30 ஆண்டுகளுக்கு முன்னர் கனவில் வந்த சிவன் கோவிலை கட்டி வரும் நபர்!!

இந்தியாவில் கனவில் வந்த கோவிலை முதியவர் ஒருவர் 30 ஆண்டுகளாக கட்டி வரும் சம்பவம் பலரிடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் கற்களால் கட்டப்பட்டு வரும் கும்ப சிவன் கோவில் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த கோவிலை 15 லட்சம் ரூபாய் செலவில், சத்யபூஷண் என்ற 64 வயது முதியவர் கட்டி வருகிறார்.

ஆரம்பத்தில் கற்களால் கட்டப்பட்டு வந்த இந்த கோவிலை பார்ப்பதற்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் அலை மோதுகின்றன.

இது குறித்து சத்யபூஷண் கூறுகையில், பள்ளி நாட்களில், மரம் மற்றும் மண்ணில், சிற்பங்களை வடிவமைக்க கற்றுக் கொண்டேன். அப்போது சிவன் கோவிலை கட்டுவது போல் எனக்கு கனவு வந்தது.

இதனால் அது போன்ற கோவிலை கட்ட முடிவு செய்தேன். 1980-ல், இந்த கோவிலை கட்டும் பணியை துவங்கினேன். இன்னும், கோவில் பணிகள் முழுமை அடையவில்லை.

இந்த கோவில் கட்டுவதற்கு அரசிடமிருந்து எந்த ஒரு உதவியும் பெறவில்லை எனவும், கோவிலுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு உள்ளூர் மக்கள் உதவினர் என்றும், கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நன்கொடையாக பணம் கொடுப்பார் அதை வைத்து இந்த கோவிலை கட்டி வருவதாக கூறியுள்ளார்.

கோவில் முழுவதும் கற்களாலும், இரும்புக் கம்பிகளாலும் கட்டப்பட்டுள்ளது. எந்த வர்ணமும் பயன்படுத்தவில்லை. கோவிலுக்கு கீழ் ஒரு குகை உள்ளது.

இக்கோவிலில் மின்சார இணைப்பை இயக்கியதும், சிவன் தலை மீது உள்ள நீரூற்றில் இருந்து தண்ணீர் விழுவதுடன், மந்திரங்கள் ஒலிக்கும் வகையில், சத்யபூஷண் ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனின் ஆசை வார்த்தைகளை நம்பி வந்ததால் நடுரோட்டில் சாப்பாட்டிற்கு பிச்சை எடுத்த மாணவி!!

டார்ஜிலிங்கை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பேஸ்புக் மூலம் காதலித்த காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியே வந்த காரணத்தால் நடுரோட்டில் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

11 ஆம் வகுப்பு படித்து வந்த நிஷா என்ற பள்ளி மாணவிக்கு பேஸ்புக் வாயிலாக இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. அந்த இளைஞனின் ஆசை வார்த்தைகளை நம்பி அந்த பெண், கடந்த ஜனவரி மாதம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, மகள் எங்கே சென்றார் என தெரியாமல் தவித்து வந்தனர்.

பணத்துடன் வெளியேறிய மாணவி அந்த இளைஞனுடன் கேரளா உள்ளிட்ட ஊர்களில் சுற்றித்திரிந்து விட்டு, திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

ஆனால், வேலை தெரியாத காரணத்தால் கம்பெனியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கையிலும் பணம் இல்லாததால் சாப்பாட்டிற்கு பிச்சை எடுக்க தள்ளப்பட்டார் அந்த மாணவி. மேலும் அந்த மாணவியை இளைஞன் அடித்து கொடுமைபடுத்தி வந்துள்ளான்.

இதையடுத்து பக்கத்து வீட்டாரிடம் உதவி கேட்டார் அந்த பெண். அவர்கள் அந்த மாணவிக்கு உணவு வழங்கினர். அவர்களிடம் செல்போன் வாங்கி, தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, தன்னை மீட்கும்படி கெஞ்சியுள்ளார். அதனைத்தொடர்ந்து பதறியடித்து வந்த பெற்றோர் சிறுமியை மீட்டுள்ளனர்.

தன்னை விட 20 வயது குறைவான இளம் மனைவியை கொன்றது ஏன்? கணவன் பரபரப்பு வாக்குமூலம்!!

இந்தியாவில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை கொடூரமாக கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்தவர் ஜகதீஷ் (45). இவர் மனைவி சவுமியா (25). ஜகதீஷை விட சவுமியா அதிக வயது குறைவானவர் என்ற நிலையில் சமீபகாலமாக மனைவி நடத்தையின் மீது ஜகதீஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து யாருடனாவது தொடர்பு வைத்துள்ளாயா என கூறி சவுமியாவுடன் ஜகதீஷ் அடிக்கடி சண்டை போட்டு வந்தார்.

இதே போல நேற்றும் இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் சவுமியாவின் தலையை தரையில் வேகமாக மோதிய ஜகதீஷ் பின்னர் அவர் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்தார்.

பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்த ஜகதீஷ் நடந்த அனைத்தையும் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒரு கணவன்…2 காதலர்கள் : கொலையில் முடிந்த சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்!!

சென்னையை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேஷ் கடந்த 16 ஆம் திகதி குடிபோதையில் தனது காரில் இறந்துகிடந்தார். குடித்துவிட்டு காருக்குள் மூச்சுதிணறி இறந்துவிட்டதாக கருதி இவரது உடலை மனைவி நளினி அடக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில், ராஜேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் பத்மாவதி மற்றும் குமரேஷன் ஆகிய இருவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பத்மாவதிக்கும் இறந்துபோன ராஜேஷ்க்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது. பின்னர் பத்மாவதி மதுரவாயிலை சேர்ந்த குமரேசன் என்பவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். குமரேசனுடன் ஏற்பட்ட புது தொடர்பால் ராஜேஷை கைவிட்டுள்ளார் பத்மாவதி.

இதனால், கோபம் கொண்ட ராஜேஷ், பத்மாவதியுடன் அடிக்கடி பிரச்சனை செய்துள்ளார். இதனால் கோபம் கொண்ட பத்மாவதி, தனது இரண்டாவது கள்ளக்காதலன் குமரேசனை வைத்து முதல் கள்ளக்காதலன் ராஜேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

அதன்படி, ராஜேஷை மது அருந்த அழைத்து மதுவில் விஷம் கலந்துகொடுத்துள்ளனர். பின்னர், அவரை அடித்து காருக்குள் படுக்கவைத்துவிட்டு சென்றுள்ளனர்.

போதையில் தான் ராஜேஷ் படுத்திருப்பதாக நினைத்து அவரது மனைவி நளினி இதனை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து காலையில் பார்க்கும்போதுதான் ராஜேஷ் இறந்துகிடந்துள்ளார்.

இந்த கொலை வழக்கில், நளினி புகார் அளிக்கவில்லை. இருப்பினும் பொலிசார் முன்வந்து குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளனர். மேலும், இதில் முக்கிய காட்சியாக, குமரேஷன் மதுவில் விஷத்தை கலந்து ராஜேஷ்க்கு கொடுத்த காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து இதனை உறுதிப்படுத்திக்கொள்ள இறந்துபோன ராஜேஷின் உடலை தோண்டியெடுத்து, பிரேத பரிசோதனை நடத்த பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

நடிகை பிரியங்கா தற்கொலைக்கு காரணம் என்ன? ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை!!

நடிகை பிரியங்கா தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை அவருடன் வம்சம் தொடரில் நடித்த நடிகை கண்ணீருடன் கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகை பிரியங்காவின் தற்கொலை தான் திரையுலகிலும், சின்னத்திரை உலகிலும் பலரும் பேசும் விடயமாக உள்ளது.

பிரியங்காவுக்கு கணவருடனும், குடும்பத்தாருடனும் பிரச்சனை இருந்ததாக கூறப்பட்டு வருகிறது.

இது குறித்து பிரியங்காவுடன் வம்சம் தொடரில் பூமிகா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கூறுகையில், எப்பொழுதும் என்னுடன் தொடர்பில் இருந்திருக்கும் பிரியங்காவின் நடவடிக்கை கடந்த ஒரு மாதமாக கொஞ்சம் சரியில்லை.

சமூகவலைத்தளங்களில் பிரியங்கா பதிவிட்டு வந்த தகவல் அதனை உறுதிபடுத்தியதாகவும், அவரது கணவரும் இதேப் போன்ற பதிவுகளையே வெளியிட்டு வந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் குடும்ப பிரச்சசினையில் இருக்கின்றனர் என்று தெரிந்து கொண்ட பூமிகா பிரியங்காவின் கணவரிடமும் கேட்டுள்ளார். அதற்கு அவளிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துவிட்டாராம்.

பிரியங்கா சமீபத்தில் அவர் வெளியிட்ட ஐ வாண்ட் டூ டை என்ற வார்த்தைகளுடன் படம் ஒன்றினை வெளியிட்டதை அவதானித்த வம்சம் பூமிகா உடனே அவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

அதற்கு பிரியங்கா சும்மா தான் அக்கா என்று அழுதுள்ளார். நேரில் பார்க்கும் போது கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பூமிகா மேலும் கூறுகையில், அளவுக்கதிகமான பரிசுப்பொருட்களை எனக்கு கொடுத்துள்ளார். அதனை அவதானிக்கும் பொழுது அவள் ஏன் இவ்வாறு செய்தார் என்ற கேள்வியுடன் கண்ணீர் வடித்துள்ளார்.

வவுனியாவில் சர்வதேச கூட்டுறவாளர் தின விழா!!

வவுனியாவில் 96 வது சர்வதேச கூட்டுறவாளர் தின விழா மாவட்ட கூட்டுறவுச்சபை தலைவர் இ.சுப்பிரமணியம் தலைமையில் இன்று (21.07) நடைபெற்றது.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக வவுனியா கூட்டுறவு உதவி ஆணையாளர் இந்திரா சுபசிங்கவும், தேசிய கூட்டுறவுச் சபையின் தலைவர் ஏ.பீரிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின் சிறப்பம்சமாக கூட்டுறவு களஞ்சியம் எனும் நூல் வெளியீடும், கூட்டுறவாளர் பத்திரிகையின் ஐந்தாவது இதழும் வெளியிட்டுவைக்கபபட்டதுடன், மாணவர்களது கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.

அத்துடன் கூட்டுறவாளர்கள் தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற 50 மாணவர்களுக்கு பரிசில்களும் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியாவில் கறுப்பு ஜீலை நினைவேந்தல் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – 2018!!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி மற்றும் முன்னணிப் போராளிகளான திருவாளர்கள் ஜெகன், தேவன், நடேசுதாசன், குமார், சிவபாதம் உட்பட 1983 ஜீலையில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53பேர் மற்றும் இக் கலவரத்தின் மூலம் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களின் 35வது ஆண்டு நினைவாக,

வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க அனுமதியுடன் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) நடாத்தும் அணிக்கு 11பேர் கொண்ட விலகல் முறையிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று (21.07.2018) காலை 10.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலமையில் வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

கறுப்பு ஜீலை நினைவேந்தலின் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து மங்களவிளக்கேற்றியதுடன் பாராளுமன்ற உறுப்பினர், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்களின் உரையுடன் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பமானது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் நடராஜசிங்கம் (ரவி) , வவுனியா வடக்கு பிரதேச சபையின் உபதலைவர் யோகராஜா , தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் குருஸ்,

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர்கள், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், அக்கினிச் சிறகுகள் அமைப்பின் தலைவர் அரவிந்தன், உதைப்பந்தாட்ட சங்க தலைவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள், கழகங்களின் உறுப்பினர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு செயலமர்வு!!

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புனர்வு செயலமர்வு வவுனியா இரண்டாம் குறுக்தெருவில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றின் அலுவலகத்தில் இன்று (21.07.2018) காலை 10.30 மணி தொடக்கம் 13.30மணி வரை தமிழ்தாய் இளைஞர் கழகத் தலைவர் வ.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

இக் கருத்தமர்வில் தகவல் உரிமைச்சட்டம் என்றால் என்ன? இதன் மூலம் எவ்வாறான சமூகத்தில் இருள் போர்வைக்குள் இருக்கும் விடயத்தை சட்டபூர்வமாக எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என்று பல விடயங்களையும் விளக்கங்களையும் வளவாளர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

நீங்கள் இலங்கை அரசின் அமைச்சு ஒன்றிடமிருந்து ஒரு குறித்த அபிவிருத்தி திட்டமொன்றிற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் பெறுமதி அதனால் நடந்தேறிய அபிவிருத்தி பற்றிய விபரங்களை கேட்டுப் பெறும் உரிமை உங்களுக்கு சட்ட ரீதியாக தரவேண்டும் என்ற பல விளக்கங்கள், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் , இளைஞர்கள், யுவதிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அன்பாக பராமரித்து வந்த மகளை கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ள தாய்!!

45 வருடங்கள் பராமரித்து வந்த மகளை மிகவும் கொடூரமான முறையில் தாயொருவர் படுகொலை செய்துள்ள சம்பவம் கம்பளை பிரதேச மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மாற்றுத் திறனாளியான 45 வயது மகளை கொலை செய்து சடலத்தை குறித்த தாய் எரித்துள்ளதாக தெரியவருகிறது. கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதான தாயொருவர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், கடந்த 19ஆம் திகதி குறித்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மேரி நோனா என்னும் 45 வயதான மாற்று திறனாளி பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவர் இன்றி, வலதுகுறைந்த மகளை மிக நீண்ட காலம் குறித்த பெண் மிகவும் அன்பாக பராமரித்து வந்தார் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மண்வெட்டியொன்றினால் மகளை தாக்கிக் கொலை செய்து, பல்வேறு பொருட்களை சடலத்தின் மேல் போட்டு குறித்த தாய் தீயிட்டு எரித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பகுதியளவில் எரிந்த சடலத்தின் இரு புறத்திலும் விளக்கு ஏற்றி இரவு முழுவதும் சடலத்துடன் குறித்த பெண் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண் அடுத்த நாள் காலையில் அனைவரிடமும் மகள் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சடலத்தை பார்த்த கிராம உத்தியோகத்தர் தீ காயங்கள் காணப்படுவதனால் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் அறிவித்ததை தொடர்ந்து பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

என்ன காரணத்திற்காக இவ்வாறு மகளை கொன்றார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

ஐபோனுக்காக உயிரை விட்ட இளம் யுவதி : கொழும்பில் நடந்த துயரம்!!

கொழும்பை அண்டிய புறநகர் ஒன்றில் ஐபோன் கிடைக்காமையினால் 17 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த மகள் தொடர்பில் கொழும்பு மரண விசாரணை பிரிவிடம் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

“உயிரிழந்தவர் என முதல் பிள்ளையாகும். அவர் சற்று அடம்பிடிக்கும் குணமுடையவர். பல முறை வீட்டில் சண்டடையிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். பின்னர் பொலிஸாரின் உதவியுடனே அவரை கண்டுபிடித்தோம்.

பொலிஸ் அதிகாரிகளே அவருக்கு ஆலோசனை வழங்கி எங்களிடம் அனுப்பி வைத்தார்கள். இறுதியாக மகள் ஐபோன் ஒன்று கேட்டார். அவரது நிலை அறிந்தமையினால் ஐபோன் ஒன்றை கொள்வனவு செய்து கொடுக்க தீர்மானித்தோம்.

இன்னும் இரண்டு நாட்களில் பெற்றுத் தருவாக கூறிவிட்டு அதற்கு தேவையான பணத்தை தேடி கொண்டிருந்தோம். எனினும் அவர் அதற்கு முன்னர் கோபத்தில் உடலில் மண்ணெண்ய் ஊற்றி கொண்டு தாயின் முன்னால் சென்று தீயிட்டு கொண்டார்.

தான் ஐபோன் கிடைக்காதென நினைத்து தாயை அச்சுறுத்துவதாக இந்த வேலை செய்தாக கூறினார். அவரை காப்பாற்றி களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து சென்றோம். அந்த வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவரை மாற்றி அனுப்பினார்கள். எனினும் மகளை காப்பாற்ற முடியவில்லை என தந்தை கூறியுள்ளார்

முன்னாள் போராளி வீட்டிலிருந்து பசு மாட்டினை திருடிச் சென்ற நபர்கள் செய்த மோசமான காரியம்!!

கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவ குடும்பமொன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசு மாட்டினை, அடையாளம் தெரியாத நபர்கள் இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளனர்.

ஜெயந்திநகரில் அமைந்துள்ள வீட்டு வளவில் கட்டப்பட்டிருந்த பசுவினை நேற்று முன்தினம் இரவு திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் கோவிலருகில் வைத்து வெட்டி இறைச்சியினை எடுத்துவிட்டு எச்சங்களை விட்டுச் சென்றுள்ளனர்.

முன்னாள் போராளியும், இரண்டு பிள்ளைகளின் தாயுமான குறித்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட பசுவே களவெடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற விரும்புபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான விசா நடைமுறையை அந்த நாட்டு அரசாங்கம் இன்னமும் இறுக்கமாக்கலாம் என குடியுரிமை தொடர்பான அமைச்சர் Alan Tudge மறைமுகமாக கூறியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

அவுஸ்திரேலியாவிற்குள் வரமுன்னரேயே பலருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்துவிடுவதாக தெரிவித்துள்ள அவர், இது தொடர்பில் மேலதிகமாக ஆலோசிக்க வேண்டியுள்ளதுடன், ஒருவருக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்க முதல், அவர் அவுஸ்திரேலிய விழுமியங்களை அறிந்துகொள்ளும் வகையில் பரீட்சைக்கு முகங்கொடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.

தற்போதைய நடைமுறையின்படி அவுஸ்திரேலியாவில் சில வருடங்கள் வாழ்ந்த பின்னர் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும் வகையில் ஒருபகுதி விசாக்கள் அமைந்துள்ளன. ஆனால் மீதி விசாக்கள் ஊடாக அவுஸ்திரேலியாவுக்குள் வரமுதலே நிரந்தரவதிவிட உரிமையைப் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பாக அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வழிகளாக Skilled Migration விசா மூன்றில் இரண்டு பாகமாகவும், பெற்றோர், மனைவி, பிள்ளைகளுக்கான குடும்ப விசாக்கள் மூன்றில் ஒரு பாகமாகவும் காணப்படுகின்றன.

இந்தப் பின்னணியில் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு முன்னரேயே நிரந்தர வதிவிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், விசா நடைமுறைகளில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை வருடமொன்றுக்கு 190,000 பேர் நிரந்தரமாக குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்படும் நிலையில், கடந்த ஆண்டு 162,000 பேருக்கே இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய நீர்தொட்டியில் சிக்கிய மர்மம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிநீர் தொட்டிக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

2 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்கள் 28, விமான நிலையத்தின் சுங்க பிரிவின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிநீர் தொட்டிக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையிலேயே இந்த பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் தீர்வை வரியற்ற கடையின் ஊழியர் ஒருவரினால் இந்த பார்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்க பிஸ்கட்களை புகையிலை சுற்றும் பையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சிகிச்சை பலனின்றி 6 வயதுச் சிறுமி உயிரிழப்பு!!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 6 வயதான சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஷர்மிளரூபன் யக்ஷிதா என்ற 6 வயதுச் சிறுமி கடந்த 18ம் திகதி திடீரென்று மயக்கமுற்ற நிலையில் அவரை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி பிறந்த சில நாட்களில் அவசியத் தேவை கருதி சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருந்தார். எனினும் அதன் பின்னர் வழமைக்குத்திரும்பியதுடன் உடல் ஆரோக்கியமாகவே காணப்பட்டுள்ளார்.

திடீரென்று மயக்கமுற்ற நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிரசிகிச்சைப்பிரிவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் மூளையில் கிருமித்தாக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

வவுனியாவில் இவ்வாறு சிறுவயதில் சிறுமிகள் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு சகோதர சிறுமிகள் அண்மையில் குருமன்காட்டுப் பகுதியில் நோய்த்தாக்கம் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையின் உடல் மீட்பு!!

வவுனியா கனகராயன்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று (19.07.2018) மாலை உயிரிழந்த நிலையில் யானையின் எச்சங்களை கனகராயன்குளம் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்

கனகராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள வயலுக்கு நேற்று காலை விவசாயிகள் சிலர் காட்டுப்பகுதிக்கு சென்றிருந்த சமயத்தில் உயிரிழந்த நிலையிலிருந்த யானையின் எச்சங்களை கண்டுள்ளனர்.

இதையடுத்து கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்று இது குறித்த விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த யானை இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

உயிரிழந்த யானையின் சில பாகங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்படுவதாக வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) அவர்களுக்கு பொதுமக்களினால் விடுக்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து உடனடியாக தடுத்து நிறுத்தியுள்ளார்.

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கூமாங்குளம் , நெளுக்குளம், தாஸ்கோட்டம் பகுதிகளில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்படுவதாக கடந்த சில தினங்களாக மக்கள் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) அவர்களின் உத்தரவின் பேரின் இன்று (20.07.2018) காலை நெளுக்குளம் , தாஸ்கோட்டம் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிட வேலைகளை வவுனியா தெற்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இச் செயற்பாடு மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பொதுமக்கள் அனுமதியினை பெற்று கட்டிடங்கள் , சுற்றுமதிகள் என்பவற்றினை அமைக்குமாறும் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களின் உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) தெரிவித்தார்.