வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் 08.09.2018 சனிக்கிழமை காலை நடைபெற்றது.
காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 07 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுக பெருமான் காலை 9.45 மணிக்கு தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது.
இன்றைய தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர் .
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தில் கடந்த 02.09.2018 ஞாயிற்று கிழமை கிருஷ்ண ஜெயந்தி மற்றும் உறியடி உற்சவம் என்பன மிக சிறப்பாக இடம்பெற்றன. அத்துடன் அருளக மற்றும் நிருத்தியநிகேதன கல்லூரி மாணவர்களதும் கண்ணன் அறநெறி பாடசாலை மாணவர்களதும் நடன நிகழவுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
வவுனியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துவிட்டு 5ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டினை வியாபார நிலையத்திற்கு கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வேப்பங்குளம் – பட்டாணிக்சூர் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் மோட்டார் சைக்கிளுக்கான உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்துவிட்டு 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டினை வர்த்தக நிலையத்திற்கு வழங்கியுள்ளார்.
இதையடுத்து குறித்த 5ஆயிரம் ரூபாய் நோட்டில் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் 5 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த 24வயதுடைய நபரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் வறட்சி காரணமாக 9,516 மேட்டு நில பயிர்செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் பி.தனராஜ் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட வறட்சி நிலை தொடர்பில் இன்று கேட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9,516 மேட்டு நில பயிர்செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளதுடன் பலர் மேட்டு நில பயிர்செய்கையில் ஈடுபட முடியாத நிலையுடன், பயிர்செய்கை மேற்கொண்ட சிலரின் பயிர்களும் அழிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்படி, வவுனியா பிரதேச செயலக பிரிவில் 4,437 பேரும், வவுனியா பிரதேச செயலக பிரிவு வடக்கில் 1, 351 பேரும், தெற்கில் 1,323 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 2,405 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.
இவர்களுக்கான வறட்சி நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை வவுனியாவில் கடந்த ஒருவார காலமாக மாலை வேளைகளில் மிதமான மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையை பின்னணி கொண்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் நிஸாம்தீன் என்ற 25 வயதுடைய இளைஞன் சிட்னி கென்ஸின்டன் (Kensington) பகுதியில் வைத்து நேற்று பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுவதாக சிட்னி புலனாய்வு அதிகாரி மைக்கல் மெக்டிமென் கூறியதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்கள் அடங்கிய குறிப்பேடு ஒன்று பல்கலைக்கழக ஊழியர் ஒருவரால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் அதேநேரம் UNSW பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகிறார்.
சிட்னியில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டதற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி இந்நபர் தனியாகவே இயங்கியதாக நம்பப்படுவதாகவும் இதற்கு முன்னர் இவர் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவரின் மாணவர் விசா செப்டம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், அவர் தொடர்ந்தும் இங்கே தங்கியிருப்பதற்கான நடடிவக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதேநேரம் இவர் இலங்கை உட்பட சில நாடுகளுக்கு சென்று திரும்பியதாகவும் கூறியுள்ளனர்.
குறித்த நபர் இன்று வெவெர்லி (Waverley) நீதிமன்றில் முன்னிலையான போது இவருக்கு பிணை வழங்க அனுமதி மறுக்கப்பட்ட அதேநேரம் அவரது வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 24-ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.
இரகசிய தகவலொன்றுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும் கிளிநொச்சி பொலிஸார் இதை உறுதிப்படுத்தவில்லை.
இதில், படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தொலைபேசியிலிருந்து இறுதியாக குறித்த சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்திற்கே அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியிலிருந்து நேற்று முன்தினம் யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ஆடைத் தொழிற்சாலையொன்றில் பாதுகாப்பு அதிகாரியாகக் கடமையாற்றி வந்த பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
ஆனால் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்றும், கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமையும் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
மொராக்கோ நாட்டில் 17 வயது சிறுமி ஒருவர் இரண்டு மாதங்களாக தான் அனுபவித்த நரக வேதனை குளித்து கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Beni Melal பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமி இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில், கத்தி முனையில் இரண்டு ஆண்களால் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைகளுக்கு ஆளாகியுள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் வீடியோவில் வாக்குமூலமாக பதிவு செய்து அதனை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, என்னை கடத்திய மோசமான ஆண்கள் சில நாட்கள் போதை மருந்தினை கொடுத்து என்னை பாலியல் சித்ரவதை செய்தார்கள். அதன்பிறகு பணத்திற்காக என்னை வேறு ஒருவரிடம் விற்பனை செய்தார்கள்.
இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்கள் என வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதைகள் செய்வார்கள், மேலும் எனக்கு சரியாக உணவு கொடுக்காமல் எனது உடலில் ஆங்காங்கே சிகரெட்டால் சூடுவைத்தார்கள் என கூறியுள்ளார்.
தற்போது, அவர்களிடம் இருந்து தப்பித்து வந்துள்ள நான், எனது உடலில் சூடுபட்ட இடங்களில் டாட்டூ போட்டு மறைத்துவைத்துள்ளேன் என கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த 75,000 பேர் இவருக்கு ஆதரவு தெரிவித்து, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கையெழுத்திட்டதையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனக்கு காதல் துளிர்ப்பதற்கு நீண்ட காலம் ஆயிற்று. அப்போதுதான் என்னைப் போன்றே இன்னும் பலர் இருப்பார்களே என்னும் எண்ணமும் எனக்கு உண்டாயிற்று. அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன்.
காதலைக் கண்டுபிடிக்க தடுமாறுபவர்கள், புதிய உறவு ஒன்றை நீண்ட காலத்திற்கு ஏற்படுத்திக் கொள்ள இயலாதவர்கள், பாலுறவுக்கு துணையை கண்டுபிடிக்க இயலாதவர்கள் போன்றோர் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காகவும், தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காகவும் ஒரு அமைப்பை ஏற்படுத்தினேன்.
ஆனால் அது இப்படி முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. நல்ல ஒரு கண்டுபிடிப்பை மோசமானவர்கள் தங்கள் தீய செயலுக்கு பயன்படுத்திக் கொண்டதுபோல் இருந்தது.
involuntary celibacy என்பதன் சுருக்க வடிவான incel என்னும் அமைப்பின் நிறுவனரான கனடாவைச் சேர்ந்த Alana என்பவரின் குற்ற உணர்வுடன் கூடிய வாக்குமூலம்தான் இது.
வெளிப்படையாக காதலை சொல்லும் அளவு கூட தைரியமில்லாமல், ஆனால் காதலிக்க வேண்டும் என்னும் ஆசையுடனேயே வாழும் ஆண்களையும் பெண்களையும், காதல் ஒன்றும் பயப்படும் விடயமல்ல, வாருங்கள் காதலில் விழலாம் என தைரியப்படுத்துவதற்காக என அவர் தொடங்கிய முயற்சிக்கு நல்ல பலன் இருந்தது.
அவரது எளிய இணையதளம் மெதுவாக பிரபலமாக தொடங்கியது.
தனிமை குறித்து ஆண்களும் பெண்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக அது மாறியது.
அதில் பெண்களின் தனித்தன்மையை விளங்கிக் கொள்ள முடியாத சில ஆண்களின், பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கோபத்தையும் காண முடிந்தது.
என்றாலும் தனிமையில் வாடும் பலருக்கும் அது ஆதரவளிக்கும் ஒரு இடமாகவே விளங்கியது.
Alanaவின் இணையதளத்தின் மூலம் சந்தித்துக் கொண்ட ஒரு ஜோடி திருமணம் கூட செய்து கொண்டார்கள்.
2000ஆம் ஆண்டு, இனி தான் இல்லாமலே தனது இணையதளம் ஒழுங்காக இயங்கும் என்ற திருப்தியுடன் இன்னொருவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு விலகினார் Alana.
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகம் ஒன்றை அவர் வாசித்துக் கொண்டிருந்தபோது Elliot Rodger என்னும் மனிதனின் கதை அவரது கண்களில் பட்டது.
22 வயதுடைய அந்த நபர் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் ஆறு பேரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டான்.
நீண்டகாலமாகவே தனிமையில் வாழ்ந்த அவன், இறப்பதற்குமுன் 141 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தில் தனது ஆழ் மனதில் ஆழ வேறூன்றியிருந்த பெண்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியிருந்தான்.
பிரச்சினை என்னவென்றால் அந்த Elliot Rodger, இன்று incel சமுதாயத்தின் ஹீரோவாகப் பார்க்கப்படுகிறான்.
அத்துடன் இந்த பிரச்சினை முடியவில்லை, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டொராண்டோவைச் சேர்ந்த Alek Minassian என்னும் ஒருவன் சமூக ஊடகம் ஒன்றில், ’incel புரட்சி மீண்டும் தொடங்கிவிட்டது, Elliot Rodger வாழ்க’ என்ற செய்தியை வெளியிட்டிருந்தான்.
கொஞ்ச நேரத்திற்குப்பின் கூட்ட நெரிசல் மிக்க ஒரு தெருவுக்குள் வேன் ஒன்றை ஓட்டிச் சென்ற அவன், வாகனத்தால் மோதி 10 பேரைக் கொன்றுவிட்டான்.
இந்த செய்திகளைக் கேள்விப்பட்டபோது தனக்கு கவலையும் கோபமும் ஏற்பட்டது என்று கூறும் Alana, தான் அதற்காக குற்ற உணர்வு கொள்ள வேண்டுமா என தன்னையே கேட்டுக் கொண்டார்.
தேவையில்லை என்று அவருக்கு விளக்கிய அவரது நண்பர்களும் அவர் நல்ல நோக்கத்திற்காகத்தான் அந்த அமைப்பை துவக்கினார் என்பதை அவர் உணரச் செய்தார்கள்.
இதற்கிடையில் 2017ஆம் ஆண்டு incel தளம் முடிவுக்கு வந்திருந்தது.
சிறிது காலம் கவலையிலும் குற்ற உணர்விலும் வாழ்ந்த Alana, போதும், செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று முடிவு செய்தார்.
தனிமையில் வாடுவோருக்காக Love Not Anger என்னும் இன்னொரு திட்டத்தை துவக்கினார்.
அது, கோபத்தில் சிக்கிக் கிடந்தது போதும், மரியாதைக்குரிய அன்பைக் கண்டு கொள்ளலாம் என்று கூறுவதற்காக, வன்முறையை தூர வைத்துவிட்டு காதலில் விழலாம் என்னும் நோக்கத்தை பறைசாற்றுவதற்காக அமைக்கப்பட்டது.
மீண்டும் இப்படி ஒரு அமைப்பை தொடங்குவேன் என்று நான் நினைக்கவில்லை என்று கூறும் Alana, தனிமையில் வாடும் பலர் இதை நல்ல விதமாக எடுத்துக் கொண்டு நேர்மறையான மாற்றங்களை நோக்கி நடைபோடுவார்கள் என நம்புகிறேன் என்கிறார்.
சுவிற்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் 36 வார கர்ப்பிணியாக இருந்துகொண்டு துருவ நடனம் ஆடுவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுவிற்சர்லாந்தை சேர்ந்த 31 வயதான கிறிஸ்டினா எண்ணும் பெண், தன்னுடைய தோழி ஒருவர் துருவ நடனம் ஆடுவதை பார்த்து தானும் அந்த நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.
அதன்படி கடந்த 2010 முதல், தனக்கு முதல் மகன் பிறந்ததும், துருவ நடனப்பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.
நாட்கள் செல்லச்செல்ல நடத்தின் மீது இருந்த ஆர்வத்தால், கர்ப்பமடைந்த பிறகும் நடந்ததை தொடர்ந்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து அவர் இன்ஸ்டாகிராம் பதிவிட்டதும், பலரும் வியந்து பார்த்துள்ளனர். அதேசமயம் ஏரளாமானோர் எச்சரித்து அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து கிறிஸ்டினா கூறுகையில், நான் தற்போது 6 மாத கர்ப்பிணி பெண்ணாக இருக்கிறேன். இப்பொழுதெல்லாம் நான் நடனமாடுவதை பார்த்து, என் பெற்றோர், உறவினர்கள் உட்பட பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எங்கே நான் தடுமாறிவிடுவேனோ என்ற அச்சம் அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. எனக்கு இந்த நடனம் ஆடுவது மனஅமைதியை தருகிறது. நான் நடனம் ஆடும்பொழுதெல்லாம் என்னுடைய மகன் உறங்குகின்றான் என தெரிவித்துள்ளார்.
தற்போது 6 மாத கர்ப்பினியாகிவிட்டதால் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு, கிறிஸ்டினா தன்னுடைய பயிற்சி நேரத்தை வாரத்திற்கு 4 மணி நேரமாக குறைத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஐந்து குழந்தைகளின் தாயை அவரின் ஆண் நண்பர் காரின் பிரேக் வயரை கட் செய்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்தைச் சேர்ந்தவர் John Jenkins(39). ஐந்து குழந்தைக்கு தாயாரான இவர் கடந்த 22-ஆம் திகதி கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் Tammy Fox(38), என்ற நபரை பொலிசார் கடந்த 29 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
இது குறித்து உள்ளூர் ஊடகம வெளியிட்டுள்ள செய்தியில், Tammy Fox உயிரிழந்ததற்கு அவரின் நெருங்கிய நண்பர் John Jenkins தான் காரணம், அவர் தான் Tammy Fox-ம் காரில் உள்ள மூன்று பிரேக் வயர்களின் லயன்களை கட் செய்துள்ளார்.
ஆனால் இது குறித்து பொலிசார் எந்த ஒரு தகவலையும் சொல்ல மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் அவர் என்ன காரணத்திற்காக பிரேக் வயரை கட் செய்தார் என்பது குறித்து தெரியவில்லை.
மேலும் Tammy Fox 5 குழந்தைகளுக்கு தாய் என்பதால், தற்போது அந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்காக GoFundMe-யில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட நபர் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
பத்து மாதம் தவம் போல் வயிற்றில் சுமந்த பிள்ளையை பத்தே நாட்களில் பறி கொடுத்திருக்கிறார் ஒரு பெண். அதற்கு காரணம் அவருக்கு இருந்த பால்வினை நோய்.
பிரித்தானியாவின் Prestwich ஐச் சேர்ந்த Kira Aldcroft (22) என்னும் பெண் HSV2 என்னும் வைரஸால் ஏற்படும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் அவருக்கு அந்த நோய் இருப்பது அவருக்கு தெரியவில்லை.
தான் கர்ப்பமாக இருந்த போதா அல்லது அதற்கு முன்பா தனக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது என்பது தனக்கு நினைவில்லை என்று கூறும் Kira தாயாவதற்கு எப்போதுமே ஏங்கியதாகவும் Leo என்னும் அழகு குட்டி தேவதூதன் வந்து பிறந்தபோது தன் கனவு நனவானது போல இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.
அவரது மகனான Leo Aldcroft பிரசவ நாளுக்கு 9 நாட்களுக்கு முன்பே பிறந்தான்.
அவனது பிறப்பு குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நேரத்தில் பிறந்த எட்டாவது நாள் அவனது வாயிலிருந்து திடீரென இரத்தம் வடிய ஆரம்பித்தது.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவனுக்கு HSV2 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர்தான் Kira வுக்கு அந்த நோய் இருந்ததும், பிரசவத்தின்போது அது குழந்தைக்கு தொற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தவமிருந்து பெற்ற குழந்தையைப் பறி கொடுத்த Kira, இப்போது மற்ற தாய்மார்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை சொல்கிறார்.
பிரசவ காலத்தின்போது இதர மருத்துவ பரிசோதனைகள் செய்வதுபோல, HSV2 வைரஸ் நோய்த்தொற்று இருக்கிறதா என்பதையும் சோதித்துக் கொள்ளுங்கள் என்பதுதான் அது
லண்டனின் Luton நகரத்திலிருந்து Ibiza நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் இளம்பெண்கள் சிலர், காதல் ஜோடியை தாக்கும் காணொளி வெளியாகியுள்ளது.
லண்டனின் Luton நகரத்திலிருந்து Ibiza நோக்கி சென்று கொண்டிருந்த ஈஸி ஜெட் EZY2095-ல், அதிகமான மது போதையில் இருந்த இளம்பெண் ஒருவர் திடீரென மேலாடையை கழற்றிவிட்டு நிர்வாணமாக நடனமாடியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மற்ற இளம்பெண்கள் அந்த பெண்ணையும், அவளுக்கு மது ஊற்றிக்கொடுத்த காதலனையும் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து விமானத்தில் பயணம் செய்த பயணி ஜோஷ் கூறுகையில், அன்றைய தினம் ஒரு குழுவாக வந்திருந்த சில இளம்பெண்கள் பின் பகுதியில் இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.
அவர்களுக்கு முன்னதாக இருந்த இருக்கையில் பெண் ஒருவர், தன்னுடைய காதலனுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் போதையான அந்த பெண், பாட்டிலை மேலே தூக்கி வீசினார். ஆனால் அதிஷ்டவசமாக அது யார் மீதும் படவில்லை.
பின்னர் எழுந்து நின்று நடனமாட ஆரம்பித்தவர்ம் திடீரென மேல் சட்டை முழுவதையும் கழற்றிவிட்டு தன்னுடைய அந்தரங்கத்தை வெளியில் காட்ட ஆரம்பித்தார்.
இதனை ஒரு சிலர் தங்களுடைய செல்போன்களில் படம்பிடித்தாலும், ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர் வேகமாக அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்தார்.
அதனை பெண்ணின் காதலர் தடுக்க முற்படுகையில், அதிகமான பெண்கள் சேர்ந்து தாக்க ஆரம்பித்து விட்டனர் என கூறியுள்ளார்.
இதுகுறித்து விமான நிர்வாகம் கூறுகையில், சம்பவம் கடந்த 9-ம் தேதியன்று எங்களுடைய விமானத்தில் தான் நடந்தது. பயணிகளுக்கு ஏற்ற சேவையை செய்வதை தான் நாங்கள் கடமையாக கொண்டுள்ளோம். இது போன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிதான ஒன்று தான். சம்பவம் நடைபெற்ற அன்று கூட நங்கள் பொலிஸாரிடம் விளக்கிவிட்டோம் என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மனச்சிதைவு ஏற்பட்டு உடைகளை கிழித்து கொண்ட இளம்பெண்ணை தந்தை ஆறு ஆண்டுகளாக சங்கிலியில் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்தவர் மங்களு. இவருக்கு பசந்தி (26) என்ற மகளும் மூன்று மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பசந்தியை கடந்த ஆறு ஆண்டுகளாக சங்கிலியில் கட்டி வைத்து வந்துள்ளார் மங்களு.
உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் இதை சமீபத்தில் கண்டுப்பிடித்த நிலையில் பொலிசில் புகார் கொடுத்தார். இதையடுத்து பசந்தியை மீட்ட பொலிசார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.
பின்னர் பொலிசார் மங்களுவிடம் விசாரித்தனர். அவர் கூறுகையில், பசந்தி தனது உடையை தானே கிழித்து கொண்டு எங்காவது அடிக்கடி ஒடிவிடுவாள்.
இதனால் அவள் பாதுகாப்பு கருதியே சங்கிலியில் கட்டி வைத்தோம் என கூறியுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அரியானா மாநிலத்தில் திறந்து கிடந்த வீட்டிற்குள் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் இருந்து 50கிமீ தூரத்தில் உள்ள பிரிஜ்புரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் Fulbati (62).
இவரது வீட்டில் பால் போடுவதற்காக வந்த பால்காரர் வீடு திறந்திருப்பதை பார்த்து உள்ளே சென்றுள்ளார். அங்கே வீடு முழுவதும் ரத்த கறைகள் படிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக உள்ளுர் தலைவருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் இதுகுறித்து பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், வீட்டினுள் சென்று பார்க்கும்போது, Fulbati மற்றும் அவருடைய மகன் Manish (25) தரையில் சடலமாகவும், மருமகள் Pinki (24) தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாக கிடப்பதை பார்த்துள்ளனர்.
அதேசமயம் 1 வயதுடைய Fulbati-ன் பேத்தி அறையின் ஓரத்தில் காயங்களுடன் அழுதுகொண்டிருந்துள்ளார்.
இதனை பார்த்த பொலிஸார் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இச்சம்பவம் குறித்து பொலிஸார் தரப்பில் தெரிவிக்கையில், இந்த கொடூரமான சமபவத்தில் Fulwati பலமாக தாக்கப்பட்டுள்ளார். 3 பேரும் தற்கொலை செய்துகொண்டு இறந்திருப்பதற்கான தடயங்கள் எதுவும் தென்படவில்லை.
குற்றவாளி யார் என்பது குறித்து தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் குற்றவாளியை பிடித்துவிடுவோம் என தெரிவித்துள்ளனர்.