வவுனியாவில் வீதியில் விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

வவுனியாவில் நாய் கடித்ததில் காயமடைந்த இரு சிறுவர்களும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, உக்கிளாங்குளம், நாவலர் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 மற்றும் 5 வயது சிறுவர்களை அயல் வீட்டு நாய் கடித்ததில் காயமடைந்துள்ளனர்.

வீதியால் சென்றவர்கள் நாயை விரட்ட முற்பட்ட போது நாய் அவர்களையும் கடிக்க முற்பட்டது.

இந்நிலையில் வீதியில் ஒன்று கூடிய மக்கள் நாயை விரட்டியடித்துடன் காயமடைந்த இரு சிறுவர்களையும் மீட்டு வவுனியா வைத்தியாசலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

உயர் தர பரீட்சைக்கு சென்ற மூன்று மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை!!

கொத்மலை ஹரங்கல கிரிமிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் க.பொ.த உயர் தர பரீட்சைக்கு சென்ற மூன்று மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா ஹரங்கல பிரதான வீதியில் கிரிமிட்டி பகுதியில் இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கெட்டபுலா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவிகள் பரீட்சை எழுதுவதற்காக ஹரங்கல பகுதியில் அமைந்துள்ள பரீட்சை மத்திய நிலையத்திற்கு முச்சக்கரவண்டியில் செல்லும் பொழுது கிரிமிட்டி பகுதியில் மேற்படி முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த மூன்று மாணவிகளும் பரீட்சை நிலையத்திற்கு சென்று பரீட்சை எழுதிய பின்னர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், ஏனைய இரு மாணவிகளும் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று இரவு காரில் அழைத்து சென்றால் நாளை தான் விடுவார்கள் : சிறுமியின் குமுறல்!!

உத்திரபிரதேச காப்பக சிறுமிகளுக்கு பாலியல் புகாரில் ஒரு பகுதியாக கார்களில் இரவு அழைத்து சென்றால் மறுநாள் காலையில் அழைத்து வரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தியோரியாவில் ஒரு காப்பகம் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. இதை கிரிஜா திரிபாதி, அவரது கணவர் மோகன் திரிபாதி மற்றும் அவரது மகள் ஆகியோர் நடத்தி வந்தனர். இந்நிலையில் இதற்கு அரசிடமிருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து நாடு முழுவதும் காப்பகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இங்கு சில முறைகேடுகள் நடந்து வருவதாக சிபிஐ அளித்த தகவலின் பேரில் அரசும் தனது நிதியுதவி அளிப்பதை நிறுத்திக் கொண்டது.

இந்நிலையில் இந்த காப்பகத்திலிருந்து 10 வயது சிறுமி ஒருவர் தப்பி வந்து போலீஸாரிடம் ஒரு புகாரை அளித்தார். அதில் காப்பகத்தில் உள்ள 40 சிறுமிகள் இருந்தனர். அந்த சிறுமிகள் சிகப்பு, வெள்ளை, கருப்பு நிற கார்களில் இரவு அழைத்து செல்லப்பட்டால் மறுநாள் காலையில்தான் அழைத்து வரப்படுவர் என்று அந்த சிறுமி புகார் அளித்தார்.

மேலும் சிறுமிகள் அனைவரும் கட்டாயப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு அனுப்பப்படுவதாகவும், காலை நேரங்களில் வேலையாட்கள் போல் அவர்கள் நடத்தப்படுவதாகவும் அந்த சிறுமி கூறினார்.

காப்பகத்தில் இருந்து தப்பி வந்த சிறுமி கடந்த 3 ஆண்டுகளாக அந்த காப்பகத்தில் வசித்து வந்தார். அவரை வேலைக்காரி போல் தம்பதியினர் நடத்துவதாக கூறினார். மேலும் இரவு அழைத்து செல்லப்படும் சிறுமிகள் மறுநாள் காலையில் வந்து அழுவதாகவும் கூறினார்.

இதையடுத்து போலீஸார் அந்த காப்பகத்துக்கு சென்று 24 சிறுமிகள் மீட்கப்பட்டனர். மேலும் 15 சிறுமிகளை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள். கோரிக்கை இதையடுத்து அந்த காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முக்கிய நடவடிக்கைகளை யோகி ஆதித்யநாத் அரசு எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பீகார் காப்பகத்திலும் இதே நிலைதான் இதேபோல் பீகாரில் காப்பக உரிமையாளர்கள் மற்றும் காப்பகத்துக்கு நிதியுதவி அளிப்பவர்களால் 40-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த சம்பவத்தை தட்டிக் கேட்ட ஒரு சிறுமியை கொன்று காப்பக வளாகத்திலேயே புதைத்ததாக கூறப்படுகிறது.

தான் பிறந்த கருப்பையிலே தன்னுடைய குழந்தையை பெற்றெடுக்கும் தாய்!!

குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் தான் பிறந்த கருப்பையிலே தன்னுடைய குழந்தையை பெற்றெடுக்க உள்ளார்.

குஜராத்தை சேர்ந்த மீனாட்சி(27) என்ற பெண் கருப்பை இல்லாமலே பிறந்துள்ளார். நீண்ட நாட்களாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆசையிருந்தும், குழந்தையில்லாததால் பூனாவில் உள்ள கேலக்ஸி கேர் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றார்.

பின்னர் அந்த பெண்ணிற்கு, அறுவை சிகிச்சையின் மூலம் அவரது தாயாரின் கருப்பை பொருத்தப்பட்டது. தற்போது 20 மாத கர்ப்பிணியாக இருக்கும் மீனாட்சி குறித்து சிகிக்சையளித்த மருத்துவர் Shailesh Puntambekar கூறுகையில்,

20 ஆண்டுகளாக எந்த குழந்தையும் பெறாத இவரது தாயின் கருப்பை பொருத்தப்பட்டுள்ளது. கருப்பை பொருத்துவது என்பது சாதாரணமான ஒரு விஷயம் அல்ல. இதன்மூலம் தொற்றுநோய்கள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.

ஆசியாவிலே கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை பெறப்போகும் முதல் பெண் மீனாட்சி தான். உலகில் இதுவரை 9 பேர் இந்த சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

பின்னர் இதுகுறித்து சம்மந்தப்பட்ட பெண் பேசுகையில், நான் பிறந்த கருப்பையிலே என்னுடைய குழந்தையையும் பெற்றுக்கொள்ள போகிறேன் என்பதை நினைத்தாலே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

கருணாநிதி இறுச்சடங்கில் பரபரப்பாக செயல்பட்டு பலரின் பாராட்டை பெற்ற பெண் : அவர் யார் தெரியுமா?

கருணாநிதி இறுதிச்சடங்கில் பம்பரம் போல செயல்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என தெரியவந்துள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்குகள் நேற்று மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகில் நடைபெற்றது. அப்போது ஒரு பெண் அங்குமிங்கும் பம்பரமாக சுழன்று பணிகளுக்கான உதவிகளை செய்தார்.

அப்பெண் கருணாநிதியின் உறவினர் என பலரும் நினைத்திருந்த நிலையில், அவர் பெயர் அமுதா என்பதும் அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதும் தெரியவந்துள்ளது.

அமுதா கருணாநிதியின் வழியனுப்பு நிகழ்ச்சி பொறுப்பாளராக நேற்று செயல்பட்டுள்ளார். அதாவது கருணாநிதி குடும்ப உறுப்பினர்களிடம் உடல் அடக்கம் செய்வது தொடர்பான அரசு நடைமுறைகளை எடுத்துக்கூறி பரபரப்பாக செயல்பட்டார் அமுதா.

இதோடு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் திமுக தலைவரின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

இதன் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக போர்கால அடைப்படையில் செய்து கொடுத்ததோடு இறுதியாக கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரும் ஒரு பிடி மண்ணையும் அள்ளிப் போட்டார். அமுதாவின் செயல் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

என் கணவரை கொல்லனும் சீக்கிரம் வா : இளம் மனைவியின் அதிரவைக்கும் செயல்!!

இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஜகன் நாயக் (35). இவர் மனைவி தேவிகா. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தேவிகாவுக்கு நபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இது குறித்து அறிந்த ஜகன், தேவிகாவுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மது போதையில் வீட்டுக்கு வந்த ஜகன் மனைவியுடன் மீண்டும் சண்டை போட்டுள்ளார்.

இதனால் ஆத்திமடைந்த தேவிகா, கள்ளக்காதலனுக்கு போன் செய்து கணவரை கொல்ல வேண்டும் என அழைத்துள்ளார். அவர் அங்கு வந்த நிலையில் இருவரும் சேர்ந்து கொசு மருந்தை ஜகன் வாயில் ஊற்றி பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

அங்கு ஏற்பட்ட சத்தம் காரணமாக வீட்டு உரிமையாளர் வினோத் ஜகன் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதையடுத்து தேவிகாவின் காதலன் அங்கிருந்து தப்பியோட, பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார் வினோத்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஜகன் சடலத்தை கைப்பற்றிவிட்டு தேவிகாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நபரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

இலங்கையில் தங்க மழை? வீதியில் அலையென மோதும் மக்கள் கூட்டம்!!

கிண்ணியா – கொழும்பு பிரதான வீதியின் தம்பலகாம் ஊடாக செல்லும் கிண்ணியா – தம்பலகாமம் எல்லையின் பிரதான வீதியில் இன்று விசித்திர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இன்று பிற்பகல் குறித்த பகுதியினூடாக சென்ற வானில் இருந்து ஒரு தொகை தங்கம் வீசப்பட்டுள்ளது. குறித்த வானில் பயணித்த சிலர் வட்ட வடிவான, முத்து போன்ற, தங்க நிறத்தினாலான சிறிய பொருட்களை வீதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

வானிலிருந்து விழுந்த இந்த தங்க நிறத்தினாலான முத்துக்கள் மழைத்துளி போல் வீதியின் சகல இடங்களிலும் சிதறிக்காணப்பட்டுள்ளது.

இதை எடுத்த சில இளைஞர்கள் தங்கமா என்று பரிசோதிப்பதற்காக நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது அது தங்கம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவை பழைய காலத்து தங்கமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இதையறிந்த பாதசாரிகளும். அப்பகுதி மக்களும் வீசிச் சென்ற தங்கத்தை சேகரிப்பதற்காக வீதியில் குவிந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

அவ்வழியாக வாகனத்தில் செல்வோரும் தகவல் அறிந்து குறித்த பகுதியில் தேடுதல் நடத்தி தங்கம் சேகரிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை தேசிய கால்பந்து அணியில் யாழ் வீராங்கணைகள் அறுவர்!!

பூட்­டான் தலை­ந­கர் திம்­பு­வில் இடம்­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்­தின் 15 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் பங்­கு­பற்­ற­வி­ருக்­கும் இலங்கை கால்­பந்­தாட்டக் குழா­மில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தைச் சேர்ந்த ஆறு வீராங்­க­னை­கள் இடம்­பி­டித்­த­னர்.

தொட­ருக்­குச் செல்­ல­வுள்ள 23 பேர் கொண்ட குழா­மில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள வீராங்­க­னை­க­ளின் பெயர் விப­ரங்­களை நேற்­று­முன்­தி­னம் இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னம் அறி­வித்­துள்­ளது.

இதில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த முன்கள வீராங்கனைகளான ரகுதாஸ் கிருஷாந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா மற்றும் பின்கள வீராங்கனையான பாஸ்கரன் செயந்தினி ஆகியோரும், மகாஜனக் கல்லூரியின் பின்கள வீராங்கனையான எஸ்.தேவப்பிரியா, மத்தியகள வீராங்கனை யு.ஜோகிதா மற்றும் கோல் காப்பாளரான ஜெகநாதன் ஜெதுன்சிகா ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை தேசிய அணியில் தமிழ் மாணவிகள் அதிகளவில் இடம்பிடித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்கு வந்த நபரை உலக்கையால் அடித்து கொலை செய்த நபர் : இளஞ்செழியன் கொடுத்த கடுமையான தீர்ப்பு!!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாலியபுர பகுதியில் டெங்கு பார்ப்பதற்காக வீடுகளுக்கு சென்ற நபரை உலக்கையால் அடித்து கொலை செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்றில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

தம்பலகாமம், சாலியபுர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய செனரத் முதியன்சலாகே ரெஜினோல் வெல்கம என்பவருக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

2012ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 09ஆம் திகதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று சர்வோதயத்தினால் வழங்கப்பட்ட நுளம்பு வலைகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளித்து விட்டு சாலியபுர பகுதியிலுள்ள வீடுகளுக்கு டெங்கு சோதனைகளை மேற்கொள் சென்றுள்ளனர்.

இதன்போது வீடொன்றினை சோதனையிடுவதற்கு வீட்டு உரிமையாளரை அழைத்த போது “மொன டெங்கு பலன்டத ஆவே? (என்ன டெங்கு பார்க்க வந்தாய்?)” எனக் கேட்டு வீட்டு உரிமையாளர் பொதுச் சுகாதார பரிசோதகரை உலக்கையால் அடித்துள்ளார்.

இதில் குறித்த பொதுச் சுகாதார பரிசோதகர் அவ்விடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவரது உடம்பில் ஆறு காயங்கள் காணப்பட்டதாகவும் சட்ட வைத்திய நிபுணர் மன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இக்கொலையை கைமோசக்கொலை (ஆட்கொலை) குற்றம் என குறிப்பிட்டு குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் கட்ட தவறும் பட்சத்தில் மூன்று மாத கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

கருணாநிதியை அடக்கம் செய்யும்போது பேரன் செய்த நெகிழ்ச்சியான செயல்!!

திமுக தலைவர் கலைஞரின் உடலை சந்தனப்பேழைக்குள் வைத்தவுடன் குடும்பத்தினர் ஒவ்வொருவராக இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, கருணாநிதியின் பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யா, அஞ்சலி செலுத்த வருகையில் தனது தாத்தாவின் சட்டையில் பேனா இல்லாததை பார்த்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் பேனாவை வாங்கியுள்ளார். மேலும் இந்த பேனாவை நான் உங்களிடம் கொடுக்க மாட்டேன், இதனை என் தாத்தாவை வைத்துள்ள பேழைக்குள் இந்த பேனாவை வைக்கப்போகிறேன் என கூறியுள்ளான்.

அந்த அதிகாரியும் சந்தோஷம் அடைந்து, இதை விட பேறு பாக்கியம் எனக்கு கிடைக்காது என கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ஆதித்யான தனது தாத்தாவின் சட்டையில் அந்த பேனாவை வைத்துள்ளார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ்ச்சியடையை செய்தது.

கலைஞரின் சட்டைப் பையில் எப்போதும் ஒட்டிக் கிடப்பது அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் வேலிட்டி ஏர்மெயில் பேனா மட்டும் தான். பேனா இல்லாமல் எப்போதும் கலைஞர் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்!!

வானிலாளர்கள் மர்மமான, சக்தி வாய்ந்த வரைவான ரேடியோ சமிக்ஞைகள் புவியை வந்தடைவதை கண்டுபிடித்துள்ளனர். இது அறியப்பட்ட ஆண்டு, மாதம், திகதி கொண்டு FRB 180725A எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் ஆச்சர்யமான விடயம் யாதெனில் அதிகளவான சமிக்ஞைகள் ரேடியோ அலைகளின் அதிர்வெண்ணில், அதாவது 580 MHz இல் இருப்பதாகும். இதுவே முதலில் அறியப்பட்டுள்ள 700 MHz இலும் குறைவான சமிக்ஞையாகும்.

விஞ்ஞானிகள் இவ்வகை சமிக்ஞைகள் நியுத்திரன் நட்சத்திரங்களிலிருந்து வெளிவரலாம் என அனுமானிக்கின்றனர்.

ஆனாலும் இதுவரையில் இதற்கு காரணமான நிகழ்வை விஞ்ஞானிகளால் இனங்கானமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னித்துவிடுங்கள் அப்பா என கதறிய சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மனைவியை பழி வாங்க தமது இரண்டு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார் கொடூர தந்தை ஒவுவர்.

குறித்த சம்பவத்தை அடுத்து மனைவிக்கு ஒரு கடிதமும் எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் கடந்த சனிக்கிழமை இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற பொலிஸ் விசாரணையில் Marcel Ndossoka தமது குற்றத்தை பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

8 வயது சிறுவன் மற்றும் அவனது இளைய சகோரதரி ஆன் பெல் ஆகிய இருவரையும் கதற கதற கொலை செய்துவிட்டு, பிரிந்து சென்ற தமது மனைவியை அழைத்து, பரிசு ஒன்று கருதியுள்ளதாகவும் வந்து பெற்றுச்செல்லவும் என தகவல் அளித்துள்ளார்.

மட்டுமின்றி பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில், எங்கள் மூவரின் மரணத்திற்கும் காரணம் நீ தான். இந்த இழப்பின் பாரத்தை கடைசி வரை சுமப்பாய் என எழுதி வைத்துள்ளார்.

பின்னர் துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அதிற்ஷ்டவசமாக Ndossoka உயிர் பிழைத்துள்ளார்.

தற்போது தலையில் பட்ட துப்பாக்கி காயங்களில் இருந்து அவர் குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டில் இருந்து வந்து காதல் மனைவியை கொலை செய்த கணவன் : காரணம் என்ன?

இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவானந்தம் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்து காதல் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தேவானந்தம் (வயது 35). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வாள்வச்சகோஷ்டம் பகுதியை சேர்ந்த ரத்தினமணி மகள் ஷைலா (31) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுனித் (8) என்ற மகனும், அடோனா (3) என்ற மகளும் உள்ளனர்.

வெளிநாட்டில் தான் வேலைபார்த்து சம்பாதித்த பணத்தை தனது மனைவிக்கு அனுப்பிவிடுவார் தேவானந்தம். இந்நிலையில் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த தேவானந்தம், தான் அனுப்பிய பணத்திற்கான விவரங்களை கேட்டுள்ளார்.

அதற்கு ஷைலா சரியான பதிலை சொல்லாமல் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஷைலா கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

பிறகு, சமாதானம் ஆகி வீட்டுக்கு வந்த ஷைலாவிடம் , தேவானந்த் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் கோபம் கொண்டு, கழுத்தை நெறித்தும் தலையணை வைத்து அமுக்கியும் கொலை செய்துள்ளார்.

மனைவியை கொன்றதை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்து விட்டு வெளியேறினார். இதற்கிடையே பொலிசார் தேடுவதை அறிந்த பக்ளி தேவானந்தம் நேற்று மதியம் தக்கலை பொலிசில் சரணடைந்தார். இதனையடுத்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

வீட்டில் ஒளித்து வைக்கப்பட்ட 7 வயது சிறுவனின் சடலம் : 16 வயது சிறுமியின் அதிர்ச்சி செயல்!!

அமெரிக்காவில் 7 வயது சிறுவனின் சடலம் வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த வழக்கு தொடர்பாக 16 வயது சிறுமியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Colorado மாகாணத்தை சேர்ந்த ஜோர்டன் வாங் (7) என்ற சிறுவன் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் தங்கள் விசாரணை தொடங்கினார்கள்.

ஜோர்டனின் குடும்பத்துக்கு சொந்தமான வேறு வீட்டில் பொலிசார் சென்று சோதனை செய்த போது அங்கு சிறுவனின் சடலம் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர். இவ்வழக்கு சம்மந்தமாக 16 வயது சிறுமியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜோர்டனுக்கு கைது செய்யப்பட்ட சிறுமி என்ன உறவுமுறை என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. மேலும் இந்த கொலை சம்மந்தமான விபரங்களையும் பொலிசார் இன்னும் வெளியிடவில்லை.

ஆனால் ஜோர்டன் கடத்தி செல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 கலைஞர் கருணாநிதியின் பேனாவை திருடிய சிம்பு!!

தான் சிறு வயதாக இருக்கும் போது கலைஞர் கருணாநிதியின் பேனாவை திருடிவிட்டு பின்னர் திருப்பிக் கொடுத்தேன் என சிம்பு தன் சிறு வயது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

நான் 3 அல்லது 4 வயது இருக்கும் போது, என் பிறந்த நாளான பிப்ரவரி 3ம் திகதி எங்கள் வீட்டிற்கு தலைவர் கருணாநிதி அவர்கள் வந்திருந்தார்.

நான் சிறுவன் என்பதால், அவரின் மடியில் அமர்ந்திருந்தேன். அப்போது அவருக்கு தெரியாமல் அவரின் சட்டைப் பையில் இருந்த பேனாவை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தேன்.

அவர் என் குடும்பத்தினருடன் பேசி விட்டு, கிளம்பும் போது, அவரின் சட்டைப்பையில் பேனா இல்லாதது பார்த்து கேட்டார்.

அப்போது அதை வைத்து நான் விளையாடிக் கொண்டிருந்தேன். உடனே என் தந்தை அதை அவரிடம் கொடுக்க முற்பட்டார்.

இருக்கட்டும் பையனிடமே இருக்கட்டும் என்றார். ஆனால் என் தந்தை இல்லை வாங்கி கொள்ளுங்கள் என்றார். அப்போது நானே அந்த பேனாவை அவரின் சட்டையில் வைத்த ஞாபகம் உள்ளது.

என் வீட்டிற்கு என் பிறந்த நாளுக்கு அவர் வந்தார், அவர் மடியில் அமர்ந்திருந்தேன் என்று நினைக்கும் போது அதுவே மிகப்பெரிய பரிசாக கருதுகிறேன் என சிம்பு கூறியுள்ளார்.

கருணாநிதியின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த 34 பேர்!!

திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியில் 34 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த திமுக தொண்டர்கள் மதுரை அவனியாபுரம் இந்திரா, இளைஞர் அணி நிர்வாகி அழகு ராஜா , கருப்பாயூரணி நாகராஜன் ஆகியோர் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம் எலவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கச்சுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரும் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள புறா கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (47), மயிலாடுதுறை அருகே உள்ள பண்டாரவடை நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (70), மயிலாடுதுறையை அடுத்த பெரம்பூர் கீழத்தெருவை சேர்ந்த நாதஸ்வர வித்வானான ராஜேந்திரன் (50), மயிலாடுதுறை மேலபெரம்பூர் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி (56), மணல்மேடு அருகே உள்ள கொற்கை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (70) ஆகிய தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி இறந்த செய்தி கேட்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தனர்.

கருணாநிதி இறந்ததை அறிந்த ராஜா துக்கம் தாங்காமல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுவரை மொத்தம் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.