திருகோணமலை மாவட்டம், கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் கே.எம்.ஹாதிம் பார்சிலோனாவுக்கு செல்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
உதைபந்தாட்டப் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட போட்டியில் பங்குபற்றுவதற்காக அவர் பார்சிலோனாவுக்குச் செல்லவுள்ளார்.
அண்மையில் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனமும் கல்வி அமைச்சும் இணைந்து நடாத்திய ரோட் டூ பார்சிலோனா போட்டியில், பல அணிகளை தோற்கடித்து இறுதிச் சுற்றில் கிண்ணியா அல் அக்ஸா அணி சம்பியனானது.
இலங்கையிலில் இருந்து 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் குறித்த போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு மாணவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா பொலிஸாரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் உணவகங்களிலும் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் கப் ரக வண்டியில் நெடுநாட்களாக மான் மற்றும் மரை இறைச்சிகளை சூட்சுமமான முறையில் கடத்தப்பட்டு வந்த கும்பலினை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்
குறித்த கப் வண்டியில் 30 கிலோ எடையுடைய மரை இறைச்சி மீட்கப்பட்டுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர். மேலும் குறித்த வாகனத்தையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்
விசாரணைகளை மேற்கொண்டுவரும் வவுனியா பொலிசார் இறைச்சியையும் கைது செய்யப்பட்ட நபர்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வவுனியா கோவில்குளம், கோவில்புதுக்குளம் பகுதிகளிலுள்ள பெண்கள் நேற்று மாலை வீதியில் ஒன்றுகூடி நுண்நிதி நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் பணத்தைச் செலுத்த முடியவில்லை எனவும் இரவு வேளைகளில் தமது வீடுகளுக்கு நுண்நிதி நிறுவன ஊழியர்கள் வருவதற்கு தடைவிதிக்குமாறும், பெற்றுக்கொண்ட கடன் பணத்தைச் செலுத்தவதற்கான வழிமுறைகள் தற்போது காணப்படவில்லை எனவே அரசாங்கம் தமக்கான நிவாரணங்களை வழங்குமாறும் கோரியுள்ளனர்.
கோவில்குளம், கோவில்புதுக்குளம் பகுதிகளுக்குச் செல்லும் நுண்நிதி நிறுவனப் ஊழியர்கள் பணத்தை வசூலிப்பதற்கு நீண்டநேரமாக வீடுகளின் முன்னால் காத்திருந்து வருவதாகவும் இதனால் கடன் பெற்றுக்கொண்ட குடும்பப் பெண்கள் தலைமறைவாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,
இன்னும் சிலர் வீடுகளுக்குள் ஒழிந்துகொண்டு வெளியே சென்றுவிட்டதாக தெரிவித்து வருவதாகவும் நாளுக்கு நாள் கடன் பெற்றுக்கொண்ட நிறுவனங்களின் கெடுபிடிகள் அதிகரித்துச் செல்வதாகவும் நேற்று முன்தினம் குறித்த ஒரு நுண்நிதி நிறுவனத்தின் பணியாளர்கள் பெண் ஒருவரை அச்சுறுத்தியுள்ளதாகவும்,
இரவு 8 மணிக்கு பணத்தினை வசூலிப்பதற்காக வீடுகளுக்குச் சென்றுவருவதாகவும் அதிலிருந்து தம்மை விடுவிப்பதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அல்லது தமக்கான நிவாரணம் ஒன்றினைப் பெற்றுத்தருமாறும் கோரிவருகின்றனர்.
வவுனியாவில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக குளங்களிலும், கிணறுகளிலும் தண்ணீர் இன்றி வீட்டில் வருமானம் இன்றியும் கணவருக்கு தொழிலின்றிய நிலையும் தற்போது அதிகரித்துச் செல்கின்றது. நாளாந்தச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. எனவே நுண்நிதி நிறுவனங்கள் தமது கடன் பணத்தைப்பெற்றுக்கொள்வதற்கு குடும்பப் பெண்கன் மீது பல்வேறு அச்சுறுத்தல்களையும் திணித்து வருகின்றன.
இதனால் கடந்த வாரம் முதல் கோவில்குளம், கோவில்புதுக்குளம் பகுதிகளில் நுண்நிதி நிறுவனத்தில் பெற்ற கடன் பணத்தினைச் செலுத்த முடியவில்லை. இக்கடன் நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு தமக்கான நிவாரணம் ஒன்றினை பெற்றுத்தருமாறு அப்பகுதியில் நேற்று மாலை ஒன்றுகூடிய பெண்கள் கோரியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருமணமான பெண் மீது காதல் கொண்ட வாலிபர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.
முருகராஜ் என்ற வாலிபருக்கு திருமணமாகவில்லை. இவர், அதே பகுதியை சேர்ந்த திருமணமான திவ்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு அப்பெண்ணின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற அன்று, இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பெண்ணின் உறவினர்கள் பார்த்து சத்தம் போட்டனர். மேலும் இது குறித்து முருகராஜின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடமும் தெரிவித்தனர்.
இதில் அவமானம் அடைந்த முருகராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளாவில் கன மழை பெய்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊருக்குள் ஆற்று வெள்ளம் புகுந்ததால் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. நிலச்சரிவுகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. அங்குள்ள மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து பெரும் கவலையில் இருக்கிறார்கள்.
இதுவரை கேரள வெள்ளத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுப்பதற்கு தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், நடிகர்களும் நிவாரண நிதியுதவி அளித்துள்ளனர். இந்த சோகத்துக்கு மத்தியில் நடிகர் மம்முட்டி மலையாளத்தில் நடித்து வரும் தன்னுடையை ‘குட்ட நாடன் பிளாக்’ என்ற படத்தின் டிரெய்லரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துவரும் இந்த இக்கட்டான நேரத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிடலாமா? என்று மம்முட்டியை கண்டித்து கேரள ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்களும் மம்முட்டி செயலை விமர்சித்து உள்ளனர். மம்முட்டியும் மோகன்லாலும் தலா ரூ.25 லட்சம் வழங்கி உள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில், பாலிவுட் நாயகி வித்யாபாலன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அரசியல் தளத்தில், தனக்கென தனிப்பெரும் பெயரை வித்திட்ட ஆளுமையான ஒரு பெண் தான் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.
தமிழகம் முழுவதும் கர்ஜித்து வந்த “உங்களால் நான், உங்களுக்காகவே நான்” என்ற ஒற்றைக்குரலுக்கு சொந்தமான பெண் சிங்கம் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதியன்று உயிரிழந்தார்.
எம்ஜிஆருக்கு பின்னர் அதிமுகவை செம்மையாக வழிநடத்தி 5 முறை தமிழக முதலமைச்சர் பதவியில் அமர்ந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையினை பிரமாண்டமாக இந்திய அளவில், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் படமாகி தயாரிக்க உள்ளதாக விபிரி மீடியா நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த படத்தின் அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் வெளியாகும் என்றும், அன்றைய தினமே படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக த்ரிஷா, கீர்த்திசுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் வித்யாபாலன் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவீடனில் இஸ்லாமிய பெண் ஒருவர் தன்னை இண்டர்வியூ பண்ணும் நபரிடம் கை குலுக்காமல் பேசியதால், அவருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது.
சுவீடனைச் சேர்ந்தவர் Farah Alhajeh. 24 வயதான இந்த பெண் சமீபத்தில் வேலைக்காக, குறித்த நிறுவனம் நடத்தும் இண்டர்வியூக்கு சென்றுள்ளார்.
அப்போது உள்ளே சென்ற போது, இண்டர்வியூ எடுக்கும் நபரைக் கண்ட இந்த பெண், அவரிடம் கை குலுக்கிக் கொள்ளாமல், தன்னுடைய இதயத்திற்கு அருகில் கையை வைத்து அதாவது இஸ்லாமிய விதிப்படி மரியாதை கொடுத்துள்ளார்.
உடனே அந்த நபர் உங்களுக்கு இண்டர்வியூ முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண், வெளியில் வந்து லிப்டில் ஏறி கண்ணீருடன் சென்றுள்ளார்.
அதன் பின் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. வழக்கை விசாரித்த நீதிமன்றம் Farah Alhajeh-வுக்கு 3400 பவுண்ட் நஷ்ட ஈடு வழங்கும் படி தெரிவித்துள்ளது.
மேலும் Farah Alhajeh கூறுகையி, எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கிறது. ஆனால் சுவீடனில் அது மிகவும் குறைவு, நான் ஆண் மற்றும் பெண் இருவரிடமும் கை குலுகிக் கொள்வதில்லை. ஆனால் நான் அவர்களுக்கு மரியாதை தருவேன் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை லிரிக் மெக்கென்ரி தனது 26வது பிறந்தநாளை முன்னிட்டு நட்சத்திர ஹொட்டலில் நண்பர்களுக்கு மதுவிருந்து கொடுத்துள்ளார்.
இந்த கொண்டாட்டம் விடிவிடிய நடந்துள்ளது. பின்னர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் ரோட்டு ஓரத்தில் ஒரு பெண் அரை நிர்வாணமாக இறந்து கிடப்பதாக நியூயார்க் பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் விரைந்து விசாரணை நடத்தியபோது இறந்து கிடந்தது லிரிக் மெக்கென்ரி என்பது தெரியவந்தது.
பிணத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து போதையில் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கோக்கைன் என்ற போதை மருந்தையும் அவர் சாப்பிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், பரிசோதனையில் இவர் கர்ப்பமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது, லிரிக் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கர்ப்பமாக இருந்த என் மகள் அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் உட்கொண்டதால் இறந்ததாக தற்போதே கூறுவது சரி அல்ல. அதிகாரிகள் விசாரணை நடத்தி முடிவு செய்யட்டும் என்று லிரிக்கின் தந்தை டக் தெரிவித்துள்ளார்.
லிரிக் அவராக சாலையில் நடந்து சென்றபோது இறந்தாரா இல்லை ஏற்கனவே இறந்த லிரிக்கின் உடலை யாராவது அங்கு கொண்டு வந்து போட்டார்களா என்று பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உகாண்டாவில் கணவனை கொலை செய்து அவரை படுக்கையறையில் புதைக்க முயன்ற மனைவியை பொலிசார் பொலிசார் கைது செய்துள்ளனர்.
உகாண்டாவின் Buwambo Parish பகுதியில் இருக்கும் Lwesuubo கிராமத்தைச் சேர்ந்தவர் Harriet Nassali. 38 வயதான இவர் கடந்த 12-ஆம் திகதி தன்னுடைய கணவர் Sirajj Kawuma-வை மிகப் பெரிய கத்தியை வைத்து கொலை செய்துள்ளார்.
அதன் பின் அவரது உடலை படுக்கையறையில் புதைக்க முற்பட்ட போது, மாட்டிக் கொண்டுள்ளார். இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், Harriet Nassali-விற்கு புதிய ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே கணவனை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
சம்பவ தினத்தின் போது Harriet Nassali கணவரான Siraje Kavuma-வை கொலை செய்துவிட்டு, வீட்டில் இருக்கும் படுக்கையறையில் 3 அடிக்கு பள்ளம் தோண்டி புதைக்க முயன்றுள்ளார்.
இதைக் கண்ட அவரின் 13 வயது மகள் உடனடியாக அருகில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் Harriet Nassali-ஐ கைது செய்துள்ளனர்.
மேலும் இவரின் புதிய நண்பர் என்று கூறப்படும் Alex Kamusangi-யிடமும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருதாகவும், இவரை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், இவர்கள் இருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் 17 வயது சிறுமி பொலிசாரிடம் கூறுகையில், எங்கள், அப்பா, அம்மா இருவரும் சந்தோசமாக இருந்து பார்த்தது இல்லை, இருவருக்கும் ஏதேனும் பிரச்சனை வந்த படி இருக்கும், அதிலும் என் அம்மா அப்பாவை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 47 வயதான பாட்டி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் இவர்தான் உலகின் கவர்ச்சியான பாட்டி என்பதை நிரூபித்துள்ளார்.
மொடலாக இருக்கும் இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், 2 மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர். இவர் சமீபத்தில், ring donut – ஐ மிகவும் கவர்ச்சியாக சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ இவரை பின்தொடர்பவர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர் மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
நான் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை குடிப்பதில்லை, மேலும் ஆர்கானிக் உணவுகள் மற்றும் இயற்யான உறைவிடங்களையே விரும்புகிறேன்.
தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஜா எண்ணெய் மூலம் முகத்திற்கு மசாஜ் செய்கிறேன், இரசாயனங்கள் கலந்த எந்த ஒரு பொருளையும் எடுத்துக்கொள்வதில்லை என கூறியுள்ளார்.
இலங்கை வம்சாவளிச் சிறுவன் ஒருவன் கனடாவில் நீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தாயையும் மகனையும் காப்பாற்றும் முயற்சியில் வீர மரணமடைந்தார்.
கைல் ஹாவர்டு முத்துலிங்கம் (16) Wexford Collegiate பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்றவர். ஒண்டாரியோ ஏரியில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தாயையும் மகனையும் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்தவர்களில் கைல் முத்துலிங்கமும் ஒருவர்.
தொடர்ந்து வந்த மீட்புக்குழுவினர் மொத்தம் ஐந்து பேரை மீட்டனர். அவர்களில் கைல் முத்துலிங்கமும் ஒருவர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த தாயும் மகனும் உயிருடன் மீட்கப்பட்டு விட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முத்துலிங்கம் பின்னர் உயிரிழந்தார்.
மிகவும் இரக்க குணம் படைத்தவர் என பள்ளியில் அனைவராலும் புகழப்படும் கைல் முத்துலிங்கத்தின் மரணம் அவர் பயின்ற பள்ளியிலும் அவரது குடும்பத்தாரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கைல் முத்துலிங்கம் பயின்ற பள்ளியில் கனடா கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைல் முத்துலிங்கத்தின் ஒன்று விட்ட சகோதரிகளான அபிநயா (16) மற்றும் அஸ்வியா லிங்கம் (15) ஆகியோர் தங்கள் துக்கத்தின் மத்தியிலும் தங்கள் சகோதரனைக் குறித்து புகழ்ந்துரைத்துள்ளனர்.
இந்த நாடு என் சகோதரனை ஒரு ஹீரோவாக அறிந்து கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, ஏனென்றால் அவன் உண்மையிலேயே ஒரு ஹீரோதான் என்று கூறுகிறார் அபிநயா.
தாங்கள் இருவரும் இரட்டையர்கள் போலவே வளர்ந்ததாகவும், சேர்ந்து கால் பந்து விளையாடியதாகவும் தெரிவிக்கும் அபிநயாவும் கைல் முத்துலிங்கம் படித்த அதே பள்ளியில் படித்தவர்தான்.
நடனம் ஆடுவதும் பாடல் பாடுவதும் கைல் முத்துலிங்கத்திற்கு மிகவும் பிடிக்கும் என்று கூறும் அவர்கள், கலைகளில் சாதனை படைப்பதற்காகத்தான் அவர் இந்த பள்ளியில் சேர்ந்தார் என்கிறார்கள்.
அமெரிக்காவில் மகளை பின் தொடர்ந்து பாத்ரூம் வரை சென்ற இளைஞரை, பெண்ணின் தந்தை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த Melvin Harris (40) என்பவர், கடந்த 2-ம் தேதியன்று மால் ஒன்றிற்கு சென்றிருக்கும் தன்னுடைய மகள் மற்றும் அவளுடைய இரண்டு நண்பர்களையும் அழைத்து வருவதற்காக காரில் சென்றுள்ளார்.
அங்கு காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்ற போது, தனது மகளை ஒருவன் பின் தொடந்து சென்று பெண்கள் பாத்ரூமில் வைத்து கதவை தாழ்பாளிட்டதாகவும், பின்னர் சிசிடிவியின் உதவியுடன் பாதுகாவலர்கள் மகளை மீட்டதாகவும், அவளுடைய தோழிகள் கூறி கேள்விப்பட்டார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த Melvin, பாதுகாவலர்கள் பிடியில் இருந்த அந்த இளைஞரை நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறி தன்னுடைய காரில் அழைத்து சென்றுள்ளார். கற்கள் நிறைந்த ஒரு பகுதிக்கு அழைத்து சென்ற அவர், அங்கு வைத்து இளைஞர் மீது கொடூரமாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் சிறிது நேரத்திலேயே அந்த இளைஞர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், மயக்கத்தில் இருந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், முகத்தில் அதிமுறை குத்தியதால், இளைஞரின் கழுத்து பகுதி உடைந்ததுடன், மூளைப்பகுதியிலும் காயம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் Melvin-ஐ கைது செய்த பொலிஸார், இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவரது பெயர் Leon Armstrong (26) என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் அளவுக்கதிகமான போதைப்பொருள் எடுத்துக்கொண்ட பெற்றோர் ஒருபுறம் அனாதையாக சாலையில் கிடக்க, மறுபுறம் காருக்குள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கியிருந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Ohio பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி Eric Asher (43) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய வருங்கால மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்பொழுது ஒரு ஆணும், பெண்ணும் காருக்கு வெளியில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் காரை நிறுத்தி அவர்களின் அருகில் சென்று பார்க்கும்பொழுது, மிதமிஞ்சிய ஹெராயின் எடுத்துக்கொண்டதாலே அவர்கள் மயக்கத்தில் இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் Eric-ன் காதலி காரின் உள்ளே பின்பகுதியில், ஒரு குழந்தை 31 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்து உடனடியாக மீட்டுள்ளார்.
பின்னர் இதுதொடர்பான புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்ட Eric, குழந்தையை காப்பாற்றியதும் முதலில் தண்ணீர் கொடுத்தோம் என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இந்த புகைப்படங்கள் வைரலாக பரவினாலும் அவருக்கு எதிராக பலரும், ஏன் இதனை சமூகவலைதளத்தில் பதிவிட்டீர்கள் என கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இதற்கு பதிலளித்த Eric, இதனை விழிப்புணர்விற்காக மட்டுமே பதிவிட்டோம். இந்த சம்பவத்திற்கு பின்னர் குழந்தையின் உயிரை காப்பாற்றியதாக அவருடைய தாய் போன் செய்து எங்களுக்கு நன்றி தெரிவித்தார் என பதிலளித்துள்ளார்.
பிரபல நடிகை சுசிதா சக்ரபோர்தி உடல்நலக்குறைவால் காலமானார். பெங்காலி மொழியில் சில திரைப்படங்கள் மற்றும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் சுசிதா.
ஜெயா, அஞ்சல் போன்ற தொடர்களில் சுசிதாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சுசிதா நேற்று முன்தினம் மாலை காலமானார்.
திறமையான நடிகையாக அறியப்படும் அவரின் மறைவு சக நடிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
சுசிதாவுடன் அஞ்சல் தொடரில் நடித்த சக நடிகர் சர்போரி கூறுகையில், புற்றுநோயை எதிர்த்து சுசிதா தைரியமாக போராடினார்.
நோயை கண்டு அவர் மனம் கலங்கியதே இல்லை. சுசிதாவின் மறைவு ஈடு செய்ய முடியாதது என கூறியுள்ளார். இது போல பல நடிகர், நடிகைகள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
59 வயதில் பல பெண்களுக்கு திருமண ஆசை காட்டி நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
முருகன் என்ற இந்த நபர் செல்போன் எண்ணின் மூலம் சிக்கியுள்ளார். சென்னை தாம்பரம் பொலிஸ் நிலையத்தில் ஒசூர சேர்ந்த பெண் ஒருவர், தன்னை ஒரு நபர் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துவிட்டதாக கண்ணீர் மல்க புகார் அளித்து, ஒரு போன் நம்பரையும் பொலிசாரிடம் அளித்துள்ளார்.
ஆனால், அந்த போன் நம்பரை பொலிசார் தொடர்புகொண்டபோது, அது சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தாம்பரம் காவல் சரகத்தில் இதே மாதிரியான மேலும் இரண்டு புகார்கள் பொலிசாருக்கு வந்தன. இதனைத்தொடர்ந்து தனிப்படை அமைத்து முருகன் கைது செய்யப்பட்டார்.
இரண்டவதாக திருமணம் செய்வதாகக்கூறி விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தில் எம்மதமும் சம்மதம், மாதச்சம்பளம் 50,000 ரூபாய் என்று குறிப்பிட்டிருப்பதோடு செல்போன் நம்பர் ஒன்றும் இருக்கும். அந்த நம்பரில் தொடர்பு கொள்பவர்களிடம் சாமர்த்தியமாகப் பேசுவார் முருகன். பிறகு நேரில் சந்திப்பதாகக் கூறுவார். அதை நம்பி வரும் பெண்ணிடம், தன்னைபற்றிய விவரங்களை தெரிவிப்பார்.
அதைக்கேட்கும் பெண்கள், முழுமையாக முருகனை நம்பிவிடுவார்கள். ஆனால், எக்காரணம் கொண்டும் பெண்ணிடம் எல்லை மீற மாட்டார். நம்பிக்கை ஏற்படும்வரை பழகும் முருகன், அதன்பிறகே தன்னுடைய சுயரூபத்தைக் காட்டத் தொடங்குவார். நகை, பணத்தை திருமண ஆசையைக் காட்டி ஏமாற்றிவிட்டு அவர் பயன்படுத்திய சிம் கார்டையையும் தூக்கிப் போட்டுவிடுவார்.
முருகனுக்கு 59 வயதாகுகிறது. இதனால் அவரின் தலைமுடி வெள்ளையானதால் கறுப்பு ஹேர் டை அடித்து 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் போல மேக்அப் செய்துகொண்டு பெண்களை சந்திப்பார். முருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
தனக்கு போதிய வருமானம் கிடைக்காத காரணத்தால் கீழே கிடந்த செல்போனின் மூலம் இப்படி மன்மதன் வேலையை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து பொலிசார் கூறியதாவது, கைது செய்யப்பட்டுள்ள முருகனிடமிருந்து 18 சவரன் நகைகள், 30,000 ரூபாய், 40 சிம்கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.
முருகனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் நீள்கின்றன. ஆனால், மூன்று பெண்களைத் தவிர மற்றவர்கள் புகார் கொடுக்கவில்லை. தேவைப்பட்டால் அவரை காவலில் எடுத்து விசாரிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
நிலத்தடி நீரை சுத்தமான குடி நீராக மாற்றும் RO Plant இயந்திரங்கள் பல வவுனியா மாவட்டத்தில் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
குறித்த திட்டம் நேற்று (16.08.2018) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் சுமார் 5000 பேர் நன்மையடையவுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் பாவற்குளம் இரண்டு, ஆனைவிழுந்தான், நேரியகுளம், பெரிய உளுக்குளம், பெரியகுளம், ஈச்சங்குளம், நந்திமித்ரகம, போகஸ்வெவ மற்றும் கற்குளம் ஆகிய பிரதேசங்களில் இவ்வாறான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இந்த மாவட்டத்தில் நிலத்தடி நீரில் காபன், இரும்பு மற்றும் அயன் தாதுப்புக்கள் அதிகம் காணப்படுவதால் அப்பிரதேசத்தில் அதிகம் சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
இதனை கட்டுப்படுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் நிலத்தடி நீரை சுத்தமான குடி நீராக மாற்றும் RO Plant இயந்திரங்கள் பல வவுனியா மாவட்டத்தில் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டன.
மேலும் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், முத்தலிப் பாவா பாருக், பிரதேச சபை உறுப்பினர் மாஹிர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வட மாகாண பொது முகாமையாளர் பாரதிதாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.