வவுனியாவில் கடும் வறட்சி : பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கல்!!

வவுனியா பிரதேச செயலகத்தினால் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கும்போது,

தற்போது வவுனியா பிரதேசத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட நெளுக்குளம் பகுதிக்கு பிரதேச செயலகம் மற்றும் தமிழ் தெற்கு பிரதேச சபையின் உதவிகளுடன் தண்ணீர் தொட்டிகள் அப்பகுதிகளில் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடி நீர் வழங்கப்பட்டு வருகின்றன.

மகாறம்பைக்குளம், ஆச்சிபுரம், ஈஸ்வரிபுரம் போன்ற பகுதிகளிலும் குடிநீருக்குத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இப்பகுதிகளுக்கும் குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியாவில் மழை இன்மை காரணமாக இப்பகுதிகளிலுள்ள குளங்கள், கிணறுகளில் தண்ணீரின் மட்டம் குறைந்தளவில் காணப்படுகின்றது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மழை இன்மையால் மேலும் பல பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றதாக மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கற்பிணித்தாய்மாருக்கு பாவனைக்கு உதவாக சத்துணவுப் பொருட்கள்!!

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியிலுள்ள பலநோக்குக்கூட்டுறவுச் சங்கத்தினால் கற்பிணித்தாய்மாருக்கு விநியோகம் செய்யப்பட்ட சத்துணவுப் பொருட்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து கிளை முகாமையாளர், பொதி செய்யும் முகாமையாளருக்கு எதிராக ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகரினால் பாவனைக்கு உதவாத சத்துணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக வழங்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருவருக்கும் எதிராக நீதவான் நீதிமன்றத்தில் தண்டம் அறிவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த செவ்வாய்க்கிழமை ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர் க. சிவரஞ்சன், க.வாகீசன் ஆகியோர் ஈச்சங்குளம் பலநோக்குக்கூட்டுறவுச் சங்கத்தில் தமது வழமையான பரிசோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது அப்பகுதியில் 100ற்கும் மேற்பட்ட கற்பிணித்தாய்மாருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் சத்துணவுப் பொருட்கள் பொதி செய்யப்பட்டு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

94 பொதிகளில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது 116 கிலோ பயறு, 58கிலோ கௌப்பி போன்ற பொருட்களில் வண்டு மொய்த்து பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து பாவனைக்கு உதவாத நிலையில காணப்பட்ட உணவுப் பொருட்களைக் கைப்பற்றி கிளை முகாமையாளருக்கு எதிராக வழங்குத்தக்கல் செய்யப்பட்டது.

இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஈச்சங்குளம் பலநோக்குக்கூட்டறவுச்சங்கத்தின் கிளை முகாமையளருக்கும் பலநோக்குக்கூட்டறவுச்சங்கத்தின் பொதி செய்யும் முகாமையாளருக்கும் தலா 12 ஆயிரம் ரூபா தண்டமாக அறவிடப்பட்டுள்ளது.

பாவனைக்கு உதவாக பொருட்களை அழித்தொழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்தில் திருமணம்… இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த இளைஞர்!!

தமிழகத்தின் பழநியில் ஒருதலைக்காதலால் ஓடும் ஆட்டோவில் கழுத்து அறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது அண்ணன் முறையுள்ள இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்த பகவதி என்பவரின் மகள் பவித்ரா(24).

தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். நேற்று முன்தினம் இரவு ரயில்வே பீடர் சாலையில் இருந்து ஆட்டோவில் ஒரு இளைஞருடன் சென்றுள்ளர்.

பழைய அடிவாரம் காவல் நிலையம் அருகே வந்தபோது, உடன் வந்த இளைஞர் பவித்ராவின் கழுத்தை அறுத்து விட்டு, ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து ஓடியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த பவித்ராவை அந்த ஆட்டோ ஓட்டுநர், பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவித்ரா, நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பழநி அடிவாரம் பொலிசார் கொலை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பவித்ராவின் கழுத்தை அறுத்த இளைஞர், பழநி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மில் தொழிலாளி மாயவன் (26), உறவு முறையில் பவித்ராவுக்கு அண்ணன் என தெரியவந்தது.

மாயவன் ஒருதலையாக பவித்ராவை காதலித்துள்ளார். அண்ணன் முறை என்பதால் அவரது காதலை பவித்ரா ஏற்க மறுத்துள்ளார். மேலும், இவருக்கு வேறு ஒருவருடன் நிச்சயிக்கப்பட்டு ஒரு மாதத்தில் திருமணம் நடக்க இருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த மாயவன், பவித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. தலைமறைவாக இருந்த மாயவனை பழநி அடிவாரம் பொலிசார் நேற்று மாலை கைது செய்தனர்.

பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் குழந்தை பெற்றெடுத்த தம்பதி : கிண்டலுக்கு பயந்து எடுத்த அதிர்ச்சி முடிவு!!

மேற்கு வங்க மாநிலத்தில் பேரக்குழந்தைகள் தங்களை கிண்டல் செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தங்களுக்கு பிறந்த குழந்தையை பெற்றோர் கொலை செய்துள்ளனர்.

கூச்பெஹார் மாவட்டத்தை சேர்ந்த ராம்(47) என்ற கூலித்தொழிலாளிக்கு திருமணமாகி 3 மகள்கள், 2 மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ராமின் மனைவி கர்ப்பமானதையடுத்து இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் தங்களை கிண்டல் செய்வார்கள் என்ற அச்சத்தில் இருந்த தம்பதி, பிறந்த பெண் குழந்தையை கொன்று உறவினர் வீட்டின் அருகே உள்ள குளத்தில் தூக்கி போட்டுள்ளனர்.

அந்த ஊர் பொதுமக்கள் குளத்தில் மிதந்த குழந்தையின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசில் தெரிவித்ததையடுத்து, இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜல்பைகுரியில் உள்ள நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

இவர்களுக்கு 3 நாட்கள் பொலிஸ் காவல் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

நடிகை பிரியங்காவின் தற்கொலைக்கு பணம் தான் காரணமா? கணவருடன் நடந்த போட்டி!!

பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்த நடிகை பிரியங்கா கடந்த 18 ஆம் திகதி வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிரியங்காவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மதுரையில் உள்ள அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

பிரியங்காவின் மரணத்தில் அவர் கடிதம் எதுவும் எழுதிவைக்காத காரணத்தால், அவரது கணவரிடம் விசாரணை மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது.

இவர்கள் இருவருக்குமிடையே குடும்ப பிரச்சனை அதிகம் இருந்ததாக கூறப்படுவதால், பிரியங்காவின் கணவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பிரியங்கா தனது கணவரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்கள் தவிர, அழகு நிலையம் வாயிலாகவும் வருமானம் ஈட்டியுள்ளார். ஆனால், கணவர் அருண்குமாருக்கு அந்த அளவுக்கு வருமானம் கிடையாது. இதனால், நீ அதிகமாக சம்பாதிக்கிறாயா? நான் அதிகமாக சம்பாதிக்கிறேனா? என இவர்கள் இருவருக்குக்கும் இருந்த போட்டியின் காரணமாக குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

எனவே, பிரியங்காவின் தற்கொலைக்கு பணம் தான் காரணமா? என்ற சந்தேகத்தில் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 மாத கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த பெண் : அடுத்து நடந்த விபரீதம்!!

தமிழ்நாட்டில் கர்ப்பிணியாக இருந்த அங்கன்வாடி சமையலர் வயிற்றில் சத்துணவு அமைப்பாளர் எட்டி உதைத்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக உள்ளவர் தனலட்சுமி.

7 மாத கர்ப்பிணியான தனலட்சுமி சத்துணவு அமைப்பாளர் உமா அரிசி, முட்டை போன்றவற்றை வெளியே கொண்டு சென்று விற்பதாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வியாழனன்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கர்ப்பிணி என்றும் பாராமல் தனலட்சுமியை உமா வயிற்றில் எட்டி உதைத்தாக சொல்லப்படுகிறது.

இதில் சுருண்டு விழுந்த தனலட்சுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் அடிப்படையில் ராசிபுரம் பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஜமானை எரித்து கொலை செய்தது ஏன்? வேலைக்கார பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

சென்னையில் செல்போன் வியாபாரி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது வீட்டில் வேலைபார்த்த வேலைக்கார பெண் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுல்தான் என்பவர் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனையுடன், ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழிலும் செய்துவந்தார்.

இவர் கடந்த 18 ஆம் திகதி கை, கால்களை கட்டிப்போட்ட நிலையில் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து பொலிசார் விசாரணையி சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சுல்தானுடன் கடைசியாக வேலைக்கார பெண் ரெனியாபானு பேசியுள்ளார்.

இதுகுறித்து ரெனியாவிடம் பொலிசார் விசாரணை நடத்தியபோது அவர் அளித்த வாக்குமூலத்தில், எனக்கு முகமது சுல்தான் பாலியல் தொல்லை கொடுத்ததால் இதுபற்றி எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட இமாமுதீனிடம் கூறினேன்.

இமாமுதீன் , முகமது சுல்தானிடம் இதுதொடர்பாக பேசினார். அப்போது எங்களை முகமது சுல்தான் மிரட்டினார். எங்களை அவர் வாழவிடமாட்டார் என்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்.

இதையடுத்து 18 ஆம் திகதி மாலை வீட்டிற்கு சென்று முகமது சுல்தானின் கை, கால்களை கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலைசெய்துதோம் என கூறியுள்ளார். தற்போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தோழிக்கு அனுப்பிய அந்த கடைசி மெசேஜ் : இளம்பெண் மரணத்தில் அதிரடி திருப்பம்!!

விமான பணிப்பெண் தற்கொலை விவகாரத்தில் அவர் கடைசியாக தோழிக்கு அனுப்பிய மெசேஜ் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த அனிசியா பத்ரா தனது கணவர் மாய்ங்க் சிங்வியுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 13ம் திகதி வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்னால் தனது கணவர் மாயங்க் சிங்விக்கு தான் இறக்க போவதாக செல்போனில் மெசேஜ் அனுப்பியதாக பொலிசார் ஏற்கனவே தெரிவித்தனர்.

மேலும், திருமணமானது முதலே வரதட்சணை கேட்டு மனைவியை மாயங்க் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பத்ரா குடும்பத்தார் பொலிசிடம் கூறியிருந்தனர்.

இந்நிலையில் பத்ரா இறப்பதற்கு முன்னர் தனது தோழிகளுக்கு மெசேஜ் அனுப்பியது தெரியவந்துள்ளது.

இது குறித்து பத்ராவின் தோழியை பொலிசார் விசாரித்துள்ளனர். அவர் கூறுகையில், பத்ரா இறப்பதற்கு முன்னர் அவர் கணவர் எனக்கு போன் செய்தார்.

அவர்கள் பிரச்சனை எனக்கு தெரியும் என்பதால் நான் சமாதானம் செய்தேன். பின்னர் மாலை 3.56 மணிக்கு பத்ரா எனக்கு மெசேஜ் அனுப்பினார். அதில், தன்னை அறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் இது குறித்து பொலிசில் சொல் என கூறினார்.

நான் டெல்லியில் இல்லாததால் உடனடியாக என்னால் உதவ முடியவில்லை, நீ தோழி வீட்டுக்கு தப்பி சென்றுவிடு என கூறினேன்.

சிறிது நேரத்தில் மீண்டும் வந்த மெசேஜில் இந்த முடிவை எடுப்பதற்கு நான் தள்ளப்பட்டுவிட்டேன். நடந்ததை இனி சரி செய்ய முடியாது என கூறப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.

தோழியின் வாக்குமூலத்தை வைத்து பத்ரா தற்கொலை செய்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மனைவி, மகன்களை படுகொலை செய்த கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழ்நாட்டில் குடிபோதையில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை படுகொலை செய்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகனை பொலிசார் தேடிவருகின்றனர்.

தஞ்சையின் அன்னப்பன்பேட்டை பகுதியில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்லப்பனின் மகன் ஜெயக்குமார் வசித்து வருகிறார்.

நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் தனது மனைவி அனிதாவை மண் வெட்டியால் வெட்டியுள்ளார்.

தனது தாயாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த 9 வயதான தினேஷ் மற்றும் 7 வயது தருண் ஆகியோரையும் ஜெயக்குமார் வெட்டியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்ந்த்தனர். படுகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதையடுத்து தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

எனக்கு தாயாக மாறிய என் மகன் : பிரபல நடிகையின் உருக்கமான பதிவு!!

நடிகை சோனாலி பிந்த்ரேவின் மகன் ஒரு குழந்தை போல் அவரை பார்த்துக்கொள்வதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்

காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம், பம்பாய் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சோனாலி பிந்த்ரே.

சோனாலி இப்போது புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். தான் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதை தன்னுடைய மகன் ரன்வீரிடம் கனத்த இதயத்தோடு தெரிவித்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மகனிடம் தனக்கு புற்றுநோய் என்று சொல்லும்போது மிக சாதுர்யமாக சோனாலியை கையாண்டதாகவும், இப்போது ரன்வீர் தான் தன்னை ஒரு குழந்தை போல பார்த்துக் கொள்கிறான் என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்தில் கசந்துபோன காதல் திருமணம்!!

கோயம்புத்தூரில் பல பெண்களுடன் கணவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு மனைவி அவரை நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்துள்ளார்.

திருமணமாகி 5 நாட்களிலே பொது இடத்தில் கணவனை சரமாரியாக தாக்கியுள்ளார். சாய்பாபா கோவிலுக்கு வந்தபோது, கணவருக்கு வேறாரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை இருப்பதை அறிந்துகொண்டார். மேலும், கையில் வேறொரு பெண்ணின் பெயரையும் பச்சை குத்தியிருந்தார்.

இதனால் கோப ம் கொண்டு அடித்து உதைத்துள்ளார். அடிதாங்கமுடியாத கணவன் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனை இருந்தால் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம் தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் திருமணம் செய்த தங்கை : தாலி கட்டிய 5 நாட்களில் அரக்கனாக மாறிய அண்ணன்!!

தமிழ்நாட்டின் மதுரையில் காதல் திருமணம் செய்த தங்கையின் கணவரை அவரது அண்ணன் வீடு புகுந்து வெட்டியுள்ளார்.

மதுரையை சேர்ந்த பொன்ராஜ் என்பவர் தனது உறவுக்கார பெண் மீனாவை காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து திருமண ஏற்பாடு செய்யப்பட்டது,

இதனிடையே, இரு வீட்டாருக்குமிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதால், திருமணம் நிறுத்தப்பட்டது. இருந்தபோதிலும், பொன்ராஜ்- மீனா ஆகியோரின் காதல் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் முருகன்கோயிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இதனால் கோபம் கொண்ட மீனாவின் அண்ணன் பிரபு, எப்படி என் தங்கையை நீ திருமணம் செய்துகொள்ளலாம்” என்று ஆவேசத்துடன் கேட்டு பொன்ராஜை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதைத் தடுக்க வந்த பொன்ராஜியின் தாயாரையும் பிரபு வெட்டியுள்ளார், பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள பிரபுவை தேடி வருகின்றனர்.

முஸ்லீம் பெண்ணுடன் திருமணம் நடந்ததால் இப்படி செய்கிறார்கள் : புதுமாப்பிளை வேதனை!!

கேரளாவில் முஸ்லீம் பெண்ணும், கிறிஸ்தவ ஆணும் காதலித்து திருமணம் செய்து கொண்ட காரணத்தால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஹிரிசனுக்கும், முஸ்லீம் மதத்தை சேர்ந்த சஹானாவிற்கும் கடந்த திங்களன்று திருமணம் நடந்தது.

இவர்கள் தங்களது புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டதையடுத்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது என தம்பதியினர் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

என்னுடைய பெற்றோர்களையும் என்னால் தொடர்பு கொள்ளமுடியவில்லை. எங்களுடன் என்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரியை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள். எங்களால் காவல் நிலையமும் செல்ல முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை என ஹிரிசன் கூறியுள்ளார்.

மனைவி சஹானா கூறியதாவது, என்னுடைய குடும்பத்தார் எங்களையும், என்னுடைய கணவர் குடும்பத்தாரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். நான் ஒரு முஸ்லீம், என்னுடைய கணவர் கிறிஸ்தவர், நாங்கள் இருவரும் மதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஒருவருக்கு ஒருவர் வலியுறுத்தவில்லை.

நான் என்னுடைய கணவருடன் வாழ வேண்டும், உயிரிழக்க விரும்பவில்லை. எங்களை கொலை செய்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? எங்களுடைய உறவு மற்றும் திருமணத்தின் போதும் நாங்கள் மதம் மற்றும் ஜாதி பற்றி எதுவும் நினைத்தது கிடையாது என உருக்கமாக கூறியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு முன்னூதாரணமாக திகழும் மனிதாபிமானமுள்ள நபர்!!

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்காக இலவச போக்குவரத்து சேவையை நடத்தி வரும் நபர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

அவிசாவளை, தெரணியகல பகுதியை சேர்ந்த சரத் வசந்த என்பவரே மகத்தான பணியை செய்து வருகின்றார். உயிரிழந்த தனது பெற்றோரின் நினைவாக இந்த சேவையை நடத்தி வருவதாக சரத் வசந்த தெரிவித்துள்ளார்.

தான் கல்வி கற்ற பாடசாலைக்கு பேருந்து ஒன்றை கொள்வனவு செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்கமைமைய கடனுக்கு பேருந்து ஒன்றை கொள்வனவு செய்து, மாணவர்களுக்காக இலவச போக்குவரத்து சேவையை நடத்தி வருகிறார்.

பாடசாலை நாட்களிலும் காலை 7.15 மணியளவில் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு மாலையில் இந்த சேவை நிறைவு செய்யப்படும். பேருந்து முழுவதும் மாவணர்கள் ஏற்றப்படுவார்கள். அவர்களுக்கு இலவச சேவை மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் வருடத்திற்கு ஒரு முறை தனது செலவில் கிராம மக்கள் அனைவரையும் கதிர்காமத்திற்கு அவர் அழைத்து செல்வார்.

சரத் வசந்தவினால் நடத்தப்படும் உணவகத்தில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இந்த சேவையை செய்து வருகிறார்.

எனது உணவகத்திலும், மரக்கறி உணவுகள் மாத்திரமே வழங்கப்படுகின்றது. நான் இவை அனைத்தையும் மகிழ்ச்சியுடனே செய்து வருகின்றேன்.

இலட்சம், கோடி கணக்கில் சம்பாதித்து விட்டு உயிரிழக்கும் போது ஒன்றையும் கொண்டு செல்வதில்லை. மேலும் இலவச போக்குவரத்து சேவையை தொடர்ந்து செய்து வருவேன் என சரத் வசந்த மேலும் தெரிவித்துள்ளார்.

மனைவியின் மோசமான செயல் : தந்தை தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய 8 வயது மகள்!!

கொழும்புக்கு அருகில், ஹங்வெல்ல புஸ்ஸெல்ல ஓயா ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் தொடர்பாக விசாரணைகளை நடத்திய பொலிஸார் குறித்த ஆணின் மனைவியை கைது செய்துள்ளனர்.

இந்த பெண், தான் தகாத உறவு கொண்டுள்ளவருடன் இணைந்து கணவனை கொலை செய்து ஆற்றில் வீசியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஹங்வெல்ல, ஜயவீரகொட பகுதியில் வசித்து வந்த 37 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவனுக்கும், தனக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தாக பெண், பொலிஸாரிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக தன்னுடன் தொடர்பு வைத்திருந்த ஆணுடன் இணைந்து கணவனை கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சடலமாக மீட்கப்பட்டவரின் தாய் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.

கடந்த மாதம் 26ஆம் திகதி தன்னுடன் தொலைபேசியில் உரையாடிய மகன், 27ஆம் திகதி வீட்டுக்கு வருவதாக கூறியதாகவும் தாய் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையத்து விசாரணைகளை நடத்திய பொலிஸார், கொல்லப்பட்ட நபரின் 8 வயதான மகளிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுள்ளனர்.

சம்பவம் நடந்த தினம் இரவு தாய் மற்றும் தந்தைக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. தாயும் தந்தையும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் என மகள் கூறியுள்ளார்.

இதன் பின்னர் தான் உறங்கி விட்டதாகவும், மறுநாள் அதிகாலையும் தாய்க்கும், தந்தைக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதாகவும், தான் எழுந்து பார்க்கும் போது தாயின் கையில் பொல்லு ஒன்று இருந்ததாகவும் மகள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது தாயும் மற்றைய ஆண் நபரும் தந்தையை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றனர் எனவும் மகள் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர்கள் சடலத்தை ஆற்றில் வீசியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பெண்ணும், சம்பந்தப்பட்ட ஆணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மிரிஹான விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலை விழுந்ததில் படுகாயமடைந்த குழந்தைக்கு மூன்று நாட்களின் பின் நேர்ந்த விபரீதம் : ஊரே சோகத்தில்!!

திருகோணமலையில் வீட்டில் வைத்திருந்த ஜன்னல் நிலை விழுந்து படுகாயமடைந்த குழந்தையொன்று மூன்று நாட்களின் பின் நேற்று இரவு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் கிண்ணியா – 06, ஜாவா வீதி எனும் முகவரியை சேர்ந்த றமீஸ் – சயான் எனும் மூன்று வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.

கடந்த 16ஆம் திகதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தை மீது ஜன்னல் விழுந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த குழந்தை கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.