வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரிசமேத அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின் நான்காம் நாளான நேற்று (07.08.2018)காலை முதல் அபிசேகங்கள் மூலஸ்தான பூசை, யாகபூசை, கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம் வந்து காமதேனுவாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
மாலையில் ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள் மயில் வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
வாகனம் வாங்க காத்திருப்போருக்கு இராஜாங்க அமைச்சர் அஜித் பீ பெரேரா மகிழ்ச்சியான தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில் 1000 ccஇற்கும் குறைந்த திறனுடைய வாகனங்களுக்கு அறவிடப்படும் மேலதிக வரியை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த மேலதிக வரியை விரைவில் விலக்கிக் கொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
1000 cc இற்கு குறைவான திறனுடைய அனைத்து மோட்டார் வாகனங்கள் மற்றும் ஹைட்பிரிட் வாகனங்களுக்கு அறவிடப்படுகின்ற தயாரிப்பு வரியை அதிகரிக்க கடந்த 15ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய என்ஜின் திறன் 1000 cc இற்கு குறைவான வாகனங்களின் இறக்குமதி வரி 1.5 மில்லியன் ரூபாவாகவும், ஹைட்பிரிட் மற்றும் மின்சார வாகனங்களின் வரி 1.2 மில்லியன் ரூபாவாகவும் திருத்தம் செய்யப்பட்டது.
கடந்த காலப்பகுதியில் இலங்கையில் இந்த மோட்டார் வாகனங்களின் இறக்குமதி அதிகரித்த நிலையிலேயே நிதி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளத்திலிருந்து முல்லைத்தீவிற்கு வியாபாரம் செய்ய வந்த மீன் வியாபாரியின் 35,640 ரூபாய் பணம் வவுனியாவில் காணாமல் போயுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், அந்த பணத்தை கடமை முடிந்து சென்ற போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் கண்டெடுத்து போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.
பணம் தவறவிட்ட குறித்த மீன் வியாபாரியை போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து தவறவிடப்பட்ட பணத்தினை வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புத்தளம் செல்வபுரம் பகுதியிலிருந்து முல்லைத்தீவிற்குச் சென்று அங்கிருந்து மீன் வியாபார நடவடிக்கை மேற்கொண்டு வரும் நபர் ஒருவர் நேற்று இரவு வவுனியா மூன்று முறிப்பு பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
வழிபாடு முடிந்தவுடன் பணப்பையை வாகனத்தின் முன் டாஸ்போட்டில் வைத்து விட்டு மறந்து சென்றுள்ளார்.
பின்னர் பணப்பையைத் தேடியலைந்த போதிலும் பணப்பை கிடைக்கவில்லை. இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டு விட்டு சென்றுள்ளார்.
இன்று காலை பணத்தை தவறவிட்ட மீன் வியாபாரிக்கு வவுனியா பொலிஸ் நிலையத்தில் இருந்து தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸார் வியாபாரியிடம் பணப்பை வழங்கியுள்ளார். மேலும், பொறுப்பதிகாரி தலைமையில் போக்குவரத்து உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.திஸாநாயக்க மற்றும் இரவுக் கடமையிலிருந்து பணப்பையினை ஒப்படைத்த திசாநாயக்க (41869), அஜித்குமார் (45213) ஆகிய இரு பொலிஸ் அதிகாரிகளுக்கும் மீன் வியாபாரி நன்றி தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் வைத்தியசாலையில் நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
திடீர் விபத்து ஒன்றில் கால் ஒன்றை இழந்த இளைஞனுக்கு மூளை சாவடைந்த நபரின் பாதம் ஒன்று வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
அனுராதபுரம், ராஜாங்கன பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இளைஞனுக்கே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரத்த கசிவினால் மூளை சாவடைந்த 52 வயதுடைய நபரின் பாதமே குறித்த நபருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
அனுராதபுரம் வைத்தியசாலையில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும் இது தொடர்பான தகவல்கள் வெளியிட வைத்தியசாலை அனுமதிக்கவில்லை.
பொதுவாக இவ்வாறான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் ஒரு வருடம் வரை சிகிச்சை பெற வேண்டும். ஒரு வருடத்தின் பின்னரே இந்த சத்திரசிகிச்சையின் வெற்றி தொடர்பில் அறிந்த கொள்ள முடியும். இதன் காரணமாகவே தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
தற்போது இந்த சத்திரசிகிச்சை வெற்றியளித்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரம் ஒரு முறை வைத்தியசாலைக்கு இந்த இளைஞன் நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு பாதம் பொருத்தும் சத்திரசிகிச்சை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். பாதம் தானம் வழங்கிய நபரின் சிறுநீரகங்களும் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
தண்டப் பணம், எரிபொருள் விலையேற்றம், சீருடைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார இந்த போராட்டம் குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனியார் பேருந்து உரிமையாளர்கள் மேற்கொள்ளும் இந்த பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களும் பணிப்புறக்கணிப்பு ஒன்றில் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் நடத்தப்படவுள்ள இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக பொது மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வாள் வெட்டு தாக்குதலுக்குள்ளான வர்த்தகரின் கை ஒன்று வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
ஹிக்கடுவ வீடு ஒன்றில் இடம்பெற்ற பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட சந்தர்ப்பத்தில் வாள் வெட்டு தாக்குதலுக்குள்ளான நபரின் கையே இவ்வாறு பொருத்தப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாள் வெட்டு தாக்குதலுக்குள்ளான இந்த நபரின் இடகு கையின் மணிகட்டு பகுதிக்கு கீழ் பகுதி பிரிந்து சென்றுள்ள நிலையில், அந்த கை பகுதியுடன் காயமடைந்தவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
6 வைத்தியர்கள் இணைந்து மேற்கொண்ட சத்திர சிகிச்சைக்கு பின்னர் துண்டாகிய கை வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
இந்த சத்திர சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் கடவுச்சீட்டைக் கொண்டு 46 நாடுகளுக்கு வீசா இன்றி பயணம் செய்ய முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, ஓர் நாட்டுக்கு சென்று வீசா பெற்றுக் கொள்ளல் அல்லது இணையத்தின் ஊடாக வீசா பெற்றுக் கொள்ளல் ஆகிய வசதிகளை உடைய நாடுகளின் எண்ணிக்கை 46 ஆக உயர்வடைந்துள்ளது.
இலங்கைக் கடவுச்சீட்டை உடையவர்கள் லாவோஸ் நாட்டிற்கு வீசா இன்றி பயணிக்க முடியும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை உலகின் அநேக நாடுகள் தங்களது சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு ஒன் அரைவல் வீசாவை வழங்குகின்றன.
மேலும், கடவுச்சீட்டு குறித்த சர்வதேச குறிகாட்டியின் அடிப்படையில் இந்த ஆண்டு இலங்கைக்கு உலக அளவில் 83ஆம் இடம் கிடைக்கப் பெற்றுள்ளது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யம் போது இலங்கைக் கடவுச்சீட்டின் ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மையின் அடிப்படையில் இந்த தர வரிசை அமைந்துள்ளது.
வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வியாபார நிலையம் ஒன்றிற்கு தேன் என்று தெரிவித்து சீனிப்பாணியை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு தலா 6 ஆயிரம் ரூபா வீதம் 18 ஆயிரம் ரூபாவும் ஒரு மாத காலம் சிறைத்தண்டனையும் தண்டப்பணம் செலுத்தத்தவறினால் மூன்று மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியாவில் நீண்டகாலமாக அம்பிகைபாலன் கோட்டத்தில் தேன் என்று தெரிவித்து வியாபார நிலையங்களுக்கும் பொதுமக்களுக்கும் சீனிப்பாணியை விற்பனை செய்து வந்த நபர் தொடர்பாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.லவன், மேற்பார்வை பொது சுகாதாரப்பரிசோகர் க.தியாகலிங்கம், பொது சுகாதாரப்பரிசோதகர் எஸ்.சிவரஞ்சன் ஆகியோரினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது மரக்காரம்பளையில் வைத்து வியாபார நிலையம் ஒன்றிற்கு சீனிப்பாணியை தேன் என்று விற்பனை செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 30 சீனிப்பாணிப் போத்தல்கள், 200 வெற்றுப் போத்தல்கள், ஒரு வெற்று பரல் போன்ற பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக நெளுக்குளம் பொது சுகாதாரப்பரிசோகர் சி.வேல்டயானினால் நேற்று நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபர் ஏற்கனவே இதுபோன்ற ஒரு குற்றத்திற்காக நீதிமன்றத்தினால் தண்டம் விதிக்கப்பட்டவர் என்பதை நீதிமன்றத்தின் கவனத்திற்குக்கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து குறித்த நபர் மீது மூன்று குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கண்டறிந்து இக்குற்றச்சாட்டுகளுக்கு தலா 6 ஆயிரம் ரூபாவீதம் 18 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் ஒரு மாத காலம் கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டப்பணத்தைச் செலுத்தத்தவறினால் மூன்று மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கட்டாரில் தனியார் நிறுவனம் ஒன்றில் சேவை செய்த இலங்கையர் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
கல்லேவெல புலனவெவ பிரதேசத்தை சேர்ந்த அசங்க பிரேமரத்ன என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர உதவுமாறும், மரணத்திற்கான காரணம் என்ன என்பதனையும் தேடுமாறும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அரசாங்கத்திடம் கேட்டுள்ளனர்.
தனது கணவனின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர தேவையான கடிதங்கள் அனைத்தையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி கட்டார் நாட்டிற்கு சாரதியாக சென்றுள்ளார். அன்றைய நாள் முதல் அவர் இலங்கையை சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் மாடி கட்டடம் ஒன்றில் தங்கியிருந்துள்ளார் என மனைவி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 28ம் திகதி அசங்க பிரேமரத்னவின் நண்பனின் மனைவி, அசங்கவின் மனைவிக்கு அழைப்பேற்படுத்தி 3 மாடி கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து அசங்க உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் அசங்கவுடன் தங்கியிருக்கும் நண்பர்கள் எவரும் தனக்கு தகவல் வழங்கவில்லை என மனைவி கூறியுள்ளார்.
உயிரிழந்தவருக்கு 9 வயதுடைய மகள் மற்றும் 3 வயதுடைய மகனும் உள்ளார். எனினும் அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அசங்கவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 28ஆம் திகதியில் இருந்து இதுவரை அசங்க தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை எனவும், அவருடன் தங்கியிருக்கும் நண்பர்கள் வீடியோ ஒன்றை imo தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். அவர் கீழே விழுந்த இடத்தில் படிந்த இரத்தத்தை வீடியோவாக எடுத்து அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வன்னி பிரதி பொலிஸ் மா அதிபரின் சேவையை பாராட்டியும், மதிப்பளிக்கும் முகமாகவும் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் பிரியாவிடை நிகழ்வு இன்று (07.08.2018) இடம்பெற்றது.
இதன்போது மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள கணவனை இழந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் அவரது பிள்ளைகளுடன் வசதியற்ற நிலையில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பேரில் பொலிசாரின் பங்களிப்புடன் அண்மையில் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.
இன்று இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய குறித்த தாயார், வன்னிபிராந்தியத்தில் பல மக்களுக்கு நல்ல வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபரினால் எனது பிள்ளைகளின் நலனுக்காக வீடு ஒன்று அமைத்துக் கையளிக்கப்பட்டுள்ளது.
எனவே வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரை எனது மகனுக்குச் சமனாகவே என்னால் நினைத்துப்பார்க்க முடிந்துள்ளது. இவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தை எனக்குச் செய்து தந்துள்ளார். எனத் தெரிவித்தபோது வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா கண்கலங்கியதுடன் குறித்த தாயார் காலில் வீழ்ந்து வணங்கிய சம்பவம் கலாச்சார மண்டபத்தில் கூடியிருந்தவர்களின் மனதுருகச் செய்துள்ள காட்சியாக அமைந்திருந்தது.
வன்னி பிராந்திய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு வவுனியாவில் இன்று (07.08.2018) பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.
வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபரின் சேவையை பாராட்டியும், மதிப்பளிக்கும் முகமாகவும் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
வன்னி பிராந்தி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வன்னி பிராந்தியத்தில் பல மக்கள் நலன் வேலைத் திட்டங்களை மேற்கொண்டிருந்த நிலையில் அதனை பாராட்டும் முகமாகவும், மதிப்பளிக்கும் நிகழ்வாகவும் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் வவுனியா வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்கள், வவுனியா வர்த்தகர்கள், கலைஞர்கள், சமூக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சமூக சேவையாளர்கள், பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர்கள், இணைய ஊடகவியலாளர் சங்கம் ஆகியன வன்னி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தனர்.
கௌரவிப்புக்களை ஏற்றுக்கொண்டதன் பின் உரையாற்றிய பிரதி பொலிஸ் மா அதிபர், நாங்கள் சிங்கள பெற்றோருக்கும் நீங்கள் தமிழ் பெற்றோருக்கும் பிறந்தபடியால் இனத்தால் வேறுபட்டிருக்கிறோம். மொழி மற்றும் இனம், கலாசாரம் என்பது எமது பெற்றாருடையதாக இருக்கிறது.
கடந்த முப்பது வருடங்களாக நாம் மோதிக்கொண்டோம். நாங்கள் இனியும் இனம் மதம் மொழியால் பிரிந்து இருக்கக்கூடாது. வன்னியில் எவ்வாறு பணியாற்றியுள்ளேன் என நீங்கள் எனக்கு வழங்கிய கௌரவத்தினூடாக அறிந்துகொண்டுள்ளேன் அத்துடன் எனக்கு வடபகுதியில் எதிரிகளோ அச்சுறுத்தலோ இருந்ததில்லை என தெரிவித்தார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான முத்துவேலர் கருணாநிதி உடல் நலக்குறைவினால் காலமானார் என காவேரி மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியாகவும், திராவிடக் கட்சியின் தலைவராகவும் இருந்த கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலிவுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவரின் உடல் நிலை மிக மோசமானதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கான தீவிர சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுவந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவினதும், தமிழகத்தினதும் மூத்த அரசியல்வாதியான கருணாநிதி தனது 95வது வயதில் இன்று காலாமாகியுள்ளார்.
காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் மற்றும் அரசியல்வாதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் கூடியுள்ளனர்.
இந்தியாவில் மகளை பெற்றோரோ கொன்று புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அனந்தபால். இவருக்கு 6 வயதில் தாரா என்ற குழந்தை இருந்தது. சிறுமி தாராவும் ஊட்டச்சத்து குறைபாடும், ரிக்கெட்ஸ் நோய் பாதிப்பும் இருந்தது.
இப்படி ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறுமியை பெற்றோரே கொன்று புதைத்துவிட்டதாக கூறி, பக்கத்து வீட்டுக்காரர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பின் பொலிசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், மந்திரவாதி ஒருவர் அனந்தபாலிடம் சிறுமி தாராவை வீட்டிலேயே கொன்று புதைத்தால் உங்களுக்கு பிறக்கும் அடுத்த குழந்தை ஆரோக்கியமானதாக இருக்கும் என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி அனந்தபாலுக்கு ஏற்னகவே ஒரு மகன் உண்டு. அவருக்கும் ரிக்கெட்ஸ் நோய் பாதிப்பு உள்ளதால், அடுத்து பிறக்கும் குழந்தையாவது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும் என்று தாராவை கொன்று புதைத்துள்ளனர்.
மேலும் தாராவின் பாட்டி கூறுகையில், தாரா மீது அவள் அம்மாவுக்கு தொடக்கத்தில் இருந்தே பெரிய அளவில் அன்பு இல்லை. நிறைய மாத்திரைகள் கொடுத்து மருத்துவம் பார்த்தனர்.
இருப்பினும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததால், தாராவின் அம்மா மந்திரவாதியின் சொல்படி, வீட்டிலேயே கொன்று புதைத்து கோயில் கட்ட முடிவு செய்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து தாராவின் உடலை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேத பரிசோதனையில், தாரா கழுத்து நெரித்து கொல்லப்பட்டதும், தாராவின் வயிற்றில் உணவு ஏதும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
பொலிசார் தாராவின் பெற்றோர் விரைவில் கைது செய்வார்கள் என்றும் கூறியுள்ளனர்.
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த பெண்ணை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த போரூர் சிக்னல் அருகே கையில் சூட்கேசுடன் இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் வந்து இறங்கியுள்ளார். அங்கு விடுதி எடுத்து தங்குவதற்காக வந்திருந்த அவரை, மர்ம நபர்கள் வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.
இதைப் பார்த்த பொதுமக்கள் தட்டிக் கேட்க, பயந்து போன மர்ம நபர்கள் குறித்த பெண்ணை தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.
உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டார், தகவலறிந்து விரைந்து வந்த வளசரவாக்கம் பொலிசார் விசாரணை நடத்தினர்.
அந்த சூட்கேஸில் கஞ்சா இருந்தது தெரியவந்தது, இதனால் அப்பெண் மீது சந்தேகமடைந்த பொலிசார் மேலதிக விசாரணையை தொடர்ந்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரேணுகா(வயது 23) என்பதும், ஏற்கனவே இருமுறை ஆந்திர பொலிசாரால் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
விசாரணையில் தெரியவந்த தகவல்கள், ரேணுகா அடைக்கப்பட்டிருந்த சிறையில் சென்னையை சேர்ந்த கஞ்சா வியாபாரியான முத்துலட்சுமி(வயது 65) என்பவரும் அடைக்கப்பட்டுள்ளார்.
இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், ஜாமீனில் வெளிவந்து பெரும்பாக்கத்தில் உள்ள முத்துலட்சுமியின் வீட்டில் ரேணுகா தங்கியுள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தேவசகாயத்துக்கும், ரேணுகாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவருக்கும் முத்துலட்சுமி திருமணம் செய்து வைத்தாலும், குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.
இதற்கிடையே ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்திவர தேவசகாயத்துக்கு ரேணுகா உதவியுள்ளார். கஞ்சா வியாபாரம் சூடுபிடிக்க, பல ஆண்களுடன் ரேணுகா பழகி வந்ததாக தெரிகிறது.
இதுதொடர்பில் கணவன்- மனைவிக்கு சண்டை வர, ரேணுகாவை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதனை தொடர்ந்து நிர்மல் என்பவருடன் சேர்ந்து ரேணுகா கஞ்சா கடத்தி, கைநிறைய பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று ரேணுகா சூட்கேஸில் கஞ்சாவை கொண்டு வந்து நிர்மலுக்காக காத்திருந்துள்ளார்.
அப்போது தான் ரேணுகாவிடமிருந்து மர்ம நபர்கள் சூட்கேஸை பறிக்க முயன்றுள்ளனர், பொதுமக்கள் கூடியதால் தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தொழில் போட்டியில் இவ்வாறு நடந்ததா? இதில் தொடர்புடையவர்கள் யார் யார்? என்பது குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்
இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 145 பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இந்தோனேசியாவின் லாம்போக் தீவில், கடலுக்கு அடியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவில் 6.8 மற்றும் 7 ஆக பதிவாகின.
இந்த பயங்கர நிலநடுக்கத்தால், அந்த தீவில் உள்ள 80 சதவித வீடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.
மேலும், அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுக் கொண்டு இருப்பதால் பொதுமக்கள் சாலை, தெருக்களிலேயே முகாமிட்டு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 145 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் படுகாயமும் அடைந்துள்ளனர். தற்போது அந்த தீவு முழுவது மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாலங்கள் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொலை தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 20 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.