நள்ளிரவில் மனைவிக்கு நேர்ந்த கொடுமை : தன் உயிரை கொடுத்து மனைவியை காப்பாற்றிய கணவன்!!

இந்தியாவில் வீட்டுக்கு திருட வந்தவர்கள் மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட நிலையில் அதை தடுத்த கணவன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் ராஜீவ் குமார். இவர் மனைவி ரஜ்னி ரஞ்சன். தம்பதிக்கு அந்த்ரா என்ற மகள் உள்ளார்.

ராஜீவ் அரசு துறையில் பெரிய அதிகாரியாக உள்ள நிலையில் அரசு குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கழிவறைக்கு செல்ல ராஜீவ் எழுந்த நிலையில் வீட்டு முற்றத்தில் ஏதோ சத்தம் கேட்டது.

இதையடுத்து கதவை அவர் திறந்த போது அங்கு முகத்தை மூடியபடி மூன்று திருடர்கள் நின்றிருந்தனர்.

இந்த சமயத்தில் ரஞ்சனும் அங்கு வந்துள்ளார். இதையடுத்து அவர்கள் ராஜீவிடம் உள்ள பணம் நகைகளை கேட்டு மிரட்டினர். பயந்த போன ராஜீவ் தன்னிடம் இருந்த 40,000 பணத்தை கொடுத்தார்.

ஆனால் தங்களுக்கு இன்னும் பணம் வேண்டும் என திருடர்கள் கேட்ட நிலையில் ராஜீவ் தர மறுத்தார். இதையடுத்து மூவரும் ராஜீவ் மனைவி ரஞ்சனை பலாத்காரம் செய்ய முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜீவ், மனைவியை காப்பாற்ற போராடினார்.

இதில் ஆத்திரமடைந்த மூவரில் ஒருவர் ராஜீவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். பின்னர் மூவரும் தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து பொலிசில் ரஞ்சன் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

கழிவுநீர்க் குழாயில் பச்சிளம் குழந்தை : பதைபதைப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

சென்னை வளசரவாக்கத்தில் கழிவு நீர்க் குழாயில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்றை ஒரு பெண்மணி மீட்டெடுத்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்த சில நாட்கள் கூட கடந்திடாத நிலையில், ஒரு பச்சிளம் குழந்தையை யாரோ கழிவு நீர்க் குழாயின் அடியில் ஒரு துணியை சுற்றி வைப்பது போல், வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

அப்பகுதியில் இருந்த கீதா என்கிற பெண்மணியும் அவரது மகளும் குழந்தையின் அழுகுரல் கேட்டு தேடியிருக்கின்றனர்.

பின்னர் அழுகுரலானது கழிவுநீர்க் குழாயின் அடியில் இருந்து வருவதைக் கண்டறிந்த அந்த தாயும் மகளும், அதன் அருகே சென்று பார்த்துவிட்டு அதிர்ச்சியாகியுள்ளனர்.

அந்த பெண்மணியோ, படுத்துக்கொண்டபடி, கழிவுநீர்க் குழாயின் இடுக்கில் பார்த்து குழந்தை இருப்பதை உறுதி செய்து, அதிர்ச்சியுடன் அந்த குழந்தையை கையைவிட்டு வெளியே எடுத்துள்ளார்.

நீண்ட நேரம் மூச்சுத் திணறிய நிலையிலும், உடலின் மேல் கழிவுகள் ஏறியும் இருந்த குழந்தையை உடனடியாக கழுவி, அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மீட்டுள்ளனர்.

மேலும் சுதந்திர தினத்தன்று பாரத மாதாவே கொடுத்த அந்த குழந்தை என நினைக்கும் அந்த பெண்மணி, அந்த குழந்தைக்கு ‘சுதந்திரம்’ என பெயரிட்டு மகிழ்ச்சியடைந்தார்.

பச்சிளம் குழந்தையினை இப்படி மனிதாபிமானம் அற்று கழிவுநீர்க் குழாயடியில் வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியினரின் நெஞ்சத்தை உலுக்கியுள்ளது.

நம்பமுடியாத உண்மை : வானில் பறந்து பிரமிப்பை ஏற்படுத்திய மனிதன் : வைரலாகும் வீடியோ!!

கோயம்புத்தூரை சேர்ந்த விக்னேஷ் பிரபு என்ற நபர் உபகரணங்கள் ஏதுமின்றி வானில் பறந்த வீடியோ வைரலாகியுள்ளது.

இவர் கடந்த 15 ஆண்டுகளாக மேஜிக் ஷோ நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலான மேஜிக் போட்டிகளிலும் கலந்து கொண்டு உள்ளார்.

இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், வானில் பறந்துள்ளார். இந்த அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது,

மன ரீதியாகவும் இதுபோன்று பறக்க முடியும் எனக் கூறுகிறார் விக்னேஷ் பிரபு. குறிப்பாக தான் இதற்காக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சியில் ஈடுபட்டதாகவும், வானில் பறப்பது இந்தியாவில் இதுவே முதன்முறை எனவும் கூறியுள்ளார்.

மேலும் முற்றிலும் பொழுது போக்குக்காகவே இதனை செய்ததாகவும், எனவே இதனை யாரும் ஆராய வேண்டாம் எனவும், யாரும் செய்து பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார்.

தனியாக இருக்கும் பெண்களையே குறிவைத்தேன் : கால் டாக்ஸி ஓட்டுனர் பரபரப்பு வாக்குமூலம்!!

சென்னையில் பெண்களை நூதனமுறையில் ஏமாற்றி நகைகளைக் கொள்ளை அடித்ததோடு, பாலியல் வன்கொடுமை செய்தது குறித்தும் கால் டாக்ஸி டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், சென்னையில் டாக்ஸி டிரைவராக உள்ள சுரேஷ் குமார் பல பெண்களை ஏமாற்றி வருவதாக இரண்டு பெண்கள் பொலிசிடம் புகார் அளித்தனர்.

இதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்ததாக கூறியுள்ளார். சுரேஷ்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், சொந்தமாக டாக்ஸி வைத்துள்ள நான் தனியாக வேலைக்குச் செல்லும் பெண்களைத்தான் குறிவைப்பேன்.

நடந்து செல்லும் பெண்கள் அருகில் காரை நிறுத்தி தனது டாக்ஸி ஓனருக்கு இன்று பிறந்தநாள்ள். இதனைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் சுமங்கலி பெண்களுக்குப் பட்டுப்புடவை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறார் என சொல்வேன்.

அதன் பின்னர், நம்பி வரும் பெண்களை காரில் ஏற்றிச் சென்று யாரும் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி கத்திமுனையில் அவர்களை மிரட்டி நகைகளைப் பறித்துவிடுவேன்.

சில பெண்களை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளேன். அதன் பின்னர், பெண்களைப் பாதியில் இறக்கி விட்டுவிடுவேன். டாக்ஸியில் தனியாகப் பயணிக்கும் பெண்களிடமும் இப்படி நடந்து கொண்டுள்ளேன் என கூறியுள்ளார். இதையடுத்து சுரேஷ்குமாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

10 வருட காதலை மறந்து காதலியை ரத்த வெள்ளத்தில் சரித்தது ஏன் : காதலன் பரபரப்பு வாக்குமூலம்!!

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கமருன்னிசா என்ற பள்ளி ஆசிரியையை அவரது காதலன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்த் என்பவரை கமருன்னிசா கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று பள்ளிக்கு கமருன்னிசா சென்றுகொண்டிருக்கையில், வழிமறித்து பிரச்சனை செய்த ஆனந்த் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து குத்திகொலை செய்துவிட்டு தப்பத்து ஓடியுள்ளார்.

இந்நிலையில், தப்பியோடிய ஆனந்த் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தியதில், அதற்கான காரணத்தை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து நானும், கமருன்னிசாவும் காதலித்து வருகிறோம், நாங்கள் காதலித்தபோது அவருக்கு தேவையான அனைத்தையும் வாங்கிகொடுத்தேன், ஆனால் இடையில் திடீரென என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.

என்னை திருமணம் செய்யவும் மறுத்து விட்டார். மேலும் அவருக்கு வேறொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயம் செய்தனர். இதனால் எனது நண்பருடன் சேர்ந்து அவளை கொலை செய்ய திட்டமிட்டு அதன்படி செய்தேன் என கூறியுள்ளார்.

ஆனந்த் மது அருந்திவிட்டு திரிகிறார் என்ற காரணத்தால் கமருன்னிசா அவரை விட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது.

35 வயதுக்கு மேல் மணமகள் தேவை : 58 வயதில் பல பெண்களை ஏமாற்றிய நபர் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

தமிழகத்தில் தினசரி நாளிதழ் மூலம் விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றிய 58 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, போரூரை சேர்ந்தவர் முருகன் (58). இவர் மீது ஓசூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தாம்பரம் காவல்நிலையத்தில் முருகன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் அவரை தேடி வந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் இஎம்ஐ நம்பரை வைத்து கைது செய்தனர்.

அதன் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர் கடந்த பத்து ஆண்டுகளாக இதே போன்று தான் பல பெண்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதாவது, பிரபல தினசரி நாளிதழில் திருமணத்திற்கு பெண் தேவை. அதுவும் 35 வயதுக்கு மேலான பெண்கள் மட்டும் தேவை என விளம்பரம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனால் திருமண ஆசையில் இருக்கும் பெண்கள் அவரை நேரில் சந்திக்க வரும் போது, தான் ஒரு பணக்காரர் போலவும், தொழில் அதிபர் போலவும் காட்டிக்கொண்டுள்ளார்.

அதன் பின் அந்த பெண்களிடம் ஒன்றாக வசிப்பார். இதைத் தொடர்ந்து திடீரென்று என்றாவது ஒருநாள் தனது உடைமைகளை மற்றும் அந்தப் பெண்ணின் நகை, பணம் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்.

இப்படி பல பெண்களை 10 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து 18 சவரன் தங்க நகைகள், 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் சில ஏடிஎம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது முருகனிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தேடப்பட்ட நபர் தான் என்பதும் தெரியவந்துள்ளது.

IMO தொழிநுட்பத்தை பயன்படுத்திய யுவதிக்கு ஏற்பட்ட நிலைமை!!

22 வயதான யுவதி நீராடும் காட்சி அடங்கிய காணொளியை பேஷ்புக் உட்பட இணையத்தளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி, பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், தாய், மகள் மற்றும் அம்பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இளைஞன் ஆகியோர் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இமோ தொழிநுட்பம் மூலம் பாதிக்கப்பட்ட யுவதி, சந்தேகநபரான இளைஞனுடன் அறிமுகமாகி உரையாடி வந்துள்ளார்.

இந்த நிலையில், இளைஞன், மீட்டியாகொடை பகுதியை சேர்ந்த யுவதியுடன் இணைந்து இமோ ஊடாக உரையாடிய யுவதியிடம் 20,000 ரூபா பணத்தை கேட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

ஐஸ் என்ற போதைப்பொருளை வாங்க வேண்டும் எனக்கூறி, இவர்கள் பணத்தை கேட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட யுவதி, அம்பாலங்கொடை பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் 10,000 ரூபாயை வைப்புச் செய்துள்ளார். இந்த விடயம் குறித்து கிடைத்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபரான யுவதியின் தாயாரின் வங்கிக் கணக்கில் பணம் வைப்புச் செய்யப்பட்டிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபர்களான இளைஞன், தாய் மற்றும் மகள் ஆகியோரை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட 22 வயதான யுவதி நீராடும் காட்சியை வெளிநாட்டில் வசிக்கும் யுவதியின் முன்னாள் காதலனே பதிவு செய்திருந்தாக கூறப்படுகிறது.

அந்த நபரே சந்தேகநபர்களுக்கு காணொளி காட்சியை அனுப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன் : நையப்புடைத்த பிரதேச மக்கள்!!

கம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெலிவேரிய பொலிஸ் பிரிவில் வசிக்கும் 18 வயதான யுவதி கடத்திச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்ட நிலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த தங்க நகைகளையும் குறித்த நபர் கொள்ளையடித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தை சேர்ந்த நுவன் சஞ்சய ருதிகம என்ற 38 வயதான நபரே யுவதியை கடத்தி, துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனை அவதானித்த பிரதேச மக்கள் இணைந்து குறித்த நபரைக் கடுமையாக தாக்கியமையினால் அவர் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா வைத்தியசாலைக்கு சென்று சந்தேக நபரை நீதவான் பார்வையிட்டார். அவரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் ஹேரத் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட யுவதி மற்றும் சந்தேக நபருக்கு இடையில் காதல் தொடர்பு ஒன்று காணப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபரின் செயற்பாடு குறித்து சந்தேகமடைந்து அவரை நிராகரிக்க ஆரம்பித்துள்ளதாக பாதிக்கப்பட்ட யுவதி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்ணின் கையடக்க தொலைபேசி சந்தேக நபரிடம் இருந்துள்ளது. இதனை வழங்குவதாக கூறி யுவதியை அழைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார் என பாதிக்கப்பட்ட யுவதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரச ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி!!

அனைத்து அரசாங்க ஊழியர்களின் சம்பளமும் அடுத்தாண்டில் அதிகரிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சம்பள அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்படும். எனினும் எத்தனை சதவீதத்தால் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்பதை நிதியமைச்சு தீர்மானிக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பில் ஆராய விசேட சம்பள ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசாங்க ஊழியர்கள் மற்றும் புகையிரத சேவை உள்ளிட்ட சம்பள முரண்பாடுகள் காணப்படும் சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து, இரு மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை வழங்கும் வகையில் குறித்த ஆணைக்குழுவை நியமிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகில் வாழ தகுதி இல்லாத நகரங்களின் பட்டியலில் கொழும்பு!!

உலகில் வாழ தகுதியாக நகரங்களில் கொழும்பு தொடர்ந்தும் பின்னடைவை சந்தித்துள்ளதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் 124ஆம் இடத்தில் இருந்த கொழும்பு இம்முறை 130வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

உலக பொருளாதார புலனாய்வு பிரிவினால் தயாரிக்கப்பட்ட தரப்படுத்தலுக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது. 140 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமூக ஸ்திரத்தன்மை, சுகாதாரம் பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் சூழல், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை கருத்திற் கொண்டு தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமூகங்கள் மத்தியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வன்முறை நிலைமை மற்றும், அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட சட்டத்தின் காரணமாக கொழும்பு நகரின் ஸ்திரத்தன்மை குறிப்பிடத்தக்களவு குறைவடைந்ததாக உலக வர்த்தக புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

உலகில் வாழ தகுதியான நகரங்களில் கொழும்பு 124 ஆம் இடத்தில் இருந்து 130 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு இதுவே முதல் காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தரப்படுத்தலுக்கமைய உலகில் வாழ கூடிய மிகவும் பொருத்தமான நகரமாக ஒஸ்ரியாவின் வியானா நகரம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறுமியை தூக்கி செல்ல முயற்சித்த கழுகு : போராடி மீட்ட தாய்!!

அனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த 7 வயதுடைய சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போராடி சண்டையிட்ட தாய், குழந்தையை பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளார்.

பின்னர் இந்த கழுகினை பிரதேச மக்கள் இணைந்து பிடித்து அனுராதபுரம் விலங்கு அலுவலகத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் 7 வயதான தெவ்மினி அமாயா என்ற சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை சிறுமி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருக்கும் போது வானில் இருந்து பறந்து வந்த கழுகு ஒன்று தாக்கியுள்ளது. சிறுமியின் முதுகு பக்கத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் அவர் காயமடைந்துள்ளார்

கழுகு 4 சிறுவர்களை நான்கு சந்தர்ப்பங்களில் துரத்தி வந்து தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்து கழுகிடம் இருந்து தப்பியுள்ளனர்.

ஆனாலும் பிரதேச மக்கள் இணைந்து பாதுகாப்பாக கழுகினை பிடித்து வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கழுகினால் தாக்கப்பட்ட சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா குத்துச்சண்டை வீரர்கள் தேசிய ரீதியில் சாதனை!!

தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டைப் போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த 12 வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.

கொழும்பு மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 10.08.2018 மற்றும் 11 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடைபெற்ற (வூசோ) குத்துச்சண்டை போட்டிகளில் வவுனியாவைச் சேர்ந்த 15 இளைஞர்க யுவதிகள் பங்குபற்றி 12 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர்.

வடமாகாண வூசோ அமைப்பினூடாக, வவுனியா கண் போய்ஸ் விழையாட்டு கழகத்தின் அனுசரணையுடன் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இக் குத்துச்சண்டை போட்டியில் பங்கு பற்றியிருந்தனர்.

அந்தவகையில் ஆறு தங்கப்பதக்கங்களையும், நான்கு வெள்ளிப் பதக்கங்களையும், இரண்டு வெண்கலப்பதக்கத்தையும் சுவீகரித்துக் கொண்டனர்.

இப்போட்டியில் நான்கு பெண் வீராங்கனைகள் கலந்துகொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் சுவீகரித்திருந்தனர்.

வடமாகாணத்திற்கான வூசோ குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரான எஸ். நந்தகுமார் கருத்து தெரிவிக்கையில், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கும் நிலையில் பெண்கள் தற்காப்பு கலைகளை பயின்று தங்களை பாதுகாக்க முன்வரவேண்டும் என குறிப்பிட்டார்.

வவுனியாவில் மின்சாரத்தில் சிக்கிய குரங்கு பரிதாபமாக பலி!!

வவுனியா புகையிரத நிலைய வீதியில் செல்லும் லக்ஸ்சபானா மின் வயறில் நடந்து சென்ற குரங்குகளில் ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

புகையிரத நிலைய வீதியில் இன்று காலை லக்சபானா மின்சாரம் பிரதான மின்பிறப்பாக்கிக்குச் செல்லும்  வயறில் நடந்து சென்ற குரங்குகளில் ஒன்று தவறி கீழ் செல்லும் கம்பியில் மின்சாத்தில் சிக்கி உயிரிழந்து கீழே வீழ்ந்துள்ளது.

இவ்வாறு வீதியில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளதையடுத்து நகரசபையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. வங்கியில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்குச் செல்லும் மக்களுக்கு இதனால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் தீர்தோற்சவம்!(படங்கள்,வீடியோ)

பாடல் பெற்ற சிவதலங்கள் நிறைந்த இலங்காபுரியின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு பத்தாம் நாள் தீர்த்த திருவிழா நிகழ்வு கடந்த 13.08.2018 அன்று   காலை ஒன்பதரை மணியளவில் அமிர்தவர்ஷினி தீர்த்த தடாகத்தில் இடம் பெற்றது.

காலை எட்டு மணிக்கு மூலஸ்தான பூசை கொடிதம்ப பூசை சுண்ணம் இடித்தல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்று ரிஷப வாகனத்தில் அமிர்த வர்ஷினி தீர்த்த தடாகத்தில் எழுந்தருளி செய்தாள். காலை பதினோரு  மணியளவில் தீர்த்த உற்சவம் நிறைவு பெற்று யாகம் கலைத்த பின்னர் பன்னிரண்டு  மணியளில் அம்பாளுக்கு ஆடிபூர ருது சாந்தி உற்சவம் இடம்பெற்றது.

 

வவுனியாவில் கிணற்றிலிருந்து 5 வயதுக் குழந்தையும் தாயும் சடலமாக மீட்பு!!

வவுனியா கூமாங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு அருகே இன்று (15.08.2018) காலை 10 மணியளவில் தாயும் குழந்தையும் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர்.

கணவன் வேலைக்கு சென்ற சமயத்தில் 5வயது, 7வயதுடைய மகனுடன் தயார் அயலவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில் 5 வயது மகனையும் குறித்த பெண்ணையும் காணவில்லை என குறித்த அயலவரின் வீட்டார் தேடிய சமயத்தில் கிணற்றில் சடலமாக காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

33 வயது தாயும் 5வயதுக் குழந்தையுமே சடலமாக மீட்கப்பட்டதாகவும் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவலை வழங்க முடியுமென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம சேவையாளர், பண்டாரிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் இரதோற்சவம் -(படங்கள்,வீடியோ)

பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு ஒன்பதாம் நாள் நாள் திருவிழாவான  இரதோற்சவ நிகழ்வு கடந்த  12.08.2018  காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.


அதிகாலை ஐந்து மணிக்கு யாகபூசை கும்பபூசை மூலஸ்தான பூசை கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை எட்டு மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் ஒன்பது நாற்பத்தைந்து மணியளவில் தேரில் ஆரோகணித்து சரியாக பத்து மணியளவில் ரதபவனி ஆரம்பமானது.மீண்டும் பத்தரை மணிக்கு தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது. மேற்படி இரதோற்சவதில் நூற்றுக்கணக்கான அம்பாள் பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.