நிலச்சரிவில் இருந்து குடும்பத்தினரை காப்பாற்றிய நாய் : நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கவிருந்த குடும்பத்தை நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. பேய் மழைக்கு இதுவரை 37 பேர் மரணமடைந்துள்ளனர். குடியிருப்புகளை இழந்த 35,000 க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் அதன் துணை அணையான செருதோணி அணையில் உள்ள 5 மதகுகளில் 3வது மதகில் மட்டும் நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது.

அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் செருதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கரையோரத்தில் வசிப்பவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று தங்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மோகனன் என்பவர் இடுக்கி மாவட்டத்தின் கஞ்சிகுழி என்ற பகுதியில் தனது குடும்பத்தாருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அதிகாலை 3 மணி அளவில் அவர் வீட்டின் நாய் குரைத்துள்ளது. ஆனால் அது வழக்கமான ஒன்று தான் என்று எண்ணி அவர் தூங்க சென்றுவிட்டார்.

சிறிது நேரத்திற்கு பின் வழக்கத்திற்கு மாறாக அந்த நாய் ஊளையிட்டுள்ளது. இதையடுத்து வெளியே வந்து பார்த்த மோகனன், வீட்டின் அருகே நிலச்சரிவு ஏற்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே தன் மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார். மாடியில் இருந்த அவரது தாத்தா, பாட்டியை காப்பாற்ற முடியாமல் போனது.

இது பற்றி அவர் கூறுகையில் “என் வீடு பெரியார் அணையை ஒட்டி உள்ள இடத்தில் இருந்ததால் எங்களை அதிகாரிகள் வெளியேற கூறினார்கள்.

இதை அடுத்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள இந்த வீட்டிற்கு வாடகைக்கு வந்தேன். அப்படி இருந்தும் இங்கேயும் நிலச்சரிவு ஏற்பட்டு என் தாத்தா, பாட்டியை இழந்துவிட்டேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

ஒருதலைக் காதல் விபரீதம் : வீதியில் சென்று கொண்டிருந்த இளம்பெண் குத்திக் கொலை!!

இந்தியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை, இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் இளைஞரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் தானேவை சேர்ந்தவர் பிரச்சி (20). கல்லூரி மாணவியான இவர் ஆகாஷ் பவர் (23) என்ற இளைஞரை மூன்றாண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் பிரிந்தார்.

ஆனால் பிரச்சியை விடாமல் துரத்திய ஆகாஷ் தன்னை காதலிக்கும்படி வலியுறுத்தி வந்தார். ஆனால் இதற்கு பிரச்சி ஒத்து கொள்ளாததால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்துவந்தார் ஆகாஷ்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சாலையில் ஸ்கூட்டரில் பிரச்சி சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த ஆகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி பிரச்சியை கொலை செய்துள்ளார். பின்னர் தப்பியோடிய ஆகாஷை பொலிசார் கைது செய்தனர்.

நேற்று ஆகாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை வரும் 22ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிரிப்பு வாயுவை தொடர்ந்து குடித்ததால் 24 வயது தாய்க்கு நேர்ந்த சோகம்!!

பிரித்தானியாவில் பலூனில் இருக்கும் நைட்ரஸ் ஆக்ஸைடு காற்றை குடித்த தாய்க்கு முதுகெலும்பு செயலிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Bristol பகுதியை சேர்ந்தவர் Olivia Golding (24). இவர் வார விடுமுறை நாட்களில் எப்பொழுதும் தன்னுடைய மகன் Parker-ஐ கணவரிடம் ஒப்படைத்து விட்டு, சிரிப்பை ஏற்படுத்தும் வாயு என அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடுவை பலூனில் இருந்து குடித்து வந்துள்ளார்.

அடிக்கடி இந்த வாயுவை எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்த Olivia கடந்த சில நாட்களுக்கு முன் வந்த வார விடுறையில் 15 பலூன்களின் காற்றினை குடித்துள்ளார். பின்னர் உறங்க சென்ற அவருக்கு விழிப்பு ஏற்பட்டபோது, கை, கால்கள் மற்றும் மார்பு பகுதிகளில் உணர்வு இல்லாததை புரிந்து கொண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட Olivia-விற்கு Lichtheim எனும் நோய் இருப்பதும், அதனால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. பின்னர் Olivia-விடம் மருத்துவர்கள் கேட்டறிந்தபோது, அளவுக்கு அதிகமான நைட்ரஸ் ஆக்ஸைடு எடுத்துக்கொண்டதாலே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனால் பெரிதும் மனமுடைந்துள்ள Olivia-விற்கு தற்போது பிசியோதெரபிஸ்ட்கள் நடைப்பயிற்சி கொடுத்து வருகின்றனர். மேலும் இதுபோன்று விளையாட்டுதனமாக பலூன் காற்றை குடிப்பவர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து மனைவியை பார்க்க ஆசையாக வந்த கணவனுக்கு நேர்ந்த சோகம்!!

பெல்ஜியமிலிருந்து மனைவியை பார்க்க இந்தியாவுக்கு வந்த கணவன் மனைவியை பார்க்கும் முன்னரே உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் தேஜஸ் துபே (32). இவர் பெல்ஜியமில் வேலை செய்து வந்தார். இவரின் மனைவி புனேவில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் தேஜஸின் மனைவிக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிறந்தநாள் ஆகும். அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த தேஜஸ் இந்தியா வந்த நிலையில் வியாழன் அன்று தனது இரண்டு நண்பர்களுடன் மும்பையில் உள்ள அடுக்குமாடி வீட்டில் தங்கியிருந்தார்.

வெள்ளிக்கிழமை மனைவியை காண புனே செல்லலாம் என நினைத்திருந்தார் தேஜஸ். இந்நிலையில் நண்பர்களுடன் தங்கிய அறையின் ஜன்னலில் கம்பிகள் இல்லை. இதை கவனிக்காத தேஜஸ் தூக்க கலக்கத்தில் இரண்டாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளார்.

தேஜஸின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதனிடையில் பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், தேஜஸின் மரணத்தில் எந்தவொரு சந்தேகப்படும்படியான விடயங்கள் இல்லை என தெரியவந்துள்ளது.

தூக்கில் தொங்கிய இளம் பெண் : உருக்கமான கடிதம் சிக்கியது!!

இந்தியாவின் ராஜஸ்தானில் இளம் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் கணவர் மற்றும் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னி ஷர்மா என்ற பெண் இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் பின்னியின் சடலத்தை கைப்பற்றியதோடு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், தனது கணவர் குர்பிரித் மற்றும் மாமியார் வாலியா தன்னை எவ்வாறு துன்புறுத்தினார்கள் என எழுதியுள்ளார். மேலும், தன் உறவுகள் எல்லாரும் போலியாக இருந்து ஏமாற்றினார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னியின் பெற்றோர் தனது மகளை அவரின் குடும்பத்தார் அதிகளவு கொடுமைப்படுத்தியதாக பொலிசில் புகார் அளித்தார். இதையெல்லாம் வைத்து பொலிசார் குர்பிரித் மற்றும் வாலியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இருவரும் தலைமறைவாக உள்ளதால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ஒன்பது வயதான சிறுமிக்கு, சிறுவன் செய்த காரியம்!!

நொச்சியாகம பிரதேசத்தில் ஒன்பது வயதான சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற பதின்மூன்று வயது சிறுவன் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் நொச்சியாகம ஆரம்ப பள்ளியில் கல்வி கற்கும் குறித்த சிறுமி பாடசாலை முடிந்தவுடன் தனது தாயுடன் பாடசாலையில் இருந்துள்ளார்.

சிறுமியின் தாய் பாடசாலை முற்றத்தை சுத்தம் செய்ய அங்கு நின்றுள்ளார். அந்த நேரத்தில் பெரிய பாடசாலையில் கல்வி பயிலும் தங்களது வீட்டுக்கு அருகில் உள்ள சிறுவன் சைக்கிளில் வீட்டுக்குச் செல்லும்போது, குறித்த தாய், நான் துப்பரவு செய்து விட்டு வருகிறேன் தங்கையை வீட்டில் விடுமாறு கோரியுள்ளார்.

குறித்த சிறுவனும் சிறுமியை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சிறுமியின் வீட்டுக்கருகில் உள்ள நீர்நிலைக்கு கொண்டு சென்று துஸ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

இந்தநிலையில், சிறுமி மிகவும் உரத்த குரலில் கூச்சலிட்டதைக் கேட்ட பெண்ணொருவர், அங்கு சென்று குறித்த சிறுமியை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

குறித்த பெண் அவர்களின் அருகில் வசிப்பர் என தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர், சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன.

குறித்த மாணவன் கைது செய்யப்பட்டார். மாணவர் நீதிமன்றத்திற்கு முன் ஆஜர்படுத்தப்பட்டபோது, நன்னடத்தை இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸின் அறிக்கையின் படி, சிறுமி எந்த விதமான துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனின் தந்தை இறந்து விட்டதாகவும், அவரது தாய் வேறொரு நபரை திருமணம் செய்து வேறு இடத்தில் வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுவன் பாட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

யாழ் குடாநாட்டில் திடீர் சுற்றிவளைப்பு : கலக்கத்தில் வாள்வெட்டுக் குழுக்கள்!!

யாழ், குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய், கோப்பாய், ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட, திடீர் சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வடக்கில் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கு, பொலிஸாரும் இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய், கோப்பாய், ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே, 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, ஏழு வாள்கள், எட்டு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தோடு, வடக்கில் 53 பொலிஸ் நிலையங்கள் உள்ள போதிலும், 4 பொலிஸ் நிலையப் பகுதிகளில் மாத்திரமே இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்தே, வன்முறைக் குழுவினரின் மறைவிடங்களில் இவ்வாறு சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்களான இளைஞர்களிடம் எந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலும் கிடையாது, மாறாக சில போட்டியாளர்களை இலக்கு வைப்பதற்காக, சில பிரதேச அரசியல்வாதிகள், வணிகர்களே இவர்களின் பின்னணியில் இருக்கிறார்கள்.” என கூறினார்.

யாழ்ப்பாணத்தில், அண்மைக்காலமாக ஆயுதக்குழுக்களின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றமையால், மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே பொலிஸார், வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 29 பேரை தற்போது கைது செய்துள்ளனர்.

அதேநேரம், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஆணொருவருடன் இணைந்து பெண் ஒருவர் செய்து வந்த மோசமான காரியம்!!

வவுனியாவில் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இணைந்து நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உக்கிளாங்குளம் பகுதியில் வைத்து குறித்த பெண்ணும், அவரது உதவியாளரான ஆணும் மோட்டார்சைக்கிளில் ஹெரோயினை விநியோகம் செய்வதற்காக சென்றபோதே 430 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா, தோணிக்கல் பகுதியை சேர்ந்த 43 வயது பெண் மற்றும் மூன்றுமுறிப்பு பகுதியை சேர்ந்த 32 வயது இளைஞன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் நேற்று (12.08.2018) மதியம் 11.30 மணியளவில் தனியார் பேரூந்துடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக சூடுவெந்தபுலவு பகுதியில் தரித்து நின்ற சமயத்தில் அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து தனியார் பேரூந்தின் பின்பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி (23 வயது மதிக்கத்தக்க இளைஞன்) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

-சூடுவெந்தபுலவு தா.மு.சாதிக்-

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் 08ஆம் நாள் சப்பர திருவிழா!(படங்கள்,வீடியோ)

பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு எட்டாம் நாள் திருவிழா முத்துசப்பர நிகழ்வு  11.08.2018 அன்று  இடம் பெற்றது .

காலை பத்து மணிக்கு மூலஸ்தான பூசை கொடிதம்ப பூசை. தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் கைலாச வாகனத்தில் உள்வீதி வெளி வீதி எழுந்தருளி செய்தாள்.
மீண்டும் மாலை நாலரை மணிக்கு யாகபூசை கும்பபூசை மூலஸ்தான பூசையை தொடர்ந்துஆறுமணியளவில்
#நாதகானசுரபி K.T. பாஸ்கரன் குழுவினர்
#நாதவேந்தன் T. சத்தியகுமார் குழுவினர்
#நாதஸ்வரமணி K. ஜெயரட்ணம் குழுவினர்
#நாதகீதன் K..கோகுலன் குழுவினரின்
விசேட தவில் நாதஸ்வர கச்சேரி சப்பர நிகழ்வின் விசேட அம்சமாக இடம்பெற்றது.

தொடர்ந்து ஏழரை மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது. தொடர்ந்து மாலையில்ஒன்பது மணியளில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் அழகிய முத்து சப்பரத்தில் வீதிஉலா வந்தாள்.விசேடமாக வீதி உலா வந்த சமயம் ஆங்காங்கே வாண வேடிக்கை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!!

பிரித்தானியாவில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Harriet Forster என்ற 9 வயது சிறுமி தன்னுடைய குடும்பத்துடன் விடுமுறையை கழிப்பதற்காக, Seaton Garth கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு சிறுமி, மலையின் விளிம்பு பகுதியில் நின்று இயற்கையினை பார்த்து ரசித்து கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென மலையின் முனைப்பகுதி உடைந்து விழுந்ததால் சிறுமியும் மலையிலிருந்து தவறி விழுந்துள்ளார்.

இந்த விபத்தில் சிறுமியின் தலையில் பலத்த காயமடைந்ததால் சம்பவ இடத்திலேயே சிறுமி பலியாகினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு, சிறுமி பலியான விவகாரம் எதேச்சையாக நடந்த விபத்து என்பதை உறுதி செய்தனர்.

இதுகுறித்து அவருடைய பெற்றோர் கூறுகையில், Harriet எங்கள் அனைவரையும் தவிக்க விட்டு சென்றுவிட்டாள். அவள் எப்பொழுதுமே எங்கள் வாழ்க்கையின் ஒளி என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

முதன் முறையாக தாயின் குரல் கேட்டு குழந்தை கொடுத்த ரியாக்சன் : நெகிழ்ச்சியான சம்பவம்!!

பிரித்தானியாவில் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தை, முதன்முறையாக தாயின் குரல் கேட்டு, முகத்தில் பல்வேறு விதமான பாவனைகளை கொடுக்கும் வீடியோ காண்போர் கண்களை கலங்க வைக்கிறது.

பிரித்தானியாவின் Liverpool-ல் பகுதியை சேர்ந்தவர் Jen Denman. பிறந்தது முதலே இவருடைய குழந்தைக்கு செவித்திறனில் குறைபாடு இருந்துள்ளது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அவருடைய மகன் Alex Denman-ன் சைகையின் வழியே பேசியுள்ளனர்.

தற்போது 5 மாதமாகும் Alex-ற்கு காது கேட்கும் கருவியை பொருத்துவதற்கான வேலைகளை அவரது தாயார் மேற்கொண்டார். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, Alder Hey குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைக்கு கருவி பொருத்தப்பட்டது.

அப்போது அவனுடைய தாய், “ஹெலோ நான் அம்மா” என கூறியதும், வார்த்தையால் விவரிக்க முடியாத ஒரு முகபாவனையை கொடுத்துள்ளான். இதனை வீடியோவாக படம்பிடித்த மருத்துவமனை நிர்வாகம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.

காண்போர் கண்களை கலங்கடிக்கும் இந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரங்களில் 800,000 பார்வையாளர்களை பெற்று விட்டது.

என் கூட வர மாட்டியா : அழகிய மகளிடம் தந்தை செய்த திடுக்கிடும் செயல்!!

இந்தியாவில் வேறு சாதி இளைஞரை மகள் திருமணம் செய்ததால் அவரை ஆட்களை வைத்து சுட்டு கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மகள் மம்தா (18). மம்தா ரமேஷின் சொந்த மகள் கிடையாது. அவருக்கு இரண்டு வயதாக இருக்கும் போது ரமேஷ் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

இந்நிலையில் மம்தா இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் கடந்தாண்டு அவரை திருமணம் செய்தார்.

இளைஞர் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ரமேஷ் இது குறித்து பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் மம்தாவின் கணவரை கைது செய்தனர்.

அதன் பின்னரும் அப்பாவுடன் மம்தா வரவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சில தினங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்பாக மம்தா நீதிமன்றத்துக்கு வந்தார்.

அப்போது அங்கு வந்த ரமேஷ், மகளை தன்னுடன் வந்துவிடும்படி கூறினார், ஆனால் இதற்கு மம்தா மறுத்துவிட்டார். இதையடுத்து ஆத்திரமடைந்த ரமேஷ் சில ஆட்களை வைத்து மம்தாவை கொல்ல முடிவெடுத்தார்.

பின்னர் இரண்டு பேர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்த நிலையில் மம்தாவை சுட்டு கொன்றனர், இதோடு அங்கிருந்த நரேந்தரகுமார் என்ற காவலரும் கொல்லப்பட்டார்.

இதையடுத்து ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் கைது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

திருமணம் நடப்பதில் சிக்கல் : கிராமத்தின் பெயரை மாற்றிய மக்கள்!!

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் நடைபெறாததை கண்டு, அந்த கிராமத்தின் பெயரை அங்குள்ள மக்கள் மாற்றியுள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மெர் மாவட்டத்தின் மியான் கா பாரா கிராமத்தின் பெயர், மகேஷ் நகர் என மாற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் வீடு எனப் பொருள்படும் மியான் கா பாரா கிராமத்தில் உள்ள 2000 குடும்பத்தில், வெகு சிலரே இஸ்லாமியர்கள்.

ஆனால், இந்தப் பெயரைப் பார்த்ததுமே இங்குள்ளவர்களைத் திருமணம் செய்ய யாருமே முன்வருவதில்லை.

இதனால் கடும் அதிருப்தியடைந்த இப்பகுதி மக்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை முன்வைத்தனர். இதனையடுத்து தற்போது இந்த கிராமத்திற்கு மகேஷ் நகர் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் மக்களை பிளவுப்படுத்தும் நோக்கில் அங்கு ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த மாநிலத்தில் இஸ்லாமியப் பெயர்களைப்போல உள்ள கிராமங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுவருகின்றன. அந்த வகையில், ஜூஞ்ஹூனா மாவட்டத்தின் இஸ்மாயில்பூர் கிராமம் தற்போது, பிச்சான்வா குர்த் என மாற்றப்பட்டது.

அத்துடன், ஜலோர் மாவட்டத்தின் நார்பாரா என்ற கிராமத்தின் பெயர், நார்புரா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் உள்ள 27 கிராமங்களின் பெயர்களை மாற்ற மத்திய உள்விவகார அமைச்சகம் பரிசீலித்துவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வவுனியாவில் மழைவேண்டி குளத்தினுள் தொழுகையில் ஈடுபட்ட மக்கள்!!

வவுனியாவில் தற்போது கடும் வறட்சியான காலநிலை நிலவி வருகின்றது. இந்த நிலைமை காரணமாக குளங்களில் நீர்வற்றி காணப்படுவதுடன் கிணறுகளில் கூட நீர்வற்றி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடும் வறட்சியின் காரணமாக கால்நடைகள் கூட உணவில்லாமல் நோய்வாய்ப்பட்டு இறந்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று (10.08) வவுனியா சூடுவெந்தபுலவு கிராம மக்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அரபுக்கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து மழைவேண்டி குளத்தினுள் தொழுகை நடாத்தி இறைவனை பிரார்த்தனை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

-T.M.சதீக்-

தூக்கில் தொங்கி தற்கொலை : ஒரு கல்லூரி மாணவியின் உருக்கமான முடிவு!!

தென் ஆப்பிரிக்காவில் கல்லூரி மாணவி ஒருவர் தான் பலாத்காரத்துக்குள்ளானதால் வேதனையடைந்து சமூகவலைதளத்தில் அதற்கான காரணத்தை தெரிவித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Grahamstown – வில் செயல்பட்டு வரும் Rhodes பல்கலைக்கழகத்தில் Khensani Maseko என்ற மாணவி மூன்றாமாண்டு சட்டப்படிப்பு பயின்று வந்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவியான இவர், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த திகதி மற்றும் தனது இறப்பின் திகதியை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாரும் பலாத்காரம் செய்வதை ஏற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்கள் கிடையாது என்ற பதிவிட்டுள்ளார். இவ்வாறு பதிவிட்ட அன்று இவர் தற்கொலை செய்துகொண்டார், ஆனால் இந்த பதிவை பார்த்த இவரது நண்பர்கள் இவர் தற்கொலை செய்துகொள்ளப்போகிறார் என்பதை அறியவில்லை.

இவர், பல்கலைக்கழகத்தில் யாரோ ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் மனம் உடைந்து தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இவரது இறப்பு கல்லூரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் இறந்த அன்று கல்லூரி மூடப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரது இறப்பிற்கு பின்னணியில் இருக்கும் நபர் குறித்து விசாரணை நடத்தப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.