வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் மர்ம மரணம்!!

வவுனியாவில் 26 வயதான குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிலிலுள்ள மாதர்பனிக்கர் மகிழங்குளம் பகுதியில் வசித்து வந்த ஜெ. நிரோசன் என்பவரே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை மாதர்பனிக்கர்மகிழங்குளம் பகுதியில் வசித்து வந்த குறித்த நபர் உறவினர் ஒருவரது வீட்டில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின் மதுபான விருந்துபசாரத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இதில் உறவினர்களுடன் கலந்து கொண்டு மது அருந்திய பின்னர், அவரது வீட்டிற்கு உறவினர்கள் கூட்டிச்சென்று விட்டுள்ளனர், எனினும் நேற்று இரவு அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் அருந்திய மதுபானத்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் எனவும் உயிரிழந்தவரின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறிருப்பினும், அவர் உயிரிழந்ததற்கான காரணம் தொடர்பில் பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியப்படுத்தப்படும் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நபரின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

அரசாங்க மற்றும் அரச அனுமதி பெற்ற சிங்கள, தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் இரண்டாவது தவணை எதிர்வரும் 3ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, மூன்றாம் தவணை செப்டம்பர் மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் இரண்டாவது கட்டம் ஆகஸ்ட் 20ம் திகதியுடன் நிறைவடைவதாகவும், மூன்றாம் தவணை ஆகஸ்ட் 27ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக விஞ்ஞானிகளை மிரள வைக்கும் அதிசயமாக மாறும் இலங்கை : படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்!!

இலங்கையில் ஆயுர்வேத மருத்துவம் மிகப்பெரிய சொத்தாக கருதப்படுகின்ற நிலையில் அது சர்வதேசம் வரை பிரபல்யம் அடைந்துள்ளது.

உலகின் பிரபலங்கள், விஞ்ஞானிகள் உட்பட பலர் இந்த ஆயுர்வேத மருத்துவத்தை ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கு வருவதற்கு தயாராகியுள்ளனர்.

ஹொரிவில ஆயுர்வேத வைத்தியம் தொடர்பில் கற்பதற்காக உலகை வியக்க வைத்த பிரித்தானிய நாட்டு வைத்தியர்கள் சிலர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

பரம்பரை ஹொரிவில ஆயுர்வேத வைத்தியரான வைத்தியர் செனவிரத்னவிடம், பிரித்தானிய வைத்தியர்கள் ஆயுர்வேத வைத்தியத்தை கற்று வருகின்றனர்.

மூலிகை பொருட்களை கொண்டு எப்படி எல்லாம் சிகிச்சை மேற்கொள்வது என்பது குறித்தும் அவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் இலங்கையில் தங்கியிருந்து இதனை கற்று வருகின்றனர்.

வைத்தியசாலை வைத்தியர்களால் முடியாது என கைவிட்டவர்கள், நாள்பட்ட நோய்கள், தீர்க்க முடியாதென தவிர்க்க அனைத்து விதமான நோயாளிகளுக்கும் ஆயுர்வேத சிசிக்சை அளித்து, அவர்களை முற்றாக நோயிலிருந்து விடுவிக்கும் அபூர்வ சக்தி படைத்தவராக செனவிரத்ன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டிலிருந்து வந்து யாழ் சென்றவர்களின் வாகனம் விபத்து : 10 பேர் படுகாயம், இருவரின் நிலை கவலைக்கிடம்!!

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமான முறையில் இருப்பதாகவும், அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின், மாரகஹவெவ 27ம் கட்டை பகுதியில் நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்றோடு மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிலரே குறித்த வானில் இருந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை : பாதுகாப்புப் பணியில் பொலிஸார்!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் நேற்று (31.07.2018) மாலை 6.30 மணியளவில் இ.போ.ச பேரூந்தினை வெளிச்செல்லவிடாது தனியார் பேரூந்துகள் தரித்து நின்றமையினால் சற்று பரப்பான நிலை காணப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினுள் வெளி இடங்களிலிருந்து வேறு மாவட்டத்திற்கு செல்லும் பேரூந்துகள் உட்பிரவேசிப்பதற்கு தடை பிறப்பிக்கப்பட்டு புதிய பேரூந்து நிலையத்தினுள் இ.போ.ச, தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டன.

இந் நிலையில் வெளி இடத்திலிருந்து வேறு மாவட்டத்திற்கு செல்லும் இ.போ.ச பேரூந்து புதிய பேரூந்து நிலையத்தினுள் சென்று தரித்து நின்று பயணிகளை ஏற்றியமையினால் தனியார் பேரூந்து ஊழியர்கள் புதிய பேரூந்து நிலையத்தின் பேரூந்துகள் வெளிச்செல்லும் பாதையில் பேரூந்துகளை தரித்து இ.போ.ச பேரூந்துகள் வெளிச்செல்ல விடாது முற்றுகையிட்டனர்.

இதனால் புதிய பேரூந்து நிலையத்தில் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்துப் பொலிஸார் போக்குவரத்துக்கு இடையூராக தரித்து நின்ற தனியார் பேருந்து சாரதிகளுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியமை என்ற குற்றச்சாட்டில் அவர்களுக்கு தண்டப்பத்திரம் வழங்கப்பட்டதுடன் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு பணித்தனர்.

இதன் பின்னர் தற்போது புதிய பேரூந்து நிலையத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு!!

வவுனியாவில் ஓவியா விருந்தினர் விடுதியில் நேற்று (31.07) வவுனியா மாவட்டத்தில் குற்றம், குற்றவியல் சட்டங்கள் மற்றும் கஞ்சா கடத்தல்களை முறியடித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் சிறப்பாக செயற்பட்ட பொலிசாரை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் குற்றங்களை குறைக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும், போதைவஸ்து ஒழிப்பு நடவடிக்கை மற்றும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கைது செய்தமை, விபத்துக்களை தடுப்பதற்கு சிறப்பாக பணியாற்றிய போக்குவரத்து பொலிஸ் பிரிவினருக்கும், சமுதாய பொலிஸ் பிரிவினருக்கும், ஏனைய துறையை சேர்ந்தவர்களுக்கும் கெளரவிப்பு வழங்கப்பட்டது.

இவ் நிகழ்வில் வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோ, வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்லுவாராச்சி, வவுனியா மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் போன்ற பலரும் கலந்து கொண்டனர்.

இவ் நிகழ்வில் அனுராதபுர நுண்கலை மாணவிகளின் நடன நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

வவுனியா விபத்தில் காயமடைந்தவர்களை பார்வையிட்ட வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் !!

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்ற முச்சக்கரவண்டி – இ.போச. பேருந்து விபத்தில் காயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை நேற்று பிற்பகல் வைத்தியசாலைக்குச் சென்ற வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பார்வையிட்டு அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கிவைத்தார்.

நேற்று முன்தினம் புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பரசன்குளம் பகுதியிலிருக்கும் மாணவர்களே காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களை நேரில் சென்று பார்வையிட்டு தேவையான விடயங்களைக் கேட்டறிந்து கொண்டார். இதன்போது அப்பகுதி மக்களின் தேவையான பரசன்குளத்திற்கு பேருந்துச் சேவையினை மேற்கொள்வதற்கு வன்னிப்பிரந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் வவுனியா இ.போ.ச சாலை முகாமையாளருடன் தொடர்புகொண்டு இன்று முதல் அப்பகுதியிலுள்ள மக்களின் வசதி கருதி பேருந்துச் சேவையினை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று முதலாம் திகதி முதல் பரசன்குளம் பகுதிக்கு பேருந்துச் சேவையினை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விபத்தின்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 8 வயதுச் சிறுவனின் இறுதிச்சடங்கினை மேற்கொள்ளும் பொறுப்பை ஓமந்தை அரசர்பதி பொற்பதிஎஸ்.குணரத்தினம் ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சரின் அதிரடி : சிக்கிய தகுதியற்ற வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிலையங்கள்!!

வவுனியாவில் இயங்கிவரும் தனியார் வைத்தியசாலைகள், மருந்தகங்கள், ஆயுள்வேத வைத்தியசாலைகளுக்கு நேற்று காலை திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு இடம்பெற்றுவரும் நவடிக்கைகளை பார்வையிட்டுள்ள வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் அங்கு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட மருந்து வில்லைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை இரண்டு மருந்தகங்கள், இரண்டு தனியார் வைத்தியசாலைகள், மூன்று ஆயுள்வேத வைத்திய நிலையங்களுக்கு திடீரென்று விஜயம் மேற்கொண்டு இங்கு இடம்பெறும் நடவடிக்கைகளை அவதானித்துள்ளார்.

இதன்போது தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை நிறுத்துமாறும் வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆயுள்வேத வைத்தியசாலையில் சிகிச்சைக்குப் புறம்பான ஆங்கில மருந்து வில்லைகள் சிலவற்றையும் அங்கிருந்து மீட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஒருகிலோ கஞ்சா பொதியுடன் நபர் ஒருவர் கைது!!

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் சென்ற புலனாய்வுப்பிவினர் தாண்டிக்குளம் பகுதியில் வைத்து கஞ்சாவுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று பிற்பகல் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செய்ற்படும் புலனாய்வுப் பிரிவினருக்குக்கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக நின்ற யாழ்ப்பாணம் கைதடிப்பகுதியைச் சேர்ந்த 37வயது நபர் ஒருவரின் பயணப் பொதியிலிருந்து 1கிலோ 652கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

ஆபத்தை உணராது செயற்பட்ட இளைஞர்களுக்கு ஏற்பட்ட நிலை!!

நாம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் பற்றிய செய்திகளை அதிகம் கேள்விப் படுகின்றோம். விபத்துக்களில் சிறுகாயங்கள், பாரிய காயங்கள் மற்றும் மரணம் சம்பவிக்கும் விபத்துக்கள் போன்றவை நிகழ்கின்றன.

இவ்வாறன விபத்துக்களில் பெரும்பாலானவை கவனக்குறைவினால் ஏற்படுகின்றதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இது பெரும்பாலும் உண்மையே.

சிலர் வாகனங்களைச் செலுத்தும் போது நித்திரை கொள்ளுதல், மதுபோதையில் வாகனத்தைச் செலுத்துதல் போன்ற சில காரணங்களைக் குறிப்பிடலாம்.

அந்தவகையில், சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை கையில் எடுத்தவுடன் தங்களை மறந்து விடுகின்றனர். அதுமட்டுமின்றி ஓட்டிச் செல்லும்போது என்ன செய்கிறோம் என்ற உணர்வின்றி செயற்படுகின்றனர்.

இதனால் தங்களின் அமைதியான வாழ்க்கையினை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றர்.

இவ்வாறான நிலையே இந்த காணொளியில் இருக்கும் இரு இளைஞர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் எந்தப்பிரதேசத்தில் இந்த விபத்து ஏற்பட்டது என்பது தெரியவரவில்லை. எனினும் இது ஏனையவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக உள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது வண்டியின் சக்கரத்தினை உயர்த்திக்கொண்டு இருவரும் எழும்பி நின்று செல்லும் போது மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இலங்கையிலிருந்து குறைந்த செலவில் இந்தியா சென்று வரலாம்!!

தென்னிந்தியா மற்றும் பலாலிக்கு இடையில் விரைவில், குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்த தொடர்ந்தும் பேசிய அவர், “தற்போது வெளிநாட்டு பயணிகள் வடக்குக்கு பயணங்களை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

இதன் காரணமாக, தென்னிந்தியாவுடன் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு இணைப்பை ஏற்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் ஒரு குறைந்த கட்டண விமான சேவை தென்னிந்தியாவில் இருந்து பலாலிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

மிக விரைவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம், இந்திய சுற்றுலாப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இலகுபடுத்தப்படும்.

அத்துடன் தற்போது விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பல விமான நிலையங்கள், உள்நாட்டு விமான நிலையங்களாக மாற்றியமைக்கப்படவுள்ளன. மட்டக்களப்பு விமான நிலையம் ஏற்கனவே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹிங்குராங்கொட விமான நிலையமும் பயணிகள் போக்குவரத்துக்காக கூடிய விரைவில் திறந்து விடப்படும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கொழும்பில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய தமிழ் சாரதி : இப்படியொரு மனிதாபிமானமிக்கவரா?

கொழும்பில் பலரும் வியக்கும் வகையில் மனிதாபிமானத்துடன் செயற்பட்ட முச்சக்கரவண்டி சாரதி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

முச்சக்கரவண்டியில் 5 லட்சத்திற்கும் அதிகமாக பணம், கையடக்க தொலைபேசி, விமான கடவுச்சீட்டுகள் இரண்டினை நபர் ஒருவர் விட்டுச் சென்றுள்ளார்.

எனினும் மறந்து விட்டு சென்ற பயண பையை அதன் உரிமையாளரை தேடி ஒப்படைத்த சாரதி ஒருவர் தொடர்பிலேயே தகவல் வெளியாகியுள்ளது.

தெஹிவளை, களுபோவில வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதியான செல்வராஜ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மனிதாபிமானத்துடன் செயற்பட்டுள்ளார்.

கடந்த 28ஆம் திகதி காலை தனது முச்சக்கர வண்டியை பழுது பார்ப்பதற்காக அதில் இருந்த பொருட்களை வெளியே எடுத்த போது பின்னால் இருந்த ஆசனத்தில் இந்த பை காணப்பட்டுள்ளது.

பின்னர் அவர் இது தொடர்பில் தனது மனைவியிடம் அறிவித்துவிட்டு பையை திறக்கும் போது, கையடக்க தொலைபேசி, விமான கடவுச்சீட்டுகள் இரண்டு மற்றும் 5 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் இருப்பது தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் பொலிஸார் ஊடாக குறித்த பயண பையை உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி செல்வராஜ் கருத்து வெளியிடுகையில்,

நான் சற்று சிந்தித்தேன். இந்த பையுடன் முச்சக்கர வண்டியில் வந்தது யார் என்பது? எனக்கு ஓரளவு ஞாபகம் இருந்தது. பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்து தெஹிவளைக்கு சென்றார்கள். எனினும் அவர்கள் எவ்விடத்தை சேர்ந்தவர்கள் என எனக்கு தெரியாது.

நான் முச்சக்கர வண்டியை பழுது பார்க்கும் நடவடிக்கையினை பிற்போட்டுவிட்டு கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு சென்றோம். காலை 6 மணி அளவில் உயர் அதிகாரியிடம் தகவலை வெளியிட்டேன்.

பொலிஸ் உயர் அதிகாரி எனக்கு நன்றி கூறிவிட்டு தேனீர் விருந்து ஒன்றை வழங்கினார்கள். வெள்ளிக்கிழமை மாலை இவ்வாறு பை ஒன்றை முச்சக்கர வண்டியில் விட்டு சென்றுவிட்டதாக முறைப்பாடு ஒன்று கிடைத்தது என அதிகாரி என்னிடம் கூறினார்.

அதற்கமைய உரிமையாளருக்கு பொலிஸ் அதிகாரி அழைப்பேற்படுத்தி அங்கு வரவழைத்தார். பையை உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு பொருட்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என அதிகாரி உரிமையாளரிடம் வினவினார்.

அவர்கள் அதனை பார்த்துவிட்டு ஒன்றுமே குறையவில்லை என கூறினார்கள். அத்துடன் அவர்களின் பணத்தில் 50 ஆயிரம் ரூபாயை என்னிடம் வழங்க முயற்சித்தார்கள். எனினும் நான் அதனை பெற்றுக்கொள்ளவில்லை. பணத்தைவிட மனிதாபிமானம் பெறுமதியானது என நான் கூறிவிட்டு வந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி மிரட்டிய நபரின் வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ருதி!!

பிரபல நடிகையான ஸ்ருதி திருமணம் செய்து கொள்ளும் படி மிரட்டிய நபர் தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேட்ரிமோனியல் மூலமாக திருமணம் செய்து கொள்வதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள நடிகை ஸ்ருதி, சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தார்.

ஜாமினில் வெளி வந்த அவர், தன் மீது பண மோசடி புகார் கொடுத்த நபர் தன்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தியது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், தான் பண மோசடி செய்துவிட்டதாக கூறிய அமுதன் தன்னை காதலிக்க வற்புறுத்தி தற்கொலை செய்துகொள்வேன் மிரட்டினார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவர் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளதாக ஸ்ருதி கூறியுள்ளார்.

மேலும் அவர் என் மீது போடப்பட்ட வழக்குகள் திட்டமிட்ட சதி எனவும், நான் இதை எல்லாம் சட்ட ரீதியாக பார்த்துக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ருதி பொலிசார் என்னை விசாரிக்க அழைத்துச் சென்ற போது பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான சில வாரங்களில் புதுமண தம்பதி தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது!!

இந்தியாவில் புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் தீபக் (40). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி கடந்தாண்டு காலமானார். இந்நிலையில் தீபக் சமீபத்தில் மம்தா (28) என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

நேற்று தீபக்கும், மம்தாவும் வீட்டில் இருந்த நிலையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றியதோடு, தீபக் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், எங்கள் தற்கொலை முடிவுக்கு யாரையும் குறை செல்லவிரும்பவில்லை என எழுதப்பட்டிருந்தது.

பொலிசார் கூறுகையில், தீபக்கும், மம்தாவும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளதும், அவர்களின் நிதி நிலைமை மோசமாக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

மூன்று மகள்களுக்கு பல ஆண்டுகள் பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை : மகள்கள் செய்த செயல்!!

ரஷ்யாவில் போதைக்கு அடிமையான தந்தை தொடர்ந்து மூன்று மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் மூவரும் சேர்ந்து தந்தையை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்கோவை சேர்ந்தவர் மைக்கேல் கச்சைட்ரான், இவருக்கு கிரிஸ்டினா (19), ஏஞ்சலினா (18) மற்றும் மரியா என்ற மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

ஹெராயின் போதை பழக்கத்துக்கு அடிமையான மைக்கேல் மனைவியையும் மகனையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு அடித்து துரத்தியுள்ளார்.

இதையடுத்து தனது மூன்று மகள்களுக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த மைக்கேல் அவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

தந்தையின் செயலை வெகுகாலம் பொறுத்து கொண்ட மூவரும் இனியும் பொறுக்க இயலாது என எண்ணி அவரை கொலை செய்ய முடிவெடுத்தனர்.

இதையடுத்து கிரிஸ்டினா, மைக்கேலை கத்தியால் முதலில் குத்தியுள்ளார். பின்னர் ஏஞ்சலினா மற்றும் மரியாவும் கத்தியால் அவரை குத்த மைக்கேல் துடிதுடித்து இறந்தார்.

சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் மூன்று சகோதரிகளையும் கைது செய்த நிலையில் தந்தையால் அனுபவித்த துன்பங்களை மூவரும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மூவருக்கும் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.

நாட்டு மருந்து சாப்பிட்டதால் நன்றாக இருந்த முகம் விகாரமாக மாறிபோன பரிதாபம் : வைரலாகும் புகைப்படம்!!

தமிழகத்தில் நாட்டு மருந்து சாப்பிட்டதால், நபர் ஒருவரின் முகம் விகாரமாக மாறியதால், அவர் தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கருங்காலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் சில மாதங்களுக்கு முன்பு கழிவறையில் தவறி விழுந்துள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இது தொடர்பாக சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று இருந்த போது, இதற்கு சிகிச்சை அளிக்கும் விளம்பரம் ஒன்றை பார்த்த இவர் அவர்களிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட நாட்டு மருந்துகளை ராமமூர்த்தி சாப்பிட்டு வந்ததால், அவரின் முகம் விகாரமாக மாறிப் போயுள்ளது.

இதனால் அவர் தனக்கு உதவுமாறு கோரி அவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். மேலும் விளம்பரத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இவர் தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.