வவுனியாவில் முச்சக்கரவண்டியில் கஞ்சாவுடன் சென்ற நபர் தப்பி ஓட்டம் : சாரதி கைது!!

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் ஞாயிறு இரவு பொலிசாரின் சோதனை நடவடிக்கையின்போது முச்சக்கரவண்டி ஒன்றில் போதைப் பொருளைக்கொண்டு சென்ற நபர் ஒருவர் போதைப் பொருளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து முச்சக்கரவண்டி சாரதியைக் கைது செய்த பொலிசார் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது இருவரையும் சரீரப்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் கள்ளிக்குளத்திலிருந்து நபர் ஒருவருடன் வவுனியாவிற்கு வாடகைக்கு முச்சக்கரவண்டி ஒன்று சென்றபோது நொச்சிமோட்டை பாலத்தில் பொலிசாரின் வழமையான சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியைச் சோதனைக்குட்படுத்திய பொலிசார் அதில் பயணித்த நபர் ஒருவர் இறங்கி வெளியே காத்திருந்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதியுடன் சோதனை மேற்கொண்ட பொலிசார் மறைத்து அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்ட பொதி செய்யப்பட்ட சிறிய கஞ்சாப் பொட்டலங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது முச்சக்கரவண்டியில் சென்று இறங்கி வெளியே காத்திருந்த நபர் போதைப் பொருட்களைப் பொலிசார் கைப்பற்றியதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அங்கு நின்றிருந்த பொலிசார் குறித்த நபரை விரட்டிச் சென்றபோதும் அவர் தப்பி ஓடிச் சென்றுவிட்டார்.

இதையடுத்து வாடகைக்கு சென்ற முச்சக்கரவண்டி சாரதியைக் கைது செய்த பொலிசார் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று குறித்த நபர் மீது விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் நேற்று பிற்பகல் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

10 ஆயிரம் பெறுமதியான இரு சரீரப்பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதுடன் எதிர்வரும் (18.09.2018) அன்றையதினத்திற்கு வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்டுள்ளது.

மேற்பார்வையாளரிடம் வசமாக சிக்கிக் கொண்ட மாணவனின் மோசமான செயல்!!

கம்பஹாவிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவரொருவர் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த மாணவன் நேற்றைய தினம் கைப்பேசியை உபயோகித்து பரீட்சையை எழுதிய போதே மேற்பார்வையாளரிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பரீட்சை மேற்பார்வையாளரால் மாணவனிடமிருந்து கைப்பேசி பறிக்கப்பட்ட போதும், அன்றைய தினத்திற்கான பரீட்சையை மாணவன் நிறைவு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த அரசியல்வாதி பிரதேச சபை கூட்டத்திற்கு வந்த அதிசயம்!!

உயிரிந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மாதாந்த கூட்டத்திற்கு வந்து கையொப்பமிட்டதற்கான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அனுராதபுரம் பிரதேச சபையின் தாமரை மொட்டு கட்சி உறுப்பினர் பிரதீப் நிலவிர கடந்த 5ஆம் திகதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்தார்.

அவர் உயிரிழந்த பின்னர் கடந்த 9ஆம் திகதி பிரதேச சபையில் மாதாந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த கூட்டத்தின் முடிவில் உயிரிழந்த உறுப்பினர் கலந்து கொண்டதற்கான ஆவணங்கள் மற்றும் அவர் கையொப்பமிட்ட கடிதமும் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த உறுப்பினரின் கையொப்பத்தை இவ்வாறு பயன்படுத்தி பிரதேச சபையில் மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த போலி ஆவணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீதியோரத்தில் அநாதரவாக கைவிடப்பட்ட மூதாட்டி!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்புறுமூலை கிராமத்தில் 80 வயது மதிக்கத்தக்க வயதான தாய் ஒருவர் இரவு வேளையில் அனாதரவாக கைவிடப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை குறித்த மூதாட்டி தள்ளாடிக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் வீதியோரத்தில் காணப்பட்டுள்ளார். மறுநாள் காலை குறித்த மூதாட்டியிடம் ஊர் பொது மக்கள் சென்று விசாரித்துள்ளனர்.

இதன்போது தனது பெயர் அன்னபூரணி எனவும் தான் கொழும்பு – கொட்டாஞ்சேனை சந்தியில் உள்ள மாதா கோயிலை அண்டிய பகுதியில் வசித்ததாகவும் இரவு வேளையில் கார் ஒன்றில் கொண்டுவரப்பட்டு அனாதரவான நிலையில் இவ்வாறு விடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த மூதாட்டியை தெரிந்தவர்கள் 0776627853 மற்றும் 0757457851 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அவரை தற்காலிகமாக பராமரிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். கடலில் மூழ்கிப் போன சீனாவின் ஆச்சரியம் : 500 வருடங்களின் பின் வெளியாகும் தகவல்!!

500 ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணத்தில் மூழ்கிப் போன சீன கப்பலை தேடும் பணிகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

அல்லைப்பிட்டி பகுதியில் மூழ்கிய கப்பலை, இலங்கை சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து தேடவுள்ளனர்.

500 ஆண்டுகளிற்கும் முன்னர் இலங்கை கடற்பரப்பில் பயணித்த ஓர் கப்பல் விபத்திற்கு உள்ளாகி மூழ்கியுள்ளதாகவும் அதன் எச்சங்கள் அல்லைப்பிட்டி பகுதியில் இருப்பதாகவும் சீன அரசிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக அந்தப் பகுதியில் ஆய்வு நடவடிக்கைகளை, 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சீன அதிகாரிகள் மேற்கொண்டனர்.

குறித்த ஆய்வின்போது சில சீன நாட்டு நாணயம் மற்றும் சீனக் கப்பலின் சில பாகங்களும் மீட்கப்பட்டன. அப்பகுதியில் ஆய்விற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நாட்டில் இடம்பெற்ற போர் காரணமாக குறித்த ஆய்வுப் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அல்லைப்பிட்டி பகுதியில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனடிப்படையில் சீன மற்றும் இலங்கை நாடுகளின் தொல் பொருள் திணைக்களங்கள் இணைந்து தற்போது அல்லைப்பிட்டி கடற்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் மொழிக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்!!

தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.சி.ஏ.என்.என் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சமிரான் குப்தா இந்த தகவலை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடிசா, பெங்காலி, தேவநாகரி, குஜராத்தி, குர்முகி போன்ற மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து பல்வேறு பிராந்திய மொழிகளில் இணையதளங்களுக்கு பெயரிடும் நடவடிக்கை விரைவில் ஏற்படுத்தப்படும்.

இதேவேளை தற்போது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து இணையதள முகவரியை பெறும் வசதி மட்டுமே உள்ள நிலையில், மேற்குறிப்பிட்ட நடவடிக்கையின் மூலம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இணையத்தளங்களின் பெயர்களை தமிழிலேயே தட்டச்சு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம் தெரியாத மக்களும் இணையத்தளத்தை பாவிக்கக்கூடிய வகையிலேயே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அண்மையில் கூகிளின் உத்தியோகபூர்வ மொழிகளில் தமிழும் இணைக்கப்பட்டு தமிழுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடுமை!!

இலங்கையின் பிரபல நடிகையான என்டலீன் ரொஷானாவிடம் பாரிய நிதி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் தயாரிக்கும் சொகுசு ரக மோட்டார் வாகனத்தை இறக்குமதி செய்து தருவதாக கூறி,10 லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.

மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட திரைப்பட இயக்குனர் நேற்று மிரிஹான விசேட பொலிஸ் குற்ற பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 லட்சம் ரூபாய் பணத்தை மோசடியான முறையில் ஏமாற்றப்பட்டதாக கூறி குறித்த நடிகை மிரிஹான பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் மேல் மாகாண பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்க குறித்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு குறித்த சந்தேக நபரை நேற்று கைது செய்துள்ளார்.

2016-09-21 ஆம் திகதியன்று குறித்த இயக்குநர் மோட்டார் வாகனம் ஒன்று பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக நடிகை முறைப்பாடு செய்துள்ளார்.

3 மாதங்களுக்குள் சொகுசு வாகனம் ஒன்றை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த இயக்குநர், குறித்த மோட்டார் வாகனத்தை பெற்று தரும் வரை பழைய மோட்டார் வாகனம் ஒன்றை வழங்கியதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது

எனினும் 4 மாதங்களின் பின்னர் பழைய வாகனம் தனது நண்பருடையது அவர் மீண்டும் கேட்பதாக கூறி கொண்டு சென்றுள்ளார்.

பெற்றுக் கொண்ட பணத்தை மீள வழங்குவதாக கூறி பயன்படுத்த முடியாத காசோலை ஒன்றையும் வழங்கி ஏமாற்றியுள்ளார்.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளில் நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம் நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் : பேஸ்புக் நேரலையில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை!!

கர்நாடகாவில் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோகன் கவுடா (25) என்பவருக்கும் 22 வயதான இளம் பெண்ணுக்கும் இரண்டு மாதம் முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பேஸ்புக் நேரலையில் மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், நாங்கள் ஐந்து ஆண்டுகளாக காதலித்தோம். அவள் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி இரண்டு மாதத்துக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டோம்.

ஆனால் திருமணத்துக்கு பின்னர் என் மனைவி என்னை ஏமாற்றிவிட்டாள். என் மனைவியும், மாமனாரும் தான் என் தற்கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

பொலிசார் இது குறித்து நடத்திய விசாரணையில், திருமணமான சில வாரங்களிலேயே மோகனின் மாமனாருக்கு உடல்நலம் சரியில்லை என போன் வந்துள்ளது.

இதையடுத்து தனது மனைவியை அவர் வீட்டுக்கு மோகன் அனுப்பியுள்ளார். ஆனால் பின்னர் மனைவி, மோகன் வீட்டுக்கே திரும்பவில்லை, இதையடுத்து 15 நாட்களுக்கு முன்னர் மோகன் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக அவர் மனைவி பொலிசில் புகார் கொடுத்துள்ளது தெரியவந்தது.

இதனால் ஏற்பட்ட வருத்தத்தால் மோகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து மோகன் மனைவி மற்றும் மாமனாரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

3 மாத பெண் குழந்தையை கொடூரமாக கொன்ற தாயார் : அதிர்ச்சி வாக்குமூலம்!!

மூன்றுமாத பெண் குழந்தையைக் கொலைசெய்து புதருக்குள் வீசிய தாயாரிடம் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக்- வனிதா தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு இரண்டாவதாக ஓர் பெண் குழந்தைப் பிறந்துள்ளது.

இதையடுத்து, தன் முதல் குழந்தையைத் திண்டுக்கல் சிறுமலை பகுதியிலுள்ள தன்னுடைய அம்மா வீட்டில் கொண்டுபோய்விட்ட வனிதா தன் மூன்று மாதக் குழந்தையான கவிஸ்ரீயை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை யாரோ தூக்கிச் சென்றுவிட்டதாக தமது கணவருக்கு வனிதா தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து வீட்டுக்கு விரைந்து வந்த கார்த்திக், தன் மனைவி வனிதாவுடன் சென்று சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினர் வனிதாவிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த பொலிசார், வனிதாவை தனியாக விசாரித்துள்ளனர்.

ஒருகட்டத்தில் பொலிசாரிடம் பொய்சொல்ல முடியாமல் திணறிய வனிதா, குழந்தையைத் தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

நடந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், “முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்ததால், இராண்டாவது ஆண் குழந்தை பிறக்கும் என நினைத்திருந்தேன்.

ஆனால், இரண்டாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்ததால் குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடுவோம் என்ற பயம் இருந்தது.

அதுமட்டுமல்லாது, இந்தக் குழந்தை எப்போதும் அழுதுகொண்டிருந்தது. இதனால் எனக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது.

அதனால் குழந்தையைக் கொன்று வீட்டின் பின்புறம் உள்ள புதரில் வீசினேன். அதை மறைப்பதற்காகக் குழந்தை கடத்தப்பட்டதாக நாடகமாடினேன் என்று கூறியிருக்கிறார் வனிதா.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 வருடமாக காதல், மூன்று முறை கருக்கலைப்பு : இறுதியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

 

தமிழ்நாட்டில் 8 வருடமாக காதலித்த பெண் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் காதலன் ஓட்டமெடுக்க காதலி, வீட்டு வாசலில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சம்மு. இவரும் மணிவண்ணன் என்ற இளைஞரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இதில் மூன்று முறை கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்தார் சம்மு.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மணிவண்ணை சம்மு வற்புறுத்திய நிலையில் அவர்களுக்குள் கடந்த 2 மாதங்களாக விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் திங்கட்கிழமை சம்மு தனது குடும்பத்தினருடன் மணிவண்ணன் வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்டு வந்த நிலையில் அதை விரும்பாத அவர் ஓட்டம் பிடித்துள்ளார்.

இதையடுத்து மணிவண்ணனின் வீட்டின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார் சம்மு. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் சம்முவிடம் விசாரித்த போது அனைத்தையும் வேதனையுடன் தெரிவித்தார்.

பின்னர் பொலிசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

கணவரின் முகத்தை பார்க்க 36 ஆண்டுகள் போராடிய மனைவி : 68 வயது முதியவராக திரும்பிய சம்பவம்!!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது கணவரை எப்படியாவது மீண்டும் சந்தித்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் காத்திருந்த மனைவிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த கஜானந்த் சர்மா என்பவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெய்ப்பூரில் இருந்து திடீரென்று தனது 32-வது வயதில் காணாமல் போனார்.

எங்கு தேடியும் இவர் கிடைக்கவில்லை. அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பல ஆண்டுகள் கழித்து குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்தது.

இதற்கிடையே, பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அங்குள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 26 மீனவர்கள் உள்பட 29 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் அந்நாட்டு அரசு நேற்று முன்தினம் விடுதலை செய்தது.

விடுதலையானவர்களில் ஒருவரான கஜானந்த் சர்மாவை, அட்டாரி-வாகா எல்லைப்பகுதியில் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடன் கட்டித்தழுவி வரவேற்றனர்.

வாழ்நாளில் ஒரு முறையாவது தனது கணவரின் முகத்தை காண வேண்டும் என்ற ஆவலுடனும், ஏக்கத்துடனும் காத்திருந்தேன் என மக்னி தேவி கூறியுள்ளார்.

நிச்சயம் அவர் திரும்பி வருவார் என கடந்த 36 ஆண்டுகளாக மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தேன். அவரை பிரிந்திருந்த காலங்கள் மிக கடினமானவை.

எனது கணவர் கண்டிப்பாக வருவார் என உண்மையாக நம்பினேன். அதனால் தான் எனது நம்பிக்கை நிறைவேறியது என கூறியுள்ளார். கஜனாந்தாவிற்கு தற்போது 68 வயதாகியுள்ளது.

காதல் கணவரிடமிருந்து மகளை பிரித்த பெற்றோர் : அவர் எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் கீதிகா (19), இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள தனது அறையில் கீதிகா தூக்கில் தொங்கியுள்ளார்.

அறை கதவை வெகுநேரமாக கீதிகா திறக்காத நிலையில் அவர் அம்மா உள்ளே சென்று பார்த்துள்ளார். மகள் தூக்கில் தொங்கியதை பார்த்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை பொலிசார் உறுதி செய்தனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக கீதிகா இறந்ததாக தகவல் வெளியான நிலையில் இது குறித்து அவர் அம்மா ஊடகத்திடம் பேசவில்லை. ஆனால் கீதிகா குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, கீதிகா ஒரு ஆண்டுக்கு முன்னால் சுதிர் ரெட்டி என்பவரை காதலித்துள்ளார்.இதையடுத்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு கணவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கீதிகாவின் பெற்றோர் அவரை வலுக்கட்டாயமாக கணவரிடம் இருந்து பிரித்து தங்களது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த சூழலில் தான் கீதிகா தூக்கில் தொங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் நண்பரை எரித்துக் கொன்றது ஏன் : தமிழக இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

பிரான்ஸ் நாட்டு நண்பரை எரித்துக் கொன்றது ஏன் என்பது தொடர்பில் கைதான தமிழக இளைஞர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தின் பட்டுக்கோட்டை அடுத்த ஆவிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். இவர் கல்லூரி படிக்கும் காலத்தில் பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணியான பியாரே பெர்னாண்டோ ரெனேவுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் கடந்த ஐந்து வருடமாக இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடிக்கடி பிரான்ஸிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து திருமுருகனைச் சந்தித்து வந்துள்ளார்.

இந்த நட்பு பின்னர் இருவரும் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் அளவுக்கு வளர்ந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 31-ம் திகதி பியாரே ரெனே சுற்றுலாவாகச் சென்னை வந்துள்ளார். 3-ம் திகதி வரை சென்னையில் தங்கி இருந்த அவர், பின்னர் திருச்சி சென்றுள்ளார்.

திருச்சியில் தங்கி இருந்து பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த அவர், 5-ம் திகதி திருமுருகனை தொடர்புகொண்டுள்ளார்.

இதையடுத்து, திருச்சி சென்று அவரை அழைத்துக்கொண்டு மதுக்கூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார் திருமுருகன். அங்கு வைத்து இருவரும் மது அருந்தியுள்ளனர்.

பின்னர், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டபோது ரெனே திடீரென வலிப்பு ஏற்பட்டு பேச்சு மூச்சின்றி நினைவிழந்து மயங்கிவிழுந்துள்ளார்.

அவரை எழுப்ப முயற்சித்தும் பலனில்லாமல் போனது. இதனிடையே அவர் இறந்ததாக தெரியவந்தது. இதனால் அவருடைய சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்ததாக கூறும் திருமுருகன்,

வீட்டின் சமையலறையில் வைத்து டீசல், பெட்ரோல் டயர் ஆகியவற்றைக்கொண்டு பியாரே ரெனே உடலை எரித்ததாக தெரிவித்துள்ளார்.

எரிந்து முடிந்ததும் எலும்பு, சாம்பல் மற்றும் எரியாமல் கிடந்த சதைப்பகுதியை 3 சாக்குகளில் அடைத்து மூட்டையாகக் கட்டி உக்கடை வாய்க்காலிலும் பையை ஓலையக்குன்னம் கிராமத்தில் உள்ள ஒரு வயலிலும் வீசியதாக பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகத் திருமுருகனிடம் தொடர்ந்து விசாரித்து வருவதாகக் கூறியுள்ள பொலிசார், பிரான்ஸிலிருந்து பெர்னாண்டோ ரெனேவின் உறவினர்கள் யாராவது தொடர்புகொண்டார்களா என்பது குறித்து தகவல் வெளியிடவில்லை

அனாதையாக திரிந்த மகனை 9 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டு இலங்கைக்கு அழைத்து வந்த தந்தை!!

இந்தியாவின் சுற்றுலா வந்த இடத்தில் காணாமல் போன மகனை 9 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்டெடுத்து இலங்கை நாட்டிற்கு அழைத்து சென்று பாசப்போராட்டத்தில் வென்றுள்ளார்.

இலங்கையை சேர்ந்த சத்தியவான்(74) என்பவர் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சுதர்சன் (31) என்பவர் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து பெங்களூருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

ஆனால், விசாக்காலம் முடிந்த பின்னரும் இவர் இலங்கை நாட்டிற்கு திரும்பவில்லை. இதனால் தனது மகனை தேடுவதற்காக இந்தியா வந்த தந்தை, இந்திய தூதரகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் மகனை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றத்துடன் மீண்டும் இலங்கைக்கு சென்றார்.

இந்நிலையில், கடந்த 2003 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்கள் அதிகளவு வசிக்கும் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு சத்தியவான் சென்றுள்ளார்.

அங்கு, பந்தலூர் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதித்த நிலையில் தனது மகன் சுதர்சன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் மகனுக்கு புதிய ஆடைகள் வாங்கி கொடுத்த சத்தியவான், மனநலம் பாதித்த மகனுக்கு சிகிச்சை அளிக்க கேரளாவுக்கு அழைத்து சென்றார்.

அங்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது, பின்னர் இலங்கைக்கு மகனை அழைத்து செல்ல சத்தியவான் முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால், சுதர்சன் சட்டவிரோதமாக தங்கியருந்த காரணத்தால் இதுதொடபான விசாரணைகளை முடிக்க வேண்டியிருந்த காரணத்தால் உறவினர் வீட்டில் மகனை விட்டு இலங்கை சென்றார்.

கடந்த மாதம் இலங்கையில் இருந்து சத்தியவான் மீண்டும் தேவாலா வந்தார். பின்னர் ஏ.ஐ.டி.யூ.சி. கட்சி மாவட்ட தலைவர் டி.பாலகிருஷ்ணனை சந்தித்து முறையிட்டார்.

இதுகுறித்து மறுவாழ்வுத்துறை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஒலிவர் ஐருளு கவனத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் கொண்டு சென்றது.

மேலும் மறுவாழ்வுத்துறை இயக்குனரிடம் தனது மகனை இலங்கைக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கும்படி சத்தியவான் கோரிக்கை மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து சுதர்சன் இலங்கை செல்வதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அனுமதி இன்றி இந்தியாவில் இவ்வளவு நாட்கள் இருந்ததற்காக சுதர்சனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை சுதர்சன் தந்தை சத்தியவான் உடனடியாக செலுத்தினார். பின்னர் தூதரகம் மூலம் சுதர்சனுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த சத்தியவான் 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகன் சுதர்சனை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நேற்று முன்தினம் மாலை அழைத்து சென்றார்.

போராடி தனது மகனை மீட்டெடுத்த ஒரு தந்தையின் பாசப்போராட்டம் அனைவரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணை துஷ்பிரயோகம் செய்து உடலை துண்டு துண்டுகளாக வெட்டிய கொடூரன்!!

ரஷ்யாவில் இணையம் மூலம் அறிமுகமான இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்த கொடூரன், கோடரியால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ள கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

ரஸ்யாவை சேர்ந்த Maria Konnov என்ற 16 வயது இளம்பெண்ணுக்கு ஆன்லைன் மூலம் Vladimir Sharov என்ற 18 வயது நண்பர் கிடைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு Sharov-வை சந்திப்பதற்காக Maria அவனுடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு Sharov, Maria-வை வலுக்கட்டாயமாக துஸ்பிரயோகம் செய்துவிட்டு, வெளியில் யாரிடமும் கூற கூடாது என மிரட்டியுள்ளான்.

அதற்கு பயப்டாத Maria பொலிஸாரிடம் புகார் அளிப்பேன் என கூறியதால், ஆத்திரமடைந்த அவன் உடனே Maria-வின் கைகளை கட்டி வாயில் துணியினை வைத்து கொடுமைப்படுத்தியுள்ளான்.

பின்னர் கோடாரி ஒன்றினை கொண்டு Maria-வை கொலை செய்தததோடு, அவரது உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பையில் போட்டு, Magnitogorsk நகரம் அருகே தூக்கி வீசியுள்ளார்.

இதற்கிடையில் இளம்பெண் காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், DNA சோதனையின் மூலம் Maria கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ளும்பொழுது, சம்பவம் நடைபெற்ற அன்று Sharov வீட்டிலிருந்து பெண் ஒருவர் கதறி அழும் சத்தம் கேட்டதாகவும், சிறிது நேரம் கழித்து அந்த சத்தம் நின்று விட்டதாகவும் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், Maria – Sharov ஆன்லைன் நட்பு குறித்தும், பலமுறை Sharov-வை நேரில் பார்த்துள்ளதாகவும் Maria-வின் தோழி ஒருவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து Sharov தான் குற்றவாளி என்பதை உறுதி செய்து அவனை கைது செய்து விசாரணை மேற்கொள்ளும்பொழுது, ஏற்கனவே பள்ளி மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்துள்ள வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொலிஸார் தரப்பு தெரிவிக்கையில், குற்றவாளிக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளனர்.

கணவன் கையால் பசியாறிய மனைவி : ஆயுள் கைதிகளின் உருகவைக்கும் பாசம்!!

தமிழகத்தில் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை காரணமாக அவர்கள் குடும்பத்துடன் விருந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டதால், அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கடலூர் மத்திய சிறையில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் தண்டனை கைதிகள். இந்நிலையில் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை காரணமாக, அவர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து விருந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டனர்.

அதன் படி 27 பேரும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களை நேற்று சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

அப்போது சிறையில் சமைத்து கொடுக்கப்பட்ட உணவினை அவர்களுக்கு ஊட்டி விடுவது, குழந்தைகளுடன் கொஞ்சி பேசியது மற்றும் தாயின் மடியில் உறங்குவது போன்ற உணர்ச்சிகரமான புகைப்படங்களை கடலூர் மத்திய சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கணவனை மனைவி பார்க்காமலும், குழந்தைகள் தந்தையை பார்க்காமலும், வயதான பெற்றோர் மகனை சந்திக்காமலும் வாழ்ந்து வந்த நிலையில் இந்த சந்திப்பின் மூலம் இருத்தரபினரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கத்தக்கது.