சென்னையில் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பொலிசாரிடம் சிக்கிய நிலையில் அழைத்து வந்த காதலன் திருடன் என தெரியவந்ததால் காதலி அதிர்ச்சியடைந்தார்.
மெரினாவில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
அதில் மூவரும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் இருவர் காதலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனான ஹரிஹரன், தனது காதலியை வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வர வலியுறுத்தியுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் ஹரிஹரனிடம் நடத்திய விசாரணையில் அவர் செல்போன் திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது. இது அவரின் காதலியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து பெண்ணின் பெற்றோரை காவல்நிலையத்திற்கு வரவழைத்த பொலிசார் அவரை அனுப்பி வைத்த நிலையில் ஹரிஹரனிடம் விசாரித்து வருகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரைநகர் பிரதேசத்தை சேர்ந்த 56 வயதான நடராஜா தேவராஜா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு குழுவொன்றினால் பலவகையான தாக்குதல்களை மேற்கொண்டு அவரைக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மூன்று பேர் அடங்கிய குழுவொன்று லொரி ஒன்றில் வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த மூவரையும் கைது செய்வதற்காக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கொலைச் சம்பவத்துடன் யாழில் செயற்படும் ஆவா குழுவுக்கு தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
திருவனந்தபுரம் – கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 324 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
223,139 பேர் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார். மேலும், 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பை கேரளா சந்தித்திருப்பதாகவும் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
தொடர் கனமழையால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பகுதிகளில் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது
இந்நிலையில் அங்கு மீண்டும் மழை பெய்து வருவதால் 13 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மணமகன் மற்றும் மணமகள் மோட்டார் வாகனத்தில் வீட்டிற்கு அருகில் சென்ற சந்தர்ப்பத்தில் மணமகனின் நண்பர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அந்த கோரிக்கைக்கமைய மணமகனையும் மணமகளையும் மாட்டு வண்டியில் வைத்து தள்ளி செல்ல அனுமதிக்குமாறு நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கமைய மணமகன் அவ்வாறு செய்துள்ளார். இந்த காட்சியை வீதியில் சென்ற குழுவினர் காணொளியாக பதிவிட்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த மணமகன் காணொளி எடுத்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் வாகனம் ஒன்றில் இருந்து காணொளி எடுத்த, தந்தை, தாய் மற்றும் மகனை, மணமகன் தாக்கியுள்ளமையினால் காயமடைந்துள்ளனர். காயமடைந்த தந்தை மற்றும் மகன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களுடன் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வவுனியா – கோவில்குளம் பகுதியில் நுண்நிதி நிறுவனத்தில் பெற்றுக் கொண்ட கடன் பணத்தை திருப்பி செலுத்துவதற்கு வீதியில் தயிர் கடை ஒன்றினை வைத்து நடத்தி வருவதாக பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
நுண்கடனை செலுத்துவதற்கு தாமதம் ஏற்பட்ட போது நுண்நிதி நிறுவனப் பணியாளர்கள் கடும் வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து வருவதாகவும், தனது மகளுக்கு பால்மா வாங்குவதற்கு வாரம் ஒன்றிற்கு 650 ரூபா வீதம் ஒரு மாதத்திற்கு பெரும் தொகைப்பணம் தேவையாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இவ் விடயம் தொடர்பாக மேலும் குறித்த பெண் கருத்து தெரிவிக்கையில், தயிர்க்கடையை நடத்தி நுண் நிதிக்கடனைச் செலுத்துவதா? அல்லது எனது மகளுக்கு பால்மா வாங்குவதா? என்ற கேள்வி எழுப்பியதுடன், நுண்நிதிக்கடன் சுமையிலிருந்து தனது குடும்பத்தை மீட்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
எனக்கு சுகயீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது எனது கணவரிடம் வந்து பெற்று கொண்ட பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி வந்துள்ளார்கள்.
நான் வைத்தியசாலையில் அனுமதித்திருந்த போது எனக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு பெரும் தொகை பணம் தேவைப்பட்டுள்ளது. பல நெருக்கடி நிலையை சந்தித்து எனது கணவர் என்னை பார்த்து வந்தார்.
இன்று வரையில் நாங்கள் வாடகை வீட்டிலேயே இருந்து வருகின்றோம், எனக்கு சொந்தமாக காணி வேண்டி பல இடங்களுக்கு அலைந்து திரிந்தும் கிடைக்கவில்லை.
எனக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதால் இப்பவும் அதனை அனுபவித்து வருகின்றேன். எனது உடலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குழாய் பொருத்தப்பட்டுள்ளதால் நீண்ட நேரம் பேசவோ வேலை செய்யவோ முடியாதுள்ளது எனவும் தெரிவித்தார்.
அத்துடன் எனது பிள்ளைக்கு தாய்ப்பால் வழங்க முடியவில்லை, இதனால் மாதம் ஒன்றிற்கு நான்கு பால்மா பைக்கற்களை வாங்க வேண்டியுள்ளது. ஒரு பால்மா பைக்கற் 650 ரூபா. மாதம் ஒன்றிற்கு பெரும் தொகைப்பணம் தேவைப்படுகின்றது.
எனது வருமானமோ எனது கணவரின் வருமானமோ போதாமையுள்ளது, இன்னும் ஒரு பிள்ளைக்கும் சாப்பாடு வழங்க வேண்டும்.
வீட்டுச் செலவுகளையும் பார்த்துக் கொண்டு நுண்நிதி நிறுவனத்தின் கடன் பணத்தையும் செலுத்துவதற்கு பெரும் சிரமமாகவே உள்ளது. இதனாலேயே வீதியில் தயிர்க்கடை வைத்து நடத்தி வருகின்றேன்.
எனது பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. என்னால் பெற்றுக் கொள்ளப்பட்ட நுண்கடனை எனது வைத்திய செலவுக்கே வழங்கியுள்ளேன்.
வைத்தியசாலை செலவுகளுக்கு நுண்கடனை பெற்றுக் கொண்டதால் என்னால் அதனைச் திருப்பி செலுத்த முடியவில்லை.
எனது கணவரின் வருமானமும் தொழிலும் போதாமையுள்ளதுடன் சரியாக அமைய வில்லை எனவும் குறிப்பிட்டார்.
கடன் பணம் செலுத்த வில்லை என்றதும் நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் வாடி, போடி என்று தகாத வார்த்தைகளை வயது வேறுபாடுகளின்றி பிரயோகித்து வருகின்றார்கள்.
பணத்தை கொண்டு போய் உண்டியலில் போடு என்றும் நுண்நிதி நிறுவன பணியாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையிலும் பணத்தை கட்டுவதாகவும் கால அவகாசத்தையுமே கோரி வருகின்றோம்.
மேலும் மரியாதை குறைவாகவும் மனம் நோகும் படியாகவும் வயது வேறுபாடின்றி தரக்குறைவான வார்த்தையை பேசியதால் கடன் பணத்தைச் செலுத்த மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளேன்.
ஆனால் தற்போதும் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி தொந்தரவுகளை ஏற்படுத்தி வருகின்றார்கள், இதனால் நிம்மதியற்ற நிலையில் இருக்கின்றோம்.
இதற்கு மேலதிகாரிகள் ஒரு நடவடிக்கையினை மேற்கொள்ள முன் வருமாறும் இக் கடன் சுமையில் இருந்து எமக்கு நிம்மதியை பெற்றுத் தருமாறும் குறித்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பேசியதாக தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தரமணி பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மே மாதம் 18ஆம் திகதி சென்னை, கொட்டிவாக்கம் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் “தான் பிரபாகரனை நேரில் சந்தித்ததாகவும், தனக்கு துப்பாக்கிச் சுட அவர் பயிற்சியளித்ததாகவும்” சீமான் பல தகவல்களை மேடையில் பேசியுள்ளார்.
இது தொடர்பில் நேற்று சீமான் மீது தரமணி பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது, சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வண்ணம் பேசுவது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பேசுவது, தவறான வதந்திகளை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புவது. ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் திருமணமான இரண்டு வாரத்தில் புதுமண தம்பதி கார் விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் சித்ராஜ் (25). இவருக்கும் அனிதா (21) என்ற பெண்ணுக்கும் இரு வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை புதுமண தம்பதி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் இருந்த டிராக்டர் வாகனத்தில், கார் படு பயங்கரமாக மோதியதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்தனர்.
அருகிலிருந்தவர்கள் சித்ராஜையும், அனிதாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்தது விட்டது தெரியவந்தது.
சித்ராஜின் தந்தை புஷ்கர் ராணா கூறுகையில், பிரித்தானியாவிலிருந்து 9 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் தான் சித்ராஜ் ஊருக்கு வந்தார்.
சில நாட்களில் மனைவியுடன் சித்ராஜ் தேனிலவுக்கு செல்ல நினைத்திருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துவிட்டது.
காலையில் கிளம்பும் போது விரைவில் வீடு திரும்புவோம் என சித்ராஜும், அனிதாவும் கூறினார்கள். ஆனால் அவர்களை கடைசியாக பார்த்த நிமிடம் அது தான் என அப்போது எனக்கு தெரியாது என சோகத்துடன் கூறியுள்ளார்.
பெருவெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர் ஞாயிறன்று நடக்கவிருந்த தமது திருமணத்தை நிறுத்திவிட்டு வீட்டை நிவாரண முகாமாக மாற்றியுள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலம் நூற்றாண்டு காணாத பெரு மழையால் தத்தளிக்கிறது. 13 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓணப்பண்டிகை கொண்டாட வேண்டிய கேரள மக்கள் கண்ணீருடனும், கதறலுடனும் முகாம்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
நாள் குறித்து கனவுகளுடன் காத்திருந்த வாழ்க்கையின் பல முக்கிய நிகழ்வுகளையும் கேரள மக்கள் வேறு திகதிகளுக்கு மாற்றியுள்ளனர். பலரும் திகதி தெரிவிக்காமல் ரத்து செய்துள்ளனர்.
ஆனால் கோட்டயம் மாவட்டத்தில் குடியிருக்கும் ஜயதீப் என்ற இளைஞர் ஒருபடி மேலே சென்றுள்ளார்.
தமது திருமணத்தை வேறு திகதிக்கு மாற்றியது மட்டுமின்றி, திருமணத்திற்காக தயார் நிலையில் இருந்த வீட்டை நிவாரண முகாமாகவும் மாற்றியுள்ளார்.
19-ஆம் திகதி ஞாயிறன்று ஜயதீபின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுற்றுவட்டாரம் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் பெருவெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் திருமணத்தை வேறு திகதிக்கு மாற்றியுள்ளார்.
மட்டுமின்றி திருமணத்திற்காக வாங்கப்பட்ட உணவுப் பொருட்களை நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தவர்களுக்காக சமைத்து அதை விநியோகம் செய்யவும் நண்பர்களுடன் புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் வேலூரில் காதலித்து கைவிட்ட பின் குழந்தையைப் பார்த்ததும் மனம் மாறிய இளைஞர் தனது காதலியை மருத்துவமனையிலேயே மணந்து கொண்டார்.
அரி என்ற இளைஞரும், ராஜலட்சுமி என்ற பெண்ணும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர். இதனிடையே ராஜலட்சுமி கர்ப்பமானதாலும், மாற்றுசமுதாயத்தை சேர்ந்தவர் என்று கூறியும் அரியின் திருமணத்திற்கு அவரது உறவினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. இதனை அறிந்த அரி குழந்தையை காண மருத்துவமனைக்குச் சென்றார்.
குழந்தையை கண்டு மனம் மாறிய அவர் ராஜலட்சுமியை உடனடியாக திருமணம் செய்து கொள்வதாக கூறி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். தம்பதியை அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்தினார்கள்.
கேரளாவில் மாலை நேரத்தில் மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவி, தனக்கு கிடைத்த உதவித் தொகையை நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எர்ணாகுளத்தின் தொடுபுழாவை சேர்ந்தவர் ஹனன்(வயது 20), தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை படித்து வரும் ஹனன் மாலை நேரத்தில் மீன் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.
இவர் பற்றி சமூக வலைத்தளங்களில் தகவல் பரவவே, பலரும் விமர்சித்து எழுதத் தொடங்கினர், மாணவிக்கு ஆதரவாக பல்வேறு குரல்கள் எழுந்தன.
குடும்பத்தின் வறுமையான சூழ்நிலையால், தாய் மற்றும் சகோதரனுக்காகவே மீன் விற்பனையில் ஈடுபடுவதாகவும், டியூசன் எடுப்பது, நகைகள் செய்வது என வேறு சில தொழில்களிலும் ஈடுபடுவதாகவும் ஹசன் விளக்கம் அளித்திருந்தார்.
இத்தகவல் வைரலாகவே, முதல்வர் பினராயி விஜயன் மாணவியை நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில் மாணவியின் நிலைமை தெரிந்து அவரது வங்கிக் கணக்கில் பொதுமக்கள் பலரும் உதவி செய்யத் தொடங்கினர்.
இத்தொகை ரூ.1.5 லட்சமாக உயர்ந்தது, தற்போது மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அந்த தொகையை அப்படியே முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் ஹனன்.
மேலும் மக்கள் கஷ்டப்படும் போது அவர்கள் தனக்கு செய்த உதவியை திருப்பி அளிப்பதே உகந்தது என்றும், இரு தினங்களில் பணத்தை திருப்பி அளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேடைப் பாடகரை இரும்பு கம்பியால் அவரது மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தின் வாலாஜா தென்றல் நகரை சேர்ந்தவர் அசோக் குமார்(வயது 54), இவரது மனைவி தனுஜா குமாரி, இந்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு பிரதீஸ்வரன்(வயது 25), பிரசாத்(வயது 20) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். படிப்பை முடித்த பிரதீஸ்வரன் சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த பிரதீஸ்வரன் சம்பவ தினத்தன்று இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அசோக் குமாருக்கும், தனுஜாவுக்கு சண்டை வந்துள்ளது, இதை பிரதீஸ்வரன் விலக்கிவிட்ட நிலையில், அசோக் குமார் மனைவியை அவதூறாக திட்டியதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த பிரதீஸ்வரன் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தந்தையை தாக்கியுள்ளார். இதில் சுருண்டு விழுந்த அசோக் குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார்.
நள்ளிரவு 1 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற விரைந்து சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மூவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.
இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான ஒன்று அன்னாசி. மேலும் நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும்.
மேலும் 100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது.
அன்னாச்சி பழத்தின் மருத்துவ குணங்கள் : அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.
இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.
மேலும் இதில் உள்ள தையாமின் மற்றும் வைட்டமின் பி சத்து, உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்கி உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம். மேலும் இது சோர்வின்றி செயல்பட பெரிதும் உதவுகின்றது.
புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது.
அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு அமிலம் செரிமான சக்தியை அதிகரிக்கிறது.
தொப்பையை குறைக்க அன்னாச்சியை பயன்படுத்தும் முறை
தேவையானவை : அன்னாசிப்பழம்- 1, ஓமம்- 4 தேக்கரண்டி, தண்ணீர்- தேவையான அளவு.
செய்முறை : அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி பின்பு நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட்டு இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
இந்த முறைப்படி 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை விரைவில் கரைய ஆரம்பித்து பின் மெலிதான உடலைப் பெறலாம்.
கூகுளின் செயலிகள் அடங்கிய ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் சேவை வசதியை அணைத்து வைத்தாலும், பயனாளர்களை தொடர்ந்து கண்காணிப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன்களில் அதிகளவில் கூகுளின் Operating System பயன்படுத்தப்படுகிறது. அதில் Google Map உள்ளிட்ட பல்வேறு செயலிகள், பயனாளர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருகிறது.
இவை அனைத்தும் Location Data/History எனும் சேவையின் வழியாக செயல்படுவதாகவும், இந்த சேவையை Off செய்து விட்டால் பயனாளர்கள் இருக்கும் இடம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படாது என்றும் கூகுள் Help பக்கத்தில் முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த சேவை வசதியை Off செய்தாலும் பயனாளர்களை தொடர்ந்து கண்காணிப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை உறுதிபடுத்தும் விதமாக Location Data/History தொடர்பான விளக்கம் மாற்றப்பட்டுள்ளது.
இந்த விளக்கம் தற்போது கூகுள் Help பக்கத்தில், ‘இந்த சேவையில் செய்யப்படும் மாற்றமானது உங்கள் கைப்பேசியில் உள்ள Google Location Service மற்றும் Find My Phone உள்ளிட்ட இதர இருப்பிட தகவல் சேவைகளை பாதிக்காது. Google Maps மற்றும் தேடுதல் வசதிகளுக்காக, உங்கள் இருப்பிடம் தொடர்பான சில தகவல்கள் சேகரிக்கப்படலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூகுளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘பயனாளர்களின் கூகுள் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தவும், கூகுள் உதவி தொடர்பாக கூடுதல் விளக்கமளிக்கவுமே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தடகள மங்கை என்று அழைக்கப்படும் பிடி உஷா தற்போது கேரள மாநிலத்தில் பயிற்சி மையம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.
1984-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் நூலிழையில் வெண்கல பதக்கத்தை இழந்தார்.
100-ல் ஒரு பங்கு என்ற அளவில் ருமேனியா வீராங்கனை பிடி உஷாவை முந்தினார். இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து பிடி உஷா கூறியதாவது, ஒலிம்பிக் போட்டிக்காக நான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தபோது அங்கு எனக்கு வழங்கப்பட்ட உணவுகள் போதிய எனர்ஜியை கொடுக்கவில்லை.
அங்கு எனக்கு அரசி கஞ்சியுடன் ஊறுகாய்தான் உணவாக வழங்கப்பட்டது. வேகவைத்த உருழைக்கிழங்கு அல்லது அரைவேக்காடு சிக்கன் அத்துடன் தரப்படும் சோயா சாஸ் வழங்கப்பட்டது. அமெரிக்க உணவுகளை சாப்பிட்ட பழக்கம் எனக்கு கிடையாது. லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கிராமத்தில் அமெரிக்கா உணவு மட்டும்தான் கிடைக்கும் என்று எனக்கு தெரியாது
உணவின் காரணமாக, கடைசி 35 மீட்டரில் என்னுடைய எனர்ஜி லெவலை நிலைநிறுத்த முடியாமல் போனது. என்னுடைய ஆட்டமும் மிகவும் பாதித்தது. கடைசி 35 மீட்டரில் எனர்ஜியை தொடர்ந்து ஒரே லெவலாக தக்கவைக்க முடியாமல் போனது என கூறியுள்ளார்
ஜேர்மனியை சேர்ந்த 19 வயதான பெண் தனது தந்தை வயது நபரை தீவிரமாக காதலித்து வரும் நிலையில் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஜேர்மனியின் முண்டனை சேர்ந்தவர் செல்மா டின்மென் (19). இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் மைக் லீக் (52) என்பவரை தன்னுடன் பணிபுரியும் இடத்தில் சந்தித்துள்ளார்.
பின்னர் மைக், செல்மாவுக்கு பேஸ்புக்கில் நண்பராக ஏற்று கொள்ள கோரிக்கை வைத்த நிலையில் முதலில் செல்மா ஏற்கவில்லை.
ஆனால் பிறகு ஏற்று கொண்ட நிலையில் இருவரும் நட்பாகியுள்ளனர். நட்பானது பின்னர் மெல்ல காதலாக மாற தொடங்கியது.
இருவருக்கும் இடையில் 33 வயது வித்தியாசம் இருந்ததால் இவர்களின் காதலை செல்மா குடும்பத்தார் ஏற்று கொள்ளவில்லை.
இதையடுத்து சில மாதங்கள் மைக்கை பார்க்க முடியாமலும், அவருடன் பேச முடியாமலும் உள்ள நிலைக்கு செல்மா தள்ளப்பட்டார்.
இது குறித்து செல்மா கூறுகையில், முதலில் அவரை நான் புறக்கணிக்க தொடங்கினேன், பின்னர் அவரை எனக்கு பிடித்து போனது.
எங்களின் காதல் நாளுக்கு நாள் அதிகமானது, ஒரே மொழியை பேசுவது, நன்றாக ஓவியம் வரைவது போன்ற பல விடயங்களில் எனக்கும் மைக்குக்கும் ஒற்றுமை உள்ளது.
நான் தற்போது மைக்குடன் தான் வசிக்கிறேன், எங்கள் வயது வித்தியாசம் பற்றி கவலையில்லை. நானும் மைக்கும் மகிழ்ச்சியான உறவுமுறையில் உள்ளோம்.
விரைவில் இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை தொடங்குவது குறித்து யோசித்து கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.
தன்னை அவமானப்படுத்திய காதலியை அசிங்கமாக்க வேண்டும் என்பதற்காக அவளது அழகிய முகத்தில் ஆசிட் வீசினான் ஒரு காதலன். அவளோ தன்னை “இருமுகி” என அழைத்துக் கொண்டு அவனை நீதிமன்றத்திற்கு இழுத்திருக்கிறாள்.
ஜேர்மனியின் Hannoverஐச் சேர்ந்த Vanessa Münstermann (29) ஒரு அழகுக் கலை நிபுணர். அவளது காதலனான Daniel F அவள் தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி அவளது முகத்தில் அமிலத்தை வீசினான்.
இதனால் அவளது ஒரு கண், ஒரு காது, மூக்கு பாதிக்கப்பட்டதோடு அவளது ஒரு பக்க முகம் கோரமானது. இதனால் தனது எதிர்காலமே பாழாகிப் போனதாகத் தெரிவித்த Vanessa, இனி தன்னால் ஒரு அழகுக் கலை நிபுணராக பணி புரிய இயலாது எனக் கூறி, 250,000 யூரோக்கள் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.
Daniel Fக்கு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததோடு 250,000 யூரோக்கள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.
Daniel Fஇன் வீட்டார் தங்களால் அவ்வளவு பெரிய தொகையை வழங்க இயலாது என்றும் 100,000 யூரோக்கள் கொடுத்து பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம் என்னும் யோசனையை முன் வைத்தனர். ஆனால் அந்த திட்டத்தை Vanessa ஏற்க மறுத்து விட்டார்.
இந்நிலையில் நேற்று ஜேர்மன் சிவில் நீதிமன்றம் நஷ்ட ஈடாக கேட்கப்பட்ட தொகை பெரியதுதான் என்றாலும் இவ்வளவு மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திய கோர செயலுக்கு இந்த தண்டனை தகுந்ததுதான் என்று கூறிவிட்டது.
Vanessaவின் முகத்தில் வீசப்பட்ட அமிலத்தை அவர் ஒரு வேளை விழுங்கியிருந்தால் அவர் உயிரிழக்க நேரிட்டிருக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.