பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் : பூங்காவில் சிக்கினார்!!

பேஸ்புக் ஊடாக பல இளம் பெண்களை ஏமாற்றிதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த பல் வைத்தியர் ஒருவரே, பேராதனை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் திருகோணமலை, தங்காலை உட்பட பல பிரதேசங்களிலுள்ள இளம் பெண்களுடன் பேஸ்புக் ஊடாக காதல் தொடர்பு வைத்துள்ளார்.

காதல் தொடர்பு வைத்துள்ள பெண்களுடன் பண பரிமாற்றம் மற்றும் பரிசு பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த வைத்தியர் ஒரு பெண்ணை பேராதனை பூங்காவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், குறித்த சந்தர்ப்பத்தில் வேறு இரண்டு பெண்களும் பூங்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த வைத்தியரும் வந்துள்ளார்.

இந்த வைத்தியரிடம் உணவு பெற்றீர்களா என ஒரு பெண் கேட்ட போது, அவர் மற்ற பெண்ணுடன் உணவு பெற்றுக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த வைத்தியர் நேற்று காலை ஒரு பெண்ணுடன் நேரம் செலவிட்ட போதும் மேலும் இரண்டு பெண்கள் வந்தமையினால் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

கோபமடைந்த பெண்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு!!

வவுனியா, பசார் வீதியிலுள்ள விடுதியொன்றிலிருந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். வேலணை பகுதியினை சேர்ந்த வேலன் கந்தசாமி (71 வயது) என்ற வயோதிபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விடுதி ஊழியரொருவரே குறித்த நபரின் சடலத்தை அவதானித்து வவுனியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் அறிவித்த அதிரடி சலுகை : வாகன விற்பனையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

இலங்கையில் சிறிய ரக மோட்டார் வாகன விற்பனை பூஜ்ஜியம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறிய ரக மோட்டார் வாகனத்திற்காக விதிக்கப்பட்ட புதிய வரி மாத்திரமின்றி ஏனைய வரியையும் நீக்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

சிறிய ரக மோட்டார் வாகனம் இலங்கைக்கு பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றமை போக்குவரத்து நெரிசலுக்கு பிரதான காரணம் என கூறி மோட்டார் வாகனத்தின் வரி அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த கருத்தே விற்பனை தடைப்படுவதற்கு காரணமாகியுள்ளதாக மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது

25 வருடங்களாக ஐரோப்பாவில் வாழும் இலங்கையர் : நடுவீதியில் அடித்துக் கொல்லப்பட்ட மர்மம்!!

இத்தாலியில் தொழிலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வென்னப்புவ பகுதியை சேர்ந்த 52 வயதான மெரில் சாந்தி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி இரத்த காயத்துடன் நாபொலி நகர வீதியில் விழுந்த கிடந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 25 வருடங்களாக இத்தாலியில் தொழில் செய்து வந்துள்ளார். இத்தாலியில் அவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்.

விபத்து காரணமாக அவர் உயிரிழந்தாரா அல்லது யாரும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் இத்தாலிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாபொலி நகரத்தில் பல்வேறு நாசகார கும்பல்கள் இயங்குவதாகவும், இத்தாலியில் வாழும் வெளிநாட்டவர்கள் இந்த கும்பலின் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன்.

குறித்த இலங்கையரும் அந்தக் குடும்பலின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பாடசாலையில் காணாமல் போன மாணவி மலைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு!!

பிரித்தானியாவில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவி 2 நாட்களுக்கு பின் மலைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் Stornoway அருகே Gravir என்ற கிராமத்தை சேர்ந்தவர் Hannah Mackenzie (17). அப்பகுதியில் செயல்பட்டு வரும் Nicolson பள்ளி நிறுவனத்தில் படித்து வரும் Hannah, விடுமுறை முடிந்து கடந்த வியாழக்கிமையன்று முதல்நாளாக பள்ளிக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு திடீரென காணாமல் போன Hannah, நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய அம்மா பொலிஸாரிடம் புகார் அளித்தனர்.

இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிஸார், ஒருவேளை Hannah அவருடைய அம்மா வேலை செய்து வரும் மருத்துவமனைக்கு எதுவும் சென்றிருப்பாரோ என்ற கோணத்தில் விசாரித்தனர்.

மேலும் பள்ளி அமைந்திருக்கும் இடத்தை சுற்றிலும், சந்தேகத்திற்கு இடம் கொடுக்கக்கூடிய இடங்களிலும் ஹெலிகாப்டர் மற்றும் படகுகளின் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பள்ளி அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மலைப்பகுதி ஒன்றில் Hannah இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலை கண்டறிந்த பொலிஸார், பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் Hannah-வின் நண்பர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், பள்ளியில் அவருக்கு எந்தவிதமான சம்பவங்களும் நிகழவில்லை எனவும், சமீபத்தில் அவளுடைய காதலனுடன் நட்பை முறித்துக்கொண்டதும் தெரியவந்துள்ளது.

இதனால் தற்போது Hannah-வின் காதலனிடமும் பொலிஸார் விசாரணையை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

கேரளாவில் ஒரு தாயின் பாசப்போராட்டம்!!

கடவுளின் தேசமான கேரளா இன்று தண்ணீரிலும், கண்ணீரிலும் மிதந்துகொண்டிருக்கிறது. தற்போதுவரை 374 பேர் இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது கேரள அரசு. ஆனால், களப்பணியில் இருப்பவர்கள் கூறுகையில் 500 க்கும் அதிகமானோர் இறந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றனர்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத மழையும் வெள்ளமும் கேரளத்தைப் புரட்டிப்போட்டிருக்கிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வயநாடு மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சனி என்பவர் வசித்து வந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு, வெள்ளம் வீட்டுக்குள் வந்துள்ளது. இந்த சம்பவம் நடக்கும்போது காலை 5 மணி. இவரும் இவரது கணவரும், இரண்டு குழந்தைகளையும் தூக்கிகொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர்.

10 வயது மகள் மற்றும் 4 வயது மகன் ஆகிய இருவரையும் ரஞ்சனியும் அவரது கணவனும் தோளில் தூக்கிகொண்டனர். 4 வயது மகனை தனது நெஞ்சில் அணைத்துக்கொண்டார் ரஞ்சனி. இவர்கள் நடந்துசெல்கையில், தண்ணீர் அளவு அதிகரித்த காரணத்தால் குழந்தைகள் அச்சத்தில் அழுதுள்ளனர். இதற்கிடையில், மகனுக்கு காய்ச்சல் வந்துள்ளது.

ஆனால், மருத்துவமனை இவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. வாகன வசதிகள் ஏதுமில்லாத காரணத்தால், சுமார் 10 கிலோ மீட்டர் நடந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். தற்போது, குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு நலமாக உள்ளது.

கேரள மக்களுக்காக 8 வயது தமிழக சிறுமி செய்த நெகிழ்ச்சி செயல் : ஹீரோ நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

சைக்கிள் வாங்குவதற்காக தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு சிறுமி ஒருவர் அப்படியே கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கே.கே.ரோடு சிவராம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சிவசண்முகநாதன்-லலிதா. இவர்களுக்கு அனுப்பிரியா(8) என்ற மகள் உள்ளார்.

அங்கிருக்கு தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வரும் இவர், சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
இதற்காக அவர் பெற்றோரிடம் தினமும் வாங்கும் காசுகளை உண்டியலில் சேமித்து வைத்துள்ளார். இப்படி கடந்த 4 ஆண்டுகளாக சேமித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கேரள மக்கள் வெள்ளத்தால், கடுமையான சிரமங்களை சந்தித்து வருவதை அறிந்த சிறுமி, தான் இத்தனை ஆண்டுகள் சேமித்து வைத்திருந்த, பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுக்குமாறு தனது தந்தையிடம் கொடுத்துள்ளார்.

சிறுமியின் தந்தையும், உண்டியலில் இருந்த பணம் 8 ஆயிரத்து 246 ரூபாயை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலை எடுத்து அனுப்பியுள்ளார்.

சிறுமியின் செயல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியதால், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதுமட்டுமின்றி ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதை ஹீரோ சைக்கிள் நிறுவனம் சிறுமியின் நல்ல உள்ளத்தை அவருக்கு புது சைக்கிள் ஒன்றில் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான, பன்கஜ் முன்ஜல் தனது டுவிட்டர் பக்கத்தில், அன்புள்ள அனுப்ரியா, தக்க நேரத்தில் மனிதநேய ஆதரவுக் கரம் நீட்டிய உங்களது செயலை பாராட்டுகிறோம். எங்களது பிராண்ட்டின் புதிய சைக்கிள் உங்களுக்கு கிடைக்கும். தயது செய்து உங்களது முகவரியை எங்களது இ-மெயில்க்கு (customer@herocycles.com) அனுப்பி வையுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படியும் ஒரு சிறுமியா : அறுவை சிகிச்சை பணத்தின் ஒரு பகுதியை கொடுத்த மனதை உருக வைக்கும் செயல்!!

கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் பலியாகியுள்ளனர்.

வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் கேரளாவுக்கு பணம், உணவுபொருள்கள், உடைகள் என்று இந்தியாவே வாரிவழங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தனது இதய ஆபரேஷனுக்காக சமூக வலைதளங்கள் மூலம் திரட்டிய பணத்தில் 5000-ரூபாயை கேரள வெள்ள நிவாரணத்திற்கு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி அட்சயா என்பர் கொடுத்துள்ளார்.

தமிழகத்தின் கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கும் குமரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சுப்பிரமணியன் – ஜோதிமணி.

இவர்களுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் அட்சயா என்ற மகள் உள்ளார். தயத்தில் பிரச்னையோடு இருந்த அட்சயாவுக்கு, அறுவை சிகிச்சை செய்ய வழியில்லாமல் அவரது பெற்றோர் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்.

கடந்த வருடம் இவரது நிலைமை மோசமானதால், உடனே அறுவை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது கரூரைச் சேர்ந்த இணைந்த கைகள் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி உதவியிருக்கிறார்.

அவர் சமூக வலைத்தளங்கள் மூலம் நிதி திரட்டி அட்சயாவுக்கு மூன்றரை லட்சம் செலவு செய்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வைத்திருக்கிறார்.

மீண்டும் ஒரு வருடத்திற்குள் இன்னொரு அறுவை சிகிச்சை செய்யனும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கு இரண்டரை லட்சம் வரை ஆகும் என்று கூறப்பட்டதால், மீண்டும் சாதிக் அலி நிதி திரட்டத் தொடங்கி இருக்கிறார்.

இதுவரை 20,000 வரை கிடைத்திருக்கிறது. கேரள வெள்ளப்பாதிப்பையும்,அங்கு மக்கள் பரிதவிப்பதையும் பார்த்து மனம் உறுகிய அட்சயா, தனக்கு சிகிச்சை செய்வதற்காகக் கிடைத்த நன்கொடைப் பணமான 20,000 ரூபாயில் இருந்து 5000-த்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்கி நெகிழச் செய்திருக்கிறார்.

மக்கள் பாதை என்ற அமைப்பு மூலம் இந்தத் தொகை கேரளாவிற்கு அனுப்பப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் ஒரு வாரமாக சாப்பிடாமல் தவித்த குழந்தை : பறந்து வந்த வீரர் : கண்கலங்க வைக்கும் வீடியோ!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆழப்புலாவிலும் பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எல்லா வீடுகளுக்குள்ளும் தண்ணீர் சென்றுள்ளது. முக்கியமாக கடலுக்கு அருகில் உள்ள பகுதி என்பதால் அதிக அளவில் இங்கு வெள்ள பாதிப்பது ஏற்பட்டுள்ளது.

ஆழப்புலாவில் வெள்ளத்தில் சிக்கி இருந்த இரண்டு வயது குழந்தையை விமான படை ராணுவ வீரர் மீட்கும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

கடந்த ஒருவாரமாக 2 வயது குழந்தையும் அவரின் தாயும் சாப்பிடாமல் இருந்துள்ளனர். வீட்டிற்குள் வெள்ளம் வந்த காரணத்தால் வீட்டு மொட்டை மாடியிலேயே இரண்டு நாட்களாக தூங்கி இருக்கிறார்கள்.

அந்த வீட்டின் மொட்டை மாடியில் இறங்கிய வீரர்கள் முதலில் அந்த வீட்டில் இருந்த குழந்தையின் அம்மாவை காப்பாற்றினார்கள். அதன்பின் அந்த குழந்தையை காப்பாற்றினார்கள் அந்த குழந்தை காப்பாற்றப்பட்ட வீடியோ மட்டும் வெளியாகி உள்ளது.

குழந்தையை கயிற்றில் இறங்கி அந்த வீரர் காப்பாற்றி இருக்கிறார். குழந்தையை வாங்கியவுடன் குழந்தையின் தாய் சந்தோசத்தில், அந்த வீரருக்கு நன்றி சொல்லியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

கருணாநிதி நினைவிடத்துக்கு முதல் முறையாக வந்த விஜயகாந்த் : கண்ணீருடன் செய்த செயல்!!

அமெரிக்காவில் இருந்து இந்திய திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த 7-ஆம் திகதி காலமானார். அவரின் உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதி இறந்தபோது நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையில் இருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை நாடு திரும்பிய விஜயகாந்த் சென்னை விமான நிலையத்திலிருந்து நேராக கருணாநிதியின் சமாதிக்கு சென்றார்.

அங்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதோடு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக கருணாநிதி மறைவின்போது விஜயகாந்த் அழுதபடி அஞ்சலி செலுத்திய வீடியோ வெளியாகி பலரையும் கண்கலங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

கேரளா மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம்!!

கேரளா மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகள் வழங்கி வரும் நிலையில், கிழிந்த உடையை யாரோ அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கேரளாவில் கனமழை பெய்ததால் மாநிலமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இதன் காரணமாக 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் மக்கள் தங்கள் வீடு, உடைமைகள் இழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை அனுப்பி வருகிறார்கள்.

பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கும் இடத்துக்கு யாரோ கிழிந்த உடையை உதவியாக அனுப்பியுள்ளனர்.

இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவி வரும் நிலையில், உதவி செய்யாமல் இருந்தால் கூட பரவாயில்லை இது போன்ற இரக்கமற்ற செயலை செய்யவேண்டாம் என பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

மாமனார் செய்த இரக்கமற்ற செயல் : தற்கொலை செய்து கொண்ட மருமகள்!!

இந்தியாவில் கணவர் வீட்டை விட்டு துரத்தப்பட்ட மனைவி, தனது மாமனாரிடம் கெஞ்சியும் அவர் வீட்டுக்கு அழைக்க மறுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஒடிசாவை சேர்ந்தவர் அஞ்சன்குமார் (37). இவர் மனைவி அர்ச்சனா (31). தம்பதிகள் இருவருமே மருத்துவர்கள் ஆவார்கள். இந்நிலையில் அர்ச்சனாவை அஞ்சன்குமாரும் அவர் பெற்றோரும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் வீட்டை விட்டு அர்ச்சனா துரத்தப்பட்டுள்ளார். பின்னர் தனது தந்தை ரகுநாத் மற்றும் தாய் குசும் மிஸ்ராவுடன் சென்று தங்கிருந்தார் அர்ச்சனா.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அதிகாலை ரயில் முன்னால் பாய்ந்து அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து அர்ச்சனாவின் மரணத்துக்கு அவரின் கணவர், மாமனார், மாமியார் தான் காரணம் என ரகுநாத் பொலிசில் புகார் அளித்துள்ளார். அவர் கூறுகையில், என் பெண்ணுக்கு கடந்த நவம்பரில் மூளை பக்கவாதம் ஏற்பட்டது.

அப்போது அவருக்கு சரியான சிகிச்சையளிக்காத அஞ்சனும் அவர் பெற்றோரும் உணவு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து வேறு பெண்ணை மணக்க நினைத்த அஞ்சன் அர்ச்சனாவை வீட்டை விட்டு துரத்தினார். கடந்த சில மாதங்களாக விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட அஞ்சனும் அவர் பெற்றோரும் அர்ச்சனாவை வற்புறுத்தியும் அவர் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா தனது மாமனாருக்கு போன் செய்து தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லும்படி கெஞ்சியுள்ளார். ஆனால் இரக்கமின்றி அதற்கு மாமனார் மறுத்ததோடு திட்டியுள்ளார்.

இதில் மனமுடைந்த அர்ச்சனா அதிகாலை 3 மணிக்கு நாங்கள் தூங்கி கொண்டிருந்த வேளையில் வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறியுள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை தொடங்கவுள்ளனர்.

கர்ப்பிணி மனைவியை ஆசையாக பார்க்க வந்த கணவனுக்கு நேர்ந்த சோகம்!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியைப் பார்ப்பதற்காக மருத்துவர் வேடமிட்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காசியாபாத்தை சேர்ந்த அஷிஷ் திரிபாதி என்பவர் தனது கர்ப்பிணி மனைவியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். ஆனால் அவரைப் பார்க்க மருத்துவமனையில் சில கட்டுப்பாடுகள் விதித்தனர்.

இதனால் தனது மனைவியைப் பார்ப்பதற்காக மருத்துவர்கள் போல வெள்ளை நிற கோட் அணிந்துகொண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் உலா வந்துள்ளார்.

ஆனால் திரிபாதி நடவடிக்கையைச் சந்தேகப்பட்ட பொலிசார் அவரிடம் விசாரித்த போது அவர் மருத்துவர் இல்லை என தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்டில் கடுமையாக மோதி கொண்ட புலிகள் : ஒரு புலி மரணம்!!

சிங்கராஜ வனத்திற்கு சொந்தமான கலவான காட்டில் இரண்டு புலிகள் கடுமையாக மோதிக் கொண்டுள்ளன.

இதன் காரணமாக ஒரு புலி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 15 வயதான ஆண் புலி ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மோதலில் உயிரிழந்த புலியின் உடலை வன விலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

புலியின் சடலம் நீதிமன்ற நடவடிக்கைக்காக இரத்தினபுரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

26 வருடங்களின் பின் ஐரோப்பாவிலிருந்து வந்த உறவு : தாய், மகளுக்கு இடையில் ஏற்பட்ட நெகிழ்ச்சி!!

ஐக்கிய ராஜ்ஜியத்தில் வாழும் இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவர் 23 வருடங்களின் பின்னர், அவரின் சொந்த தாயை கண்டுபிடித்துள்ளார்.

26 வயதான ரியா ஸ்லோன் என்பவர் மூன்று வார குழந்தையாக இருந்த போது ஸ்கொட்லாந்து நாட்டு தம்பதியரினால் தத்தெடுக்கப்பட்டார்.

எனினும் 26 வருடங்களின் பின்னர் அவர் தனது சொந்த தாயை தேடி கண்டுபிடித்துள்ளார்.

ஐரோப்பாவில் வாழும் இரு பிள்ளைகள் தங்கள் தாயை கண்டுபிடிக்க இலங்கை வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கமைய அந்த இருவரில் ஒருவரான ரியா தனது தாயை கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரியா தனது குழந்தை பருவத்தினை மகிழ்ச்சியாக அனுபவித்துள்ளார். இந்நிலையில் தனது பூர்வீக குடும்பம் தொடர்பான தகவல் அறிந்து அவர்களை கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளார்.

சிறு வயதில் தனது குடும்பம் தொடர்பான தேடுதல் குறித்து ஒரு போதும் தான் சிந்தித்ததில்லை என ரியா குறிப்பிட்டுள்ளார்.

“இந்த இரு நாடுகளுக்கும் இடையில் சிக்கி இருப்பதை நான் சமீபத்தில் தான் உணர்ந்தேன், இரண்டு வேறுபட்ட அடையாளங்களைப் போல எனக்கு தோன்றியது.” என ரியா குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தன்னை பெற்ற தாயை கண்டுபிடிக்க வேண்டும் என விருப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தனது தாய் உயிரோடு உள்ளாரா? என்னை பற்றிய நினைவுகள் உள்ளதா? என்பதனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையே எனக்கு அதிகமாக இருந்தது.

அதற்கமைய ரியா தனது தாய் சுமித்ராவை கண்டுபிடித்தார். தனது தாய்க்கு ஏற்பட்ட வறுமை மற்றும் தனது காதலனை விட்டு பிரிந்து விட வேண்டிய நிலை ஏற்படும் என்பதன் காரணமாக தன்னை தத்துக் கொடுத்துள்ளார்.

தனது பிள்ளைக்கு உணவு வழங்குவதற்கு கூட வசதி இல்லாத நிலையில் அவரது தாய் காணப்பட்டுள்ளார். இதனால் அவர் குழந்தையை தத்துக் கொடுப்பதற்கு பலவந்தப்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கையின் லுலேமுல்ல, தொடங்கொட பிரதேசத்தில் வைத்தே அவர் தனது தாயை கண்டுபிடித்துள்ளார். தாயை மாத்திரம் அல்ல குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் ரியா சந்தித்தார். தன்னையும் இன்னமும் குடும்பத்தினர் நினைவில் வைத்துள்ளனர். தனக்கு இது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

எப்படியிருப்பினும் தான் வளர்ந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்பதனை உணர்ந்து மீண்டும் ஸ்கொட்லாந்துக்கு சென்றுள்ளார்.

எனினும் தற்போது தான் இரு நாடுகளுக்கு இடையில் சிக்கியிருப்பதனை போன்ற உணர்வில் இருந்து வெளியே வந்துள்ளதாக ரியா குறிப்பிட்டுள்ளார்.

இதற்காகத்தான் அவளை கொலை செய்து சடலத்தை அலமாரிக்குள் அடைத்தேன் : காதலன் வாக்குமூலம்!!

டெல்லியில் காதலியை கொலை செய்து அலமாரிக்குள் அடைத்து வைத்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி கோகல்பூரி பகுதியில் வசித்து வந்த ராம்(35) என்ற நபர் தனது வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக பொலிசில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரை அடுத்து வீட்டிற்கு வந்து சோதனையிட்ட பொலிசார், அவரின் வீட்டில் இருந்த அலமாரியில் இருந்து 25 மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து புகார் தெரிவித்த அந்நபர் மீது பொலிசில் சந்தேகப்பார்வை திரும்பியுள்ளது. அந்நபரை கைது செய்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நானும் அவளும் மேற்கத்திய கலாசார பாணியில் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். இதற்கிடையில் எனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கிகொண்டு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினாள்.

இதற்காக, நான் மறுத்துவிட்டேன். இருப்பினும் என்னை தொடர்ந்து வற்புறுத்தினாள். இவள் இருந்தால் எனது திருமண வாழ்க்கைக்கு ஆபத்து எனக்கருதி அவளை கொலை செய்து சடலத்தை எங்கு போடுவது என தெரியாமல் எனது வீட்டில் இருந்த அலமாரிக்குள் வைத்துவிட்டேன்.

பிறகு எதுவும் நடக்காதது போல இருந்தேன். இருப்பினும் துர்நாற்றம் அடித்து நாம் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் பொலிசில் புகார் அளித்தேன் என கூறியுள்ளார்.