கண்மூடித்தனமான கோபம் : மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் : எதற்காக தெரியுமா?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், மனைவியை ஹெல்மெட்டால் அடித்து கொலை செய்துவிட்டு, கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளான். விவாகரத்துக்கு விண்ணப்பித்து, ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்துவந்த தம்பதியின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் சுதாகர், ஆந்திராவை சேர்ந்த விமலா என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். சுதாகரின் மதுப்பழக்கத்தால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

குழந்தையின்மையை மருத்துவ ரீதியில் எவ்வாறு அணுகவது என்பதை யோசிக்காமல், இவர்களது கருத்து வேறுபாடு விவாகரத்து முடிவுக்கு கொண்டு சென்றது. நீதிமன்றத்தில் விண்ணப்பித்து விட்டு இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

இதனிடையே, விவாகரத்து கிடைக்கும் வரை, விமலாவுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாயை ஜீவனாம்சம் போன்று தறுமாறு சுதாகருக்கு பாதிரிவேடு காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.

4 மாதங்களாக பணம் கொடுத்து வந்த சுதாகர் கடைசி 2 மாதமாக பணம் தரவில்லை. இதனால், இருவருக்குமிடையே மீண்டும் பிரச்சனை உருவாகி கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த சுதாகர் ஆக்சாபிளேடால் விமலாவின் கழுத்தை அறுத்தும், ஹெல்மெட்டால் தலையில் கண்மூடித்தனமாக தாக்கியும் உள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த விமலா அங்கேயே உயிரையும் விட்டார். உச்சக்கட்ட கோபத்தில் இருந்து வெளிவந்த பின்னர் தான், தாம் செய்த கொடூர செயலை உணர்ந்த சுதாகர் வேறுவழியின்றி காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

அதிக மதுப்பழக்கம், சந்தேக குணம், கட்டுக்கடங்கா கோபம் ஆகியவற்றால் இருவரின் வாழ்க்கை வீணானதை விட வேறு என்ன பயன் என்பதையே இந்த சம்பவம் பிரதிபலிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்

பெண்ணாக மாறிய 14 வயது சிறுவன் : பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

பிரித்தானியாவில் பெண்ணை போல வேடமிட்டு நடிக்க முயன்ற சிறுவனின் நிகழ்ச்சிக்கு திடீரென பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பிரித்தானியாவின் West Midlands-ல் Dudley பகுதியில் செயல்பட்டு வருகிறது Castle உயர்நிலைப்பள்ளி மற்றும் விஷுவல் காலை மற்றும் அறிவியல் கல்லூரி. இங்கு மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நிகழ்ச்சி ஒன்று நடைபெற விருந்து.

செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த அப்போட்டியில் ஏராளமான மாணவர்களுடன் இணைந்து, Lewis Bailey (14) என்ற சிறுவனும் கலந்து கொள்ள இருந்தான். பெண் வேடமிட்டு நடனமாடுவதில் மிகவும் பிரபலமான RuPaul- ன் நடனத்தை பார்த்து, அதைப்போன்று தானும் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் Lewis-ம் இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளான்.

இதற்காக கடந்த சில வாரங்களாகவே கடுமையான பயிற்சிகளையும், அவனது தாய் Natalie (37) உதவியுடன் பெற்று வந்துள்ளான். இந்த நிலையில் திடீரென அவனது நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவனது தாய் Natalie கூறுகையில், ஒரு ஆண் பெண் வேடமிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என எந்த சட்டமும் கூறவில்லை.

அவனது நடனத்தில் எந்தவிதமான ஆபாசமும் இடம் பெறவில்லை. ஆனால் எதற்காக அவர்கள் இப்படி செய்தார்கள் என தெரியவில்லை. ஒரு வேளை மற்ற மாணவர்களின் பெற்றோருக்கு இந்த நிகழ்ச்சி பிடிக்காமல் போய் விடுமோ என்ற எண்ணத்தில் செய்திருக்கலாம். இது நிகழ்ச்சி தானே தவிர போட்டி அல்ல.

இதற்காக மிகுந்த ஆசையுடன் பயிற்சி பெற்ற Lewis, தற்போது மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறான் என வேதனை தெரிவித்தார்.

பின்னர் இதுகுறித்து பேசிய தலைமையாசிரியர், Lewis இன்னும் 18 வயதை தாண்டவில்லை. அதனால் தான் அவருடைய நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளோம் என விளக்கமளித்துள்ளார்.

7 வயது சிறுமியை சீரழித்தவனுக்கு தூக்குத்தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

ராஜஸ்தானில் 7 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 19 வயது காமுகனுக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் லட்சுமண்கர் பகுதியில் வசித்து தம்பதியினர், கடந்த மே 9ம் தேதியன்று தங்களது 7 வயது குழந்தையை உறவினர்கள் வீட்டில் விட்டு சென்றனர். திரும்பி வந்து பார்த்தபொழுது சிறுமி வீட்டில் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளனர். பக்கத்து வீட்டு 19 வயது இளைஞர் தான் சிறுமியை அழைத்து சென்றார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியை பல பகுதிகளில் தேடிக்கொண்டிருக்கும் பொழுது, வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் குழந்தை கதறி அழும் சத்தம் கேட்டுள்ளது.இதனையடுத்து அருகில் சென்று சிறுமியை பார்க்கும்பொழுது, உடல் முழுவதும் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக கூறினார். இதனையடுத்து சம்மந்தப்பட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குற்றவாளியான 19 வயது இளைஞருக்கு தூக்குத்தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பளிக்கப்பட்டது.

முன்னதாக 12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிப்பதற்கான சிறப்பு சட்டத்தை, கடந்த மார்ச் மாதம் கொண்டு வந்த பிறகு மரண தண்டனை விதிக்கப்படும் முதல் நபர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கருவை கலைத்த காதலன் : கலைக்கப்பட்ட 5 மாத கருவை பையில் போட்டு எடுத்து காவல் நிலையம் சென்ற காதலி!!

உத்திரபிரதேசத்தில் காதலன் ஏமாற்றியதால் கர்ப்பமான காதலி அழிக்கப்பட்ட கருவை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார்.

குறித்த பெண், அந்நபரை காதலித்துள்ளார். இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன்னர் இப்பெண்ணை அவரது காதலர் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் கர்ப்பமான பெண், தனது காதலனிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலன், கருவை கலைக்குமாறு வற்புறுத்தி கருவை கலைத்துள்ளார்.

இதனால் அப்பெண் கலைக்கப்பட்ட 5 மாத கருவை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்று, தன்னை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

இவரின் புகார் ஏற்றுக்கொண்ட பொலிஸார் குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

பாடசாலை வகுப்பறையில் நடந்த மோதல் : சக மாணவனை தாக்கிய மாணவன் மர்மமாக பலி!!

தமிழகத்தில் சக மாணவனை தாக்கிய மற்றொரு மாணவன் மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளியில் மாணவர்கள் சண்டை போட்டுக் கொண்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடையார் என்ற மாணவன் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இதையடுத்து இந்த மாணவன் கடந்த 16-ஆம் திகதி பள்ளிக்கு அருகே உள்ள கிணற்றில் மர்மான முறையில் இறந்துகிடந்தான்.
இதனால் இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் வகுப்பறையில் இரு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது உடையார் மற்றொரு மாணவனைத் சற்று கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அந்த மாணவன் வகுப்பறையிலே மயங்கி விழுந்துள்ளான்.

இதைக் கண்ட சக மாணவர்கள் உடனடியாக அந்த மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் உடையாரை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் தாக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால், அவன் இறந்துவிட்டால் தன்னை பொலிசார் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்திலே உடையார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால் உடையாரின் பெற்றோரோ தங்கள் மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி கயத்தாறு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

காதலனை அடைய தந்தையை கொலை செய்த மகள்!! 

இந்தியாவில் தந்தை, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயுடன் சேர்ந்து அவரை கொலை செய்த மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் குல்தீப் சிங் (44). இவரின் மகள் சுதிக்‌ஷா (18). இவர் தருண் (23) என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில் இதற்கு குல்தீப் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் தந்தை மீது கோபமடைந்த சுதிக்‌ஷா அவரை கொலை செய்ய முடிவெடுத்தார். தனது தாயையும் இதில் கூட்டு சேர்த்து கொள்ள முடிவெடுத்த சுதிக்‌ஷா, குல்தீப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுதிக்‌ஷாவின் தாய் குல்தீப்பை கொல்ல ஒத்து கொண்டார். அதன்படி தருணிடம் இது குறித்து சுதிக்‌ஷா கூற, நான்கு பேர் கொண்ட கூலிப்படையை தருண் தயார் செய்துள்ளார்.

இதையடுத்து எல்லோரும் சேர்ந்து குல்தீப் வீட்டுக்கு வந்து அவர் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றுள்ளனர். பின்னர் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக குல்தீப் பைக்கை கூலிப்படையினர் திருடி சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்த சுதிக்‌ஷா திருடர்கள் தங்கள் வீட்டுக்கு வந்து பைக்கை திருடி சென்றதோடு குல்தீப்பை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசாருக்கு சுதிக்‌ஷா மற்றும் அவர் அம்மா மீது சந்தேகம் வந்த நிலையில் அவர்களிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில் அனைத்து உண்மைகளையும் அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த பொலிசார் தருணையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையினரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மகனை துடிதுடிக்க கொலை செய்தது ஏன் : ஒரு தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

திருச்சி மாவட்டத்தில் தனது தாயின் காதல் விவகாரத்தை அறிந்துகொண்ட மகன் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிட தொழிலாளியாக இருக்கும் மீனாம்பாள் என்பவரின் கணவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு புற்றுநோயின் காரணமாக இறந்துவிட்டார். இவருக்கு அங்குராஜ் என்ற மகன். 14 வயதான அவன் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அங்குராஜ், வீட்டில் மயங்கி விழுந்துவிட்டதாக மீனாம்பாள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், ஆனால் அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, வீட்டிற்கு கொண்டு வந்து அனைவர் முன்னிலையிலும் அழுதுள்ளார்.

இந்த சிறுவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அறிந்துகொண்ட பக்கத்துவீட்டார் பொலிசிற்கு தகவல் தெரிவித்ததையடுத்து, மீனாம்பாள் வீட்டிற்கு விரைந்து வந்த பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொத்தனார் வேலை செய்யும் முத்தழகு என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் அடிக்கடி என்னை பார்ப்பதற்காக எனது வீட்டிற்கு வருவார்.

அப்போது நாங்கள் குடி கும்மாளம் என சந்தோஷமாக இருப்போம். எனக்கு அடுத்ததாக எனது தோழி லட்சுமியையும் முத்தழகு காதலித்தார்.

3 பேரும் தண்ணி அடித்துவிட்டு, 3 பேரும் சந்தோஷமாக இருப்போம். நான் செய்யும் தவறை மகன் தன் கண்ணாலேயே பார்த்துவிட்டான்.

இதனால் அங்குராஜ் தனியாக அழுதிருக்கிறான். அம்மாவை வெறுக்கவும் முடியாமல், கண்டிக்கவும் வயதில்லாமல், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கூறி, அம்மாவை திருத்த சொன்னான்.

உறவினர்கள எனது கள்ளக்காதலை கைவிட சொல்ல, என் மகன் மீது வெறுப்பும் ஆத்திரமும் வந்து அவனை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.

அங்குராஜ் தூங்கபோகும்போது, குடிக்கும் பானம் ஒன்றில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தேன். நான் கொடுத்ததால் பேசாமல் வாங்கி குடித்துவிட்டு தூங்க சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்து லட்சுமியும், அங்குராஜ்ம் கழுத்தை கயிற்றால் நெரித்தனர்.

தன் கண் முன்னாலேயே கை, கால்களை உதைத்துக்கொண்டு மகன் துடிதுடித்து சாவதை பார்த்துள்ளார் மீனாம்பாள், பிறகு அவன் இறந்துவிட்டதை முத்தழகனிடம் சொல்ல, முத்தழகனோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிடுங்கள் என ஆலோசனை கொடுத்ததையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்று நாடகம் ஆடியுள்ளனர்.

இரு பெண்களையும் கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் பொலிசார் அடைத்தனர். கூடவே இருந்து குடித்துவிட்டு ஆட்டம்போட்ட முத்தழகன், கள்ளக்காதலிகள் இருவரும் கம்பி எண்ணுவதை அறிந்து தலைமறைவாகி விட்டார். அவரை பொலிசார் தேடி வருகின்றனர்,

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா!!

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 25 வது வருடாந்த விளையாட்டு விழா இன்று (22.07) கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் பாலர் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வவுனியா தேசிய கல்வியல் கல்லூரி பீடாதிபதி க.சுவர்ணராஜா கலந்துகொண்டிருந்தார். நிகழ்வில் அதிதிகள் மாலை போட்டு வரவேற்கப்பட்டதுடன் பாடசாலை அசிரியையினால் தேவாரம் பாடப்பட்டது. மாணவர்களால் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் கீதம் இசைக்கப்ட்டது.

நிகழ்வின் தொடர்ச்சியாக மாணவர்களினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டது. மாணவி ஒருவரால் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் முன்னைய தலைவரும் நகரசபை உறுப்பினருமான நா.சேனாதிரசா மாலைபோட்டு கௌரவிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து மாணவி ஒருவர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சுத்தானந்தா இந்து இனைஞர் சங்கத்தின் தலைவரின் தலைமையுரையினைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன. பாலர் பாடசாலை மாணவர்களின் உடற்பயிறசி நிகழ்வானது அனைவரின் கண்களையும் கவர்ந்திருந்தது.

இவ் விளையாட்டு நிகழ்வில் மருத்துவர்களான திருமதி பவித்திரா தினேசன், வவுனியா பொது வைத்தியசாலையில் மனநல வைத்தியர் எஸ்.சுதாகரன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் தரம் 05 மாணவர்களுக்கான இலவச செயலமா்வு!!

வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் NDB வங்கி இணைந்து நடத்திய தரம் 05 மாணவர்களுக்கான இலவச புலமைப்பரிசில் பரீட்சை செயலமர்வு நேற்று (21.07.2018) சமூக சேவையாளரும் வெளிச்சம் அறக்கட்டளையின் செட்டிகுளப் பிரிவிற்கான இணைப்பாளருமான த.சிவானந்தராசா (ஜெகன்) தலைமையில் செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் அதிதிகளாக ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர், செஞ்சிலுவைச் சங்கத்தின் செட்டிகுளக கிளையின் தலைவர் திரு.தர்மலிங்கம், வவுனியா NDB வங்கிக் கிளையின் உத்தியோகஸ்தர்கள், முகத்தான்குள பாடசாலை அதிபர் திரு.செல்வராசா, செட்டிகுள பழைய மாணவர் சங்க உறுப்பினர் தர்ஷன்,

பாடசாலை அபிவிருத்தி குழுவின் உப செயலாளர் சிவா, விஜி மொபைல் உரிமையாளர் ரகு, வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன், செயலாளர் தி.கார்த்திக், பொருளாளர் செ.மேனதாஸ் மற்றும் அருள்கரன் போன்றோருடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் வாகனம், ஆளனி பற்றாக்குறையே குப்பை அகற்றுவதில் தாமதம் : நகரசபை உப நகரபிதா!!

வவுனியா கோவில்குளம் பகுதியில் குப்பைகள் கடந்த நான்கு மாதங்களாக அகற்றப்படவில்லை என நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் (மோகன்) குற்றச்சாட்டு ஒன்றை வவுனியா நகரசபையின் கடந்த சபை அமர்வில் முன்வைத்திருந்தார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக வவுனியா நகரசபையின் உப நகரபிதா எஸ்.குமாரசாமி கோவில்குளம் பகுதிக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடி இக்குற்றசாட்டு தொடர்பாக விளக்கமளித்திருந்தார். எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த எஸ்.குமாரசாமி..

எமது நகரசபைக்கு ஆளனி பற்றாக்குறை, வாகனம் பற்றாக்குறை என்பன காணப்படுகின்றது. இருந்தபோதும் இருக்கிற வளங்களை பயனபடுத்தி சேவையாற்றி வருகிறோம். வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் கோவில்குளம் பகுதிகளில் குப்பைகளை அகற்றி வருகிறோம். எனவே கோவில்குளம் நகரசபை உறுப்பினர் மோகனின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார்.

இப்பிரச்சனை தொடர்பாக கோவில்குளம் நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன் கருத்து தெரிவிக்கையில், வவுனியா நகரசபையின் குப்பை அகற்றும் வாகனம் பிரதான வீதிகளில் குப்பைகளை அள்ளிச்செல்வதுடன் அவர்கள் கடமை முடிந்துவிடுகிறது. ஆனால் கோவில்குளம் உள்வீதிகளில் அவர்கள் குப்பைகளை அள்ளுவதில்லை அவ்வாறான செயற்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

பைத்தியம் என அனைவராலும் ஒதுக்கப்பட்ட நடேசன் : அனைவரையும் கண் கலங்க வைத்த சிங்கள இளைஞர்கள்!!

மாத்தளையில் மனநோயினால் பாதிக்கப்பட்டு வீதியில் விடப்பட்ட நபருக்கு, பெரும்பான்மையின இளைஞர்கள் செய்த மகத்தான செயற்பாடு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

நடேசன் என அழைக்கப்படும் இந்த நபர் மாத்தளை பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார். இவர் பல வருடங்களாக அசுத்தமான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து வந்துள்ளார்.

அவர் அசுத்தமாக உள்ளமையினால் மக்கள் அவரை நெருங்குவதில்லை. அத்துடன் அவரை பைத்தியம் என கூறி அந்தப் பகுதி மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் பொறியியலாளரான சமரநாயக்க என்பவரும் அந்தப் பகுதி இளைஞர்கள் சிலரும் இணைந்து இந்த நபரை மீளவும் பழைய நிலைக்கு கொண்டு வரும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

நடேசனின் தலைமுடியை வெட்டி அவரை குளிப்பாட்டியுள்ளனர். பின்னர் சுத்தமான ஆடைகளை அணிவித்து மனிதனாக மாற்றியுள்ளனர்.

தென்னிலங்கையை சேர்ந்த இளைஞர்களின் செயற்பாடு காரணமாக, நடேசன் பழைய வாழ்க்கை திரும்பியுள்ளார். இது குறித்து அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

பைத்தியம் எனக் கூறி பலராலும் ஒதுக்கப்பட்ட நடேசனை, எந்தவித பாரபட்சமும் இன்றி சிங்கள இளைஞர்கள் செய்த செயற்பாடு பலரையும் கண் கலங்க வைத்துள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவருடன் பாராட்டுங்களும் குவிந்து வருகின்றன.

மட்டக்களப்பை உலுக்கிய மூன்று சடலங்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவேறு இடங்களில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்களை நேற்றைய தினம் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு, ஆயித்தியமலை பகுதியில் 18 வயதுடைய ரவி சார்த்திகா என்பவரையும் ஏறாவூர் பகுதியில் தளவாய், புன்கைகுடா வீதியைச் சேர்ந்த 83 வயதுடைய முத்தையா சிதம்பரம் என்பவரையும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய நல்லதம்பி கனகசபை என்பவரையுமே பொலிஸார் சடலமாக மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்சியாக மட்டக்களப்பு பகுதியில் தற்கொலைகள் காரணம் இன்றி இடம்பெற்று வருகின்றமை அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதேவேளை கடந்த சில காலமாகவே கிழக்கு மாகாணத்தில் நுண்கடன் பிரச்சினைகள் காரணமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளன.

அதிலும் இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் இளம் குடும்பஸ்தர்கள் மற்றும் இளம் குடும்பப் பெண்களாகவே காணப்படுகின்றனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களில் பலர் தமது குழந்தைகளையும் பலியாக்கும் பெரும்பாலான சம்பவங்கள் பதிவாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

இவ்வாறான பிரச்சினைகளால் பல உயிர்கள் பறிபோயுள்ள போதும் எந்த வித தீர்வும் எடுக்கப்படாமலிருப்பது கவலைக்குரிய விடயமே.

இன்றைய நாளில் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்த நீதிபதி இளஞ்செழியனின் செயல்!!

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் சரத் ஹேமச்சந்திரவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடந்த வருடம் இதேபோன்றதொரு நாளில் (ஜுலை 22) யாழில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் நீதிபதி இளஞ்செழியனின் உயிரை பாதுகாக்க போராடிய இரு பாதுகாவலர்களில் சரத் ஹேமச்சந்திர உயிரிழந்தார்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்று ஒருவருடம் ஆகியுள்ளதால் இன்று சிலாபம் – சின்னவத்தையில் உள்ள சரத் ஹேமச்சந்திரவின் இல்லத்திற்கு சென்று நீதிபதி இளஞ்செழியன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன், ஹேமச்சந்திரவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கும் இளஞ்செழியன் சென்று அஞ்சலியை செலுத்தியுள்ளார். அவரின் இந்த செயற்பாடுகள் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

சரத் ஹேமச்சந்திரவின் உயிரிழப்பிற்கு பின் அவரின் குடும்பத்திற்கு தொடர்ச்சியாக நீதிபதி இளஞ்செழியன் உதவிகளை செய்து வருகிறார்.

இதேவேளை ஹேமச்சந்திரவின் இல்லம் அமைந்திருக்கும் சின்னவத்தை பகுதியில் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வந்ததையடுத்து இளஞ்செழியன் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளார்.

பல அரசியல்வாதிகள் கூட தம்முடைய மெய்ப்பாதுகாவலர்கள் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் உயிரிழந்தால் தேவையான உதவிகளை செய்து விட்டு அத்துடன் மறந்து விடுகின்றனர்.

ஆனால் நீதிபதி இளஞ்செழியன் 17 வருடங்களாக தன்னுடனிருந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டு தேவையான அனைத்து உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஹேமச்சந்திரவின் இல்லம் அமைந்துள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வசிக்கும் பகுதி மக்களுக்கும் உதவியுள்ளார்.

இளஞ்செழியனின் இந்த செயற்பாடுகளானது இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், இதனை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான செயல்கள் மூலம் நீதிபதி இளஞ்செழியன் வடக்கு, கிழக்கு மட்டுமல்லாது தென்னிலங்கை உட்பட நாட்டிலுள்ள அனைத்து மக்களின் மனங்களிலும் நீங்கா இடம்பிடித்துவிட்டார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஹோட்டல் பாத்ரூமில் தன் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் : மனதை உருக்கும் சம்பவம்!!

அமெரிக்காவின் Texas மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கணவர் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் செல்ல அங்கேயே அவர் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த மனதை உருக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது.

Falon Griffinக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட அவரது கணவரான Robert அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

வழியில் Falonக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இருவரும் வழியில் இருந்த Chick-fil-A என்னும் ஹோட்டலுக்கு சென்றனர்.

ஹோட்டல் ஏற்கனவே மூடப்பட்டுவிட்ட நிலையிலும் Falonஇன் நிலைமை கண்டு இரக்கப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் அவர்கள் இருவரையும் அனுமதித்தனர்.

பாத்ரூம் சென்ற Falonக்கு அங்கேயே பிரசவ வலி அதிகரிக்க தாங்க இயலாமல் சத்தமிட்டுள்ளார்.

ஹோட்டல் ஊழியர் ஒருவர் Falonஇன் சத்தம் கேட்டு Robertக்கு தகவல் தெரிவிக்க அவர் பதறிச் சென்று பார்க்கும்போது குழந்தையின் தலை வெளியே வரத் தொடங்கி விட்டதைக் கண்டார்.

ஹோட்டல் மேனேஜரை அழைத்து அவசர உதவி ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு தன் மனைவியிடம் ஸ்வீட்டி, நாம் இங்குதான் நம் குழந்தையை வரவேற்க போகிறோம், என்று கூறிவிட்டு குழந்தையை கைகளில் ஏந்த தயாராகியிருக்கிறார்.

இந்நிலையில் குழந்தையின் தலையைச் சுற்றி தொப்புள் கொடி பலமாக சுற்றியிருப்பதைக் கண்டு அதிர்ந்தாலும், தன் மனைவியிடம் சற்று ரிலாக்ஸ் செய்யச் சொல்லிவிட்டு மெதுவாக அந்த கொடியை விலக்கி விட்டிருக்கிறார்.

இரண்டு நிமிடங்களில் குழந்தை Gracelyn அப்பாவின் கைகளில் தவழ்ந்திருக்கிறாள். தனது சட்டையைக் கழற்றி குழந்தையை பொதிந்து வைத்து விட்டு மூவரும் சற்று குளிரைப் போக்கிக் கொள்வதற்காக கிச்சனுக்கு சென்றிருக்கிறார்கள்.

15 நிமிடங்களுக்குப் பிறகு ஆம்புலன்ஸ் வர, மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிவித்தது.

இதற்கிடயில் தங்கள் ஹோட்டலில் Gracelyn பிறந்ததற்காக ஹோட்டல் நிர்வாகம் வாழ்நாள் முழுவதும் அவள் அங்கு இலவசமாக சாப்பிடலாம் என்றும் அவள் வளர்ந்த பிறகு அங்கேயே அவளுக்கு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அதோடு நிற்காமல் Gracelynஇன் முதல் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஹோட்டல் ஊழியர்கள் இப்போதே தாயாராகி வருகிறார்கள் என்பது சுவாரஸ்யமான தகவல்.

பிரித்தானியாவில் 13 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

பிரித்தானியாவில் 13 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி தற்போது தன்னுடைய படிப்பை சிறப்பாக முடித்து, தன்னைப் பற்றி பேசியவர்களின் வாயை அடைத்துள்ளார்,

பிரித்தானியாவின் Stanley நகரத்தின் Co Durham பகுதியைச் சேர்ந்தவர் Kayleigh . தற்போது 16 வயதாகும் இந்த சிறுமி, 13 வயதிலே கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றெடுத்தார்.

இதனால் இனி இவளின் வாழ்க்கை அவ்வளவு தான், படிப்பை கூட சரியாக படிக்க முடியாது என்று அவர் தோழிகள் உட்பட பலரும் கூறியுள்ளனர்.

இதனால் கடும் மனவேதனையில் இருந்த சிறுமியைப் பற்றி ஆச்சரியப்பட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. Kayleigh தானா இது? என்றளவிற்கு உள்ளார்.

அவர் குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், Kayleigh தற்போது தன்னுடைய பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார் எனவும் இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

பார்க்க இளவரசி போன்று தோற்றம் அளிக்கும் வகையில்இருக்கும் அந்த இரண்டு வயது சிறுமியுடன் Kayleigh ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்டது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Kayleigh 13 வயது இருக்கும் போது தான் கர்ப்பமாக இருப்பதை பெற்றோரிடம் மறைத்துள்ளார். ஏனெனில் பெற்றோருக்கு தெரிந்தால் இது பிரச்சனையாகிவிடும் என்று பயந்துள்ளார்.

அதன் பின் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதை அவளின் பெற்றோர் அறிந்துள்ளனர். ஆனால் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், தாங்கள் தாத்தா-பாட்டியாக இருக்கிறோம் என்று கூறி ஆதரவாக இருந்துள்ளனர்.

ஆனால் சிறுமியோ எப்படி கர்ப்பமானார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

இந்த இடைப்பட்ட காலங்களில் தான் பட்ட மோசமான அனுபவங்கள் குறித்து Kayleigh கூறுகையில், நான் வீட்டில் என் குழந்தையுடன் இருப்பேன், அப்போது என்னை பலரும் பல விதமாக பேசினர்.

ஆனால் நான் தீவிர முயற்சி செய்தேன். நிறைய கஷ்டங்கள் அனுபவித்தேன். தற்போது என் குழந்தைக்கு நல்ல ஒரு தாயாக இருக்கிறேன் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

மேலும் Kayleigh-வின் இரண்டு வயது குழந்தையின் பெயர் ஹார்லி எனவும், தற்போது பள்ளி படிப்பை முடித்துள்ள Kayleigh வரும் செப்டம்பர் மாதம் இசைக் கல்லூரியில் சேரப்போவதாகவும் கூறப்படுகிறது.

தன்னைப் பற்றி பல கடுமையான சொற்கள் வந்த போதும், Kayleigh தன்னுடைய படிப்பை நல்ல படியாக முடித்து குழந்தைக்கு நல்ல ஒரு தாயாகவும் இருந்து வருகிறார்.

நடுரோட்டில் பெற்ற மகளை உயிரோடு எரித்து கொன்ற தந்தை : பதறவைக்கும் சம்பவம்!!

சாதி மாறி திருமணம் செய்ய முயன்ற மகளை பெற்ற தந்தை உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் சைன்புர் சர்கார் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் லால் (52). இவர் மகள் லட்சுமி பாய் (19). இவரும் ராஜ்குமார் என்ற இளைஞரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் இவர்கள் காதலுக்கு சுந்தர்லால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் தந்தை எதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடிக்க முடிவு செய்த லட்சுமி வீட்டை விட்டு வெளியேறினார். இது குறித்து அறிந்த சுந்தர்பாய் லட்சுமியை பின் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தினார்.

இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தன்னிடம் இருந்த மண்ணெண்ணெயை லட்சுமி மீது ஊற்றி சுந்தர்பாய் தீவைத்தார்.

இதையடுத்து வலியால் துடித்த லட்சுமி நடுரோட்டிலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் லட்சுமியின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் சுந்தர்பாயையும், இதற்கு உடந்தையாக இருந்த அவர் சகோதரரரையும் கைது செய்துள்ளனர்.