உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாணவிகள் ஆடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்த தலைமை ஆசிரியரை பொதுமக்கள் செருப்பால் அடித்துத் துவைத்தனர்.
ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள ஹசாயான் என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு புதிதாக சீருடைகள் வழங்கப்பட்டன.
தங்களுக்கு வழங்கப்பட்ட ஆடைகளை பள்ளியின் பல்வேறு பகுதிகளில் மாணவிகள் மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகள் ஆடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இது பற்றி கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்துத் துவைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மூன்று ஒளிவட்டங்களுடன் சூரியன் அஞ்சலி செலுத்திய அதிசய நிகழ்வு நடந்துள்ளது.
தஞ்சையில் பொதுமக்கள் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது காலை, 11:15 மணி முதல், 12:15 மணி வரை சூரியன் பளிச்சென ஒளி வீசியது.
இதனால், வெப்பம் அதிகமாக உணரப்பட்டது. தொடர்ந்து, ஒரு சில நிமிடங்களில், சூரியனை சுற்றி மூன்று வண்ணங்களில் திடீர் ஒளிவட்டம் தோன்றியது. இதன் அளவு, வட்ட வடிவமாக காணப்பட்டது.
இச்செய்தி, காட்டுத் தீ போல பரவியது. இதனால் அந்த பகுதி மக்கள் ஒளிவட்டத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.’கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தவே, சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றியுள்ளது என திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் யாழ் பிராந்திய போதை ஒழிப்பு பிரிவினரால் வவுனியாவில் இளைஞர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 3கிலோ 900கிராம் கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் யாழ் பிராந்திய போதை ஒழிப்புப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது வவுனியாவில் கஞ்சா வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இளைஞர் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து யாழ்ப்பாணப்பிராந்திய போதை ஒழிப்புப்பிரிவினரால் நேற்று இரவு 7 மணியளவில் வவுனியா கூமாங்குளம் பகுதி வீடு ஒன்றில் சோதனை நடாத்தியபோது 3கிலோ 900கிராம் கேரளா கஞ்சாவுடன் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் கேரள கஞ்சாவுடன் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து கிண்ணியா மூதூர் நோக்கி பயணித்த வான், யானையுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் ஹபரணைக்கும், ஹதரஸ் கொட்டுவைக்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் இளைஞர் ஒருவர் பலியானதுடன், சிறுமி உட்பட நால்வருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவத்தில் கிண்ணியா, கற்குழி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மொஹம்மட் நவீத் என்பவரே ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.
யாருமில்லாத அடர்ந்த காட்டுப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதால் குறித்த நேரத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிக வேகமாக சென்றதன் காரணமாக வீதியில் நின்ற யானையுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையிலுள்ள புந்தல வனவிங்கு பூங்காவில் பெரிய மான் ஒன்றை பாரிய அளவிலான மலைப் பாம்பு ஒன்று விழுங்கும் காட்சி கமராவில் பதிவாகி உள்ளது.
பூங்காவுக்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் இதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
நன்கு வளர்ந்த மான் ஒன்றை பாம்பு முழுமையாக விழுங்கியுள்ளது. இதற்காக சுமார் அரை மணித்தியாலங்களை பாம்பு செலவிட்டுள்ளதாக குறித்த சுற்றுலா பயணி குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் காதலால் குடும்பம் ஒன்று சிதைந்து போயுள்ளதாக பெந்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
16 வருடங்களாக சந்தோஷமாக இருந்த மனைவி, தனது கணவனை கைவிட்டுச் சென்றுள்ளார். 4 நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் ஊடாக அறிந்து கொண்ட நபருக்காக குறித்த பெண் இவ்வாறு கணவனை கைவிட்டுள்ளார்.
15 வயதுடைய மகள் உட்பட 3 பிள்ளைகளின் தாயான 40 வயதுடைய பெண் ஒருவரே இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளார்.
தனது மனைவியின் செயலை தாங்கிக் கொள்ள முடியாத கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் கண்ணீர் விட்டு அழுத கணவனை சமாதானப்படுத்தி பொலிஸார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உலக சமாதான மனிதனாக கூறப்படும் கனேடிய தமிழரான சுரேஸ் ஜோக்கிம் தமது சமாதான ஓட்டத்தின் மூலம் அதிகளவான நிதியை திரட்டும் சாதனையை எதிர்பார்த்துள்ளார்.
பல உலக சாதனைகளை புரிந்துள்ள சுரேஸ் ஜோக்கிம் கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று தமது சாதனை மரதன் ஓட்டத்தை பெத்லஹேம் நகரில் ஆரம்பித்தார்.
இந்நிலையில் அவர் எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதியன்று தமது சாதனை ஓட்டத்தை கனேடிய டொரன்டோ நகரில் நிறைவு செய்யவுள்ளார்.
இந்த சாதனை ஓட்டத்தின் போது சுரேஸ், உலக சமாதானத்தையும் வறுமையை ஒழிக்கும் அவசியத்தையும் மக்கள் மத்தியில் உணர்த்தி வருகிறார்.
அவர் தமது சாதனை பயணத்தில் 6 கண்டங்களில் உள்ள 72 நாடுகளின் 93 நகரங்களுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அவர் 220 நாட்கள் ஓடிமுடித்துள்ளார். இதன்போது 2900 கிலோமீற்றர்களை அவர் கடந்துள்ளார்.
இந்தநிலையில் தமது சமாதான மரதன் ஓட்டத்தின்போது 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட சுரேஸ் ஜோக்கிம் எதிர்பார்த்துள்ளார். இதுவரை 10 ஆயிரத்து 200 டொலர்களை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் பயணிகளின் எதிர்ப்பு காரணமாக பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்த கலகம் அடக்கும் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் ரயில் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் வேலைநிறுத்ததை ஆரம்பித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாத புகையிரத ஊழியர்கள் மற்றும் பயணிகள் இந்த ஆர்ப்பாட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவிகள் உட்பட மூவர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 5 ஆம் திகதியிலிருந்து குறித்த மூவரும் காணாமற்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பலேல்பொல மஹாபோதி வித்தியாலயத்தில் தரம் -13 இல் கல்வி கற்கும் சன்ஜீவனி குமாரி எதிரிசிங்க, கலேவெல மத்திய மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் பயிலும் தில்மி மதுவந்தி பெரேரா மற்றும் அலங்கர விற்பனை நிலையத்தில் வேலை செய்யும் 22 வயதுடைய ஜீ.எம். நிஷன்சலா ஆகிய மூன்று யுவதிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தில் கலேவெல நகரத்தில் வேலை செய்யும் குறித்த யுவதியே இரண்டு மாணவிகளையும் ஏமாற்றி அழைத்துச் சென்றிருக்க வேண்டுமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கலேவெல மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி கொழும்புக்குச் செல்வாக எழுதிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த இளம் பெண்களை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
இவர்களின் விவரங்கள் தெரிந்திருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு கோரியுள்ளனர்.
திமுக கலைஞர் கருணாநிதி தனது முதல் குழந்தை என்று அழைப்பது முரசொலி பத்திரிக்கைத்தான்.
முதலில் போர்வாள் என்று பெயர் சூட்டி பின்பு முரசொலி என்று பெயரிட்டார். ஆரம்பத்தில் துண்டறிக்கையாக வெளிவந்து கருணாநிதியின் கடின உழைப்பால் பத்திரிக்கையாக மாறியது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் அவரின் தலைமாட்டில் முரசொலி பத்திரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நீண்ட ஓய்வை பார்த்து அதுவும் ஒரு ஓரத்தில் அழுதுக் கொண்டிருக்கிறது.
மரணத்தில் தனது முதல் குழந்தை தன்னுடன் வருவதைக் கண்டு கண்டிப்பாக மகிழ்ச்சி அடைந்திருப்பார் கலைஞர்.
முரசொலி ஒரு வியாபார நோக்கமுடைய பத்திரிகை இல்லை. அது தலைவன்- தொண்டர்களிடையேயான உணர்வுள்ள உறவுப்பாலம் என்று மேடையில் உணர்ச்சியுடன் பதிவு செய்திருந்தார் கலைஞர் கருணாநிதி. அந்த உறவு பாலம் தான் தற்போது அவரின் தலைமாட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்திய டேபிள் டென்னிஸ் வீரரான சுவுமியாஜித் கோஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன் தன் மீது பலாத்கார செய்ததாக குற்றம்சாட்டு அளித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் 18 வயது இளம்பெண், இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சவுமியாஜித் கோஷ் மீது பாலியல் பலாத்காரப் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்தப் புகார் அளித்த நேரம், அவர் ஜெர்மனியில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று வந்தவேளையில் தன் மீது மேற்கு வங்கம், பரசாத் பொலிஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அறிந்த கோஷ் கைது நடவடிக்கைக்குப் பயந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணித்து வந்தார். கடந்த மே மாதம் சவுமியாஜித் கோஷ் நாடு திரும்பியுள்ளார்.
அவரிடம் பொலிசார் விசாரணை நடத்திவந்தனர். ஆனால், கைது செய்யவில்லை. இது குறித்து சவுமியாஜித் கோஷ் நிருபர்களிடம் டெல்லியில் கூறியதாவது..
“இந்தியாவில் உள்ள விளையாட்டு வீரர்கள் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அந்த கனவில்தான் நானும் தயாராகிக்கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் ஒரு பெண் அளித்த புகார், என்னை மிகவும் பாதித்தது. இதை எப்படி எதிர்கொள்வது என்றும் தெரியவில்லை.
என் மீது புகார் அளித்த பெண்ணை மைனராக இருக்கும் போதிருந்து எனக்கு தெரியும், இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம்.
ஆனால், எந்தவிதமான பலாத்காரத்திலும் ஈடுபடவில்லை. என் மீதான புகார் தொடர்பான வழக்கு முடியும் தருவாயில் இருக்கிறது. என் மீது புகார் கொடுத்த பெண்ணையே நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன்.
என்னுடைய இக்கட்டான காலத்தில் துணையாக இருந்த சகவீரர்கள் சரத் கமல், சத்யன், ஹர்மித் தேசாய் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன் ”என்று கூறியுள்ளார்.
ஆனால், திருமணத்துக்கான காரணத்தை அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
கோஷ் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணும் தற்போது அவரைத் திருமணம் செய்தவரான துலிகா தத்தா இது குறித்து கூறுவதாவது,
‘‘காதலித்தவரை திருமணம் செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய கணவர் மீது கொடுத்துள்ள புகாரை திரும்புப் பெற இருக்கிறேன். அதற்கான பணியில் வழக்கறிஞர் ஈடுபட்டுள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறோம். எங்களுக்குள் இருந்த தவறான புரிதல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டது’’ எனக் கூறியுள்ளார்.
தனது முன்னாள் காதலி வேறொருவருடன் தொடர்பிலிருப்பதாக சந்தேகமடைந்த காதலன் அவளை ட்ராக் செய்யும் கருவி ஒன்றை அவளது காரில் பொருத்தினார்.
David Jones (37) தனது முன்னாள் காதலியான Stacey Buckley மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவள் எங்கு செல்கிறாள், யாருடன் பழகுகிறார் என்பதை அறிய முடிவு செய்தார்.
அதனால் அவளது காரில் ட்ராக்கிங் கருவி ஒன்றை பொருத்திய David அவள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அங்கு சென்றார்.
அவர் சந்தேகப்பட்டது போலவே அவர் கண்டு பிடித்த விடயம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் Staceyயுடன் இருந்தது ஒரு காதலர் அல்ல காதலி. David, Staceyயைப் பிரிந்தபின் அவள் ஒரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் தன்னை David வேவு பார்ப்பதைக் குறித்து Manchester நீதிமன்றத்தில் புகாரளித்தார் Stacey.
தான் எங்கு சென்றாலும் தன்னை David பின் தொடர்வதாகவும், தான் அவரைப் பிரிந்த பின்னும் எப்போதும் அவரைக் குறித்த அச்சத்திலேயே வாழ்வதாகவும் தெரிவித்திருந்தார் அவர்.
வழக்கை விசாரித்த Manchester நீதிமன்றம், இனி Staceyயைப் பார்க்க Davidக்கு தடை விதித்துள்ளதோடு அவரை குற்றவாளியாகத் தீர்த்துள்ளது.
இந்த மாத இறுதியில் அவருக்கான தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
இந்தோனேசியாவில் ஆவி புகுந்ததாக கூறி 12 வயது சிறுமி 15 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த 2003-ம் ஆண்டு Bajugan என்று கிராமத்தில் 12 வயது சிறுமி ஒருவர் திடீரென மாயமாகியுள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று Tolitoli regency பகுதியில் அந்த பெண்ணை கண்டறிந்தனர்.
தற்போது 28 வயதாகும் அந்த பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், இறந்த தன்னுடைய காதலன் Amrin ஆவி, JG என்ற 83 வயது முதியவரின் உடலில் புகுந்துள்ளதாக கூறி, தினமும் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆவிகள் மற்றும் அமானுஷ்யம் பற்றிய செய்திகளில் அதிக ஈடுபாடு கொண்ட இந்தோனேசியாவில், முதியவரின் பேச்சை கேட்டு அந்த சிறு வயதில் பெண்ணும் ஏமாற்றம் அடைந்து இத்தனை வருடங்களாக உறவு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான வழக்கினை நேற்று விசாரித்த நீதிபதி, சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி JG-க்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
South Carolina-வில் இளம்பெண் ஒருவர், தான் காரில் பெற்றெடுத்த குழந்தையை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் வைத்திருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
South Carolina-வை சேர்ந்த Brennan Hailey Geller (21) என்ற இளம்பெண் அங்குள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பகுதிநேரமாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த வெள்ளிக்கிமையன்று, திடீரென ஏற்பட்ட பிரசவ வலியால் காரிலேயே குழந்தை பெற்றுள்ளார்.
அந்த குழந்தையினை இரக்க்கமின்றி கொலை செய்த அவர், பிளாஸ்டிக் பையில் குழந்தையின் உடலை வைத்துவிட்டு, அதிகமான ரத்தப்போக்கின் காரணமாக அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவசர பிரிவில் தீவிர சிகிச்சை பெற்ற Geller-டம் குழந்தை மருத்துவர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் எந்தவித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த மருத்துவ ஊழியர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் Geller-ரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் தொடர்ந்து குழந்தை குறித்த எந்தவித தகவலையும் அளிக்காததால் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதில், காரில் அடிப்பகுதியில் இருந்த ஒரு பிளாஸ்டிக் பையில் குழந்தையின் உடலிருப்பதை பொலிஸார் கண்டறிந்து Geller மீது வழக்கு பதிவ செய்தனர்.
பின்னர் இதுகுறித்து பொலிஸார் பொலிஸார், Geller-க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.
இதுகுறித்து Geller-ன் நண்பர்கள் பலரும் தங்களுடைய முகப்புத்தகத்தில், அவள் கர்ப்பமாக இருந்ததை எங்கள் அனைவரிடமும் இருந்து மறைத்துவிட்டாள் என வேதனை தெரிவித்துள்ளனர்.
சிலாபம் பிரதேச சபையின் மாதம்பே பகுதியில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரியொருவர் அந்த அலுவலகத்தின் களஞ்சியசாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அந்த அலுவலகத்தின் அதிகாரிகளால் நேற்று மாலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்துள்ளவர் சிலாபம் பிரதேச சபையில் களஞ்சியசாலை பொறுப்பாளராக கடமையாற்றிய 37 வயதான நபர் என தெரியவந்துள்ளது.
நேற்று பிற்பகல் உணவு இடைவேளைக்கு பின்னர் குறித்த அதிகாரியை காணாததால் ஏனைய அதிகாரிகள் அவரை தேடியுள்ளனர்.
பின்னர் அவரின் தொலைபேசிக்கு அழைத்த போது களஞ்சியசாலை அறையில் இருந்து தொலைபேசியின் ஒலி கேட்டுள்ளது.
அதன் பின்னர் அறையை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.