நண்பனை தாக்கி கப்பம் கோரிய நண்பர்கள்!!

நண்பனை தாக்கி, அவரிடம் இருந்த தேசிய அடையாள அட்டையை கொள்ளையிட்டு, அதனை திரும்பி கொடுக்க 5 ஆயிரம் ரூபாய் கப்பம் கோரிய மூன்று பேரை உடுகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

காலி, உடுகம பிரதேசத்தை சேர்ந்த மூன்று பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முறைப்பாடு செய்த நபரின் நண்பர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

உடுகம தெற்கு பகுதியில் வசித்து வரும் 28 வயதான தொழிலாளியிடமே சந்தேக நபர்கள் கப்பம் கோரியுள்ளனர்.

இந்த நபர் அளுத்வத்தை சந்தி பகுதியில் வந்து கொண்டிருந்த போது இரண்டு சந்தேக நபர்கள் அங்கு சென்று தாக்கியுள்ளதுடன் அவரது சட்டை பையில் இருந்த தேசிய அடையாள அட்டையை பலவந்தமாக பறித்துச் சென்றுள்ளனர். அதனை திரும்ப கேட்ட போது 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தால், அடையாள அட்டையை திரும்ப தருவதாக சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற மற்றுமொரு நபர், பணத்தை கொடுத்தால் மாத்திரமே அடையாள அட்டையை வழங்க முடியும் எனக் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து உடுகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் சந்தேக நபர்களை கைதசெய்துள்ளதுடன் தேசிய அடையாள அட்டையையும் பறிமுதல் செய்துள்ளனர்.

திடீரென மறைந்து போன நுவரெலியா!!

மலையகத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா நகரம் முழுவதும் பனிமூட்டத்தால் முடிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிகப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை முதல் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும், ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன் மஸ்கெலிய, பொகவந்தலாவை வீதியிலும், நுவரெலியா செல்லும் அனைத்து வீதிகளும் கடும் பனி மூட்டத்தால் மறைத்துள்ளது.

முன்னால் பயணிக்கும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டமாக உள்ளமையினால் இந்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விபத்துக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள வாகனத்தின் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை அவதானமாக ஓட்டுமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதிக பனி மூட்டத்துடன் மலையத்தில் கடும் காற்று வீசுவதோடு, இடைக்கிடையே அடை மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில் வழமைக்குமாறு மாறாக அண்மைக்காலமாக கடும் குளிராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அறிமுகமாகும் அதிநவீன முச்சக்கர வண்டி : சாரதிகளுக்கு மகிழ்ச்சி!!

இலங்கையில் புதிய வகை முச்சக்கர வண்டியொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீன், பால் மற்றும் மரக்கறி உட்பட இயற்கையான தயாரிப்புகளை கொண்டு செல்வதற்கு குளிர்சாதன வசதியை கொண்ட முச்சக்கர வண்டியே இவ்வாறு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இயற்கை உற்பத்திகளுக்கு பாதிப்பு ஏற்படுவதனை குறைத்து கொள்வதற்காக விசேடமாக இந்த முச்சக்கர வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள குளர்சாதன பெட்டி சூரிய சக்தியில் இயங்கவுள்ளது. இதனை மலேசிய நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.

இந்த தயாரிப்பின் மூலம் மின்சாரத்திற்காக செலவிடப்படும் பெருந்தொகை பணத்தை மீதப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக இந்த முச்சக்கர வண்டியில் ஒரே முறையில் 1000 லீற்றர் பால், 300 கிலோ இறைச்சி வகைகள் கொண்டு செல்ல முடியும்.

சீரற்ற காலநிலை காரணமாக சூரிய சக்தியை பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் சார்ஜ் செய்து கொள்ள கூடிய வகையில் பெட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

சூழலுக்கு நெருக்கமான இந்த முச்சக்கர வண்டிகள் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

வேறு நபரை மணக்க முடிவெடுத்தால் ஆத்திரம் : நடுரோட்டில் கழுத்தறுத்து ஆசிரியை படுகொலை!!

தமிழ்நாட்டில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பவித்ரா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு, அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற பவித்ரா ரோட்டில் ஒரு இளைஞரை சந்தித்தார்.

இருவரும் முத்துராமலிங்கம் என்பவரின் ஆட்டோவில் ஏறி சென்ற நிலையில் உடனிருந்த வாலிபர் பவித்ராவிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

பழனி பூங்கா ரோட்டில் ஆட்டோ சென்றபோது, பவித்ராவின் கழுத்தை பிளேடால் அறுத்த வாலிபர் பின்னர் ஆட்டோவிலிருந்து குதித்து ஓடிவிட்டார்.

இதை பார்த்து அதிர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முத்துராமலிங்கம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். அங்கு பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

பவித்ராவின் கழுத்தை அறுத்தவர் அவரது உறவினர் மாயவன் என தெரியவந்துள்ளது. கழுத்தை அறுத்துவிட்டு தப்பிசென்ற மாயவனை பொலிசார் தேடி வருகின்றனர்.

மாயவனும் பவித்ராவும் காதலித்து வந்திருக்கலாம் எனவும், பவித்ராவுக்கு வேறு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மாயவன் அவரை கொன்றிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மகன் படிப்பிற்காக கடன் வாங்கிய தம்பதி தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சிக் காரணம்!!

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மகன் படிப்பிற்காக கடன் வாங்கிய தம்பதி கடன் சுமை காரணமாக தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அருகே பீச்ரோடு பகுதியை சேர்ந்த வேலப்பன் என்பவர் தனது மகனின் படிப்பு செலவிற்காக சுய உதவிக்குழு மற்றும் சிலரிடம் கடனாக பணம் பெற்றுள்ளார்.

வாங்கிய பணத்தையும் அதற்கான வட்டியையும் கட்ட முடியாமல் தவித்து வந்த பெற்றோர், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு இவர்களின் வீட்டின் அருகே துர்நாற்றம் வீசியதை அறிந்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து வந்த பொலிசார் வீட்டினுள் சென்று பார்த்தபோது, இறந்த நிலையில் தூக்கில் தொங்கிய வேலப்பன் மற்றும் அவரின் மனைவி அமுதாவின் உடலை கைப்பற்றினர்.

இவர்களது உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவனின் முதல் திருமணத்தை கண்டுபிடித்த மனைவி : இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்!!

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இளம்பெண் வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியை சேர்ந்த விமான பணிப்பெண்ணான அனிஷியா பத்ரா கடந்த 13ம் திகதி வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்தார்.

இறப்பதற்கு முன்னால் தனது கணவர் மாயங்க் சிங்விக்கு தான் இறக்க போவதாக செல்போனில் மெசேஜ் அனுப்பியதாக பொலிசார் ஏற்கனவே தெரிவித்தனர்.

மேலும், திருமணமானது முதலே வரதட்சணை கேட்டு மனைவியை மாயங்க் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பத்ரா குடும்பத்தார் பொலிசிடம் கூறியிருந்தனர்.

இந்நிலையில் மாயங்குக்கு ஏற்கனவே திருமணமானதை பத்ரா, தான் இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் தான் தெரிந்து கொண்டுள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், 2016-ல் இருவருக்கும் திருமணம் ஆனது. ஆனால் கடந்த மாதம் தான் மாயங்க் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என பத்ராவுக்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது என சந்தேகிக்கிறோம் என கூறியுள்ளனர்.

இதுவரை மாயங்க் மற்றும் அவர் குடும்பத்தார் கைது செய்யப்படாத நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்துவோம் என பொலிசார் கூறியுள்ளனர்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தமிழ் நடிகையின் கடைசி வரிகள்!!

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா நேற்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி, திரைப்படங்களில் துணை நடிகையாக புகழ்பெற்றவர் பிரியங்கா. கூடைப்பந்து வீரர் அருண்பாலாவை கடந்த சில ஆண்டுக்கு முன்பு காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் அவரது மன வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட கடந்த 2 மாதங்களாக கணவரை பிரிந்து சென்னை வளசரவாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு சொந்தமாக அழகு நிலையம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

தனியாக வாழ்வது தனிமை அல்ல, நம் மீது அக்கறை எடுத்துக் கொள்ள யாரும் இல்லாத நிலையே தனிமை என்ற வரிகளை கடைசியாக தனது வாட்ஸ் அப்பின் முகப்புப் பக்கமாக மாற்றியிருந்தார் பிரியங்கா.

தனிமையே அவர் கொலை செய்துகொள்ள முக்கிய காரணமாக இருந்துள்ளது என கூறப்படுகிறது.

நடிகை பிரியங்கா இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாளே என கண்கலங்கிய பிரபல நடிகை!!

பிரபல சீரியல் நடிகையான பிரியங்காவின் தற்கொலை தான் தற்போது மிகவும் பரபரபபாக பேசப்பட்டு வருகிறது. எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

இருப்பினும் பொலிசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வம்சம் சீரியலில் அவருடன் நடித்த நடிகை கிருத்திகா கூறுகையில், படபிடிப்பு தளத்தில் ரொம்ப சுட்டியான பொண்ணு பிரியங்கா. விஜேவாக இருந்ததால் அந்தக் கலகலப்பும் துருதுருப்பும் எப்பவும் அவளிடம் இருக்கும்.

ஒரு நிமிடம்கூட அவளால் அமைதியா இருக்கவே முடியாது. அவளுக்கும் தனிப்பட்ட பிரச்னைகள் இருந்துச்சு. எல்லா வீடுகளிலும் இருக்கும் கணவன் – மனைவி பிரச்னைதான்.

ஆனாலும், அவள் என் மாமா இல்லைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் அக்கா’னு சொல்வா. அவளுடைய கணவரை மாமான்னுதான் கூப்பிடுவா.

அவர் மேலே ரொம்ப அன்பு வெச்சிருந்தா. ரெண்டு பேருக்குள் என்ன பிரச்னைன்னு தெரியலை. ரொம்பவே பாஸிட்டிவான பொண்ணு,

இப்படி ஒரு முடிவு எடுப்பான்னு கொஞ்சமும் நினைச்சு பார்க்கல, ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் ஒரு பார்லர் ஓப்பன் பண்ணினாள்.

நாங்க எல்லாரும் போய்ட்டு வந்தோம். ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட அவளைப் பார்த்தேன். இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாளே என வருத்தப்பட்டார்.

அபூர்வ ராகங்கள் டீம் ஒரு வாட்ஸ்அப் குரூப் வெச்சிருக்கோம். ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தாங்கன்னு அந்த குரூப்ல எல்லோரும் வருத்தப்பட்டு பேசினோம் எனவும் கூறியுள்ளார்.

கணவனை கொன்று வீட்டிலேயே புதைத்து சடலத்துடன் தங்கிய மனைவி : திடுக்கிடும் பின்னணி!!

இந்தியாவில் கணவனை கொலை செய்து வீட்டில் புதைத்து விட்டு அங்கேயே ஒரு வாரம் தங்கியிருந்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஹசிதி கிராமத்தை சேர்ந்தவர் பாசு. இவர் மனைவி ஜமுனா தேவி. ஜமுனாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த இளைஞருடன் தகாத உறவு இருந்த நிலையில் பாசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த வாரம் பாசுவை கொல்ல முடிவெடுத்த ஜமுனா உணவில் விஷம் கலந்து கொடுத்து அவரை கொன்றுள்ளார்.

பின்னர் வீட்டு படுக்கையறையில் பாசுவை புதைத்த ஜமுனா அங்கேயே ஒரு வாரம் எந்த பயமும் இன்றி தங்கியுள்ளார்.

ஆனால் இதன்பின்னர் சடலத்திலிருந்து நாற்றம் வர தொடங்கியதால் பயந்து போன ஜமுனா நேராக ஊர்பஞ்சாயத்து தலைவரிடம் சென்று நடந்ததை கூறியுள்ளார்.

பாசுவின் உடலை இருவரும் சேர்ந்து எரித்து விடலாம் எனவும், அதற்கு தான் பணம் தருவதாகவும் தலைவரிடம் ஜமுனா கூறியுள்ளார்.

இதற்கு ஒப்பு கொள்ளாத தலைவர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பாசுவின் சடலத்தை கைப்பற்றியதோடு ஜமுனாவையும் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து நடந்த அனைத்தையும் பொலிசாரிடம் ஜமுனா வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.

என் மாமா இல்லைன்னா.. நடிகை பிரியங்காவின் தற்கொலையில் நீடிக்கும் மர்மம்!!

சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தாய்மை அடையாத காரணத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டாலும், தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்காக சில நடிகைகள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவார்கள்.

எனவே தாய்மை அடையாதது மட்டுமே பிரியங்கா தற்கொலைக்குக் காரணமல்ல என அவருடன் இணைந்து நடித்த நடிகை நீலிமா ராணி கூறியுள்ளார்.

மிகவும் தைரியமான பெண்ணான பிரியங்கா, தனது கணவரின் மீது மிக அன்பு வைத்திருந்தார்.எல்லா வீடுகளிலும் இருக்கும் கணவன் – மனைவி பிரச்னைதான் இவர் வீட்டிலும் இருந்திக்கிறது. அப்படியிருக்கையில் மிகவும் தன்னம்பிக்கை நிறைந்த பெண் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்.

மதுரையை சேர்ந்த இவர், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார். அருண் என்பவரை தனது ஆசைப்படியே காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பிரியங்கா தன்னுடைய கணவரை மாமான்னுதான் கூப்பிடுவா. அவர் மேலே ரொம்ப அன்பு வெச்சிருந்தா. என் மாமா இல்லைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் என அவ்வப்போது தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் கூறியுள்ளார்.

மாமான்னு அவ கணவர் பற்றி சொல்லிட்டே இருப்பா. ரெண்டு பேரும் க்யூட் ஜோடி. அவ்வளவு அன்பா இருந்தாங்க. என்ன நடந்துச்சுன்னு தெரியாமல் குழப்பத்தில் அவளது முகத்தை பார்க்க காத்திருக்கிறோம் என நடிகை சந்தியா கூறியுள்ளார்.

ஆனால், இவர்கள் இருவருக்குள் இருக்கும் பிரச்சனை குறித்து தெரியவரவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் அழகு நிலையம் ஆரம்பிச்சு, தனது நண்பர்களை எல்லாம் அழைத்திருந்தார். இப்படி தன்னம்பிக்கையோடு இருந்த பெண் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என கேள்வி எழும்பியுள்ளது.

இவரது இறப்பிற்காக காரணம் தெரியாமல் தொடர்ந்து மர்மம் நிலவி வருகிறது. இதுகுறித்து பொலிசார் இவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் இறுதியில் இந்த மர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

பிரசவத்திற்கு கொடுக்கப்படும் வலி மாத்திரைகளை கொடுத்து சிறுமியை சீரழித்தேன் : முதியவரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ய பிரசவத்தின் போது பெண்களுக்கு கொடுக்கப்படும் வலி மரப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காது கேளாத வாய்பேச முடியாத அந்த சிறுமியை 7 மாதங்களாக அந்த கும்பல் பலாத்காரம் செய்துள்ளது

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையின் போது குற்றவாளிகள் அடுத்தடுத்து கூறிய தகவல்கள் பொலிசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த குற்ற சம்பவத்தின் முதல் குற்றவாளியான 66 வயதான ரவிகுமார் என்ற நபர் சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டராக பணிபுரிந்தவர்.

இவர் இந்த வேலைக்கு வருவதற்கு முன், அதே பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்துள்ளார். அதன் பின்னரே அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டராக சேர்ந்துள்ளார்.

அங்கு வேலை பார்த்த போது பிரசவத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் வலிகளை குறைப்பதற்காக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளையும் அதன் விவரங்களையும் தெரிந்து கொண்ட ரவிக்குமார், அந்த மருந்துகளையும், ஊசிகளையும் பயன்படுத்தி சிறுமியை பலாத்காரம் செய்ததாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்ல இலங்கை தமிழர்கள் செய்யும் மோசடி செயல் : அதிர்ச்சித் தகவல்!!

வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், குறிப்பாக இலங்கை தமிழர்கள் பலர் இந்திய குடிமகன் என பொய்யாக கூறும் போலி பாஸ்போர்டை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் இந்த கும்பலில் டிராவல் ஏஜெண்டுகள், உளவுத்துறை மற்றும் தபால் கணக்கு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மத்திய குற்றவியல் பிரிவு மூலம் தற்போது இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் இது தொடர்பாக பத்து பேரை பொலிசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

இந்த கும்பலுக்கு ரூ.3 லிருந்து 5 லட்சம் வரை பணம் கொடுத்தால் வெளிநாட்டு குடிமகன்களுக்கு, இந்திய பாஸ்போர்ட் வழங்கப்படும்.

முருகன் மற்றும் தபால் ஊழியரான தனசேகரன் ஆகிய இருவர் கைதுக்கு பின்னரே இது தெரியவந்துள்ளது.

அதே போல போலியான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை மூலம் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்குகளை திறந்துள்ளனர்.

இந்த ஆவணங்கள் எல்லாம் பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

பின்னர் போலி முகவரியை சரிபார்க்க வரும் பொலிசாருக்கு லஞ்சம் கொடுத்துள்ளதும், பாஸ்போர்ட்டை விநியோகிக்க தபால்காரர்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் விடயம் நடந்துள்ளது.

நான் தமிழச்சி என்று சொல்லிக் கொள்ள அவமானப்படுகிறேன் : நடிகை கஸ்தூரி!!

சென்னையில் சிறுமி ஒருவர் 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமியை மிரட்டி, 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி இது தொடர்பாக வேதனை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறுகையில், ‘வரிசையாக இதே மாதிரி செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஹாசினி விடத்துக்குப் பிறகு சென்னையில் இதுமாதிரி சம்பவங்கள் நடக்காது என நினைத்தால், அதையெல்லாம் செய்தியாகப் படித்துக்கொண்டே இன்னொரு பெண்ணை சீரழித்துக் கொண்டிருக்கிறார்களே.

11 வயதுப்பெண் 7ஆம் வகுப்பு படிக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, என் பெண்ணைப் போலவே இருக்கிறது. புரசைவாக்கத்தில் நடப்பது போயஸ் கார்டனில் நடக்காது என்பது என்ன நிச்சயம்? யாருமே இங்கு பாதுகாப்பாக இல்லை.

இந்த மாதிரி இருந்தால், தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ எப்படி வாழ முடியும்? தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா ஆண்களும் இப்படித்தான் மோசமானவர்களா என்றே எனக்கே தோன்றுகிறதே..

‘பெண்கள் பாதுகாப்பில் உலகத்திலேயே இந்தியா தான் மோசமான நாடு’ என சமீபத்தில் ஒரு Survey வெளியானது. ஆப்கானிஸ்தானை விட, சிரியாவை விட வெட்கக்கேடான ஒரு நிலையில் தானே நாம் இருக்கிறோம்.

அங்கு பெண்களை மோசமாக நடத்துகிறார்கள். இங்கு பெண்களை மோசமாக நடத்துபவர்கள் யாரும் மனிதர்களே அல்ல, எல்லோரும் விலங்குகள். இது சென்னை நகரமா இல்லை மொத்தமாகவே வண்டலூர் உயிரியல் பூங்காவா என்று தெரியவில்லை.

’தண்டனை வேண்டும்’ என நாமும் ஒவ்வொரு முறையும் கூவிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 22 பேரில், 18 பேரைக் கைது செய்திருக்கின்றனர். ஆனால், அவர்களுடைய முகத்தை மறைத்துத் தானே புகைப்படங்களை வெளியிடுகின்றனர்.

ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? குற்றம் சாட்டப்பட்டவர்களில் யாராவது நிரபராதியாக இருந்துவிட்டால், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் வாழ்க்கை பாழாகிவிடும் என்றுதானே..

அந்த 22 பேரின் குடும்பத்திலும் 11 வயது குழந்தை மகளாகவோ, பேத்தியாகவோ இருப்பார்கள்தானே.. ஒரு குழந்தையைப் பார்த்து இந்த மாதிரி எண்ணம் எப்படி வரும்? என்ன தமிழ் கலாச்சாரம்.. இந்த மாதிரி குற்றத்தில் மாட்டியவர்கள் வீட்டின் முன்னால், அவர்கள் முகத்தை போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும்.

நம்மூரில் எதற்கும் பயப்படுவதாக தெரியவில்லை. ஒருவேளை பொதுவெளியில் அவமானப்பட்டால், அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் அவமானப்பட்டால்.. ஒருவேளை அதனால் முன்னேற்றம் எதுவும் இருக்குமா என நப்பாசை, நம்பிக்கை என்றெல்லாம் சொல்ல முடியாது.

இந்த சம்பவத்திற்கு ஆடையோ, வயதோ அந்தப் பெண்ணின் நடத்தையோ காரணமில்லை. அந்தப் பெண்ணுக்கு இருக்கும் குறையைக் கூடப் பொருட்படுத்தாமல், அதையே advantage ஆக எடுத்துக்கொண்டு ஏழு மாதங்களாக இப்படி சீரழித்திருக்கிறார்கள்.

குழந்தைகளையும், சிறுமிகளையும், மாற்றுத்திறனாளிகளையும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிற கேடுகெட்ட கலாச்சாரம் தான் நம்முடைய தமிழ் கலாச்சாரம் என்று சொன்னால், நான் தமிழச்சி என்று சொல்வதற்கே வெட்கப்படுகிறேன், அவமானப்படுகிறேன்.

சென்னை காவல்துறைக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். யார் யாரையோ சமூக விரோதிகள் என்று சொல்லி சுடுகிறார்களே.. இங்கு கண்ணெதிரே தெளிவாக தெரிகிற சமூக விரோதிகளுக்கு சட்டப்படி நிறைய தவணை கொடுக்காமல் வேகமாக வழக்கை முடியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

உயிர் பிரியும் கடைசி நேரத்தில் உயிர் கொடுத்த ஆசிரியரின் பேச்சு : நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!!

புதுக்கோட்டையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவனுக்கு பேச்சு கொடுத்தே ஆசிரியர்கள் உயிர் பிழைக்க வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருபவர் அருண்பாண்டியன்.

கூலித்தொழிலாளியின் மகனான அருண்பாண்டியன், நேற்று மாலை வழக்கம்போல பள்ளி முடிந்து வீடு திரும்பும்பொழுது, கடை ஒன்றில் நண்பர்களுடன் பானிபூரி சாப்பிட்டுள்ளான். அப்பொழுது திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் மயங்கி தரையில் சரிந்தான்.

இதனையடுத்து உடனடியாக சக மாணவர்கள் அவனை மீட்டு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். ஆனால் நிலைமை மோசமானதாக இருந்ததால், பிராணவாயுவின் உதவியுடன் மாணவனை, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் திறமையால் வெறும் 15 நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்தனர். அங்கு மாணவர்கள் மற்றும் அவர்களுடன் சென்ற செவிலியர் வேகமாக மாணவனை வாகனத்திலிருந்து இறக்கி, மருத்துவமே பிரிவுக்கு அளித்து சென்றனர்.

மாணவன் ஒரு புறம் உயிருக்கு போராடி கொண்டிருக்க, தகவலறிந்து அருண்பாண்டியனின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், பிராணவாயுவை எடுத்தால் சிறுவன் உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் அங்கிருந்த ஒரு சிலர், விருப்பப்பட்டால் சிறுவனை வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு கூற, அருண்பாண்டியனின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.

அதேசமயம், கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சோமசுந்தரத்திற்கு கையில் சிறு காயம் ஏற்பட அவரை ஆசிரியர் மணிகண்டன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

அங்கு நடந்தவை பற்றி செவிலியர் ஒருவர் ஆசிரியரிடம் தெரிவிக்க, பதறிப்போன ஆசிரியர்கள் கையில் காயத்திற்கு மருந்து கூட போடாமல் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

அங்கு சென்ற ஆசிரியர்கள் மாணவன் விழி பிதுங்கி உயிருக்கு போராடுவதை பார்த்து, அவனுடைய காதருகே சென்று மணிகண்டன்.. தம்பி விழிச்சுப் பார் யா.. யார் வந்திருக்கிறது என்ற அடுத்தடுத்து பேச சிறிது நேரத்திலேயே மாணவன் உடலில் அசைவு தெரிய ஆரம்பித்தது. அடுத்த 7 நிமிடங்களில் மாணவன் எழுந்து அமர்ந்து ஆசிரியர்களின் பேச ஆரம்பித்தான்.

அனைவருக்கு இந்த சம்பவம் ஆச்சர்யம் அளித்த வேளையில், மாணவனின் பெற்றோர் ஆசிரியர்களுக்கு நன்றி கூறியதோடு, அருண்பாண்டியனையும் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தனர்.

இதனையடுத்து இரவு 10.30 மணிக்கு மாணவனுக்கு பொருத்தப்பட்டிருந்த பிராண வாயுவினை நீக்கி அவனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவனை விட்டு விடாதீர்கள் : இறப்பதற்கு முன்னர் இளம்பெண்ணின் கடைசி வார்த்தை!!

இந்தியாவில் இளம் பெண்ணொருவர் மாடியிலிருந்து கீழே குதித்து இறந்த நிலையில், கணவரே அவரை கீழே தள்ளியிருக்கலாம் என குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

புதுடெல்லியை சேர்ந்தவர் மாயங்க் சிங்வி. இவர் மனைவி அனிஷியா பத்ரா (32). அனிஷா இரு தினங்களுக்கு முன்னர் வீட்டு மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்தார்.

இதை தற்கொலை வழக்காக பொலிசார் பதிவு செய்த நிலையில், அனிஷியாவின் கணவர் மாயங்க் வரதட்சணை கொடுமையால் அவரை கொன்றிருக்கலாம் என அனிஷியா குடும்பத்தார் கூறியுள்ளனர்.

இதையடுத்து இரண்டாம் முறையாக அனிஷியாவின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது. இது குறித்து பேசிய அனிஷியாவின் சகோதரர் கரண், இறப்பதற்கு முன்னர் அவர் எனக்கு நிறைய மெசேஜ்களை அனுப்பினார்.

அதில் மாயங்க் என்னை அறையில் வைத்து பூட்டியுள்ளார், அவரால் என் வாழ்க்கை பறிபோக போகிறது. அவரை விட்டு விடாதீர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே என் சகோதரியை கீழே தள்ளிவிட்டு கூட கொலை செய்திருக்கலாம்.

இது குறித்து விசரிக்க மாயங்கை கைது செய்ய கோரியும் பொலிசார் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என கூறியுள்ளார்.

அனிஷியாவுக்கும், மாயங்க்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் மாயங்க் அப்போதேலிருந்தே குடித்துவிட்டு அனிஷியாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் குடும்பத்தார் கடந்த மாதமே புகார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் சம்பவம் நடந்த வீட்டை பொலிசார் சீல் வைத்த பின்னரும், ஆதாரங்களை அழிக்க மாயங்க் அங்கு சென்றார் என அனிஷியாவின் சகோதரர் கரண் கூறியுள்ளார்.

தந்தை இறந்தது தெரியாமல் சவப்பெட்டி மீது படுத்திருந்த குழந்தை : கண்ணீர் வரவழைக்கும் காட்சி!!

தனது தந்தை இறந்துபோனது கூட தெரியாமல் சவப்பெட்டி மீது 5 மாத குழந்தை படுத்திருந்த காட்சி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முகுத் பிகாரி மீனா என்பவர் பலியாகினார்.

முகத்துக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றது. தற்போது 5 மாத பெண் குழந்தை உள்ளது. முகுத்தின் இறுதிசடங்கு அவரது சொந்த ஊரில் நடைபெற்றது.

இறுதிசடங்கின்போது, தந்தை இறந்தது கூட தெரியாமல் அவரது குழந்தை சவப்பெட்டியின் மீது படுத்திருந்தது. அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து எழுந்து சவப்பெட்டியின் மீது அமர்ந்திருந்தது.

இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைலாகி வருகிறது. இந்நிலையில், ஜாலாவர் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்தர் அக்குழந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ”உன்னை பார்க்கும் போது எங்களுக்கு கண்ணீர் வந்தது. நீ அந்த சவப்பெட்டியில் இந்திய கொடியின் மீது அமர்வதற்கு முன்புதான் உன் தந்தையின் முகத்தை பார்த்தாய்.

நீ பெரிய பெண்ணாக வளர வேண்டும். உன்னுடைய அப்பா பெருமையடையும் வகையில் நீ வாழ வேண்டும் என்று எழுதியுள்ளார்.