப்படங்கள் வெளியானதால் பொதுமக்கள் கொந்தளிப்பு!!

உக்ரைன் நாட்டில் பிரபல நிறுவனம் ஒன்று உள்ளாடைகளை விளம்பரப்படுத்தும் முயற்சியாக சிறுமிகளை வைத்து கவர்ச்சி புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த பிரபல ஆடை நிறுவனம் ஒன்று 8 முதல் 10 வயதிற்குட்பட்ட சிறுமிகளை வைத்து கவர்ச்சி புகைப்படங்களை எடுத்துள்ளது.

உள்ளாடைகளை மட்டுமே அந்த சிறுமிகள் அணிந்திருக்கும் புகைப்படங்களை நிறுவனம் தங்களுடைய இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.

இதனை பார்த்து அதிருப்தியடைந்த பொதுமக்கள் பலரும் அந்த ஆடை நிறுவனத்திற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். எதிர்ப்பு வலுவானதை அடுத்து, அதே சிறுமிகளை வைத்து நடக்கவிருந்த ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து உக்ரைன் பொலிஸ் சிறார் துறையின் தலைவர் Larisa Zub கூறுகையில், இந்த புகைப்படங்களானது காண்பவர்கள் மனதை சிதைக்கும் வகையில் உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். அனைத்து சிறுமிகளும் அவர்களுடைய பெற்றோர் அனுமதியின் பின்னரே கலந்துகொண்டுள்ளனர்.

நாங்கள் தற்போது இதில் கலந்து கொண்ட சிறுமிகளின் வீட்டு முகவரிகளை சேகரித்து வருகிறோம். விரைவில் அவர்களுடைய பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

என் மனைவியின் கர்ப்பத்தை கலைக்க பார்க்கின்றார்கள் : எனக்கு குழந்தை வேண்டும்…கதறும் கணவன்!!

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் காதலித்து கரம் பிடித்த கர்ப்பிணி மனைவியை அவர் குடும்பத்தார் கடத்தி வைத்துள்ளதாக கணவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

ராஜூ என்ற இளைஞரும், பூஜா (22) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் தங்கள் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தனது மனைவியை அவரின் சகோதரர் கடத்தி சென்று வைத்துள்ளதாக ராஜூ பொலிசில் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து ராஜூ கூறுகையில், நாங்கள் திருமணம் செய்து கொண்டது எங்கள் இரு குடும்பத்தாருக்கும் பிடிக்கவில்லை.

என் மனைவி பூஜா தற்போது நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த கர்ப்பத்தை கலைத்துவிட வேண்டும் என பூஜாவின் குடும்பத்தினர் எங்களை மிரட்டினார்கள். இந்நிலையில் பூஜாவின் சகோதரர் அடியாட்களுடன் வந்து என்னை அடித்துபோட்டு விட்டு பூஜாவை கடத்தி சென்றுவிட்டார்.

எனக்கு என் மனைவியும், அவர் வயிற்றில் உள்ள குழந்தையும் பத்திரமாக இருக்க வேண்டும், இதனால் பூஜாவை மீட்டு தர பொலிசாரை அணுகினேன் என கூறியுள்ளார்.

ராஜூவின் புகாரை பெற்ற பொலிசார் கூறுகையில், ராஜூவும், பூஜாவும் திருமணம் செய்தபின்னர் பூஜாவை காணவில்லை என அவர் குடும்பத்தார் புகார் கொடுத்தனர். இதைவைத்து பூஜாவிடம் விசாரிக்கவுள்ளோம், இதன்பின்னர் சட்டம் தன் கடமையை செய்யும் என கூறியுள்ளனர்.

காதலியை பிறந்த நாள் அன்று தனியாக அழைத்துச் சென்று கொலை செய்த காதலன் : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் பிறந்தநாளின் போது காதலியை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று முன்னாள் காதலன் அவரை கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் Kharadi பகுதியைச் சேர்ந்தவர் Uma Baban Kapse. இவர் கடந்த புதன் கிழமை தன்னுடைய 19-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது அவரின் முன்னாள் காதலன் Gangadhar Boyale என்பவர் அவரை Lohegaon அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே தனியாக கேக் ஒன்றை வாங்கி வந்த அவர் கேக்கை வெட்டும் படி கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த Gangadhar Boyale அவரை தாக்கியதோடு, கொலை செய்துள்ளார். Chandannagar பகுதியைச் சேர்ந்த Gangadhar Boyale-ஐ கைது செய்துள்ள பொலிசார், வரும் 3-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இரண்டு பேரும் காதலித்து வந்ததாகவும், கடந்த ஏப்ரல் மாதம் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது காதலி தொடர்ந்து இவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் வேறொரு நபரை திருமணம் செய்யவும் தயாராக இருந்ததால், ஆத்திரத்தில் காதல் அவரை கொலை செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பொலிசாரின் விசாரணைக்கு பின்னரே இந்த கொலைக்கான முழு காரணம் என்ன என்பது தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று குழந்தைகளை கொலை செய்த தாய்: பின்னர் செய்த திடுக்கிடும் செயல்!!

தமிழகத்தின் சேலத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (37) – ஜெயா (26) தம்பதிக்கு சுமித்தாஸ்ரீ (7), ஷாலினி (3) ஆகிய மகள்களும், 11 மாதத்தில் வெற்றிவேல் என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயா மற்றும் அவரது குழந்தைகள் வெளியில் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் விசாரணையை தொடங்கிய பொலிசார் ஜெயா மற்றும் குழந்தைகளை தேடிய நிலையில் அங்குள்ள கிணற்றில் ஜெயா, சுமித்தாஸ்ரீ, ஷாலினி, வெற்றிவேல் ஆகிய நால்வரும் சடலமாக மிதப்பதை கண்டுப்பிடித்து சடலங்களை மீட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஜெயா, 3 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட ஜெயாவிற்கு வேறு ஒருவருடன் பழக்கம் இருந்து வந்ததாகவும், அவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த லட்சுமணன், தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ஜெயா, தனது 3 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் எடுத்த முடிவு : உயிரை மாய்த்துக்கொண்ட கணவனின் கடிதம் சிக்கியது!!

சேலம் மாவட்டத்தில் திருமணமான 3 நாட்களில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த கணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

செல்லதுரை என்பவர் தன்னுடன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய தீபா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். புதுமணத் தம்பதிகளுக்கு பெண் வீட்டில் விருந்து உபசரிப்புகள் தடபுடலாக இருந்தது.

கணவன் வீட்டுக்கு சென்ற தீபா, அங்கு கழிப்பறை வசதி இல்லாததைக் கண்டு அவருடைய மனைவி மன உளைச்சலுக்கு ஆளானார். கழிப்பறை இல்லாத வீட்டில் என்னால் ஒருநாள் கூட வாழ முடியாது என்று கணவரிடம் அழுது புலம்பினார்.

அன்றே, தனது தாய் வீட்டுக்கு கிளம்பிவிட்டார். அன்று மாலையில் மனைவியை அழைத்து வர செல்லதுரை தன் மாமியார் வீட்டுக்குச் சென்றார். அவரை எவ்வளவோ சமாதானம் செய்தும், கழிப்பறை கட்டி முடிக்கும் வரை தன்னால் அங்கு வர முடியாது. கழிப்பறை கட்டிய பிறகு வந்து அழைத்துச்செல்லும்படி கூறி செல்லதுரையுடன் செல்ல மறுத்துவிட்டார்.

இதனால் மனம் உடைந்த செல்லதுரை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அவர் எழுதிவைத்திருந்த கடிதம் சிக்கியுள்ளது.

அதில், ‘அம்மா, அப்பா மன்னிக்கவும். தவறு செய்து விட்டேன். தற்கொலை செய்து கொள்கிறேன். எனது மனைவி மற்றும் நண்பர்களை தொந்தரவு செய்யாதீர்கள்,” என்று எழுதி வைத்திருந்தார்.

சடலமாகக் கிடக்கும் மகனைப் பார்த்து, நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

மூன்று பேருக்கு மரண தண்டனை : கட்டித்தழுவி அழுத உறவினர்கள்!!

வென்னப்புவையில் நபர் ஒருவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளுக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி வை. பெர்னாண்டோ மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

வென்னப்புவை, லுணுவில சிறிகம்பல கொலனி பகுதியை சேர்ந்த சுரன் ஹேவகே பியல் இந்திரஜித், கொளையா என்ற ஹிட்டிஹாமி அப்புஹாமிலாகே பிரசாத் பிரியங்க மற்றும் அனுராத என்ற அதாவுத ஆராச்சிலாகே அஜித் பிரியந்த ஆகியோருக்கு இந்த மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி சிலாபம் மேல் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட லுணுவில சிறிகம்பள கொலனியை சேர்ந்த ரொக்சி மனோஜ் சுரனிமல என்பவரை கொலை செய்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், குற்றம் சுமத்தப்பட்டிருந்த நபர்கள் நாம் நிரபராதிகள் எனக் கூறியதுடன் சாட்சியங்களை விசாரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டன.

அரச சட்டத்தரணி பத்மலால் வீரசிங்க டி சில்வா வழக்கை தொடர்ந்திருந்ததுடன் சட்டத்தரணி திலங்க வழக்கில் ஆஜராகி வாதாடியுள்ளார்.

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் குற்றவாளிகள் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, வழக்கு தீர்ப்பால் அதிர்ச்சியடைந்திருந்த உறவினர்கள், சிறைச்சாலை அதிகாரிகளை தள்ளிவிட்டு, தமது உறவினர்களை கட்டித்தழுவி அழுதமை அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த உயிரிழந்த விரிவுரையாளர் போதநாயகிக்கு நீதிகோரி திருகோணமலையில் கூடிய மக்கள்!!

மர்மமான முறையில் உயிரிழந்த விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் மரணத்திற்கு நீதி கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆரம்பிக்கப்பட்டு, நடைபவனியாக வீதிக்கு வந்து மக்களை தெளிவூட்டும் விதத்தில் கவனயீர்ப்பு போராட்டமாக நடத்தப்பட்டுள்ளது.

போதநாயகியின் மரணத்திற்கான காரணத்தை உடனடியாக கண்டறிந்து சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து இனி வருங்காலங்களில்இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கான ஒரு விழிப்புணர்வு போராட்டமாக இது அமையும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.