வவுனியாவில் போதையில் இருவர் செய்த செயல்!!

நேற்றைய தினம்(புதன்கிழமை) மாலை வவுனியா ஓமந்தை சந்தியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கு மதுபோதையில் வந்த இரு இளைஞர்கள் அங்கு நின்ற முச்சக்கரவன்டி சாரதிகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அங்கு தரித்து நின்ற நான்கு முச்சக்கர வண்டிகளின் முன் கண்ணாடி உட்பட அனைத்து கண்ணாடிகளையும் உடைத்துவிட்டு தப்பிக்க முயன்ற வேளை அங்கு வந்த பொலிஸாரினால் விரட்டி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ பாலவிநாயகர் ஆலய மகோற்சவம் கொடியேற்றதுடன் ஆரம்பம்!

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ பாலவிநாயகர் ஆலய மகோற்சவம் நேற்று 01.08.2018  புதன்கிழமை  கொடியேற்றதுடன்   ஆரம்பமாகியது .

பத்து தினங்கள் இடம்பெறும் இவ் மகோற்சவத்தில்  10.08.2018 வெள்ளிகிழமையன்று தேர்த்திருவிழாவும்
11.08.2018 சனிக்கிழமை   தீர்த்த திருவிழாவும்  இடம்பெறும் .

2000 பேர் பார்த்துக் கொண்டிருக்க பேஸ்புக் நேரலையில் பரிதாபமாக இறந்த இளைஞன்!!

இந்தியாவில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்வதை பேஸ்புக் நேரலையில் 2,000 பேர் பார்த்தும் அவர் குறித்து யாரும் பொலிசாருக்கு தகவல் கொடுக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவின் பட்டோடி என்ற கிராமத்தில் வசிப்பவர் அமித் சௌஹான், குடும்பத் தகராறு காரணமாக இவரின் மனைவி தன் இரண்டு குழந்தைகளுடன் சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனால் துக்கம் தாங்காமல் இருந்த அமித் செளஹால் பேஸ்புக்கில் நேரலை செய்தவாறே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பொலிசார் கூறுகையில், கடந்த திங்கட்கிழமை அமித்தின் மனைவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலே பேஸ்புக் நேரலையில் அமித் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது அவர் தான் தற்கொலை செய்துகொள்ள இருப்பதாகவும், அதை அனைவரும் ஷேர் செய்ய வேண்டும் எனவும் கூறியபடியே, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இதை பேஸ்புக் நேரலையில் சுமார் 2000-பேர் பார்த்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் யாரேனும் பொலிசாருக்கு தகவல் கொடுத்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம், ஆனால் ஒருவர் கூட காவல்துறைக்கு தெரிவிக்கவில்லை.

அவர் நேரலை செய்த மறுநாள் யாரோ ஒரு நபர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததால், அவர்கள் அமித்தின் வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

ஆனால் பொலிசார் அங்கு சென்ற போது அமித்திற்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டுக் கொண்டிருந்துள்ளது. இருப்பினும் பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமித்தின் தந்தை அஷோக் சௌஹான், என் மருமகள் வீட்டை விட்டு வெளியே சென்றதும் அமித் தன் அறைகளை விட்டு வெளியே வரவில்லை.

இரவு 9 மணிக்கு அவனுக்கு உணவு கொடுப்பதற்காக அவனை அழைக்க சென்ற போது, அவன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி அமித்துக்கு சில காலமாகவே மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காகச் சிகிச்சை பெற்றுவந்தான்.

மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் என அனைவரிடமும் தினமும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பான். அவன் நடத்தை எனக்கு முற்றிலும் பிடிக்காததால், நான் அவனிடம் பேசுவதையே சில நாள்களாக நிறுத்திவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இரண்டு கர்ப்பப்பையில் குழந்தை பெற்றெடுத்த 50 கோடியில் ஒரு பெண் : மருத்துவ உலகில் அதிசயம்!!

பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் இரட்டை கர்ப்பப்பையில் இரண்டு குழந்தைகளை கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றெடுத்துள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.

50 கோடி பெண்களில் ஒருவருக்குத்தான் இது போல இயல்பாகக் குழந்தை பிறப்பதும் நேரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் கார்ன்வால் நகரில் வசித்து வரும் ஆண்ட்ரூ தீயணைப்பு வீரராகப் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி ஜெனிபர்தான் கர்ப்பமாக இருந்துள்ளார்.

ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான் அவருக்கு இரண்டு கர்ப்பப்பை இருந்ததும், ஒவ்வொன்றிலும் ஒரு குழந்தை இருந்ததும் தெரியவந்திருக்கிறது. சரியாக கருத்தரித்த 34-வது வாரத்தில் அவருக்கு பிரசவவலி ஏற்பட்டிருக்கிறது.

அறுவைச்சிகிச்சையின் மூலமாக இரண்டு குழந்தைகளையும் வெளியே எடுத்திருக்கிறார்கள். குழந்தைகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண்.

மருத்துவம் கூறும் காரணம் என்ன?

பெண்களின் மலட்டுத்தன்மைக்கான காரணிகளில் மிக முக்கியக் காரணியாக இருப்பது இரண்டு கர்ப்பப்பை.

தாயின் வயிற்றில் இருக்கும் அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும், முதலில் இரண்டு கர்ப்பப்பை உருவாகி பின்னர்தான் ஒரே கர்ப்பப்பையாக மாறும். சிலருக்கு மாறாமல் அப்படியே இரண்டாகவே இருந்துவிடும்.

குழந்தையாகப் பிறக்கும்போதே அவர்கள் இரட்டை கர்ப்பப்பையுடன் (Bicornuate uterus) பிறப்பார்கள். அவர்களில் நூற்றுக்கு ஐம்பது பெண்களுக்குத்தான் இயற்கையாகக் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதிலும், பலருக்கு கரு வயிற்றில் தங்காது, கலைந்துவிடும். ஒரு சிலர்தான் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்.

இரண்டு கர்ப்பப்பை உடைய பெண்களுக்கு, ஒரு கர்ப்பப்பையில் குழந்தை வளர்வதே கஷ்டம். அப்படியிருக்கையில் ஜெனிபர் குழந்தை பெற்றெடுத்தது ஒரு அரிய நிகழ்வுதான்.

ஒரே நேரத்தில் 3 ஆண்களை காதலித்த கல்லூரி மாணவி : உண்மை வெளியானதால் எடுத்த முடிவு!!

ஆந்திர மாநிலத்தில் ஒரே நேரத்தில் மூன்று ஆண்களை காதலித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர், இந்த உண்மை வெளியே வந்த காரணத்தால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.

சங்கீதா என்பவர் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவர் தன்னுடன்படிக்கும் மாணவன், இராணுவ வீரர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகிய 3 பேரையும் ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார்.

இந்த விடயம் காதலர்களுக்கு தெரியவந்ததையடுத்து, இவர்கள் மூன்று பேரும் சங்கீதாவின் வீட்டு முன்பாக வந்து தகராறு செய்துள்ளனர், இதை அறிந்து சங்கீதாவின் பெற்றோர் கோபமடைந்து சங்கீதாவை கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சங்கீதா அவமானம் தாங்க முடியாமல், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

அந்த வலி எனக்கு தெரியும் : கண்ணீர் சிந்திய நடிகை!!

சென்னை அயனாவரம் பகுதியில் 15 வயது சிறுமி 17 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அந்த சிறுமிக்கு ஆதரவு வேண்டி ஆர்ப்பாட்டத்தில், நடிகர் கணேஷ் வெங்கட்ராம், நடிகை சாக்ஷி அகர்வால், டாக்டர் கமலா செல்வராஜ், திருநங்கை அப்சரா ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிறுமியின் அக்கா பிரியா பேசும்போது, `குடியிருப்பில் அவ்வப்போது, குழந்தையின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. ஆனால், அதை யாருமே கண்டுகொள்ளவில்லை. இது என்ன மனிதத் தன்மை? குழந்தையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வன்கொடுமை செய்துள்ளனர்’

கணேஷ் வெங்கட்ராமன் மனைவி, நிஷா வெங்கட்ராமன் அழுகையுடன் பேசியுள்ளார். எனக்கும் இது போன்ற கொடுமை நிகழ்ந்துள்ளது. அந்தக் குழந்தையின் வலி என்னவென்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

எனக்கு அந்தக் கொடுமை நடந்தபோது 10 வயது. அந்த வயதில் என் அம்மாவிடம் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. என் தோழிகளிடம் மட்டுமே கூறினேன். அந்தக் குழந்தைச் சந்தித்து, என் ஆறுதலைத் தெரிவிக்க வேண்டும் என்று உருக்கத்துடன் பேசியுள்ளார்.

தனது ஒரு வயது மகளை பிளீச்சிங் பவுடர் போட்டு குளிக்க வைக்கும் தாய் : பரிதாப பின்னணி!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தாய் தனது ஒரு வயது மகளின் தோல் பிரச்சினை காரணமாக அவளை இரண்டு நாளுக்கொருமுறை பிளீச்சிங் போட்டு குளிக்க வைக்கிறார்.

Raven Ford (23) தனது குழந்தை பிறந்தபோது அது ஒரு பிளாஸ்டிக் பொம்மை போல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். Amelia Moe என்னும் அந்தக் குழந்தைக்கு ஒரு அபூர்வ தோல் நோய் இருப்பதால் அவளது தோல் காய்ந்து காணப்பட்டது.

அதனால் மருத்துவர்கள் இரண்டு நாளுக்கொருமுறை அவளை பிளீச்சிங் போட்டு குளிக்க வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன் Moeவின் தோல் உதிர்வதால் அவளுக்கு எப்போதும் மாய்ச்சரைஷர் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

பிளீச்சிங் போடாவிட்டால் Moeவுக்கு நோய்த்தொற்று வேறு ஏற்பட்டு விடும் என்பதால் அவளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது என்கிறார் அவளது தாயான Raven.

இதுபோக Moeவுக்கு இன்னொரு பிரச்சினை, அவளுக்கு வியர்வை துளைகள் இல்லாததால் அவளை எப்போதும் குளிர்ச்சியாகவே வைத்துக் கொள்ள வேண்டும்.

தற்போது ஒரு வயதாகும் Moeவின் நிலைமையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டாலும் அவளை வெளியே கொண்டு செல்லும்போது பலர் அவளை குழந்தை என்று கூட பார்க்காமல் கிண்டல் செய்வதுதான் Ravenக்கு கவலையாக உள்ளது.

தயவு செய்து மற்றவர்களின் தோற்றத்தைப் பார்த்து அவர்களை மதிப்பிடுவதை நிறுத்துங்கள் என்கிறார் அவர்.

Amelia when she was first born (PA Real Life/Collect)

ஸ்மார்ட்போன் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இளைஞன் : வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

தமிழகத்தில் ஸ்மார்ட்போன் செயலி மூலம், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க விடயங்களை படம் பிடித்து மிரட்டி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்த கணினி பொறியாளர் தினேஷ்குமார். இவர் தனது அக்கா முறை உறவுக்கார பெண் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளார். அப்போது, குறித்த பெண் தனது கணவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய ஸ்மார்ட்போனில், வட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து தர வேண்டி தினேஷ்குமாரிடம் கேட்டுள்ளார்.

அதன்படி, அவரது ஸ்மார்ட்போனை வாங்கிய தினேஷ்குமார், அதில் Track View என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து, அதனை தனது கைப்பேசி மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வழிவகை செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த பெண் தனது கணவருடன் பேசும் அந்தரங்க விடயங்கள், அந்தரங்க வீடியோ, புகைப்படங்கள் என அனைத்தையும் தினேஷ்குமார் தனது மடிக்கணினியில் Track View செயலி மூலம் பதிவு செய்துள்ளார்.

பின்னர், அவற்றை வைத்து குறித்த பெண்ணை மிரட்டி, தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டியுள்ளார். அப்பெண் இந்த விடயத்தை தனது சகோதரரிடம் தெரிவிக்க, அவர் குறுந்தகவல் ஒன்றை தனது சகோதரி அனுப்புவது போல் தினேஷ்குமாருக்கு அனுப்பியுள்ளார்.

அதில் தனிமையில் சந்திக்கலாம் என இடம் ஒன்று குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு சென்ற தினேஷ்குமாரைப் பார்த்த குறித்த பெண்ணின் சகோதரரும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து, தினேஷ்குமாரை அடித்து உதைத்த அவர்கள் அவரை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

தினேஷ்குமாரை கைது செய்த பொலிசார், அவரது வீட்டிற்கு சென்று சோதனையிட்டதில் 2 மடிக்கணினிகள், 3 கைப்பேசிகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட பெண்களின் உடைகளை கைப்பற்றினர். அதில் ஒரு மடிக்கணினியில் 80க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க வீடியோக்களும், 140க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க உரையாடல்கள் இருந்துள்ளன.

பின்னர், இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

தினேஷ்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், தனியார் கல்லூரி ஒன்றில் கணினி தொழில்நுட்பவியளாலராக பணிபுரிந்த போது, மாணவி ஒருவரின் கைப்பேசியில் இருந்து வீடியோக்களை திருடியுள்ளார். அந்த பெண் கல்லூரி நிர்வாகத்திடம் அளித்த புகாரின் பேரில் தினேஷ்குமார் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன் பின்னர், தான் சந்தித்த உறவுக்கார பெண்கள், சகோதரிகள், தோழிகள் என அனைவரது ஸ்மார்ட்போன்களையும் வாங்கி பார்ப்பது போல் Track View செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதனை தனது கைப்பேசி மற்றும் மடிக்கணினியுடன் இணைத்துள்ளார்.

இதன்மூலம் அவருக்கு கிடைக்கும் அந்தரங்க வீடியோக்களைக் கொண்டு, அந்த பெண்களை மிரட்டி தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். பின்னர் அவர்களது உடைகளை மட்டும் தனது வீட்டில் சேகரித்து வைத்துள்ளார்.

அவரது ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்களின் வீடியோக்களை ஒன்லைன் மூலமாக, வெளிநாடுகளில் உள்ள ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்துள்ளார். இவ்வாறு தினேஷ்குமாரிடம் சிக்கியவர்கள் பெரும்பாலானோர் அவரது உறவினர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, தினேஷ்குமார் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தினேஷ்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நம்பி வந்தேன் : இப்படி ஆகிவிட்டதே : பொலிசிடம் சிக்கிய பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்!!

தமிழகத்தில் கொள்ளையன் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண் நம்பி வந்தேன், இப்படி மாட்டிக் கொண்டேன் என்று பொலிசாரிடம் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை மாவட்டம் போரூரை அடுத்த மதனந்தபுரம் முத்துமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர், நிர்மலா(56). இவரிடம் கடந்த 18-ஆம் திகதி வீடு வாடகைக்கு வேண்டும் என்று தம்பதியினர் கேட்டு வந்துள்ளனர்.

அந்த சமயத்தில் அவர் குடிக்க தண்ணீர் வேண்டும் கேட்டதால், உடனே நிர்மலா உள்ளே சென்ற போது, அவரை பின் தொடர்ந்த நபர் அவரை குத்தி அவரிடமிருந்த நகையை பறிக்க முயற்சி செய்தார்.

அப்போது நிர்மலா சாதுர்யமாக செயல்பட்டு அவரை தடுத்து, அதன் பின் கத்தியதால், அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.

இதையடுத்து அந்த நபரை பொலிசாரிடம் பிடித்து கொடுத்தனர். பொலிசார் நடத்திய விசாரணையில், அந்த நபரின் பெயர் தட்சணா மூர்த்தி எனவும் பிரபல கொள்ளையன் என்பதும் தெரியவந்துள்ளது.

அவனை சிறையில் அடைத்த பொலிசார், உடன் வந்த பெண் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த பெண்ணையும் நேற்று கைது செய்தனர்.

பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய பெயர் அமுதா எனவும், தான் தட்சணா மூர்த்தியின் வீட்டில் வேலை பார்த்து வந்தாகவும் கூறியுள்ளார்.

என்னுடைய வீட்டின் கஷ்டங்களை தட்சணா மூர்த்தியிடம் கூறிய போது, அவர் வாடகைக்கு வீடு கேட்கும் திட்டத்தை கூறினார்.

நானும் சரி என்று சொன்னவுடன், இருவரும் போரூரில் உள்ள நிர்மலாவின் வீட்டிற்கு சென்றோம். அங்கு இருவரும் கணவன், மனைவி போல் வீடு கேட்டோம்.

வீட்டை பார்த்த பிறகு வாடகை குறித்து பேசிய போது தான் நிர்மலாவைத் தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடிக்க தாக்கிய போது தான் தட்சணா மூர்த்தி சிக்கிக் கொண்டார்.

தட்சணாமூர்த்தியை நம்பி வந்தேன், தற்போது சிக்கிக்கொண்டேன் என்று பொலிசாரிடம் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார்.

பேய் பிடித்த யுவதிக்கு பூசாரி செய்த காரியம் : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

யுவதி ஒருவரின் உடலில் ஒரு வகை எண்ணெயை பூசி, அந்த யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பேய் விரட்டும் தொழிலை செய்து வந்த இளம் பூசாரிக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று 9 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

ஆடை தொழிற்சாலையில் பணிப்புரிந்து வந்த யுவதிக்கு பிடித்துள்ள பேயை விரட்ட சந்தேக நபர் பூசை நடத்த வேண்டும் எனக் கூறி, யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

புத்தளம் தப்போவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான ரன்ஹாமீகே சுரேஷ் ஷெல்டன் என்ற நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட யுவதிக்கு ஒரு லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, இழப்பீட்டை வழங்க தவறினால், மேலும் 12 மாதங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

அனுராதபுரம் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட ராஜாங்கன பொலிஸ் பிரிவில் கலாஓயா பிரதேசத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

27 வயதான யுவதியே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

கருணாநிதிக்கு சிறுமி எழுதிய நெஞ்சை உருக வைக்கும் கடிதம் : என்ன எழுதியிருந்தார் தெரியுமா?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருக் கருணாநிதிக்கு சிறுமி ஒருவர் எழுதிய கடிதம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நிலை தொய்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், தற்போது உடல் நிலை சீராகி மிகவும் ஆரோக்கியமாக உள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதிக்கு சிறுமி ஒருவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் எனக்கு கருணாநிதி தாத்தாவை மிகவும் பிடிக்கும், உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றவுடன் அழுகை வந்தது, உங்களுக்காக பிரார்த்தானை செய்தேன், நான் மட்டுமின்றி இங்கு எல்லோரும் பிரார்த்தனை செய்கின்றனர்.

என் அம்மா நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று சொன்னார், அதை கேட்ட பின்பு தான் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, தற்போது நான் மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அதிசய பறவை கண்டுபிடிப்பு!!

இலங்கையில் புதிய வகையிலான ஆந்தை இனம் ஒன்று ஈர மண்டல வலயத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு புகைப்பட கலைஞர் புஷ்பலால் என்பவரின் கமராவில் இந்த ஆந்தையின் புகைப்படங்கள் சிக்கியுள்ளன.

ஆந்தையின் முகுது பக்கத்தில் கடுமையான ஊதாக நிறம் காணப்படுவதாகவும், நெஞ்சு மற்றும் அடிவயிற்று பகுதியில் பழுப்பு நிறம் மற்றும் ஊதா நிறங்கள் காணப்படுகின்றன.

இந்த ஆந்தைகளிடம் கேட்கும் திறன் சற்று குறைவாக உள்ள நிலையில், அது ஏனைய ஆந்தைகளை போன்று தலையை தூக்கிய நிலையிலேயே காணப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 9 வகையான ஆந்தைகள் உள்ளன. ஒவ்வொன்று வித்தியாசமான நிறங்கள் மற்றும் தனித்தன்மையை வெளிப்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆந்தை, Otusbakkamoenalattia என்ற ஆந்தை இனத்தின் அடையாளங்களை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஆந்தை இதற்கு முன்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், இது தொடர்பான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மணமேடையில் அப்பாவி மணமகனுக்கு ஏற்பட்ட அவமானம் : அதிர்ச்சியடைந்த மணப்பெண் : இலங்கையில் நடந்த விநோதம்!!

திருமண நிகழ்வின் போது மணமகளின் அதிருப்தியால் மணமகனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இளைஞர் ஒருவர் பலத்த எதிர்பார்ப்புடன் மணமேடைக்கு சென்றுள்ளார்.

தோட்ட வேலைகளை செய்து வாழ்க்கையை நடத்தும் 27 வயதான இளைஞர் ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கனவுகளுடன் பெண்ணொருவரை, கைப்பிடிப்பதற்காக குறித்த இளைஞன் தனது உறவினர்களுடன் திருமணத்திற்காக சென்றுள்ளார்.

அதற்கமைய திருமண வைபவம் ஆரம்பித்துள்ளது. மணமகனுக்கு மோதிரம் அணியும் சந்தர்ப்பம் வந்துள்ளது. இதன்போது மணமகன் தனது மோதிர விரலுக்கு பதிலாக நடுவிரலை நீட்டியுள்ளார். சிறு வயதில் ஏற்பட்ட விபத்தில் தனது மோதிர விரலை குறித்த இளைஞன் இழந்துள்ளார்.

இதனால் அவமதிப்பு ஏற்பட்டதாக எண்ணிய மணப்பெண் உடனடியாக மணமேடையை விட்டு தனது அறைக்கு ஓடியுள்ளார்.

எனினும் இரண்டு தரப்பு உறவினர்களும் திருமணத்தை நடத்த எவ்வளவு முயற்சித்த போதிலும் மணமகள் சம்மதிக்கவே இல்லை. இதனால் இரு தரப்பினரும் திருமணத்தை நிறுத்திவிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அரசாங்க வேலைகளில் இணைவோருக்கு அதிர்ச்சித் தகவல்!!

அரசாங்க நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமானவர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான அங்கீகாரம் இன்றி அரச நிறுவனங்களுக்கான பணிக் குழுவினரை இணைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதற்கு மாற்றமாக ஆட்சேர்ப்புக்களை மேற்கொண்ட உரிய நிறுவனத்தின் தலைவர், மாகாண பிரதம செயலாளர், நிதிப் பிரிவின் தலைவர், அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் என்று சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாயும் மகனும் சேர்ந்து செய்த மோசமான செயல் : நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!!

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் பெண் ஒருவரின் ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி 50,000 ரூபாய் பணத்தை திருடிய தாய் மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் நேற்று கைது செய்திருந்த கிண்ணியா பொலிஸார், இன்று திருகோணமலை பிரதான நீதவான் எம்.எச்.எம். அம்ஸா முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டுள்ள தாயாரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், மகனுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்லவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதில் சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட துமுதுகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ரன்விகா லக்மாலி என்ற தாயாரும், 16 வயதுடைய தீக்ஷன கவிந்து என்ற மகனுமே கைது செய்யப்பட்டு இருந்தனர்.

கிண்ணியா தளவைத்தியசாலையில் சுத்திகரிப்பு மேற்பார்வையாளராக வேலை செய்யும் பெண் ஒருவரின் ஏ.டி.எம் அட்டையை அதே வைத்தியசாலையில் வேலை செய்யும் மற்றுமொரு பெண் திருடியுள்ளார்.

பின்னர் அந்த ஏ.டி.எம் அட்டையைக் கொண்டு வேறு ஒரு வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து 50,000 ரூபாய் பணத்தை திருடியுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் கிண்ணியா பொலிஸார் குறித்த தாயையும், மகனையும் கைது செய்துள்ளனர்.

கார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்!!

கார் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளோருக்கு அரசாங்கம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆயிரம் சீ.சீக்கு குறைவான சிறிய ரக மோட்டார் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கான உற்பத்தி வரி அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிதி அமைச்சினால் இந்த வரி உயர்த்துகை குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக இந்த வகையிலான கார்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனையடுத்தே ஆயிரம் சீ.சீக்கு குறைவான சாதாரண மோட்டார் காருக்காக இதுவரை அறவீடு செய்யப்பட்டு வந்த 14 இலட்சம் ரூபா வரி 15 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆயிரம் சீ.சீக்கு குறைவான ஹைபிரிட் காருக்காக இதுவரையில் அறவீடு செய்யப்பட்டு வந்த 8.5 இலட்சம் ரூபா வரி 12.5 இலட்சம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.