வவுனியா வைரவப்புளியங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்று (05.08.2018) மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற கார் – மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா நகரிலிருந்து குருமன்காடு நோக்கி வைரவப்புளியங்குளம் வீதியூடாக பயணித்த கார் மீது குருமன்காட்டிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த 20 வயது மதிக்கத்தக்க இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் கடத்தப்பட்ட இரண்டு பாடசாலை சிறுமிகள் அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை வவுனியா நகரப்பகுதி ஒன்றைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயதுகளையுடைய மாணவிகள் இருவர் பூந்தோட்டம் பகுதியில் வைத்து கடத்தப்பட்டிருந்தனர்.
கடத்தப்பட்ட இருவரும் சாந்தசோலை வீதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இருவரும் அங்கிருந்து அன்றைய தினம் மாலை தப்பித்திருந்தனர்.
இதனைடுத்து அவர்கள், அலரி விதை உட்கொண்டிருந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் வவுனியா, ஸ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த இளைஞரொருவரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த அம்பாள் மகோற்சவத்தில் 04-08-2018 சனிக்கிழமை நேற்றையதினம் கொடிஏற்றத்துடன் ஆரம்பமானது.
நேற்று காலை கொடியேற்ற கிரியைகள் காலைமுதல் இடம்பெற்று சிவஸ்ரீ சதா சங்கரதாஸ் குருக்கள் தலைமையில் 11.30 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது . …
மேற்படி கொடியேற்ற வைபவத்தில் ஏராளமான் பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை வழிபட்டனர்.
நேற்றைய மாலை உற்சவத்தில் பிற்பகல் 4.30மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி 7.00 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றுஎட்டுமணியளவில் சிம்ம வாகனத்தில் அம்பாள் திருஉலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது.
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட விசேட அதிரடிப்படையினர் நேற்றைய தினம் (03.08) இரவு 9 மணியளவில் இரண்டு யானைத் தந்தங்களை மீட்டுள்ளதுடன் கனகராயன்குளம், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்
கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்களையும் கைது செய்யப்பட்ட நபர்களையும் நேற்றைய தினம் இரவு கனகராயன்குளம் பொலிஸாரிடம் விசேட அதிரைப்படையினர் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகரினால் ஓமந்தைப்பகுதியில் வியாபார நிலையத்தில் காலாவதியான பிஸ்கட் மற்றும் வண்டு மொய்த்த பேரீச்சம்பழம் என்பனவற்றை விற்பனை செய்த வியாபார நிலைய உரிமையாளருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தினால் 13000 ஆயிரம் தண்டம் அறிவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஓமந்தைப் பொது சுகாதாரப்பரிசோதகர் தனது வழமையான செயற்பாட்டின்போது ஓமந்தைப்பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது பாவனைக்கு உதவாத வண்டு மொய்த்த பேரீச்சம்பழம் மற்றும் காலாவதியான பிஸ்கட் என்பன விற்பனை செய்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து வியாபார நிலைய உரிமையாளருக்கு எதிராக ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகரினால் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பாவனைக்கு உதவாத காலாவதியான பிஸ்கட் மற்றும் வண்டு மொய்த்த பேரீச்சம்பழம் போன்ற மக்கள் பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த வியாபார நிலைய உரிமையாளருக்கு நீதிமன்றினால் இவ்விரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக 13000 ஆயிரம் ரூபா தண்டமாக அறவிடப்பட்டுள்ளதுடன் கைப்பற்றிய பாவனைக்கு உதவாத பொருட்களை அழிப்பதற்கும் மன்று உத்தரவிட்டுள்ளது.
வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் நேற்று முன்தினம் விற்பனைக்கு வைக்கப்பட்ட சீனியில் யூரியா கலக்கப்பட்டுள்ள சம்பவத்தினையடுத்து சதொச தலைமை அலுவலகத்தினால் வவுனியா சதொச விற்பனை நிலையத்தின் முகாமையாளர் மற்றும் யூரியாவை நிலையத்திற்குள் எடுத்து வந்த பணியாளர் ஆகிய இருவரையும் நேற்று பணிநீக்கம் செய்துள்ளதாக வவுனியா சதொச விற்பனை நிலையத் தகவல் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட சீனியில் யூரியா கலந்துள்ளதாக சதொசவில் பணியாற்றும் பணியாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டனர்.
இதையடுத்து பொலிசார் சுகாதாப் பரிசோதகர்களின் கவனத்திற்குக்கொண்டு வந்தனர். அங்கு சென்ற சுகாதாரப்பரிசோதகர்கள் மேற்கொண்ட விசாரணைகளின்போது சதொச விற்பனை நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தனது தேவைக்காக யூரியாவைக் கொள்வனவு செய்து வைத்திருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பிறிதொரு பணியாளர் அதனை சீனி என நினைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த சீனியுடன் விற்பனைக்காக கலந்துவைத்துள்ளார். அன்றைய தினம் சீனியைக் கொள்வனவு செய்த நபர் ஒருவர் மாலை நேரம் கொள்வனவு செய்த சீனியை எடுத்து வந்து கொடுத்துவிட்டு சீனியில் வித்தியாசம் உள்ளதைத் தெரியப்படுத்தியுள்ளார்.
அனைத்து சீனி மூடைகளையும் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் சத ச நிலையத்தில் வைக்கப்பட்ட யூரியாவை தேடியபோது சம்பவம் தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் ச தொச பணியாளர்கள் பொலிஸ் நிலையத்தில் நடந்தவற்றை தெரிவித்துள்ளனர். எனினும் சம்பவ தினத்தன்று சதொச விற்பனை நிலையத்தால் 114கிலோ கிராம் சீனி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை வரை 126 கிலோ கிராம் சீனி பெற்றுக்கொண்ட பொதுமக்கள் திரும்ப ஒப்படைத்துள்ளனர். எனவே பெற்றுக்கொள்ளப்பட்டவற்றிற்கு அதிகமான சீனி திரும்பி வந்துள்ளது. இதையடுத்து இன்று சதொ ச நிலையத்திற்குச் சென்ற சுகாதாரப்பரிசோதகர்கள் யூரியா இராசாயனம் கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் சீனியை அங்கிருந்து அகற்றிவருகின்றனர்.
வவுனியா மாவட்ட சமூதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தென்னஞ்சோலை திட்டத்தின் போது பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உணர்ச்சி மேலீட்டினால் கண்ணீர் விட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்ட சமூதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா- மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் 100 தென்னங்கன்றுகள் நடும் தென்னஞ்சோலை திட்ட நிகழ்வு இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்கள் கலந்து கொண்டு தென்னஞ்சோலை திட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டிலும் கலந்து கொண்டார்.
இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு வவுனியா, மன்னார் மக்கள் வழங்கும் ஒத்துழைப்பு குறித்தும், சமுதாய பொலிஸ் குழுவின் செயற்பாடு மற்றும் வவுனியா – மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிநடத்தல் குறித்தும் பெருமிதம் கொண்ட பொலிஸ் மா அதிபர் உணர்ச்சி மேலீட்டினால் ஆனந்த கண்ணீர் விட்டார்.
இந்நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், வவுனியா நகரசபைத் தலைவர் இ.கௌதமன், வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் சுஜன், சமூக சேவகரும் ஓமந்தை பொற்கோவில் ஸ்தாபகருமான வேலுப்பிள்ளை குணரட்ணம், வர்த்தக சங்க உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள், மாணவர்கள், நரசிங்கர் ஆலய பரிபாலன சபையினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் இன்று (03.08) காலை தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டிற்குள் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா சிதம்பரபுரம், கற்குளம், 2ம் படிவம் பகுதியில் வசித்த வந்த பேருந்து சாரதியான சந்திரகுமார் றஜீவன் என்ற 33 வயது குடும்பஸ்தர் இன்று காலை 5 மணியளவில் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
தாதியாக பணிபுரியும் இவரது மனைவி நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு இன்று காலை வீட்டிற்கு சென்ற போது கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற சிதம்பரபுரம் பொலிசார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சமயகுரவர்களால் பாடல் பெற்ற சிவ குகஸ்தலங்கள் நிறைந்த இலங்காதீபத்தின் வடபால் வவுனியா கோவிற்குளம் திவ்வியஷேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை வேண்டி அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் அம்பாளுக்கு நிகழும் விளம்பி வருஷம் தட்சணாயம் ஆடி மாதம் பத்தொன்பதாம் நாள் (04.08.2018) சனிக்கிழமை சப்தமி திதியும் அஸ்வினி நட்சத்திரமும் கூடிய சுப தினத்தன்று பகல் 12.00 மணிக்கு துவஜாரோகணமாகி கொடியேற்றம்) ஆடி மாதம் 28ம் நாள் (13.08.2018) திங்கட்கிழமை பூர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறத் திருவருள் கைகூடி உள்ளதால் அடியார்கள் யாவரும் வந்து தரிசித்து அம்பாளின் இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இக்காலங்களில் அடியார்கள் வந்து தரிசித்தும் தங்களால் இயன்றளவு சரியைத் தொண்டுசெய்து, பூ, பூமாலைகள், பால், தயிர், இளநீர் முதலியன தந்துதவி எம்பெருமாட்டியின் திருவருளைப் பெற்று உய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
கோவில்குளம் – வவுனியா.
ஆலய அறங்காவலர்களும் உபயகாரர்களும்
024-2222651
திருவிழா விபரம்
(03.08.2018) வெள்ளி மாலை விநாயகர் வழிபாடு, அனுஞ்ஞை , கிராமசாந்தி, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரணம் |
மாலை – யாகாரம்பம்
01 ஆம் திருவிழா கொடியேற்றம் (04.08.2018 சனி)
உபயம்: சிவத்திரு. சி. இளந்தனையசிங்கம் குடும்பம்.
02 ஆம் திருவிழா (05.08.2018 ஞாயிறு)
உபயம்:திரு. வே.இராமச்சந்திரன், திரு.K.குகதாசன், N.K.திருச்செல்வம் குடும்பம், K.தவலிங்கரட்ணம் குடும்பம்,திரு. வே.ஜெபநேசன் குடும்பம், திரு. R.மாதவன் குடும்பம், திரு. மு. சிவதர்சன் குடும்பம், திரு. வே. கணாதீஸ்வரன் குடும்பம்
03 ஆம் திருவிழா (06.08.2018 திங்கள்)
உபயம்: திரு. க. இளையதம்பிகுடும்பம், திரு. பா.சசிகரன் குடும்பம், திரு. கே. பிரபாகரன் குடும்பம்.
04 ஆம் திருவிழா (07.08.2018 செவ்வாய்)
உபயம்: திருவாளர் லீலா அரிசி ஆலை
05 ஆம் திருவிழா (08.08.2018 புதன்)
உபயம்: சிவத்திரு. ஆ. கனகலிங்கம் குடும்பம்
06 ஆம் திருவிழா (09.08.2018 வியாழன்)
உபயம்: திரு. வே. சரவணபவராஜா குடும்பம்
07 ஆம் திருவிழா (10.08.2018 வெள்ளி) மாலை வேட்டைத்திருவிழா
உபயம்:திரு. சரவணமுத்து குடும்பம், திரு. சீ. சிவதாசன் குடும்பம், திரு. சாந்தலிங்கம் குடும்பம்
08 ஆம் திருவிழா (11.08. 2018 சனி) மாலை முத்துச்சப்பறத்திருவிழா
உபயம் : திரு. உ.உதயசங்கர் குடும்பம்
09 ஆம் திருவிழா 12.08.2018 ஞாயிறு) தேர்த்திருவிழா
உபயம்:திரு. நா.அம்பலவாணர் குடும்பம்
10 ஆம் திருவிழா (13.08.2018 திங்கள்)தீர்த்தோற்சவம்
ஹட்டன், கொட்டகலை பேருந்து நிலையத்தில் இருந்து ஆண்ணொருவரின் சடலம் மீடகப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம் பெற்றுள்ளது. 60 வயதஸ்ரீது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் சடலமாக மீடகப்பட்டுள்ள நபர் யார்? என இது வரை அடையாளாம் காண வில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் இன்றைய தினம் (02.08.2018) காலை 9 மணி முதல் மதியம் 3.30 மணி வரை சீனி கொள்ளவனவு செய்த பொதுமக்களை அவற்றை பாவிக்க வேண்டாமெனவும் உடனடியாக திருப்பி வழங்குமாறு வவுனியா பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது தனிப்பட்ட தேவைக்காக யூரியாவினை கொள்வனவு செய்து சதோச விற்பனை நிலையத்தில் வைத்துள்ளார். அதனை அங்கு பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் சீனி என நினைத்து விற்பனை செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் இன்று (02.08.2018) காலை 9 மணி தொடக்கம் மதியம் 3.30 மணிவரை வவுனியா நகரில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் சீனி கொள்வனவு செய்த பொதுமக்களை அவற்றை உபயோகிக்க வேண்டாமெனவும் அவற்றை உடனடியாக மீள வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களை இம்மாதம் முதல் ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்கி உரிமையாளர்கள், ஊழியர்கள் தமது குடும்பத்தினருடன் அன்றைய தினத்தைக் செலவிடுவதற்கு வவுனியா வர்த்தகர் சங்கத்தினரால் வியாபார நிலையங்களுக்குத் துண்டுப்பிரசுரங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வரும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
வரத்தில் ஒரு நாளை குடும்பத்தினருடன் முதலிடுவோம் என்ற தலைப்பில் உள்ள துண்டுப்பிரசுரத்தில், உணவகங்கள், மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தவிர்த்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வரும் ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்க ஒத்துழைக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
விஷேட பண்டிகை காலங்களில் முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த தினங்கள். நாம் அணைவரும் கடுமையாக உழைப்பது எமது குடும்பத்தினருக்காகவே. எமக்கு அவர்களுடன் கலந்துரையாடி குழந்தைகளுடன் கூடி விளையாடி அவர்கள் எதிர்பார்க்கும் இன்பமாக கூடலை வழங்க போதிய நேராம் கிடைக்கின்றதா? இல்லை என்பதே பலரின் பதிலாக அமைந்துள்ளது.
வர்த்தக நிலைய உரிமையாளர்களாகிய நாம் அனைவரும் ஒன்றினைந்து ஞாயிறு தினங்களை விடுமுறை தினமாகப்பிரகண்டனப்படுத்தி எமது குடும்பத்தினருடன் ஒன்றினைந்து இன்புற்றிருக்க அனைத்து வர்த்தக நிலைய உரிமையாளர்களின் ஒத்துழைப்புக்களை வேண்டி நிற்கின்றோம். என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – தென்னியன்குளத்தினை அடுத்துள்ள காட்டுப் பகுதயில் சிறுவன் ஒருவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் அப் பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தென்னியன்குளத்தினை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் புதையல் தோண்டியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அப் பகுதியில் சிறுவன் ஒருவனின் பாதணியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 8 அடி ஆழமான குழியொன்று வெட்டப்பட்டு, சேவல் ஒன்று பலி கொடுக்கப்பட்டுள்ளமைக்கான அடையாளங்களும், பூஜைகள் இடம்பெற்றமைக்கான தடையங்களையும் மல்லாவி பொலிஸார் நேற்றைய தினம் கண்டெடுத்துள்ளனர்.
இந் நிலையிலேயே குறித்த இடத்தில் சிறுவனின் பாதணி கண்டெடுக்கப்பட்டுள்ள காரணத்தினால், புதையல் தோண்டும் நடவடிக்கைக்காக சிறுவன் ஒருவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கிராம மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மல்லாவி பொலிஸார் தெரிவிக்கையில்,
கிராம மக்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் அங்கு சென்று சோதனைகளை மேற்கொண்டோம்.
அப் பகுதியிலிருந்து ஒருசோடி பாதணியை மீட்டோம். எனினும் அப் பகுதியில் சிறுவன் எவரும் காணாமல் போனதாக எமக்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை.
அத்துடன் அப் பகுதியில் சட்டவிரோத மரக் கடத்திலில் ஈடுபடும் நபர்கள் இந்த பாதணிகளை விட்டு சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வவுனியா கள்ளிக்குளத்தில் குப்பை கொட்டுவதற்கு வடமாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களினால் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள், கடந்த 50 வருடங்களாக பம்மைபடுப்பகுதியில் இதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டப்பட்டு வருவதாக நம்பப்படுகின்றது.
எனினும் நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குப்பைகளை கள்ளிக்குளம் பகுதியில் கொட்டுவதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடித்தில் ஒன்றினை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மேற்படி பிரதேசத்திற்கு கடந்த 2013, 2014ஆம் அண்டுகளில் புதிதாக மக்கள் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றும் விடயங்கள் பற்றி பேசப்பட்டு வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக நேற்று 01.08.2018 மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விஷே கூட்டத்தில் குப்பைகள் கொட்டும் இடத்தை ஓமந்தை – கள்ளிக்குளம் பகுதிக்கு மாற்றுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
கள்ளிக்குளம் வவுனியாவின் பூர்வீகக்கிராமமாகும் 1977, 1983, 1990 காலப்பகுதிகளில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இக்கிராமத்திலிருந்து மக்கள் வெளியேறி தற்போது மீண்டும் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இக்கிராமத்தை குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றும் முயற்சியானது எற்றுக்கொள்ள முடியாது ஏன்பதை தங்களின் கவனத்திற்குத் தெரியப்படுத்தவதாக வடமாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கத்தினால் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காயத்திரி அம்மன் ஆலயத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 65 – 70 வயதுடைய ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், இது கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சடலத்தின் முழங்கால்கள் மடக்கப்பட்ட நிலையில் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டு உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், சடலம் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் செருப்பும், 30 அடி தூரத்தில் இவரது கைக்குட்டை மற்றும் மேலாடையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மேலாடையில் திருகோணமலையில் இருந்து கண்ணியாவுக்கு சென்ற பஸ் டிக்கட் காணப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் அத்துமீறி நுழைந்தமையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது .
சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்கோரி முல்லைத்தீவு நகர்பகுதியில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் அத்துமீறி புகுந்துள்ளனர்.
இதில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டு “சட்டவிரோத கடற்தொழில்களை உடனடியாக தடைசெய்ய வேண்டும்” என்று கோசம் எழுப்பிக்கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் தடுமாறி வருகின்ற நிலையில், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து மேலதிக பொலிஸாரை வரவழைத்து ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் உறுதியான முடிவு எட்டப்படும் வரை தமது போராட்டம் நீரியவள திணைக்களத்திற்கு எதிரே தொடரும் என தெரிவித்துள்ளனர். தற்பொழுது நீரியல்வள திணைக்கள நுழைவாயிலுக்கு எதிரே பிரதான வீதியோரம் தகர கொட்டகை அமைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மீனவர்கள் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.