வவுனியா வாகனதரிப்பிடத்தில் அதிக கட்டணம் அறவீடு : நகரசபையில் முறைப்பாடு!!

 

வவுனியா புகையிரத நிலைய வீதியில் வங்கிகளுக்கு முன்பாக அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடுவதாக வவுனியா நகரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா புகையிரத நிலைய வீதியில் வங்கிகளுக்கு முன்பாக அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிறியரக வாகனத்திற்கு ரூபா 30, கனரக வாகனத்திற்கு ரூபா 50 அறவிடப்படுவது வழமை. இதன் குத்தகை வவுனியா நகரசபையினரால் வவுனியா வர்த்தக சங்கத்தினருக்கு வழங்கப்பட்டது.

கடந்த சில வாரங்களாக அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர் சிறியரக வாகனத்திற்கு ரூபா 50 அறவிடுவதாகவும் அப் பற்றுச்சீட்டில் முத்திரை எவையும் காணப்படுவதில்லை எனவும் சில சமயங்களில் சிறியரக வாகனத்திற்கு ரூபா 30 (முத்திரை பதித்த) பற்றுச்சீட்டினை விநியோகிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தலைவர் இராசலிங்கம் கௌதமன் அவர்களிடம் வினாவிய போது, இவ் வாகன தரிப்பிடத்தில் குத்தகை வவுனியா வர்த்தக சங்கத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இவ் விடயம் தொடர்பாக அவர்களிடம் வினவுவதாக தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா வர்த்தக சங்க தலைவர் எஸ்.சுஜனிடம் வினவிய போது, சிறிய வாகனத்திற்கு ரூபா 30, பெரிய வாகனங்களிற்கு ரூபா 50 அறவிடப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த ஊழியர் மீது விசாரணை நடாத்துவதாக தெரிவித்தார்.

வவுனியாவில் புகையிரத்தில் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக பலி!!

வவுனியா பறநாட்டகல் பகுதியில் நேற்று (16.08.2018) காலை 10 மணியளவில் புகையிரத்தில் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

பறநாட்டகல் புகையிரதக்கடவைக்கு அருகாமையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதுண்டு இரு நாம்பன் மாடுகள் சம்பவ இடத்திலியே பரிதாபமாக உயிரிழந்தன.

இவ் விபத்தில் காரணமாக 15 நிமிடங்கள் தாமதித்தே புகையிரதம் பயணித்ததாக சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.

வவுனியா சுற்றுவட்ட வீதியூடான போக்குவரத்து பல மணிநேரமாக தடை!!

வவுனியா சுற்றுவட்ட வீதியில் இன்று (17.08.2018) அதிகாலை மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் பல மணிநேரமாக இவ் வீதியூடான போக்குவரத்து தடை ஏற்ப்பட்டுள்ளது.

சுற்றுவட்ட வீதியில் நின்ற பழமைவாய்ந்த மரமொன்று அதிகாலை வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுவட்ட வீதியூடான போக்குவரத்து பல மணிநேரமாக தடை ஏற்பட்டுள்ளது.

குறித்த இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சாரசபையினர் மின்சாரத்தினை தூண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இளம் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் : தடுக்க முயன்ற தாயின் பரிதாப நிலை!!

மினுவாங்கொட பிரதேசத்தில் தனது தாயின் தலையில் கொடூரமாக தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மினுவாங்கொட, ஜாபாலவத்தை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் குடிபோதையில் வீட்டிற்கு வந்த கணவன், மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதன்போது சண்டையை தடுக்க தாய் முன்வந்த போது அவரது தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த தாயார் மினுவாங்கொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சந்தேக நபர் 18 வயதான கணவன், இதற்கு முன்னரும் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடந்த மனதை உருக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் : தோற்று போகும் மனிதாபிமானம்!!

மனிதாபிமானத்தை மறந்து விட்டு அது பற்றி பேசும் இன்றைய சமூகத்தில் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று கேகாலை பகுதியில் பதிவாகியுள்ளது. இது மனிதர்கள் மத்தியில் அல்ல இரண்டு விலங்குகளுக்கு இடையில் நடந்த சம்பவம்.

வாழக்கை என்பது மிகவும் அதிசயமானது. இதில் நம்ப முடியாத பல விடயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. இதை இயற்கை என்று கூறுவதா? அல்லது இயல்பு என்று கூறுவதா?

கேகாலை – மொலகொட பிரதேசத்தில் தனியார் உணவகம் ஒன்றில் இரண்டு அபூர்வமான நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.

அந்த சிறிய நண்பர்களில் ஒருவர், இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து 5 நாட்கள் ஆகின்றன. இதனால் நண்பனை பிரிந்து வாடும் ஒரு ஜீவன் பற்றிய கதையே இது. அதாவது ஒரு குட்டி குரங்கினதும், நாய் ஒன்றினதும் நெகிழ்ச்சியான சம்பவம்.

குரங்குகள் தமது குட்டியை வயிற்றில் அணைத்தபடி செல்லும். குரங்கு குட்டி ஒன்று தனது தாயுடன் இப்படி சென்று கொண்டிருந்த போது, தாய் குரங்கு மின்சாரம் தாக்கி இறந்து விட்டது.

குரங்கு குட்டியை காப்பற்றிய சுரங்கம் ஒன்றில் தொழில் புரியும் பொறியிலாளர் அதனை தனது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளதுடன் சாலி என அதற்கு பெயர் சூட்டியுள்ளார்.

வீட்டில் இருக்கும் மிட்டி என்ற பெண் நாய், மிகவும் அன்புடன் குரங்கு குட்டிக்கு பால் ஊட்டி தன்னுடன் வைத்துக்கொண்டுள்ளது. இருவரும் உற்ற நண்பர்களாக உலவாந்தனர்.

எனினும் துரதிஷ்டவசமாக மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், குரங்கு குட்டியை கொஞ்சி விளையாடிய போது, அது அந்த நபரின் காலில் மிதியுண்டு உயிரிழந்துள்ளது.

வேறு வேறு இனங்களாக இருந்தாலும் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மிகவும் பாசமாக இருந்துள்ளது. தாயை இழந்த குட்டி குரங்கு நாயை தனது தாயாக நினைத்து வந்துள்ளது.

இந்த நிலையில் தனது குட்டியைப் போல் பாசத்துடன் வளர்த்து வந்த குரங்கு இறந்துள்ளதால் நாய் மட்டுமல்ல அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த சமூகமும் கவலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டிலிருந்து க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவுள்ள இலங்கை மாணவன்!!

இலங்கை மாணவரொருவர் வெளிநாட்டிலிருந்து க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவிலிருந்து குறித்த மாணவன் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், இவ்வாறான சம்பவம் இடம்பெறுவது இதுவே முதல் தடவை என தெரிவித்து கொழும்பு ஊடகமொன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு – பம்பலப்பிட்டி புனித பீற்றஸ் கல்லூரியில் கல்வி கற்று வரும் அகலங்க பீரிஸ் எனும் மாணவனுக்கே இவ்வாறாதொரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஆசிய விளையாட்டு விழாவிற்காக, இலங்கை நீச்சல் குழாமில் இடம்பிடித்து அந்த மாணவர் இந்தோனேசியா சென்றுள்ள நிலையிலேயே இந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறித்த கொழும்பு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

தேசிய ஒலிம்பிக் குழுவின் கோரிக்கையால் இந்த மாணவன் வெளிநாட்டிலிருந்து பரீட்சை எழுதுவதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

இந்தோனேசிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெறவுள்ள இந்த பரீட்சையில் கணக்கியல், பொது அறிவு மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 பாடங்களினதும் பகுதி ஒன்றுக்கான வினா பத்திரங்களுக்கு அகலங்க விடையளிக்கவுள்ளார்.

இதற்காக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் இந்தோனேசியாவிற்கு செல்லவுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

போதைக்கு அதிகமாகி நடுரோட்டில் இறந்த பிரபலம்!!

பிரபலங்களின் திடீர் மரணம் எல்லாம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அப்படி ஒரு ஹாலிவுட் பிரபலத்தின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. தயாரிப்பாளர், தொலைக்காட்சி பிரபலம் என மக்களுக்கு அடையாளமாக காணப்பட்டவர் Lyric McHenry.

26 வயதான இவர் நேற்று நடுரோட்டில் அனாதையாக இறந்துகிடத்துள்ளார். நேற்று இவருடைய பிறந்தநாள் இதனால் அதற்கு முந்தைய நாள் தனது நண்பர்களுடன் ஒரு பார்ட்டியில் ஆட்டம் போட்டுள்ளார். பார்ட்டி முடிந்து வீடு திரும்புகையில் இவர் நடுரோட்டில் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவரது உடலை கைப்பற்றிய போலீசார் அவரிடம் போதை மருந்து இருந்ததாகவும், அதிக போதை காரணமாகவே அவரின் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

ஒரு வருடத்தில் 77 கோடி வருமானம் பெரும் நடிகை!!

நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு வருடத்தில் 77 கோடி சம்பாதித்து இருக்கிறார். பிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபல நடிகையாகி இருக்கிறார். 2002 இல் தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் இவரது சினிமா பிரவேசம் நடந்தது.

அதன்பிறகு இந்தி படங்களில் நடித்து மளமளவென முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மூன்று வருடங்களுக்கு முன்னால் குவாண்டிகோ டி.வி தொடர்மூலம் ஹாலிவுட்டுக்கு சென்றார்.
இந்த தொடர் அவருக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.

அதன்பிறகு இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. 2017 இல் ´பேவாட்ச்´ ஹாலிவுட் படத்தில் நடித்தார். இந்த படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. படமும் நன்றாக ஓடவில்லை. ஆனாலும் பிரியங்கா நடிப்பு பிரமாதமாக இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன.

இப்போது ´த ஸ்கை ஸ் பிங்´ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் படமொன்றிலும் ஒப்பதமாகி உள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக சல்மான்கான் ஜோடியாக நடிக்கவிருந்த பட வாய்ப்பை உதறி விட்டார். அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ளவும் தயாராகி இருக்கிறார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வருடம் பிரியங்கா சோப்ரா சம்பாதித்த மொத்த வருமானம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படங்கள், விளம்பர படங்கள், டி.வி தொடர்களில் நடித்தது, ஆடை நிறுவனங்கள், அழகு சாதன போருட்களுக்கு விளம்பர தூதுவராக இருந்தது ஆகியவற்றின் மூலம் பிரியங்கா சோப்ரா 77 கோடி சம்பாதித்து இருக்கிறார். இதில் வரி கழிவுகள் போக 56 கோடி அவருக்கு கிடைத்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் பலி!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 6 விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். உகன, கிளிநொச்சி, கந்தான, மிஹிந்தலை, வெலிமட மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களிலேயே இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையாகம் தெரிவித்துள்ளது.

உகன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமனலபெந்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையை விட்டு அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதியதில் 71 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சியில் இருந்து இரணைமடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதே திசையில் சென்ற இராணுவத்தினரின் ரக் ரக வாகனம் மோதியதில் 51 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கந்தானை, ஆனியாகந்த வைத்தியசாலை வீதிக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ததில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயியரிழந்துள்ளார்.

அத்துடன் மிஹிந்தலை, பெரளுஹிந்த சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிரக்டர் ரக வாகனம் ஒன்றின் பின்னால் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை ரம்பாவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

வெலிமட பகுதியில் பாதையை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் மீது பேருந்து ஒன்று மோதியதில் 51 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிமட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குளியாப்பிட்டிய பகுதியில் பாதசாரிகள் கடவையூடாக பாதையை கடக்க முற்பட்ட ஒருவரை லொறி ஒன்று மோதியதில் 70 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : 50 பேர் கைது!!

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் இடம்பெற்ற குழு மோதல்கள் தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மாதத்தின் முதலாம் திகதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை போது, யாழில் வன்முறை செயற்பாடுகளுக்கு தொடர்புடைய 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பிரதேசத்தில் இயங்கும் குழுக்களுக்கு இடையில் மோதல் மற்றும் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, கொள்ளையில் ஈடுபட்டமை ஆகிய செயற்பாடு தொடர்பில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் ஆவா, தனுரொக்,, விக்டர் போன்ற குழுக்களினால் யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய் சுன்னாகமம் பிரதேசத்தில் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், விசேட சுற்றி வளைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் வெள்ளவத்தையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்திற்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் மகள் கபொத உயர்தரத்தில் படிப்பினை தொடர மறுத்துள்ளார். எனினும் தாயார் படிக்க சொல்லி வலியுறுத்தியுள்ளார். எனினும் அவரது மகள் மறுத்துள்ளமையினால் விரத்தியடைந்த நிலையில் தற்கொலை செய்துள்ளார்.

வெள்ளவத்தை பீட்டர்சன் வீதியிலுள்ள வீடொன்றில் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டார்.

இரு பிள்ளைகளின் தாயான 46 வயது நிரம்பிய பிரியதர்ஷனி புஷ்பராஜா, இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் பிரேத பரிசோதனை நேற்றையதினம் களுபோவில் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பூந்தோட்டம் லஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

வவுனியா – பூந்தோட்டம்அருள்மிகு லஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம்
மகோற்சவப் பெருவிழா விஞ்ஞாபனம்-2018 நேற்று 2018.08.15 (புதன்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மேற்படி  மகோற்சவத்தில் 

2018.08.22 (புதன்கிழமை ) சப்பர திருவிழாவும் 

2018.08.23 (வியாழக்கிழமை) தேர்த்திருவிழாவும்,
2018.08.24 (வெள்ளிக்கிழமை) தீர்த்தோற்சவமும்  நடைபெறும்…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்றம்!(படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க அலங்கார கந்தனின் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை (16) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 09 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையாருக்கு அபிசேங்களும்,ஸ்ரீமுருகப்பெருமானுக்கு உரிய மந்திரங்கள் ஆராதனைகளும்,என்பன வசந்த மண்டபத்தில் இடம்பெற்றது.

பின்னர் 10 மணி சுபநேரத்தில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.பின்னர் கொடிமரத்திற்கான கிரிகைகள் என்பன இடம்பெற்று அங்கு பக்தர்களின் அரோகரா கோசத்துடன் எம்பெருமான் சமேதர உள்வீதி வலம் வந்தனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் வெள்ளவத்தையில் சடலமாக மீட்பு!!

வெள்ளவத்தையில் இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பீட்டர்சன் வீதியிலுள்ள அவரது வீட்டின் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது வெள்ளவத்தையில் வசித்து வரும் 46 வயதுடைய பிரியதர்சினி புஷ்பராஜா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்தினரின் வாகனத்தில் மோதி 5 பிள்ளைகளின் தந்தை பலி : கிளிநொச்சியில் அமைதியின்மை!!

 

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், இதனால் சிலமணிநேரம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கிளிநொச்சியிலிருந்து இரணைமடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதே திசையில் சென்ற இராணுவத்தினரின் டக் ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 51 வயதான க.குகனேஸ்வரன் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அன்று குப்பை தொட்டியில் வாழ்ந்தவரின் இன்றைய நிலை : நெகிழ்ச்சி சம்பவம்!!

கோயம்புத்தூரில் 20 வருடங்களாக குப்பை தொட்டியில் வாழ்க்கை நடத்தியவரை ஈரநெஞ்சம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் காப்பாற்றி அவருக்கு புதுவாழ்வு கொடுத்துள்ளார்.

20 வருடங்களுக்கு மேலாக ஒரே உடையில், ஜடா முடிகளுடன் சாலையில் கிடைப்பதை சாப்பிட்டு கொண்டு, குப்பை தொட்டியில் வாழ்க்கை நடத்தியுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. இவரை பார்ப்பவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி புறக்கணித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில்தான் , ஈரநெஞ்சம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் இவருக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என அழைத்து சென்றுள்ளார்.

அவரது முடி திருத்தப்பட்டு புத்தாடைகளும் அணிவித்துள்ளனர். அதற்குப்பின் இவரது நடத்தை முற்றிலும் மாறுபட்டு சாதாரண மனிதர்களை போலவே கிருஷ்ணமூர்த்தி மாறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியை தனது தொண்டு நிறுவனத்தில் வைத்துக்கொண்டார். கிருஷ்ணமூர்த்தி இறந்தவர்களுக்கு சடங்கு செய்பவராக வேலை செய்து வந்துள்ளார். இதனால் ஊர்க்காரகள் பிணத்திற்கு சங்கு ஊதுபவர் எனக்கூறி இவரை ஒதுக்கி வைத்துள்ளனர்.

பெற்றோரின் மறைவுக்கு பின்னர் உறவினர்கள் கைவிட்ட காரணத்தால் தனிமை மட்டுமே இவருக்கு உறுதுணையாக இருந்தது, பிச்சை எடுத்து சாப்பிட மனமில்லாமல் குப்பை தொட்டியில் கிடப்பதை எடுத்து சாப்பிட்டு வளர்ந்து வந்தார். காலப்போக்கில் மனம்நலம் பாதிக்கப்பட்டு பித்துப்பிடித்துப்போனவர் போல மாறியுள்ளார்.

இந்நிலையில் தான் மகேந்திரன் இவரை தன்னுடன் இணைத்துக்கொண்டார். தனக்கு உணவு கொடுக்காத மக்களுக்கு தற்போது தனது கைகளாலேயே உணவு பரிமாறுகிறார் கிருஷ்ணமூர்த்தி.