குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த இளம்பெண் : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் குடும்ப தகராறில் இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலின் எஸ்.எல்.பி தெற்கு ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண்(வயது 37), ஆட்டோ டிரைவரான இவருக்கு சரண்யா என்ற மனைவியும், ஐசக்(வயது 2), ரெப்கா(வயது 4) என்ற மகளும் உள்ளனர்.

அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது, இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அருணாசலம் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டு சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் வீடு திரும்பிய போது இரு குழந்தைகளும் பிணமாக கிடந்தன. அதே அறையில் சரண்யா தூக்கில் தொங்கியுள்ளார், விபரம் அறிந்து விரைந்த பொலிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

குடும்ப தகராறில் சரண்யா குழந்தைகளை கொன்று தற்கொலை செய்தது தெரியவந்தது. எனினும் சரண்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறவே, அருணை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பார்ப்பவர்களின் மனதை உலுக்கிய ஒரே ஒரு புகைப்படம்!!

காய்கறி விற்றுக்கொண்டிருக்கும் மூதாட்டியின் அருகில் இருக்கும் குரங்கிடம் தன்னிடம் ஏதும் இல்லை என்று அந்த மூதாட்டி கூறும் புகைப்படம் சமூகவலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த 2 நாட்களாக இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது, ஆனால், இந்த புகைப்படம் எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் தெரியவரவில்லை.

அந்த புகைப்படத்தில், வயதான மூதாட்டி ஒருவர் அமர்ந்து காய்கறிகள் விற்றுக்கொண்டிருக்கிறார். இந்த தள்ளாத வயதிலும் யாரையும் எதிர்பார்க்காமல் தனது வாழ்க்கையை நடத்துவதற்கு அவர் நடத்தும் போராட்டம் அவரின் உடல்மொழியில் நமக்கு உணர்த்துகிறது.

அப்போது, அவருக்கு அருகில் வந்து அமர்ந்த குரங்கு ஒன்று அந்த மூதாட்டியின் தோள் மீது கையை வைத்து, அமர்ந்திருக்க, அந்த மூதாட்டி அந்த குரங்கிடம் தன்னிடம் ஏதும் இல்லை என்று தனது இயலாமையை கூறுகிறார்.

இதனை அக்குரங்கு கேட்டுக்கொண்டிருக்கும் புகைப்படம் பார்ப்பவர்களின் மனதில் ஒருவித வலியை உணர்த்துகிறது.

30 நிமிடங்கள் குழந்தையின் கண்முன்னே துடிதுடித்து இறந்துபோன தாய் : சோக சம்பவம்!!

வேலூர் மாவட்டத்தில் சுமார் 30 நிடங்கள் 2 வயது குழந்தை முன்பு தாய் துடி துடித்து இறந்துபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராமலிங்கம் – தரணி தம்பதியினர் தங்களது இரண்டு வயது பெண் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

சித்தூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் வண்டிக்கு பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அதே பெட்ரோல் பங்கில் டீசல் போட கனரக லோடு லாரி திரும்பும்போது தரணி வந்த இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது.

மோதியபோது தரணி கீழே விழுந்து லாரியின் டயரில் சிக்கிக்கொண்டார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கூட்டம் கூடியது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சர்விஸ்க்கும், போக்குவரத்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டு தரணியை டயருக்கு அடியில் இருந்து மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர். அவரை மீட்க முடியாமல் தவித்தனர்.

சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் பொலிசார் வர கால தாமதமானது. இதனால் சுமார் அரை மணி நேரம் துடிதுடித்தார். பொதுமக்கள் போராடியும் தரணியை காப்பாற்ற இயலவில்லை.

கணவன் மற்றும் குழந்தை கண் முன்னே லாரி மோதி தாய் துடிதுடித்து இறந்த சம்பவம் அவர்களை மட்டும்மல்ல பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தரணி இறந்தபின்பே காட்பாடி பொலிசார் சம்பவயிடத்துக்கு வந்துள்ளனர். வந்தவர்கள் இறந்த தரணியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

புதை குழி தோண்டி உயிரோடு சமாதியாக முடிவு செய்த பெற்றோர் : அதிர்ச்சிக் காரணம்!!

தமிழகத்தில் மகன் கவனிக்காததால், விரக்தியடைந்த பெற்றோர் புதைகுழி தோண்டி உயிருடன் சமாதியாக முடிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பரதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சாரங்கபாணி (83) தனலெட்சுமி(70).

இவர்களுக்கு பாலசுப்பிரமணியன் என்ற மகனும், சாந்தகுமாரி என்ற மகளும் உள்ளனர். மகளான சாந்தகுமாரி திருமணம் செய்து அவரது கணவருடன் அருகிலிருக்கும் கத்தாழை கிராமத்தில் வசித்து வருகிறார். பாலசுப்பிரமணியன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குறிஞ்சிப்பாடியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சாரங்கபாணி தனக்குச் சொந்தமான பழையபெருமாத்தூரில் இருந்த நிலம், வீடு ஆகியவற்றை நெய்வேலி என்.எல்.சி நிறுவன சுரங்க விரிவாக்கத்துக்காக கொடுத்துள்ளார்.

ஆனால் அதற்கான இழப்பீடு மாற்று மனை ஆகியவற்றை என்.எல்.சி நிர்வாகம் சரிவர வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து மகனான பாலசுப்ரமணியன் ரதம்பட்டு கிராமத்தில் இருந்த நிலத்தை கடந்த மூன்று மாதங்களுக்கு முன் விற்றுள்ளார்.

நிலத்தை பாலசுப்ரமணியன் விற்ற பின்பு தந்தை சாராமணி, தாய் தனலட்சுமியை சரிவர கவனிக்கவில்லை என்றும் அவர்கள் செலவுக்குப் பணம், உணவு என எதுவும் கொடுக்காததால், வயதான காலத்தில் அவர்கள் பசியும் பட்டினியுமாக அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இப்படி அவதிப்பட்டு வாழ்வதை விட உயிரை மாய்த்துக் கொள்வதே மேல் என்று இந்த தம்பதி முடிவு செய்துள்ளனர்.
இதனால் இவர்கள் நேற்று சாரங்கபாணி தன் வீட்டுக்கு முன்புறம் உயிருடன் சமாதி ஆக குழி தோண்டியுள்ளார்.

இதுகுறித்து சாரங்கபாணி உறவினர்களுக்கு போன் செய்து மகன் கவனிக்காததால் பசி, பட்டினியுடன் வாழ முடியவில்லை. இதனால் வீட்டுக்கு முன்புறம் புதை குழி தோண்டி அதில் இறங்கி, எங்கள் மீது நாங்களே மண்ணை போட்டு உயிருடன் சமாதி ஆக முடிவு செய்துள்ளோம் எனக் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

பெற்ற மகன் கவனிக்காததால் வயதான தம்பதி உயிருடன் சமாதி ஆக புதை குழி தோண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 35 நாட்களில் குழந்தை பெற்ற புதுப்பெண் : தூக்கில் தொங்கிய தந்தை!!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணமான 35 நாட்களில் மகளுக்கு குழந்தை பிறந்ததால், அவமானம் தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் பெரியமுத்து. 28 வயதான இவர், சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு பூக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள 21 வயது பெண்ணுக்கும் கடந்த மாதம் ஒன்றாம் திகதி திருமணம் நடந்துள்ளது.

திருமணமான 3 நாட்களிலேயே, பெரியமுத்து வேலைக்காக சென்னை சென்று விட்டார். நேற்று முன்தினம் மாலையில் அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், திடீரென அந்த பெண் தனக்கு வயிறு வலிப்பதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பெரியமுத்து அழைத்து சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்டபோது, குறித்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரசவ வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார். சிறிதுநேரத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்த தகவல், மருத்துவமனை வளாகத்தில் நின்று கொண்டிருந்த பெரியமுத்துவுக்கு தெரிவிக்கப்பட்டது.

திருமணமான 35 நாட்களில் குழந்தை பிறந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட அவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

திருமணத்துக்கு முன்பே அந்த பெண்ணுக்கு, வேறு ஒரு நபருடன் ஏற்பட்ட தொடர்பில் குழந்தை பிறந்திருப்பது தெரியவந்தது.

இதனால் அந்த பெண்ணுடன், தன்னால் சேர்ந்து வாழ முடியாது என்று தனது மாமனாரிடம் பெரியமுத்து தெரிவித்ததாக தெரிகிறது.

மேலும் திருமணமான 35 நாட்களில் தனது மகளுக்கு குழந்தை பிறந்ததால் அந்த பெண்ணின் தந்தையும் விவசாயியுமான முனியப்பன் (58) அவமானம் அடைந்தார்.

இதனால் மனம் உடைந்த அவர், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

13 வயது சிறுமியை காதலித்த 15 வயது சிறுவன் : இதற்காகத் தான் அத்தையை கொலை செய்தேன் என பகீர் வாக்குமூலம்!!

தமிழகத்தில் அத்தையின் மணிக்கட்டை வெட்டி கொலை செய்த சிறுவன் காதலை கண்டித்ததால், அவரை கொலை செய்தேன் என அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த தம்பதி சங்ககரசுப்பு-தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்ச்செல்வி கை மணிக்கட்டில் கத்தியால் வெட்டப்பட்டு அவரது வீட்டில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு சம்பவ தினத்தன்று உறவினர் மகன் வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் அவரை பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்து சிறுவன் அளித்த வாக்குமூலத்தில், அத்தை தமிழ்ச்செல்வியின் 13 வயது மகளை தான் காதலித்ததாகவும், அதைக் கண்டித்ததால் அத்தையை கொன்றதாகவும் கூறியுள்ளான்.

கரடி பொம்மையை முகத்தில் வைத்து அழுத்தி மூச்சுத் திணற வைத்து கொன்றதாகவும், பின்னர் கை மணிக்கட்டை வெட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுவனை கைது செய்துள்ள பொலிசார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி 2ஆம் நாள் உற்சவம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த அம்பாள் மகோற்சவத்தில் இரண்டாம் நாள்  உற்சவம்   நேற்று 05-08-2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது .

காலை 11.00 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் உள்வீதி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றதுடன் மாலை உற்சவத்தில் பிற்பகல் 4.30மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி 7.00மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று எட்டு மணியளவில் சிம்ம வாகனத்தில் அம்பாள் திருஉலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

தந்தையின் சடலம் வீட்டில் : 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவி!!

அம்பாறை தமன பிரதேசத்தில், காட்டு யானை தாக்கியதில் கொல்லப்பட்ட தந்தையின் உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவி ஒருவர் இன்று 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

தந்தையின் உடலுக்கு அருகில் சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு மாணவி பரீட்சை எழுத சென்ற சம்பவம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதாக இருந்து என அருகில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

மாணவி படிக்கும் பாடசாலையின் அதிபர், வீட்டுக்கு வந்து மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். மஹாநாகபுர பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையத்தில் மாணவி பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

கடந்த 3ம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போது, குறித்த சிறுமியின் தந்தை, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அருண சாந்த என்ற 37 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மனைவி வாய் மற்று கண்களை பசையால் ஒட்டிய குடிகார கணவன் : பின்னர் செய்த அதிர்ச்சி செயல்!!

இந்தியாவில் குடிகார கணவன் தனது மனைவியின் வாய் மற்றும் கண்களை பசையால் ஒட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் விதிஷாவை சேர்ந்தவர் ஹல்கிராம். இவர் மனைவி துர்கா. குடிபழக்கத்துக்கு அடிமையான ஹில்கிராம் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து துர்காவை அடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றும் மனைவியை ஹில்கிராம் அடித்த நிலையில், அவரை எதிர்த்து துர்கா சண்டை போட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஹில்கிராம், துர்காவின் கண்கள் மற்றும் வாயை பசையால் ஒட்டி துடிதுடிக்க கொலை செய்துள்ளார்.

பின்னர் ஹில்கிராம் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் துர்காவின் சடலத்தை கைப்பற்றிய நிலையில், ஹில்கிராமை தேடி வருகிறார்கள்.

காதல் விவகாரத்தில் 35 வயது பெண்ணை கொலை செய்த 15 வயது சிறுவன்!!

சென்னையில் 35 வயது பெண் கொலையில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைந்தகரை பகுதியை சேர்ந்த சங்கரசுப்பு – தமிழ்செல்வி தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்த தம்பதியினர் வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த 2 ஆம் திகதி தமிழ்செல்வி தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

கழுத்து நெறிக்கப்பட்டும், கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக அங்குள்ள சிசிடிவி கமெராக்களை பொலிசார் ஆய்வு செய்த போது, தமிழ்செல்வியின் உறவுக்கார 15 வயது சிறுவனை பொலிசார் கைது செய்தனர்.

தமிழ்செல்வியின் மகளை இந்த சிறுவன் காதலித்து வந்ததாகவும், இதனை கண்டித்த காரணத்தால் ஆத்திரமடைந்த சிறுவன் தமிழ்செல்வியை கொலை செய்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பட்டப்பகலில் இளம் பெண்ணை துடி துடிக்க குத்தி கொலை செய்த இளைஞன்!!

இந்தியாவில் காதலை தெரிவித்த போதும், அந்த பெண் அதற்கு பதில் கூறாததால், இளைஞர் ஒருவர் அவரைபல முறை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் தானே பகுதியின் Regional Transport அலுவலகத்திற்கு பக்கத்தில் Prachi Zade(20) என்ற இளம் பெண்ணை அடையாளம் தெரியாத நபர் நேற்று காலை 10.30 மணியளவில் பலர் இருக்கும் நேரத்தில் பல முறை அவரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டான்.

இதனால் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்த Prachi Zade சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினார். சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், சம்பவ தினத்தன்று Akash Pawar(25) என்ற இளைஞன், இரு சக்கர வாகனத்தில் சென்ற Prachi Zade-ஐ தடுத்து நிறுத்தியுள்ளார்.

Akash Pawar இந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், தனது காதலை அந்த பெண்ணிடம் கூறிய போதும் அவர் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் பேசாமல் இருந்ததாக கூறப்படுது.

இதன் காரணமாக சம்பவ தினத்தன்று வந்த இளைஞன், அவரிடம் பேசிய போது மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் Prachi Zade-ஐ சம்பவ இடத்தில் வைத்தே பல முறை குத்தி கொலை செய்துள்ளார்.

மேலும் பொலிசார் கூறுகையில், Prachi Zade-ஐ பின் தொடர்ந்து வந்த இந்த இளைஞன், சில கிலோ மீற்றர் சென்றவுடன் தடுத்து நிறுத்தி பேசியுள்ளான்.

அவன் வரும் போதே ஒரு திட்டத்துடன் தான் வந்துள்ளான். இரு சக்கர வாகனத்தின் பின் சீட்டில் ஒரு கத்தியும், தன்னுடைய பாக்கட்டில் ஒரு கத்தியும் வைத்திருந்துள்ளான்.

பேசிய போது அந்த பெண் மறுத்ததால், பல முறை குத்தி கொலை செய்துள்ளான் என்று கூறியுள்ளனர்.

மேலும் Prachi Zade குடும்பத்தினர் ஏற்கனவே அந்த இளைஞன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்ததாகவும், அப்போது பொலிசார் இளைஞரை எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

யாழில் தாய், மகளின் மோசமான செயற்பாடு : வசமாக சிக்கியதால் நேர்ந்த கதி!!

யாழில் தாய் மற்றும் மகள் இணைந்து திருட முற்பட்ட போது வசமாக சிக்கியுள்ளனர். குறித்த சம்பவம் யாழ். பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இருவரும் மோட்டார் சைக்கிளொன்றில் காணப்பட்ட பையிலிருந்து பொருட்களை திருட முற்பட்டுள்ளனர்.

இதன்போது அருகிலிருந்தவர்கள் இதனை கவனித்து, உடனே தாய் மற்றும் மகளின் முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்பின் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.

யாழில் அட்டகாசம் செய்த ஆவா குழுவின் தலைவர் அதிரடியாக கைது : மக்கள் தாக்க முற்பட்டமையினால் பதற்றம்!!

அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழுவின் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் குழுவை செயற்படுத்தும் தலைவர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆவா குழுவினரை கைது செய்த போது, அந்தப் பகுதி மக்கள் அவர்களை தாக்க முற்பட்டமையினால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. எனினும் கடும் போராட்டத்தின் மத்தியில் ஆவா குழுவினரை பொலிஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டு, வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் இரு குழுக்களை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குற்ற செயலுக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள், வாள், கத்தி மற்றும் இரும்பு ஆகிய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த 10 பேரில் 6 பேர் ஆவா குழு உறுப்பினர்கள் எனவும், ஏனையோர் தனுரொக் குழுவை சேர்ந்தவர்கள் எனவும், பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 23 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகைக்கு பகிரங்கமாக முத்தம் கொடுத்த பிரதமர் ரணில்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

பிரபல தென்னிந்திய மற்றும் இலங்கை நடிகையான பூஜா உமாஷங்கருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க முத்தமிட்டுள்ளார்.

2018ஆம் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர், நடிகையின் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தேன் என சீனிப்பாணியை விற்பனை செய்தவர் கைது!!

வவுனியாவில் நீண்டகாலமாக வியாபார நிலையங்களுக்கு தேன் எனத் தெரிவித்து சீனிப்பாணியை விற்பனை செய்துவந்த நெளுக்குளம் பகுதியிலுள்ள நபர் ஒருவரை 10 போத்தல் சீனிப்பாணியுடன் கைது செய்துள்ளதாகவும் அவரிடமிருந்து சட்டவிரோதமாக தேன் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக வவுனியா மேற்பார்வை பொது சுகாதாரப்பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா மரக்காரம்பளையிலுள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு தேன் எனத் தெரிவித்து சீனிப்பாணியை நீண்ட நாட்களாக விற்பனை செய்து வரப்பட்டுள்ளது.

இதையடுத்து வியாபார நிலைய உரிமையாளர் வவுனியா மேற்பார்வை சுகாதாரப்பாசோதகருக்கு தகவல் வழங்கிய அடிப்படையில் இன்று காலை விற்பனை செய்வதற்கு எடுத்துவரப்பட்ட 10 போத்தல் சீனிப்பாணியுடன் நெளுக்குளம் ஊர்மிலாகோட்டத்திலுள்ள நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது நெளுக்குளம் ஊர்மிலாகோட்டத்திலிருந்து சீனிப்பாணி தயாரிப்பதற்குப்பயன்படுத்தப்படும் பொருட்களையும் மீட்டுள்ளனர். மேலும் ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்ளச் சென்றபோது அவ்வீட்டில் எவரும் இருக்கவில்லை.

இவ்வாறு குறித்த நபரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும் சந்தேக நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வியாபார நிலைய உரிமையாளர்கள் இனந்தெரியாதவர்களிடம் தேன் பெற்றுக்கொள்ளவேண்டாம் தேன் போத்தல் விற்பனை செய்யவருபவர்களின் போத்தலில் சுற்றுத்துண்டு இருந்தால் மட்டும் பெற்றுக்கொள்ளவும் இவ்வாறு சட்டவிரோதமாக முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யவேண்டாம் என்று வியாபார நிலைய உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்வதாக மேற்பார்வை சுகாதாரப்பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா வர்த்தக சங்கத்தின் அதிரடி நடவடிக்கையினால் ஸ்தம்பிதம் அடைந்த வவுனியா நகரம்!!

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று (05.08.2018) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினரால் வியாபார நிலையங்களுக்கு துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதன் பிரதிபலிப்பாக இன்றையதினம் வவுனியா நகரிலுள்ள 95 வீதமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்தனர்.

மூடப்படாத வர்த்தக நிலையங்களுக்கு வர்த்தக சங்க உறுப்பினர்கள் விஜயம் மேற்கொண்டு வர்த்தக நிலையத்தினை மூடி ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இந் நிலையில் இன்றையதினம் காலை 10 மணியளவில் உதவித் தொழில் ஆணையாளர் தலைமையில் வர்த்தக நிலையங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட குழுவினர் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாம நிதி செலுத்தப்படுகின்றதா என பரிசோதனைகளை மேற்கொண்டனர்.