உத்திரபிரதேசத்தில் கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை 5 நாட்களுக்கு பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் Crossings Republik அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த 25-ம் தேதி பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து விரைந்து சென்ற பொலிஸார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இரண்டு நாட்களுக்கு பின்னர் இறந்தவர் சஞ்சனா (30) என்பதை அடையாளம் கண்ட பொலிசார், காஸியாபாத் அருகே விஜயாநகர் பகுதியை சேர்ந்த ராஜீவ் (32) என்பவரின் மனைவி என்பதையும் கண்டறிந்தனர்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ராஜீவை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, மூன்று குழந்தைகளுக்கு தாயான சஞ்சனா கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து குற்றவாளி ராஜிவ் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று, பிறக்கவிருந்த குழந்தை பற்றி எங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்தில் நான் சஞ்சனாவை கத்தியால் குத்தினேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பின்னர் ராஜிவ் மீது, இந்திய தண்டனை சட்ட பிரிவுப்படி 302(கொலை) மற்றும் 201(ஆதாரங்களை அழிக்க முயற்சித்தல்) கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணின் கொலை வழக்கில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நேரு என்பவரின் மனைவி லாவண்யா தனது ஒரு வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். தனியாக இருக்கும் காரணத்தால், பாதுகாப்பு கருதி லாவண்யா, தனது தாய் வீட்டில் இருந்தார். அவ்வப்போது, கணவரின் ஊரிலும் இருப்பதுண்டு.
இந்நிலையில், உறவினர் ஒருவரின் விசேஷ நிகழ்ச்சிக்காக தனது கணவரின் கிராமத்துக்கு சென்ற லாவண்யா அங்கு தனியாக இருந்துள்ளார். பெரும்பாலும் வீட்டின் கதவை பூட்டி வைத்திருக்கும் லாவண்யான விடிந்தும் வெளியே வரவில்லை.
அது வயல் பகுதிகள் நிறைந்த இடம் ஆகும். ஆனால் ஒரு வயது மகன் மட்டும் தனியாக வெளியே நின்று அழுதுகொண்டிருந்துள்ளான். இதனால் அருகில் வசிப்பவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது லாவண்யா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு, பொருள்கள் கலைந்தநிலையில் கிடந்தன. நகைகள் இருந்த டப்பாக்கள் சிதறிக்கிடந்தன. இதனைத்தொடர்ந்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் வெளியான தகவல், பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில், லாவண்யா நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்படுவதற்கு முன்னர், லாவண்யா தனது குழந்தையுடன் சாப்பிடுவதற்கு தட்டில் சாதம் எடுத்து வைத்துள்ளார்.
குழந்தை சாப்பிடாமல் உணவு அப்படியே இருக்கிறது. அந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், லாவண்யாவை தாக்கிவிட்டு வீட்டிலிருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம்.
இந்தத் தாக்குதலில், லாவண்யாவுக்கு தலையிலும், நெஞ்சிலும் கத்திக்குத்துக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தாய் கொல்லப்பட்டது தெரியாமல், இரவு முழுவதும் ரத்தவெள்ளத்தில் கிடந்த லாவண்யாவின் அருகில் குழந்தை படுத்துக்கிடந்துள்ளது.
பசியில் உணவுக்காகத் தாயை அழைத்துக் கதறியது, அப்பகுதி மக்களை உறையவைத்துள்ளது. தற்போது, மோப்ப நாய் வைத்து குற்றவாளிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.
இந்தியாவின் மகராஷ்டிராவில் போதை மருத்துகளை பள்ளியில் விற்கும்படி படி மாணவர் மிரட்டப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முகமது ஜயின் என்ற 17 வயது மாணவர் இரு தினங்களுக்கு முன்னர் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்தார்.
இதையடுத்து முகமதின் தந்தை ஜகீர் அளித்த புகாரின் பேரில் சாய்நாத், முருகன், அனிகிட் ஆகிய மூன்று இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
முகமது மரணம் குறித்து ஜகீர் கூறுகையில், மூன்று இளைஞர்கள் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாக முகமது என்னிடம் கூறினார்.
நான் மும்பையில் இருந்து வந்தபிறகு இது குறித்து பொலிசில் புகார் கொடுக்க இருந்தேன், அதற்குள் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இறப்பதற்கு முன்னர் உறவினரிடம் சில விடயங்களை முகமது கூறினார்.
அதாவது, சாய்நாத், முருகன், அனிகிட் ஆகிய மூவரும் தன்னிடம் போதை மருந்துகளை கொடுத்து அதை பள்ளியில் விற்று தரும்படி அடித்து துன்புறுத்தியதாக கூறியுள்ளார். இதன்பின்னரே தற்கொலை செய்து கொண்டார்.
என் மகன் போல பலரின் வாழ்க்கையை மூவரும் நாசமாக்குவதற்கு முன்னர் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
திரைப்பட துணை நடிகையின் காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த தந்தையை பொலிசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உகார்தே நகரில் கேட்பாரின்றி நின்ற காரை கடந்த 25ம் திகதி பொலிசார் மீட்டனர்.
காரில் ரத்தமும், தூவப்பட்டிருந்த மிளகாய் பொடியும் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணையில், இந்த கார் கொடைக்கானலை சேர்ந்த பிரபாகரனுக்கு (28) சொந்தமானது என தெரிந்தது.
ஆகஸ்ட் 24ம் திகதி இரவு வாடகைக்கு செல்வதாக கூறி சென்ற பிரபாகரன் வீடு திரும்பவில்லை. சிட்டி டவர் என்ற வனப்பகுதியில் 50 அடி பள்ளத்தில் பிரபாகரனின் உடல், கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில், கடைசியாக பிரபாகரன் செல்போனுக்கு பேசியது அவரது நண்பரான மற்றொரு கார் டிரைவர் செந்தில்குமார்(37) என்பது தெரிந்தது. இதனால் அவரைப் பிடித்து பொலிசார் விசாரித்ததில், தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்துக்காக பிரபாகரனை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.
செந்தில்குமாரை கைது செய்த பொலிசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் கொலையில் தொடர்புடைய மணிகண்டன் (28), முகமது சல்மான் (20), அவரது தம்பி ஆகியோரை கைது செய்தனர்.
இந்த நிலையில் கைதான செந்தில்குமார் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. சென்னை, திருவான்மியூர் வால்மீகி நகரை சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன். அவரது மனைவி, துணை நடிகை விஷ்ணுபிரியா.
விஷ்ணுபிரியாவின் தந்தை தொழிலதிபர் சூரியநாராயணன் ஐதராபாத்தில் உள்ளார். இவருக்கு கொடைக்கானலில் வீடு, நிலம் இருக்கிறது.
மனநிலை பாதிப்பில் இருக்கும் ரமேஷ்கிருஷ்ணனை கொடைக்கானலில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைத்து, சிகிச்சை அளிக்கின்றனர்.
அவரை பார்க்க விஷ்ணுபிரியா அடிக்கடி கொடைக்கானல் வந்து சென்றுள்ளார். சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்து செல்லும் விஷ்ணுபிரியாவை கொடைக்கானலுக்கு அழைத்து வரவும், மீண்டும் விமானநிலையம் அழைத்துச் செல்லவும் பிரபாகரன் தனது காரை எடுத்துச் செல்வார்.
இதில் இருவருக்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரபாகரனுக்கு சொந்தமாக கார் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு பழக்கம் அதிகரித்து,
ரூ.15 லட்சம் வரை பிரபாகரனுக்கு விஷ்ணுபிரியா கொடுத்திருப்பதாக தெரிகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு விஷ்ணுபிரியா கொடைக்கானல் வந்தபோது, ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தவர்,
அருகில் பிரபாகரனை வைத்துக் கொண்டு, தனது தந்தை சூரியநாராயணனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, பிரபாகரனை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூரியநாராயணன், பிரபாகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
ஆகஸ்ட் 24ம் திகதி இரவில் போனில் தெரிவித்தபடி, பிரபாகரன் குறிஞ்சி ஆண்டவர் கோயிலருகே வந்தார். அவரை அழைத்து சென்று மதுகுடிக்க வைத்து, குடிபோதையில் இருந்த அவரை காருக்குள் வைத்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொன்றோம். உடலை வனப்பகுதியிலுள்ள பள்ளத்தில் வீசினோம்.
காரை உகார்தே நகரில் நிறுத்திவிட்டுச் சென்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தாக பொலிசார் கூறினர்.
தலைமறைவான சூரியநாராயணனை தேடி தனிப்படை பொலிசார் ஐதராபாத் விரைந்துள்ளனர். கள்ளக்காதலனை, நடிகையின் தந்தையே கூலிப்படை ஏவி கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தகாத உறவை தட்டிக் கேட்ட மனைவியை கணவன் உட்பட அவரது குடும்பத்தினர் வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருக்கு திருஞானசம்பந்தம்(32) என்ற மகன் உள்ளார்.
திருஞான சம்பந்ததிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோதா(30) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் திருஞானசம்பந்திற்கு, அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் நெருங்கி பழகும் அளவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் மனைவியான வினோதாவிற்கு தெரியவந்ததால், அவர் உடனடியாக இது குறித்து கணவரிடம் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது, திருஞான சம்பந்தம் அந்த பெண்ணை தான் திருமணம் செய்யப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த வினோதா கணவரிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த திருஞான சம்பந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர் வினோதாவின் வாயில் எலி மருந்தைஊற்றி கொலை செய்ய முயன்றனர்.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக வினோதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வினோதா தன் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் மீது பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து திருஞானசம்பந்தம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், திருஞானசம்பந்தத்தை மட்டும் கைது செய்துள்ளனர்.
முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் உட்பட புதிய ஊடகங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஆரம்பமான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பிரதான உரையை நிகழ்த்தும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
தொழில்நுட்பம் மூலம் உருவாகியுள்ள சமூக வலைத்தளங்கள் உட்பட புதிய ஊடகங்கள் பாதுகாப்புக்கு மரபுசாராத ஒரு அச்சுறுத்தல். முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் உலகம் முழுவதும் அழிவை ஏற்படுத்தும் சக்திகளாக மாறியுள்ளன.
இந்த ஊடகங்கள் மூலம் அரசுகளை ஸ்திரமற்ற நிலைமைக்கு உள்ளாக்க முடியும். துனிசியா, எகிப்து போன்ற நாடுகள் இதற்கு சிறந்த உதாரணம். பல்வேறு பரிமாணங்களில், உலக சிக்கல்களை ஏற்படுத்தி, நாடுகளை பலவீனப்படுத்த இந்த சக்திகளுக்கு முடியும். இதனால், இந்த அச்சுறுத்தலை தடுக்க வலுவான வழிமுறைகள் அவசியம்.
உலக பாதுகாப்புக்கு ஏதுவான மரபுசார்ந்த மற்றும் மரபுசாரா அச்சுறுத்தல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்
கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
உடற்கூறுப் பரிசோதனைக்காக நேற்று இரவு சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் சற்றுமுன் உடற்கூறுப் பரிசோதனை நிறைவடைந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், கயிறு ஒன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டதாலேயே பெண் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அந்த பெண் கணவனை பிரிந்து வாழந்து வந்த நிலையில் தற்போது உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையிலிருந்து அவர் ஐந்து மாத கர்ப்பிணி எனவும் தெரியவந்துள்ளது.
எனினும் அவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை என உடற்கூறுப் பரிசோதனை அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளதுடன், இடதுபுற கண்ணிற்கு மேற் பகுதியில் குத்தப்பட்ட உட்காயம் ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கூறுப் பரிசோதனை முடிவடைந்த நிலையில் இறுதிக் கிரிகைகளுக்காக பெண்ணின் சடலம் தந்தையாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள விசேட பெரும் குற்றப் பிரிவு குழுவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் குறித்த பெண் பயன்படுத்திய கைத்தொலைபேசியின் தரவுகள், பொலிஸாரால் சந்தேகநபர்களாக கணிக்கப்பட்டுள்ளவர்களின் கைத்தொலைபேசியின் தரவுகள், பொலிஸாருக்கு தேவையான இடங்களில் உள்ள கண்காணிப்பு கமரா காட்சிகளின் பிரதியினைப் பெறுவதற்கான கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று அனுமதி கோரப்பட்டுள்ளது.
வவுனியா குழுமாட்டுச்சந்தி கணேசபுரத்தில் அமைந்துள்ள காப்பகம் ஒன்றில் வசித்து வந்த இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த காப்பகத்தில் வசித்து வந்த 18 வயதுடைய பெண் கடந்த 28.08.2018 அன்று இரவு 9 மணியளவில் தனது கழுத்தினை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு இரவு 9.30 மணியளவில் வவுனியா வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைகளின் பின்னர் தற்போது வைத்தியசாலையின் விடுதி 2 இல் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
தற்கொலைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மடுக்கந்த குளத்தில் அபிவிருத்தி பணிகள் மேற்கொண்டபோது இன்று(30.08) பிற்பகல் வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா மடுக்கந்த குளத்தில் அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று தமது வழமையான பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று அப்பகுதியில் காணப்பட்டுள்ளது. இதையடுத்து மடுக்கந்த பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் குள அபிவிருத்திப்பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்துப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் நீதிமன்ற அனுமதியைப்பெற்று கைக்குண்டை செயலிழப்பதற்கு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – அராலி மேற்குப் பகுதியில் ஒரு வயதுக் குழந்தை கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை காணாமல் தேடுதலில் ஈடுபட்ட போது, குழந்தை கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
அயலவர்கள் குழந்தையை மீட்டு முதலுதவி அளித்து, வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வநாதன் டிலக்சன் என்ற ஒரு வயதுடைய ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மினுவாங்கொட பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது 22 வயதான காதலுனுக்கு தான் பெற்ற 10 வயதான மகளை இரையாக்கிய சம்பவமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 வயதான சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதற்கு உதவியதாக 38 வயதான தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 38 வயதான பெண்ணும், 22 வயதான அவரது காதலனும் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொட பதில் நீதவான் சரல கருணாரட்ன உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண் முதல் திருமணத்தின் மூலம் மூன்று பிள்ளைகளையும் இரண்டாம் திருமணத்தின் மூலம் இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்துள்ளார்.
இந்த நிலையில், இரண்டாம் கணவரின் உதவியாளரான 22 வயதான இளைஞருடன் இந்த பெண் தொடர்பு பேணி வந்ததாகவும், அந்த நபருக்கு தனது மகளை இரையாக்கியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது
ஆள்களைப் பதிவு செய்து அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை ஆள்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் திணைக்களம் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது.
அத்துடன், புதிய கட்டண திருத்ததின் அடிப்படையில், 15 வயதைப் பூர்த்தியடைந்து முதற் தடவையாக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்திற்கு 100 ரூபா அறவிடப்படும்.
தேசிய அடையாள அட்டையொன்றில் திருத்தம் மேற்கொண்டு அதன் பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கு 250 ரூபா அறவிடப்படுவதுடன், காணாமல்போன தேசிய அடையாள அட்டையொன்றின் பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கு 500 ரூபா அறவிடப்படும்.
குறிப்பிட்ட கட்டண திருத்தங்களை எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து பிரதேச செயலகங்களின் ஊடாகவோ அல்லது கிராம சேவகர் ஊடாகவோ செலுத்த முடியும்.
மேலும், இவ்வாறு பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளப்பட்ட பற்றுச்சீட்டினை விண்ணப்பத்தில் இணைத்து ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.