15 மாதங்கள் கடத்தப்பட்டு சீரழிக்கப்பட்ட இளம் கனடிய பெண் : தற்போது எப்படியுள்ளார்?

கனடாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் சோமாலியாவில் 15 மாதங்கள் கடத்தப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்து விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது தொண்டு பணிகளை செய்து வருகிறார் என தெரியவந்துள்ளது.

கனடாவின் அல்பர்டாவில் பிறந்தவர் அமண்டா லிண்ட்அவுட். பத்திரிக்கையாளராக பணிபுரிந்த அமண்டா கடந்த 2008-ல் வேலை விடயமாக சோமாலியா சென்றார்.

அவருடன் இன்னொரு பத்திரிக்கையாளரான நிஜில் பிரெனென், சோமாலி மொழிபெயர்ப்பாளர் மற்றும் இரண்டு ஓட்டுனர்கள் உடன் சென்றனர்.

இந்நிலையில் அடிப்படைவாத இயக்கத்தை சேர்ந்த சிலர் அமண்டாவையும், நிஜிலையும் கடத்தி சென்று தனித்தனியாக அடைத்து வைத்தார்கள்.

15 மாதங்கள் அவர்களிடம் சிக்கி கொண்டார் அமண்டா. அந்த காலக்கட்டத்தில் அமண்டா பலாத்காரம் செய்யப்பட்டதோடு, பலவிதமாக துன்புறுத்தப்பட்டார். இறுதியாக 15 மாதங்கள் கழித்து அமண்டா விடுவிக்கப்பட்டார்.

கடத்தல்காரர்கள் கேட்ட பணத்தை அமண்டா குடும்பத்தார் கொடுத்த நிலையிலேயே அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து நிஜிலும் விடுவிக்கப்பட்டார்.

இதன்பின்னர் தற்கொலைக்கு எல்லாம் முயன்ற அமண்டா அதிலிருந்து மீண்டு தற்போது தொண்டு நிறுவன வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அமண்டாவை கடத்தியதில் முக்கிய பங்கு வகித்த அலி உமர் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த யூன் மாதம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் மதுபானம் அருந்திய பெண் 4 வயது மகளுடன் சிறையில் அடைபட்ட கொடுமை!!

விமான பயணத்தின் இடையே மது அருந்திய பிரித்தானிய தாயார் ஒருவர் தமது 4 வயது மகளுடன் துபாயில் சிறைவாசம் அனுபவித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் தமது 4 வயது மகளுடன் ஐக்கிய அமீரகத்தின் துபாய் சென்றுள்ளார் பல் பருத்துவரான 44 வயது Ellie Holman.

துபாயை பொறுத்தமட்டில் பொதுவெளியில் மது அருந்துவதும், மது அருந்திவிட்டு பொதுவெளியில் நடமாடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த நிலையில் விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் அதிகாரிகளால் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் மருத்துவர் Ellie Holman சிக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை கைது செய்த அதிகாரிகள், வேறு எவருடனும் அவர் தொடர்பு கொள்ளாதவாறு விமான நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

பின்னர் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை கைதியாக 3 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர். மட்டுமின்றி விசாரணை முடியும் மட்டும் நாட்டைவிட்டு வெளியேறவும் தடை விதித்துள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பாக சட்ட உதவிபெற இதுவரை சுமார் 30,000 பவுண்ட்ஸ் வரை செலவானதாக கூறும் மருத்துவர் எல்லி, இதுவரையான தமது சேமிப்பு எல்லாம் கரைவது மட்டுமல்ல, பணிக்கு திரும்பவும் முடியாமல் அல்லல்படுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 13 ஆம் திகதி மருத்துவர் எல்லி தமது 4 வயது மகளுடன் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் சென்றுள்ளார்.

அவருக்கு உணவுடன் ஒரு கோப்பை திராட்சை மது வழங்கப்பட்டுள்ளது. துபாயில் தரையிறங்கியதும் பரிசோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அவரது விசாவானது காலாவதியாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அவர் மது அருந்தியுள்ளதாகவும், அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெரிவித்துள்ளனர்.

சிறையில் இருந்த 3 நாட்களும் போதிய உணவு, மாற்று உடை என எதுவும் வழங்கப்படவில்லை எனவும், கழிவறை கூட சுத்தமாக இல்லை எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

3 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்னர் தற்போது பிணையில் வெளிவந்திருக்கும் எல்லி குழந்தையை கணவரிடம் ஒப்படைத்து இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

விசாரணை முடியும் வரை எல்லி துபாய் விட்டு வெளியேற முடியாது என்பதால் தமது நண்பர்களுடன் தற்போது தங்கி வருகிறார்.

கல் நெஞ்சம் படைத்தவர்களையும் கரைய வைக்கும் கருணாநிதியின் வீட்டில் நடக்கும் காட்சி!!

கோபாலபுர இல்லத்தில் கருணாநிதியின் நாற்காலியும், அவருக்கு பூ போடப்பட்டு இருக்கும் படத்தை பார்த்தப்படியே படுத்திருக்கும் அவரின் வளர்ப்பு பிராணி புகைப்படமும் கல் நெஞ்சம் படைத்தவர்களையும் கரையவைத்துள்ளது.

கருணாநிதிக்கு செல்லப்பிராணி என்றால் உயிர். அவரின் கோபாலபுர இல்லம் மற்றும் சிஐடி காலனியிலும் லாசா அப்ஸோ மற்றும் பக் வகை நாய்களை வளர்த்தார்.

அந்த நாய்கள் மீது கருணாநிதிக்கு அலாதியான அன்பு. கோபாலபுரம் இல்லத்தில் லாசா அப்ஸோ நாயுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்து பல தலைவர்கள் பிரமித்து கேட்டுள்ளனர்.

கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கும் போது தினமும் ஒரு முறையாவது அந்த நாய்களை மடியில் வைத்து கொஞ்சுவாராம்.

வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் கருணாநிதி பேச்சு அல்லது வீடியோ வந்தால் அந்த நாய்கள் உடனே ஓடிப்போய் தொலைக்காட்சியில் தெரியும் கருணாநிதிக்கு முத்தம் இடும்.

தினமும் அந்த நாய்களுக்கு தனது கையால் உணவு அளிப்பவர் கருணாநிதி தான். ஆனால், நிரந்தரமாக பிரிந்துவிட்ட கருணாநிதி இனி வரமாட்டார் என்பது இந்த நாய்களுக்கு தெரியாமல் அவரது புகைப்படத்தை பார்த்துக்கொண்டு படுத்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமாதியில் கருணாநிதியின் படத்தைப் பார்த்து குதூகலித்த கொள்ளுப்பேரன் : நெகிழ வைக்கும் சம்பவம்!!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஓய்வு நேரத்தில் அவரை தினமும் சந்தித்து விளையாடி வந்த அவரது கொள்ளுப்பேரன், சமாதியில் கருணாநிதியின் படத்தைப்பார்த்து குதூகலித்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.

கருணாநிதி உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நேரத்தில் அவரது பேரன் அருள்நிதியின் 2 வயது மகன் மகிழன் தான் அவருக்கு பேச்சுத்துணையாக இருந்த உறவு.

ஒரு காலத்தில் 18 மணி நேரத்திற்கு மேலாக உழைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. ஓய்வின்றி உழைத்த அவர் புத்தகம் வாசிப்பதையும், எழுத்துப்பணியையும் தனது வாழ்க்கையாகவே மாற்றிக்கொண்டவர்.

தமிழக அரசியலில் கடந்த 2016-ம் ஆண்டு வரை முழுநேரமும் இயங்கக்கூடிய அரசியல் தலைவராகவும் விளங்கினார்.

ஓய்வுக்கு ஓய்வு கொடுப்பவர் என்று கட்சிக்காரர்களால் புகழப்பட்ட கருணாநிதியும் ஒரு கட்டத்தில் அறைக்குள் முடங்கிப்போனார்.

தொண்டையில் பொருத்தப்பட்ட குழாய் பேசுவதற்கு சிக்கலை உருவாக்க, கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி வந்த அவருக்கு உற்சாகத்தைத் தரும் மருந்தாக அப்போது விளங்கியது மகிழன்தான்.

கருணாநிதியிடம் மிகவும் ஒட்டுதலாக இருந்த பேரன் மகிழனுக்கு அவரது மரணம் கூட விளையாட்டுதான். நேற்று மாலை கருணாநிதியின் சமாதிக்கு வந்த அவரது குடும்பத்தார் பேரன் மகிழனையும் அழைத்து வந்திருந்தனர்.

சமாதியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கருணாநிதியின் படமும் வைக்கப்பட்டிருந்தது. அனைவரும் அஞ்சலி செலுத்தியபோது அருள்நிதியின் தாயார் தனது பேரனை கீழே இறக்கிவிட்டார். தாத்தாவின் படத்தைப் பார்த்து உற்சாகமான மகிழன் கைகளை உயர்த்தி, குனிந்து தாத்தாவின் சமாதியில் குதூகலத்துடன் வணங்கினான். தாத்தாவின் படத்தைப் பார்த்து கைகளை உயர்த்தி அழைத்தான்.

தாத்தாவின் அந்திமக் காலத்தில் நெருக்கமாக இருந்த கடைக்கோடி உறவான கொள்ளுப்பேரன் மகிழனுக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை, வளர்ந்து நினைவு தெரியும்போது அவர் நினைத்துப் பார்க்க வாய்ப்புள்ளதை எண்ணி குடும்பத்தினர் நெகிழ்ச்சி கொண்டனர்.

14 கைதிகளின் விடுதலைக்கு உதவிய சிறுவனுக்கு கிடைத்த கெளரவம்!!

போபாலில் 10ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 14 கைதிகளை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்காக பணம் கொடுத்து உதவியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

போபாலை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் Ayush Kishore, கல்விக்காக தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். இதன் காரணமாக கிசோருக்கு பல்வேறு உதவித்தொகைகள் வந்தவண்ணம் உள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு சிறையிலிருந்து தப்பிய சில கைதிகள், சிறைக்காவலரை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.

அடுத்த சில தினங்களில் அவருடைய மகளுக்கு திருமணமும் நடைபெறவிருந்தது. இதனை அறிந்த கிசோர் அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்துள்ளார். தனக்கு கிடைத்த பரிசுத்தொகை ரூ.10000-ஐ அந்த பெண்ணிற்கு கொடுத்து உதவியுள்ளார்.

மகனின் உதவும் குணத்தை நினைத்து பெருமையடைந்த தாய், சிறையில் கைதிகள் படும் வேதனை குறித்து விவரித்துள்ளார். இதனை அறிந்த கிசோர், தண்டனை காலம் முடிந்து அபராதத்தொகை செலுத்த முடியாமல் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு உதவ வேண்டும் என முடிவெடுத்தார்.

அதன்படி, ரூ.27,850 அபராதத்தொகை செலுத்தி இந்தூர் சிறையிலிருந்து 12 கைதிகளும், போபால் சிறையிலிருந்து இருவரும் வெளியில் வர உதவியுள்ளார். கொலை குற்றவாளிகளான இவர்கள் 14 பேரும் வரும் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இதுகுறித்து கிசோர் கூறுகையில், கடந்த ஜனவரி மதம் 4 சிறை கைதிகள் வெளியில் வர உதவி செய்தேன். குடும்பத்தினரை சந்தித்ததும், அவர்கள் அனைவரும் அளவற்ற மகிச்சியில் இருப்பதை பார்த்து மிகுந்த உற்சாகமடைந்தேன். அப்போதுதான் நிறைய கைதிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது என கூறியுள்ளார்.

தாமரைத் தடாகத்தில் விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

மட்டக்களப்பு – மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் தாமரைத் தடாகத்தில் தவறி விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மட்டக்களப்பு – திருச்செந்தூரைச் சேர்ந்த 7 வயதுடைய அனுரஞ்சித் அனுசிரா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

மயிலம்பாவெளி – காமாட்சி கிராமத்தில் அமைக்கப்படும் வீட்டுத்திட்டத்தினை உத்தியோக பூர்வமாக கையளிப்பதற்காக வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ எதிர்வரும் 13ஆம் திகதி வருகை தரவுள்ளார்.

இந்த வீட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியில் தாமரைத் தடாகம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தடாகம் அமைக்கப்படும் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தடாகத்தினுள் குழந்தை மிதப்பதை கண்ட அயலவர்கள் உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் காப்பாற்ற முடியவில்லை என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு : விபரம் உள்ளே!!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று தொடக்கம் இரண்டு வகை எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் நிதி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்தார்.

அதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலை 2 ரூபாவாலும் , சூப்பர் டீசல் லீற்றரின் விலை ஒரு ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விலை மாற்றத்துக்கு அமைவாக தற்போது 155 ரூபாவாக காணப்படும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 157 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், 129 ரூபாவாக காணப்பட்ட சூப்பர் டீசல் லீற்றரின் விலை 130 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் ஒடோ டீசலின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி , ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை தொடர்ந்து 145 ரூபாய்க்கும் , ஒடோ டீசல் லீற்றரின் விலை 118 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

தாய்க்கு எமனாக மாறிய மகளின் காதலன் : கொழும்பில் நடந்த கோர சம்பவம்!!

கொழும்பின் புறநகர் பகுதியான கொட்டாவை பிரதேசத்தில் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3.30 முதல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டாவை, சுஹத பிளேஸ், சிறிமல்வத்தை பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த 55 வயதான ஸ்ரீயானி கொடிக்கார என்ற பெண்ணே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகளது காதலன், இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொலையை செய்த சந்தேகநபர் காதலியையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதில் காயமடைந்த அந்த பெண் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. கொலை செய்த சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கொட்டாவை பொலிஸார் கூறியுள்ளனர்.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் 06ஆம் நாள் உற்சவம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேதஅகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள்உற்சவத்தின் ஆறாம்நாளான நேற்று (09.08.2018) காலைமுதல்அபிசேகங்கள்மூலஸ்தான பூசை, யாகபூசை, கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினொரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம்வந்து இடப வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

மாலையில் ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசைஇடம்பெற்று அகிலாண்டேஸ்வரி அம்பாள் இடப வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் 5ஆம் நாள் உற்சவம்!(படங்கள் ,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேதஅகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின் ஐந்தாம்நாளானநேற்று முன்தினம் (08.08.2018)காலைமுதல் அபிசேகங்கள் இடம்பெற்று கும்பபூஜை கொடிதம்பபூஜையை தொடர்ந்து 11.00 மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து அம்பாள் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வளம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .
மாலையில் 7.00 மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து அம்பாள்உள்வீதி வலம் வந்து இடப வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழவும் இடம்பெற்றது.

வவுனியாவில் ‘விபத்தை தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்புப் பேரணி!!

‘விபத்தை தடுப்போம் இன்னுயிர்களை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இன்று (10.08.2018) காலை 10 மணியளவில் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் குலசிங்கம் திலீபன் தலைமையில் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்னால் ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணியானது மணிக்கூட்டு சந்தி வழியாக பசார் வீதியூடாக பயணித்து அங்கிருந்து மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

பேரணியில் கலந்துகொண்டவர்கள், உங்களது வேகத்தினால் பறிபோவது எமது தலைமுறையினரே! வேகமாய் போவது வாகனங்கள் மட்டுமல்ல மனித உயிர்களும்தான்! ஒன்றையோன்று முந்திச் செல்வதுதான் உங்கள் திறமையா! உங்கள் முந்துதல்களால் மாண்டது எமது பிள்ளைகளே! சாரதிகளே உயிர்களோடு விளையாட வேண்டாம் போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.

கவனயீர்ப்பு பேரணியை தொடர்ந்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் பாடசாலை சிறுவன் ஒருவனால் மகஜர் ஒன்றும் கையளிக்கபட்டது.

மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் வவுனியா மாவட்ட போக்குவரத்து தொடர்பாக இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்து சாரதிகள், முச்சக்கரவண்டி சாரதிகள், பொலிசாருடனும் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி இதற்கான தீர்வை வெகு விரையில் பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார்.

முகத்தை மூடிக் கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய இளம் தாயார் : குவியும் பாராட்டுக்கள்!!

மெக்சிக்கோ நாட்டில் முகத்தை மூடிக் கொண்டு தனது பிஞ்சு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய இளம் தாயாருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தாய்க்கும், குழந்தைக்கும் இடையே உணர்வுப்பூர்வமான பந்தத்தை ஏற்படுத்துவதும், பிறந்தவுடன் குழந்தைக்கு கிடைக்கும் முதல் பரிசாக பார்க்கப்படுவது தாய்ப்பால் தான். இன்றைய நவீன உலகில் தாய்ப்பால் கொடுப்பதை ஆபாசம் போல் பார்ப்பதாக பல விவாதங்கள் இருந்து வருகின்றன.

சமீபத்தில் மலையாள நாளிதழ் ஒன்றில் பிரபல நடிகை குழந்தைக்கு பால் ஊட்டுவது போன்ற அட்டைப்படம் ஏற்படுத்திய விவாதம் நீதிமன்றம் வரை சென்றது. இந்நிலையில் மெக்சிகோவில் இளம் தாயார் ஒருவர் ஹொட்டலில் அமர்ந்தப்படி தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

தாய்ப்பால் கொடுக்கும் அந்த பெண் தனது முகத்தை துணியால் மூடியுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த புகைப்படத்தை அந்த பெண்ணின் உறவுக்கார பெண் ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “படத்தில் இருக்கும் பெண்ணிடம் அவரின் மாமியார் குழந்தைக்கு பாலூட்டும் போது துணியால் மறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.அதைத்தான் அவளும் செய்துள்ளார்.” (துணியால் அவளது முகத்தை மறைத்துக் கொண்டாள்) என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணிற்கு தங்களின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். காரணம், அந்த பெண் முகத்தை மறைக்காமல் பொது இடத்தில் தாய்ப்பால் கொடுத்திருந்தால் அதையும் ஒரு விவாதப் பொருளாக மாற்றி இருப்பார்கள்.

நல்ல வேளை எந்தவித விவாததிற்கும் இடம் அளிக்காமல் அவர் தனது முகத்தையே மூடிக்கொண்டார் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கருணாநிதிக்கான சந்தனப் பேழை தயாரானது எப்படி?

திமுக தலைவரான கலைஞர் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கான சந்தனப் பேழை 12 மணிநேரத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, கடந்த 7ம் திகதி மாலை 6.10 மணியளவில் காலமானார்.

இதனை தொடர்ந்து கோபாலபுரம் வீடு, சிஐடி காலனியில் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 8ம் திகதி காலை முதல் ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

பிரபலங்கள், பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்த அன்றைய தினம் மாலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இவருக்கு தயாரான சந்தன பேழையில், ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

சுமார் 75 கிலோ தேக்கு மரங்களைப் பயன்படுத்தி 12 மணிநேரத்தில் இந்த சந்தனப் பேழை செய்யப்பட்டுள்ளதாம்.

இதை உருவாக்கிய பிளையிங் ஸ்குவார்டு நிறுவன உரிமையாளர் கூறுகையில், 7ம் திகதி மாலை 6.30 மணியளவில் சந்தனப் பேழை தயாரிக்குமாறு கூறப்பட்டது.

இதனையடுத்து மூன்று மாதிரிகள் குடும்ப உறுப்பினர்களிடம் காண்பிக்கப்பட்டு, ஒன்றை தெரிவு செய்து தந்தனர்.

உடனடியாக சுமார் 10 மணியளவில் 8 ஊழியர்கள் பணியை தொடங்கினர், 6 அடி நீளத்தில் 2.5 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டது.

சுமார் 75 கிலோ தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டன, உள்பகுதி முழுதும் உயர்ரக துணியால் அலங்கரிக்கப்பட்டது.

பேழையின் இருபுறமும் 6 தங்க முலாம் பூசிய கைப்பிடிகளும், நட்சத்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன, பணிகள் அனைத்தும் 8ம் திகதி காலை 10 மணிக்கு முடிந்தது என தெரிவித்துள்ளார்.

மனைவியின் தொல்லை தாங்கமுடியாமல் இறந்தது போல் நடித்த கணவன்!!

அமெரிக்காவில் மனைவி தொடர்ந்து பணம் கேட்டு டார்ச்சர் செய்ததால், கணவர் இறந்தது போன்று புகைப்படம் ஒன்றை அவருக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவர் Danny Gonzalez(27). தற்போது இவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் இறந்துவிட்டதாக கூறி, இவர் தொடர்பான புகைப்படம் மத்திய அமெரிக்காவின் Saba பகுதியில் இருக்கும், அவரது மனைவிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், அவரது மூக்கில் பஞ்சு மற்றும் வாயில் ஒரு வெள்ளை நிற பேப்பர் போன்றை வைக்கப்பட்டிருந்துள்ளது. கேன்சர் மற்றும் ஆஸ்துமா காரணமாக இறந்துவிட்டார் என்ற தகவல் மனைவிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இதைக் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் மனைவி அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் அவரின் உறவினர் ஒருவர் அந்த புகைப்படத்தை நன்றாக பார்த்த போது, அவர் உடலில் போத்தியிருந்தது ஒரு பில்லோ எனவும், அதுமட்டுமின்றி Danny Gonzalez சிரிப்பதும் போன்று இருந்துள்ளது.

இதையடுத்து உள்ளூர் மீடியாவும் அவர் இறக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளது. அதன் பின் இது குறித்து Danny Gonzalez-யிடம் கேட்ட போது, என் மனைவி வாரந்தோறும் எனக்கு கால் செய்து பணம் அனுப்புமாறு டார்ச்சர் செய்வாள்.

நானும் அதை எல்லாம் மீறி அனைத்தும் செய்வேன். ஆனால் சமீபத்தில் அவளின் நடவடிக்கை எல்லை மீறியதால் இது போன்று செய்தேன் என கூறியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்தபோது மனைவியின் கழுத்தில் தாலி இல்லாததால் கொலை செய்த கணவன்!!

இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவானந்தம் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்து காதல் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தேவானந்தம் (வயது 35). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வாள்வச்சகோஷ்டம் பகுதியை சேர்ந்த ரத்தினமணி மகள் ஷைலா (31) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுனித் (8) என்ற மகனும், அடோனா (3) என்ற மகளும் உள்ளனர்.

வெளிநாட்டில் தான் வேலைபார்த்து சம்பாதித்த பணத்தை தனது மனைவிக்கு அனுப்பிவிடுவார் தேவானந்தம். இந்நிலையில் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த தேவானந்தம், தான் அனுப்பிய பணத்திற்கான விவரங்களை கேட்டுள்ளார்.

அதற்கு ஷைலா சரியான பதிலை சொல்லாமல் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஷைலா கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

பிறகு, சமாதானம் ஆகி வீட்டுக்கு வந்த ஷைலாவிடம் , தேவானந்த் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் கோபம் கொண்டு, கழுத்தை நெறித்தும் தலையணை வைத்து அமுக்கியும் கொலை செய்துள்ளார்.

மனைவியை கொன்றதை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்து விட்டு வெளியேறினார். இதற்கிடையே பொலிசார் தேடுவதை அறிந்த பக்ளி தேவானந்தம் நேற்று மதியம் தக்கலை பொலிசில் சரணடைந்தார். இதனையடுத்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கணவன் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஊருக்கு வந்தபோது என்னுடைய மனைவியின் கழுத்தில் தாலி செயின் இல்லை. அது எங்கே என்று கேட்ேடன். குழந்தைகளின் படிப்பு செலவுக்காக நகைகளை அடகு வைத்து விட்டேன். மேலும் குடும்ப செலவுக்கு கடன் வாங்கி உள்ளதாகவும் கூறினாள். மாதந்தோறும் நான் அனுப்பும் பணம் எங்கே என கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

நான் பணம் எதுவும் அனுப்பவில்லை என என்னிடம் பொய் கூறினாள், இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இதில் கோபம் கொண்டு, கழுத்தை நெறித்தும் தலையணை வைத்து அமுக்கியும் கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

ஏவுகணை தாக்குதலில் 29 பள்ளிக் குழந்தைகள் பலி : கதறி அழுத தந்தை : பதறவைக்கும் சம்பவம்!!

ஏமனில் கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் அரசுக்கூட்டுப்படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 29 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஏமனில் அதிபர் ஆதரவுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இதில் ஏமன் தலைநகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும், அதிபருக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் வான்வழித்தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதியானா சாடா மாகாணத்தின் மார்க்கெட் பகுதியில் அரசுப்படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இதில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற வாகனம் பலத்த சேதமடைந்தது. பேருந்தில் இருந்த குழந்தைகளில் 29 பேர் உயிரிழந்ததாக ஏமனில் உள்ள செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் 51 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாகனத்தில் கிடந்த குழந்தையின் சடலத்தைக் கண்ட தந்தை ஒருவர் கதறி அழுத காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.