நோர்வே நாட்டின் அமைச்சர் ஒருவர் மொடல் அழகியுடன் சுற்றுலா சென்றதால் எழுந்த சர்ச்சையால், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நோர்வே நாட்டின் மீன் வளத்துறை அமைச்சரும், ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பெர் சாண்டர்பெர்க். இவர் மீன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் பஹாரே லெட்னெஸ் என்ற முன்னாள் மொடல் அழகியுடன் ரகசியமாக சுற்றுலா சென்றுள்ளார்.
இந்த விடயம் வெளியே தெரிந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. இது அமைச்சரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயல் என்றும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், பெர் சாண்ட்பெர்க் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் எம்மா சோல்பெர்க் கூறுகையில், பெர் சாண்ட்பெர்க் கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். இது நல்ல முடிவுதான் என தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராமும், அவர் குடும்பத்தினரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கேரள மாநிலத்தில் கனமழை தீவிரமடைந்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டுள்ளதால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்த மழை வெள்ளத்திற்கு பல பிரபலங்களின் வீடுகளும் சிக்கியுள்ளன. முன்னதாக நடிகர் பிருத்விராஜின் வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்தது. அந்த வீட்டில் இருந்து பிருத்விராஜின் தாயார் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், நடிகர் ஜெயராம் அவரது குடும்பத்துடன் நிலச்சரிவில் சிக்கினார். நடிகர் ஜெயராம் திருச்சூர் மாவட்டத்தில் தனது மனைவி, மகள் ஆகியோருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலை 544-யில் குதிரன் என்ற இடத்தில் அவரது கார் வந்துகொண்டிருந்தபோது திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் மண் சரிந்து சாலையில் விழுந்ததால் கார், லாரி உள்ளிட்ட வாகனங்களுடன் ஜெயராமின் காரும் சிக்கிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் ஜெயராம் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கருப்பட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவரது மனைவி கனிமொழி (24). கனிமொழி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று மாலை இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர் பணியில் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்துள்ளனர். இதில் கனிமொழிக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை இறந்து விட்டது. இது கனிமொழி மற்றும் அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இன்று காலை குழந்தையின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் பிரகாஷ் மற்றும் அவர்களது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொலிசாரிடம் மருத்துவர் பணியில் இல்லாததே குழந்தை இறக்க காரணம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை பொலிசார் சமாதானப்படுத்தினார்கள். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆனூர் பாலாற்று பகுதியில் வாலிபரும், இளம் பெண்ணும் சடலமாக கிடந்த நிலையில் அவர்கள் அருகில் விஷ பாட்டில் இருந்துள்ளது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். பொலிசார் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் பிரதீப்ராஜ் (19) மற்றும் சவுமியா (17) என்பது தெரியவந்தது.
இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
பின்னர் விஷம் குடித்து உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் திருமணத்துக்காக புதுமணப்பெண் உயிரை பணயம் வைத்து ஆற்றை கடந்துள்ளார்.
சத்யமங்கலம் அருகில் உள்ள மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. இந்த ஊரை சேர்ந்த ராசாத்தி என்ற பெண்ணுக்கும், கோவை மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கும் வரும் திங்கட்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது.
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ராசாத்தியையும் அவர் குடும்பத்தாரையும், ஊர் மக்கள் பரிசலில் ஏற்றி ஆற்றின் மறுகரையில் சேர்த்தனர்.
பின்னர் ராசாத்தி கூறுகையில், எனக்கு திங்கட்கிழமை திருமணம், ஆனால் அதற்கு கூட வெளியில் வராதமுடியாத நிலையில் ஊர்மக்களும், வனத்துறை அதிகாரிகளும் எங்களிடம் பேசி அனுப்பிவைத்தனர்.
எங்கள் பகுதியில் பாலம் கட்டி தரக்கோரியும் இன்னும் செய்யவில்லை என கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் திடீரென காணாமல் போன காரணத்தால் மணமகள் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வினோத் (27) என்பவருக்கும், கரூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு நேற்று (ஆகஸ்ட் 17, 2018) காலை உத்தமசோழபுரத்தில் உள்ள கரபுரநாதர் கோயிலில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தன.
திருமணம் முடிந்த பிறகு இன்று மாலை கிச்சிப்பாளையத்தில் உள்ள சிவா திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
இந்நிலையில் மணமகன் வினோத் நேற்று மாலை அவசரமாக வெளியே எங்கேயே கிளம்பிச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் வினோத் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதுகுறித்து வினோத்தின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர், வினோத் மாயமானது குறித்து மணமகளின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் பிடிக்காமல் மணமகன் ஓடிவிட்டாரா? அல்லது வேறு பெண்ணை காதலித்து வந்ததால் ஓடிவிட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் தன் மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு அதற்கான பணத்தை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளித்த பத்திரிகையாளரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவின் கேரள மாநிலம் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித்தவிக்கிறது. நிலச்சரிவுகளும் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளமும் சாப்பாட்டுக்கு வழியில்லாத குழந்தைகளின் அழுகைகளும் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்தவண்னம் உள்ளது. இயற்கையின் கோரத்தாண்டவத்தால் சிக்கி பரிதவிக்கும் கேரளத்துக்கு அண்டை மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டுகின்றன.
இந்தநிலையில், கேரளாவில் பத்திரிகையாளர் ஒருவரின் செயல், பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அங்குள்ள தேசாபிமானி என்ற பத்திரிகையில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் மனோஜ். இவர் தனது மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்திருந்தார். வரும் ஞாயிற்றுக்கிழமை, கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்திய மனோஜ்,
அந்தப் பணத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதல்வர் நிவாரண நிதிக்கு அவர் வழங்கியுள்ளார்.
இந்த முடிவை மணமகன் வீட்டாரும் வரவேற்றனர். இது தொடர்பாக மனோஜ் தனது பேஸ்புக் பக்கத்தில், `என் மகள் தேவி மற்றும் வழக்கறிஞர் சுதாகரன் ஆகியோருக்கு வருகிற 19-ம் திகதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கேரளாவின் இயற்கைப் பேரிடரைக் கருத்தில் கொண்டு நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வைத்தோம். இருவீட்டாரும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதல்வர் நிவாரண நிதிக்கு, நிச்சயதார்த்தத்துக்காகச் சேர்த்து வைத்த பணத்தை வழங்கினோம்’ என்று பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவர் தனது முதல் மாத சம்பளத்தை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்துக்கு வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த மே மற்றும் ஜுன் மாதங்களில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில்வெவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.
இதன் காரணமாக 17 பேர் வரை உயிரிழந்தனர். இந்த நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பணியில் லினி என்ற செவிலியர் ஈடுபட்டிருந்தார்.
தொடர்ந்து இரவு, பகல் என பெரம்பரா நகர மருத்துவமனையில் தங்கி லினி மக்களுக்கு சேவை ஆற்றி வந்ததால், அவருக்கும் நிபா வைரஸ் காய்ச்சலின் தொற்று ஏற்பட்டது.
இதனால் இவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த லினிக்கு, சஜேஸ் புதூர்(36) என்ற கணவரும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
மக்களுக்காக இரவு, பகல் பாராமல் தொடர்ந்து சேவையாற்றி வந்த லினி இறந்ததால், கருணை அடிப்படையில் அவரின் கணவர் சஜேஸ்க்கு கேரள அரசு சார்பில் வேலை கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் பணியில் சேர்ந்த சஜேஸ்க்கு முதல் மாத சம்பளமான 25,200 ரூபாய் இந்த மாதம் கொடுக்கப்பட்டது. அதை அவர் தற்போது கேரளா வெள்ள நிவாரண நிதிக்காக அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தற்போது என் மாநிலம் இருக்கும் சூழலில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது என்னுடைய கடமை, இதனால் நான் என்னுடைய முதல் மாத சம்பளம் முழுவதையும் வெள்ள நிவாரண நிதிக்காக அளித்துவிட்டேன்.
என்னையும், எனது குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள கேரள அரசும், மக்களும் இருக்கிறார்கள் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
மேலும் என் மனைவி லினி தனது வாழ்க்கையையும். உயிரையும் செவிலியர் பணிக்காக தியாகம் செய்தார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
அவரின் தியாகத்தால் எனக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. எனக்கு இந்த வேலையை அளித்த கேரள அரசுக்கும், ஆதரவு அளித்த மக்களுக்கும் எப்போதும் நான் விசுவாசமாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
லினாவுக்கு ஏற்பட்ட நிபா வைரஸ் காய்ச்சல் தொற்று வேறுயாருக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காக அவர் உயிரோடு இருக்கும் வரை அவரின் கணவர் மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
இதனால் அவர் தனது கணவரையும், குழந்தைகளையும் பார்க்காமலே கடைசியில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் தன்னுடைய கற்பை இணையத்தில் ஏலம் விட்டதால், அவரை 4 கோடிக்கு ஒரு தொழிலதிபர் வாங்கியுள்ளார்.
ஜேமனியைச் சேர்ந்தவர் Mandy. 36 வயதான இவர் விமானப்பணிப் பெண்ணாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய கற்பை Cinderella Escorts என்ற இணையதளம் ஒன்றில் ஏலம் விடுவதற்கு முடிவு செய்துள்ளார். அதன் படி அவர் தன்னுடைய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் போன்றவைகளை அதில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதையடுத்து இவரை ஜேர்மனியின் முனிச் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் £223,000(இலங்கை மதிப்பு 4,55,50,973 கோடி ரூபார்)-க்கு வாங்கியுள்ளார்.
இது குறித்து Mandy பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், பல வருடங்களாக என்னுடைய காதலனுக்காக காத்திருந்தேன்.
ஆனால் நான் தற்போது வரை பார்க்க முடியவில்லை. வயது தான் ஆகிக் கொண்டே இருக்கிறது தவிர, எந்த ஒரு பயனும் இல்லை.
இதன் காரணமாக என்னுடைய கற்பை விற்க முடிவு செய்தேன். இதைப் பற்றி செய்திதாள்களில் படித்து தெரிந்து கொண்டேன்.
அடுத்த மாதம் அந்த நபரை சந்திக்கவுள்ளேன். இதில் வரும் பணத்தை என்னுடைய வாழ்க்கைக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
வவுனியா குருமன்காட்டில் இன்று(18.08) காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் கடும் சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று காலை 8 மணியளவில் குருமன்காட்டிலிருந்து புளியங்குளம் சென்றபோது குருமன்காடு காளிகோவில் வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியினருகிலிருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். மின்கம்பத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா கற்பகபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுவனின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளது.
நேற்றையதினம் தாய் மற்றும் சிறிய தந்தை ஆகியோர் தொழிலுக்கு சென்றுள்ளதுடன் வீட்டில் குறித்த சிறுவன் தனிமையில் இருந்துள்ளார்.
சிறுவனின் 3 வயதான சகோதரன் அயல் வீட்டில் இருந்துள்ளார். வேலை முடிந்ததும் மாலை 6 மணியளவில் வீட்டிற்கு சென்ற சிறிய தந்தை இளைய மகனை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்ற சமயத்தில் மற்றைய மகனை காணவில்லை என தேடியுள்ளார்.
இந் நிலையில் வீட்டிற்கு அருகில் பயன்படாத நிலையில் உள்ள ஆட்டுக் கொட்டிலில் தொங்கியபடி இருந்த சிறுவனை அவனது சகோதரன் அவதானித்து தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளான். பின்னர் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டது. சம்பவத்தில் பானுசன் என்ற 9 வயது சிறுவனே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
குறித்த சிறுவனின் சிறியதந்தை கூறும் பொழுது, தூக்கில் தொங்கும் அளவுக்கு எனது மகனிற்கு போதிய விளக்கம் இல்லை, அதற்கான தேவையும் இருக்கவில்லை இந்த கொடிய செயல் திட்டமிட்டு செய்யப்பட்டதாக கூறினார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போலிசார் மேற்கொண்டு வருவதுடன் சடலம் இன்றையதினம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கடந்த ஒருவாரமாக அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களுடன் இலங்கை விமானப்படை வைத்தியர்கள் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா ஈரப்பெரியகுளம், அலகல்ல வித்தியாலயத்தில் கடந்த ஒருவாரமாக இடம்பெற்றுவரும் இலவச மருத்துவ முகாம் நாளைய தினத்துடன் முடிவடைகின்றது.
பங்களாதேஸ், நேபாளம், மாலைதீவு போன்ற ஆசிய பசுபிக் கண்டங்களைச் சேர்ந்த 65 அமெரிக்கா விமானப்படை வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து இலங்கை விமானப்படை வைத்திய அதிகாரிகளும் இச் செயற்றிட்டத்திதை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் பதில் அதிகாரி றொபேட் ஹில்டன் இடம்பெற்றுவரும் இலவச மருத்துவ முகாமினைப் பார்வையிட்டுள்ளார்.
இவ் மருத்துவ முகாமில் பொது சுகாதாரம், பல் சுகாதாரம், குழந்தை மருத்துவம் மற்றும் பொறியியல் திட்டங்கள், பொருள் நிபுணர் பரிமாற்றங்கள் இலவச மூக்குக்கண்ணாடிகள், ஏனைய வியாதிகளுக்கான மருந்துகள் என்பன பரிசோதனை மேற்கொண்டு வழங்கி வருகின்றனர். ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர். நாளையுடன் இத்திட்டம் நிறைவிற்குவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கை இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
இத்தாலியிலுள்ள ஏரி ஒன்றில் தனது குடும்பத்தினருடன் குளிக்க சென்ற இலங்கையர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான ஆசிரி ஹசிதபிரிய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹசிதபிரிய மரணத்தினால் அதிர்ச்சியடைந்த இத்தாலி வாழ் இலங்கையர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
லேக்கோ – கோமோ – கோலிகோ ஆகிய பிரதேசங்களை இணைந்து அமைந்துள்ள இந்த ஏரி ஆபத்தானது என குறிப்பிடப்படுகிறது.
ஏரியில் குளிக்க செல்வதற்கு முன்னர் விழிப்புணர்வு இல்லாமையே இந்த மரணத்திற்கு காரணம் என அந்த நாட்டில் உள்ள இலங்கையர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திருகோணமலை – பம்மதவாச்சி பகுதியில் விசேட அதிரடிப்படையினர் சென்ற பஸ்ஸூக்கு மறைந்திருந்து கல் வீச்சு நடத்திய சம்பவமொன்று இன்று இடம் பெற்றுள்ளது.
திருகோணமலை, சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதியினூடாக பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த போது சிலர் வீதியோரத்தில் மறைந்திருந்து கல்வீச்சு நடத்தியதாக தெரியவருகின்றது.
இந்த சம்பவத்தால் விசேட அதிரடிப்படையினர் பயணித்த பஸ்ஸின் முன் கண்ணாடி உடைந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக செயற்பட்ட விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரை துரத்தி மடக்கிப்பிடித்துள்ளதாகவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிப்பதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கல்வீச்சு நடத்திய நபர் வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்தவர் எனவும் அவர் மொறவெவ, கன்னியா மற்றும் பம்மதவாச்சி பகுதிகளில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நடமாடி வருபவர் எனவும் அப்பகுதியிலுள்ளவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கல்வீச்சு நடத்தியவரை மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
பதுளையில் இரு பெண்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு கத்திக்குத்தில் முடிவடைத்துள்ளது.
கத்திக் குத்தில் படுகாயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றுமொரு பெண் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கன்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீகஹகிவுல, அத்துருஎல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான திருமணமான பெண் ஒருவரே சம்பவத்தில் படுகாயமடைந்த ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பணப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கத்திக் குத்தில் அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பலாங்கொட நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள கிராமத்தில் வாழும் மக்கள் காட்டு யானை அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு 10 மணியளவில் நண்பர்கள் இருவர் மரண வீடு ஒன்றிற்கு சென்று வீடு திரும்பியுள்ளனர். தங்கள் கையடக்க தொலைபேசி வெளிச்சத்தின் உதவியுடன் இருவரும் தங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
மாலை பெய்த கடும் மழையினால் அந்தப் பகுதி மேலும் இருளாக காணப்பட்டுள்ளது. வீட்டிற்கு அருகில் நெருங்கிய இருவரில் ஒருவர் திடீரென பின்னால் நோக்கி ஓட ஆரம்பித்துள்ளார். இதனால் குழப்பமடைந்த மற்ற நபர், பேய் எதுவும் தெரிகின்றதா என கேட்டுள்ளார்.
அந்தப் பகுதியில் காட்டு யானை உள்ளது. நாம் வேறு வழியில் வீடிற்கு செல்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் இருவரும் இணைந்து வீதிக்கு அருகில் உள்ள வீட்டில் யானையை விரட்டுவதற்கான வெடிமருந்தினை பெற்றுக் கொண்டுள்ளனர்.
யானை வெடியை பற்ற வைத்தவாறு இருவரும் யானைக்கு அருகில் நெருங்கியுள்ளனர். எனினும் யானை ஒரு அடியேனும் நகரவில்லை.
பின்னர் நன்றாக அருகில் சென்று தொலைபேசி வெளிச்சத்தில் பார்த்த போது அது மழையினால் வீதிக்கு வந்த பாரிய கல் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவரும் அச்சமின்றி வீடு நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.