பாபநாசம் திரைப்பட பாணியில் அத்தையை கொன்ற 14 வயது சிறுவன் : அதிர்ச்சித் தகவல்!!

தமிழ்நாட்டில் அத்தையை கொலை செய்த சிறுவன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளதோடு, சிறுவனும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் சங்கரசுப்பு. இவர் மனைவி தமிழ்ச்செல்வி கடந்த 2-ஆம் திகதி படுக்கையறையில் கை நரம்பு வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

இது குறித்த பொலிசார் நடத்திய விசாரணையில் சங்கரசுப்புவின் தங்கை மகனான 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சிவக்குமார் (14) அத்தை தமிழ்ச்செல்வியை கொன்றது தெரியவந்தது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், சிசிடிவி ககெமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது, மாணவன், தமிழ்ச்செல்வியின் வீட்டுக்கு செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

அதுதொடர்பாக மாணவனிடம் விசாரித்தபோது சுத்தியல் வாங்கச் சென்றதாகக் கூறினார். இருப்பினும் மாணவன் மீது எங்களுக்குச் சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து மாணவனிடம் விசாரித்தபோது உண்மையை ஒத்துக்கொண்டார்.

தமிழ்ச்செல்விக்கும் சிவக்குமாருக்கும் ஆரம்பத்திலிருந்தே பிரச்சனை இருந்துவந்துள்ளது. சிவக்குமார் டிவி தொடர்ந்து பார்த்தால் ரிமோட்டை தமிழ்செல்வி பிடுங்கி கொள்வார்.

அடுத்து தன்னுடைய மகளிடம் சிவக்குமார் பேசுவதையும் தமிழ்ச்செல்வி விரும்பவில்லை. இதனால் அத்தையின் மீது வெறுப்பில் இருந்துள்ளார் மாணவன்.

இந்தச் சமயத்தில் பாபநாசம் படத்தை சிவக்குமார் பார்த்துள்ளார். அதில் கமல்ஹாசன் கொலையை மறைக்க பொலிசிடம் பயப்படாமல் தப்பிக்கும் காட்சிகள் இடம்பிடித்திருக்கும்.

அதை போலவே எங்கள் விசாரணையில் தைரியமாக சுத்தியல் வாங்கச் சென்ற கதையைத் தெரிவித்தார். இருப்பினும் சிசிடிவி பதிவால் எங்களிடம் சிக்கிக்கொண்டான் என கூறியுள்ளனர்.

சிவக்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், அத்தை தமிழ்செல்வி செய்த டார்ச்சரால் தான் அவரைக் கொலை செய்யும் அளவுக்குச் சென்றேன். அத்தையின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் எனக்குப் பிடிக்கவில்லை.

என்னுடைய உறவினர் ஒருவரின் பிறந்தநாளான்று அத்தையின் மகளோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, அங்குவந்த அவர் அனைவரின் முன் என்னை அடித்துவிட்டார். இதனால் அவமானத்தில் கூனிக்குறுகினேன். அதற்குப் பழிவாங்கத்தான் அவரைக் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.

இளைஞரை ஒருதலையாக காதலித்த பெண் : காதலை ஏற்காததால் செய்த மோசமான செயல்!!

இந்தியாவில் ஒருதலை காதலில் ஈடுபட்ட இளம்பெண் காதலனை கத்தியால் தாக்கியதோடு, பைக்குகளை எரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் திலீப்குமார், இவர் மகன் சிக்கூ. சிக்கூவை அந்த பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருதலையாக காதலித்த நிலையில் காதலை சிக்கூ ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் நேற்றிரவு சிக்கூ வீட்டு வாசலில் நிற்கவைக்கப்பட்டிருந்த மூன்று பைக்குகளை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

இதை பார்த்து சிக்கூவின் உறவினர்கள் அங்கு வருவதற்குள் பெண் தப்பியோடியுள்ளார், இதையடுத்து உறவினர்கள் பொலிசில் புகார் அளித்தனர்.

சிக்கூவின் உறவினர் கூறுகையில், ஏற்கனவே ஒருமுறை சிக்கூ தூங்கி கொண்டிருக்கும் போது அவரை கத்தியால் தாக்கினார், தற்போது பைக்கை எரித்துள்ளார் என கூறியுள்ளார். இதையடுத்து பெண்ணை பிடித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

இப்படி குழந்தைகளை கொடூரமாக கொலை செய்வார் என்று நினைக்கவே இல்லை : பொலிசாரிடம் கண்ணீர் விட்ட மனைவி!!

தமிழகத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். கட்டடத் தொழிலாளியான இவர் திருமணமாகியும் பல ஆண்டுகள் குழந்தை இல்லாத காரணத்தினால் அமராவதி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார்.

இவர்களுக்கு புனித் (5), சஞ்சை (3) மற்றும் ராகுல் (2) என்ற குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில் வெங்கடேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு அமராவதியிடம் சண்டை போடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

தொடர்ந்து இப்படி செய்து வந்ததால், அமராவதி, இனியும் இவருடன் வாழ்க்கை நடத்த முடியாது என்று கூறி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு அம்மாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து அவரை அழைத்து வருவதற்காக நேற்று இரவு மாமியாரின் வீட்டிற்கு சென்ற வெங்கடேஷ், அங்கு சண்டை போட்டுள்ளார்.

அப்போது தனது மூன்று குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்த போது மனைவி மேல் இருந்த கோவத்தால், மூன்று குழந்தைகளையும் ஆற்றில் தூக்கிவீசி கொலைசெய்து விட்டு, வீடு திரும்பியுள்ளார்.

அங்கு சென்று எதுவும் நடக்காதது போல் வீட்டில் நிம்மதியாக தூங்கியுள்ளார். அதன் பின் காலை வெங்கடேஷின் வீட்டிற்கு வந்த உறவினர்கள் குழந்தைகள் எங்கே என்று கேட்ட போது மூன்று குழந்தைகளையும் காணவில்லை; எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை என்று நாடகமாடியுள்ளார்.

இதற்கிடயில் குழந்தைகளின் சடலம் அப்பகுதியில் இருக்கும் ஆற்றில் மிதந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் நடத்திய விசாரணைக்கு பின்னரே வெங்கடேஷ் குழந்தைகளை ஆற்றில் தூக்கி வீசியது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கூறிய அவரது மனைவி அமராவதி இவ்வாறு குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்வார் என கற்பனை செய்து பார்க்கவில்லை என பொலிசாரிடம் வேதனையுடன் கூறியுள்ளார்.

குழந்தைகளை ஆற்றில் வீசியபோது தான் குடிபோதையில் இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொன்று புதைப்பு : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!!

மந்திர சக்திக்காக ஒரே குடும்பத்தில் நான்கு பேர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா அருகில் உள்ள முண்டன்முடியைச் சேர்ந்த தம்பதி கிருஷ்ணன்(52)-சுசிலா(50).

இந்த தம்பதிக்கு அர்ஷா (21), அர்ஜுன் (19) என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ரப்பர் தோட்டத்தில் பணிபுரிந்த கிருஷ்ணன் மாந்தீரிக தொழிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் காலையில் பால் வாங்க வெளியே வரும் கிருஷ்ணன், கடந்த சில தினங்களாக வெளியே வராத காரணத்தினால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டின் உள்ளே இரத்தக் கறை இருந்ததால், அதிர்ச்சியடைந்து அவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த பொலிசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தரையிலும் சுவரிலும் ரத்தக்கறை இருந்ததைக் கண்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி சுத்தியல் ஒன்றும் ரத்தக் கறை படிந்த நிலையில் இருந்துள்ளது. அதன் பின் வீட்டின் பின்னே சென்று பொலிசார் பார்த்த போது, குழி ஒன்று புதிததாக தோண்டப்பட்டு, மண் மூடப்பட்டிருந்தது.

சந்தேகமடைந்த பொலிசார் அதை தோண்டி பார்த்த போது, கிருஷ்ணனின் உடல் இருந்துள்ளது. அதற்கு கீழே மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோர் உடல்கள் இருந்துள்ளது.

இவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு இருந்ததால், சுத்தியலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகித்தனர்.

அதுமட்டுமின்றி வீட்டில் இருந்த 30 பவுன் சவரன் நகைகள் வேறு காணமல் போயுள்ளது. இதைத் தொடர்ந்து பொலிசார் அங்கு நடத்திய சோதனையில் 4 போன்கள் கிடைத்துள்ளது.

அதில் ஒரு போன் மட்டும் ஆக்டிவில் இருந்ததால், அதில் யார், யாரிடம் எல்லாம் பேசியிருக்கிறார்கள் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின் இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்த பொலிசார் அவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். அதில் கிருஷ்ணனின் உதவியாளர் அனீஷிடம் விசாரித்த போது, இவரும், இவரது நண்பருமான லிபீசும் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கிருஷ்ணனின் உதவியாளரான அனிஷ் தனியாக மாந்திரீக தொழில் செய்து வந்துள்ளார். ஆனால் அவர் செய்யும் பூஜைகள் எல்லாம் சரியாக போகவில்லை.

இதற்கு காரணம் கிருஷ்ணன் தான், அவரை கொன்று அவரது மந்திர சக்தியை, அது தொடர்பான பொருட்களையும் கைப்பற்ற நினைத்துள்ளார்.

இதனால் கடந்த 12-ஆம் திகதி கிருஷ்ணாவின் வீட்டிற்கு சென்ற இந்த இரண்டு பேரும், முதலில் வீட்டின் மின்சாரத்தை நிறுத்தியுள்ளனர்.

அதன் பின் வீட்டில் இருந்த கன்றுக் குட்டியை குத்தியதால், அது சத்தம் போட்டுள்ளது. இதனால் கிருஷ்ணனும் அவரது மனைவியும் வெளியில் வந்த போது, இரண்டு பேரையும் இவர்கள் தாக்கியுள்ளனர்.

இவர்களின் சத்ததைக் கேட்டு பிள்ளைகள் ஓடி வர அவர்களையும் கொலை செய்துள்ளனர். இந்த கொலை திட்டத்தை அவர்கள் 6 மாதத்திற்கு முன்பே திட்டமிட்டிருந்தனர் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

 

கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஆபத்தான நிலையில் பெண்!!

கொழும்பை அண்மித்த கடவத்த, கோனஹேன, ஆம்ஸ்ரோங் சந்தியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் ராகமை வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா ‪கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவத்தின் மூன்றாம்நாள் !!(படங்கள்,வீடியோ)

வவுனியா ‪கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎ மூன்றாம் நாளான நேற்று (06.08.2018)  காலைமுதல் அபிசேகங்கள் ‪‎மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை, ‪‎கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம் வந்து‪‎ சிம்ம வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

மாலையில் ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள்‪‎  காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.


வவுனியாவில் திருட்டு நகையுடன் ஒருவர் கைது!!

வவுனியா மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை 5பவுண் திருட்டு நகையுடன் வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் இடம்பெற்ற பல திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்டு சிறைவாசம் அனுபவித்து வந்த மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் தகவல் வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவினருக்குக்கிடைத்துள்ளது.

இதையடுத்து குற்றத்தடுப்பு பொலிஸ் பரிசோதகர் சமிந்த சோமஜித் வழிநடத்தலில் உத்தியோகத்தர் நிஜாமின் தலைமையில் சென்ற குற்றப்பிரிவினர் நேற்று வவுனியா மெனிக்பாம் பகுதியில் வசித்துவந்த 30 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை 5 பவுண் திருட்டு நகையுடன் செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது பண்டாரிக்குளம், இராசசேந்திரன்குளம், தவசிகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிலில் சென்று தனிமையில் செல்லும் பெண்களிடம் சங்கிலி அறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் கைப்பற்றப்பட்ட 5பவுண் பெறுமதியான தங்க நகைகள் உட்பட சந்தேக நபரை விசாரணைகனின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுடன் இலங்கை இளம் தமிழ் பெண் இந்தியாவில் மாயம் : பொலிஸார் தீவிர விசாரணை!!

இலங்கை தமிழ் அகதிகள் முகாமை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் காணாமல் போயுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்த்தாண்டம் அருகேயுள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமை சேர்ந்த இராஜேஸ்வரி, தனது 12 மற்றும் 6 வயதான இரண்டு பெண் குழந்தைகளுடன் கடந்த வியாழக்கிழமை காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவர்கள் குறித்த எந்த தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை. இது குறித்து மார்த்தாண்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் மோதியதில் மாணவி ஒருவர் பரிதாபமாக பலி!!

அம்பலாங்கொடை பகுதியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை நகரிலுள்ள தனியார் வகுப்பொன்றிலிருந்து உணவு இடைவேளைக்காக குறித்த மாணவி ரயில் பாதையூடாக நடந்து சென்ற போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

அளுத்கமவிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்ட மாணவி படுகாயங்களுக்குள்ளான நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அம்பலாங்கொடை தொபன்வில பகுதியை சேர்ந்த 18 வயதுடையவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பல்கலைக்கழக மாணவர்கள் : இலங்கை மைதானத்தில் நடந்த வியக்கும் செயல்!!

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது.

நேற்று முன்தினம் பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

போட்டி நிறைவடைந்த பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் மைதானம் முழுவதும் போடப்பட்டிருந்த குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் தாங்கள் அமர்ந்திருந்த இடம் மாத்திரம் அன்றி மைதானத்தின் முழுப் பகுதியையும் சுத்தம் செய்துள்ளனர்.

இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்த போதிலும், ரசிகர்கள் மைதானத்தை சுத்தப்படுத்தியது, இலங்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கை பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு, சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டில் தந்தையின் சடலம் : பரீட்சை எழுத சென்ற மாணவி : வாழ்க்கையை மாற்றும் மனிதநேயம்!!

இலங்கையில் அதிகம் பேசப்படும் நபராக ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவி மாறியுள்ளார்.

காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்த தந்தையின் சடலத்தை வணங்கி ஆசி பெற்று, பரீட்சை எழுத சென்ற மாணவியே பலரின் மனங்களை வென்றுள்ளார்.

மாணவி தொடர்பான தகவல் வெளியானதும் அவரது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக பலர் முன்வந்துள்ளனர்.

மாணவியின் கல்வி நடவடிக்கைகளுக்காக பன்னல்கம வித்தியாலயத்தின் அதிபரின் தலையீட்டில் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்காக 077 8 826 598 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக அதிபரை தொடர்பு கொண்டு குறித்த மாணவிக்கு உதவ முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

எதிர்பார்க்காத நேரத்தில் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

“மாலை எனது கணவருடன் குளிக்கச் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து என்னிடம் 200 ரூபாய் பெற்றுக் கொண்டு வெளியே சென்றுள்ளார். 7.30 மணியளவில் வைத்தியசாலை செல்ல தயாராகுங்கள் என அண்ணி கூறினார்.

எனது கணவர் சைக்கிளில் இருந்து விழுந்து விட்டார். அவரின் தலையில் இருந்து அதிகமாக இரத்தம் வெளியேறியது. அவருக்கு யானை தாக்கியதாக பின்னரே தெரியும்.

எனது கணவர் கூலி வேலை செய்து தான் எங்களுக்கு உணவு வழங்கி வந்தார். தற்போது எங்களுக்கு வயலேதும் இல்லை. எங்களுக்கு உதவ யாரும் இல்லாமல் எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையிலும் பரீட்சை எழுதச் சென்ற மாணவிக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வருடமும் இதேபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றமையும் இதன்போது நினைவு கூரப்பட்டு வருகிறது.

உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

இரத்தினபுரி, சுமனா மகளிர் வித்தியாலயத்தில் உயர் தர பரீட்சைக்காக சென்ற மாணவி ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

தனது தந்தையுடன் உயர்தர பரீட்சைக்காக சென்ற சந்தர்ப்பத்தில் அவர்களின் மோட்டார் வாகனத்தில் பேருந்து ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான மாணவி காயமடைந்துள்ளதாகவும், அவரது தந்தை குறித்த பாடசாலையின் ஆசிரியர் என தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் வாகனத்தின் பின் ஆசனத்தில் மாணவி அமர்ந்திருந்த நிலையில், தந்தை அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

இதன் போது அந்தப் பகுதியால் வந்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் விபத்தில் காயமடைந்த மாணவி, காயத்துடன் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்

நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு : இருவருக்கு மரண தண்டனை!!

திருகோணமலையில் ஆசிரியை ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இருவருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை இன்று திருகோணமலை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களில் முதலாவது, இரண்டாவது சந்தேகநபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஆசிரியைரை படுகொலை செய்தனர் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

31 வயதுடைய பாலசிங்கம் நகுலேஸ்வரன், 21 வயதுடைய விஜயகுலசிங்கம் சந்திரபாலன் என்போருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 25 வயதுடைய கிருஷ்ணபிள்ளை சஜிவ்காந்தன், 20 வயதுடைய சிவகுமரன் சிவரூபன் என்போர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

2011.11.24ஆம் திகதி திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாட்டாளிபுரம் – சந்தோசபுரம் ஆகிய இடங்களுக்கு இடையில் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பகுதியில் வயல் வெளிக்கு அருகில் குறித்த ஆசிரியை கொலை செய்யப்பட்ட நிலையில் காலை 6.45 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார்.

சந்தோசபுரம் – கட்டைப்பரிச்சான் பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய ஆசிரியை குருகுலசிங்கம் ஸ்ரீவதனி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.

இதில், 31 வயதுடைய பாலசிங்கம் நகுலேஸ்வரன், 21 வயதுடைய விஜயகுலசிங்கம் சந்திரபாலன், 25 வயதுடைய கிருஷ்ணபிள்ளை சஜிவ்காந்தன், 20 வயதுடைய சிவகுமரன் சிவரூபன் என்போரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு மூதூர் நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், நீதவானால் திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டது.

இதையடுத்து இன்று இந்த வழக்குக்கான தீர்ப்புக்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், குறித்த ஆசிரியரின் உடம்பில் 13 இடங்களில் காயம் காணப்பட்டுள்ளதாகவும், நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த கொலையை செய்ததாக கூறப்படும் இருவருக்கு மரண தண்டணை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையின் மூன்று நாட்களாக குழந்தையின் சடலம் : தவிக்கும் தந்தை!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மூன்று நாட்களாக தனது குழந்தையின் சடலத்தின் பிரேதப் பரிசோதனையினை பல்வேறு காரணங்கள் கூறி வைத்திருப்பதாக குழந்தையின் தந்தையின் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.08.2018) அதிகாலை குழந்தைக்கு ஏற்பட்ட காச்சல் காரணமாக பெற்றோர் குழந்தையினை முச்சக்கரவண்டி மூலம் மாமடு அரச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

எவ்வித சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படாது குழந்தையினை அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளை மேற்கொண்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை அன்றையதினம் 11 மணியளவில் உயிரிழந்தது.

பிரேதப் பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் குழந்தையின் சடலம் வைக்கப்பட்டதுடன் அன்றையதினம் மதியம் மாவட்ட நீதிமன்ற நீதிவான் சடலத்தினை பொலிஸாரின் விசாரணை மற்றும் பிரதேச பரிசோதனைகளின் பின்னர் எடுத்துச் செல்லுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

எனினும் ஞாயிற்றுக்கிழமை திடீர் மரண விசாரணை அதிகாரியினை பல தடவைகள் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதிலும் அவர் பதிலளிக்கவில்லை என பொலிஸார் குழந்தையின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் நேற்று (06.08.2018) திங்கட்கிழமை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு தனது அறிக்கையினை சமர்ப்பித்திருந்தார்.

எனினும் ஜெ.எம்.ஒ வைத்தியர் விடுமுறை காரணமாக இன்றையதினமே (07.08.2018) குழந்தையின் பிரேத பரிசோதனைகள் இடம் பெறும் என வைத்தியசாலை நிர்வாகத்தினர் குழந்தையின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

இன்றுடன் மூன்று நாட்கள் கடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் குழந்தையின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

குழந்தையினை பறிகொடுத்த பெற்றோரின் அழுகுரல் உங்களுக்கு கேட்கவில்லையா. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரே இது உங்களின் கவனத்திற்கு…

குழந்தைகளை ஆலய நேர்த்தியை நிறைவேற்ற கொடுமைப்படுத்திய பெற்றோர்!!

சென்னை புளி யந்தோப்பில், ஆலய நேர்த்திக்கடனை நிறைவேற்ற இரு சிறுவர்கள் மீது பெற்றோரின் அனுமதியுடன் பழம் குற்றுதல் நடத்தப்பட்டமை சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ முன்டகன்னியம்பாள் ஆலய வைபவத்தின்தின் போது, குறித்த இரு பிள்ளைகளையும் பெற்றோர் நேர்த்திக்காக கொடுமைப்படுத்தியுள்ளனர்.

பிள்ளைகளின் உடலில் பழம் குத்தி (ஊசியில் பழம் குற்றி அதனை உடலில் குற்றுதல்) குறித்த நேர்த்திக் கடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனினும் இரு சிறுவர்களும் வலியின் உச்சத்தின் கண்கலங்கி நிற்கும் புகைப்படங்கள் பார்ப்போர் கண்களை கலங்க வைத்துள்ளது.

இந்நிலையில், இவ்வாறான மூட நம்பிக்கைகளும் சிறுவர்கள் மீதான வன்கொடுமை என்றும், இவை நிறுத்தப்பட வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வலுப்பெற்றுள்ளன.

இவ்வாறான கொடூர செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டுமெனில், சட்டத்தில் பலம் கொண்டுவரப்பட வேண்டும் என, குறித்த செயலுக்கு எதிராக பலரும் டுவிட் மற்றும் முகநூல்களில் கருத்து வெளியிட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா மன்னார் வீதியில் பயணிகளின் உயிருடன் விளையாடிய தனியார் – இ.போ.ச பேரூந்துகள்!!

வவுனியா மன்னார் பிரதான வீதி வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு முன்பாக இன்று (06.08.2018) மாலை 5.15 மணியளவில் இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்தின் போட்டித்தன்மை காரணமாக பயணிகள் சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.

திருகோணமலையிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தும் வவுனியாவிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து வவுனியா மன்னார் பிரதான வீதியில் பட்டானிச்சூர் பகுதியிலிருந்து வேப்பங்குளம் 6ம் ஒழுங்கை வரை போட்டி போட்டுக்கொண்டு வீதியில் சமமாக சென்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையடியில் வைத்து குறித்த தனியார் – இ.போ.ச பேரூந்து சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு தண்டப்பத்திரம் வழங்கியுள்ளனர்.

இவ்வாறான இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்துகளின் போட்டித்தன்மை காரணமாக பொதுமக்கள் தினசரி அச்சத்தில் வீதியில் பயணிக்கின்றனர்.