வவுனியாவில் முச்சக்கர வண்டி விபத்து : இருவர் படுகாயம்!!

வவுனியாவில் முச்சக்கரவண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று (06.08) வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா திருநாவற்குளத்தில் தாண்டிக்குளம் செல்லும் வீதியில் வேகமாக வந்த முச்சக்கர வண்டி எதிரே வந்த பேரூந்துக்கு வழிவிட்ட நிலையில் முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் கடன் வழங்கச்சென்ற நுண்நிதி நிறுவன ஊழியர்கள் விரட்டியடிப்பு!!

வவுனியா சாந்தசோலை மாதர் சங்கத் தலைவியினால் இன்று காலை கிராமத்திற்குள் சென்ற மூன்று நுண்நிதி கடன் நிறுவனத்தின் ஊழியர்களை அப்பகுதியில் வைத்து கடன் வழங்கும் நடவடிக்கையினை நிறுத்துமாறு கோரி அங்கிருந்து விரட்டியக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சாந்தசோலைப் பகுதியில் வசித்துவரும் இரண்டு குடும்பத்தலைவிகள் நுண்நிதி நிறுவனத்தில் குழுக்கடன்களைப் பெற்றுக்கொண்ட ஏனைய குழுவிலுள்ளவர்கள் பணத்தினைத் திருப்பிச் செலுத்தவில்லை. இதன்காரணமாக நுண்நிதி நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கிழமைக் கடனான 60ஆயிரம் ரூபாவினைச் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக நாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குச் சென்றுவிட்டதாகவும், இக்கடன் சுமையிலிருந்து தம்மை மீட்குமாறு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இன்று காலை சாந்தசோலைப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வைத்து நுண்நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் கடன் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அங்கு சென்ற மாதர் சங்கத்தலைவி சாந்தசோலைப்பகுதியில் வைத்து நுண்நிதி நிறுவனத்தின் செயற்பாடுகளை நிறுத்துமாறும் இப்பகுதியிலிருந்து கடன் வழங்குவதும் பணம் வசூலிப்பததையும் நிறுத்திக்கொள்ளுமாறு கோரியுள்ளார். இதைச்சற்றும் எதிர்பார்க்காத நிறுவன ஊழியர்கள் அங்கிருந்து செல்வதற்கு தயக்கம் காட்டியுள்ளனர்.

அப்பகுதியில் இன்று காலை 9.30மணி முதல் பிற்பகல் 1மணிவரையும் மூன்று நுண்நிதி நிறுவனத்திலிருந்து கடன் வழங்கவும் பணம் வசூலிப்பதற்கும் சென்ற நுண்நிதி நிறுவனத்தின் பணியாளர்களை அங்கு செயற்பாடுகளை மேற்கொள்ளவிடாமல் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

அப்பகுதியில் நுண்நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர்களிடம் பெற்றுக்கொண்ட கடனை அவர்களது நுண்நிதி நிறுவனத்திற்குச் சென்று வழங்குமாறும் இனிவரும் காலங்களில் சாந்தசோலைப்பகுதியில் கடன் வழங்கவோ பணம் வசூலிப்பதற்கோ நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் அனுமதிக்க முடியாது இது தொடர்பாக பிரதேச செயலாளரிடமும் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினரின் கவனத்திற்குக்கொண்டு வருவதாகவும் மாதர் சங்கத்தலைவி தெரிவித்துள்ளார்.

இப்பரபரப்பையடுத்து அங்கு ஒன்றுகூடிய பொதுமக்கள், இளைஞர்கள் நிறுவனத்தின் பணியாளர்களை வெளியேறுமாறு தெரிவித்திருந்தனர்.

இதேவேளை நாளைய தினமும் இரண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் சாந்தசோலைக்கு நுண்நிதி நிறுவனத்தின் கடன்களை வழங்கவும் பணத்தினை வசூலிப்பதற்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்று பாத்திரம் தேய்த்த பெண்ணின் இன்றைய நிலை என்ன தெரியுமா?

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் மிகச் சாதாரண குடும்பத்தை சேர்ந்த ரெமிங்டன் வில்லியம்ஸ் எனும் பெண் கிராபிக் டிசைன் படிப்பை படித்துக் கொண்டே, பகுதி நேரமாக ஒரு உணவு விடுதியில் பாத்திரம் சுத்தம் செய்யும் வேலையை பார்த்து வந்துள்ளார்.

மொடலிங் பற்றி ஒன்றும் தெரியாத இவருக்கு திடீரென நியூயார்க் பேஷன் வீக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதனால் ராஃப்சி மோன்ஸ் என்பவர் ரெமிங்டன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து எப்படி நடக்க வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று ஒவ்வொன்றையும் அழகாக சொல்லிக் கொடுத்துள்ளார்.

அதனால் ரெமிங்டனும் மொடலிங்கில் முழுமையாக ஈடுபாடு காட்டி கற்றுக் கொண்டார்.

ரெமிங்டனுக்குப் பயிற்சியளிக்கப்பட்ட போது பல்வேறு மொடலிங் நிறுவனங்கள் அவரை உற்று நோக்கியது.

இவரது திறமையைக் கண்டு ஆச்சரியமடைந்த கால்வின் க்லெய்ன் நிறுவனம் தன்னுடைய பிராண்ட் சார்பாக பேஷன் வீக்கில் பங்கேற்க வாய்ப்பு அளித்தது.

இதுவரை சிறிய அளவில்கூட மொடலிங் செய்திராத ரெமிங்டனுக்கு ஆரம்பமே பிரம்மாண்டமாக அமைந்தது.

இது குறித்து ரெமிங்டன், என் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழும் அதிசயங்களைக் கண்டு நான் ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

நீங்கள் சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பவர்களா : கண்டிப்பாக இதை படியுங்கள்!!

நம் உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. அதனால் தண்ணீரால் நம் உடலுக்கு எந்த ஆபத்தும் வரப் போவதில்லை என சிலர் நினைகின்றனர். ஆனால் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் சுரக்கும்.

நாம் சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால் உடலில் ஜீரணமடைவதற்கு உதவும் அமிலங்கள் நீர்த்துப் போய் ஜீரணக் கோளாறுகள் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்

சிலருக்கு சாப்பிடும்போது விக்கல் தோன்றும் அப்போழுது உடனடியாக தண்ணீர் குடித்தால் ஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.

சாப்பிடுவதற்கு முன்னரும் தண்ணீர் குடிக்கக் கூடாது. ஏனென்றால் வயிற்றுக்குத் தேவையான அளவு சாப்பிட முடியாது. மேலும் உணவிலுள்ள சத்துகள் சரியாக உடலுக்குக் கிடைக்காது.

அடிக்கடி தொண்டை வறண்டு போய் இருப்பவர்கள் மொத்தமாகக் தண்ணீரைக் குடிக்காமல் சிறிதளவு தண்ணிர் அருந்தலாம்.

எப்பொழுதெல்லாம் தண்ணீர் அருந்தலாம்

காலையில் தூங்கி எழுந்ததும், வெறும் வயிற்றில் நம்மால் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு குடிக்கலாம். அது உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

சாப்பிடுவதற்கு அரை மணி அல்லது ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது நல்லது.

சாப்பிட்டு இருபது நிமிடங்கள் அல்லது அரை மணி கழித்து கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பது நல்லது.

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்.

தண்ணீர் தினமும் நம் உடலின் செல்களில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி, செல்களைப் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள உதவும்.

உங்கள் அந்தரங்க தகவல்களை திருடும் Track View : தப்பிப்பது எப்படி?

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் இல்லாமல் அணுவும் அசையாது என்ற நிலை தான். எது இருக்கிறதோ இல்லையோ ஸ்மார்ட்போன்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு இளசுகள் வந்துவிட்டனர்.

அதுவும் புதுப்புது ஆப்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதே பேஷனாகிவிட்டது, இதனால் நன்மைகள் இருந்தாலும் ஆபத்துகள் மிக அதிகம்.

கடந்த இரண்டு நாட்களாக Track View செயலி மூலம் சகோதரி, உறவுக்கார பெண்கள், தோழிகள் என அந்தரங்க படங்கள், வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த தினேஷ்குமார் என்ற வாலிபர் பிடிபட்டார்.

இந்த தகவல் அதிர்ச்சி அளித்தாலும், இதுபோன்ற ஆப்களில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வது பற்றி நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

எந்தவொரு ஆப்பை தரவிறக்கம் செய்யும் போதும் முதலில் கேட்கப்படும் Access-களுக்கு நாம் ஓகே சொன்ன பின்னரே பயன்படுத்த முடியும்.

இதனால் நாமே முன்வந்து தகவல்களை திருடுவதற்கு அனுமதி அளிக்கும் விதமாக உள்ளது எனவும் எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

அனுமதி கொடுக்கும்போது நமது மொபைலில் இருக்கும் தொடர்பு எண்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்கள் எனப் பலவற்றையும் சேர்த்து ஆப்ஸ் எடுத்துக்கொள்கின்றன.

Track View செயலியின் மூலம் அடுத்தவரின் மொபைலை டிராக் செய்ய முடியும், இதிலுள்ள Recording ஆப்ஷன் மூலம் மற்றவரின் மொபையில் நடக்கும் விடயங்களை Record செய்து கொள்ளலாம்.

அவர் எந்த இடத்தில் இருக்கிறார், என்ன பேசுகிறார் என்பது முதற்கொண்டு தகவல்கள் பெறலாம்.

Push To Talk என்ற ஆப்ஷனை பயன்படுத்தி நாம் பேசினாலும், தகவல் மட்டும் சென்றடையுமே தவிர யார் பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.

எனவே இதிலிருந்து பாதுகாத்து கொள்ள, முன்பின் தெரியாத நபர்களிடம் பெண்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை எக்காரணம் கொண்டு கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

புது மொபைல் வாங்கினாலும் Play Store-ல் Settings ஆப்ஷனில் Play Protect-யை கிளிக் செய்வதன் மூலம் எந்த மாதிரியான ஆப்ஸ்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒருவேளை உங்களது மொபைலில் ஆப்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம். இதை வைத்து உங்களுக்கு தேவையில்லாத ஆப்களை அழித்துவிட முடியும்.

மேலும் settings ல் App Permission என்ற ஆப்சனில் சென்று எந்தெந்த ஆப் எந்தெந்த தகவல்களை பார்த்து கொண்டிருகிறது என்பதையும் அறிந்து அந்த தகவல்கள் அந்த ஆப்க்கு தேவையில்லை என்றால் permission ஐ நீக்கிவிடலாம்.

வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா : காரணம் இதுவா?

அர்ச்சனா தற்போது தொலைக்காட்சியில் அதிகம் பிசியாகிவிட்டார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ´சரிகமப´ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2 தொகுத்து வழங்கி வருகிறார் அவர்.
அது மட்டுமின்றி பிக் FM இல் பிக் மேட்னி என்கிற ஷோவை வழங்கிவந்தார்.

ஆனால் அதில் இருந்து அர்ச்சனா தற்போது விளங்கியுள்ளார். அவருக்கு பதிலாக அந்த ஷோவை தற்போது மியூசிக் ஜாக்கி கருண் தொகுத்து வழங்குகிறார்.

RJ வேலையை ஏன் ராஜினாமா செய்தேன் என அர்ச்சனா அளித்துள்ள பேட்டியில் “நான் நடத்தும் டிவி நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. புதிது புதிதாக செய்ய வேண்டியது இருக்கிறது. குடும்பத்திற்கும் நேரம்வேண்டும். அதனால் தான் RJ பணியில் நீடிக்க விரும்பவில்லை.. விலகிவிட்டேன்” என கூறியுள்ளார்.

இடைவேளையில் உணவருந்த சென்ற மாணவி புகையிரதத்தில் மோதி பலி!!

அம்பலாங்கொடை பகுதியில் புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை நகரில் உள்ள தனியார் வகுப்பொன்றில் இருந்து இடைவேளை வழங்கப்பட்ட போது உணவருந்துவதற்காக புகையிரத பாதை ஊடாக நடந்து சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அளுத்கமையில் இருந்து காலி நோக்கி பயணிக்கும் புகையிரதத்திலேயே குறித்த மாணவி மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த மாணவியை பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை, தொபன்வில பகுதியை சேர்ந்த 18 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை விபத்தில் பரிதாபமாக பலி!!

யாழ்ப்பாணம் – கோப்பாய் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளுடன் தண்ணீர் பவுசர் ஒன்று மோதிக்கொண்டதில் விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.

கோப்பாயிலிருந்து கைதடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரஞ்சன் எனப்படும் நகைக்கடை உரிமையாளர் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது பின்னால் வந்த தண்ணீர் பவுசர் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதன்போது, 45 வயதுடைய ரஞ்சன் எனப்படும் நகைக்கடை உரிமையாளர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் 18 வயதுடைய அவரது மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல முயன்ற 21 பேர் அதிரடியாக கைது!!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக கடற்படை பேச்சாளர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

இவர்கள் கொழும்பில் இருந்து சுமார் 117 கடல் மைல்களுக்கு அப்பால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரண்டு டோரா படகுகளில் குறித்த நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் யார்? எந்த நாட்டுக்கு செல்ல முற்பட்டனர் என்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2030ம் ஆண்டளவில் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்!!

2030 ஆம் ஆண்டளவில் இலங்கை அனைத்து நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இதுவிடயம் தொடர்பான திட்ட அறிக்கை நாளை பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து ஜனாதிபதிக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக திரு.செனவிரட்ன தெரிவித்தார்.

இந்த அறிக்கையை நோபல் பரிசை பெற்ற பேராசிரியர் மொஹான் முனசிங்க தலைமையிலான குழு தயாரித்துள்ளது. தேசிய நிலைபேறான அபிவிருத்தி குழுவின் தலைவராக திரு.உதய ஆர் செனவிரட்ன செயற்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த திட்ட அறிக்கை குறித்து திரு.செனவிரட்ன விளக்கம் அளித்தார்.

இந்த அறிக்கையில் சமூக பொருளாதார, சுற்றாடல் மற்றும் இதர விடயங்கள் குறித்த நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த செயற்றிட்டம் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தலைமையிலான பாராளுமன்ற குழுவினால் மேற்பார்வை செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாளை நடைபெறும் திட்ட அறிக்கையைக் கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக தெரிவித்தார்.

ஏ9 வீதியில் வெளிநாட்டிலிருந்து வந்த மகளுக்கு காத்திருந்த சோகம்!!

வெளிநாட்டில் இருந்து வந்த பெண் ஒருவரும், அவரை அழைத்துச் செல்ல வந்த தாயுமே கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டிலிருந்து வந்த மகளை கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்லும் போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பருத்தித்துறையை சேர்ந்த குடும்பம் ஒன்றே இவ்விபத்தில் சிக்கியுள்ளதுடன், அந்த விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த மகளும் அழைக்கச் சென்ற தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்து கிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சிப் பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்றிருந்தது.

வீதியில் முறையற்ற விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்துடன், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இளம் பெண்களை இலக்கு வைத்து முகநூல் மூலம் நடைபெறும் கொடூரம்!!

வவுனியா உட்பட வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பெண்களை இலக்குவைத்தே அதிகமாக மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இனம் தெரியாத நபர் ஒருவர் பெண்களுடன் முகநூல் மூலம் நட்பாகி சட்டிங்கில் ஆரம்பித்து தான் பிரித்தானியாவில் இருப்பதாக தெரிவித்து நெருங்கிய நட்பாக மாறியதும் குறித்த பெண்ணிற்கு பரிசுப் பொருட்கள் வாங்கி அதனை பொதியாக்கி இலங்கைக்கு அனுப்புவதாக தெரிவிப்பார்.

அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு உதவி செய்வதாக பல இலட்ச கணக்கில் பெருமதியான பொருட்களை சட்டிங் செய்யும் போது காண்பித்து அதனை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக ஓர் பொதி நிறுவனத்தின் ரசீதையும் காண்பிப்பார்.

இதன்பின் ஒரு வார காலத்தில் இலங்கை இலக்கம் ஒன்றிலிருந்து குறித்த பெண்ணிற்கு அழைப்பு ஒன்று வரும். அதில் நபர் ஒருவர் தான் இலங்கை சுங்க திணைக்கள அதிகாரி என்றும் தங்களுக்கு பொதி ஒன்று வந்துள்ளதாகவும், அது பல இலட்சம் பெறுமதி ஆனது எனவே அதற்குறிய வரிப் பணமாக இரண்டு இலட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை குறித்த வங்கி இலக்கத்திற்கு வைப்பிலிடுமாறு தெரிவிக்கின்றனர்.

இதனை நம்பி குறித்த பெண்கள் பணத்தை வங்கியில் வைப்பிலிடுகிறார்கள். அதன் பின் குறித்த முகநூல் மற்றும் தொலைபேசிகள் செயலிழக்கின்றது. இவ்வாறு பல பெண்கள் பாதிப்புக்குள்ளாகி பொலிஸில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரையிலும் எந்தவிதமான நடவடிக்கையும் பொலிஸ் தரப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படவில்லை.

வவுனியா கோதண்ட நொச்சிகுளம், தரணிக்குளம், குருமன்காடு பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள் வவுனியா விசேட குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
யாழிலும் பல பெண்கள் குறித்த மோசடியில் சிக்கி தங்கள் பணத்தை இழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

எனவே பெண்களே முகநூலில் அறிமுகமில்லாதவர்களை நட்பாக்கிக் கொள்ளும் போது அவதானமாக இருங்கள்.

விமான நிலையத்திலிருந்து யாழ். சென்ற வாகனம் கோர விபத்து : இருவர் பரிதாபமாக பலி : தொடரும் அவலம்!!

கிளிநொச்சி ஏ9 வீதி, இயக்கச்சி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முறையற்ற விதத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சாரசபையின் வாகனத்தின் பின் பகுதியில், கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ். நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த 8 பேரை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி சென்ற போது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் வந்த 8 பேரும் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் யாழ்ப்பாணம் கொண்டு சென்ற ஒருவரும் கிளிநொச்சி கொண்டு சென்ற ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். ஏனைய ஆறு பேரும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

உடல் முழுவதும் பச்சை குத்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

பிரித்தானியாவில் பச்சை குத்திக்கொண்ட ஒரு பெண்ணின் கையில் திடீரென தோல் உரிந்து விழுந்து கொடூரமான காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Toni Mansfield (28) என்ற பெண் பச்சை குத்துவதால் அளவு கடந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயான Toni-கு கடந்த சில நாட்களுக்கு முன்பு Studio Thir13en என்ற கடையில், தன்னுடைய கையில் “இளஞ்சிவப்பு” நிறத்திலான பச்சை குத்தியுள்ளார்.

பின்னர் சில நாட்கள் கழித்து திடீரென ஏற்பட்ட அப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய காயத்தால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டார்.

அங்கு பரிசோனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவருக்கு பச்சை குத்தியதன் மூலம் ஒட்டுண்ணி தாக்கம் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளனர்.

பின்னர் இதுதொடர்பான புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்ட Toni, அந்த கடையில் பச்சை குத்திய உடனே என்னுடைய கையில் பயங்கர வலி ஏற்பட்டது. அதற்கு அவர்கள் ஒரு தைலத்தை கொடுத்து அதன் மேல் தேய்க்க சொன்னார்கள்.

ஆனால் அந்த வலி மட்டும் சிறிதளவு கூட குறையவேயில்லை. வலியை தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு என வலி ஏற்பட்டது. பின்னர் அடுத்தநாள் காலையில் திடீரென கையில் இருந்த தோல் உதிர்ந்து விழுந்ததுடன், பெரும் காயமும் ஏற்பட்டது. இதுதொடர்பாக நான் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வருகிறேன்.

சம்மந்தப்பட்ட நிறுவனம் நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டனர். ஆனால் அந்த நிறுவனம் மீது என்னால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் பச்சை குத்தி கொள்வதற்கு முன்பு ஒரு ஒப்பந்த பாத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

சிறு வயது கனவு : சகோதரர்களை திருமணம் செய்துகொண்ட சகோதரிகள்!!

அமெரிக்காவின் ஒகியோ மகாணத்தில் இரட்டை சகோதரிகள், இரட்டை சகோதரர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டனர்

32 வயதான Brittany மற்றும் Briana Deane ஆகிய இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவார். இவர்கள் இருவரும் எப்படி இரட்டை சகோதரிகளாக இருக்கிறார்களோ, அதே போன்று இரட்டை சகோதரர்களாக பிறந்தவர்களை காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது இவர்களது ஆசையாக இருந்துள்ளது.

தற்போது, இவர்களின் ஆசை நிறைவேறி, சகோதரிகள் இருவருக்கும் கோலகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களை போன்ற இரட்டை சகோதரர்களான 34 வயதான Josh மற்றும் Jeremy Slayers ஆகிய இருவரை திருமணம் செய்துகொண்டனர்.

இதுகுறித்து Brittany கூறியதாவது, இரட்டை சகோதரர்களை காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது எங்களின் ஆசையாக இருந்தது. கடந்த ஆண்டு Twins Festival – இல் நாங்கள் கலந்துகொண்டபோது பலரை சந்தித்தோம். ஆனால் Josh மற்றும் Jeremy Slayers ஆகிய இருவரும் ஒரே பார்வையால் எங்கள் மனதை கவர்ந்தார்கள்.

உடனடியாக அவர்களது வயது மற்றும் விவரங்கள் குறித்து தெரிந்துகொண்டோம். அதன்பின்னர், கடந்த ஒரு ஆண்டாக நாங்கள் காதலித்து வந்தோம், தற்போது எங்கள் ஆசைப்படியே திருமணம் செய்துகொண்டோம். திருமணத்திற்கு பிறகு தற்போது ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். இதே போன்று எங்கள் குழந்தைகளையும் வளர்ப்போம் என கூறியுள்ளார்.

கணவனுக்கு துரோகம் செய்த மனைவி : விடாமல் துரத்தி கத்தியால் குத்திய கணவன்!!

தமிழகத்தில் தந்தையுடன் உள்ள தொடர்பை மனைவி கைவிடாததால், கணவர் அவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி(45). இவர் நேற்று பிற்பகல் திருப்பூர் குமரன் சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது திடீரென்று அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்த முயன்றதால், அதிர்ச்சியடைந்த ரங்கநாயாகி அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார்.

இருப்பினும் விடாமல் துரத்திய அவர் ரங்கநாயகியின் கையில் குத்தினார். இதனால் வலியில் துடித்த அவரை அருகில் இருந்த பயணிகள் ஓடிவந்து, அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இதையடுத்து இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் ரங்கநாயகியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்ட, அந்த நபரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், அந்த நபர் ஸ்ரீவித்யா நகர் பகுதியை சேர்ந்த துரை–ரத்தினம் தம்பதியின் மகன் அருண்(30) என்பதும், இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி ரத்தினத்தை துரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது அருணின் தந்தையான துரைக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அருண் தந்தையை கண்டித்ததாகவும், ஆனால் அவர் இதை கண்டுகொள்ளவே இல்லை எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து ரங்கநாயகியிடம் கூறிய போது அவர் இதை கண்டுகொள்ளவில்லை என்பதால், ஆத்திரத்தில் இந்த செயலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அருண் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.