மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி : பார்க்க குவியும் பொதுமக்கள்!!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மனித உருவில் பிறந்துள்ள ஆட்டுக்குட்டியை பார்க்க ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக கூடி வருகின்றனர்.

துறையூர் அருகே நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவர் வளர்த்த ஆடு ஒன்று சமீபத்தில் இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது.

அதில் ஒரு குட்டி மனித உருவில் இருந்ததால், அக்கம் பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் விரைந்து சென்று அதனை ஆச்சர்யமாக பார்த்துள்ளனர்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அந்த குட்டி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அறிந்து கோவிந்தராஜ் வீட்டிற்கு விரைந்து சென்ற கால்நடை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், கருமுட்டை சரிவர வளர்ச்சி அடையாததே குட்டி மனித உருவில் பிறந்ததற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

அக்காவை இதனால் தான் கொலை செய்தேன் : தம்பியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

தமிழ்நாட்டில் அக்காவை கழுத்தை நெரித்து கொலை செய்த தம்பியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்தவர் சரணமணி (40). இவருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் வீட்டில் துர்நாற்றம் வீசியதால், பொலிசார் கதவை உடைத்து சோதனையிட்டனர். அப்போது கட்டில் அருகே அமர்ந்த நிலையில் சரணமணி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்த நிலையில் சரணமணியின் தம்பி உறவு முறையுள்ள சடையாண்டி (38) தான் அவரை கொலை செய்தார் என தெரியவந்தது.

சடையாண்டியை பொலிசார் கைது செய்த நிலையில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், சரணமணியிடம் அதிக பணப் புழக்கம் இருந்தது. அதனால் அவரிடம் 1.50 லட்சம் பணத்தை கடனாக வாங்கினேன்.

அந்த பணத்தை அவர் திரும்பி கேட்ட போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் சரணமணி கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என கூறியுள்ளார். தொடர்ந்து சடையாண்டியிடம் விசாரணை நடந்து வருகிறது.

சக மாணவிகள் கிண்டல் செய்ததால் தீக்குளித்த மாணவி : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவர், சக மாணவிகள் குண்டாக இருப்பதாக கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலைப் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் பாபு. இவரது மகள் திவ்யா, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், திவ்யாவின் வகுப்பில் மாணவிகள் சிலர் அவர் உடல் பருமனாக இருப்பதாகக் கூறி கிண்டல் செய்து வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த திவ்யா, இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளார். மேலும் தனது பெற்றோரிடமும் இதுகுறித்து கூறியுள்ளார்.

திவ்யாவின் பெற்றோர் ஆசிரியர்களை சந்தித்து இதுகுறித்து புகார் கூறியதைத் தொடர்ந்து, திவ்யாவை வேறு வகுப்பிற்கு மாற்றுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், திவ்யா வேறு வகுப்பிற்கு மாற்றப்படவில்லை.

மேலும், சக மாணவிகள் அவரை தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த திவ்யா, வீட்டிற்கு சென்று தனது தாயாரிடம் புலம்பியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில், திவ்யா மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், திவ்யா சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணமடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

நான் அழகாக இருக்கின்றேன் கைது செய்ய வேண்டாம்: இளம்பெண்ணின் பேச்சுக்கு கிடைத்த தண்டனை!!

கரோலினாவில் மது அருந்திய வாகனம் ஒட்டிய இளம்பெண் ஒருவர், நான் அழகாக இருக்கிறேன் என்னை கைது செய்யாதீர்கள் என கூறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு கரோலினா மாகாணத்தின் Bluffton பகுதியில் 33 வயதான Lauren Elizabeth என்ற பெண் வேகமாக காரில் சென்றுள்ளார். இதனை பார்த்த ரோந்து பொலிஸார் ஒருவர் அந்த பெண்ணின் வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்துள்ளார். அதில் Elizabeth மது அருந்தியிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை பொலிஸார் கைது செய்ய முயன்ற போது, நான் உயர் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவள். நான் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டதில்லை. என்னை இப்போது கைது செய்தால் என் வாழ்க்கை பாதிக்கப்படும் என கூறியுள்ளார்.

பின்னர் அவரது கையில் விலங்கிட்டு சிறைக்கு அழைத்து சென்றிருந்த பொழுது, நான் சிகப்பாக, அழகான ஒரு சுத்தமான பெண்ணாக இருக்கிறேன் என கூறியுள்ளார். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என பொலிஸார் கேள்வி எழுப்பியதற்கு, நீங்கள் ஒரு பொலிஸ் நான் சொல்வதை நீங்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.

மேலும், தன்னுடைய நண்பர் கூட பொலிஸாராக இருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமையானால் அவருடைய வீட்டிற்கு செல்வேன் என கூறியுள்ளார். சம்மந்தப்பட்ட பெண் கூறிய எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட அந்த பொலிஸார், இறுதியில் மது அருந்திவிட்டு வேகமாக வாகனம் ஒட்டியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பெண்ணை சிறையில் அடைத்தார்.

இதுகுறித்து அந்த பொலிஸார், செய்யும் தவறை இதுபோன்ற ஒருசிலர் நியாயப்படுத்துவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வர். இவரை போல நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன் என தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபராக அனுர அபய விக்கிரம பதவியேற்பு!!

வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் புதிய வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபராக அனுர அபய விக்கிரம பதவியேற்றார்.

குறித்த பதவியேற்பு நிகழ்வு இன்றைய தினம் (10.08.2018) காலை 8.30 மணியளவில் கண்டி வீதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

பொலிஸாரின் அணி நடை மரியாதையுடன் ஆரம்பமான இந் நிகழ்வின் பின்னர் சமயத்தலைவர்களின் ஆசியுடன் சுபநேரத்தில் வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபர் கையோப்பமிட்டு பதவியினை ஏற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் , கணக்காளர் , வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியாவிலுள்ள ஏனைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், வவுனியா பொலிஸார், சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மூன்று சகோதரிகளை மிகவும் கொடூரமாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் கைது!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொனராகலை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டின் ஜூலை மாதம் வரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த 48 வயதான நபர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளான மூன்று சிறுமிகளை மிக மோசமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.

மொனராகலை கொட்டியாகல கம்மல்யாய பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 48 வயதான நபர் ஒருவரை இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர்.

குறித்த சிறுமிகளின் பெற்றோரது வறுமை நிலையை பயன்படுத்திக் கொண்டு சிறுமிகளை குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரி 10 வயதாக இருக்கும் போது முதல் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

இந்த குடும்பத்தின் ஒன்பது வயதான இளைய மகளை குறித்த நபர் கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்திய போது சிறுமிகளின் பெற்றோர் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனினும், பொலிஸார் சிறுமிகளிடம் நடத்திய விசாரணைகளின் போது அனைத்து விடயங்களும் அம்பலமாகியுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் திடீரென மூடப்படவுள்ள 37 அரசாங்க பாடசாலைகள் : காரணம் என்ன?

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக 37 அரசாங்க பாடசாலைகள் ஆகஸ்ட் 23ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 5ஆம் திகதிவரை மூடப்படவுள்ளன. இதன்படி குறித்த பாடசாலைகள் செப்டம்பர் 6ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகள் 527 மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக 8,432 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 39 பாடசாலைகளில் ஆகஸ்ட் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன.

இதற்காக 6,848 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரோயல் கல்லூரி, கொழும்பு – 4 இந்துக்கல்லூரி, மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி, வவுனியா தமிழ் வித்தியாலயம், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி உட்பட்ட 31 பாடசாலைகளே க.பொ.த உயர்தர விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி, வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி நெல்லியடி மகாவித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரி, கல்முனை ஷாஹிரா கல்லூரி உட்பட்ட 39 பாடசாலைகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறுகின்றன.

இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள் : 28 பேருக்கு கிடைத்த பேரதிர்ச்சி!!

இலங்கையில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள் 28 பேருக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விபச்சார தொழில் ஈடுபட்ட தாய்லாந்தை சேர்ந்த பெண்களுக்கு, கொழும்பு கோட்டை நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த குறித்த பெண்கள் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டமையினால் அவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனை அவர் 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.

அந்த 28 பேரில் 16 பேர் இலங்கையின் விசா விதிமுறையை மீறி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்துள்ளனர். குறித்த 16 பேருக்கு 1,50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு சட்டதத்தை மீறியமை தொடர்பில் பொலிஸாரினால் அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட விடுதியின் முகாமையாளரான இரு இலங்கை பெண்களுக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நாளாகவும் முடங்கியுள்ள ரயில் போக்குவரத்து : பெரும் சிரமத்தில் மக்கள்!!

புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து இன்றும் முன்னெடுக்கப்படும் என அந்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தீர்வு கிடைக்காததன் காரணமாக இன்றைய தினமும் பணிப்புறக்கணிப்பு தொடர்வதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள பிரச்சினையை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி முதல் புகையிரத தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தது.

இந்த பணிப்புறக்கணிப்பில் புகையிரத இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், இந்த போராட்டத்திற்கு புகையிரத கண்காணிப்பு முகாமைத்துவத்துக்கு உட்பட்ட 5 தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கியுள்ளன.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும், அரசு மற்றும் தனியார்துறை அலுவலக பணியாளர்களும், பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

சில புகையிரத நிலையங்களில் பயணிகள் எதிர்ப்பு வெளியிட்டமையினால் பதற்ற நிலைமையும் ஏற்பட்டது. எனினும், புகையிரத பணியாளர்களின் போராட்டம் இன்றும் தொடரவுள்ளது.

புகையிரத சாரதிகளுக்கு கொடுப்பனவுகள் உட்பட மாதாந்தம் 4 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான சம்பளத்தை பெறுவதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து பிரதியமைச்சர் அபயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புகையிரத தொழிற்சங்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார்.

மனித பாதத்தை ஒத்த அதிசய உருளைக்கிழங்கு!!

பிரேஸில் நாட்டில், சென்டா கதரினா பகுதியில் அதிசய உருளைக்கிழங்கொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த உருளைக்கிழங்கு மனிதர்களின் பாதத்தைப் போல் தோற்றம் அளிப்பதோடு அதில் விரல்களும், முடிகளும் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

மனித பாதத்தில் 5 விரல்களே காணப்படும். ஆனால் குறித்த கிழங்கில் 5 விரல்களுக்கு மேலதிகமாக ஒரு சிறிய விரலும் காணப்படுகின்றது.

சுமார் 8 கிலோகிராம் நிறையுடைய இந்த கிழங்கு பிரேஸில் நாட்டைச் சேர்ந்த மார்லி என்பவருடைய தோட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற அதிசய கிழங்கு தோட்டத்தின் உரிமையாளர் குறித்து மார்லி தெரிவிக்கையில்,

இந்த வகையான அதிசயத்தக்க கிழங்கை நான் எங்கும் கண்டதில்லை. நாங்கள் சுமார் 6 வருடங்களாக தோட்டம் செய்து வருகின்றோம். வீடடுக்கு பின்புறத்தில் கிழங்குடன் வேறு மரக்கறி தோட்டமும் வைத்துள்ளோம்.

நாம் இந்த கிழங்கை அறுவடை செய்யும் போது மிகவும் பயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. நாம் எமது அன்றாட உணவுத் தேவைக்காகவே இவற்றை பயன்படுத்துகின்றோம். எவ்வாறு இதனை உண்பதென்று புரியவில்லையெனத் தெரிவிக்கின்றார்.

வவுனியாவில் பெண்களின் தற்கொலையைத் தவிர்ப்பதற்கான திட்டம்!!

நுண்நிதி கடன் தொல்லை காரணமாக பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்ற நிலையில் இதனை தவிர்ப்பதற்கான பல்வேறு திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வவுனியா – சாந்தசோலைக் கிராமத்திலுள்ள பெண் தலைமைக் குடும்பங்களின் நன்மை கருதி நுண்நிதி நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை மீளப் பெற்றுக்கொள்ளவும் புதிதாக நுண்நிதி கடன்களை வழங்குவதற்கும் அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

மாதர் சங்கமும், இளைஞர் கழகமும் சனசமூக நிலையமும் எடுத்துக்கொண்ட தீர்மானம் எனத் தெரிவித்து சாந்தசோலைப்பகுதியில் இது தொடர்பான பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை சாந்தசோலையில் வீடு ஒன்றில் வைத்து நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை அப்பகுதி மக்கள் தடை செய்துள்ளதுடன் பணியாளர்களையும் அங்கிருந்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கு நுண்நிதி நிறுவனத்தின் செயற்பாடுகளை அனைத்தையும் நிறுத்திக்கொள்ளுமாறு கோரி மாதர் சங்கத்தினால் குறித்த நிறுவனங்களுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், நேற்றுபிற்பகல் சாந்தசோலையின் சில பகுதிகளில் பெண்களின் தற்கொலையைத் தவிர்ப்பதற்கான திட்டம் இன்றிலிருந்து சாந்தசோலைக் கிராமத்திற்குள் வழங்கப்பட்ட நுண்நிதிக்கடனை மீளப்பெற்றுக் கொள்ளவும் மேலும் புதிதாக நுண்நிதிக்கடன் வழங்குவதற்கும் அனுமதிக்கப்படமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம் என எழுதப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சுவிஸ் குமார் உள்ளிட்டவர்கள் வழக்கு தாக்கல் : நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!!

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் தாக்கல் செய்துய்ய மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, குறித்த மனு டிசம்பர் 13ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த அனைவரும் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு நீதியரசர்களான ஈவா வனசுந்தர, நளின் பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன அகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு வித்தியா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்த வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இரண்டு பேர் விடுவிக்கப்பட்டதுடன், 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மரண மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டை மேற்கொண்டிருந்தனர்.

யாழ். மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரும், உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு இளைஞன் கொழும்பில் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பின் வளர்ந்துவரும் இளம் கலைஞரும் ஊடகவியலாளர் மற்றும் பல்துறை கலைஞராக வலம்வந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் உள்ள தனது தங்குமிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு,கல்லடியை சேர்ந்த மாணிக்கவாசகம் விஜயரூபன்(34வயது) என்னும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் கடமையாற்றும் இவர் தனியார் இணைய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் கடமையாற்றுவதுடன் பல்வேறு துறைசார் கலைஞராகவும் அண்மைக்காலமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை தனது பணிக்காக அலுவலகம் செல்ல தயாராகிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்த நிலையில் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

10 வயதுச் சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் : பொதுமக்கள் மத்தியில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை!!

ஏமன் நாட்டில் 10 அவரது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 3 பேருக்கு பொதுமக்கள் மத்தியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா உட்பட பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில், பாலியல் துஸ்பிரயோகம், கொலை மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கல்லால் அடித்தல், துப்பாக்கியால் சுடுதல் பின்னர் தூக்கில் தொங்க விடுதல் போன்ற முறைகளின் அடிப்படையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

இந்த நிலையில் 10 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்து, கொடூரமாக கொலை செய்த மூன்று பேருக்கு ஏமனில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் சம்மந்தப்பட்ட மூன்று பேரின் தலையையும் முகம் குப்புற இருக்குமாறு, ஒரு தார்பாயின் மேல் ரத்தம் விழுமாறு 5 முறை துப்பாக்கியால் சுட்டு மரணமடைய செய்துள்ளனர்.

பின்னர் அவர்கள் மூன்று பேரையும் கிரேன் மூலம் கயிற்றில் ஏற்றி தூக்கில் தொங்கவிட்டு மரண தண்டனையை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எட்டாவது மாடியிலிருந்து விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

சீனாவில் எட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஒரு ஏழு வயது சிறுவனை கீழே நின்றவர்கள் ஒரு பெட்ஷீட்டை விரித்து காப்பாற்ற முயன்றபோதும் அவனை காயங்களின்றி காப்பாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

சீனாவின் Chongqing பகுதியில் ஒரு ஜன்னலிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டதும் அக்கம் பக்கத்தோர் உடனடியாக ஒரு பெட்ஷீட்டை விரித்துப் பிடித்தவாறு அவனுக்கு நேர் கீழே நின்றனர்.

கைகால்களை உதைத்தவாறு தொங்கிக் கொண்டிருந்த அந்த சிறுவன் கை வழுக்கி கீழே விழுந்தான்.

கீழே நின்றவர்கள் பெட்ஷீட்டை விரித்துப் பிடித்திருந்தபோதிலும் அந்த சிறுவன் விழுந்த வேகத்தில் பெட்ஷீட் கிழிந்து அவன் தரையில் சென்று மோதினான்.

கீழே விழுந்த அவன் சுய நினைவின்றி கிடக்கவே அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவன், ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையர்களை பிரமிக்க வைத்த வெளிநாட்டு பிரஜைகள்!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.

தம்புள்ளை ரஜ மஹா விகாரைக்கு அருகில் நெல் அறுவடை செய்யும் செயற்பாட்டில் வெளிநாட்டு பிரஜைகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் சேதன பசளைகளை மாத்திரம் பயன்படுத்தி நெல் பயிரிடப்பட்டிருந்தது.

தம்புள்ளையில் இயற்கையான முறையில் பயிரிடப்படும் பயிர்களை அறுவடை செய்யும் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்கு வருவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய இம்முறை வெற்றிகமாக பயிரிடப்பட்ட நெல்லை அறுவடை செய்யும் நடவடிக்கையில் வெளிநாட்டு தம்பதியர் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை காண முடிவதாக வயல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சமகாலத்தில் கிராம வாழ்க்கையை மறந்து, நவநாகரீகத்தை நாடுவோர் மத்தியில் வெளிநாட்டவர்களின் செயற்பாடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.